Friday, September 09, 2011

இயற்கை மனசுவச்சால் இனி எல்லாம் சுகமே! Christchurch Earthquake 6

நகரின் புனரமைப்புக்கு மக்களிடம் ஐடியாக் கேட்டாங்க. ஒரு லட்சத்து ஆறாயிரம் ஐடியாக்கள் கவுன்சிலுக்கு அனுப்புனாங்க மக்கள். நியூஸியின் ரெண்டாவது பெரிய நகரமான எங்கூர் ஜனத்தொகை நாங்க இங்கிருந்து கிளம்பும்போது மூணரை லட்சத்துக்கு ரெண்டு கம்மியா இருந்துச்சு. ( அந்த ரெண்டு நாங்க ரெண்டு பேர்தான்) நிலநடுக்கம் வந்தவுடனும், அப்புறமும் நிக்காம, இப்படி ஓயாமத் தொடர்வதையும் சகிக்க முடியாத சனம் வேற ஊர்களுக்கு இடம் பெயர்ந்துச்சு. அது ஒரு எழுபதாயிரம் நபர்கள். (20 சதம்) ரேடியோ நியூஸி சொன்ன புள்ளி விவரம் இது. நம்ம தமிழர்கள் கூட பலர் இதில் அடக்கம். தமிழ்ச்சங்கத்துலே ஆளே இல்லைன்னு வந்தவுடன் கேள்விப்பட்டேன். அதைப் பற்றி அப்புறம் ஒரு நாள் கச்சேரி வச்சுக்கலாம்.

