Sunday, October 21, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 37

11/1
நம்ம லைப்ரரி, கிறிஸ்மஸ் லீவு முடிஞ்சு நேத்துத் திறந்துட்டோம்.! எனக்கு இன்னைக்கு ட்யூடி இருக்கு. அதுக்குப் போயிட்டு மத்தியானம்
புது வீட்டுக்குப் போனோம்! ஒரு மணிக்கு 'மில்லர்ஸ்' கடை 'கே புல்லன்' வந்து ஜன்னலுங்களை அளந்தாங்க!


அப்புறம் இன்னும் சில இடங்களிலே கார்ப்பெட் பார்த்தோம். ப்ளென்ஹம் ரோடு கென்னடி ஃப்ளோரிங்''லே முன் வாசலுக்கு
கோலம் டிஸைன் போட கலர் தெரிந்தெடுத்துச் சொல்லிட்டு வந்தோம்.
மில்லர்ஸ் ஃபோன் வந்தது. அங்கேயும் 1050 டாலர்தான் சொல்றாங்க. அட்லீஸ்ட் இங்கே கர்ட்டன் ஸ்பெஷலிஸ்ட் என்றபடியாலே
இவுங்களுக்கு அனுபவம் இருக்குமேன்னு அங்கெயெ கொடுக்கலாம்ன்னு முடிவு செஞ்சோம். ஒருதடவை சின்னப் பொண்ணுன்னு இரக்கப்பட்டுப்
'பட்டது' போதாதா? நம்ம ரைலாக் பொண்ணைத்தான் சொல்றேன்!


சாயந்திரம் நம்ம கிங் வந்து வாஷ் பேஸின் ஸ்டாண்ட் ஃபிக்ஸ் செஞ்சார். நாளைக்கு அமெரிக்கா போறாராம். வர ரெண்டு வாரம் ஆகுமாம்.
அவரோட அண்ணனுக்கு உடம்பு சரியில்லையாம்!


12/1
காலையிலே 9 மணிக்கு கிங்கோட ஃபோன். அந்த ஸ்டேண்டுக்கு ரெண்டு ஸ்க்ரூ போட்டு வைக்கப்போறாராம். ப்ளம்பர் வந்து உடைச்சுடுவார்
என்ற பயம்தான்! பாவம் ஊருக்குப் போற அவசரத்திலும் இதே ஞாபகம்! வெள்ளைக்காரன் இந்த மாதிரியெல்லாம் யோசிக்கவே மாட்டான்!
இன்னைக்கும் கார்பெட் வேட்டைதான்! ஹப்பர்லேதான் கொஞ்சம் விலைமலிவா இருக்கு. 9700 சொல்றாங்க! அங்கெயே வைனல்க்கும்
சொல்லிட்டு வந்தோம்!

13/1
இன்னைக்கு 'போகிப் பண்டிகை!' இன்னையோட மார்கழி மாசம் முடியுது! காலையிலே பில்டர்கிட்டேயிருந்து ஃபோன். அங்கே வெளியே
காத்திருக்காராம். இவர்போய் என்ன செய்யணும்ன்னு சொன்னார். நம்ம பாத்ரூமிலே வேஸ்ட் பைப் சரியில்லையே. அங்கே பழையபடி
தோண்டியாச்சு! ஆரம்பிச்சுட்டாங்கப்பா............இன்னும் எத்தனை இடத்துலே மறுபடி தோண்டறது இருக்கோ!


அப்புறம் 10.30க்கு நாங்க போனோம். அந்த கார்பெட் துண்டுங்களை வச்சுப் பார்த்தோம். வைனல் நல்லாவே இருக்கு. கார்பெட்டும் பரவாயில்லை!
அங்கிருந்து கிளம்பி, ஒரு வீடு (விலைக்கு வருது 'ஓப்பன் ஹோம்') பார்த்துட்டு அங்கிருந்து ஹப்பர்ஸ் போனோம். வைனல், கார்பெட் ரெண்டும்
முடிவு செஞ்சாச்சு! ஆனா விலைதான் $11944 வருது. இதைக் கொஞ்சம் குறைச்சுத்தந்தா வாங்கலாம்ன்னு முடிவு. சொல்லிட்டு வந்தோம்.
அதைப் போடறதுக்கும் இந்த மாசக் கடைசி 31க்கும், மறுநாளுக்கும் ஏற்பாடு செஞ்சாச்சு. பார்க்கலாம் எப்படிப் போகுதுன்னு!


