Friday, September 23, 2011

ஞாயிறு முழுதும் நண்பர்களுடன் (சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 2)

பொழுதுவிடிஞ்சு பொற்கோழி கூவி சிராங்கூன் சாலை கோமளவிலாஸ் (பழையது) ஃபில்டர் காஃபியுடன் நாள் தொடங்கியது. அப்படியே வீரமாகாளியை தரிசனம் செஞ்சுக்கிட்டுச் சீனுவைப் பார்க்கப்போனோம். இன்றும் நல்ல கூட்டம்தான். ஜொலிக்கும் தங்கக்கொடிமரத்தின் மேல்விதானத்தில் 12 ராசிகள். இந்தக் கோவில் மட்டும் எப்போதுமே பளிச்ன்னு இப்பத்தான் கட்டுனதுபோல் இருக்கும் அழகை ரசிச்சுக்கிட்டே பெருமாளைக் கண்குளிர தரிசனம் செஞ்சோம். சகஸ்ரநாமம் வாசிக்கும்போது சாய்ஞ்சு உக்கார நமக்கும் ஒரு தூண் கிடைச்சது.


மூலவரையும் இங்கே படம் எடுத்துக்கலாம்!!!!!


இன்னிக்கு ஞாயிறா இருக்குதே. நண்பர் வீட்டுக்குப்போனால் முழுக் குடும்பத்தையும் சந்திச்சு மகிழலாம்தானே? மூணு குழந்தைகளையும் ஒன்னாப் பார்க்கவே முடிவதில்லை பல பயணங்களில்., ஃபோனில் கூப்பிட்டு வந்தவிவரம் சொன்னதும் கிளம்பி வாங்க. இல்லைன்னா நானே வந்து கூப்பிட்டுப்போறேன் அங்கேயே இருங்கன்னார். இப்பக்கூட மனைவியும் ரெண்டு குழந்தைகளும் பஜனைக்குப் போயிருக்காங்களாம். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துருவாங்கன்னார். சில வருசங்கள் நியூஸியில் நம்மூரில் வசிச்சவர் இவர்.24 வருச நட்பு.


சிரமப்படவேணாம். நாங்களே கிளம்பி வர்றோமுன்னு போனோம். அதுக்குள்ளே விவரம் தெரிஞ்சுக்கிட்டு. அவர் மனைவி வீடு திரும்பிக் காத்திருந்தாங்க. 'ஊர்கதை'கள் எல்லாம் பேசி பலாப்பழம், முறுக்குன்னு தின்னுட்டுப் பெரிய மனுசர் சந்திப்புக்காக வேகமா அறைக்கு வந்தோம்.

முற்பகல் தூக்கம் முடிச்சுட்டு அவர் குளிச்சுத் தயாராகிக்கிட்டு இருக்காராம். அவரைச் சுத்தித்தான் உலகம் இப்போ! அரைமணிக்குள்ளே வந்துருவாருன்னு சேதி கிடைச்சது. தாகமா இருக்கேன்னு கீழே போய் ஒரு இளநி குடிச்சு வர்றதுக்குள்ளே அறை வாசலுக்கே வந்துட்டார் அவர்.

அப்பா, அம்மா அக்கா, 'தாய் மாமா' உதவியாளர் புடை சூழ வந்த பெரிய மனுசருக்கு அன்னிக்குச் சரியா 'அரை' வயசு! என்ன ஒரு அழகான கண்கள்! மெய்மறந்துதான் போனேன். புதுமுகங்களைப் பார்த்து அழுவாரோன்னு நினைச்ச கணம் கோபால் அப்படியே வாரி எடுத்து மடிமேல் வச்சுக்கிட்டார். குழந்தைகள் விஷயத்தில் நம்ம வீட்டில் கோபால்தான் மாஸ்டர்.


சிவ செங்கதிர்.

தெரிஞ்சவங்க யாருக்காவது குழந்தை பொறந்துருக்குன்னு மருத்துமனைக்குப் போனால்....புதுசாப் பொறந்த உயிர்களை நான் எட்டியே ரசிப்பேன். ஆனால் இவர் சட்னு தூக்கி வச்சுக்குவார். மகளையும் இப்படித் தூக்கி வச்சே கெடுத்துட்டாருன்னு கத்துவேன். கைச்சூடு பழகிப்போனால் குழந்தைகள் பொழுதன்னிக்கும் தூக்கிக்கச் சொல்லி அழும்.

