Friday, September 02, 2011

ஹூம்......எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே:(

தினமும் மகளோடு தொலைபேசுவதும் நியூஸி நிலநடுக்கத்துக்கான வலைப்பக்கம் பார்ப்பதுமே வேலையாப் போச்சு. இந்தியாவில் முக்குக்கு முக்கு கோவில்கள் இருப்பதைப்போல் இங்கேயும் ஏகப்பட்ட சர்ச்சுகள் இருக்கு. அதுலே இந்த நகரத்துக்கு கிறைஸ்ட்சர்ச் என்ற பெயர்வரக் காரணமான தேவாலயம் இருப்பது நகரின் மையத்தில். பஸிஃபிக் கடலில் மிதந்துக்கிட்டு இருந்த இந்த ஆளில்லாத் தீவுகளை (???!!!) இந்தப் பக்கம் வால்நட்சத்திரத்தைத் தேடிக்கிட்டு வந்த கேப்டன் ஜேம்ஸ் குக் கண்டறிஞ்சு ( இந்த சொற்பிரயோகத்தைக் கண்டறிஞ்சு சொன்ன மலர்வனம் லக்ஷ்மிக்கு நன்றி) போய் சேதி பரவியதும் இந்த நியூஸி நாட்டுக்கு பிரிட்டனில் இருந்து வெள்ளையர்கள் குடியேறியது 1850 வது ஆண்டு. நாலு கப்பலில் வந்தாங்க இந்த செட்டிலர்ஸ்ன்னு சரித்திரம் சொல்லுது. கரை சேர்ந்தவுடன் கண்ணெதிரில் ஒரு குன்று. போர்ட்க்குப் பக்கத்தில் இருப்பதால் இது போர்ட் ஹில்ஸ் ஆச்சு! நமக்கா பேர் வைக்கத் தெரியாது:-))))

குன்றின்மேல் ஏறி அடுத்த பக்கம் இறங்குனா........ பார்த்தாலே மூச்சடைச்சுப்போகும் விதமா கண் எட்டும் தூரம்வரை பரந்து விரிஞ்சுக்கிட்டே போகும் சமதளம். ஒரே ப்ளெய்னா இருக்கே! ஆஹா.... இதுதான் கேண்டர்பரி ப்ளெய்ன்ஸ். பேரு வச்சுட்டொம்லெ! இங்கிலாந்தின் கேண்டர்பரி நினைவா இங்கேயும் ஒரு கேண்டர்பரி உருவாக்கிடணும்.

நல்ல ஒழுங்குமுறையான ஊரை நிர்மாணிக்கலாமேன்னு திட்டம் போட்டு முதலில் கோவில் ஒன்னு கட்டுனாங்க. இதுதான் நடுநாயகமா இருக்கணும். கூட்டல் குறி போட்டாப்புலே நெடுக்கும் குறுக்குமா ரெண்டு தெருக்கள் சந்திக்கும் இடத்துலே சர்ச்சு. இதைச் சுத்தித்தான் ஊர். சர்ச்சுக்கு வலதும் இடமும் நேர்வாட்டுலே அவ்வஞ்சு தெருக்கள். சர்ச்சுக்குப் பின்னால் நாலு தெருவும். சர்ச்சுக்கு முன்னால் நாலு தெருவும் குறுக்கு வாட்டுலே வரணும்.

ஊருலே இருக்கும் ஒரே ஆறு வளைஞ்சும் நெளிஞ்சும் எல்லாப்பகுதியிலேயும் தலையைக் காட்டிக்கிட்டு நீண்டு போய்க்கிட்டே இருக்கு. இது கோவிலுக்கு முன்பக்கமும் வாரதால், அதை ஒட்டியே பெரிய தோட்டம் ஒன்னு இருந்துட்டுப் போகட்டும். செஸ் போர்டு போல கட்டம்கட்டமா தெருக்களைப்போட்டுட்டோம். இப்போ இதுக்கு ஒரு பார்டர் கட்டுனா அழகா இருக்குமே! சதுரமா நாலு பக்கமும் சுத்திவர நாலு அவென்யூக்கள். ரெண்டு பக்கமும் மரங்கள் அடர்த்தியா நின்னுச்சுன்னா சும்மா ஜில்லுன்னு அட்டகாசமா இருக்குமே!

