16/12
இவரு மட்டும் காலையிலெ எட்டரைக்குப் போய் என்ன நடக்குது? யாராவது வேலை செய்ய வந்திருக்காங்களான்னு பார்க்கப் போனார்.
யாரும் வரலையாம்! அப்புறம் ஜான் ராபின்சன் வேற ஒரு விஷயம் பேச வந்தார். அதுக்கப்புறம் போனோம். உள்ளே
பாத் ரூம்களை இன்னொருக்க அளந்துக்கிட்டோம். அப்பத்தான் பாக்கறோம், ஜன்னல் பாதி பாக்கி இருந்ததை வந்து சரி செஞ்சிட்டுப் போயிருக்காங்க!
கதவு பூட்டுனது பூட்டியபடி! அலாரம் வேற 'ஆன்' லே இருக்கு! மாயாஜாலம்?!
போற போக்குலேயே 'ட்ரெண்டி மிர்ரர்' கடைக்குப் போய் 'டான்' என்றவரைப் பார்த்தோம். அவர்தான் நம்ம வீட்டுக்குப் போடற கண்ணாடிங்க
அளவை வந்து எடுத்துக்கிட்டுப் போனவர். ரெண்டு வேனிடி ஹீட்டட் மிர்ரர் ,ரெண்டு ஃபோயர் மாடம், ஹால் டேபிளுக்கு மேலே ஆர்ச் மாதிரி வர்றது, புடவைக்குன்னு ஒரு பிரமாண்டம்ன்னு
கண்ணாடிங்க வேணும். கடை ஒனரும் இருந்தாரு. கொஞ்சம் பார்கெயின் செஞ்சு 1300க்கு முடிவாச்சு. ஆர்டர் கொடுத்துட்டு வந்தோம். ஜனவரி 10-14
வாரம் போட முயற்சிக்கிறேன்னு சொன்னார்.
நேத்து உடைஞ்சுபோன 'ஷாண்டிலியர்' கண்ணாடிக்குழாய் வாங்க லைட்டிங் கடைக்குப் போனோம். குழலில் மூணு பாகம் உள்ளது அங்கெ இருக்கு. ஆனா
நமக்கு வேணுங்கறது 2 பாகம் ( 2 துண்டாத் தெரியுற ஒரே குழாய்) அதுக்கு ஆர்டர் கொடுக்கணுமாம்! இது ஏதுடா வம்பாப் போச்சேன்னு
இருந்தது. இந்த மூணு துண்டு இருக்கே அதுவும் அந்த ரெண்டு துண்டும் ஒரே நீளம்தான். அது எவ்வளவுன்னு கேட்டதுக்கு, ச்சும்மாத் தரேன்னு
அந்தப் பையன் சொன்னாரு. 18லே ஒண்ணு, ரெண்டுக்கு மூணா இருந்தா யாரு பாக்கப்போறா? 'இலவசம்' வேற. சரி அதையே கொடுங்கன்னு
சொன்னேன். அப்ப ரெண்டு இருக்கு, ஒண்ணு கிறிஸ்டலோட ( எல்லாம் ப்ளாஸ்டிக் குண்டுதான்!) இருக்கு. ரெண்டையும் கொண்டுபோங்கன்னு
கொடுத்துட்டாரு. நல்லதுன்னு வாங்கிகிட்டு வந்துட்டோம்! கேரி இன்னொண்ணை உடைச்சாலும் இப்பக் கவலை இல்லை:-)
( கேரி : நம்ம எலெக்ட்ரீஷியன்)
கிச்சன் டைல்ஸ்க்கு இன்செட் வேணுமே. அதுக்காக ரெண்டுமூணு இடத்துலே பார்த்துட்டு, ப்ரிஸ்கோவுக்குப் பக்கத்திலெ ( கடை பேரு ' ப்ரைமேக்'?)
ஒரு கடையிலே இருந்த 5 டைல்ஸ்ஸையும் 40 டாலருக்கு வாங்கிகிட்டு, அப்படியே கிங்குக்குப் போன் போட்டுச் சொல்லிட்டோம். அவரும் வந்து
வாங்கிக்கிட்டுப் போயிட்டாரு. மொசைக். இந்திய டிஸைன் போல இருக்கு
அதுக்கப்புறம் வீட்டுலே கொஞ்சம் சமையலை முடிச்சிட்டு, நான் எங்க லைப்ரரி கிறிஸ்மஸ் லஞ்சுக்குப் போனேன். அப்புறம் மறுபடி டைல்ஸ் வேட்டை!
