Wednesday, September 21, 2011

சிங்கை சந்திப்புகள் 2011

கேசரி, பருப்பு நெய், உருளைக்கிழங்கு கறி, வெண்டைக்காய் வதக்கல், கீரை மசியல், வத்தக்குழம்பு, பருப்பு ரசம், கெட்டித்தயிர் கூடவே தயிர்ப்பச்சடின்னு ஒரு வெட்டு வெட்டிய அசதியில் கோபால் சோஃபாவிலே சாய்ஞ்சு(?) ஓய்வெடுக்க .............

நாங்கள் நாட்டு நடப்பையெல்லாம் அலசிக் காயப் போட்டுக்கிட்டே இருந்தோம். சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்களின் வீடு. விமானநிலையத்தில் வந்து இறங்குனதுமே (ஓசி) தொலைபேசியில் 'வந்த' விவரம் சொன்னதும் 'நேரா வீட்டுக்கு வந்து சேர்'ன்னு கட்டளை. அறை பதிவு செஞ்சுருக்கு. போய்க் குளிச்சுட்டு வரேன்னதும் 'சனிக்கிழமையாச்சே வெங்காயம் சேர்க்கலாமா'ன்னு பதில் வந்தது. தாராளமா........ வெங்காயம் விக்கற விலையில் கிடைக்கும்போதே அனுபவிச்சால்தான் உண்டு இல்லே? :-))))

இரவு பதினொன்னே காலுக்கு புறப்பட்ட விமானம் அஞ்சு மணி நேரத்தில் சிங்கை வந்து சேர்ந்துச்சு. இருட்டில் வந்திறங்க வேணாம். ரெண்டரை மணி நேர வித்தியாசம் இருப்பதால் நமக்கு ஒரு நாள் முழுசாக் கிடைக்குதே!

ஹொட்டேல் அறையில் பெட்டிகளைப்போட்டுட்டுக் குளிச்சுட்டு உடனே கிளம்பணும். இப்பெல்லாம் (வழக்கம்போல்) ஹொட்டேலில் தகராறு வந்துருது. பகல் 12 மணிக்கு(தான்) அறை தயாராகுமாம். எத்தனைமணிக்கு வரப்போறோமுன்னு முன்கூட்டியே சொன்னாலும் இப்படித்தானா? செக்கவுட் செஞ்சு போகும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம் குவிஞ்சுருக்கேன்னால் சுத்தம் செய்யும் பணியாளர்கள் இல்லையாம். ஹவுஸ் கீப்பிங்குக்கு ஃபோனைப் போடுன்னு சொல்லி, காத்திருந்தோம்.

காமணியில் அறை கிடைச்சது. குளிச்சுத் தயாராகிச் சீனுவைப் பார்க்கக் கோவிலுக்குப் போகும்போது வழியில் கோவிலுக்கு எதிரில் கண்ணில்பட்ட ஒரு புதுக் கடையில்...('நளன்'னு பெயர் போட்டுருக்கு) ஒரு காஃபி குடிச்சுக்கலாமுன்னு நுழைஞ்சுட்டோம். இட்டிலியும் கிடைச்சது. கோவில் வாசலில் ரெண்டு வெள்ளை யானைகள். புதுவரவு. நேத்து கூட ரெண்டு கருப்பு யானைகள் அப்பாவும் பையனுமா வழி அனுப்புனாங்க தில்லி புது விமான நிலையத்தில். புது டெர்மினல் திறந்த பிறகு முதல் முறையா இங்கிருந்து பயணம். நல்ல விதமாக் கட்டி இருக்காங்க. விசாலமா இருக்கு இப்போதைக்கு!
சீனுவின் தரிசனம் நல்லபடி கிடைச்சது. கொஞ்சம் கூட்டமும் இருந்துச்சு. பிரசாதவகைகள் விநியோகம் வேற! தெரிஞ்சுருந்தால் நளனுக்குப் போயிருக்க இருக்க மாட்டோம்:( (நளனில் முகமில்லாத பெயிண்டிங்ஸ் அருமை! தீம் நல்லா இருக்கே! ) கையோடு கொண்டுபோயிருந்த விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை( பெரிய எழுத்து!) எடுத்து வாசிச்சால் கோபாலும் கூடச் சேர்ந்துக்கிட்டார்.
நான் செல்பேசியோடு ஒட்டி உறவாடும் ரகம் இல்லை என்றாலும் உள்ளூர் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கணுமேன்னு ஒரு கடையில் பத்து டாலருக்கு புதுசா சிம் கார்டு ஒன்னு வாங்கி செல்பேசிக்கு உயிர் கொடுத்து கோவியாரைக் கூப்பிட்டேன். 'வந்துட்டேன்'

சண்டிகரில் இருந்து கிளம்பு முன்னே (முந்தின வாரம்) சிங்கை எழுத்தாளர் தோழி ஜெயந்தி சங்கரிடம் பேசிக்கிட்டு இருந்தப்ப தங்கமீன் ஏற்பாட்டில் நடக்கும் தமிழ் இதழ்கள் உரை நிகழ்ச்சி, நீங்க வரும்தினம் நடக்குது. கட்டாயம் அதுக்கு வரணுமுன்னு சொல்லி இருந்தாங்க.

