Tuesday, September 27, 2011

சிங்கைக் கோவில்களில் சில.

மக்கள் நாட்டைவிட்டுப் போகும்போது துணிமணி பாத்திர பண்டங்களை மட்டும் கையோடு சுமந்துகொண்டு போனாலும் தன் கலாச்சாரத்தையும் கடவுளையும் கூடவே மனசில் சுமந்து கொண்டு போவது யுகம்யுகமா நடக்கும் சமாச்சாரம் இல்லையோ?

தினமும் காலையில் நாம் போய் தரிசனம் செய்யும் 'சிங்கைச் சீனு'ன்னு நான் குறிப்பிடும் அந்த ஸ்ரீநிவாசன் இங்கே செராங்கூன் சாலையில் கோவில் கொண்டது 1855 வது ஆண்டு. மஹாவிஷ்ணு காக்கும் கடவுளாச்சே! நம்மையும் நம் குடும்பத்தையும் ஊரில் விட்டு வந்த நம் மக்களையும் அவன் காக்கவேணும். தினமும் அவனுக்கு இந்தக் கோரிக்கையை ஞாபகப்படுத்தணுமுன்னால் அவன் இங்கே நின்னால்தான் முடியும் என்ற நம்பிக்கையோடு புலம்பெயர்ந்து வந்த நம் மக்கள் வெறும் செங்கலால் கட்டிய சாதாரணக் கோவில் இது. படம் பாருங்க!
தென் இந்தியாவில் இருந்து இங்கே வந்து குடியேறும் மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமா உயர உயர பக்தர்களும் அதிகமாகிக்கிட்டே வந்தாங்க. ஒரு நூறு ஆண்டு காலம் போனபிறகு 1960 ஆம் ஆண்டுதான் இப்போ நாம் பார்க்கும் இந்தக் கோவிலின் வடிவமைப்பை உறுதி செஞ்சு மதராஸில் இருந்து சிற்பிகளைக் கொண்டு வந்து கோவில் வேலைகள் ஆரம்பமாச்சு.

கோவிலுக்கு அஞ்சு நிலை ராஜகோபுரம் கட்ட நிதி உதவியவர் சிங்கை சமூக ஆர்வலர் வள்ளல் பி. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள். பதிள் சுவர்களில் சிற்பங்கள் மனசை அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுதுன்னால்..... கோவிலின் உள்ளே நெடுக ஒவ்வொரு தூணின் நாலு புறமும் இருக்கும் சிற்பவேலைகள் மனசைக் கொள்ளையடிக்குது.
கருவறையின் முன்மண்டபச் சுவர்களில் சுத்திவர பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமான், குருவாயூரப்பன், தசாவதாரத் திரு உருவங்கள் இப்படி..... எதைச் சொல்ல எதைவிட? எல்லாமே ஏதோ நேற்றுதான் கட்டி முடிச்சதோன்னு நினைக்கும்படி பளபளன்னு ஜொலிக்குது. துளியும் அழுக்கு இல்லாத பரிசுத்தம். கண்ணை மூடிக்கிட்டு எங்கே வேணுமானாலும் சட்னு உக்காரலாம் விழுந்து கும்பிடலாம்.
கோபுர வாசலில் இருந்து கருவறைவரை நேரா ஒரு மண்டபம். முன்மண்டபத்துக்கு எதிரில் பெருமாளைப் பார்த்துக் கை கூப்பிய நிலையில் பெரிய திருவடி. அவருக்குப் பின்னே ஜொலிக்கும் தங்கக்கொடி மரம். கொடிமரம் கடக்கும் விதானத்தில் பனிரெண்டு ராசிக்கான உருவங்கள்.
முன்மண்டபம் ஏறிப்போனால் திகுதிகுன்னு நெருப்புப்போல் ஜொலிப்புடன் நின்ற பெருமாள் நகையும் நட்டும் பூவும், பட்டுமாய்.......'வா வா. இங்கே நோ ஜருகு. நல்லாக் கண் குளிர ஸேவிச்சுக்கோ'ன்றார், அவர் காலடியில் உற்சவ மூர்த்திகள் அழகுக்கே அழகு செஞ்சதுபோல் நிகுநிகுன்னு இருக்காங்க. (உணர்ந்து அனுபவிக்கணும். அதை எனக்குச் சரியாச் சொல்லத் தெரியலை. மன்னிக்கணும்.)
மூலவர்
உற்சவர்