இப்ப காலையிலே போன 'மைல்ஸ் ஆஃப் டைல்ஸ்'க்கே போனோம். அங்கெயே ஏதோ ஒண்ணைத் தெரிந்தெடுத்துட்டு, காசையும் கட்டிட்டு
வந்துட்டோம்.மாறிமாறிப் பார்த்துப்பார்த்துச் சீன்னு போச்சு!
இப்ப கிங்குக்கு எவ்வளவு தூரம் டைல்ஸ் டைனிங் இடத்துக்கு வருதுன்னு தெரியணுமாம்!
இதோன்னு போய் மார்க் செஞ்சிட்டு வந்தோம். நாளைக்கு இவர் ஊருக்குப் போறார். இந்தமுறை என்னவோ கொஞ்சம் கவலையாவே இருக்கு!
18/12
இன்னைக்கு(ம்) அங்கெ போனோம். ஆனா உள்ளெ போகலை. இவருக்கு ஊருக்குக் கிளம்பற நேரம் ஆயிடுச்சுன்னு வந்துட்டோம். ச்சும்மா வெளியே இருந்தே ஒரு பார்வை.
19/12
மத்தியானம் 1.15க்கு கிங் ஃபோன்லே கூப்பிட்டு அங்கே 1.30க்குப் போறதாச் சொன்னார். நான் போய் கதவைத் திறந்து அலாரத்தை
நிறுத்தினேன். கிங்கும் போவும் எல்லாம் சுத்தம் செஞ்சுகிட்டு இருந்தாங்க.நான் வேலை முடிஞ்சவுடன் கூப்பிடச் சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
அப்புறம் ஒரு அஞ்சுமணி ஆகறப்ப அந்தப் பையன் போ வந்து சொன்னார்.
நான் போனா, எல்லா கப்போர்டும் சுத்தமா இருந்தது. கீழே டைல்ஸ் போட தரையிலே மார்க் செஞ்சு வச்சிருந்தாங்க.அப்புறம் அலாரம்
ஆன் செஞ்சுட்டுக் கதவைப் பூட்டிட்டு வந்துட்டேன்.
ராத்திரி மச்சினரோட ஃபோன். அவரோட மாமனார் இறந்துட்டாராம். கோபால் ஃபோன் பண்ணாச் சொல்லணும். நாளைக்குக் கட்டாயம்
ஊருக்கு ஃபோன் செய்யணும். இப்ப எல்லாரும் கிளம்பி ஊருக்குப் போய்க்கிட்டு இருப்பாங்க.
20/12
காலையிலே சோம்பலா இருந்தது. எழுந்திரிக்கலாமா, இன்னும் கொஞ்சம் படுக்கலாமான்னு நினைக்கிறப்ப ஃபோன்.. பில்டர் வேலை செய்ய
வராராம். கதவைத் திறக்கணுமாம். 10 நிமிசத்துலே வரேன்னுட்டு ஓடுனேன். என்னென்ன செய்யச் சொல்லணும்ன்னு கோபால் எழுதிவச்சுட்டுப்
போயிருக்கார். அதையெல்லாம் சொன்னேன். டோர் ஸ்டாப்பர் வேணுமாம். ஏற்கனவே வாங்கி அங்கே வச்சிருந்ததைக் காமிச்சேன்.
அப்ப 'லாயிட்' ஃபோன்லே கூப்பிட்டு ஹீட் பம்ப் போட ஆளு வருது. கதவைத் திறக்கணும்ன்னு சொன்னார். நான் பில்டர் வந்திருக்காரு.
கதவு திறந்துதான் இருக்குன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து இந்தப் பசங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு, குளிச்சு சாமி கும்பிட்டு, சாப்பிட்டுட்டு
பத்தரைக்கு அங்கெ போனேன். எட்டரைக்கு 'வார்ம் அப்' கம்பெனி மார்க் கீகனுக்கு ஃபோன் போட்டு 'ஹீட்டிங் ஒயர் அண்டர் டைல்ஸ்'க்குப் போட எப்ப ஆளு வருதுன்னு கேட்டதுக்கு அவர் பத்தரைக்குன்னு சொன்னார்.
