Tuesday, October 02, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 29

பாலீஸ்டைரீன் பிள்ளையாருக்கு நேத்தே வெளியே இருக்கற மஞ்சள் அடிச்சு நல்லா காய விட்டு இருக்காங்க. இன்னைக்கு அதுலெ புள்ளையாருக்குமட்டும் ஸ்டீல் க்ரே அடிக்கணும். முன் கதவுக்கும் இன்னைக்கு வாக்ஸ் போடறாங்களாம். ப்ளம்பர் வரவே இல்லை! ஃபோன் போட்டா, மத்தியானம் 2.30 வரேன்னு நியூஸ் கிடைச்சது, வந்தாத்தான் உண்டுன்னு. பாத்ரூம் ஸ்டஃப் எல்லாம் வந்து இறங்கியிருக்கு!


திடீர்ன்னு எனக்கு அங்கெ போகணும்னு தோணிச்சு. அங்கே போனா அப்பத்தான் நம்ம புள்ளையாரை பொருத்திக்கிட்டு இருக்காங்க! சரியான சமயத்துக்குப் போயிட்டேன். நல்லா இருக்கு. ஆனா நமக்குத்தான் அது புள்ளையார். மத்தவங்களுக்கு அது ஏதோ ஒரு டிஸைன்!


இன்னும் கவனிச்சுப் பார்த்தா அது ஹனுமார் மாதிரியிருக்கு. 'பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் ஆனது' என்றது இதுதானோ?

கதவுக்கு 'ஸ்டீல் வுல்' போட்டுத் தேச்சு, அதுக்குமேலே சிடி50ன்னு ஒரு எண்ணெய் தேய்க்கணுமாம். டோனி அதுதான் நம்ம பெயிண்டர் அதை எப்படிச் செய்யணும்ன்னு காமிச்சார். கதவு நல்லா மின்னுது!

சாயந்திரம் வழக்கம்போல கிங் வந்து கொஞ்சம் வேலை செஞ்சார்.
சென்ட்ரல் வாக்குவம் க்ளீனருக்கு அடுக்களையிலே ஒரு 'இது' வச்சிருக்குல்லே' அது'க்கு ஸ்டீல் ப்ளேட் கட் செய்யறதுக்கு மார்க் பண்ணிட்டுப் போனார்.


15/12
இன்னைக்கும் பலதடவை போகும்படி ஆச்சு! எத்தனை முறைன்னு கணக்கே இல்லை! லைட்டுங்கல்லாம் போட ஆரம்பிச்சாச்சு! பெயிண்டருங்க லாஸ்ட் மினிட் வேலையிலே இருக்காங்க.


'ரெப்டைல்ஸ்' லே போய் டைல்ஸ் நாங்களே கொண்டுவந்தோம். ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துலேதான் இருக்கு கடை. டெலிவரி சார்ஜ் 50 $ நமக்கு லாபம் ! அர்பன் டைல்ஸ் போய் இன்னும் நடுவிலே போடற இன்செட்க்கு ச்சும்மா 5 தான், பணம் கட்டியாச்சு! லாண்டரிக்கு டைல்ஸ் (கருநீலம்) ஏற்பாடு செஞ்சாச்சு!சென்ட்ரல் வேக் ஆளுங்க வந்து யூனிட் வச்சிட்டாங்க. அப்புறம் போய்ப் பார்த்தா, நல்லா பெயிண்ட் அடிச்சு முடிச்ச சுவத்துலே ரெண்டு ஓட்டை! கராஜ்லே இருக்கவேண்டிய இன்லெட் காணவே காணோம்!
பெயிண்டர் டோனி ஃபோன் செஞ்சார். நாளைக்கு 10 மணிக்கு 29 லே பார்க்க முடிவாச்சு. கொஞ்சம் டிஸ்கஸ் செய்யணுமாம். திரும்பத் திரும்ப ஓட்டைகளை அடைக்கறதாலே பெயிண்ட் செஞ்சுக்கிட்டே இருக்கமுடியாதுன்னு சொல்லப்போறாரோ?சாயந்திரம் கிங் வந்து ஸ்டீல் தகடு போட்டாச்சு. இன்னும் கொஞ்சமே கொஞ்சம்தான் பாக்கி! 20 டைல்ஸ் கொண்டு போயிருக்காரு. தரையில் முடிக்கும் இடங்களுக்கு அளவா வெட்டிக் கொண்டுவருவாராம். ஃபேக்டரியில் வெட்டுனாத்தான் பிசிறில்லாம இருக்குமாம்.


வீட்டுக்கு வெளிப்புறச் சுவர்களில் பெயிண்ட் வேலைகள்
முடிச்சிட்டாங்க! அதுக்குத்தான் தனி ஒப்பந்தக்காரர்களாச்சே.


16/12
பத்துமணிக்குத்தான் போனேன். இவரு காலையிலேயே 'ஷாண்டிலியர்' போடணும்ன்னு கொண்டு போயிட்டார். சென்ட்ரல் வேக் ஆளுங்க வந்தாங்க. சுவத்துலே ஓட்டை அவுங்க தப்பில்லையாம். ஜிப் ஆளுங்க அப்படித் தப்பாப் போட்டுட்டாங்களாம். கராஜ்லெயும் ஓட்டையை அடைச்சது அவுங்கதானாம். அது எங்கேன்னு கண்டுபிடிக்கறது இப்பக் கஷ்டமாம். ஒண்ணு அங்கே சுவத்துலே பெரிய ஓட்டை(!) போட்டுக் கண்டுபிடிக்கலாமாம். இல்லேண்ணா, மேலே போய் அங்கே போகற ஹோஸை முழுசா அடைச்சிடலாமாம்.
என்ன வழின்னு மண்டையை உடைச்சுக்கிட்டே 3 பேரும் நின்னாங்க. நம்ம பெயிண்டர் டோனிதான் ஐடியாக் கொடுத்தாரு. அவுங்க அந்த யூனிட்டை ஆன் செஞ்சவுடனே 'சக்' பண்ணற சத்தம் வருமில்லே அது எங்கே வருத்துன்னு சுவத்துலே காது வச்சுக் கேட்டு ஒரு ஸ்க்ரூ ட்ரைவராலே ஒரு ச்சின்னக் குத்து! அப்படியே அந்த இன்லெட்டைக் கண்டுபிடிச்சுட்டார். வெல்டன் டோனி!!!!!!!


நாளைக்கு வந்து ச்சின்ன சின்ன ஓட்டைங்களை அடைக்கறதாவும், கதவுக்கு இன்னோரு கோட் எண்ணை அடிக்கறதாகவும் சொன்னார். இவர் சாப்பிட வந்தப்ப அவுங்க வந்தாங்களாம். செக் கொடுத்துட்டாராம். ரொம்ப நல்ல டீம்! நல்லா பழுதில்லாம, முகம் சுளிக்காம வேலை செஞ்சாங்க!


மத்தியானம் சாப்பிட்டுட்டு கொஞ்சநேரம் கம்ப்யூட்டர்லெ உட்கார்ந்தப்ப, சட்டுன்னு என்னவோ ஒரு தோணல். உடனே அங்கே போனா, கேரி லைட்டுங்களைப் போட்டுக்கிட்டு இருக்காரு. நம்ம 'வாட்டர் ஃபால் ஷாண்டிலியர்' என்ன உயரத்துலே இருக்கனும்னு கேட்டார். உயரம் சொன்னேன். அப்புறம் அதை எப்படி செட் செய்யணும்ன்னு கேட்டுக்கிட்டே அந்த பாக்ஸைப் பிரிச்சவர் கிறிஸ்டல்களைப் பார்த்தவுடனே திகைச்சுப் போயிட்டார். நான் செட் பண்ணறேன்னு சொல்லி அதை நம்ம ஊஞ்சல் கொக்கிலே கட்டிவிட்டு, பொறுமையா செட் செஞ்சேன். குட்டிச்சாத்தானுக்கு வேலை கொடுத்தாச்ச்சு:-))))
ஹீட் பம்ப் போடற ஆளுங்க இன்னைக்கே வரேன்னு சொன்னாங்களாம். ஆண்ட்ரூன்னு ஒரு பையன் வந்து போட்டுக்கிட்டு இருந்தாரு.மொத்தம் மூணு இடத்துலே ( முட்டாளுக்கு மூணு இடமோ?) போடணுமே.