நம் தேசிய குணத்தை விடவேண்டாமுன்னு எல்லோரும் பேசிக்கிட்டே இருதோம். இதுக்குள்ளே வந்தவர்கள் யாருன்னு புரிஞ்சுருக்குமே! அப்புறம் இன்னும் லஞ்சு யாருமே சாப்பிடலையேன்னு கீழே இறங்கி செராங்கூன் சாலைக்குப் போனோம். நிமிஷ நடையில் கோமளாஸ் ஃபாஸ்ட் ஃபுட்ஸ்.
எனெக்கென்னமோ இதைவிட அந்தப் பழைய கோமளவிலாஸ்தான் நல்லா இருக்குன்னு நினைப்பு. சப்ளையர் வந்து என்ன வேணுமுன்னு கேட்க, நாம் என்ன இருக்கு அதுவும் சூடா என்ன இருக்குன்னு எதிர்க்கேள்வி போட அவர் 'நெருப்பு'ன்னு சொல்லாம மனப்பாடம் செஞ்சு வச்சதை ஒப்பிக்க..... நாம் கவனமாக் கேட்டுட்டு அவர் சொல்லாத ஒரு அயிட்டத்தை இருக்கான்னு..... இப்படியெல்லாம் இருந்தால்தானே மஜா.

போகட்டும்.இப்போ சாப்பாடா முக்கியம்? நண்பர்களுடன் பேசிக்கிட்டே கிடைச்சதை உள்ளே தள்ளிட்டால் ஆச்சு. ஆறுமாசக் குழந்தையை இங்கே அங்கேன்னு அலைக்கழிக்கக் கூடாதேன்னு சாப்பாடு ஆனதும், அம்மா, அக்கா, உதவியாளருடன் ஒரு டாக்ஸியில் வீட்டுக்கு அனுப்பிட்டார் நம்ம கோவியார்.

இன்னொரு டாக்ஸி எடுத்து கோவி கண்ணனும் விஜயபாஸ்கரும் எங்களை பதிவர் சந்திப்புக்குக் கூட்டிப்போனாங்க.. டுரியன் கட்டிடத்துக்கிட்டே போய்ச் சேர்ந்தோம். கடற்கரை என்பதும் மரீன் ஏரியாவில் ஒரு பெரிய பாலம் இருப்பதும் நமக்கு வாகாய் இருக்குமுன்னு கண்ணன் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இருந்தார். கடற்கரை சரி. ஆனால் பாலம் எதுக்கு? மழை பேய்ஞ்சால் நமக்கு அதுதான் குடை:-) சிங்கப்பூர் மழையைப் பத்திச் சொல்லவேண்டியதே இல்லை.,நினைச்சு நினைச்சு முணுக்ன்னு வந்து இறங்கிரும். பதிவர் சந்திப்பைப் பார்க்கணுமுன்னு அதுக்கு ஆசை வந்துட்டால்?
இந்த டூரியன் பழம்போன்ற (மேலே முள்முள்ளாய் பலாப்பழம்போல் இருக்கும்) அமைப்பில் உள்ள இந்தக் கட்டிடம் ஒரு ஒன்பது வருசத்துக்கு முன்னால்தான் கட்டித் திறப்பு விழா ஆச்சு. ஒரு பெரிய பழத்தை ரெண்டா வெட்டிக் கவுத்து வச்சதுபோல் ரெண்டு கூரைகளுடன் இருக்கு. உள்ளே நாடகம், இசைம் நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளுக்கான அரங்கங்கள். ஒன்னில் 1600 பேரும் இன்னொன்னில் 2000 பேரும் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கமுடியும் என்ற பெரிய அளவில் பிரமாண்டமாக் கட்டி இருக்காங்க. உலகத்தரம் வாய்ந்த தியேட்டர்களில் இதுவும் ஒன்னு!
போதாக்குறைக்கு மூணாவது மாடியில் ஒரு நூலகம் வேற! கீழ்தளத்தைச் சுற்றித் தீனிக் கடைகள், மற்ற சில வகைக் கடைகள். மொட்டைமாடி ஒரு திறந்தவெளியா வித்தியாசமாக இருக்காமே! 600 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை இந்த ஏரியாவைச் சீர்படுத்தச் செலவு செஞ்சுருக்கு அரசு.