இந்த நாலு அவென்யூக்களுக்குள்ளே இருப்பதுதான் செண்ட்ரல் சிட்டி என்னும் அந்தஸ்து அடைஞ்சது. மக்கள் கூட்டம் பெருகப்பெருக எல்லா திசைகளிலும் குடியிருப்புப் பகுதிகள் வர ஆரம்பிச்சு பேட்டைகள் நிறைஞ்ச ஊரா வளர்ந்தது வேற கதை. அதிலும் நாங்க இங்கே வந்தப்ப ஆப்பிள் தோட்டங்களா இருந்த நிலங்கள் எல்லாம் இப்போ புதுப்புதுப் பெயர்களில் பேட்டைகளா மாறி நகரம் வளர்ந்துக்கிட்டே போறதுக்கு அத்தாட்சியா இருக்கு.

அந்தக் காலத்தில் இப்போ சொல்லும் ஃபால்ட் லைன் சமாச்சாரமெல்லாம் வெளியே தெரியாமல், இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு விஷயமா இருந்துருக்கு. அதன் மேலேயே அடக்கமா அமைதியா இருந்த நிலத்திலே ஊரைக் கட்டிட்டாங்க. ஆறே வருசத்தில் அழகான நகரம். இங்கிலாந்தில் அப்போ ஆட்சியில் இருந்த மாட்சிமை தாங்கிய மஹாராணி விக்டோரியா அவர்கள் பிரிட்டிஷ் காலனிகளில் சிறந்த பெரிய ஊருக்குத் தரும் 'நகரம்' என்ற அந்தஸ்த்தை வழங்கினார். இந்தக் கணக்கில் ஊருக்கு வயசு இப்போ 155. ஒன்னரை நூற்றாண்டு ஆனதை அஞ்சு வருசத்துக்கு முன்னே பிரமாண்டமாக் கொண்டாடுனோம். அதை ஒரு பதிவும் போட்டு ஆவணப்படுத்தியாச்சு:-)

மற்ற உலகநாடுகளில் இருந்து வரும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள் எல்லாம் 'பேஷ் பேஷ்! ப்ரமாதம்!'ன்னு சொல்லி ஆனந்தப்படும் அளவுக்கு சரித்திர சம்பந்தமுள்ள பாரம்பரியக் கலைகளையும், கட்டிடங்களையும் காப்பாத்திப் புது மெருகோட வைப்பதில் நியூஸியிலேயே முதலிடம் வாங்குவது இந்த கிறைஸ்ட்சர்ச் மாநகரம்தான். The most English City outside England"என்ற க்ரீடம்! போதாததுக்கு இங்கிருக்கும் இயற்கை அழகைப் பாழாக்காமல் எங்கே பார்த்தாலும் தோட்டங்களை அமைச்சு The Garden City Of New Zealand என்ற பெருமையும் இதுக்குத்தான். இந்த ஊருக்கு ஏழு அக்கா தங்கச்சிகள் இருக்காங்க! அதுலே ஒரு அக்கா நம்ம பெங்களூரு!


சுயதம்பட்டம் இங்கே


Provincial கட்டிடத்தின் உள்ளே

ஆரம்ப காலத்துலே எல்லாமே மரத்தாலே கட்டுன கட்டிடங்கள்தான். ஆனால் ஒவ்வொன்னும் ஒரு அழகு. நியூஸிலாந்து தொடர் எழுதிக்கிட்டு இருந்த சமயங்களில் பழைய சரித்திரத்தைத் தெரிஞ்சுக்க சதா புத்தகவேட்டை நடத்திக்கிட்டு இருந்தப்ப எனக்குக் கிடைச்ச புத்தகங்கள் பல இன்னிக்குப் பொக்கிஷமா பாதுகாத்து வைக்க வேண்டியவை! நடந்த சம்பவங்கள் அத்தனையையும் அந்தக் காலத்தின் 'பதிவர்கள்' பக்காவாக் குறிப்புகள் எழுதி வச்சுருக்காங்க வெறும் நூத்தம்பது காலச் சரித்திரம் என்றதால் நமக்கும் தெரிஞ்சுக்கச் சுலபமாவே இருக்கு.
தலைமைத் தபாலகம்
நம்மூர் ம்யூஸியம்


