Tuesday, September 06, 2011

நேத்து ராத்திரி............ தூக்கம் போச்சுடி.............

நேத்து ராத்திரி மூணரை இருக்கும், கவனிச்சியா? 4.1 !! அப்ப முழிப்பு வந்து, அதுக்கப்புறம் சுத்தமாத் தூக்கமே இல்லை:(

இல்லையே...... நல்லாத் தூங்கிட்டேன். காலையிலே ஒரு எட்டு மணி போல 3.6 ஒன்னு வந்துச்சாமே.

அப்படியா? காலையிலே நான் ஒன்னும் உணரலை

மக்கள்ஸ் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும்போதோ இல்லை தொலைபேசியில் பேசும்போதோ குசலம் விசாரிப்பது இப்போ இப்படி மாறி இருக்கு! 3.8 2.9 2.6 3.2 ன்னு ஒரே எண்கள்தான். இப்போ இந்தப் பதிவை எழுதும் இந்தக் கணம் 7522 ன்னு கணக்குக் காமிக்குது இந்த நியூஸி வலைத்தளம் அஞ்சும், அஞ்சுக்கு மேலேயும் இருந்தால் சிகப்பெழுத்து! அப்பப்ப மெயில் பாக்ஸைத் திறந்து பார்க்கும்விதமா இதையும் திறந்து பார்ப்பது இப்போதைய வாடிக்கை. பதிவை வெளியிடும்போது இன்னும் எண்ணிக்கை பத்தோ இருவதோ கூடி இருக்க வாய்ப்பு உண்டு.


நான் இங்கே திரும்பி வந்தபிறகு ஒரு நாளும் ஒன்னுமே உணரலை. என் ஆட்டமே பெருசா இருந்துருக்கும். எல்லோரும் இந்த மணி, இத்தனைன்னு சொல்லும்போது இது என்னடா நமக்கு உணர்வே மரத்துப்போச்சோ..... நடுக்கம் தெரியலையேன்னு அது வேற ஒரு தனிக் கவலை. ஒரு நாள் தெருவாசலில் பெரிய ராக்ஷச ட்ரக் ஒன்னு வர்றது போல சத்தமும் வீடு தடதடன்னு ஒரு குலுங்கலும். இது யார்டா ட்ரக்கை இந்தத் தெருவில் ஓட்டறது? அனுமதி இல்லையேன்னு வெளியே போய் எட்டிப் பார்த்தால் யாரையும் காணோம். அடுத்த நிமிசம் ஃபோன் அடிக்குது. கோபால் ஆஃபீஸில் இருந்து கூப்பிட்டு 'இப்போ 4.9 வந்துச்சே'ன்றார். ஆஹா........... ட்ரக் அதுதானா..... ஆ!

பூமா தேவி சாமி ஆட ஆரம்பிச்சவ அடங்க மாட்டேங்கறாள். எப்போ மலையேறுவாளோ? பொறுமை அறவே போயிருச்சோன்னு ஒரு சம்சயம்.

நம்ம 'தாடிக்காரர்' காலத்துலே நிலநடுக்கம் வந்துருக்காதுன்னு நினைக்கறேன், இல்லேன்னா இப்படி 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல'ன்னு எழுதி வச்சுருப்பாரா?

அகழ்வாருன்னதும் நினைவுக்கு வருது, இப்போ இங்கே போய்க்கிட்டு இருக்கும் ஒரு தியரி

பூமிக்கடியில் இருக்கும் நிலக்கரி, எண்ணை, தங்கமுன்னு கனிமங்களையெல்லாம் மனுசன் கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்கான், அதெல்லாம் பூமிக்கடியிலே இருந்தப்பப் பூமியின் கனம் கூடி ஆடாமல் அசையாமல் இருந்துச்சு., இப்பத் தோண்டின பக்கங்களில் வெற்றிடம் ஆகிப்போய் சமநிலை இல்லாம, அந்த வெற்றிடங்களை பூமிக்குள் இருக்கும் வாயு பலமாகத் தாக்குது. அதான் இப்படி உலகில் அங்கங்கே நிலம் நடுங்க ஆரம்பிச்சு இருக்கு. உண்மைதானோன்னு கூடத் தோணுது எனக்கு.

மூணு நாளைக்கு முன்னே (ஞாயிற்றுக்கிழமை செப் 4) முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிச்சோம். இது செப்டம்பர் எர்த் க்வேக் 7.1. 99 குலுக்கல்ஸ். இந்த ஒரு வருசத்துலே அடுக்கடுக்கா மூணு வந்து தனித்தனிப் பெயர்கள் வச்சுக்கிட்டு இருக்கு. ஃபிப்ரவரி எர்த் க்வேக் 6.3 . விசேஷமான சூப்பர் ஸ்பெஷலா 186 குலுக்கல்ஸ் அண்ட் 181 மரணம். ஜூன் எர்த் க்வேக் 6.3 & 5.6 ன்னு ரெண்டு பெருசும் 64 முறை ஆஃப்டர்ஷாக்கும் இப்படி க்வேக் க்வேக்ன்னு நாம் சொல்றதை ஏதோ அவுங்க மொழியைக் கத்துக்கிட்டு நாம் பேசறோம் என்ற மகிழ்ச்சியில் ஏவொன் நதிக்கரை வாத்துகள் க்வாக் க்வாக்குன்னு சொல்லிக்கிட்டு அழகா நீந்திப்போகுது. நல்ல குண்டு வகைகள்:-)
இந்த இடத்துலே ஒன்னு கட்டாயம் சொல்லணும். நிலநடுக்கத்தில் உயிரிழப்புன்னு செய்தி கிடைச்சதும் ஜப்பான் நாட்டுலே இருந்து இடிபாடுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நிபுணர்கள் கொண்ட குழு பறந்து வந்துச்சு. அங்கே பொழுதன்னிக்கும் பூகம்பம் வந்துக்கிட்டு இருப்பதால் ஆபத்தில் என்ன செய்யணுமுன்னு ரொம்ப நல்லாத் தெரிஞ்சவங்க இவுங்கதானே! வந்த இடத்தில் அவுங்க நாட்டுப்பிள்ளைகளையே சடலமாத் தோண்டி எடுத்த நிலையை நினைச்சால்..... மனசு விம்முது:( அண்டைநாடான அஸ்ட்ராலியாவில் இருந்தும் நொடியில் உதவிக்கு ஓடிவந்தாங்க.

லிக்யூஃபேக்ஷன் கழிவுகளை வாரிப்போட்டு இடத்தைச் சுத்தப்படுத்த நியூஸிலாந்து மாணவர் படை திரண்டு வந்தாங்க. என்ன ஏது யார் வீடுன்னு பார்க்காம மாணவர்கள் பாய்ஞ்சு சுத்தப்படுத்தியதால்தான் ஊர் இன்னிக்கு நான் பார்த்தப்ப பளிச்ன்னு சுத்தமா இருக்கு. இந்தப் படைக்கு உணவு தயாரிச்சுத் தர நிறைய தன்னார்வலர்கள், குடும்பத்தலைவிகள். களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாத வயோதிகர்கள், மற்ற பெண்கள்ன்னு தங்கள் கைக்காசையே போட்டு உதவ இன்னொரு பக்கம் ஒரு படை. மகள் ஆஃப்கான் பிஸ்கெட்ஸ், ஆன்ஸாக் பிஸ்கெட்ஸ், ,மஃப்பின்ஸ் நிறைய பேக்கிங் செய்து கொண்டுபோய் சப்ளை செஞ்சுக்கிட்டு இருந்தாள். அவைகளைப் படங்கள் எடுத்து அனுப்பச் சொல்லி இருந்தேன்.
என்னால் நம்பவே முடியலை இவ்வளவு நல்லாச் செய்யறதை! இதைப் பாராட்டும்விதமா ஒரு தொகையை அவளுக்கு அனுப்பி இன்னும் பேக்கிங் செய்யத் தேவையான பொருட்களை வாங்கி நிறைய செஞ்சு தரச்சொல்லி ஊக்கப்படுத்தினோம்.