மில்லர்ஸ் கே புல்லன் கூப்பிட்டு வெறும் நெட் கர்ட்டெயின் $940 வருமாம். கொள்ளை! அப்புறம் விவரம் கேட்டேன். 42 மீட்டர் துணி
வேணுமாம். 8.95மீட்டர். 72$க்கு டேப்பும் ஹூக்கும் பாக்கி தையல் கூலியாம்! நானே தைக்கறேன்னு சொன்னேன். நாளைக்குக்
காலையில் போய் அதைப் பத்திப் பேசணும்! நானே தைச்சா 415லே வேலை முடிஞ்சிடும்! 525 மிச்சம் பிடிக்கலாம்!


மத்தியானமா இரும்பு கேட் & ஃபென்ஸிங் செய்யற இடத்துக்குப் போனோம். அங்கே கேரி என்றவர், (அவரே அந்த நிறுவனத்தின் உரிமையாளர்) எல்லா டிஸைன்களையும் காட்டினார். நாளைக்குக் காலையிலே 8 மணிக்கு நம்ம சைட்டுக்கு வந்து அளந்துகிட்டுப் போயிட்டு அப்புறமா என்ன
செலவாகும்ன்னு க்வோட் கொடுப்பாராம்!


14/1
இன்னைக்குப் பொங்கல் பண்டிகை! தை மாசம் பொறந்தாச்சு. ராத்திரி சரியாவே தூங்கலை. ஒரே வலி! இடுப்பு விட்டுப் போகுது! காலையிலே நிதானமாத்தான் எழுந்தேன். இவர் எட்டு மணிக்கு அங்கே போயிட்டு கொஞ்ச நேரத்துலெ திரும்பி வந்தார். கேரி வந்து அளந்தாச்சாம்!


இன்னைக்கு சக்கரைப் பொங்கல், வடை செஞ்சேன். அவ்வளவுதான்! வேற ஒண்ணும் செய்ய முடியாது. வலி நம நமன்னு பிடுங்கிக்கிட்டே
இருக்கு!

சாப்பாடானபிறகு, டைல்ஸ் கடைக்குப் போய் ஆர்டர் கொடுத்திருந்ததை வாங்கிக்கிட்டு வந்தோம்! நாளைக்குப் பால் காய்ச்சலாம்ன்னு இருக்கு!
அதுக்குண்டான சாமான் எல்லாம் எடுத்து வைக்கணும்! சூரியன் உதிக்குமுன்னே பூஜை பண்ணிட்டா நல்ல நேரம் தேடவேணாமுன்னு எங்க
பாட்டி சொன்னது( இதெல்லாம் மட்டும் தேவைக்குன்னு நினைவு டாண் னு வந்துரும்!) இங்கே இப்ப கோடைகாலம். பகல்நேர சேமிப்பு ஒரு மணிநேரம் கடிகாரத்தை முன்னோக்கி மாத்தியிருக்காங்க. உலகின் கோடியில் இருக்கோமா...... அதுலே சூரியனும் ஊருக்கு முன்னாலே வந்துருவான்!

15/1
நாள் நல்லா இருக்காம். இன்னைக்குப் பால் காய்ச்சணும்! அதுக்காக காலையிலே 4 மணிக்கே எழுந்து குளிச்சு, கொஞ்சமா ஒரு ப்ரசாதம் பண்ணி எடுத்துக்கிட்டு (எல்லாம் நம்ம கேசரிதான்)
அஞ்சரைமணிக்கு அங்கே போனோம். போறப்ப நம்ம நண்பர் கணேஷ் வீட்டுக்குப் போய் அவரையும் கூட்டிக்கிட்டுப் போனோம்!


என் இஷ்டம்ன்னு விட்டா என்னுடைய க்ரஹப்பிரவேச ப்ளான் வேறு மாதிரி. எதுக்கும் இவர் ஒத்துவராம இருந்ததாலே உனக்கும் வேணாம் எனக்கும் வேணாமுன்னு இப்படி வைச்சாச்சு! என் ப்ளான்படி வீட்டுக்குள் வரவேண்டிய மாடுகளும் கன்றுகளும் இப்ப அடுக்களை ஜன்னல்கட்டையில் உக்கார்ந்துருக்காங்க.


