Monday, October 08, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 31


கதவையெல்லாம் சரி பண்ணறேன்னு தேச்சு வச்சிருக்கார் பில்டர். அங்கங்கே பெயிண்ட் போயிருச்சு. 'இப்ப அதுக்கு யாரு பெயிண்ட் அடிப்பா'ன்னு கேட்டேன். பெயிண்டர்தான் அடிக்கணுமாம்.

அந்தப் பையன் ஆன்ட்ரூ இன்னும் வேலை செய்யறாரு. நான் ஃபோன்லே கூப்பிடச் சொல்லிட்டு வந்துட்டேன். வீட்டுலேயே அந்த ஒர்க் ஆர்டர் நோட்பேட் கிடைச்சிடுச்சு!

அஞ்சரைக்கு ஆன்ட்ரூவோட ஃபோன். நான் கதவைப் பூட்டறதுக்குப் போனேன். எப்படி அந்த ஹீட் பம்பை சுத்தம் செய்யணும்ன்னு சொன்னாரு.
சரின்னு கேட்டுக்கிட்டேன். அதையெல்லாம் உபயோகிக்க ஆரம்பிச்சாத்தான் என்ன, எப்படிங்கறது புரியும். இல்லையா?

வீட்டை பூட்டிக்கிட்டுக் கிளம்பலாம்ன்னா கிங்கோட ஃபோன். டைல்ஸ் போட வர்றாராம். அங்கெயே இருந்து அவுங்க வந்தாவுட்டு நான் கிளம்பி இங்கே வந்துட்டேன்.

அந்த ஹீட்டிங் ஒயர் பதிச்சது சரியில்லையாம். அவுங்க போட்டு இருக்கற க்ளூவும், டேப்பும் டைல்ஸ்லே சரியா ஒட்டாதாம். அதனாலெ இவரோட வேலைக்கு கேரண்ட்டி தரமுடியாதாம்! இப்ப என்ன செய்ய முடியும்?
காங்கிரீட் போடறப்பவே வீடு மொத்தத்துக்கும் ஹீட்டிங் போட்டிருக்கலாமாம். அதுக்கு வெறும் 2000தான் ஆகுமாம். மொத்த ஏரியாவுக்கும் போட்ட பிறகு எங்கியாவது பழுதானா எப்படி ரிப்பேர் செய்வாங்க? வீட்டை இடிச்சுட்டா? என்னவோ? ஒண்ணும் புரியலெ!

ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க. பெயிண்டர் ஜாப் நல்லா இல்லேன்னு க்ரேக் சொல்லிகிட்டே இருக்காரு. என்னை கொண்டுபோய்
ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு சுவருன்னு காமிச்சுக்கிட்டே இருக்கார். இதுலே இவர் வேற கதவையெல்லாம் சரி செய்யறேன்னு இழைச்சாச்சு.
அதுக்குவேற பெயிண்ட் அடிக்க வேணாமா? தப்புக் கண்டுபிடிச்சுக்கிட்டே இருந்தா எப்படி? பெயிண்டருக்குக் கொடுக்க வேண்டியதில் இன்னும் கொஞ்சம் காசு பாக்கி இருக்கு. அதனாலெ இதையெல்லாம் மறுபடி
செய்யச் சொல்றேன்னேன். அதுக்கு பதில் என்ன தெரியுமா? 'இதுவே என் வீடா இருந்தா நான் காசு கொடுக்க மாட்டேன்.
வேலை சுத்தமில்லை! இது எப்படி இருக்கு? அவர் சொன்ன ஆளை வச்சிருந்தா வேலை படு சுத்தமா இருக்குமாம். அவருக்கு இன்னும் 3000
கூடத்தரணுமே? அந்தக் காசு கம்மி பண்ணினதாலெ தரமும் கம்மியா? என்னவோ போங்க! பில்டர் சொன்ன ப்ளம்பரைத்தான் ஏற்பாடு செஞ்சோம். எப்படி நம்மை ஆட்டி அலைக்கழிக்கிறார்ன்னு பார்த்தீங்கதானே? இப்ப அவர் சொன்ன பெயிண்டரை வைக்கலைன்னு அவருக்கு மனக்குறை.

