காலையில் கண்ணு தொறந்ததும் 'மூக்குக்' கண்ணாடியை எடுத்துக் 'காது'லே மாட்டிக்கிட்டு வழக்கம்போல் சாமியைப் பார்த்தால்.....குண்டக்கமண்டக்கன்னு இருந்தார். திருப்பதியிலேயே என் கண்ணைக் கட்டுவனுடைய லீலைன்னு எழுந்து ஜன்னல் திரையை விலக்கித் தோட்டத்துப் பூக்களைப் பார்த்தேன். அதே போல குண்டக்கமண்டக்கன்னு மசமசன்னு வேற இருக்கு.
சாமி அறைக்குப்போய் விளக்கைப் போட்டுட்டு ஹாலுக்குள் வந்து 'ஓடிக்கிட்டு' இருக்கும் டிவியைப் பார்த்தால் அதே மசமச. கண்ணாடியைக் கழட்டிட்டு கண்ணை மூடிக்கிட்டு ரெண்டு கண்ணையும் தொட்டுப்பார்த்தேன். இடக்கண் வீங்குனதுபோல் ஒரு தொடுவுணர்வு. கண்ணாடியை கழட்டி எடுத்து, மீண்டும் மாட்டின்னு நாலைஞ்சுமுறை பரிசோதனை செஞ்சுட்டு 'எனக்குக் கண்ணு தெரியலை'ன்னு கோபாலிடம் சொன்னேன்.
'நல்லாத்தானே தூங்குனே. இப்ப என்னாச்சு?'ன்னார்.
'கண்ணுதெரியாதவங்க தூங்க மாட்டாங்களா? இது என்ன புதுக்கதை'
என் கண்ணாடியணிஞ்ச முகத்தை 'உத்துப் பார்த்துட்டு' 'கண்ணு சுத்தமாத் தெரியலையா'ன்னார். 'நீங்க நிக்கறது தெரியுது. ஆனால் என்னவோ வித்தியாசமா இருக்கு. கண்ணை இடுக்கிப் பார்த்தால் சுமாராத் தெரியுது'ன்னேன்.
காலை எழுந்தவுடன் படிப்புன்றதை,இன்னிக்குக் கண்ணுத் தெரியலைன்னு விடமுடியுமா? கணினிக்கு உயிர் கொடுத்தேன். அபி அப்பா வந்து நலமான்னு கேட்டார். எப்படித்தான் மூக்குலே வியர்த்ததோ!!!!! நலம்தான் ஆனா கண்ணு தெரியலைன்னேன். 'கண்ணுலே பிணியா?'ன்னார்.(தலைப்பு உபயகர்த்தா) டாக்குட்டரைப் பார்க்கணுமுன்னு சொன்னேன்.
கண்ணாடி போட்டுக்கலைன்னா அவ்வளவா மசமசப்பு இல்லைன்னு சொல்லிட்டு காஃபிக்கு ஏற்பாடு செஞ்சுட்டு பல்தேய்ச்சுட்டு வர்றதுக்குள்ளே கோபால் நெட்லே தேடிட்டு அது, 'இது எமர்ஜென்ஸி'ன்னு சொன்ன உடனே நம்ம கண் டாக்டருக்கு ஃபோன் போட்டுருக்கார். அப்பாய்ண்ட்மெண்ட் ஒன்னும் வேணாம். உடனே கிளம்பி வாங்கன்னாங்களாம். 'ஸீ' யூ லேட்டர் ன்னு அபி அப்பாவுக்குச் சொல்லி வச்சேன்.
காஃபியை ஊத்திக்கிட்டு, வீட்டுக் கண்ணாடியைக் கழட்டிட்டு வெளியே போகும்போது போட்டுக்கும் கண்ணாடியைக் கையில் எடுத்துக்கிட்டு ஓடுனோம். 'கண்ணை மூடிக்கிட்டு இரு. சாலையைப் பார்க்க வேணாமு'ன்னு சொன்னார் கோபால். கிழக்கு நோக்கிய பயணம். சூரியனின் ஒளி மூடிய கண்ணுக்குள்ளில் ரத்தச்சிகப்பு ஜாலம் காட்டுது. ரசிக்குமுன் திடீருன்னு ஒரே இருட்டு. ஐயோ கண்ணு முழுசாப் போயிருச்சோன்னு கண்ணைத் திறந்தா..... வெயில் கண்ணுலே விழுதேன்னு வைஸரை இறக்கி இருந்தார் கோபால்.