லோகநாதன், கருணாகரசு, கோபால்

மோஹன், ஜெகதீசன், விஜயபாஸ்கர்.



கோவிகண்ணன், ஜெகதீசன், விஜயபாஸ்கர், கிரி


நல்ல வேளை. அன்னிக்கு மழை வரலை. சந்திப்பு சேதி கேட்டு கவிதாயினி மாதங்கி, தன்வீட்டுத் தோட்டத்து ரோஜாவைக் கிள்ளி எடுத்துக்கிட்டு ஓடோடி வந்துருந்தாங்க. பதிவர் வாசகர் சந்திப்புக்கு பயங்கர வெற்றி! வாசகர்களா மோகன், லோகநாதன், கோபால் என்ற மூவரும் பதிவர்களா நம்ம மாதங்கியுடன் சேர்த்து, கருணாகரசு (கவிஞர்) டொன்லீ, கிரி, ரோஸ்விக், வெற்றிக்கதிரவன் ( நம்ம விஜயபாஸ்கர்தாங்க) ஜெகதீசன், கோவி.கண்ணன். எப்படியோ பழமொழி சரியா இருந்துச்சு. (பைத்தியத்தைச் சுத்திப் பத்துப்பேர்!) புல்தரையில் வட்டம்போட்டு பக்கத்தில் இருந்தவருடன் பேச்சுன்னு ஒரு மணி நேரம். அதுக்குப்பிறகு அப்படியே நகர்ந்து போய் புதுசாக் கட்டி இருக்கும் மூணு கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபடி நடந்து போய் ஆம்ஃபி தியேட்டர் ஒன்னைக் கடந்துபோய் படிகளில் உக்கார்ந்து கொஞ்ச நேரம் உரையாடி, இருட்டு மயங்கும் நேரம் அந்த மூணு கோபுர ஹொட்டேல்* Sands) நடத்தும் லைட் ஷோவைப் பார்த்து மகிழ்ந்தோம்.

மோஹன், கிரி, துளசி, கோபால், லோகநாதன் (மேல்வரிசை)

டொன்லீ, கருணாகரசு, ரோஸ்விக், ஜெகதீசன், விஜயபாஸ்கர் (கீழ்வரிசை)


ஏழரை மணி அளவில் நல்லா இருட்டிப்போச்சேன்னு பைபை சொல்லிட்டு ஒவ்வொருத்தராக் கிளம்புனதும் நாங்களும் ஒரு டாக்ஸி பிடிச்சு செராங்கூன் ரோடு ஞாயிறு கூட்டத்தை தவிர்க்க வேறொரு சாலை வழியா அறைக்கு வந்து சேர்ந்தோம். நண்பர் கருணாகரசு எங்ககூடவே வந்து எம் ஆர் டி பிடிக்கப் போனார்.
ஒளி
ஒலி

ரோஸ்விக், கருணாகரசு, லோகநாதன், ஜெகதீசன், கோவிகண்ணன், விஜயபாஸ்கர்

ஞாயிறுகளில் மட்டும் லிட்டில் இந்தியாவில் குறிப்பா வீரமாகாளியம்மன் கோவிலுக்கும் முஸ்தாஃபா கடைக்கும் இடையிலுள்ள இடங்களைக் கட்டாயம் தவிர்க்கணும். லிட்டில் இந்தியா என்ற பெயருக்கு ஏற்ப அங்கே கூடும் கூட்டம் ஒரு சின்ன இந்தியாவேதான்!
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்



தொடரும்..........:-)

24 comments:

said...

நல்ல அனுபவம்.வெற்றிகரமான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள், மேடம்.

said...

"கைச்சூடு" கரெக்டுதான். குழந்தைங்க பழக்கப் படறாங்களோ இல்லியோ, நாம பழக்கப் பட்டுடறோம. நாள் பூரா பிஞ்சுகளை கையில் வெச்சிக்கிட்டிருக்கறது சுகமான அனுபவம் :-))

said...

அருமையான இடத்துல சூப்பரான பதிவர் சந்திப்பா இருந்திருக்குங்க.

குழந்தை அழகா இருக்கு. இப்போ இன்னும் பெரிசா ஆயிருக்கும்.

said...

அருமையான மலரும் நினைவுகளாய் பதிவர் சந்திப்புக்கு பாரட்டுக்கள். வாழ்த்துக்கள்.

said...