நம்ம தமிழ்ச்சங்கத்துக்காக நாலு வருசம் முன்னே நூலகம் ஒன்னு நமக்கு வேணுமுன்னு ஆயிரம் டாலருக்குத் தமிழ்ப்புத்தகங்களும், கலைநிகழ்ச்சிகள் நடத்த டிவிடி ப்ளேயர், ஆம்ப்ளிஃபையர், லேப் டாப்ன்னு எண்டர்டெய்ன்மெண்ட் செட்டுகளும் அப்போ சிட்டிக் கவுன்ஸில் கொடுத்த மானியத்தில் வாங்குனோம். நாந்தான் அப்போதைய கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளர் என்பதால் நிகழ்ச்சிக்கு இதெல்லாம் கட்டாயம் வேணுமுன்னு பிடுங்கியெடுத்தேன். தமிழ்ச்சங்கத்துக்குன்னு நல்ல பேனர் ஒன்னு தமிழ்நாட்டு க்ராஃபிக் டிஸைன் நண்பரைக்கொண்டு செஞ்சு கொடுத்தேன் அப்போ. இதுபோல சிலபல தமிழ்ச்சங்கத்தின் சொத்துகளை நகர மையத்தில் இருக்கும் எத்னிக் கல்ச்சர் கட்டிடத்தில் நமக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வச்சுருந்தாங்களாம். இந்த அறை விவகாரம் எனக்குத் தெரியாது. சமீபத்து (2010 முதல் பகுதியில்) ஏற்பாடு. செப்டம்பர் அதையும் புரட்டிப்போட்டுருச்சு. அந்தக் கட்டிடம் முக்கால்வாசி இடிஞ்சு கிடக்கு. மனிதர்கள் நுழையக்கூடாத ஆபத்தான சிகப்புப் பகுதி அது:( . எல்லாம் கோவிந்தா............. கோவிந்தா:(
உங்க திட்டத்தையெல்லாம் படிச்சுப் பார்த்தோம். எல்லாத்தையும் அப்படியே நடத்தமுடியாது. ஆனால் நிபுணர்களைக் கொண்டு அதிலிருந்த முக்கியமானவைகளை ஒருங்கிணைச்சு நாங்க ஒரு திட்டம் அமைச்சுருக்கு. அது என்ன ஏதுன்னு வலைப்பக்கத்தில் போட்டுருக்கோம். பார்த்துட்டுச் சொல்லுங்க. ஒரு ரோடு ஷோ ஒன்னும் இதுவிஷயமா அமைச்சு ஒவ்வொரு பேட்டைக்கும் கொண்டு வந்து வச்சு விளக்கிச் சொல்லுவோம். உங்க சந்தேகங்கள், இன்னும் சேர்க்கவேண்டிய பாய்ண்ட்டுகள் எல்லாம் அப்ப நீங்கள் பதிவு செய்யலாம். ஒவ்வொரு பேட்டைக்கும் இந்தந்த நாளில் இன்ன இடத்தில் காலை 11 முதல் மாலை 7 வரை (8 மணி நேரம்) வந்து பார்த்துப்பேசி என்ன செயலாமுன்னு சொல்லுங்க. நாளை மறுநாள் எங்ககிட்டே ஒன்னுமே சொல்லாமத் திட்டம் தீட்டிட்டாங்கன்னு கூவக்கூடாது. செப்டம்பர் 16 வெள்ளிக்கிழமை மாலை அஞ்சு மணிக்குள்ளே சொல்றதைச் சொல்லுங்க. சிட்டி கவுன்ஸில் அறிவிப்பு இது. விவரங்கள் எல்லாத்தையும் செண்ட்ரல் சிட்டி ப்ளான் ட்ராஃப்ட்ன்னு பன்னெண்டு பக்கம் ப்ரோஷராப் போட்டு ஊருலே ஒரு மெயில் பெட்டி விடாம எல்லா வீடுகளுக்கும் போட்டாங்க போன மாசம்.
அதுலேயே கடைசித்தாளில் பின்னூட்டம் எழுத இடம். அனுப்ப வேண்டிய விலாசம் அச்சடிச்சு இருக்கு. அதைக்கிழிச்சு நாம் நினைக்கிறதை பின்னூட்டலாம். தபால்தலை ஒட்ட வேணாம். இலவசமாவே அனுப்பலாம்.
தபால்பெட்டி வரைப்போய் போட சோம்பலா? மின்மடலில் என்ன நினைக்கிறேன்னு அனுப்புன்னு அதுக்கு ஒரு தனி மெயில் ஐடி.
நம்ம பேட்டைக்கு அவுங்க வரும்தினம் கோபால் வேலையில் இருந்து வர லேட்டாகுமுன்னு சொன்னதால் முதல்நாளே அடுத்த பேட்டைக்குப்போய் பார்த்தோம். ஒரு கம்யூனிட்டி செண்டர்லே வச்சுருந்தாங்க. நம்ம சந்தேகங்களை அங்கேயே பதிவு செய்ய பத்துப்பனிரெண்டு மடிக்கணினி வேற. அதுலே நம்ம பெயரைப் பதிவு செஞ்சுட்டு அப்புறம் நல்லா யோசிச்சு நம்ம வீட்டில் இருந்தே பின்னூட்டம் அனுப்பும் வசதி. திட்டம் விவரிப்புக்கு ஒரு சி டி. கொடுத்தாங்க.
சமூகக்கூடம்


சம்பவம் நடந்த சில நொடிகளில் எடுத்த பட(மா)ம்

நகரின் மையத்தை வேறெங்கே நகட்ட முடியும்? இந்த ஃபால்ட்டு லைனை மட்டும் எப்படித் திருத்தணுமுன்னு தெரியலையேப்பா.......அடுக்கு மாடிகள் அதிகமா மேலே கட்டுனதில்தான் ஆபத்து ( ஆறுமாடிதான் இருந்துச்சு முந்தி) அதனால் இனிமே கூடியவரை நாலே மாடி. மின்தூக்கி இருந்தாலும் ஆபத்தில் தப்பிக்க அகலமான படிக்கட்டுகள். அடர்த்தியாக் கட்டிடங்கள் இல்லாம நிறைய புல்வெளிகள் சின்னச்சின்ன பார்க்குகள் மார்கெட் ஏரியா, ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்துலே இருக்கும் அளவில் ஒரு நீச்சல் குளம், நூலகம், லைட் ரெயில் என்ற பெயரில் ட்ராம் போல ஒன்னு, இப்படி நிறைய சொல்றாங்க. கதீட்ரலையும் கட்டணும். ஊருக்கே அழகும் பெயரும் இதைவச்சுத்தான்!
அநியாயமா இழந்த உயிர்களுக்காக ஒரு நினைவிடம் கட்டணும். 100 சதம் ஆதரவு இதுக்கு உண்டு. எங்கே எப்படின்னு இன்னும் தீர்மானிக்கலை. அதுக்கும் தனியா ஐடியாக் கேட்டுருக்காங்க.
டாப் 10

