Showing posts with label பிள்ளையார் சதுர்த்தி. Show all posts
Showing posts with label பிள்ளையார் சதுர்த்தி. Show all posts

Thursday, September 17, 2015

புள்ளையாரின் சிம்ப்ளிஸிடியும், ஃப்லெக்ஸிபிலிடியும்!

நம்ம புள்ளையாரிடம் எனக்கு ரொம்பப்பிடிச்சதே இதுதான்.  மஞ்சப்பொடியைக் கொஞ்சம் ஈரமாக்கி பிடிச்சு வச்சாலும் அவர் புள்ளையார்தான். கிராமப்புறங்களில் சில சடங்குகளுக்கு  வெறும் பசுஞ்சாணகத்தில் கூட ஒரு பிடி அளவு எடுத்துப் பிள்ளையார் பிடிச்சு வைப்பதும் உண்டு.  வைரத்துலே செஞ்சாலும் சரி, வெறும் களிமண்ணுலே செஞ்சாலும் சரி அவருக்கு ஒன்னுமே பேதம் இல்லை. பிள்ளையார், புள்ளையார்னு எப்படிக் கூப்ட்டாலும் கூடக் கோச்சுக்கமாட்டார். இழுத்த இழுப்புக்கு வந்துருவார்!

சின்னப்பிள்ளையா இருந்த காலங்களில்  வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட அச்சு வச்சு செஞ்சு தரும்  பிள்ளையார் பொம்மைக் கடைக்குப்போய் களிமண் வாங்கி வருவேன். தாற்காலிகக் கடைதான். அன்றே முளைத்து அன்றே  முடிஞ்சுரும் இது.


அண்ணன்  பொம்மை செய்வதில் எக்ஸ்பர்ட்.  அவர் அழகாப் பிள்ளையார் சிலை(! )செஞ்சுட்டுக் கையோடு  மூஞ்சூறும் செஞ்சு கொடுப்பார். மீதி இருக்கும் களிமண் எனக்கு. செப்பு செஞ்சுக்குவேன்.


அப்புறம் கல்யாணம் ஆனபிறகு இந்த 41 வருசங்களா,  ஃப்ரெஷாக் களிமண் பிள்ளையார் வாங்குனதில்லை.  சென்னையில் இருந்த ஒரு சமயம்  ஆசைஆசையா பிள்ளையார் வாங்குனது தவிர. அதைப்பற்றி அப்பவே எழுதியும் ஆச்சு:-)


இங்கே நியூஸியில் இதெல்லாம் கனவுன்னே இருந்தேன்.  ஒருமுறை க்ராஃப்ட் ஷோ பார்க்கப்போனபோது அங்கே பாட்டரி வேலைகளும் வகுப்புகளும் எடுத்துக்கிட்டு இருக்கும் இடம் பார்த்தேன். எப்போ? அதான் சம்மரில் ஒட்டைச்சிவிங்கி பார்க்கப்போனோமே அப்போ!  அது ஆச்சே ஒரு ஆறேழு மாசம்.  சரியாச் சொன்னால்  ஃபிப்ரவரி 8, 2015.


இதுக்கு  எவ்ளோ  டூல்ஸ் பாருங்க!


அங்கே வெள்ளைக் களிமண் வச்சு பொருட்கள் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. பார்வையாளர்களையும் களிமண் தொட்டுப்பார்க்க அனுமதிச்சும், சில டிசைன்களில் நாமும் பங்கெடுக்கலாமுன்னும் சொன்னது பிடிச்சுருந்தது.  அப்போதான்  தோணுச்சு, களிமண் கிடைச்சால் நாமே புள்ளையார் செஞ்சுக்கலாமேன்னு.  கேட்டுப் பார்க்கலாமுன்னு கேட்டால்..... வேற ஒரு ஊரில் (நியூஸிதான்) இருந்து  வருது 20 கிலோ பொதியாகன்னு சொன்னாங்க.  அவ்ளோ நமக்கெதுக்கு?  கொஞ்சம்னு கை காமிச்சதுக்கு  இவ்ளோ போதுமான்னு கேட்டு ஒரு புது பாக்கில் இருந்து நூல் வச்சு வெட்டிக் கொடுத்தாங்க.  ஒரு அஞ்சு கிலோ தேறும். 12 டாலர்.