நல்ல அனுபவம் பகிர்வுக்கு நன்றி

said...

தொடருங்கள் ...
வாழ்த்துக்கள் .

said...

மணிவிழாக்காணும் கோபாலுக்கு எங்கள் இருவரின் சார்பாக வாழ்த்துகள். இருவரும் இன்று போல் என்றும் இனிமையாகவும், மகிழ்வாகவும், பூரண ஆரோக்கியத்துடனும் இருக்கப்பிரார்த்தனைகள்.

கீதா&சாம்பசிவம்.

said...

அருமை. பதிவுகளில் வாசித்த பதிவர்கள் பலரின் புகை படங்கள் இங்கு பார்க்க முடிந்தது. சுவாரஸ்ய எழுத்து நடை. தொடருங்கள்

said...

பச்சைக் கம்பளத்தில் பதிவர்கள் சந்திப்பு படங்கள் அருமை.

said...

ஹூம்! சிங்கையை மீண்டும் கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.

said...

ada ! kalakkunga!!!

said...

உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோசம். பதிவர் சந்திப்பு பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்து இங்கு தான் வந்து இருந்தேன் :-)

said...

வாங்க ராம்வி.

இப்பெல்லாம் நமக்கு பதிவர் குடும்பம் ஒன்னு உலகம் பூராவும் இருக்கேப்பா. சந்தர்ப்பம் கிடைக்கும்போது சந்திச்சால் மனசுக்கு மகிழ்ச்சி கூடுதே!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அழாமல் இருக்கும் குழந்தையை எவ்ளோ நேரமானாலும் வச்சுக்கலாம். ஆனால்........ சில சமயம் வாழ்க்கையே வெறுத்துப்போகும் அளவுக்கு அதுகள் ..... கையிலே தங்காமல் அழும்பாருங்க............ எதுக்கு அழுதுன்னு புரியாமல் நாம் திண்டாடும் நேரம் கொடுமைப்பா:(

said...

வாங்க கோவை2தில்லி.

சிங்கையில்தான் இப்படி விதவிதமான இடத்துலே பதிவர் சந்திப்பு நடத்தலாமுன்னு நம்ம கோவை கண்ணன் அன்னிக்குச் சொன்னார். உண்மைதான்:-)

குழந்தையும் நம்ம கண்ணனோடதுதான். ஆகஸ்ட்டுலே ஒரு வயசாச்சு. பதிவும் அப்பா போட்டுருந்தார்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

மலரும் நினைவுகளுக்கு வலை உலகில் 'கொசுவத்தி'ன்னு பேர்:-)))) காப்பிரைட் என் வசம்தானாக்கும் கேட்டோ!

said...

வாங்க கார்த்திகேயனி.

உங்கூர்லே சந்திப்புகள் நடந்தால் விட்டுறாதீங்க!

said...

வாங்க நண்டு@நொரண்டு.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

said...

வாங்க கீதா & சாம்பசிவம்.

வாழ்த்துகளுக்கு நன்றிகள். உங்களைப்போல் அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் இருக்கும்போது ஆனந்தத்துக்கு என்ன குறை!!!

said...

வாங்க மோகன்குமார்.

பதிவர்களின் படங்களை சிலசமயம் பார்க்க நேரிடும்போது யார் யார், யார் என்று குழப்பம் இருக்கும். அதான் பெயர்களோடு முகங்களை நினைவு வச்சுக்கும் உத்தி இது:-)

said...

வாங்க மாதேவி.

ஆஹா..... 'பச்சைக் கம்பளத்தில் பதிவர் 'என்ற தலைப்பு வச்சுருக்கலாம் போல!!!!

said...

வாங்க குமார்.

உங்களை சென்னையில் சந்திக்கணுமுன்னு நினைச்சு எப்படியோ முடியாமல் போச்சு. சிங்கை நினைவுகள், மனதில் தங்கித்தான் போகுது.

said...

வாங்க அருணா.

உங்க அடுத்த சந்திப்பு நியூஸியில் என்பதை மறந்துடாதீங்கப்பா!

said...

வாங்க கிரி.

அடிக்கடி இல்லைன்னாலும் அப்பப்பக் கலந்துக்குங்க. இதுவும் மன மகிழ்ச்சிதான்:-) நீங்க வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு.