25/1
இன்னைக்கு செவ்வாய்க் கிழமையாச்சே! லைப்ரரி வேலைக்குப் போகணும். காலையிலேயே (9.45க்கு) கார்பெட் போடுற ஆளுங்க ஃபோன் செஞ்சு எப்ப
வீட்டைத் திறக்க வரமுடியும்ன்னு கேட்டாங்க. நான் பகல் 12க்கு அப்புறம்தான்னு சொன்னேன். சாவி தரமுடியுமான்னு
கேட்டாங்க. அங்கெ செக்யூரிட்டி அலாரம் போட்டுருக்கோமே. எப்படி 'கோட்' நம்பர் தரமுடியும்?
கேட்டாங்க. அங்கெ செக்யூரிட்டி அலாரம் போட்டுருக்கோமே. எப்படி 'கோட்' நம்பர் தரமுடியும்?
இவர்கிட்டே சொன்னேன். நான் போயிருப்பேனேன்னு சொல்றார். இவருக்கு எப்ப மீட்டிங், எப்ப ஃப்ரீன்னு யாருக்குத் தெரியுது?
அப்புறம் என்னை 12க்கு லைப்ரரியிலே வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொன்னார். அப்படியே வரவும் வந்தார். அங்கே போனா,
ரெண்டு ஆளுங்க காத்துக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒருத்தர் நம்ம வீட்டுக்கு (311க்கு) அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கார்பெட் போட்டவர்!
எனக்கு ஞாபகம் இல்லே, ஆனா இவருக்கு நல்லா நினைவு இருக்கு! ஒருவேளை எனக்கு 'செலக்டிவ் அம்னீஷியா'வோ?

அவுங்களை விட்டுட்டு நாங்க வந்துட்டோம். தெரிஞ்ச ஆள்தானேன்னு ஒரு மெத்தனம்! இவர் சாப்பிட்டுட்டு போனார். 1.15க்கு எனக்கு
ஃபோன் செஞ்சு அவுங்க வேலை நடக்குது, 'அண்டர்லே' போடறாங்கன்னு சொன்னார். என்னை மெதுவா அங்கெ போனாப் போதும்ன்னு
சொன்னார். ஆனா நான் 2.30க்கு போறேன்னு சொல்லிட்டேன். அதே மாதிரி போனேன். அங்கே போட்டே முடிச்சிட்டாங்க! அப்புறம் கார்பெட் எப்பன்னு

கேட்டேன். அநேகமா நாளைக்கே போடலாம். எதுக்கும் சாயந்திரம் ஃபோன் செஞ்சு சொல்றேன்''னுட்டு போனாங்க!
நானும் கொஞ்சம் படங்கள் எடுத்துக்கிட்டு வந்துட்டேன்! பார்க்க நல்லாத்தான் இருக்கு! ' டர்போ கோல்ட்'னு இருக்கும் பேருக்கேத்த மாதிரி கொஞ்சம் மினுமினுப்பா இருக்கு. கால் வச்சா அப்படியே சர்ன்னு உள்ளே அமுங்காமக் கொஞ்சம் மெதுவா....... மெத்துமெத்துன்னு இருக்கு.
அண்டர்லே(underlay)ன்னு ஒரு ஃபோம் மாதிரி இருக்கும் ஷீட்களை முதலில் தரையில் விரிச்சுட்டு, அதுக்கு மேலேதான் கார்பெட் போடறாங்க. அந்த ஃபோமின் தரத்தையொட்டித்தான் கார்பெட் காலுக்கு மெத்துன்னு இருக்குமாம்.
நம்மது ஹார்ட்வேரிங் கார்பெட் என்றதால், இப்ப மார்கெட்லே இருக்கும் ரொம்ப நல்ல தரமான அண்டர்லே ஃபோம் போடச் சொல்லி இருக்கோம்.
கார்ப்பெட்களிலும் பலவிதங்கள் இருக்கு. காலுக்கு மெத்துமெத்துன்னும், புசுபுசுன்னு இருக்கறதும் பார்க்க அழகுன்னாலும், நாள்பட உழைக்காது. அதுக்குக் கட்பைல் கார்பெட்ன்னு சொல்றாங்க. அழுக்குகள் அதுலே உள்ளெ இறங்கி நின்னுரும். நாம் வேக்குவம் க்ளீனர் ப்ரஷ்லே அழுத்திச்
.சுத்தம் பண்ணும்போது அங்கங்கே திரித்திரியா இளகி வந்து க்ளீனர்லெ இழுபட்டுப்போகும்.
.சுத்தம் பண்ணும்போது அங்கங்கே திரித்திரியா இளகி வந்து க்ளீனர்லெ இழுபட்டுப்போகும்.
இதுக்குமேலே ஃபர்னிச்சர் மார்க்ஸ் வேற படிஞ்சு அந்த இடம் சீக்கிரம் இத்துப்போகுமாம். பொழுதண்ணிக்கும் மாத்திக்கிட்டு இருக்க முடியுமா? அதுக்கு லூப் பைல்தான் நல்லது. இழை அறுபடாம சுத்திச் சுத்தி இருக்கும்
கொடுக்கற காசுக்கு நாயா(??) உழைக்கணும், நமக்கெல்லாம்:-))))கிடைக்கும் 100 % ஆட்டு ரோமத்தில் செஞ்சதுன்னா குளிர்காலத்தில் வார்ம் ஆகவும், வெய்யில் காலத்தில் இதமாவும் இருக்குமாம்.
நாம் தெரிஞ்செடுத்தது இயற்கை நிறத்தில், லேசா க்ரே இழைகள் கலந்த லூப் பைல்தான். படுக்கை அறைக்கு மட்டும் இதே வகையில் க்ரே வுக்குப் பதிலா ப்ளூ கலந்தது. Godfrey Hirst என்ற கம்பெனி, ஆஸ்தராலியாவில் தயாரிச்சது. இங்கே உள்ளூர்லே தயாரிச்சது கூட நல்லாதான் இருக்கு. ஆனா ஃபாரின் மோகம் யாரை விட்டது? அங்கெ ஆஸியிலும் நியூஸி கார்பெட் போட்ட வீடுகளை விசேஷமாக் குறிப்பிட்டுச் சொல்றாங்க.:-))))
26/1
இன்னையோட சுநாமி வந்து ஒரு மாசம் ஆயிருச்சு! மூணு லட்சம் உயிருங்க போயிருச்சுன்னு சொல்றாங்க! ஐய்யோன்னு இருந்துச்சு! ப்ச்.....
'ட்ரண்டி மிர்ரர்' ஆள் டான் ஃபோன் செஞ்சு கண்ணாடிங்க தயாரா இருக்கு. எப்ப வந்து போடறதுன்னு கேட்டார். எப்ப முடியும்னு
கேட்டேன். பகல் 1 மணிக்குன்னா வருவாராம். சரின்னுட்டு பக்கத்து வீட்டுக்குப் போய் ஃபிஸியோ நேரத்தை மாத்தலாம்ன்னு நினைச்சேன்.
நல்ல வேளையா காலையிலேயே 10.50க்கு நேரம் இருக்குன்னாரு நம்ம ஃபிசியோ. அங்கே போயிட்டு வந்து சமைச்சு சாப்பிட்டு, பகல் 1 மணிக்கு

அங்கெ போனேன். கண்ணாடி போட டானும் இன்னோரு ஆளும் வந்திருந்தாங்க!
வெளியே நம்ம வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடையேஃபென்சிங்கும் போட்டு முடிச்சிருந்தாங்க வேற ஆளுங்க! நல்லாதான் இருக்கு!