கோபுர வாசலைத் தாண்டி உள்ளே காலடி எடுத்து வச்சதும் நமக்கு வலது புறம் ஆஞ்ச நேயர். தனிச்சந்நிதியில். அவரைச் சுற்றி வரும்போது சந்நிதிச் சுவர்களில் விதவிதமா போஸ் கொடுத்து அனுகிரகம் செய்யறார்.
நேயடு

இடது பக்கம் தலையைத் திருப்பினால் நம்ம புள்ளையார். அவருக்கு இடப்பக்கம் தனிச் சந்நிதியில் சுதர்ஸனன். ரெண்டு சந்நிதிகளுக்கும் இடையில் கொஞ்சம் பின்னால் தள்ளி நடுவாந்திரமா ஸ்ரீ விஷ்ணு துர்கை. இந்த மூணு சந்நிதிகளுமே தனிக் கட்டிடமா பாந்தமா அமைஞ்சுருக்கு. புள்ளையாருக்கு முன்னால் தேங்காய் உடைக்கத் தனித் தொட்டி அமைப்பு. சிரட்டைத் துண்டுகள் கண்ட இடத்தில் தெறிச்சு விழுந்து நம்ம காலில் குத்தாது .
புள்ளையார் சந்நிதியில் அவர் பக்கத்திலேயே தம்பி வேல்முருகன், 'வேல்' வடிவத்தில் நிக்கிறார். சுதர்ஸனருக்குப் பின்பக்கம் வழக்கம் போல் நரசிம்ஹர், சிரிச்ச முகத்துடன்! எலுமிச்சம்பழ மாலையுடன் துர்கை. (கனமா இருக்காதோ கழுத்தில்?) ஒவ்வொரு சந்நிதியையும் தனித்தனியே வலம் வர வசதியான ஏற்பாடு.நாமும் மொத்தமா ஒரு முறை வலம் வந்துட்டு மூலவரையும் தரிசனம் பண்ணிட்டு பெருமாளுக்கு வலப்புறம் இருக்கும் தனிச்சந்நிதியில் ஸ்ரீமகாலக்ஷ்மித் தாயாரையும் இடப்புறம் இருக்கும் தனிச்சந்நிதியில் நம்ம 'ப்ரியை' ஆண்டாளம்மாவையும் வலம்வரும் வழியிலேயே தரிசனம் செஞ்சுக்கலாம். ஆண்டாளுக்குத் துணையா அவள் முன்னால் துளசி. எப்பவும் பசுமை மாறாமல் இருக்காள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னே விசேஷங்களுக்காக உண்டாக்கிய சின்ன வஸந்த மண்டபம் பெருமாள் வரவுக்குக் காத்திருக்கு.

ஊர்வலம் போக தங்கரதம் இன்னொரு பக்கம். கொடுத்து வச்ச பெருமாள்.
இந்தப் பயணத்தின் வேண்டுதலா விஷ்ணு சகஸ்ரநாமம் தினம் வாசிக்கணும். வாசிச்சுட்டுக் கிளம்பினோம். திங்கள் கிழமை. வேலை நாள். எல்லோரும் அவரவர் கடமையில் மூழ்கி இருப்பாங்க. நாம் பயணிகள் என்பதால் நம் வேலை ஊர்சுத்திப் பார்த்தல். பொடிநடையா அங்கிருந்து செராங்கூன் சாலையிலேயே வேடிக்கைகளைப் பார்த்துக்கிட்டே டெகா மால் வரை வந்து இடது புறம் திரும்பி சிம்லிம் சதுக்கம் கடந்து பென்கூலன் சாலையில் பிரியும் பர்லிங்டன் சதுக்கத்துக்குள்ளே வந்தோம். என்னதான் வெய்யில் ஆரம்பிச்சுருச்சுன்னாலும் சுத்தமான சாலைகளில் நடப்பதால் உடல் சோர்வு இல்லை. எந்த நேரம் எந்த வண்டி இடிக்குமோ என்ற கவலை இல்லாமல் நடைபாதையில் நடக்க முடியுதே! அங்கங்கே நடைபாதைப் பராமரிப்பு வேலைகள் நடந்துக்கிட்டு இருந்தாலும் பாதசாரிகள் நடக்க இடையூறு ஒன்னுமில்லாமல் வசதி செஞ்சுருக்காங்க.