அங்கே ஸ்வாமிப் படம் வைச்சு, விளக்கு ஏத்தி, பாலைக் காய்ச்சியாச்சு! நேத்தே 'கேஸ் சிலிண்டர்' வந்துருச்சு. ஆனாலும் அந்த அடுப்பு
விவரம் சரியாத் தெரியாததாலே, ஒரு சின்ன 'ரைஸ் குக்கர்' வச்சு அதுலேயே பாலைப் பொங்க வைச்சேன்!



அப்புறம் ப்ரசாதம் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டோம். எட்டு மணிக்கு மோஷீன் வந்து பாக்கி இருக்கற வேலையை முடிக்கப்போறாராம்!
மோஷீன் வந்து நம்ம பாத்ரூம் ஷவர் ஏரியாவுலே வேஸ்ட் பைப்பை சரியா வச்சு அங்கே காங்க்ரீட் போட்டார். அதுக்கே கிட்டத்தட்ட பாதிநாள்
முடிஞ்சிடுச்சு!


பாக்கியான மற்ற டைல்ஸ் எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்தோம். நேத்து வாங்கிவந்த டைல்ஸ் குறைவா இருக்காம்! நாம் 18 கேட்டிருந்தோம்.
அவுங்க நமக்குத் தந்த பெட்டியிலே 11தான் இருக்காம். இன்னும் 7 வேணுமே! நேத்தே விவரத்தைப் போன்லே சொன்னோம். அவுங்க
7 தரேன்னு சொல்லியிருந்தாங்க. அதையும் வாங்கிக்கிட்டு அப்படியெ கோவிலுக்கும் போயிட்டு வந்தோம்.


சாயந்திரம் நம்ம தமிழ் சங்கத்திலே ஒரு மீட்டிங். ட்சுநாமியிலே இறந்தவங்களுக்காக ஒரு நினைவு அஞ்சலி! அப்புறம் மகளும் வந்தாள்.
கொஞ்சம் பிரசாதம் கொடுத்து அனுப்புனேன்.

16/1
இன்னைக்கு 'மில்லர்ஸ்' கடையிலே ரெடிமேட் தெர்மல் பேக் உள்ளத் திரைச்சீலைகள் வாங்கினோம். இங்கே அங்கேன்னு அலைஞ்சு பார்த்ததிலெயெ நேரம் போயிடுச்சு!

17/1
காலையிலெ எட்டு மணிக்கு மோஷீன் வந்தாச்சு. சாயந்திரம் வரைக்கும் வேலை செஞ்சுக்கிட்டே இருந்தார். ஒருவழியா டைல்ஸ் போட்டு
முடிச்சாச்சு! நாளைக்கு க்ரெளட்டிங் போடுவாராம்!


கேரியும் வந்து லைட்டிங் வேலைகளையெல்லாம் 99% முடிச்சுட்டார்.காலிங் பெல் போட்டாச்சு!
ஆன்ஸ்யூட் பாத்ரூம் ஷவர்க்கு கண்ணாடி அளவெடுக்க ஆளுங்க வந்தாங்க.
வார்டுரோப் போடற ஆளு வந்து வேலையை ரொம்ப நீட்டாச் செஞ்சுட்டுக் காசு வாங்கிக்கிட்டுப் போனார்!




ரைலாக் ஆளுங்க லீசாவும் டோனியும் வந்து அவுங்களோட வேலை நேர்த்தி(?)யைப் பார்த்துட்டுப் போயிருக்காங்க.

வந்து எல்லாத்தையும் சரி செய்யப் போறாங்களாம்!
நாங்க மாஸ்டர் ட்ரேடுலே போய் வேஸ்ட் மாஸ்டர் வாங்கிக்கிட்டு வந்தோம். நாளைக்குக் காலையிலே ப்ளம்பர் வராராம்!


தொடரும் ........

=========================

22 comments:

Anonymous said...

/விவரம் சரியாத் தெரியாததாலே, ஒரு சின்ன 'ரைஸ் குக்கர்' வச்சு அதுலேயே பாலைப் பொங்க வைச்சேன்!//
அப்போ பால் குக்கர்ல அரிசி பொங்குமா

said...

டீச்சர், அந்த மாலை எல்லாம் ஒரிஜினல் பூவா? அல்லது இந்தியா இம்போர்ட் காகிதம் / ப்ளாஸ்டிக்கா?

said...