மறுநாள் நம்ம கோவியாரிடம் 'டாக்'கினப்பவும் இதைப்பற்றிச் சொல்லி விவரங்களை மெயிலில் அனுப்பினார். நண்பர்கள் அனைவரையும் சந்திக்க நல்ல சந்தர்ப்பமுன்னு இருந்தேன். கோவியாரிடம் 'ஒருநாள்' சிங்கைப் பதிவர் சந்திப்புக்கு முடிந்தால் ஏற்பாடு செய்யும்படியும் கேட்டிருந்தேன். எல்லாம் இனி அவர் பொறுப்பு:-)
எம் ஆர் டி பிடிச்சு சித்ரா ரமேஷ் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம். ( இப்போதான் முதல் பாரா) இன்னொரு மீட்டிங் முடிச்சுட்டு தங்கமீனுக்கு வரேன். நீங்க கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அஞ்சரை மணி போலக் கிளம்பி அங்கே வாங்கன்னு சொல்லிட்டுச் சித்ரா கிளம்புனாங்க. அஞ்சு மணிக்கு நம்ம ரமேஷ் அருமையாப் போட்டுத்தந்த காஃபியைக் குடிச்சதும் அங் மோ கியோ நூலகத்துக்கு ரமேஷே காரில் கொண்டுபோய் விட்டார்.
இந்த நூலகத்தில்தான் புத்தக வெளியீடுகள் இலக்கியக்கூட்டங்கள்ன்னு பலதும் நடந்தாலும் நான் இங்கே போனது இதுதான் முதல்முறை. நுழைஞ்சதும் தெரிஞ்சமுகமா நம்ம பாலு மணிமாறன். திடீர்னு நான் போய் நின்னதும் அவருக்கு வியப்பு! எப்போ வந்தீங்கன்னு வரவேற்று, மகளோட நலம் விசாரிச்சுட்டு, உக்காருங்கன்னார். இணைய வரலாற்றிலேயே முதல்முதலா இண்டர்நேஷனல் பதிவர் சந்திப்பு இதே சிங்கையில்தான் 2005 நடந்து நானும் மகளும் சிறப்பு விருந்தினரா போனது உங்களில் பலருக்குத் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை!

நிகழ்ச்சி ஆரம்பிக்கும்வரை நூலகத்தைச் சுத்திப்பார்த்தோம். மாடியில் அடுக்குகளில் தமிழ்ப் புத்தகங்களைப் பார்த்தப்ப மனசுக்கு மகிழ்ச்சியாவும் ஏக்கமாவும் இருந்துச்சு. ஹூம்..... நியூஸியில் நமக்குக் கொடுப்பனை இல்லை:(

நிகழ்ச்சி நடக்கும் ஹாலின் ஒரு பக்கம் தமிழ்ப்புத்தகங்களை விற்பனைக்கு வச்சுருந்தாங்க இலக்கியக்கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சவர்கள் (என்று நினைக்கிறேன்) இன்னொரு பக்கம் சிற்றுண்டி. வடை, கேசரி, பகோடா , காஃபி டீ ன்னு அமர்க்களம். சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு ஒரே உபசாரம்!
'சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 - 1941' என்ற தலைப்பில் நண்பர் பால பாஸ்கரன் உரை. ஆதிகாலத்தில் தமிழ்ப் பத்திரிகை எப்படி ஒற்றைத்தாளில் ஆரம்பிச்சதுன்னு சொன்னதும் 'அட'ன்னு இருந்துச்சு. இதுக்குள்ளே ஜெயந்தி சங்கரும் வந்துட்டாங்க. கொஞ்ச நேரத்துலே சித்ராவும் வந்து சேர்ந்தாங்க. ஒரு அம்பது பேருக்குக் குறையாமல் அங்கே கூடி இருந்தோம்.

நிகழ்ச்சி முடியும்வரை இருக்கணும் என்ற ஆசை இருந்தாலும் ரொம்ப இருட்டுமுன் அறைக்குத் திரும்பணும் என்பதால் கிளம்ப வேண்டியதாப்போச்சு. முதல்நாள் இரவுப் பயணத்தில் சரியான தூக்கம் இல்லாம கோபால் ரெஸ்ட்லெஸ்ஸா வேற இருந்தார்.

மறுநாள் உச்சிப்போதுக்கு ஒரு 'பெரிய மனுஷரின்' முதல் சந்திப்பு ஒன்னு ஏற்பாடாகி இருந்துச்சு.

தொடரும்...........:-)

PINகுறிப்பு: பயணம் முடிஞ்சு ஏழுமாசம்தான் ஆகி இருக்கு. சிலபல காரணங்களால் உடனே எழுத முடியலை:(


20 comments:

said...

படங்கள் மிக அழகு. ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் நம்ம ஊர் கோவிலைப்போலவே இருக்கு. நல்ல பகிர்வு.

said...