இந்த மரக்கட்டிடங்கள் எல்லாம் இருவதாம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக் கல் கட்டிடங்களா மாறி இருக்கு. அஞ்சாம் நூற்றாண்டுக்கும் பதினைஞ்சாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ரொம்ப பேர்போன கோதிக் ஸ்டைல் கட்டிடக்கலையை அனுசரிச்சு இங்கேயும் மாற்றங்கள் செஞ்சாங்க. பனிரெண்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளில் இந்த வகைக் கட்டிடங்கள்தான் தேவாலயம் கட்டுவதற்கென்றே இருந்த மெயின் ஸ்டைல். கூரா முடியும் ஆர்ச்சு வளைவுகள், ரொம்ப உசரமான விதானங்கள் இருக்கும் உள் கூரைகள் இப்படி........ கட்டிடக்கலை படிச்சவங்க இதை இன்னும் நல்லா விவரிச்சுச் சொல்வாங்க,. எனக்கு அவ்வளவா விளக்கத் தெரியலை:(
டைம்பால் ஸ்டேஷன் அன்று(மேலே) இன்று (கீழே)பாரம்பரியம் உள்ள ரொம்ப அழகழகான கட்டிடங்களைப் பாதுகாக்கன்னே ஹெரிடேஜ் ட்ரஸ்ட் ஒன்னு ஆரம்பிச்சாங்க. அவுங்க அனுமதி கொடுத்தாலன்றி கட்டிடத்தின் உரிமையாளர்கூட அதில் ஒரு கல்லை பேர்த்து எடுக்கமுடியாது. நமக்குச் சொந்தமான கட்டிடம் சரித்திரமுக்கியத்துவம் உள்ள கட்டிடமுன்னு நாம் நினைச்சால் இந்த ஹெரிடேஜ் ட்ரஸ்ட்லே ரெஜிஸ்தர் பண்ணிக்கச் சொல்லி கேக்கலாம். அதுக்குன்னே இருக்கும் ஒரு குழு வந்து பார்த்து 'உண்மையை' ஆராய்ஞ்சு 'அரிஞ்சு' முடிவெடுப்பாங்க. ஆமாம்...இதனால் நமக்கென்ன லாபம்? பழுதுபார்க்கும் செலவு நமக்கு மிச்சம்தானே? சிலசமயம் நல்லவிலையும் கொடுத்து அவுங்க வாங்கிக்குவாங்க. அருமை தெரியாத இளைய தலைமுறை அதை ஆளும்பாழுமா ஆக்காம நிலைச்சு நிக்கும் பாருங்க!

b4 செப்புப்பாத்திர பண்டமெல்லாம் கீழே விழுந்து கிடக்கு:(


நம்மூர் கதீட்ரலும் உள்ளுக்குள்ளே பூராவும் மர வேலைப்பாடுகள், ஸ்டெய்ன் க்ளாஸ்களோடு வெளிப்புறம் கருங்கல் கட்டிடமாத்தான் இருந்தது. எல்லாம் இங்கே உள்ளூர்லே கிடைச்ச கற்களும் மரங்களும்தான். கோவில்மணி தொங்கவிட்ட கூச்சுக்கோபுரத்துக்கு லைட் ஹவுஸ் மேலே ஏறிப்போகும் வட்டப்படிகள் வச்சுக் கட்டுனாங்க. 36 மீட்டர் உயரம். அங்கிருந்து செப்புத்தகடு போர்த்துன மரக் கும்மாச்சி 27 மீட்டர். மொத்தம் 63 மீட்டர். இந்தச் செப்புத்தகடுகள் போர்த்துவது தேவாலயக்கட்டிடங்களில் பரவலா இருந்த ஸ்டைல். காலப்போக்கில் இந்த செப்புத்தகடு பச்சையா மாறிப்போயிருது. அந்த 36 மீட்டர் ஏறிப்போக 133 படிகள். ரொம்பக்கீக்கிடமா இருக்கும் இதில் ஏறிப்போய் மேலே நின்னு ஊரைப் பறவைப்பார்வை பார்க்கலாம். கஷ்டப்பட்டு ஏறி இறங்குனதுக்கு நமக்கு ஒரு சான்றிதழ் கூடக் கொடுப்பாங்க. நாங்களும் வாங்கி இருக்கோம்:-)