கண்ணாடி போட ஆரம்பிச்சாங்க. ஃபோயர் மாடம் கோணயா இருக்கு! அட்ஜஸ்ட் செஞ்சு போட்டாச்சு. இன்னோரு மாடத்துக்குக் கண்ணாடி
கொஞ்சம் பெருசா இருக்கு. அதை அந்த மற்ற ஆளு திருப்பி எடுத்துக்கிட்டுப் போய் சரி பண்ணிட்டு வந்தார். அதுக்குள்ளே ஹால் டேபிள்
வரப்போற இடத்துக்கு மேலே வளைவு வர்ற கண்ணாடி மாட்டியாச்சு. அட்டகாசமா இருக்கு!
கொஞ்சம் பெருசா இருக்கு. அதை அந்த மற்ற ஆளு திருப்பி எடுத்துக்கிட்டுப் போய் சரி பண்ணிட்டு வந்தார். அதுக்குள்ளே ஹால் டேபிள்
வரப்போற இடத்துக்கு மேலே வளைவு வர்ற கண்ணாடி மாட்டியாச்சு. அட்டகாசமா இருக்கு!
அப்புறம் பாத் ரூம். அங்கே அளவு சரிதான். ஆனா டிமிஸ்டர் போடற ஒயர் உள்ளே போக ஒரு வெட்டு வெட்டினாங்க. கண்ணாடிக்குப்
பின்னே மறைஞ்சிடும்! ஆனாலும் மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு!
அப்புறம் நம்ம பாத் ரூம்! அங்கெயும் கோணதான்! இப்ப என்ன செய்ய முடியும்? சரி போட்டுருங்கன்னு சொல்லிட்டேன். வேற வழி?
இப்ப பெரிய கண்ணாடி ஹால்வே காரிடாருக்கு வருதே அது! அதைப் போடறப்ப ரொம்ப டைட்டா இருந்து, ஒரு ஸ்க்ராட்ச் ஆயிருச்சு!
சின்ன சிப்தான். ஆனாலும் கொண்டுபோய் சரி பண்ணிட்டு வெள்ளிக்கிழமை போடறேன்னு சொன்னார் டான். முதல்லெ நைஸாக் கேட்டுப்பார்த்தார், 'ரொம்பச் சின்னதாத்தான் உடைஞ்சிருக்கு. பார்த்தாத் தெரியாது. நீங்க சரின்னு சொன்னாப் போட்டுடறேன்'. அது ஸ்க்ரூ வர்ற இடம். நாளைக்கு அப்படியே அங்கெ விரிசல் விட்டுருச்சுன்னா? வேணாம். நல்லதாவே போடுங்கன்னேன். அவர் சொல்லலைன்னா அப்படி ஆனதே எனக்குத் தெரிஞ்சிருக்காது:-))))

நாங்களும் நம்ம வீட்டுலே இருந்து ரெண்டு கண்ணாடி, (ஏரோப்ளேன் இருக்கறதும், கோலம் கடைக்கு வாங்குன தங்க பட்டை போட்டதும்)
எடுத்துக்கிட்டு போனோம். அதை ஏரோப்ளேன் கண்ணாடி வாஷ் பேஸினுக்கும், தங்க ஃப்ரேம் கண்ணாடியை பவுடர் ரூமுக்கும் போட்டுக்
கொடுத்தார் டான்.
நாளைக்கு காலையிலே 8 மணிக்கு கார்ப்பெட் போட வராங்க!
27/1
காலையிலே எட்டு மணிக்கு இவர் அங்கெ போயிட்டார். கலர் சரியானதான்னு பார்க்க சொல்லி அனுப்பினேன். 'சரியா இருக்கு' அங்கிருந்து ஃபோன்லே சொன்னார்.
காலையிலே எட்டு மணிக்கு இவர் அங்கெ போயிட்டார். கலர் சரியானதான்னு பார்க்க சொல்லி அனுப்பினேன். 'சரியா இருக்கு' அங்கிருந்து ஃபோன்லே சொன்னார்.
வீட்டுவேலைகளை முடிச்சிட்டு 11 மணிக்கு அங்கெ போனப்ப முக்கால்வாசி வேலை முடிஞ்சிடுச்சு! எப்ப முடிப்பீங்கன்னு கேட்டதுக்கு
பகல் 2 இல்லேன்னா ரெண்டரை ஆயிரும்ன்னு சொன்னாங்க. பாக்கியாகும் பெரிய துண்டு கார்பெட்ங்களை வச்சிட்டுப் போங்க. மிதியடி செய்யணும்ன்னு சொல்லிட்டு வந்தேன்.
12.45 க்கு இவர் ஃபோன் செஞ்சு சொல்றாரு அவுங்க கார்ப்பெட் போட்டு முடிச்சிட்டாங்களாம்! நாலரை மணி நேரத்துலே முடிச்சிட்டாங்க!
அஞ்சுபேர் வந்திருந்தாங்களே! அதனாலே சீக்கிரம் முடிஞ்சிட்டிருக்கு! தடுப்புகள் இல்லாம ஓப்பனா நிறைய இடம் இருக்குல்லையா. ஒரேதா இழுத்துப் போட சுலபமா இருந்துச்சாம்.
அஞ்சுபேர் வந்திருந்தாங்களே! அதனாலே சீக்கிரம் முடிஞ்சிட்டிருக்கு! தடுப்புகள் இல்லாம ஓப்பனா நிறைய இடம் இருக்குல்லையா. ஒரேதா இழுத்துப் போட சுலபமா இருந்துச்சாம்.
சாயந்திரம் ஒரு ஆறேமுக்காலுக்குப் போய், தெர்மல் கர்ட்டெயின் போட்டோம். சாமி ரூமுக்கு ஒரு மறைவா அந்த 3.2 மீட்டர் அகலத்துக்கு லேஸ் கர்ட்டெயின் ராடும் ஃபிக்ஸ் செஞ்சிட்டு அந்த கர்ட்டெயினையும் போட்டோம்.
இது ஒரு பெரிய வெட்டிமுறிக்கற வேலை இல்லேன்னாலும் ரொம்ப 'நொச்சு' பிடிச்ச வேலை! ஹூக் மாட்டி, கயிறை இழுத்துக் கட்டி,
ராடுலே இருக்கற ஹூக்கோட சேர்த்து மாட்டணும். அந்த ஹூக்குக்கும், துணியிலே இருக்கற ஹூக்குக்கும் இடைவெளி சரிசமமா இருக்கணும்.
அதுக்காக இது எத்தனை, அது எத்தனைன்னு எண்ணணும். ங்கொய் ங்கொய்''ன்னு வேலை!
ராடுலே இருக்கற ஹூக்கோட சேர்த்து மாட்டணும். அந்த ஹூக்குக்கும், துணியிலே இருக்கற ஹூக்குக்கும் இடைவெளி சரிசமமா இருக்கணும்.
அதுக்காக இது எத்தனை, அது எத்தனைன்னு எண்ணணும். ங்கொய் ங்கொய்''ன்னு வேலை!
ச்சும்மா ஃபார்மல் லவுஞ்சில் மட்டும் போட்டு முடிச்சோம். லைட்டெல்லாம் போட்டுட்டு வெளியேபோய்ப் பார்த்தால் ஒண்ணும் தெரியலை! இவருக்கு
ரொம்பவே திருப்தியா இருக்கு!
ரொம்பவே திருப்தியா இருக்கு!
சின்ன அலங்காரப் பொருள்கள் சிலதைக் கொண்டுபோய் வச்சோம். இதுக்கே ராத்திரி 9 மணி ஆயிருச்சு!
தொடரும்.................
12 comments:
வீடு ஒரு மாதிரி செட் ஆகிக்கிட்டு வருதுங்க. சூப்பரா இருக்கு.
(இதுக்கு மட்டும் நான் நினைச்ச பதில் போடுங்க. நீங்க பெரிய ஆள்தான்! இல்லைனாலும் பெரிய ஆள்தான். ஹிஹி)
வாங்க கொத்ஸ்.
என்னதான் டீச்சர்ன்னாலும் இன்னொருத்தர் நினைக்கறதை எப்படித் தெரிஞ்சுக்க முடியும்?
ஒரு ஊகம் இதோ:
" அப்பாடா...ஒருவழியா செட் ஆகிக்கிட்டு வருது. சீக்கிரமெ முடிஞ்சுரும். தப்பிச்சுரலாம்:-))))"
இப்போ நீங்கதான் சொல்லணும் 'பெரிய ஆள்' யாருன்னு?
:-)))))
டீச்சர், நான் நினைத்த பதில் இது
//வீடு ஒரு மாதிரி செட் ஆகிக்கிட்டு வருதுங்க. சூப்பரா இருக்கு.//
கொத்ஸ், இம்புட்டு கஷ்டப்பட்டு வீடு கட்டினா அதைப் போயி செட் ஆகுதுன்னு சொல்லறீங்களே. இது செட் எல்லாம் இல்லீங்க. உண்மையில் நாங்க கட்டின வீடு. வேணா எங்க இவரை வேணாம் கோகியை வேணா கேட்டுப் பாருங்க! :))
இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!! :)))
கார்ப்பெட்- இதிலும் ஒரு சந்தேகம்.
கதவு திறக்கும் இடங்களில் என்ன செய்தார்கள்?கதவு (உயரம்)அதற்கேற்றார் போல் குறைவாக இருக்குமா?
இ.கொத்தனார் கேள்விக்கு பதில் அருமை.
கொத்ஸ்,
டீச்சரை ஃபெயில் ஆக்குனதுக்குக் கருட புராணத்தில் என்ன தண்டனைன்னு பார்க்கணும்:-)))))
வாங்க குமார்.
கதவுகளையெல்லாம் கழட்டி எடுத்துட்டுத்தான் கார்பெட் போடராங்க.
நல்லா ஸ்ட்ரெச் செஞ்சு அந்த ஆணியடிச்சச் சட்டங்களில் பொருத்திட்டுக் கதவைத் திரும்பவும் வைக்கிறாங்க.
முதலில் ஒண்ணுரெண்டுதடவை கதவு திறக்க மூடக் கொஞ்சம் லேசா டைட் ஆச்சு. அதுக்கப்புறம் நல்லா சுலபமாவே திறக்க முடியுது.
\\அப்பாடா...ஒருவழியா செட் ஆகிக்கிட்டு வருது. சீக்கிரமெ முடிஞ்சுரும். தப்பிச்சுரலாம்:-))))"
\\
சொந்த செலவுல சூன்யமா
ம்... க்ளாஸ் முடியப்போதுன்னாலும் அடுத்த க்ளாஸ் ல என்ன பாடமா இருக்கும்ன்னு ஆர்வமா வரும் வகுப்புப்பிள்ளைங்களை இப்படி சொல்லலாமா?
ஜிகேக்கு ப்அடுத்துப் புரளுற மாதிரீசௌகரியமமிருந்த்தா அது நல்லகார்பெட்:))
கர்டனெல்லாம் நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் வெளீச்சம் (போட்டோ) இருந்தாத் தெளிவாத் தெரியும்.
நல்ல அதை நல்ல மருமான்.
நேத்திக்கு அத்தைன்னாரு.
இன்னிக்கு டீச்சருங்கறாரே:)))
வாங்க ச்சின்ன அம்மிணி.
சொ.செ.சூ:-))))
வேற வழி? :-))))
வாங்க முத்துலெட்சுமி.
//அடுத்த க்ளாஸ் ல என்ன பாடமா இருக்கும்ன்னு ஆர்வமா வரும் வகுப்புப்பிள்ளைங்களை //
என்ன தவம் செய்தேன்...இப்படி அபூர்வ மாணாக்கர்களை அடைய!!!!!
வாங்க வல்லி.
வீட்டுலே கார்பெட் மட்டுமா? எல்லாத்துக்கும் 'அதிபதி' ஜிகே சார்தான்:-)))
வெளிச்சம் பத்தலையில்லெ? (-:
கரும்பச்சையில் இளம்பச்சை வளையங்கள். ஒருவிதமான மவோரி டிஸைனாட்டம் இருக்கு.
Post a Comment