ஆனா விலைதான் $11944
அந்த விலையில் ஏதாவது புள்ளி விட்டுப்போச்சா??
கிங் தான் உங்க வீட்டுக்கு வேலை செய்தவர்களில் பெஸ்ட்.நினைப்பு முழுவதும் தான் செய்த வேலையை சுற்றியே இருக்கும் போல. மிக மிக வித்தியாசமானவராக இருக்கார்.
அந்த மாலை சூப்பர்,பளிச் என்று இருக்கிறது.

said...

ஒரு டைரி போல இதை எழுதியிருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது!

கொத்ஸ்! அதெல்லாம் ரெடிமேடா இந்தியாவில் கிடைக்கும் செயற்கை மாலைகள்தான்!

said...

நல்ல நாவல் படிப்பது போல் உள்ளது இந்த தொடர் நல்ல விருவிருப்பு இயல்பன நகைச்சுவை வலியோடோ உள்ள நடை(தொடர்) வீட்டின் பெயின் டை பற்றிய செய்தி வேண்டும்

said...

அந்த மாடும் கன்னுகளும் என்ன அழகு ..ஒரே ஸ்மைலி முகமா இருக்காங்க.. எங்கவீட்டுல கூட நாங்க மாடும் கன்னுக்குட்டீயும் மாதிரி ஒரு பொம்மை வாங்கித்தான் பால் காய்ச்சற நாள் கொண்டுபோனோம்.

said...

படிச்சிக்கிட்டே வர்ரப்ப...படம் வரலையேன்னு தோணுச்சு. ஒடனே படம் வந்துருச்சு. :) பெருமாள் முன்னாடி.. பிள்ளையாரு பின்னாடி.... பிரசாதம்... அதான அந்த சட்டிக்குள்ள மூடி வெச்சிருக்கீங்க. :)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி

இதுதான் கோயமுத்தூர் குசும்பா? :-)))))

ஒருவேளை பால்குக்கரில் அரிசி பொங்குமோ?

ஊஹூம்..... நோ ச்சான்ஸ்.

ஆனா அடிக்குற விஸில் சத்தம் நம்ம காதைக் கிழிச்சுரும்:-)))

said...

வாங்க கொத்ஸ்.

இதையெல்லாம் கண்டுக்கணுமா?

"ஆராயக்கூடாது அனுபவிக்கணும்" இப்படி ஒரு பதிவர் சொல்லி இருக்காருல்லெ? அதேதான்:-))))

கோபால் வாங்கிவந்ததுதான் நம் சிங்காரச் சென்னையில் இருந்து:)

said...

வாங்க குமார்.

புள்ளி விட்டுப்போனா அதுவும் முதல் மூணு எண்களுக்கு அடுத்து ஒரு புள்ளி வச்சுருந்தா எவ்வளோ நல்லா இருக்கும். நமக்கு அவ்வளோ கொடுப்பனை இல்லை?(-:

ஆமாங்க, நம்ம கிங்தாங்க பெஸ்ட். அவர்கிட்டே ஒரு வேலையைச் சொல்லிட்டு நாம் மறந்துறலாம். ஆனா அவர் தூங்கமாட்டாரு:-))))

said...

வாங்க VSK,

அப்போவே தினமும் நடக்கறதை எழுதிவச்சது அப்படியே பதிவா வந்துக்கிட்டு இருக்கு.

தலைப்பை ' வீடு கட்டியவளின் நாட்குறிப்புகள்'ன்னு வச்சு இருந்துருக்கலாம்:-)

said...

வாங்க பரணி.

முதல்முறையா வந்துருக்கீங்க. நலமா?


பெயிண்ட் பத்தி என்ன விவரம் வேணும்? சொல்லுங்களேன்.

said...

வாங்க முத்துலெட்சுமி.

சிரிப்பு....? நம்ம குடும்ப சொத்து. அதான் மாட்டுக்கும் வந்துருக்கு:-)))))

said...

வாங்க ராகவன்.