இந்த கும்மாச்சி மட்டும் இதுவரை மூணுமுறை புட்டுக்கிட்டுக் கீழே விழுந்துருக்கு. மூணும் 1881 1888, 1901 வருசங்களில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால்தான். மரம் இப்படிப் பொத் பொத் ன்னு விழுதேன்னு அதை 1901 வது வருசம் கல்லாலே கட்டி நிறுத்திட்டாங்க. சம்பவம் நடந்த அன்னிக்கு சுற்றுலாப்பயணிகள் மணிக்கூண்டு மேலே ஏறிப் பார்த்துக்கிட்டு இருந்தாங்களாம். எல்லோரும் கூண்டோடு கைலாசமுன்னு சேதி வந்தப்ப துடிச்சுப்போயிட்டோம். நல்லவேளையா யாரும் இல்லைன்னு அப்புறம் நல்ல சேதி கிடைச்சது. வதந்தீ பரவக்கேக்கணுமா?
இன்னொரு சர்ச்சு அப்பவும் இப்பவும்!

நாலு அவென்யூக்களுக்குள் இருக்கும் சிட்டி செண்டரை ரொம்ப பாதிக்கப்பட்டச் சிகப்புப் பகுதின்னு கவுன்ஸில் அறிவிச்சு யாரும் உள்ளே எட்டிப்பார்க்க முடியாமல் கம்பிவலைகள் போட்டு அங்கே போகும் எல்லா வழிகளையும் அடைச்சுருச்சு. அந்தப் பகுதியில் குடி இருந்தவர்கள் பாடுதான் ரொம்பத் திண்டாட்டமா போயிருச்சு. எல்லோரையும் கொண்டுபோய் தாற்காலிகமா பள்ளிக்கூடங்கள்,. ஷெட்டுகள், சமூகக்கூடங்களில் வச்சுட்டாங்க,. புதுசா எந்த உயிரிழப்பையும் அனுமதிக்கவோ தாங்கிக்கவோ நகரத்துக்கு சக்தி இல்லை.

கொஞ்சநாள் கழிச்சு நம்ம வீட்டுக்குப் போவோமுன்னு இருந்த குடும்பங்கள் அவர்கள் வீடெல்லாம் ஆபத்தான நிலையில் எந்த விநாடியும் இடிஞ்சு விழும் வாய்ப்புன்னு கேள்விப்பட்டதும் மனசொடிஞ்சு போயிட்டாங்க. என்னதான் கவுன்ஸில் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்குண்டான விலையையும் காப்பீடு செய்திருக்கும் பொருட்களுக்கான காசையும் தரேன்னு சொன்னாலும்...... வீடுன்றது வெறும் மண்ணும் கட்டிடமும்தானா? அது ஏற்படுத்தின உணர்வுக்கு என்னன்னு மதிப்புப் போடமுடியும்? குறைஞ்சபட்சம் வீட்டுக்குள்ளே நாம் விட்டுவந்த மதிப்பு வாய்ந்த பொருட்களையாவது எடுத்துக்கிட்டு வர அனுமதிச்சு இருக்கக்கூடாதா? மதிப்புன்றதும் இங்கே காசைப் பத்திச் சொல்லலை! பலருக்கு தங்கள் தாத்தா பாட்டியோடு எடுத்துக்கிட்ட அந்தக் காலத்துப்படங்கள்கூட விலை மதிப்பில்லாததுதானே? குழந்தைகளின் ஃபேவரிட் பொம்மைகள்கூட.........

அடராமா..... இப்படி ஒரு நிலை வந்தால் நான் எதைன்னு எடுத்துக்கிட்டு ஓடுவேன்? அடுக்குமாடி கார் பார்க்கிங்லே நிக்கும் வண்டிகள் ஆறுமாசமா அங்கேயே கிடக்குது. முக்கியமான அஞ்சு நட்சத்திர விடுதிகள் எல்லாமே நகரின் மையத்தைச் சுத்தியே இருந்ததால் அங்கேயும் விரிசல்கள் ஏற்பட்டுச் சிவப்புப் பகுதிக்குள்ளே மாட்டிக்கிச்சு. அங்கே தங்கி இருந்த வெளிநாட்டினர் உயிர்தப்ப ஓடவேண்டி இருந்ததால் அவர்கள் பொருட்கள் எல்லாம் எடுக்க முடியலை. கோபாலின் ஆஃபீஸுக்கு வந்திருந்த சிலர் பாஸ்போர்ட் கூட எடுத்துக்க முடியாமல் போய் எம்பஸியில் சொல்லி தாற்காலிக பாஸ்போர்ட் எடுத்து நாடு திரும்பவேண்டியதாப் போயிருச்சு. இந்த கலாட்டாவில் நியூஸியில் இருக்கும் காதலியை, என்னைக்கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டு மோதிரம் போடவந்த ஒரு வெளிநாட்டுக்காரர் கொண்டுவந்த வைரமோதிரமும் ஒரு ஹொட்டேல் ரூமிலே இன்னும் கிடக்குதாம்.