நிர்மாணச்செலவு 16 பில்லியன்னு ஒரு கணக்கு. இப்போ நாலுநாள் முன்னாலே 20 வரை போகுமுன்னு கணிப்பு. பத்துவருசத்திலிருந்து இருவது வருசம் வரை ஆகுமாம் எல்லாம் முடிய. இதெல்லாம் வேலை ஆரம்பிக்குமுன் உள்ள கணக்கு. கை வச்சதும் எப்படி செலவும் நேரமும் இழுக்குமுன்னு நமக்கும் தெரியுமே. 25 வருசமும் 25 பில்லியனுமா ஆகப்போகுதுன்னு பட்சி மனசுக்குள் சொல்லுது.
க்ரீன் சிட்டி


அதுவரை இடையில் எந்த இயற்கை அழிவும் வராம இருக்கணும். கடவுளே காப்பாத்துன்னு வேண்டத் தோணுச்சு. மூணு மாசம் முன்பு வீட்டை வித்துட்டு, முதியோர் இல்லத்துக்குப்போய் சேர்ந்த தோழி எலநோரைப் போய்ச் சந்திச்சப்ப இதையெல்லாம் பார்க்க தங்களுக்கு ஆயுசும் இருக்கணுமேன்னாங்க எம்பத்தி நாலும் எழுபத்தியொன்பதுமான தம்பதிகள்.
அதெல்லாம் ஒன்னும் ஆகாது. முக்கால்வாசியாவது பார்க்கக் கிடைக்குமுன்னு சொல்லிட்டு வந்தேன்..
அந்தப் பரம் பொருள் மனசு வச்சால் இனி எல்லாம் சுகமே!
PIN குறிப்பு: சம்பவத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் கொஞ்சம் விஸ்தரிக்க வேண்டியதாப் போச்சு. பொறுமையாக வாசித்தமைக்கு என் நன்றிகள். 'அழுவாச்சி காவியம்' நிறைவு பெற்றது.


29 comments:

said...

இயற்கை நிச்சயம் மனசு வைக்கும்.. வைக்கணும்.

ரெண்டு பகுதிகளையும் சேர்த்து படிச்சிட்டேன்.

said...

nalla irukku teacher. padikkara engalukke manasu kanakkinrathu. vasicha ungalukku eppadi irukkum.

but seekiram come back aakivduvarkal.

said...

இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

said...

//அந்தப் பரம் பொருள் மனசு வச்சால் இனி எல்லாம் சுகமே!//

ஆம்.
இனி எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்.

said...

Good governance.

said...

இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும். இயற்கை நிச்சயம் மனசு வைக்கும்..

கடற்கரைக்ளில் அலையாத்திக்காடுகள் அமைத்துப் பராமரிக்கலாம் தானே!

இயற்கைப்பாதுகாப்பு ஆகுமே!

said...

மகளும் நானும் இந்த நிகழ்வுகளையும் அதையடுத்து மக்களின் அரசின் முன்னெடுப்புகளையும் பத்தி பேசிட்டிருந்தோம் அவளுக்கும் ஆச்சரியம்.. எப்படில்லாம் அந்த ஊருல வேலைகள் நடக்குதுன்னு..

said...

நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.....

நமது நாட்டில் உள்ள அரசாங்கத்தினையும் அங்குள்ள அரசாங்கத்தினையும் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது.... :(

இது அழுகாச்சி காவியம் போல தோன்றவில்லை....

said...

மனம் நொந்து போகும் அளவுக்குப் படங்கள்.
இவ்வளவு நடந்தும் மனம் தளராமல் திட்டங்களை நிறைவேற்றப் போகும் உங்கள்
நாட்டு கவர்ன்மெண்ட்டுக்கு வாழ்த்துகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நல்ல வாக்குக்கு நன்றிப்பா.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

வசிச்ச????? வசிக்குமுன்னு இருக்கட்டுமே!