விசேஷ மருத்துவர்கள் எல்லாம் சேர்ந்து இடம் பிடிச்சிருக்கும் கட்டிடம். நல்லவேளை நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து தப்புன ஏரியா அது. நர்சம்மா அறைக்குக் கூட்டிட்டுப்போய் என்ன ஏதுன்னு விசாரிச்சு குறிப்பெடுத்தாங்க. காலையில் எழுந்ததும் கண்ணு தெரியலை என்றோம். எனெக்கெதிரா சுவரில் இருந்த கண்ணாடியில் தெரியும் எழுத்துகளை படிக்கச் சொல்லி ஒரு பரிசோதனை. ரொம்பப் சின்ன எழுத்து வரும்வரையில் படிக்க முடிஞ்சது. கண்ணாடிக்குக் கீழே இருந்த இருக்கையில் கவலை தோய்ந்த முகத்துடன் கோபால். இனி வாழ்க்கை எப்படி மாறுமுன்னு யோசனையோ?
நம்ம டாக்குட்டர் விரைவில் வந்து பார்ப்பாராம். அதுவரை வெயிட்டிங் ரூமில் இருக்கச் சொன்னாங்க. அங்கே ஏற்கெனவே மூணு ஜோடிகள் அங்கங்கே! இளையவர்களா நாங்களும் போய் உக்கார்ந்தோம். கழுத்தில் தலை நிற்காமல் லேசாய் ஒரு ஆட்டத்தோடு ஒரு பெண்மணியும், சுத்தமாய்க் காது கேக்காத வகையில் அவர் கணவரும். ரொம்பவே டிக்டாக்கா உடையணிஞ்ச இன்னொரு பாட்டியும் அவர் கணவரும். பூப்போட்ட ஜீன்ஸில் இன்னொரு பாட்டி. ஸ்மார்ட்டான நடை!
காது, கண்ணு இதில் எது இல்லைன்னா தேவலைன்னு மனசுலே விசாரம் வந்துச்சு. காதுக்கு ஓட்டுப்போட்டேன். கெட்ட விஷயங்கள் காதுலே விழாமத் தப்பிச்சுக்கலாம். ஆனால்....பாட்டு? போதுமே.... வேண பாட்டுக் கேட்டாச்சு. அதை மனசுலே வச்சுப் பாடினால் போதும். நம்ம அபஸ்வரம் நமக்குக் கேக்காதே...அது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்:-) அடுத்தபக்கம்.... எதாவது சொல்லணுமுன்னா எழுதிக் காமிக்க வைக்கலாம். ஆங்....... எழுத்து எழுத்து. நமக்குத் தொழிலே எழுத்துதானே? கணினியில் வேலைக்குக் காது எதுக்கு?
காத்திருக்கும் நேரத்தில் அங்கே இருக்கும் புத்தகங்களைக் கையில் எடுக்கலாமான்னு யோசனை. நமக்குத்தான் கண்ணு தெரியலையே பின்னே எப்படிப் படிக்கிறது? எனக்கு மாரல் சப்போர்ட்டா இருக்கணுமுன்னு தீர்மானிச்சதுபோல் இவரும் கைநீட்டி எந்தப் பத்திரிகையும் எடுக்காமச் சும்மா உக்கார்ந்திருந்தார்.
"கம்ப்யூட்டர்லே உக்காருவதை நீ குறைச்சுக்கணும். இப்பப்பாரு கண்ணு தெரியாமப் போச்சு."
"ம்"
" காலையில் ரெண்டு, மத்யானம் பூராவும் ஒரு மூணு, சாயந்திரம் நான் வேலையில் இருந்து வந்ததும் கவனிக்கிறேன்...சாப்பாடானதும் பத்துவரை உக்கார்ந்துருக்கே..... எப்படியும் எட்டு ஒம்போது மணி நேரம் கம்ப்யூட்டரில் நேரம் செலவழிக்கிறே. அதைக் குறைச்சுக்கணும். இப்பப்பாரு கண்ணு தெரியலை!"