கிங் இன்னும் ரெண்டுமணி நேரம் வேலை செய்வாராம். கூப்பிடச் சொல்லிட்டு வந்துட்டேன்.
மணி 9.30 ஆகுதேன்னு கிங்கை நானே ஃபோன்லே கூப்பிட்டேன். முடிஞ்சிடுச்சு, நீங்க வாங்கன்னார். உடனே போனேன்.
உள்ளெ விளக்கு எரிஞ்சுகிட்டு இருந்தது. இன்னைக்குத்தான் நம்ம வீட்டை முதல் முதலா விளக்குலே பார்க்கறேன். முன்வாசல் கண்ணாடி
யானைங்க அட்டகாசமா இருக்கு!


உள்ளெ போனா தரையிலே நடுப்பாகமெல்லாம் முடிச்சிட்டாங்க! ஓரங்கள்தான் பாக்கி. இன்செட்டும் பரவாயில்லாம வந்திருக்கு! ஆனாலும்
நான் மொதல்லே பார்த்துவச்ச ப்ரவுன் கிடைக்காதது கொஞ்சம் மனவருத்தமே!

ரொம்பக் கஷ்டமாப் போயிருச்சாம். ஒயருங்கல்லாம் லூசா இருந்தது. அதை ஆட்டினா எங்கே உள்ளே ஏதாவது ஆயிருமோன்னு பயம். அதாலெ
தரையிலெ 'க்ளூ' போடாமல் 'டைல்ஸ்'லே க்ளூ தடவி ஒட்டும்படி ஆச்சுன்னார்.

நாளைக்குக் காலையிலே 7 மணிக்கு வராராம். எப்படியும் பில்டர் 7.30 வராரேன்னு 7.30 பரவாயில்லையான்னு கேட்டேன். சரின்னு ஒருமாதிரி
இழுத்தார். சரி.சரி. 'வேலை செய்யறேன்'றவங்க வந்து செய்யட்டுமேன்னு நானு 7 மணிக்கே வரேன்னு சொன்னேன். எல்லாக் கதவையும்
பூட்டியிருக்கான்னு பார்த்துட்டு அலாரம் போட்டுட்டு வந்தேன்.

21/12
காலையிலே 6.50க்குக் கிளம்பிப் போனேன். கதவைத் திறந்து அலாரம், எடுத்தாச்சு! கிங்கும் போவும் வந்து விட்டுப் போன இடத்துலே
போடற டைல்ஸ்க்கு அளவு எடுத்தாங்க! ஒண்ணோன்னா எடுத்து வச்சுப் பார்த்து மார்க் செஞ்சுக்கிட்டாங்க. ஃபேக்டரிக்குக் கொண்டுபோய்
கட் செய்வாங்களாம். பிசிறு வராம இருக்கணுமாம்.

நானும் பில்டருக்காக வெயிட் செஞ்சேன். யாரு 100 தடவை போறது? 7.25க்கு க்ரேக் வந்தாச்சு. என்ன வேலைன்னு சொல்லிட்டு வந்தேன்.
பக்கத்து வீட்டு (31) மரம் நம்ம வீட்டு ஓடு மேலே விழறமாதிரி வருது. பலத்த காத்து அடிச்சதே! வெட்டிடலாம்னா அவுங்க கிட்டேப் போய்ச்
சொல்லணும்! அவுங்க நல்லவங்களா இருக்காங்க. சின்ன வயசு ஆளுங்கதான்! அந்தப் பக்கம் ஃபென்ஸ் இல்லாததாலேதான் இந்தப் பக்கம்
ரொம்பச் சாய்ஞ்சிடுச்சு. ஃபென்ஸ் நாமதானே போடணும்? குடிபோற முந்தியே பக்கத்து வீட்டு ஆளுங்களோட 'டிஸ்ப்யூட்' வேணான்னு பாக்கறேன்!


வீட்டுக்குவந்துட்டு, கேரியைக் கூப்பிட்டேன். எப்ப வேலைக்கு வராருன்னு தெரிஞ்சிக்க! மத்தியானமாம். கிரேக் அங்கெ வேலை செய்யறதாலே வீடு
திறந்துதான் இருக்குன்னு சொன்னேன்.

இன்னைக்கு ஷாலினி என்னையும் அரஷ்யாவையும் லஞ்சுக்குக் கொண்டு போறதாலே அதை முடிச்சுகிட்டு அங்கே போகணும்! மறக்காம
கிறிஸ்டல்(!) கொண்டுபோகணும்!