இது இப்படி இருக்க நகரின் கிழக்குப்பகுதியில் புதுசா ஒரு கஷ்டம் வந்துச்சு....

தொடரும்................:(

30 comments:

said...

””பாரம்பரியம் உள்ள ரொம்ப அழகழகான கட்டிடங்களைப் பாதுகாக்கன்னே ஹெரிடேஜ் ட்ரஸ்ட் ஒன்னு ஆரம்பிச்சாங்க. அவுங்க அனுமதி கொடுத்தாலன்றி கட்டிடத்தின் உரிமையாளர்கூட அதில் ஒரு கல்லை பேர்த்து எடுக்கமுடியாது””
இந்த வசதி இங்கிருந்தால் செட்டிநாட்டில் நிறைய வீடுகள் தப்பித்திருக்கும். தகவல்களுக்கு நன்றி

said...

விரிவான உங்கள் விளக்கங்கள் நில நடுக்கம் காரணம் ஏற்பட்ட அழிவின் முழு முகத்தினையும் எங்களுக்குக் காட்டும் விதமாய் இருக்கிறது.

அப்பா என்ன ஒரு தாண்டவம்....

said...

குழந்தைகளுக்கு பொம்மையும் மத்தவங்களுக்கு வைரமோதிரமும்..எல்லாம் ஒன்னுதான்..:(

said...

//வீடுன்றது வெறும் மண்ணும் கட்டிடம்யும்தானா? அது ஏற்படுத்தின உணர்வுக்கு என்னன்னு மதிப்புப் போடமுடியும்?//

ஆம்.

இயற்கை சீற்றத்தினால் ஏற்படும்விளைவுகளை நம்மால் தடுக்க முடியாது.வருத்தம்தான் பட முடியும்.

said...

இங்கேயும் பாரம்பரியமான கட்டடங்களை அப்படியே பாதுகாத்திட்டு வராங்க டீச்சர். சில குடியிருப்புகளை கட்டும்போதே அக்ரிமன்ட் சைன் வாங்கிடறாங்க. வீட்டோட அமைப்பு/வர்ணம் எதையும் மாத்த முடியாது. சொந்த வீடா இருந்தாக் கூட. அங்கேயும் அப்டி இருக்கும்னு நினைக்கறேன்.

said...

மேடம், உங்களோடு பிஜி தீவு புத்தகத்தை பார்த்தேன், இன்னும் படிக்கல, படிச்சிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன்

- ஷர்புதீன்

said...

வீடுன்றது வெறும் மண்ணும் கட்டிடமும்தானா? அது ஏற்படுத்தின உணர்வுக்கு என்னன்னு மதிப்புப் போடமுடியும்? //

மனம் கனக்க வைத்த நிகழ்வுகள்.

said...

//வீடுன்றது வெறும் மண்ணும் கட்டிடமும்தானா? அது ஏற்படுத்தின உணர்வுக்கு என்னன்னு மதிப்புப் போடமுடியும்?//

ரொம்ப சரியான வார்த்தைகள்.. அதுவும் நம்ம குடும்பத்துல ஒண்ணு இல்லியா.

said...

நில நடுக்கம் இயற்கையின் சீற்றம்தான்.
ஆனால் அழிவோ? நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு. என்ன சொல்ல?

said...

// இந்த கலாட்டாவில் நியூஸியில் இருக்கும் காதலியை, என்னைக்கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டு மோதிரம் போடவந்த ஒரு வெளிநாட்டுக்காரர் கொண்டுவந்த வைரமோதிரமும் ஒரு ஹொட்டேல் ரூமிலே இன்னும் கிடக்குதாம். //

இங்கன ஒத்தரு நாந்தான் போட்டுட்டு வந்தேன்னு சத்தியம் பண்றாரு.
அவரு இங்கன பாடற பாட்ட பாத்தா அவருதானோ அப்படின்னு தோண்றது.
நீங்களும் பாருங்க...
http://youtu.be/PYhF-ipC2Jw
மீனாட்சி பாட்டி.

said...