"ம்"
" உண்மையைத்தான் சொல்றேன்ம்மா"
"அப்ப வீட்டு வேலையெல்லாம் யாராவது வந்து செஞ்சுட்டு ஆக்கி அரிச்சு வச்சுட்டுப் போறாங்களா? இல்லே நீங்களே எல்லாமும் செஞ்சுடறீங்களா?"
"டூ மச் டைம் ஸ்பெண்டிங்..... ப்ளா ப்ளா ப்ளா......"
" "
டைம் பத்திரிகையை எடுத்து அன்னா ஹஸாரேவைப் பற்றி வந்துருந்த கட்டுரையை வாசிக்க ஆரம்பிச்சார். எட்டிப் 'பார்த்தேன்'. கட்டுரை ஆசிரியர் ஜ்யோதின்னு பெயர் இருந்துச்சு.ஒரு பத்தி முடிக்குமுன்............
டாக்குட்டர் வந்து அறைக்குக் கூட்டிப்போனார். காலையில் பார்த்தப்ப பார்வை ப்ளர்ரிங்கா இருந்துச்சுன்னேன். இப்ப ஒன்னுமில்லைன்னேன். மெஷீன் வச்சுக் கண்ணு பரிசோதனை. அப்புறம் கண்ணுலே ஒரு துளி ட்ராப்ஸ் விட்டுட்டு ஒரு பத்து நிமிட் வெயிட்டிங் ரூமில் இருங்கன்னார்.
எதிரில் சுவரில் ஒட்டி இருந்த 'இன் கேஸ் ஆஃப் ஃபயர்' விவரங்களைப் 'படிச்சுக்கிட்டு' உக்கார்ந்திருந்தேன். இவர் தன் ப்ளாக்பெர்ரியில் மெயில் அனுப்புவதும் படிப்பதுமா.......இந்த மாதிரி குஷன் ஒன்னு ஜன்னல்கீழே இருக்கும் இடத்தில் உள்ள யானைப்பெட்டி மேலே போட்டால் நல்லா இருக்குமுன்னேன். இன்னும் பத்து நிமிசம் ஆகலையா?
மறுபடியும் டாக்டர் அறையில் மெஷீனில் முகம் பதிச்சேன். இடது கண்ணில் பிரச்சனை இருக்குன்னு சொல்லி கோபாலைக் கூப்பிட்டு லென்ஸின் மூலமாக என் இடதுகண்ணைப் பார்க்கச்சொன்னார். அடடா..... எப்படி இருக்குன்னு என்னாலே பார்க்க முடியலையேன்னு இருந்துச்சு. சரி. கோபாலோட முறை வரும்போது நான் பார்ப்பேன். லென்ஸ் க்ளௌடியா இருக்கு. புது லென்ஸ் மாத்திடலாமுன்னு சொன்னார்.
வெயிட்டிங் ரூமில் இருங்க, இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எடுத்துடலாம்.
அஞ்சு நிமிஷம் கழிச்சு இன்னொரு நர்ஸிங் டெக்னீஷியன் வந்து வேறொரு அறைக்குக் கூட்டிப் போனாங்க. அங்கே முகம் பதிச்சதும் டக்டொக்ன்னு சின்ன சப்தம். ஒவ்வொரு கண்ணுக்கும் மும்மூணு வெடிச் சத்தம் சன்னமாய். கண்ணுக்குள்ளே யாரோ குறிபார்த்துச் சுட்டுட்டாங்க!!!! அதே மெஷீன்லே இருந்த ப்ரிண்டர் என்னத்தையோ பிரிண்ட் செஞ்சு காகிதத்தைத் துப்புச்சு.
மறுபடி இன்னொரு ட்ராப்ஸ் கண்ணுலே விட்டாங்க. இது அந்த ஏரியாவை உணர்விழக்கச் செய்யுமாம். கண்ணில் ஒரு அளவு, வேற ஒரு மெஷீனை வச்சு எடுக்கணுமுன்னு சொல்லிட்டு வெளியே போனாங்க. 'எல்லாம் ரொம்ப மாடர்ன் மெஷீன்களா இருக்கு'ன்னு கோபாலிடம் சொன்னேன். இன்னொரு மெஷீனைத் தள்ளிக்கிட்டு வந்து செட் செஞ்சுக்கிட்டு இருந்த நர்ஸம்மாவிடம், 'எல்லாம் ரொம்ப ஹைடெக் சமாச்சாரமா இருக்கே'ன்னு கோபாலின் சின்னப்பேச்சு. 'ஆமாமாம். ஒரு முப்பது வருசங்களுக்கு முன்னே இருந்த நிலையை நினைச்சுப் பார்க்கக்கூட முடியாது'ன்னு சொல்லிட்டு பேனா போல் இருக்கும் ஒரு கருவியை விழித்திரையின் கண்மணியில் தொட்டுப்பிடிக்கப் போறேன். வலி இருக்காதுன்னு சொல்லிட்டுத் தொட்டதும் மெஷீன் என்னவோ பதிவு செஞ்சு ரிஸல்ட்டைத் துப்புச்சு.
வரவேற்பின் கவுண்டரில் இருக்கும் அம்மணியிடம் நம்மைக் கைகாட்டியதும் அவுங்க வேலை முடிஞ்சது. எனக்கு அக்டோபர் 11 சர்ஜரி ஓக்கேவான்னு கேட்டுட்டு ஃபோல்டர் ஒன்னு போட்டுக் கையில் கொடுத்தாச்சு. அதில் சிகிச்சைக்கு முன்னே, நடுவிலே, பின்னேன்னு எல்லா விவரங்களும் இருக்கு.
ஏறக்கொறைய அரைநாள் போயிருச்சு. இவர் வேலைக்குக் கிளம்பிப்போனதும் பதிவு ஒன்னை வெளியிட்ட பிறகு என் கண்ணில் பட்டது காலையில் கழட்டி மேசை மேல் வச்ச கண்ணாடி.
அசுவாரசியமா அதை எடுத்துப் போட்டுப் பார்த்தேன். ஐயோ......அதே ப்ளர்ரிங் விஷன். கண்ணாடியில் ஏதோ கோளாருன்னு நினைச்சுக் கையில் எடுத்து நல்லாப் பார்த்தால்................... வலது பக்க லென்ஸ் மிஸ்ஸிங்.
அடராமா.... எங்கே விழுந்துச்சுன்னு தரையெல்லாம் தேடியும் கிடைக்கலை. நேத்து இரவு படுக்கை அறைக் கண்ணாடிக் கூட்டில் கழட்டி வச்சேனேன்னு போய்ப் பார்த்தால்............. பட்டுப்போல பொட்டிக்குள் பதவிசா மொட்டுப்போல உக்கார்ந்துருக்கு லென்ஸ்:-)))))
PIN குறிப்பு: ரிஷானுக்காக ஒரு படம் போட்டுருக்கேன்:-)))))
Friday, September 16, 2011
கண்ம(பி)ணியே..............
Posted by துளசி கோபால் at 9/16/2011 12:50:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
'ஸீ' யூ லேட்டர் // :))
துளசி எப்படிஎல்லாம் யோசிக்கிறீங்க..அதும் அவரு ஏன் புக் வாசிக்கல.. அப்ப்றம் ஏன் ப்ளாப்ளாக்கப்ப்றம் வாசிச்சார்.. ஆகா..
கண்ணுக்கு நோவுன்னாலும் பதிவு எழுத விடக்கூடாதுன்னு பதிவு போட்டிருக்கீங்க. பத்திரமா பாத்துக்கோங்க
சேட் செய்தப்ப சொன்ன மாதிரியே பதிவு எழுதிட்டீங்களே.... :)
பத்திரமா உங்க கண்ணை பார்த்துக்கோங்க!
அன்பின் டீச்சர்,
எனக்காக படம் போட்டதற்கு தேங்க்ஸ் :-))
(நான் போட்டோ கேட்பேன்னு எப்படித் தெரியும்? உங்களுக்கு ஞான 'திருஷ்டி' அதிகம் டீச்சர் :-) )
கடைசியில லென்ஸைத் தொலைச்சதாலதான் இவ்வளவு களேபரமா? இல்லேன்னா நிஜமாவே சர்ஜரி பண்ணனுமா டீச்சர்?
