Monday, September 12, 2011

கண்ணீரு கொண்டொரு கறி வைப்பு.

சாயந்திரம் எட்டு மணிக்கு 'நறுக்கல்' ஆரம்பிக்கப் போகணும். அன்னிக்கு ரக்பி உலகக்கோப்பை ஓப்பனிங் ஸெரிமனி. ஏழரைக்கு ஆரம்பிக்குது. அரைமணி நேரம்தான். அதுலே கால்மணி படுப் பிரமாதம். நடுவில் கொஞ்சம் சவசவ. கடைசிப்பகுதி படக்கப் பொட்டல். ஆகாசத்திலேக்குப்போய் வெளிச்சம் காணிச்சுப் பின்னே மாவேலியோடு நாளெ வரணுமுன்னு க்ஷணிச்சு வந்துருக்காம். இதுக்கு ஒன்பது மில்லியன் டாலர் செலவாம். நடந்த கையோடு செலவையும் சொல்லிட்டாங்க. அப்பத்தானே மகிழ்ச்சியிலும் உணர்ச்சிப் பெருக்கிலும் இருக்கும் மக்கள்ஸ் கண்டுக்கமாட்டாங்க!!!

நாங்க ரெண்டு பேரும், நிகழ்ச்சிகளைப் பொறுப்பேத்து நடத்தும் நண்பருடன் வந்த ரெண்டு பாய்ஸுமா ஹாலைத் திறந்து உள்ளே போய் என்னென்ன இருக்குன்னு பார்த்தோம். அடுக்களை அருமையா இருக்கு. ஹாலும் நமக்குத் தேவையான மேசைகள் நாற்காலிகளோடு இருக்கு.

எம்பது பேர் கட்டாயம் வருவாங்க. மேற்கொண்டு ஒரு பத்திருவது நபர்கள் வந்தாலும் ஓக்கேதான். கிறைஸ்ட்சர்ச் கேரளா அசோஸியேஷன் நடத்தும் ஓணத் திருவிழாவுக்கான ஆயுத்தங்களில் இருக்கோமுன்னு புரிஞ்சுருக்குமே!!!! நாங்கள் நிகழ்ச்சிக்கான மேடை அமைப்பைச் சரிபார்த்துக் கொஞ்சம் பலகைகளைக் கொண்டுவந்து போட்டு ஒரு மாதிரி 'பத்து செண்டிமீட்டர்' உசர மேடை அமைச்சு முடிக்கும்போது சேட்டன்மாரும் சேச்சிமாருமா சகாயிகள் வர ஆரம்பிச்சாங்க..

ஓணசத்யைக்கு சமையல் செய்யப்போறோம். மத்தன், உருளை, கேரட், உல்லி சிறிதும் வலிதும், வாழைக்காய், டொமாட்டோன்னு எல்லாம் எடுத்துப் பரத்தி தோல் சீவித் துண்டம் போட்டோம். கோபால், இடம் ரொம்ப அழுக்காகாமல் இருக்க ஏற்பாடுகள் செஞ்சுக்கிட்டு இருந்தார். நான் சாம்பார் வெங்காயம் எடுத்துக்கிட்டேன். கோபால் பாய்ஞ்சு பாய்ஞ்சு வேலை செய்வதைப் பார்த்து அழுதுகிட்டே வெங்காயம் உரிச்சேன். பத்தாங்காலில் பங்காளி செத்தா...வெங்காயம் உரிக்கும்போது வேண்ட துக்கம் வருமாம் :-)

முருங்கை, வெண்டை, பீன்ஸ், சேனை எல்லாம் ஃப்ரோஸன் வெஜிடபிளா இந்தியன் கடைகளின் புண்ணியத்தில் கிடைச்சது. உள்ளது கொண்டுல்லே ஓணம்!


இங்கே நியூசியில் படிக்க நிறைய பாய்ஸ் கேரளத்துலே இருந்து வந்துருக்காங்க. எல்லாம் நாம் இங்கிருந்து கிளம்பின பிறகு வந்தவர்கள். நண்பர் இமிக்ரேஷன் கன்ஸல்டண்ட்டா இருக்கார். அவுங்கெல்லாம் வந்து சேர்ந்தவுடன் அடுக்களை 'களை' கட்டிருச்சு. பாட்டும் கூத்தும் கேலியுமா மாணவர்ப்படை பரபரன்னு வேலையைப் பார்க்க, ஒருத்தர் கட்டிங் பிடிக்குமுன்னார்:-))))

எரிசேரி, அவியல், சாம்பார், தோரன், மெழுக்குபுரட்டி, பருப்பு, பப்படம் இங்கே சமைக்கணும். காளன், இஞ்சிக்கறி, பீட்ரூட் பச்சடி, ரசம், பச்சமோர் பருப்புப் பாயஸம், சேமியா பாயஸம் அங்கங்கே வீடுகளில் செஞ்சு கொண்டு வர்றதா ஏற்பாடு.. ஏத்தக்காய் உப்பேறி, சர்க்கரைவரட்டி, நெய், அச்சார், உப்பு, பழம் கடையில் வாங்கிக்கலாம். நாளைக் காலையில் வந்து சோறு ஆக்கிட்டு அப்படியே குடிக்க சீரகவெள்ளம் கொதிக்கவச்சால் போதும் .எல்லாம் சேர்த்து 21 கணக்காச்சு.

எரிசேரிக்கு தேங்காய் வறுக்க ஆரம்பிச்ச ஃபான்ஸிக்குக் கையை மறுநாள் தூக்கமுடியாமல் வலி. பாவம்..... முக்கால்மணி நேரம் ஆச்சு சரியான நிறத்தில் கொண்டுவர.
முன்ஹாலில் பூக்களம் ஏற்பாடு டோனியும் ஜஸ்டினும். எங்களுக்கெல்லாம் ஊக்கம் கொடுக்க பருப்புவடையும் பழம்பொரியும் ஒரு பக்கம் தயாரிச்சுச் சுடச்சுட சப்ளை செஞ்சாங்க இப்போதைய தலைவரின் தாய். மணி பதினொன்னுதான், அர்த்தராத்ரிக்கு இன்னும் நேரம் இருக்குன்னு ஒரு கை பார்த்தோம். ஏதாயாலும் இன்னு பொன்னோணம் அல்லே:-)

மறுநாள் பொன் அவிட்டம் பத்தரைமணிக்கு விழான்னு சொல்லி மக்கள் இந்திய நேரப்படி வந்து சேர்ந்து விழாவும் கலைநிகழ்ச்சிகளும் ஆரம்பிக்க பனிரெண்டாச்சு. இங்கே நம்ம வீட்டுக்கு அருகில் இருக்கும் செயிண்ட் கிறிஸ்டோஃபர் சர்ச்சு ஹால். போன வருச செப்டம்பர் நிலநடுக்கத்துக்குப் பிறகு நம்ம பண்டிகைகள் விழாக்கள் எல்லாம் கொண்டாட இந்த ஊரில் ஹால்கள் கிடைப்பதில்லை. பொதுவா பள்ளிக்கூட ஹால்களைத்தான் வாடகைக்கு எடுப்போம். கட்டிடங்கள் பாதுகாப்பா இல்லை என்றது ஒரு காரணம் என்றால் நல்லா இருக்கும் ஹால்களில் இடிஞ்சு போன மற்ற ஏரியாப் பள்ளிக்கூடங்களை நடத்தறதும் ஒரு காரணம். இந்த வருச விஷூவும் கொண்டாடலை(யாம்)
போனமாசக் கடைசிவரை இடமில்லாததால் இந்த வருசத்து ஓணம் விழாவையும் நடத்த முடியாதுன்ற நிலைக்கு வந்தப்ப நண்பர் வழக்கமாகப்போகும் பள்ளியில் (சர்ச்) கெஞ்சிக் கூத்தாடி இடம் ஏற்பாடு செஞ்சுட்டார். நல்ல மீடியம் சைஸ் சர்ச்சும் ஹாலுமா இருக்கு. சர்ச்சில் இருக்கும் துணிப்பொம்மைகள் எனக்குப் பிடிச்சு இருந்தது. குழந்தை யேசுவுடன் மேரி உக்கார்ந்துருக்கும் ஸ்டைலைப் பாருங்க:-)

கோபால் முண்டு உடுத்தலைன்னு குட்டி ஜோஷூக்கு ஒரே கவலை! பேண்ட்ஸைத் தொட்டு 'இது பாடில்லா'ன்னு சொன்னதும் 'முண்டில்லாத பாவமா ஈ அங்கிள். ஒன்னு க்ஷமிச்சோ'ன்னு சொன்னேன். எந்தொரு நாணக்கேடு:-)

நிலநடுக்கத்தில் மரணித்த உயிர்களுக்காக ரெண்டு நிமிசம் மௌன அஞ்சலி செலுத்திட்டு விழாவை ஆரம்பிச்சோம். வரவேற்புரை, ஓணம் வாழ்த்துரை எல்லாம் முடிஞ்சதும் நாடன் பாட்டு ஒன்னு. அநேகமா உங்களுக்குப் பரிச்சயமுள்ள பாட்டுதான் இது.க்ளிப் போட்டுருக்கேன் பாருங்க.

அப்புறம் CK Boys என்ற பெயருள்ள இளைஞர் குழு, கொஞ்சம் ஆட்டத்தோடு ரெண்டு மூணு பாட்டுப் பாடுனாங்க. ஏழுவயசு அஞ்சு பீட்டர் தூள் கிளப்பியாச்சு வழக்கம்போல். குடும்பமே கலைக்குடும்பம்தான். அவுங்கப்பா பீட்டர் பாடாத விழாவே நமக்கில்லை கேட்டோ!

நமீதா ஒரு மலையாளப் பாட்டுக்கும் நிமிஷா 'பம்பரக்கண்ணாலே 'ரீ மிக்ஸ்' க்கும் ஆடிக் கலக்கினாங்க. திருவாதிரைக்களி இல்லாம ஒரு ஓணக்கொண்டாட்டம் உண்டோ? ரொம்ப ஸ்போர்ட்டிவா இப்படி ஒரு விசேஷ'களி' பார்த்துக் 'களி'க்குக:-))))) இதே பாட்டுக்குச் சில வருசங்களுக்கு முன்னே நாங்க எட்டுப்பேர் ஆடினோம்.
ஹாலில் இலைபோட்டு சாப்பாடு பறிமாறும்வரை மக்களை உற்சாகப்படுத்த அடுத்த ஹாலில் கயிறு இழுக்கும்போட்டி நடந்துக்கிட்டு இருந்துச்சு. பலம் கூடியவரை கத்திக்கூச்சல் போட்டு இழுத்துன்னு பசியைத் தூண்டி விட்டோம்.


அச்சன் வந்து பந்தியை ஆசீர்வதிச்சபிறகு விருந்து தொடங்குச்சு.


சந்தனக்குறியும் இட்டுக் கசவு முண்டும் சுற்றிப் பாரம்பரிய அலங்காரங்களோடு எல்லாவரும் கூடிக்களிச்சு பரிபாடிகள் முழுவன் கேமமாயிருந்நு. கேரளா க்ளப்பின் அங்கமாக இங்கிருக்கும், இந்து மதம் சார்ந்த அங்கங்கள் மூணில் ரெண்டு நாட்டுக்குப் போயி. ஆகே உள்ள ஒரு ஃபேமிலி யாருன்னு .......நிங்கள்க்கு அறியாமல்லோ:-))))))

மதமிளகாத ஒரு மாவேலிக்கு மதம் ஒரு பிரச்சனையே அல்ல!
நண்பர்கள் அனைவருக்கும் இன்னொருமுறை திருவோண வாழ்த்துகளைச் சொல்லி முடிக்கிறேன்.

30 comments:

said...

அடி பொளி பரிபாடி சேச்சி! நம்முடே CK பாய்ஸ் கலக்கி. திருவாதிர நிறுத்தம் குறிச்சு பறயான் வாக்குகலில்ல. அவஸ்தானம் ஒரு சேட்டன் வேறே ஒரு சேட்டண்டே சந்திக்கிட்டு ஒரு தட்டு ....நம்முடே லாலேட்டேண்டே ஸ்டைல் இல்....குட் Thought . :-))))

said...

சிறப்பான ஓணம் கொடாட்டம். பகிர்வுக்கு நன்றி.

said...

பூக்களம் வளரெ சுந்தரமாணு :-)

//'முண்டில்லாத பாவமா ஈ அங்கிள். ஒன்னு க்ஷமிச்சோ'ன்னு சொன்னேன். எந்தொரு நாணக்கேடு:-)//

கொள்ளாம் ;-)

said...

நல்ல பகிர்வு...அப்படியே பழைய ஞாபகம் வந்துடுச்சி ;-)

said...

சுவாரசியமான பகிர்வு..

said...

பட்சணங்களுடன் பூக்களுடனும் ஓணப்பண்டிகை பிரமாதம்! பதிவு சுவாரஸ்யமாக இருந்தது!

said...

ஓணக்கொண்டாட்டம் சிறப்பாய் இருந்தது.

அடைபிரதமன், எரிசேரி, இலை அடை சாப்பிட்டு வளர நாளாயி....

நல்ல பகிர்வு.

said...

எப்பொ துளசி சேச்சியும் கோபாலேட்டனும் , கிளப்பு வன்னோ
அதே க்ஷணம் ஓணம் களி கொட்டி.

பொன்னோண வாழ்த்துகள் .

said...

அடி பொளியாயில்லே சேச்சி... எந்தா ஒரு ஓணசத்யா... நன்னாயிட்டுண்டு கேட்டோ!

சேட்டனுக்கு முண்டு வாங்கிட்டில்லையோ! :)))

said...

அருமையான பதிவு.
அற்புதமான படங்கள்.
உங்களது அருமையான நகைச்சுவையான எழுத்து நடை.
வாழ்த்துக்கள் அம்மா.

said...

எல்லாம் அழகு.. பளபள உடுப்பு.. பளிச் கோலம்.. குட்டி ஜோஷூ.. உங்க மலையாளம்..:)

said...

அய்யாவோட நீங்க இருக்ற பூக்கோல போஸ் சூப்பரு.

தனிப்பட்ட முறையில் கேரளவின் உண்மையான கலாச்சாரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் ஒரு ஊரைவிட்டு வெளியே வந்து வாழும் போதும் தான் அவர்களின் பழக்க வழக்கங்கள் ரொம்பவே மாறி பயமுறுத்துவதாக இருந்து விடுகின்றது.

அங்கே எப்படியோ?

said...

பூக்கோலங்கள், ஓணம் விருந்து அமர்க்களங்கள் எல்லாமே பார்க்கவும் படிக்கவும் சுகமான அனுபவம்.

said...

"ஓணம்" பல்சுவை விருந்துடன் சிறப்பான கொண்டாட்டம்.

said...

பூக்களம் அருமை.
பொன்னோண வாழ்த்துகள் .

said...

வாங்க டாடிஅப்பா.

நம்ம பாய்ஸ்க்கு நல்ல ஐடியாக்கள் நிறைய இருக்கு. எல்லோரும் மனப்பூர்வமா சிரிச்சு கொஞ்ச நேரம் துக்கத்தை மறந்து வாழ்ந்தோம்!

said...

