Thursday, October 25, 2007

கூப்பிட்ட குரலுக்கு.......


உண்மையைச் சொல்லணுமுன்னா பதிவுகளால் அல்லது பதிவர்களால் எதாவது நன்மை கிடைக்குமா?

கிடைக்கும். கிடைச்சது. அதுக்கு நன்றி நவிலல் பதிவுதான் இது.

கொஞ்ச நாளை(??)க்கு முன்னால் இப்படிக் கேட்டுருந்தேன்.நண்பர்களும், நண்பிகளுமாக நிறையப்பேர் தொடர்பு கொண்டாங்க. அவுங்ககிட்டே பெயரை வெளியில் விடமாட்டேன்னு வாக்குத் தந்ததாலெ இங்கேயும் வெளியிடலை(-:

அவுங்களுக்கெல்லாம் முதல் நன்றி.

அப்ப ரெண்டாவது நன்றி யாருக்கு?

ஹா......... வாக்கு மீறிக்கட்டுமா ஒரே ஒரு முறை?

நம்ம மா.சி.தான் அவருடைய நண்பர் ஒருத்தரோட விவரம் அனுப்புனாருங்க.
அந்த நண்பர் பதிவர் இல்லை. ஆனா பதிவர்களோடு சம்பந்தப்பட்ட பெயர் உள்ளவர். என் பதிவுலக வாழ்க்கையில் பரிச்சயமான ரெண்டாவது கல்யாண் அவர்.

அவருக்குத் தகவல் அனுப்பினேன். தொழில்நுட்ப விவரங்களையெல்லாம் அவரோடு விவாதித்துக் கலந்துபேசி, பேனர் முழுமையடையச் செஞ்சவர் எங்க தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலை(வர்) கணேஷ். எப்படியாவது இதைச்
செயல்படுத்தியெ தீரணுமுன்னு இந்நாள் தலை(வர்)வேற சொல்லிக்கிட்டே இருந்தார்.


ஒவ்வொரு டிஸைனும் அவர் அனுப்புனதும், இங்கெ நம்ம மக்கள்ஸ் கிட்டே அதைக் காமிச்சு, அவுங்க ஆளாளுக்கு ஒண்ணு சொல்ல அதைச் சேர்க்கலாமா, இல்லை விட்டுரலாமான்னு சிலபல விவாதங்கள் இங்கெ எங்களிடையில் நடத்தி, அப்புறம் கல்யாணுக்கு அனுப்பின்னு போய்க்கிட்டு இருந்துச்சு.கல்யாணுடன் எங்கள் இமெயில் தொடர்பு எக்கச்சக்க எண்ணிக்கையில் இருந்துச்சு. பாவம் மனுஷர் நொந்து நூலாகி இருப்பார்:-) நொச்சுநொச்சுன்னு நாங்கள் சொல்லிக்கிட்டு இருந்த எல்லா மாற்றங்களுக்கும் பயந்து ஓடாம நின்னு நிதானமா கால்பதிச்சு விளையாடுனார் நம்ம கல்யாண். அதுக்கே அவரைப் பாராட்டணும்!நியூஸியின் அடையாளங்கள் அதுலெ கண்டிப்பா இருக்கணும். எங்க தமிழ்ச்சங்கத்தில் லொகோ இருக்கணும்னு ரொம்ப டிமாண்ட் செஞ்சுட்டோம்.
இதுக்கிடையில் 'மவுண்ட் குக்' படம் போடலாமுன்னு அதுக்குப் பின்னால் (மலைக்குப் பின்னால் இல்லைங்க) கொஞ்சம் அலைச்சல். பேனர் அளவு, கொஞ்சம் பெருசு என்றதால் நல்ல தெளிவான தரத்தில் உயர்ந்த படம் தேவையா இருந்துச்சு.


ஒரு வழியா எல்லா வேலைகளையும் முடிச்சு அவர் அனுப்பின சி டி வந்து சேர்ந்ததும், ஆரம்பிச்சது இன்னொரு ஓட்டம். அதை இங்கே ப்ரிண்ட் செஞ்சுக்கணுமே. மொத்தம் ரெண்டே இடம்தான் இங்கே இந்த வேலைக்கு இருக்கு. இங்கெ இன்னும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் வரலை(-: நாம்தான் அதையும் ஆரம்பிச்சு வைக்கணுமோ? :-))))))


இதுக்கிடையில் பேனர் சம்பந்தமா உதவிக்கிட்டு இருந்த கணேஷ், ஆஸ்தராலியாவுக்குக் குடியேறிட்டாருங்க.