கோபால் அண்ணா சொன்னது சரி..கொஞ்ச நாளைக்கு கண்ணுக்கு ரொம்ப வேலை கொடுக்க வேண்டாம் டீச்சர்.. நல்லா ரெஸ்ட் எடுங்க..எல்லாத்தையும் கோபால் அண்ணா 'பார்த்துப்பார்'. :-)
சொன்னா தப்பா நினச்சுக்காதீங்க! ஒரு நல்ல மனுஷனை கையில குச்சி வெச்சு பாடா படுத்தினா சாமி இப்படிதான் கண்ணை குத்திடும். :-)) [Just Joking. Take Care]
லென்ஸ் தான் ப்ராப்ளம் என்றால் சர்ஜரி எதற்கு? பண்ண வேண்டுமா?
கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க.
Take care Mam.
//டூ மச் டைம் ஸ்பெண்டிங்..... ப்ளா ப்ளா ப்ளா......"//
வீட்டுக்கு வீடு சங்கீதம் :-))))
இப்ப எந்த லென்ஸ் பிரச்சினை கொடுக்குது. கண்கூட்டில் இருப்பதா?.. கண்ணாடிக்கூட்டில் இருப்பதா?..
எதுன்னாலும் ஜாக்கிரதையா இருங்க.
akka, its about time, you have to take gopal sir for eye test.. athum atha antha kannadi potta kannai uthu partha piragum ippadi react pannathukke avarai patient chairla utkara vaikkanum :-)
நல்ல பதிவு.
அருமையான நகைச்சுவை.
கண்ணுக்கு சிகிச்சை நல்ல படியாக முடிந்து வர வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா.
கண்ணுதான் முக்கியம். கண்ணைக்கண்ணாப்பார்த்துக்கங்க!
நலம் பெற பிராத்திக்கிறேன்.
//அசுவாரசியமா அதை எடுத்துப் போட்டுப் பார்த்தேன். ஐயோ......அதே ப்ளர்ரிங் விஷன். கண்ணாடியில் ஏதோ கோளாருன்னு நினைச்சுக் கையில் எடுத்து நல்லாப் பார்த்தால்................... வலது பக்க லென்ஸ் மிஸ்ஸிங்.//
நலமா டீச்சர்?இந்த நொள்ளக்கண்ணு அனுபவம் எனக்கும் கூட நடந்திருக்குது:)இப்ப கண்ணுக்கு தொடர்ச்சியா விளக்கெண்ணெய் ஊத்திட்டு வந்து கண்ணாடி போடுறதை விட்டு விட்டேன்.
கொசுறு தகவல்:தூங்கி எழுந்து கணினி முன்னாடி உட்கார்ந்தாலும் பிளரும்:)
நீண்ட நேரம் கண்ணுக்கு வேலை கொடுக்காதீர்கள். நலன் பெற வேண்டுகின்றேன்.
வாங்க கயலு.
பதிவர் ஆனதும் 'பார்வை'யே மாறிப் போயி, மாத்தியில்லே யோசிக்க வைக்குது:-)
வாங்க புதுகைத்தென்றல்.
அன்புக்கு நன்றிப்பா.
வாங்க வெங்கட் நாகராஜ்.
என் 'கண்ணனை' பத்திரமாப் பார்த்துக்கறேன். நோ ஒர்ரீஸ்:-)
வாங்க ரிஷான்.
உங்களுக்குப் படம் பிடிக்குமுன்னு அம்மம்மா சொன்னாங்க:-))))
இப்போ சர்ஜரியை உங்க கோபால் அண்ணாவுக்குத்தான் செய்யணும்!!!!
வாங்க டாடிஅப்பா.
நல்ல மனுஷரின் 'பார்வை'யே சரி இல்லையே! கண்ணுன்னதும் அப்படியே ஆடிப்போயிட்டார்:-)
வாங்க கோவை2தில்லி.