அப்பவும் இப்பவும் படங்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு.

said...

இப்பவும் நடுக்கங்கள் வருதா துளசி. படங்கள் வேதனையைத் தூண்டுகின்றன.

said...

நல்ல பதிவு.
நிலைமை சீராக பிரார்த்திக்கிறோம்.
நன்றி அம்மா.

said...

வாங்க பிரகாசம்.

உண்மைதாங்க. எவ்வளோ அழகான அருமையான வீடுகளை எல்லாம் பிரிச்சு வித்துட்டாங்கன்னு செட்டிநாட்டுப் பயணத்தில் பார்த்து மனம் நொந்துட்டேன். எல்லாம் பர்மாத் தேக்கு. என்ன ஒரு வேலைப்பாடு!!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இயற்கைக்கு வெறி வந்து ஆட ஆரம்பிச்சால்...... அதுக்கு முடிவே இல்லை:(

துன்பச்செய்திகளை தொடர்ந்து எழுதறேன். மன்னிக்கணும். ஆவணப்படுத்தணும் என்ற நோக்கம்தான்.

எப்படியும் உயிர்த்தெழுந்துடுவோம். அந்த ஆண்டவன் கருணை காட்டணும்.

said...

வாங்க கயலு.

அந்தந்த வயசுலே அததுக்கு மதிப்பு!!!!!

நம்ம வீட்டுலே ஒரு காலத்தில் மதிப்பு மிக்க பொருள் ஒரு குட்டித் தலையணை.

அது இல்லாம எங்கியுமே கிளம்ப முடியாது. முதல் முறையா ஒரு முறை குழந்தையுடன் சினிமாவுக்குப் போயிட்டு டைட்டில் முடிந்த கையோடு வீட்டுக்குத் திரும்ப வேண்டியதாப் போச்சு, தலையணையை மறந்ததால்!

said...

வாங்க ராம்வி.

இந்த மாதிரி சமயங்களில்தான் மனிதன் கையாலாகாமல் நிற்கவேண்டியுள்ளது:(

said...

வாங்க சுசி.

இங்கே இன்னும் குடியிருப்புகளுக்கு இந்த கண்டிஷன்ஸ் வரலை. ஆனால் 60% நிலத்தில் தான் கட்டிடம் கட்டணும். 40% தோட்டத்துக்கு. தோட்டம் போடலைன்னாலும் இடத்தை விட்டு வைக்கணும்.

said...

வாங்க ஷர்புதீன்.

படிச்சுட்டுச் சொல்லுங்க. கருத்துக்குக் காத்திருக்கிறேன்.

நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஊர் மக்கள் எல்லோருமே எதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுருக்காங்க.

மனசு கனத்துத்தான் போச்சு:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

உண்மை. குடும்பத்துலே ஒன்னு. வாயைத் திறக்காமல் அசையாமச் சாப்புடறதுலே பெருசு அது!

said...

வாங்க லக்ஷ்மி.

சரியாச் சொன்னீங்க. நன்றிப்பா.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

விடாதீங்க. அதேபோல இன்னொன்னு வாங்கிப் போடச்சொல்லுங்க:-)

said...

வாங்க குமார்.

உங்க மாதிரி கட்டிடக்கலை ஆட்களுக்குத்தான் கஷ்டம் பளிச்சுன்னு புரிஞ்சுருக்கும்.

said...

வாங்க வல்லி.

நடுக்கம் நின்னபாடில்லை. யானைக்கே அதிருதேப்பா:(

said...

வாங்க ரத்னவேல்.

ஆறுதலுக்கு நன்றிகள்.

said...

இயற்கையின் கோர தாண்டவம்.....:((((

said...

வாங்க கோவை2தில்லி.

இன்னும் தாண்டவம் 'ஆடி' முடியலைப்பா:(

said...

படங்களும் நிகழ்வுகளும் பயங்கரமாக இருக்கிறது.

said...

வாங்க மாதேவி.

ப்ச்..... உண்மைதான்:(