இந்த வருசம் 2011 செப்டம்பர் 4, தந்தையர்கள் தினமாகவும், எங்க மகளின் பிறந்தநாளாகவும் இருந்ததால் மகிழ்ச்சியா இருக்கணுமா இல்லை நினைவு நாளுக்காகத் துக்கமா இருக்கணுமான்னு ஒரு ரெண்டுங்கட்டான் மனநிலையில் இருந்தோம். 'தந்தையர் தின ஸ்பெஷலா ஹெலிக்காப்டரில் பறந்து போய் வானத்தில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரத்தையும் அந்த அழிவுகளையும் பாருங்க. பதினைஞ்சு நிமிசம் பறக்கலாம் அதிகம் காசு இல்லை வெறும் 149 டாலர்கள்'ன்னு புது வியாபாரம். நாலைஞ்சு மேலே சத்தம் போட்டுக்கிட்டுத் தாழ்வாப் பறந்துக்கிட்டே இருந்துச்சு.

நினைவஞ்சலி செலுத்த நம்ம நகரத் தந்தை புது திட்டம் போட்டார், விளக்கேத்தி வைக்கலாமுன்னு. குத்துவிளக்குன்னு நினைச்சுறாதீங்க. இது ஆகாயவிளக்கு. போன உயிர்கள் வானத்தில் இருந்து பார்த்து ஆறுதல் அடைவாங்களா இருக்கலாம். சர்க்கஸ் நடக்கும் சமயம் சர்ச் லைட் ஒன்னு ஆகாயத்துலே சுத்தும் பாருங்க அப்படி. தந்தையர் தினமா இருப்பதால் நகரத் தந்தையின் தந்தை, அதை ஸ்விட்ச் ஆன் செய்து ஏற்றிவைப்பார். அதுக்கு முன்னால் நம்ம கதீட்ரலின் பாதிரியார் விளக்கை ஆசீர்வதிப்பாருன்னு திட்டம். இரவு 7 மணிக்கு ஆரவாரமில்லாமல் சின்னதா ஒரு கூட்டம் ஏற்பாடு. இந்த விளக்கு, வரும் ஃபிப்ரவரி மாதம் 22 (அப்பவும் ஒன்னு வந்துதானே 181 பேர் மரணம் அடைஞ்சாங்க) வரை தினமும் வானத்தை நோக்கி ஒளிவீசுமுன்னு சொன்னாங்க.

நாங்களும் மகளுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு இத்தாலியன் ரெஸ்ட்டாரண்டுக்குச் சாப்பிடப் போயிருந்தோம். (போன வருசம் இதே நாள் அவள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் பார்ட்டியை ரத்து செய்ய வேண்டியதாப்போச்சு) இன்னிக்கு அங்கே பாதி சாப்பாட்டில் இருந்தப்ப தடதடன்னு காலின்கீழே பூமி நல்லாவே ஆடுது. ஒரு இருவது விநாடிகள். 4.4 ன்னு அப்புறம் சேதி. அங்கே உணவருந்திக்கிட்டு இருந்த மக்களும் பரிமாறுபவர்களும் டோண்ட் கேர் என்று இருந்தாங்க. தினம் வந்து வந்து எல்லோரையும் நல்லாவே பழக்கப்படுத்தி வச்சுருக்கு இது!
நகருக்குள் போகும் பாதையில் ஒன்னு

நகரின் இடிபாடுகளை, முக்கியமா சடலங்களை அப்புறப்படுத்தி, ஆவணங்களை வச்சு அடையாளம் கண்டுபிடிச்சு உறவினரிடம் ஒப்படைக்கும் பெரிய வேலை ஒரு வழியா முடிஞ்சதும் அந்தக் குறிப்பிட்ட கட்டிடங்களை மட்டும் முதலில் அப்புறப்படுத்திட்டாங்க. இப்போ இடிக்க வேண்டிய கட்டிடங்களைப் பகுதி பகுதியா இடிக்கும் வேலை. அண்ணாந்து பார்த்தால் ஊர் முழுக்க க்ரேன்கள் நிக்குது. பொதுமக்களுக்கு ஆபத்து இல்லாத அளவில் ஒழுங்குபடுத்தி ஃபென்ஸிங் வச்சு இப்போ நாலுநாளா அந்தப் பகுதிகளைப் பார்க்க விடறாங்க. கம்பி வலைக்கு அந்தப் பக்கம் போக முடியாது. இந்தப் பக்கமா நின்னு பார்க்கலாம். நடந்துதான் போகணும். வண்டிகளை அனுமதிச்சால் சாலையில் அதிர்வுகள் உண்டாகி ஆபத்து சம்பவிக்கலாமேன்னு.....
சிறுவர் நூல்நிலையம் பழசு
வலைக்குப்பின்னே கண்ணுக்கு நேரா கதீட்ரலும், தரையில் நிக்கும் பக்கத்து போஸ்டாஃபீஸ் கட்டிடக்கூம்பும்
பெங்களுர் க்ளப்

நாங்களும் முதல் முறையா அங்கே போய்ப் பார்த்தோம். நடந்து முடிஞ்ச அவலங்களுக்கு மௌன சாட்சியா சத்தமே இல்லாமல் ஓடும் நதியும் பேயறைஞ்சாப்போல நிக்கும் வீப்பிங் வில்லா மரங்களும் ( என்ன பொருத்தமான பேர் பாருங்க) ப்ச்...... என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியலை:(
விக்டோரியாத் தெருவில் (மஹாராணி விக்டோரியா அவர்கள் ஆட்சி காலத்துலேதான் நியூஸியைக் கண்டறிஞ்சு இங்கே மக்களைக் குடியமர்த்த நியூஸி லேண்ட் கம்பெனி உருவாச்சு) மஹாராணி ஆட்சியின் (1837 - 1897) வைரவிழாவைக் கொண்டாடும் நினைவுக்காகக் கட்டப்பட்ட மணிக்கூண்டின் கடிகாரம் ஃபிப்ரவரி நிலநடுக்கத்தின் நேரத்தைக் காட்டியபடி 12.51 நின்னு போயிருக்கு. காலம் உறைஞ்சு போய், மணிக்கூண்டும் கொஞ்சம் இடிஞ்சுதான் கிடக்கு:(இனிமே பழைய சிட்டியைத் தமிழ்சினிமாலேதான் பார்க்கணும்போல! எத்தனை ஷூட்டிங் இங்கே நடந்துருக்கு! இப்போ நகரம் இப்படி ஆனதில் படப்பிடிப்புக்குன்னு டூயட் பாட யாரும் வர்றதில்லை. அதுலே வேற, எங்க வருமானம் போச்சு:(

சிட்டி மாலுக்கு முன்னால் நிக்கும் ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரென்ஸ் (Bridge of remembrance) வளைவுக்கு நல்லவேளையா சேதம் ஒன்னுமில்லை. (முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த நியூஸி ராணுவத்தினர் நினைவுக்காக கட்டியது நவம்பர் 11, 1924 ) வயசு எம்பத்தியாறுன்னாலும், இதை, சிட்டிக்கவுன்ஸில் அப்பப்பப் பழுது பார்த்துச் சுத்தப்படுத்திப் புதுசு போல வச்சுருக்கும். ராணுவ வீரர்கள் ஆற்றின் குறுக்கா அப்போ இருந்த மரப்பாலத்தின் மீது நடந்து போருக்குப் போனாங்களாம். அதான் இந்த இடத்தின் விசேஷம்.
நகர மையத்தைச் சுற்றி வச்சுருந்த கம்பி வலையில் அஞ்சலி செலுத்தும் விதமா அங்கங்கே பூங்கொத்துக்களைச் செருகி வச்சுருக்காங்க மக்கள்ஸ்.. நெஞ்சம் கலங்குனதை சிம்பாலிக்காச் சொல்ல ஒரு இடத்தில் க்ரோஷாவில் இதயவடிவம் பின்னி யாரோ கட்டிவிட்டுப் போயிருந்தாங்க. நமக்கும் ஐயோன்னு இருக்கு. ப்ச்......
நிலமையைச் சீராக்க கடினமா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கும் அரசையும், எர்த்க்வேக் கமிஷனனின் நடவடிக்கையையும் குற்றம் சாட்டும்விதமா ஒரு சிலர் அவுங்க எதிர்ப்பைக் காமிக்க எழுதிவச்சுருந்த சில போஸ்ட்டர்களையும் பார்த்தேன். எல்லோரையும் எல்லாவிதத்திலேயும் திருப்திப் படுத்த முடியாதுதானே?
மனசொடிஞ்சு போய் நிக்கும் 'தன் குடிமக்களைச் சந்திச்சு ஆறுதல் சொல்ல மகாராணி அம்மா, பேரன் வில்லியமை அனுப்புனாங்க. கல்யாண மாப்பிள்ளை வந்ததும் சனங்க சந்தோஷப்பட்டுச்சு. ஆர்ட் செண்டர் முழுசுமே பழுதாகிப்போனதால் அங்கே வேலைகள் நடக்குது. உச்சிக்கோபுரக் கும்மாச்சிகளைக் கழட்டி ஸ்டேண்டு போட்டுத் தரையில் வச்சுருக்காங்க. இப்போ ஆர்ட் செண்டரா இருக்கும் இதுதான் அந்தக் கால யுனிவர்சிட்டி. இடம் பத்தலைன்னு எங்க பேட்டையில் புதுசாக் கட்டினத்துக்குப்
பிறகு இதைக் கலைப்பொருட்களுக்கான இடமா வச்சுக்கிட்டோம்.
இங்கே நடக்க வேண்டிய படக் கண்காட்சியை மியூஸியம் ஓரமா தெருவிலேயே வச்சதைப்போய்ப் பார்த்துட்டு வந்தோம். எல்லாமே ஆகாயத்தில் இருந்து எடுத்தவைகள். வெவ்வேறு நாடுகளின் அழகுகள். இந்தியா இருக்கான்னு தேடுனதில் அற்புதங்கள் ஆயிரம் இருக்க, அதை விட்டுட்டு ராஜஸ்தான் மார்பிள் மலையைப் படமா மாட்டி இருந்தாங்க:(

அர்ஜெண்டீனா நாட்டு மாடுகள் ஆற்றைக் கடந்து செல்லும் படம் சூப்பர். எல்லா மாடுகளும் ஒரே மாதிரி வெள்ளைத் தலையும் சிகப்பு உடலுமா அச்சுலே வார்த்தெடுத்தமாதிரி!!!!


படங்களை இந்த வலைத்தளத்திலும் பார்க்கலாம்.
வருசாவருசம் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் நடக்கும் கலைவிழாவை நடத்த இப்போ இடமில்லை. அதுக்காக அப்படியே விட்டுறமுடியுமா? எதாவது செஞ்சு மக்களை உற்சாகப்படுத்தவேணும்தானே?


தொடரும்................:(

21 comments:

said...

இன்னுமா தொடர்கிறது? அடப்பாவமே.

said...

முதல்ல மகளுக்கு வாழ்த்துகள் :))

படிக்கவே பயமா இருக்கு டீச்சர்.. பிள்ளையார் எல்லாரையும் காப்பாத்தட்டும்..

said...

இந்த மாதிரி செய்திகளை கேள்விப்படறச்சே திக் திக்ன்னு இருக்கு.. அதுவும் நீங்க அங்க திரும்பிப் போனப்புறம், இன்னும் கூடுதலா இருக்கு.

said...

மகள் செஞ்ச அயிட்டங்கள் ரொம்ப நல்லாருக்கு..

said...

உங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்க. அவங்க செஞ்ச அயிட்டங்கள் பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு.

வெள்ளை தலையும், சிவப்பு உடலுமா வித்தியாசமா இருக்கு....

பழைய நிலை வர பிரார்த்திக்கிறோம்.

said...

உங்கள் மகளுக்கு மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நிலைமை சீரடைய மனப்பூர்வ பிரார்த்தனைகள்.
அருமையான பதிவு. சோகம் இழையோடுகிறது.

said...

Belated wishes sollidunga

said...

இன்னுமா தொடர்கிறது? அடப்பாவமே.

still its continue take care teacher.

unga ponnu pannuna coke romba nalla irukku. sapita asaiya irukku.

oru 10 cake eduththuk kolkinren

said...

வாங்க ராம்வி.

வேற வழி இல்லாததால் அதுபாட்டுக்கு ஒரு ஓரமா ஆடிக்கிட்டுப் போகட்டுமுன்னு விட்டுட்டோம்:-)

said...

வாங்க சுசி.

வாழ்த்துகளுக்கு நன்றி.மகளுக்குச் சொல்லிட்டேன். அவளும் நன்றி சொல்லச் சொன்னாள்.

சம்னர் புள்ளையாரே என்ன ஆகுமுன்னு தெரியாமல் முழிக்கறாரேப்பா!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

நடப்பது நடக்கட்டும் நாராயணன் செயலுன்னு இருக்கோம். பதிவுலகை விட்டு அவ்ளோ சீக்கிரம் போய்விட ப்ராப்தி இருக்காது:-))))

மகள் நன்றி தெரிவித்தாள். சமையல் செஞ்சுட்டாலும் அதை ப்ரெஸெண்ட் பண்ணுவது ஒரு தனிக் கலை இல்லையா? அதுலே நான் அடிச்சுப்புடிச்சு எப்பவாவதுதான் பார்டர்லே பாஸ் மார்க் வாங்குவேன்.

மகளுக்கு அது கைவந்துருக்கு:-)

said...

வாங்க கோவை2தில்லி.

ரொம்ப அதிசயமான நிறத்தில் மாடுகள், இல்லே!!!!

பார்த்தவுடன் சட்னு பிடிச்சுப்போச்சு!

மகளிடம் சொல்லி என் மூலமாக உங்களுக்கு நன்றி வருகின்றது.

நன்றிகள்.

said...

வாங்க ரத்னவேல்.

ஆபத்துன்னதும் எல்லா சமூகமும் ஒன்னோடொன்னு சேர்ந்து ஆதரவா ஒரு ஒற்றுமையைக் காமிச்சுருக்கு.

நாம் தனி இல்லைன்னு உணர்ந்ததும் மீண்டுவர மேலும் சக்தி கிடைச்சு மனோபலத்தோட இருக்கோம்.


பிரார்த்தனைகளுக்கும் மகளுக்கு அனுப்பிய வாழ்த்துகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

எதுவுமே 'லேட்' இல்லை:-)

நன்றிப்பா.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

கவனமாகத்தான் இருக்கோம். அக்கறைக்கு நன்றிகள்.

அதென்ன பத்து...... எல்லாமே உங்களுக்குத்தான். எஞ்சாய்!!!

said...

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி......
டெல்லியையும் விட்டுவைக்கலை. அடுத்து எங்கோ :(

said...

மகளுக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

மகளின் பிரயத்தனம்(மாணவர்கள் வயிற்றுக்கு ஈந்தது அவள் நல்ல மனசைக் காட்டுது. அதுக்கும் பாராட்டுக்கள்! நடுக்கங்களுக்கிடயே நடுங்காமல் வாழ பழகிக் கொண்ட மக்கள். சீக்கிரம் எல்லாம் சரியாக நிம்மதியாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

said...

நிலைமை சீரடைய மனப்பூர்வ பிரார்த்தனைகள்.

said...

வாங்க மாதேவி.

டெல்லியில் இருந்து கிளம்பி அப்படியே ஜாலியா வான்கூவர் போய் ஒரு ஆட்டம் முடிச்சுட்டு இன்னிக்கு இங்கே 4.5 அளவில் குலுங்கிட்டு போயிருக்காள் பூமா!

said...

வாங்க நானானி.

வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மகளின் சார்பில் நன்றி.

காரின் பின் ஸீட்டிலே இருந்து சாமான்களை எடுத்துக்கிட்டே இருக்கேன். அந்தப்பக்கம் பின்ஸீட்க் கதவைத் திறந்து கோபால் என்னமோ பையை வைக்கிறார். வண்டிய்யே ஆடுது. மனுசருடைய கனம் வண்டி தாங்கலைன்னு ஏன் வண்டியைக் குலுக்கறீங்கன்னேன்:-)

பத்து விநாடி ஆட்டம். அடங்கமாட்டேங்கறாளே!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பிரார்த்தனைகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள்ப்பா.