லவுஞ்சிலேயும், மாஸ்டர் பெட்ரூம்லேயும் ஆச்சு. லிவிங்ரூம் பாக்கி. அப்பால அலாரம் செட் செய்ய 'லையோனில்' வந்து செட் செஞ்சாச்சு. வெளியே போறப்ப 60 உள்ளெ வர 30 விநாடிகள்!


அதுக்குள்ளே பில்கிங்டன் க்ளாஸ் ஜன்னல் கண்ணாடி போட வந்தாங்க. நல்ல வேளை போட்டு முடியட்டும்ன்னு இருந்துச்சு!


அப்ப நம்ம கிங் ஃபோன் செஞ்சு, இன்செட் டைல் வேணும்ன்னு சொன்னாரா, நான் அர்பன் டைல்ஸ் போனேன். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க, நாம் தேர்ந்தெடுத்தது இப்ப கிடைக்கறதில்லையாம்! காசு எல்லாம் கொடுத்திருக்கு, ஆனா இப்ப இந்த மாதிரி சொன்னா?


நாம எது கேட்டாலும் அங்கெ வேலை செய்யற பொண்ணு 'அன் ஃபார்ச்சுனேட்லி' ன்னு சொல்லியே கழுத்தை அறுக்குது! அஞ்சு டைல்ஸ்க்கு 60$ கொடுத்திருக்கு. 'அன் ஃபார்ச்சுனேட்லி' அவுங்க செக்காத்தான் அனுப்புவாங்களாம்! நம்ம கிட்டே காசா வாங்கிக்கிட்டாங்க! சரி. இருக்கட்டும், லாண்டரிக்கு டைல்ஸ்க்கு பே செய்யறப்ப அட்ஜஸ்ட் செய்யலாம்ன்னு வந்துட்டேன்அப்ப இவர் போன் செய்யறாரு, ஷவர் போட ஆள் வந்திருக்குன்னு. சரின்னு திரும்ப வரும்போது, வீட்டுக்குப் போய் பல்புகளை எடுத்துகிட்டுப் போனேன். கேரி கேட்டிருந்தாரு.ஷவர் ஆளு 'ரேமண்ட்' நல்ல மாதிரி. இப்ப இன்னோரு ப்ராப்ளம்! ஷவர் வால்லே சோப் வைக்க ஒரு மோல்டட் டிஸைன் இருக்குல்லே. அது ஏற்கனவே போட்ட பைப் லைனைத் தட்டுது! இப்ப ப்ளம்பருக்கு எங்கே போறது? அதுக்கு அந்த ரேமண்டே ஒரு வழி சொன்னாரு. நான் வேணா நகர்த்திப் போடவா? ஜிப்பைக் கட் செஞ்சு பைப்பை இழுத்துட்டு, திருப்பி ஜிப்பை ஒட்டறென்னு. எவ்வளவு காசு? 30 டாலர். 'சரி, செஞ்சுருப்பா'! வேலை முடியணுமே!


இப்ப கெரிக்கு ஒரு ப்ராப்ளம். லவுஞ்க்கு கிறிஸ்டல் கோர்த்துக் கொடுத்தது 18. அதுலெ ஒண்ணு சரியாப் போகலையாம் . என்னவோ அடைச்சதுபோல!அதுக்கு ஒரு ஆணியிலே ஓட்டையைப் பெருசு பண்ணலாம்ன்னு பார்த்தப்ப இன்னோரு கிறிஸ்டல் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு!