அலாரம் ஆளு ரிச்சர்டு ஃபோன் செஞ்சார். வீடு மானீட்டரிங் செய்ய சாவி வேணுமாம். மத்தியானம் 3 மணிக்கு அங்கே வந்து வாங்கிக்கச் சொன்னேன்.

'அர்பன் டைல்ஸ்'ஸை ஃபோன்லே கூப்பிட்டு டைல்ஸ் ஆர்டர் செஞ்சது வந்துச்சான்னா, அது வந்துருச்சாம். ஆனா நான் போய் கில்மோர்
தெருவிலே இருக்கற டெப்போவிலிருந்து எடுக்கணுமாம். வேற வேலை இல்லை. இந்தக் கடைக்குதான் வருவேன், அங்கே போக முடியாதுன்னேன்.
அப்ப நாளைக்கு இங்கேயே கொண்டுவந்து வைப்பாங்களாம். இப்ப எடுத்தா மட்டும் என்ன, எத்தனைநாள் அது ச்சும்மா உக்காந்து இருக்குமோ?
நாளைக்கே எடுக்கலாம்ன்னு சொல்லிட்டேன். இங்கே நம்ம காசு வேற இருக்குல்லே!

மத்தியானம் லஞ்சுக்குப் போயிட்டு வந்தவுடனே நேரா அங்கே போனேன். சரியா மூணு அடிக்க 7 நிமிஷம். அலாரம் ரிச்சர்டு வந்துட்டுப் போனாராம்! அங்கேயிருந்து செல்லிலே கூப்பிட்டேன். அவரு இல்லை ஆன்ஸரிங் மெஷின் இருக்கு. அதுகிட்டே என்னத்தைன்னு சொல்ல?

அப்ப கிங் வந்தாரு. என்னன்னா டைல்ஸ்ஸை வெட்டிட்டாராம் ஈரமா இருக்காம். அதனாலெ அதை வெளியிலே காய வைக்கணுமாம்.
ராத்திரி போடுவாராம்.

பில்டர் எல்லாக் குப்பையையும் கூட்டி ரப்பிஷ் டம்ப்லே போட்டுட்டு வந்துட்டாராம். வீடு சுத்தமா இருந்தது! கேரி லைட்டுங்க போட்டுக்கிட்டு
இருந்தார். கிறிஸ்டல் கொடுத்து மாட்டச் சொன்னேன். கொஞ்சம் நீளம். பரவாயில்லை! என்ன செய்யறது? எவ்வளவு காசு தரணுமுன்னு கேரி
கேட்டார். ஒண்ணும் இல்லை. இலவசமாக் கிடைச்சதுன்னேன்.

பவுடர் ரூம்லே டாய்லெட் பைப்பை இடம் நகர்த்தி வச்சிருக்கு! ஸ்பாவுக்கு சுத்தி கரை கட்டியாச்சு .ஃப்ரேம் அடிக்கறதுதான். நாளைக்குக்
காலையிலே 7.30க்கு வந்து காங்க்ரீட் கலக்கி ஊத்துவாராம். அப்ப துணிக் கம்பத்துக்கு பள்ளம் தோண்டி நடச் சொன்னேன். எந்த இடம்ன்னு
காமிச்சாச்சு! அப்ப க்ரேக் சொல்றது., 'இன்னும் என்னென்ன ஸர்ப்ரைஸ் வேலை இருக்கு?' வேலை சொன்னா அதுக்கு ஒரு 'திடுக்'!

ஓட்டு மேலே ப்ளாஸ்டிக் இருக்குன்னு சொன்னேன். நாளைக்கு எடுப்பாராம். துணிக் கம்பம் பாக்ஸ் வீட்டுலே வந்து எடுத்துக்கிட்டுப் போனார்.

நாளைக்கு கெரியும் 7.30 ஆம். காலையிலெ போய்க் கதவைத் திறக்கணும்!
பவர் வீட்டுக்குள்ளே வியாழனுக்கு வருதாம். அன்னைக்கு எல்லா ஹீட் பம்பையும் 1 மணி நேரம் போடச் சொன்னேன்.