என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டதுக்கு, ஜம்பமா 'எலெஃபெண்ட் காட்'னு  அளந்தேன்.  செஞ்சு முடிச்சதும் கொண்டு வாங்க. இங்கத்துச் சூளையில் சுட்டுத் தர்றோமுன்னாங்க.


வாங்கியாந்து வச்சதுதான். அப்புறம் அப்புறமுன்னு நாட்கள் ஓடியே  போனது மிச்சம். அப்பப்பத் தொட்டுப் பார்த்துக்குவேன்.  காய்ஞ்சு போயிருக்குமோன்னு.....  ஊஹூம்.  விரலுக்கு மெத்துமெத்துன்னுதான் இருந்துச்சு.


இந்த வருசம்  ஃப்ளூ காய்ச்சல்  குளிர்காலம் முடிஞ்சவுடனே வந்து ஊரையே பாழ்படுத்திக்கிட்டு இருக்கு. இதில் நானும் ஒரு  விக்டிம்.  ரெண்டு வாரமா ஜுரம் அடிச்சு ஓய்ஞ்சு இப்ப  வாய்ஸ் இல்லாம ஒரு வாரமாச்சு.  எல்லாம் கண் ஜாடை, கை ஜாடைதான். கோபாலைக்கூப்பிட பூஜை மணி ஒன்னு வச்சுருக்கேன் படுக்கைக்குப் பக்கத்தில்.  இப்பெல்லாம் மணி அடிச்சதும் ரஜ்ஜுகூட என்னன்னு கேக்கறான்:-)

இந்த அழகில்  பிள்ளையார் சதுர்த்திக்கு  ஒன்னும்தான் செய்யமுடியாதுன்னு  இருக்கு. க்ருஷ்ணாஷ்டமியும்  அப்படியே போனதுதான் மனக்குறை. ஆனால் புள்ளையார் மட்டும் மனசுக்குள் சந்தோஷப்பட்டு இருப்பார்.  கொழுக்கட்டை என்ற பெயரில் அவருக்கு நான் செஞ்ச கொடுமைகள் கொஞ்சநஞ்சமா என்ன?   ஆனாலும் அவருக்குப் பெரிய மனசு. எப்பவும் மன்னிச்சு....


நேத்துதான் இந்தக் களிமண் இருக்கே. புள்ளையார் செஞ்சு பார்க்கலாமேன்னு எடுத்து வெளியே வச்சேன். அதுக்கு முன்னால் யூட்யூபில் புள்ளையார் செய்யறதைப் பார்த்துக்கிட்டேன்.


அந்தப்புள்ளையாரையே வேண்டிக்கிட்டு, மனசை ஒருமாதிரி திடப்படுத்திக்கிட்டு புள்ளையாரைச் செஞ்சேன்.  பார்க்கப் புள்ளையார் மாதிரித்தான் இருக்கார்.  நீளப்பாம்பை திரிச்சு பூநூல் கூடப்போட்டாச்சு:-) ஊரில் இருந்து வாங்கியாந்த  ஒரு செட் கண்கள் கூட ஓக்கேதான்.  லேசா உலர்ந்ததும் கொஞ்சம் அலங்காரங்கள் செய்யணும்.


இப்ப மூஞ்சூறு செஞ்சுக்கணுமே....  பெரியதிருவடி கால்மடிச்சு உக்கார்ந்துருக்கும் போஸ். கண்களுக்குக் குறுமிளகுகள். நீ.....ள வால் புள்ளையாரைச் சுத்திக்கிட்டுப்போகுது.  இது அந்த  வகை இனம்  கேட்டோ:-)))))


கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் நாட் பேட். அதான் சிம்ப்ளிஸிட்டின்னு சொன்னேன் பாருங்க. இவர்  யுனீக்கா இருக்கார்!