புள்ளையார் & பெருமாள் இல்லாம நம்ம வீட்டுலே எந்த வேலையும் நடக்காதே:-))))

நம்ம வீட்டுலே சொஜ்ஜி(கேசரி)தான் நிரந்தரப் பிரசாதம். அந்த சட்டியும் பிரசாதத்துக்குன்னே இருக்கற நிரந்தரச் சட்டி:-)))

பாவம் கோபால். பொண்ணு பார்க்க வந்து சொஜ்ஜி சாப்புடும் அனுபவம் கிடைக்காமப் போனதுனாலெ வாழ்க்கை முழுசும் 'பிரசாதம்' என்ற பெயரில் சொஜ்ஜி பண்ணிப்போட்டுக்கிட்டு இருக்கேன்:-))))))

நோ பஜ்ஜி. எண்ணெய் கூடுதல்(-:

said...

//பொண்ணு பார்க்க வந்து சொஜ்ஜி சாப்புடும் அனுபவம் கிடைக்காமப் போனதுனாலெ வாழ்க்கை முழுசும் 'பிரசாதம்' என்ற பெயரில் சொஜ்ஜி பண்ணிப்போட்டுக்கிட்டு இருக்கேன்:-))))))//
இந்தக் கொடுமைக்கு அன்னிக்கே அவர் சாப்பிட்டு இருக்கலாம். எல்லாம் அவுங்க அவுங்க தலைவிதி.

said...

வாங்க இளா.

//.....கொடுமைக்கு.......//

எல்லாம் அவுங்கவுங்க வாங்கிவந்த வரம்;-))))))

said...

//என் ப்ளான்படி வீட்டுக்குள் வரவேண்டிய மாடுகளும் கன்றுகளும் இப்ப அடுக்களை ஜன்னல்கட்டையில் உக்கார்ந்துருக்காங்க//

என்னதான் இருந்தாலும் நம்ம கலாச்சாரத்தை விடலமா? அந்த ஊர்ல ஒரு மாடு கூடவா இல்லை. பக்கத்தூர்ல இருந்தா கூட முந்தின நாளே கொண்டு வந்து வீட்டுக்குமுன்னே கட்டிப்போட்டு, காலையில வீட்டுக்குள்ள கொண்டு போயிருக்கலாம். போங்க டீச்சர்.
ஆடுமாடு ரொம்ப கோபமா இருக்கு.

said...

வாங்க ஆடுமாடு. இப்படிக் கோச்சுக்கிட்டா எப்படி? அதான் சிட்டிக்குள்ளே மாடே கிடையாதே. வரக்கூடாதுல்லெ?

பண்ணைகளில் மட்டுமே இருக்கும்.
இன்னிக்கு நியூஸ் என்னன்னா பயங்கர சூறாவளிக் காத்துலே தென்பகுதியில் மின்சார ஒயர்கள் எல்லாம் அறுந்து மின்சாரம் தடைப்பட்டுப் போச்சாம். பால்கறக்க முடியாமல் பண்ணையில் ஒரே தவிப்பாம். பவர் வந்தாத்தான் பாலே கறக்க முடியும்.

வீட்டு முன்னாலெ எல்லாம் மாடு கட்ட முடியாது. கார் மட்டும் நிறுத்திக்கலாம்:-)

said...

விடியரதுக்கு மூன்னாலே பூஜையும் செய்தாச்சு.
படமெல்லாம் வெகு ஜோர்.
கிங் வெள்ளைக்காரர் தானே??


எப்ப தான் இந்த முதுகு வலி விட்டுதோ?
பால் காய்ச்சி சாப்பிட்டதுக்கு வாழ்த்துகள் இப்பப் பிடிங்க:)))

said...

//இன்னிக்கு நியூஸ் என்னன்னா பயங்கர சூறாவளிக் காத்துலே தென்பகுதியில் மின்சார ஒயர்கள் எல்லாம் அறுந்து மின்சாரம் தடைப்பட்டுப் போச்சாம்//
டீச்சர் உங்க ஊரை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு.

said...

வாங்க வல்லி.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.


வெள்ளைக்காரன் இப்படியெல்லாம் சிந்திக்கறதில்லைன்னு எத்தனைதடவை புலம்பி இருக்கேன்.

'விடிய விடிய ராமாயணம் கேட்டு.....

சீதைக்கு ராமன்......?'

கிங் சீனர். ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவர்.

said...

என்னங்க ஆடுமாடு.
இதுக்கெல்லாம் பயந்தால் எப்படி?
இங்கே ஃபார்மிங் முக்கிய தொழில்.
இதிலும் முதன்மையா இருக்கறது பால்பண்ணைகள்தான்.