நன்றிப்பா. கோபாலைக் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கச் சொல்றென் உங்க சார்பில்:-)
வாங்க பிரியா.
ஆஹா....வராதவங்களையெல்லாம் வரவழைச்ச இந்தப் பதிவுக்குக் 'கண்' படாமல் இருக்கணும்!!!!
வாங்க அமைதிச்சாரல்
சம்சாரம் அது சங்கீதம்:-)
அஞ்சே டாலரில் புது ஸ்க்ரூ போட்டு ஐயாயிரத்தை இப்போதைக்கு மிச்சம் பண்ணி இருக்கேன்;-)))))
வாங்க பொன்ஸ்.
கரெக்ட்டா பாயிண்டைக் 'கண்'டு பிடிச்சிங்க! டெஸ்ட்டுக்குக் கூட்டிப்போகும்போது 'நான்' லென்ஸ் வழியா கண்ணுள்ளில் பார்க்கணும்:-)
'கண்'ன்னுன்னதும் பயத்துலே மூளை வேலைசெய்யாம நின்னுபோச்சே!!!!
வாங்க ரத்னவேல்.
எப்படியும் இன்னும் சில வருசங்களில் சிகிச்சை நடக்குந்தான். முன்கூட்டிய வாழ்த்துகளுக்கு நன்றி:-)
வாங்க இராஜராஜேஸ்வரி.
கண்ணு இல்லேன்னா கணினி(யும்) கஷ்டம்தானே?
அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
வாங்க ராஜநடராஜன்.
இப்படிப் படுத்திடுச்சே இந்த நொள்ளைக் கண்ணு:-)
வெளெக்கெண்ணெய் வைத்தியம் செஞ்சு பார்த்துடலாம் அவருக்கு.
நன்றி.
வாங்க மாதேவி.
கரிசனத்துக்கு நன்றிப்பா.
கண்ணுக்குப் பதிலா கொஞ்சம் வாய்க்கு ஓய்வு கொடுக்கலாமான்னு இருக்கேன் இப்போ! இளைச்ச 200 கிராம் திரும்பி வந்துரும்போல இருக்கு!
அட துளசி. என்ன பண்ணலாம் உங்களை:(
இப்ப சரியாகி விட்டதா. நான் காடராக்ட்னு நினைச்சேன்.
பாவம் கோபால்.
நேரம் கழிச்சுப் பதிவைப் படிக்கிறேன். மன்னிச்சுக்கணும்.
கண்ணுப்பிரச்சனையோட இப்படி எழுதணுமா நீங்க! கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே.
கலவரமான பிரச்சனை என்றாலும் கலகலப்பா தான் கூறி இருக்கீங்க! :-)
அது ஓட்டைக் கண்ணாடி எனக் கண்டு பிடித்த கணத்தைக் கற்பனை செய்து பார்த்தேன்:)! நல்ல வேளை பிணியின்றி கண் மணியாக இருப்பதறிந்து மகிழ்ச்சி!
வாங்க வல்லி.
இன்னும் நாள் இருக்கேப்பா 'முத்தி'வர:-)
கண்ணுன்னதும் ஆடிட்டார்ப்பா:-)
வாங்க கிரி.
அந்தக் கண்ணாடிக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துட்டேன் இப்போ:-)
கோபாலை ஒரு நாள் கண் பரிசோதனைக்குக் கூட்டிட்டுப்போகணும்!
வாங்க ராமலக்ஷ்மி.
அஞ்சு டாலர் ஸ்க்ரூ, அஞ்சாயிரத்தைக் காப்பாத்தி இருக்கு இப்போதைக்கு:-)
//'நல்லாத்தானே தூங்குனே. இப்ப என்னாச்சு?'ன்னார்.
'கண்ணுதெரியாதவங்க தூங்க மாட்டாங்களா? இது என்ன புதுக்கதை'//
:D :D
பாவம் கோபால் அவர்கள் :) ரொம்ப பயந்து ட்டார் போல இருக்கு .
நீங்க என்னடான்னா அவர கிண்டல் பண்றீங்க !!.
அப்புறம் கண்ல ஒன்னும் பிரச்சனை இல்லை ன்னதும் நிம் மதி .
Post a Comment