பத்தாமப்போயிருமோன்னு பயந்து பயந்து செஞ்சதில் இன்னும் பாதிக்களிமண் பாக்கி இருக்கு.  இன்னொரு புள்ளையார் செஞ்சால் ஆச்சு. இப்பதான் டெக்னிக் தெரிஞ்சுபோச்சே:-))))


புள்ளையார் கொலு வச்சு,  தெரிஞ்சமாதிரி கொழுக்கட்டைக் கொடுமைகள் செய்து,  புள்ளையார் பூஜையை முடிச்சுட்டேன்.  நாள் ஆரம்பிக்கும்  நாடு என்பதால் முதல் பூஜை இங்கேதான்!


எண்ணி  11 இனிப்புக்கொழுக்கட்டை  , காய்கறிகள் தேங்காய்த்துருவல் சேர்த்தப் நவரத்ன  புட்டுக்கொழுக்கட்டை (உப்புப் பலகாரமாம்ப்பா!) கடலைப்பருப்பு சுண்டல், பழங்கள், வாசனை தூக்கலா இருக்கும்  நம்ம வீட்டு  மல்லிகைகள் (ஏர்லி ச்சியர்ஸ் என்னும் வகை)  எல்லாத்துக்கும் மேலா  என்  அன்பு. போதாதா என்ன?


 என்னோடு பேச மாட்டேங்கறா....  ஆனா என்னென்னவோ செஞ்சுக்கிட்டே இருக்காளே இந்த அம்மா! இவளும் என்னைப்போல சைலண்ட் ம்யாவ் போல :-)

விஐபி கள் வந்து சாமி கும்பிட்டாங்க:-)



நண்பர்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கான மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.  நல்லா இருங்க.

ஹேப்பி பர்த்டே கணேஷா!



Sunday, August 23, 2009

துரும்பை(யும்) கிள்ளிப்போடாமல்.....

இந்தியாவில் வாழ்க்கை ரொம்பவே சுலபமுன்னு நினைப்பு. அதிலும் பண்டிகைக் காலமுன்னா...... மாய்ஞ்சு மாய்ஞ்சு 'ஆக்கி' எடுக்கும் காலம்போய் எல்லாமே ரெடிமேடுன்னு ஆகியிருக்குன்னு விளம்பரங்கள் சொல்லுதே. (எல்லாம் தினமலர் தினகரன் வகையறாக்களில் ஈ எடிஷனில் பார்ப்பதுதான்)

எந்த நாட்டில் இருந்தாலும் புள்ளையாரை மட்டும் விடறதா இல்லைன்னு தெரிஞ்சவகையில் கொழுக்கட்டைச் செய்யறதுண்டு. பாவம் 'அவரும்' வெந்ததையும் வேகாததையும் தின்னே பழகிட்டார். நாஞ்சொல்றது புள்ளையாரை! யாரும் வரிகளுக்கிடையில் படிக்க வேணாம்,ஆமாம்.
ஒரு பண்டிகையாவது இந்தியாவில் 'கொண்டாடிடமுன்னு' ஒருக் குறிக்கோள் மனசுலே ஏறி உக்காந்துக்கிச்சுன்னாப் பாருங்களேன். போனவாரம் 'ஒரு' கிருஷ்ணஜெயந்தி வந்துச்சா.... அப்பவே நம்மக் குறிக்கோள் நிறைவேறாமப் போச்சு. அடுத்தமாசம்தான் நமக்குன்னு நாச்சியார் வேற சொல்லிட்டாங்களா..... அப்பீல் ஏது?

புள்ளையார்ச் சதுர்த்தி இந்த ஞாயிறுன்னுத் தெரிஞ்சதும் அதே 'ஈஸிப்பீஸிக் கொண்டாட்டம் ' நினைவுக்கு வருது. சனிக்கிழமைக் கோயிலுக்குப்போகும் வழியில்....பிள்ளையார் ஃபேக்டரியைப் பார்த்தேன். களிமண் கணபதி. ஆஹா.....கொசுவத்தி...... ஒரு நாப்பது வருசம் இருக்குமா? தாராளமா! வாங்கிறலாம்........

தெருவுக்கு ரெண்டு பக்கமும் புள்ளையார்கள் விற்பனைக்கு. ஆனாலும் நாம் நிக்கும் பக்கத்தைவிட எதிர்ப்புறம் இன்னும் அழகாக இருக்கோ? இக்கரைக்கு அக்கரைப் பச்சை. கூட்டம் அங்கேதானே அம்முது......அங்கேயே போய் வாங்கலாம்.