தமிழ்ச்சங்கத்தின் இந்த வருட நவராத்திரி விழாவில் நம்ம பேனரை திறந்துவைக்கும் நிகழ்ச்சியும் நடந்துச்சு. ப்ரைஸ் அடிச்சது யாருக்குங்கறீங்க?
அடியாளுக்குத்தான். ( இது வேற அடியாள். அடியேனுக்குப் பெண்பால்)


தலைவரையே திறந்து வைக்கச்சொன்னேந்தான்..... ஆனா அவர்தான், இதுலெ உங்க பங்கு இல்லைன்னா இது நடந்திருக்காது ( அவர் ஆட்சி காலத்தில்?) நீங்கதான் சரியான தேர்வுன்னுட்டார்.

நம்புனவங்களைக் கைவிட்டதா சரித்திரம் இருக்கா?

நைஸா, எங்க இவரையும் கேட்டேன், 'நீங்க திறந்து வைக்கறீங்களா?' (ச்சும்மா )

ஐயோ..அதெல்லாம் வேணாம். இது உனக்குக் கிடைக்கும் கெளரவம்(!!) நீயே செஞ்சுருன்னார்.(அது....)

கூடவே ரெண்டு வார்த்தையும் பேசணுமுன்னு தலைவர் கேட்டுக்கிட்டார்.
கரும்பு தின்னக் கூலியா? அதெல்லாம் குறை வைக்கமாட்டொம்லெ.
நமக்குத் தொழிலே பேச்சுதானே? :-)))))

திறப்பு நிகழ்ச்சியை ஒரு ரெண்டு நிமிஷ வீடியோ எடுங்கன்னு சொன்னதுக்கு,
ஆஹா ஆஹான்னு 'மணல் கயிறு கிஷ்மு'போலத் தலையை ஆட்டிட்டு,
நிகழ்ச்சியைக் கவனிச்சுக்கிட்டு வீடியோவைக் கோட்டை விட்டுட்டார் நம்மாள். ஆனந்தகண்ணீர் பொங்கிவந்து காட்சியை மறைச்சிருக்கும். இல்லே?


மேலே நிழல்

கீழே நிஜம்
மேடையில் நம்ம மா.சி, கல்யாண், இன்னும் உதவ முன்வந்த பதிவுலக நண்பர்கள், சரியான சமயத்தில் புலம்பெயர்ந்துபோன கணேஷ்ன்னு எல்லாரையும் நினைவுபடுத்தி நன்றி கூறினேன்.

இது நம் பதிவுலக நண்பர்களுக்குக் கிடைச்ச வெற்றி. இந்தக் கைங்கரியத்தில்
உதவ முன்வந்த நல்லுள்ளங்களுக்கும், கல்யாணை அறிமுகப்படுத்திய மா.சி.க்கும் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நன்றி நன்றி நன்றி.

நண்பர் கல்யாண் அவர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி.

24 comments:

said...

அருமையாக இருக்கு பேனர்.

said...

வாங்க குமார்.

நன்றி.

said...

தமிழ் கலாச்சாரத்தை விடாமல் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பேனரும் அருமை. அய்யன் இருப்பது இரட்டை மகிழ்ச்சி

said...

கலக்குங்க, வாழ்த்துக்கள்.

said...

கிரேட் துளசிம்மா
நினைச்சதை செய்துட்டீங்க‌
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி

சிற்பம், சிவன்,கிவி, பெங்குவின், மலை, வானம் சரி
இன்னொரு முகம் என்ன தெரியல‌

நடனம், உணவு:-) ரொம்பசரி. நல்லது.

நல்ல முயற்சி
நல்ல நன்றி தெரிவித்தல்:-)

said...

///Email follow-up comments to///

புதுசா இதென்ன தெரியலியே?

said...

வாங்க வித்யா,.

அய்யனை நிக்க வைக்கலாமா இல்லை உக்கார வைக்கலாமான்னே கூட சில வாதங்கள் நடந்துச்சு:-))))
பாவம். அவரும்தான் எவ்வளோ நேரம் நிப்பாரு? அதான் உக்கார்ந்துக் குறள் எழுதறதைப் போட்டாச்சு:-))))

said...

வாங்க கீதா.

கலக்கச் சான்ஸ் கிடைச்சா விட்டுறமுடியுமா? :-))))))
என்ன இப்படிப் 'பட்'னு வந்துட்டீங்க?:-))))

said...

வாங்க மது.