கிறிஸ்டல் என்ன பெரிய கிறிஸ்டல் எல்லாம் ப்ளாஸ்டிக்தான்!ஆனா அதோட குழல் கண்ணாடி! கீழே கார்பெட் இருந்திருந்தா ஒருவேளை தப்பி இருக்கும். இன்னும் சிமெண்ட் தரைதானே. பளார்ன்னு தெறிச்சிடுச்சு! அதுக்கு ரீப்ளேஸ்மெண்ட் கிடைக்குமான்னு நாளைக்குப் பார்க்கணும்! கிடைச்சா வாங்கிருங்க. நான் அதுக்குண்டான காசைக் கொடுத்துருவேன்னு சொன்னார்.
கிங் 5 மணிக்கு வந்தாரு. கூடவே அவர் மனைவி காத்தரீனும்! நல்ல பொண்ணு..டைல் கிடைக்காத விஷயம் சொன்னேன். நாளைக்கு மறுபடியும் டைல்ஸ் வேட்டை! வாஷ் பேஸினுக்கு விலை குறைக்கச் சொல்லியிருக்கேன். பார்க்கலாம்!


இவர்வேற ரெண்டுவாரம் இருக்க மாட்டாரா............. அதுவே ஒரு கவலையா இருக்கு. என்னென்ன 'கடுபடு' பண்ணி வைக்கப் போறேனோ!


தொடரும்......................
==================

18 comments:

said...

உங்க 'வாட்டர் ஃபால் ஷாண்டிலியர்' ஹாலுக்கு grand -ஆ பொருத்த‌மாத்தான் இருக்கு. விலையும் ரொம்ப‌ பொருத்த‌மா இருந்துருக்குமே.

said...

டோனி மாதிரி வித்தியாசமான சிந்தனை மூலம் விடை கண்டுபிடிக்கிற ஆளுங்களை நமக்கு ரொம்பப் பிடிக்குமே!!

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நல்லா இருக்குதுங்களா?

விலை அவ்வளவு கூடுதல் இல்லீங்க. நம்மால் கொடுக்க முடிஞ்சதுதான்:-))))

ஆனா.... அதை ஒவ்வொண்ணாக் கோர்த்து முடிச்சது 'நச்' பிடிச்சவேலை.

said...

வாங்க கொத்ஸ்.

அதானே..விக்கிப் பசங்(சிங்குலர்)குக்குப் பிடிக்காம இருந்தாத்தான் ஆச்சரியம்:-))))

said...

எங்க, எங்க, எங்க கொத்தனாரு?
ஓ வந்திட்டாரா?
அதென்னமோ அவரு வந்து, பந்து போட்டாத்தான் ஆட்டம் சூடு பிடிக்குது!

said...

இந்த ஜிப்லாக் சுவருக்கும் செங்கல் சுவருக்கும் உள்ள வித்தியாசம் ஓட்டை போடுவதும்/உடைப்பதும் தான்.பின்னதில் இந்த மாதிரி வேலைகள் முடிந்த பிறகு பூச்சு வேலை செய்வதால் நிம்ம்மதியாக இருக்கலாம்.
நேற்று கூட வேலை செய்யும் இடத்தில் ஒருவரை கேட்டேன்...இந்த ஜிப்லாக்கில் நாம் மேல் பூச்சு செய்கிறோமோ? என்று.
இல்லை,அதன் ஜாயின்டில் மாத்திரம் பட்டி பூசிவிட்டு பெயிண்ட் அடித்துவிடுவோம் என்றார்.ஒரு வேளை வீட்டுக்காக மேல் பூச்சு செய்கிறார்கள் போலும்.

said...

வாங்க வாத்தியார் ஐயா.

கொத்தனார் இல்லாம எப்படிங்க வீட்டைக் கட்டறது? முதலில் அவர்தானே வரணும்:-)))

said...

வாங்க குமார்.

இங்கெ மூணு பூச்சு, அதுக்கு மூணு தடவை சேண்டிங்ன்னு வேலை நடந்துச்சே.