பில்டர் எல்லா வேலையும் முடிச்சாச்சாம். டவுன் பைப் போட்டிருந்தது! வெளியே இருக்கற பாலீஸ்டைரீனை கேரிக்குக் கொடுத்துட்டதா
க்ரேக் சொன்னாரு! யாரு சாமான்களை யாரு கொடுக்கறது? அப்புறம் கெரிகிட்டேச் சொன்னேன். மகளுக்கு ஒரு துண்டு வேணுமாம். வாஷிங் மெஷீன் மேலே போட்டுக்கவாம். ஒரு ஷீட்டை வச்சுட்டுப் பாக்கியைக் கொண்டு போகலாம்ன்னு!

வெளியே 'ஐ லிட்' எப்படி வைக்கணும்ன்னு சொன்னேன். வெர்ட்டிகலா வேண்டாம்ன்னு முடிவாச்சு! இப்ப ரக்பி பால் போல இருக்கும்!


( இங்கே ரக்பியைத் தலையில் வச்சுக்கிட்டு ஆடி, இப்ப உலகக்கோப்பையில் தோத்துட்டாங்க)

கேரி 4.30 வரைக்கும் வேலை செய்வாராம். நான் கதவைப் பூட்டிட்டுப் போகச் சொன்னேன். கிங் ஃபோன் செஞ்சாச் சொல்லணும், அவர்கிட்டே இருக்கற சாவியை யூஸ் செய்யச் சொல்லி! அப்புறம் போய் அலாரம் போடலாம்!
கிங் 6 மணிக்கு அங்கெ போறாராம். நான் 7.10க்குப் போனேன். ஓரமெல்லாம் போட்டுக்கிட்டு இருக்காங்க. எட்டு மணிக்குப் போட்டு
முடிச்சிட்டாங்க. கோபால் வேற, என்ன க்ளூ போடறாங்கன்னு பாருன்னு சொன்னாரேன்னுதான் போனேன். ஃப்லெக்ஸிபிள் ரப்பர் பேஸ்டு க்ளூவும்
அதுக்கு ஃப்ளெக்ஸி க்ரெளட்டும்! ஒயர் வேற மாதிரின்னு சொன்னாரே. அதுக்காக ஒவ்வொரு டைல்ஸ் பின்னாலெயும் க்ளு
தடவித்தடவி ஒட்டுனாங்க. அதுக்கே நேரம் ரொம்ப ஆச்சு. நாளைக்கு
க்ரெளட்டு போடுவாங்க! இப்ப கிச்சன் நல்ல வெளிச்சமா இருக்கு! டார்க் கலர் போட்டிருந்தா அழுக்கா இருட்டா இருந்திருக்கும்.

தொடரும்.................
-----------------------------

16 comments:

said...

பாத்தீங்களா டீச்சர். அந்த ஊர்லயும் இப்பிடி ஒருத்தருக்குத் தெரியாத ஆள வேலைக்கு வெச்சா பிரச்சனை சொல்றாங்க. அத்தனையும் நானும் பட்டேன். ஒங்களப் போல பெரிய அளவுல இல்லைன்னாலும்...நானும் பட்டேன். அப்பப்பா! கிரில் கேட்டுப் போட மட்டுந்தான் காசுன்னு கேட்டு போட்டப்புறம் சொன்னாங்க. பெயிண்டிங் தனியாம். ம்ம்ம்...என்னவோ போங்க. அப்பார்ட்மெண்ட்டை முடிச்சி உள்ள போய் உக்காந்தப்புறம் வரிசையா செலவுகள். அத வைக்கிறது..இத வைக்கிறதுன்னு. கொசுவர்த்தி சுத்த வெச்சுட்டீங்களே டீச்சர்.

said...

உங்க வீடு கட்டும் படலத்தில வர எல்லாப்பதிவும் படிச்சுகிட்டு வரேன் ஆனாலும் எங்கே எல்லாம் எனக்கு சொல்லத்தோணுதோ அப்போ மட்டும் தான் சொல்வேன்! :-))

உங்க ஊரு பில்டர்சும் அப்படித்தானா?