வாங்க ராம்வி.

'நான் பெற்ற இன்பம்' வகையில் வரும் பதிவு இது:-)

நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பாவத்திண்டே கசவு முண்டுகள் கண்டெயினரில் வந்துக்கிட்டு இருக்கு. அநேகமா அடுத்த ஓணத்துக்குள் கப்பல் வந்துரும்.

said...

வாங்க கோபி.

கொசுவர்த்தி ஏத்திட்டேனா:-))))

said...

வாங்க ஆஸியா.

நன்றிப்பா.

said...

வாங்க மனோ.

இந்த மாதிரிக் கொண்டாட்டங்கள் மட்டும் இல்லைன்னா எல்லோருக்கும் 'ஹோம்சிக்' பிடிச்சுடுமே!

said...

வாங்க கோவை2தில்லி.

இப்பெல்லாம் அடைப்ரதமன் செய்ய ரெடிமேட் அடை இந்தியன் கடைகளில் கிடைக்குது. முந்தி நாங்க ரைஸ் ஸ்டிக் என்ற பெயரில் வரும் சீனத்தயாரிப்பை இதுக்குப் பயன்படுத்துவோம். சீனத் தயாரிப்பான ரைஸ் பேப்பர், நமக்கு அரிசி அப்பளம்:-)

said...

வாங்க வல்லி.

ஆஹா..... சொல்ல விட்டுப்போச்சு.

UNGLE & Andy ஐ கண்டுட்டு எல்லாவர்க்கும் சந்தோஷம் கூடிப்போய்.

மேடையில் மூணு தரம் மூணு பேர் சங்கத்தின் சார்பில் நமக்கு வரவேற்பு சொன்னாங்க. யார்றா இவ்ளோ பிரசித்தின்னு புது அங்கங்களுக்குப் புரியலை. அப்புறம் அவுங்களுக்குத் தனியா அறிமுகம் ஆச்சு.

என்ன இருந்தாலும் அங்Gகிளும் ஆன்Dடியும் சங்கத்தின் ஃபவுண்டர் மெம்பர் அல்லே:-)

said...

வாங்க வெங்கட் நாகாராஜ்.

சேட்டண்டே முண்டும் எண்டே செட்டும் இப்போ யாத்ரையிலா:-)))))

சண்டிகரில் மேடிச்ச எண்டெ செட்டினு 'வீதி' இல்லை கேட்டோ:(

said...

வாங்க ரத்னவேல்.

அப்பப்போ இதுபோல் உற்சாகமும் வேண்டி இருக்குத்தானே?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கயலு.

அனுபவிச்சுப் பாராட்டுனதுக்கு நன்றிப்பா.

ஆச்சு..... நவராத்ரிக்குத் தமிழ் பேசிட்டு, தீபாவளிக்கு எல்லாம் ஹிந்தி!

said...

வாங்க ஜோதிஜி.

வேற மாநிலத்தில் தங்களுடைய சொந்தப் பாதுகாப்பைப் பற்றிய பயம் ஒருவேளை வேறமாதிரி செயல்படத்தோணுதோ??????

நம்மாட்களுக்கும் வேற மாநிலங்களில் வசிக்கும்போது ஒரு தற்காப்பு உணர்ச்சி வரத்தானே செய்யுது, இல்லீங்களா?

said...

வாங்க லக்ஷ்மி.

வந்து, மகிழ்ச்சியில் கலந்ததுக்கு நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

பூரா இந்தியாவுக்கும் நான் இங்கே பிரதிநிதி. ஒரு கொண்டாட்டத்தையும் விடறதில்லை கேட்டோ:-))))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

டோனிக்கு உங்க பாராட்டுகளைச் சொன்னதும் அவருக்கு 'பூ'ரிப்பு.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.