புள்ளையார் விற்கும் அம்மா, புன்சிரிப்போடு வாங்கம்மான்னு கூப்புட்டாங்க. ஆஹா.... சிரிச்ச முகமுள்ள விற்பனைப் பொண்ணுகளையே இதுவரை எந்தக் கடையிலும் பார்க்கலையே... சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், பழமுதிர்ச்சோலை இப்படிக் கொஞ்சம் பெரிய கடைகளில் எல்லாம் என்னத்தையோ பறி கொடுத்தாப்போலவும், கொஞ்சம் சடச்சுக்கிட்டும் சிநேகபாவம் முகத்தில் துளியும் இல்லாதவர்களையும் பார்த்து ( எல்லாம் சின்னப் பொண்களப்பா..... வயசும் இருபது இருந்தால் அதிகம்) நொந்து நூடில்ஸ் ஆகி இருந்த எனக்கு இந்தம்மா, பாலைவனத்தில் பசுஞ்சோலை.

நம்ம பிள்ளையாரைத் தெரிஞ்செடுத்தவுடன் அவருக்கான 'ஆக்ஸெஸரீஸ்' பரபரன்னு தானா நம்ம கண் முன்னால் நீட்டப்படுது பல திக்குகளில் இருந்தும்! குடையைக்கூட மடக்கிக்கலாமாம்! பேஷ் பேஷ்.


ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்லே நோகாம நோம்பு கும்பிட வழிச் சொல்லித்தராங்க. ஸ்பெஷல் பேக் ஒன்னு வாங்கியாச்சு. சின்னதா ஒரு பை. அதுநிறைய 'கூடீஸ்' திரட்டிப்பால், அதிரசம், லட்டு, ரெண்டு விதமானக் கொழுக்கட்டைகள், முறுக்கு, தட்டை, மனோகரம், தேன்குழல், கணேஷ் தர்ஷன்னு ஒரு சிடி (2500 பிள்ளையார்களின் அபூர்வத் தொகுப்பாம்) ஒரு புத்தகம்( விநாயகர் அகவல், 'ககார' சகஸ்ர நாமாவளி)மற்றும் திருவானைக்காவல் ஸ்ரீ வல்லப கணபதியின் படம். கூடவே ஒரு முக்கால் அடி உயரத்தில் ஒரு களிமண் பிள்ளையார். அட! இவரும் வருவார்ன்னு தெரியாமப்போச்சே. பரவாயில்லை டபுள் டபுள்:-) இதுவே தாராளம். கொண்டாத்துக்குக் கேட்பானேன்:-)

துரும்பைக் கிள்ளிப்போடலைன்னு 'சாமி' நினைச்சுக்கப்போறாரேன்னு சுண்டல் செய்யப்போறேன். குக்கரில் வேகுது. அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவலை, சாமிக்குப் படிச்சுக் காமிச்சேன். அதுலே ஒரு வரி 'சட்'னு என்னை எங்கியோ இழுத்துப் போச்சு

'மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்......'

???????????????????????????????????


உங்க அனைவருக்கும் பிள்ளையார்ச் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

ஹேப்பி பர்த்டே, கணேசா!

Wednesday, September 03, 2008

புள்ளையாருக்கு இன்னிக்கு நேரம் சரியில்லை

புள்ளையாருக்கு இன்னிக்கு நேரம் சரியில்லை!


சோதனைமேல் சோதனை வந்தால் பாவம் அவர்தான் என்ன செய்வார்? இன்னிக்குச் சோதனை என் (விபரீத) எண்ணத்தால் வந்துருச்சு.

சோதிச்சுப் பார்க்கணுமுன்னு நினைச்சிருந்த அயிட்டத்துக்குப் பொருத்தமான நாள் அதுவா வந்து அமைஞ்சது பாருங்க. மைக்ரோவேவ் கொழுக்கட்டை.

ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல், ரெண்டு டேபிள் ஸ்பூன் ப்ரவுண் சக்கரை, கால் தேக்கரண்டி நெய். இதை ஒரு சின்ன கண்ணாடிப் பாத்திரத்தில் வச்சு மைக்ரோவேவ் ஒரு நிமிஷம் போட்டேன். முதல் தப்பு இங்கேதான். எப்பக் கண்டுப்பிடிச்சேன்? சக்கரை கேரெமெல்லா ஆனதுக்கு அப்புறம்.

அடுத்ததாக நாலு டேபிள் ஸ்பூன் அரிசிமாவைச் சிட்டிகை உப்பு சேர்த்து அம்பது மில்லித் தண்ணீரில் கரைச்சு ரெண்டு நிமிஷம் மைக்ரோவேவினேன். பரவாயில்லாம சரியா வெந்து வந்தது. கொஞ்சம் ஆறட்டும். அப்புறம் சொப்பு செஞ்சுக்கலாமுன்னு எடுத்துவச்சேன்.
பூரணம் சரியான கமர்கட் பதத்தில் இருக்கு. வேற செய்யணும். ஆனா 2 x 15 ன்னு வச்சுக்கலாமா? ஆச்சு. நாட் பேட் அட் ஆல்.





நம்ம வீட்டுப் புள்ளையாரும் அவர் ஃப்ரெண்டும்




இன்னிக்குக் காலையில் குளிச்சு முடிச்சு சாமிகளுக்கு ஆடைஅலங்காரம் மாத்தும்மோதுதான் தோழி வந்தாங்க. அப்பம், அவல்பொறி, உளுந்துவடை, பூரணம், கொழுக்கட்டை, பாயஸம் எல்லாம் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க. இப்பெல்லாம் அரிசியில் மட்டுமில்லாது மேற்படிச் சமாச்சாரங்களில்கூடச் சாப்பிடுறவங்க பெயர்களைச் சாமி எழுதி வச்சுக்கிட்டு இருக்கார். அடுத்த ரெண்டாவது நிமிசம் மகளும் நண்பரும் வந்தாங்க.




இன்னிக்கு 'எலிஃபெண்ட் ஹெட்டட் காட்'ஸ் பர்த்டே' ன்னு சொல்லி பிரசாதங்களைக் கொடுத்தேன். சாப்பிட்டுட்டு ஒன்னும் சொல்லாமப் போயிட்டாங்க:-)

சொப்பு செஞ்சுக்க மாவைக் கையில் எடுத்தால்...... எடுத்தால்..... எடுத்தால்..... அப்படியே அப்பமாக் கிளம்புது. யோசிச்சப்பத்தான் ஐடியா வந்துச்சு. அப்பத்தை எடுத்து ஃபுட் ப்ராசர்லே போட்டு நாலைஞ்சு சுத்து. வெழுமூனா ஆகலை. ஆனாலும் கையில் பிடிக்கலாம். எண்ணி அஞ்சே அஞ்சு கொழுக்கட்டை 'உருண்டைகள்'.

மைக்ரோவேவில் வைக்கும் ஸ்டீமர்ன்னு ஒன்னு விக்குது. அது வாங்கிக்கலைன்னு எனக்கு ஏகப்பட்ட வருத்தம். கஷ்டப்பட்டு கேஸ் அடுப்பை மூட்டி அதுலே வச்சு வேகவச்சேன்.

ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுக்கக் கைவரலை!!!!

ஆகக்கூடி இந்தப் பரிசோதனையில் கண்டுபிடிச்ச விவரங்கள்:

கொழுக்கட்டை, மைக்ரோவேவுக்கு லாயக்கில்லை.



பாவம் புள்ளையார். அவர் ஜென்மத்துக்கு இந்த மாதிரிப் புதுக் கொழக்கட்டை சாப்பிட்டே இருக்கமாட்டார். அவரை உலகின் அடுத்தபக்கத்துக்கு அனுப்பிவைக்கறேன். கொஞ்சம் வாய்க்கு ருசியா சமைச்சுக் கொடுங்க.

அனைவருக்கும் புள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

பின் குறிப்பு:

கோபால் அதிர்ஷ்டசாலி. தப்பிச்சுட்டார்:-)