//அவர் சொன்ன ஆளை வச்சிருந்தா வேலை படு சுத்தமா இருக்குமாம். அவருக்கு இன்னும் 3000
கூடத்தரணுமே? அந்தக் காசு கம்மி பண்ணினதாலெ தரமும் கம்மியா? என்னவோ போங்க! பில்டர் சொன்ன ப்ளம்பரைத்தான் ஏற்பாடு செஞ்சோம். எப்படி நம்மை ஆட்டி அலைக்கழிக்கிறார்ன்னு பார்த்தீங்கதானே? இப்ப அவர் சொன்ன பெயிண்டரை வைக்கலைன்னு அவருக்கு மனக்குறை.//

இங்கேயும் அப்படித்தான் இருக்காங்க, நாங்க கட்டும் போது அப்படித்தான் ஆச்சு , கட்டுமானம் மட்டும் ஒருவருக்கு காண்டிராக்ட், வயரிங்க், பிளம்பிங் , கார்பெண்டர் எல்லாம் நாங்களே ஆள் வைத்தோம் ,

ஆயிரம் குறை சொல்லிகிட்டே இருப்பார், அவர் கிட்டேவே மொத்தமா விடலைனு, வயரிங்க் போட சுவற்றில் ஓட்டை போட்டா அவன் பெரிசா ஓட்டை போட்டான் இதை நான் அடைக்கணுமே என்ற ரேஞ்சில் எங்களிடம் புகார் சொல்வார் :-))

ஜன்னல்கள் எல்லாம் வளைவாக வரும் படி வைக்கலாம்னு கார்பெண்டர் யோசனை சொன்னார் , அது அழகாக இருக்குமே என நாங்களும் சரி சொன்னால் , காண்டிராக்டர் அப்படி வைத்தால் சன் ஷேட் வைப்பது கஸ்டம், முடியாது என்பார், எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கும்.

பின்னர் ஒரு வீட்டில் அப்படி வைத்து கட்டி இருப்பது பார்த்து விட்டு வந்து சொன்னால் அப்படி வைக்க தேவையான பொருள்கள் இல்லை என்று வெறுப்பேத்துவார்.

எல்லா நாட்டிலும் கட்டிட வேலை செய்பவர்களிடம் ஒரே விதமான மனோபாவம் தான் இருக்கும் போல!

said...

உங்க வீட்டை ஒரேடியாக இழுக்கிறாங்க போல!!
வவ்வால் சொன்ன மாதிரி குத்தகைகாரர்கள் பலர் இவ்விதம் தான்.வளைவாக சன்சேட் அடிக்க ஒரு கஷ்டமும் கிடையாது,அவர்களிடம் அதற்கேற்ப சாமான்கள் இருக்காது அப்படியே செய்தாலும் ,முடிந்த பிறகு இந்த சின்ன வேலைக்கு இவ்வளவா? என்று வாயோடு கண்ணையையும் பெரிதாக திறக்கவேண்டிவரும். :-))
குத்தகைக்காரர்க்கு கிடைக்கவேண்டிய கமிஷனில் துண்டு விழுவதால் இந்த மாதிரி ஏதாவது குத்தம் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள்.இந்த மாதிரி தகிடுதத்தங்கள் செய்யவேண்டுவதாலேயே சொந்த வியாபாரம் பக்கம் போகவே பயமாக இருக்கிறது...வவ்வால்.
என் நண்பன் (அவனும் வீடு அந்த பிஸ்னஸ் தான் செய்கிறான்)எனக்கு கொடுத்த அறிவுரைகளை கேட்டால் நீங்கள் அசந்துவிடுவீர்கள்.
உங்கூரில் மரம் நிற்பதற்கு (நேராக) Fencing போடுவார்களா? :-))

Anonymous said...

ஆல் ப்ளாக்ஸ் தோத்தா பரவாயில்லை. அடுத்த தரவை ஜெயிச்சுக்கலாம்.அதுதான் 4 வருஷத்துக்கு ஒருதரம் உலகக்கோப்பை வருதே.

துளசி தளம் கொஞ்சம் கலர் மாறினாப்ப்ல இருக்கு

said...

வாங்க ராகவன்.

கொசுவர்த்தி சுத்துனா நல்லதுதானேங்க. எப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைச்சுருக்கு, கடந்துவந்த பாதை எப்படியெல்லாம் இருந்துச்சுன்னு
திரும்பிப் பார்த்தா ஆச்சரியமா இருக்குமே!