கூட்டத்தைப் பார்த்து மெரண்டு போன பையர், அப்பாவோட கையைப் பிடிச்சுக்கிட்டார் போலிருக்கு :-))

அருமையான சந்திப்பு+படங்கள்.

said...

அருமையான பகிர்வுக்கும்
பதிவர் சந்திப்புக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

said...

கோவில் அழகா இருக்கு. படங்கள் எல்லாமே நல்லா இருந்ததுங்க.

சாப்பாடு வெரைட்டியெல்லாம் போட்டு பசியை கிளப்பி விட்டுடீங்களே!!!!

தில்லி சந்திப்பில் தான் என்னால கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது..:(

said...

அட அடுத்த பயணத் தொடர்.... நல்ல ஆரம்பம்.... தொடருங்கள்...

said...

ஆஹா... பலமான இன்டர்நேஷனல் பதிவர் சந்திப்பு போல இருக்கே... சூப்பர் துளசிம்மா... எங்க ஊர் (Canada) பக்கம் வந்தா மறக்காம சொல்லுங்க, 'மீட்டு'வோம்... படங்களும் அருமை

said...

கலக்கல் படங்கள்+சந்திப்பு..

said...

// 'சனிக்கிழமையாச்சே வெங்காயம் சேர்க்கலாமா'ன்னு பதில் வந்தது. தாராளமா........ வெங்காயம் விக்கற விலையில் கிடைக்கும்போதே அனுபவிச்சால்தான் உண்டு இல்லே? :-))))//

நீங்க வந்துட்டுப் போய் மாதக் கணக்காகுது, அப்போதைக்கு வெங்காய விலை எகிறி இருந்ததை நாங்க மறந்துட்டோம், நீங்க எப்படி இவ்வளவையும் நினைவு வைத்திருக்கிறீர்கள். வியப்பாக இருக்கிறது.

//பயணம் முடிஞ்சு ஏழுமாசம்தான் ஆகி இருக்கு. //

ஏழுமாதத்திற்கு முன்பானவையே இப்பதான் வருகிறது என்றால் இன்னும் ஏழுமாதம் எங்கேயும் போகாமல் எழுத உங்களிடம் எக்கச்சக்க சரக்கு இருக்குன்னு தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
:)

said...

காஞ்சிப்போன செடிகளை நினைச்சா துக்கமாகத்தான் இருக்கு, ஆசை ஆசையாக பார்த்து பார்த்து வளர்த்து...
எங்க வீட்டில் செடிக்கு தண்ணீர் ஊற்ற மறந்தால் சில சமயம் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி சண்டையே வந்துவிடும். குறைந்த பட்சம் நாம் சுவாசிக்கும் காற்றுக்கு மாற்று செய்ய கொஞ்சமாவது மரம் செடி வளர்க்கனும், யார் கேட்கிறார்கள்.

உங்கள் வீட்டு பூக்கள் படங்கள் மிக அழகாக இருக்கு, ஒரிஜினல் பூ வான்னு நம்பவே முடியவில்லை.
(நேற்றைய பின்னூட்டங்களில் எழுத்துப் பிழைகள் விட்டிருந்தேன்)

said...

வாங்க ராம்வி.

நம்மூர் மக்கள் கட்டுன கோவில்கள் தாங்க இங்கே!

ஆனால் எல்லாம் படு சுத்தம்!

said...

வாங்க அமைதிச்சாரல்.

கூட ஒரு 'அம்மா'வும் இருந்துருக்கலாம், இல்லே?

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஆதரவுக்கு என் நன்றிகள்.

said...

வாங்க கோவை2தில்லி.

உங்களை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் நான். ஏமாற்றம்தான்.

அடுத்த சந்திப்பு நியூசியில் வச்சாத்தான் வருவீங்க போல:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஏற்கெனவே ரொம்பத் தள்ளிப்போட்டுட்டேன்:( நினைவு இருக்கும்போதே எழுதணுமே!

said...

வாங்க அப்பாவி தங்கமணி.

வரணும் வரணும். உங்கூர்ப்பக்கம் வரணும். வரும்போது சொல்லாமலா இருப்பேன்:-)))))

said...

வாங்க மேனகா.

குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் நல்லபடியாக நடந்துச்சா?

என்னென்ன ஸ்பெஷலுன்னு எழுதுங்க.

said...

வாங்க கோவியார்.

சரக்கு கைவசம் இருக்குன்னாலும் 'காலம்' வேணுமே!!!!

இயற்கையின் படைப்பில் போட்டியிட்டால் மனுஷன் தோற்கத்தான் வேணும்(பூக்கள் நிஜம்):-)

சுவாசிக்கும் காற்றுக்கு நன்றிக்கடன். கருத்து அருமை. பாராட்டுகள்.

said...

அட...வெள்ளை யானைகள் :)
நன்றாகவே இருக்கிறது.

இனிய சந்திப்பு.

said...

nice pictures

said...

வாங்க அருள்.

நன்றி.