சிங்காரச்சென்னையை, சிங்கப்பூர் ஆக்குவோமுன்னு அரசியல் வியாதிகள் அப்பப்போ முழங்குவது காதில் ஒலிக்குது. ஆனால் அது எப்போ? ரோசெர் வாய்க்காலை ஒட்டியே தான் இந்த சாலை. நம்ம கூவம் எப்போ இப்படி ஆகப்போகுதுன்னு காத்திருக்கேன்.
சதுக்கத்தின் நடுவில் சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் மிச்சம்மீதி அலங்காரங்கள் அப்படியே இருக்கு. முயலாண்டு ஆரம்பிச்சு ரெண்டரை வாரம்தானே ஆச்சு. பெரிய சீனச்சாமி சிலையைச் சுத்திவர பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி, முயல், ட்ராகன் இப்படிப் பனிரெண்டு ஆண்டுகளின் சுபாவங்களை எழுதி வச்சுருக்காங்க. மக்கள் தங்களுக்குரிய ஜாதகங்களைப் படிச்சுப்பார்த்துக்கிட்டுப் போறாங்க.

சதுக்கம் பூராவும் வரிசையாக் கடைகள். கண்டதையும் வித்துக் காசாக்கிக்கிட்டு இருக்காங்க. செடிகள் விற்கும் கடை ஜோர். நமக்குத்தான் இங்கே அதைக் கொண்டுவர முடியாது. கண்ணால் பார்த்துக்கலாம். இன்னொரு கடையில் மாம்பழம் மற்றும் பல பழவகைகள். பலாப்பழச்சுளைகள் வாவான்னு கூப்ட்டது. (சென்னை சிங்கை ஆனதும் அங்கே போய் இப்படி வெட்டிவச்ச பழங்களைத் தின்னணும். மூளையில் முடிச்சு. ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாதுதான். ஆனால் சுத்தமா இருக்கணும் என்பது நம்மூர்லே ஏன் புரியமாட்டேங்குது என்ற ஏக்கம்தான்)

தொடரும்............:-)

18 comments:

said...

As usual too good.

Many many Sashtiyapthapoorthi wishes!

Have written on 'Pinthodarum Nilalin Kural' here

http://ramamoorthygopi.blogspot.com/2011/08/blog-post_21.html

(Typing from office. No Tamil font)

said...

வாழ்த்துக்கள் தலைவருக்கும் தளத்துக்கும்

said...

கோவில் ரொம்ப அழகா இருக்கு. பெருமாள் மற்றும் மற்ற தெய்வங்களின் தரிசனம் அருமையா கிடைத்தது.

படங்கள் எல்லாமே நல்லாயிருக்குங்க.
எங்கெங்கு நோக்கினும் சுத்தமும், சுகாதாரமும்......ம்ம்ம்ம்ம்
சென்னை எப்ப மாறறது????

said...

என்னதான் வெய்யில் ஆரம்பிச்சுருச்சுன்னாலும் சுத்தமான சாலைகளில் நடப்பதால் உடல் சோர்வு இல்லை. ////

அருமையான பகிர்வு. அத்தனை சுற்றியும் உடல் சோர்வு இல்லாமல் இருந்தது குறித்து நாங்களும் ரொம்பவே வியந்தோம்.

said...

அழகான படங்கள்

said...

//வழக்கம் போல் நரசிம்ஹர், சிரிச்ச முகத்துடன்! // :)

தங்க ரதம்.... பார்த்துக் கொண்டே இருக்கலாம் இல்லைன்னா அவர் ஒரு ரவுண்ட் வரதைப் பார்க்கலாம்....

நல்லதோர் பகிர்வுக்கு நன்றி.

said...