அப்பத்தானே சுவர் நல்லா மழுமழுன்னு இருக்கும்.

நீங்க சொல்றது ரொம்பச் சரி. இப்ப எங்கெங்கே ஒட்டைகள் இருந்துச்சுன்னு என்னாலெயும் கண்டுபிடிக்க முடியாது:-)

said...

29 பதிவுகளில் பாதிதான் படித்துள்ளேன். வீடு கட்டனும் என்ற ஆசையே ஓடி விடும் போல் உள்ளது.

said...

\\இன்னும் கவனிச்சுப் பார்த்தா அது ஹனுமார் மாதிரியிருக்கு. 'பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் ஆனது' என்றது இதுதானோ//

ஹ்ம்.. எனக்கும் அப்படித்தான் தோணுது...

said...

எப்பட்சியோ இவ்வளவு தூரம் வந்தாச்சு. எப்பத்தான் ஓட்டை அடைக்கிறதுனு ஓய்ஞ்சு போயிருக்கும். இபோ அடைச்சதை எடுக்கறதுக்கும் ஐடியா கிடச்சுதே அதைச் சொல்லுங்க.
எல்லாம் பிள்ளையார் நல்லாத்தான் தெரிகிறார். ஓம் கூடத் தெரியுதே...

said...

வாங்க வித்யா.

மெதுவா நேரம் கிடைக்கும்போது படிங்க. வீடு என்ன ஓடியாப் போகப்போது:-))))

நீங்க தேனிங்களா. நான் உங்க பக்கத்தூருதான். போடி. மாமியார் வீடு அங்கெதான்.

said...

வாங்க முத்துலெட்சுமி.

பாருங்க நம்ம வல்லிக்கு 'ஓம்'கூடத் தெரியுதாமே!!!!

நம்ம வீடு வழியா 'வாக்' போறவங்க சிலசமயம் நின்னு பார்த்துட்டு, நாங்க யாராவது அங்கெ இருந்தால் 'அங்கே என்ன இருக்கு? யானையா குரங்கான்னு கேக்கறதுண்டு.

நான் சொல்றது,'அது யானைதான். ஆனா எனக்குக் குரங்கும் பிடிக்கும்':-))

said...

வாங்க வல்லி.

ச்சும்மாவா சொல்லி இருக்காங்க. 'பார்க்கறவங்க பார்வையில் இருக்கு எல்லாம்'ன்னு.

ஓம் எங்கெங்கே இருக்கு? நான் நாளைக்குத் தேடிப்பார்க்கணும்

said...

//இவர்வேற ரெண்டுவாரம் இருக்க மாட்டாரா............. அதுவே ஒரு கவலையா இருக்கு. என்னென்ன 'கடுபடு' பண்ணி வைக்கப் போறேனோ!//
எதுக்கு கவலை? அதான் வீடெல்லாம் விநாயகர்,
யானை, ஓம்... இன்னும் என்னவெல்லாமோ வச்சிருக்கீங்களே...

said...

வாங்க ஆடுமாடு.

//வீடெல்லாம் விநாயகர்,
யானை, ஓம்... இன்னும் என்னவெல்லாமோ வச்சிருக்கீங்களே...//

அதுவும் ஞாயந்தான். விக்கினேஸ்வரர் இருக்கும்போது விக்கினம் வரலாமா?

பொறுப்பை எடுத்துக்கும்போது ஒரு பயம் வந்துருதுல்லே அதான்........

said...

துளசி எங்கவீட்டில ஓம் எழுத்துக்குள்ள பிள்ளையார் இருக்கிற மாதிரி காலண்டர்.
அதில இப்படித்தான் தெரியும்.
அதான் சொன்னேன்:)))

said...

வாங்க வல்லி.

எப்படியோ நாம் நினைக்காமலேயே 'ஓம்' வந்துருக்கு. நல்லதுதானே?

நான் அந்தக் கேலண்டர் படம் பார்க்கலைப்பா. ஓம் லெ முருகன் பார்த்துருக்கேன்