நான் சிலசமயம் உணர்ந்தது'எப்படிப்பட்ட முட்டாளா இருந்துருக்கோம்'ன்றதுதான்:-)))))

said...

வாங்க வவ்வால்.

எப்பத்தோணுதோ அப்பப் பின்னூட்டம் போடுங்க. பிரச்சனையே இல்லை:-))

//உங்க ஊரு பில்டர்சும் அப்படித்தானா?.......
எல்லா நாட்டிலும் கட்டிட வேலை செய்பவர்களிடம் ஒரே விதமான மனோபாவம் தான் இருக்கும் போல!//

ஆமாங்க. நாடுகள் தோறும் பாஷைகள் மட்டுமே வேறு.
மனுஷ சுபாவமும் எல்லா இடத்திலும் ஒண்ணுதாங்க.

said...

வாங்க குமார்.
ஃபென்ஸ் பக்கம் இருந்ததாலெ அந்த கிளைக்கு ஒரு சப்போர்ட் கிடைச்சிருக்கும். அடிச்ச காத்துலெ அப்படியெ சாஞ்சுருச்சு.

உங்க நண்பர் சொன்ன அறிவுரைகளை பதிவாப் போடுங்க. கட்டிடக்காண்ட்ராக்டர்கிட்டே என்னென்ன சொல்லி ஒப்பந்தம் போடணுமுன்னு தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதானே.

அடுத்த வீடு கட்டும்போது(?) பயனா இருக்குமே-))))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நீங்க ஒருத்தர்தான் 'கலரை'க் கவனிச்சுருக்கீங்க. எல்லாம் நம்ம 'இளா'வின் உபயம். நல்லா இருக்குங்களா?
'ஆல் ப்ளாக்' கலரையே பார்த்ததுக்கு இப்ப ஒரு ச்சேஞ்ச்:-)

said...

இங்கெல்லாம் கொத்தனார் சொல்ற ஆள்ட்டதான் மணல் வாங்கணும்;அவர் சொல்ற கடையில்தான் சிமெண்ட் எடுக்கணும்; இதர கட்டுமாணப் பொருட்களும்....
மாற்றிட்டோம்னா போயே போச்...
உலகம் முழுதும் ஒரே மெண்ட்டாலிடிதான்...

said...

வாங்க சிஜி.

இப்படி ஒரு எழுதப்படாத 'விதி' உலகம்பூராவும் இருக்கே(-:

said...

சத்தியாச் சொல்றேங்க. இனி கட்டி முடிச்ச வீடுதான் வாங்கறது. இல்லை ஒரே ஆள் கிட்ட காண்டிராக்ட் பேசி விடறது. இது நமக்கு ஆவறதில்லை.

said...

துளசி, டாக்டரிட்டப் போனா அவங்க சொல்றஇடத்திலதான் எக்ஸ்ரே!!

அதுமாதிரித்தான் வீடும்.!
நம்ம வீட்டு பாத்ரூமுக்கு இந்தத் தடவையோடு மூணு தரம் டைல்ஸ் போட்டாச்சு.:)

ரெண்டாந்தரம் வந்தவர் முதல்ல வந்தவரைக் குறை சொன்னார்.
இப்போ இவர் அவரைச் சொல்றார்.
:))

said...

வாங்க கொத்ஸ்.

பார்த்தீங்களா, இதுக்குத்தான் 'வீட்டைக் கட்டிப் பார்'ன்னு அனுபவஸ்த்தர்கள்
சொல்லிவச்சாங்க. ஆனா............. சொன்ன பேச்சைக் கேக்கற ஆளுங்களா நாம்?

said...

வாங்க வல்லி.

எல்லாரும் அவுங்களுக்குத் தேவையானதைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும், அவங்க 'குட் புக்ஸ்'லே சிலருடைய பேர் இருக்கு:-)))))

said...

ஸாரி...லேட்டாயிடுச்சு. வியாபாரத்தில் பிசியாயிட்டேன். ஆஜர். அப்புறமா முழுவதும் படிச்சுட்டு எழுதறேன்.

said...

வாங்க ஆடுமாடு.

வீடு என்ன ஓடியாப் போகப்போகுது? நிதானமாப் படியுங்க.
வியாபாரம் நல்லா நடக்குதுங்களா? என்னா யாபாரங்க?
புண்ணாக்கா?