//சிங்காரச்சென்னையை, சிங்கப்பூர் ஆக்குவோமுன்னு அரசியல் வியாதிகள் அப்பப்போ முழங்குவது காதில் ஒலிக்குது. ஆனால் அது எப்போ? ரோசெர் வாய்க்காலை ஒட்டியே தான் இந்த சாலை. நம்ம கூவம் எப்போ இப்படி ஆகப்போகுதுன்னு காத்திருக்கேன். //

என்னது ! சிங்கப்பூர் ஆக்குவாங்களா !! அடேங்கப்பா !! முதல்லே தெருவிலே இருக்கிற குப்பய, சாக்கடை கழிவுகளை
அன்றாடம் எடுத்துச் செல்லக்கூட இங்கன முடியல...

தேர்தல் வருதுல்ல ! எதுவேணா சொல்லுவாங்க !!

சுப்பு ரத்தினம்.

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

பி தொ நி குரல் விமரிசனம் அருமை. உங்க ஆழ்ந்த வாசிப்பைக் காமிக்குது. எனக்குத்தான் பக்குவம் கைவரலை. ஒரு வருசம் இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை வாசிச்சுக் கிரகிக்க முயல்வேன்.

said...

வாங்க விருட்சம்.

நன்றி & நன்றி.

said...

வாங்க கோவை2தில்லி.

நம்மூர்லேதான் 'சாமியார்'' சொன்னாக் கேப்பாங்களே..... அவுங்களாவது சுற்றுப்புறச் சுத்தத்தைப்பற்றிச் சொல்லக் கூடாதான்னு இருக்கு.

ஒரு வேளை கடுமையான சட்டம் இருந்தால் சரியாகுமோ?

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அதாங்க எனக்கும் வியப்பு!!!!

said...

வாங்க கார்த்திகேயனி.

அழகை அப்படியே புடிச்சுருது கேமெரா!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எனக்கும் அவர் பவனி காணக் கிடைக்கலை.

நாள் கிழமை பார்த்துப்போக முடியுதா? எப்பக் கிடைக்குதோ அப்ப.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஆட்சியில் இருக்கும்போது வெளிநாடு போக பல சான்ஸ் உண்டாக்குவது....

அதைப்போல நம்ம ஊரை மாத்தணும் என்ற ஆசையினால் மட்டுமே என்று நம்புவோமாக:-)))))

said...

ஆண்டாளும், நேயடுவும் கண்குளிரக் காட்சி கொடுக்கிறார்கள்.

said...

வாங்க மாதேவி.

இங்கே எல்லாமே அழகுப்பா!!!!!

said...

நீங்க சொல்ற ஸ்ரீநிவாசர் கோயிலுக்கு நானும் போயிருக்கேன். மருமகளுக்கு முடியிறக்குனது அங்கதான. இந்தியா வந்தப்பத்தான் திருச்செந்தூர்ல இறக்குனது.

கோயில்ல முடியெறக்குன அன்னைக்குக் கட்டளைக்கு புளியோதரை கேசரியெல்லாம் சொல்லீருந்தோம். வந்தவங்களுக்கெல்லாம் கொடுத்தோம். அப்புறமா அவங்கவங்களே எடுத்துக்கட்டும்னு வெச்சிட்டோம்.

பலாச்சுளைகள் அழகு. Civic Sense நம்ம மக்களுக்குக் குறைவு. ஆங்கிலத்துல தப்பில்லாம பேச முயற்சி பண்ணீட்டு (அ) பேசீட்டு, தமிழில் தப்பு பண்ற மாதிரி. வெளிநாட்டைத் துப்புரவா வெச்சிக்கிட்டு உள்நாட்டை குப்பையாக்குறது.

அரசாங்கத்தைச் சொல்லி ஒரு புண்ணியமும் இல்லை. தனிமனித மனநிலையே அப்படித்தானே இருக்கு. வெளிய நம்மளே எவ்வளோ குப்பை போடுறோம். ரெயில்வே ஸ்டேஷன், பஸ்டாண்டு, இன்னும் பல இடங்கள். நம்மளால தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் நம்மைப் போலத்தான் இருக்கும்.

said...

வாங்க ஜீரா.

சிங்கையும் ஒரு காலத்துலே ரொம்ப அழுக்கா இருந்த ஊர்தான். அரசு முன்கை எடுத்தவுடன் எல்லாமே சரியாச்சு. சிவிக் சென்ஸ் வந்துச்சு.

ஆனா..... நம்மூர்லே தான் 'யேய் நான் யாருன்னு தெரியுமா?' சவுண்டு இருக்கே:(