இன்னொரு முகம்.....? அது இங்கத்து மவோரிகளின் செதுக்குச் சிற்பம்.
கவுன்ஸில் கிராண்ட் கிடைச்சதுக்கு, நியூஸியின் அடையாளங்கள் சில இருக்கறதுதானே நியாயம்?
இது(வும்) ஒருவகையான நன்றி தெரிவித்தல்தான்:-)))

இந்த ஃபாலோ அப் நானும்கூட இப்பத்தான் பார்க்கறேன்.
(பாத்திரம் அறிஞ்சு) ப்ளொக்கர் போட்ட 'பிச்சை'யோ? :-)

said...

பேனர் நல்லா வந்துருக்கு, டீச்சர்...
தமிழ் வளர்க்கும் நீங்கள் வாழ்க...

said...

அது என்னங்க கன்ரபரி? கேண்டர்பரி இல்லையா?

அந்த பாலோ அப் எங்க இருக்கு? நம்ம கண்ணில் படலையே...

said...

ஓ மேட்டர் இந்த பின்னூட்ட பெட்டியின் கீழ் இருக்கா? மேட்டர் என்னான்னு டிக் அடிச்சிப் பார்க்கறேன்.

Anonymous said...

வேற யாரும் இத போட்டொ புடிச்சுருப்பாங்க நீங்க திறந்து வைக்கறத கண்டிப்பா. மவுரி முகம், கிவி, பென்குவின், நடராஜர்னு எல்லாம் இருக்கு.

said...

வாங்க தஞ்சாவூரான்.

நான் எங்கெங்க தமிழ் வளர்க்கறேன்? அது தானால்லெ வளர்ந்துக்கிட்டு இருக்கு.
இருக்கறதைக் கெடுக்காம இருந்தாப்போறாதா?

said...

வாங்க கொத்ஸ்.

'ட'வுக்கு 'ர'ன்னு ஆகிப்போச்சு.
ரீச்சர்/டீச்சர் மாதிரியேதான்:-)

ஆமாம், டிக்/ரிக் பண்ணா என்ன வருது?

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

வேற யாருமெடுத்தாங்களான்னு தேடணும்:-))))
நம்ம இவர் ஒரு எட்டு செகண்ட் வீடியோ எடுத்து வச்சுருக்கார். அதுக்காக 'யூ ட்யூப்'லெ மெனெக்கெடனுமான்னு விட்டுட்டேன்:-)))

said...

video illaavittaal pookiRathu.
ippadi oru nalla kaariyam ungga moolamaa
nadanthu irukke.
vaazhthukkaL.

said...

நன்று..

பேனரும்...

சாப்படு டேபிலும்..... :-)))))

நல்ல பசியில பார்த்தேன்.....

said...

//ட'வுக்கு 'ர'ன்னு ஆகிப்போச்சு.//

என்னாது, அங்கேயும் டகர ரகர கன்பியூஷனா? சரியாப் போச்சு!! அதான் அம்புட்டு வாட்டி பார்த்துப் பார்த்து சரி பண்ணினீங்களே. இம்மாம் பெரிய எழுத்து எப்படி மிஸ் ஆச்சு?

அப்படியே இருந்தாலும் அது கண்டபரின்னு இல்ல ஆயிருக்கும். கேண்டர்பரி இல்லையா? குழப்புறீங்களே.

அந்த ரிக் அடிச்சா உங்க பதிவுக்கு வர பின்னூட்டமெல்லாம் நம்ம ஜிமெயில் ஐடிக்கு வருதில்லா!!

said...

வாழ்த்துகள். நல்லா வந்துருக்கு. முயற்சி திருவினை ஆகியது.
பfபே நல்லா இருக்கு

said...

வாங்க வல்லி.

அணில் சேவைதான்:-))))

said...

வாங்க பாண்டி பரணி.

வருகைக்கு நன்றி.

இந்தமுறை சாப்பாட்டுட் டேபிளைச் சரியா (முழுசுமா) எடுக்க விட்டுப்போச்சு.
நீங்க பார்த்தது ஒரு பகுதிதான்:-))))

said...

கொத்ஸ்,

நம்ம இலங்கைத்தமிழில் 'ட' 'ர'ஆகிருமாம். அவுங்க நம்மவிடத் தமிழ் நல்லாக் கதைக்கறவங்க. அதுனாலெ அது சரியாத்தான் இருக்குமுன்னு விட்டுட்டோம். ஆனாலும் நான் எங்கியாவது குறிப்பிடும்போது 'கேண்ட்டர்பரி'ன்னுதான் எழுதறேன். என் பழக்கம் அப்படி.


அந்த 'ரிக்' இப்ப வேண்டாத வேலையாக் கிடக்கு(-:

said...

வாங்க சீனா.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.