பத்து வருசப் ப்ளான் இப்போதைக்கு.

நம்பிக்கை வேணும் நல்லது நடக்குமுன்னு:-)

said...

வாங்க கோவை2தில்லி.

நல்வாக்குக்கு நன்றிப்பா.

said...

வாங்க ராம்வி.

நன்றிகள்.

said...

வாங்க ரத்னவேல்.

நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அலையாத்திக் காடுகள் என்றால் என்னன்னு சொல்லுங்களேன்.

said...

வாங்க கயலு.

இப்படி எல்லாம் செயல்பட்டாலும் அரசைக் குற்றம் சொல்லிக்கிட்டே இருக்கும் மக்களும் நிறைய இருக்காங்க.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரேடியாப் புலம்பல்ஸ்ன்னு மக்கள் நினைச்சுக்குவாங்களேன்னுதான்......

said...

வாங்க வல்லி.

முழுமூச்சா இ(ர)றங்கி இருக்கு அரசு.

இந்த மாதக்கடைசியில் பெருசா ஒன்னு வருமுன்னு இங்கத்து மூன்மேன் ஆரூடம் சொல்லி இருக்கார்:(

said...

mangroves(அலையாத்திக் காடுகள்) பத்தி விக்கியண்ணன் நிறையவே சொல்லியிருக்கார்

http://en.wikipedia.org/wiki/Mangrove

said...

சிறந்த திட்டம் இயற்கையும் இதமாய் துணை இருக்கட்டும்.

said...

அலையாத்திக் காடுகள் என்றால் என்னன்னு சொல்லுங்களேன்.//


கூகுள்ளே போய் அலையாத்திக்காடுகள் என்று தேடுங்கள்.

சுனாமிக்கெல்லாம் தீர்வுகிடைக்கும்.கூடவே நிலந்டுக்கத்துக்கும்.

ஏதோ மக்கள் நல அரசு இருக்கே அங்கே.

said...

http://www.google.com/search?client=gmail&rls=gm&q=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சுட்டிக்கும் தகவலுக்கும் நன்றிங்க.

இந்த அலையாத்திக்காடுகள் குளிர்பிரதேசங்களுக்குச் சரியாகாதுங்களே:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

அண்ணன் காட்டிய வழி அம்மா......

போய்ப் பார்த்தேன். ஆனால்.....சொக்கா.... இது நமக்கல்ல.........

சுட்டிக்கு நன்றிப்பா.

said...

//PIN குறிப்பு: சம்பவத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் கொஞ்சம் விஸ்தரிக்க வேண்டியதாப் போச்சு. பொறுமையாக வாசித்தமைக்கு என் நன்றிகள். 'அழுவாச்சி காவியம்' நிறைவு பெற்றது.
//

நாங்க விஜய் டிவியில் நடந்தது என்ன ? பார்க்கிறவங்க, போரடிக்கல.

said...

வாங்க கோவியாரே.

//நாங்க விஜய் டிவியில் நடந்தது என்ன ? பார்க்கிறவங்க,........//

ஆனாலும் ரொம்ப 'தில்' தான்:--))))

said...

இந்த அலையாத்திக்காடுகள் குளிர்பிரதேசங்களுக்குச் சரியாகாதுங்களே:(//

அப்போ அங்கே என்ன மரம் வளரும்னு கண்டு பிடித்து வளர்க்க ஆலோசனை கூறுங்களேன்.

என் மகனும் ஆஸ்திரேலியாவில் இந்த பிராஜட் செய்தார்.

தண்ணீர் சேகரிப்பு - ஹீட்டரில் சுடு நீர் வரும்வரை வரும் குளிர் நீரை வீணாக்காமல் சேமிக்க ஆராய்ச்சியாம்!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உங்கள் மகனுக்கு இனிய பாராட்டுகள்.

என்னதான் கேஸ்லே சூடாகுது நம்ம வீட்டில் என்றாலும் ஹீட்டருக்கும் சிங் பைப்புக்கும் இடையில் நிற்கும் தண்ணி கடக்க ஒரு 30 விநாடி எடுக்கும். சூடாவும் இருக்காது. அது வீணாத்தான் போகுது. மகன் பரிசோதனை வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.