அடுக்களையிலும், ரெண்டு குளியலறைகளிலும் டைல்ஸ் போடறோமில்லையா,அங்கே குளிர்காலத்துலே நிக்கவே முடியாது. நமக்கோ வீட்டுக்குள்ளே செருப்போடு இருக்கும் பழக்கமும் இல்லை. அதனாலே அங்கெல்லாம் தரையைச் சூடாக்கி வைக்கறதுக்காக டைல்ஸ்க்கு கீழே
ஹீட்டிங் ஒயர் பதிப்பிக்கிறாங்க. தனித்தனிக் கண்ட்ரோல் ஸ்விட்ச் இருக்கு.
நமக்கு வேணுங்கற சூட்டுக்கு செட் பண்ணிக்கலாம். டைமர் இருக்கு. இன்னும் அதுக்குள்ளே சில ப்ரோக்ராம்கூட இருக்கு. எலெக்ட்ரிக் ப்ளாங்கெட்லே இருக்கறது போலத்தான் இந்த ஹிட்டிங் ஒயர் இருக்கு.
குளியலறையில் இருக்கும் கண்ணாடி, நீராவி படிஞ்சு புகைமூட்டமா இருந்தா என்ன பயன்? அதுக்காக அந்தக் கண்ணாடிகளுக்குப் பின்புறம் வலை மாதிரி இருக்கும் ஒயர்களை ஒட்டுறாங்க. அது சூடாகும்போது, நீராவி படிஞ்சாலும் கண்ணாடி பளிச்சுன்னு தெரியும். இந்த வேலையை நமக்குக் கண்ணாடி சப்ளை செய்யறவங்க முடிச்சுருவாங்க.
அங்கே ஒரு பையன் பேரு 'ஜோஷுவா' வந்து வேலை செய்ய ஆரம்பிச்சார். கிச்சனை அளந்துட்டு, அவுங்க 'க்வோட்' சின்ன இடத்துக்குத்தான்
கொடுத்தாங்களாம். இப்ப இடம் பெருசா இருக்காம். அதனாலெ இன்னும் கூட காசு ஆகும். என்ன சொல்றிங்கன்னார். எவ்வளவு ஆகும்ன்னா இன்னும்
50 டாலர் கூடவாம். இவர் ஊர்லே இல்லே. நீங்க வேலையைச் செய்யுங்க. அப்புறம் செட்டில் செய்யலாம்ன்னு சொன்னேன். எவ்வளவு
நேரம் ஆகும்ன்னா ஒரு மணி ஆகுமாம். ப்ளானைப் பார்த்துட்டுத்தானே க்வோட் செஞ்சாங்க. இப்ப இப்படி........................
நம்ம ஆன்ட்ரூ வந்து வெளியே ஹீட் பம்ப்புக்கு மெஷின் வச்சிகிட்டு இருக்காரு. லிவிங் ஏரியாவுக்குப் போட்டது ரொம்பப் பெருசு.
அதோட மெஷினே 'பூதம்' போல இருக்கு. பாத் ரூம் ஜன்னலுக்குக் கீழே வையுங்க. பக்கத்திலே படுக்கை அறை இருக்கு. அந்த
ஜன்னலை ஒட்டி வைக்க வேணாம்ன்னு சொன்னேன். லவுஞ்சுக்கானச் சின்ன மெஷீனை அடுக்களைப் பக்கமா வச்சாங்க.
பில்டர், கதவுப் பூட்டுக்குப் போடற ஒரு ப்ளேட் தப்பா இருக்கு. அதை மாத்தணும்ன்னு சொன்னார். அதை வாங்கிக்கிட்டு போற வழியிலேயே
ரமண் பையா, எலிநோர், ஃபர்ஸ்ட் வீட்டுப் பாட்டி இவுங்களுக்கு கிறிஸ்மஸ் கார்டை அவுங்கவுங்க வீட்டு மெயில் பாக்ஸ்லே போட்டுட்டு (ஸ்டாம்ப் செலவை மிச்சம் பண்ணறேனாம். பெர்சனல் டெலிவரி )
நாப்ஸ் அண்ட் நாக்கர்ஸ் போய் அந்த ப்ளேட்டை மாத்திக்கிட்டு, பில்டர்கிட்டே கொண்டுபோய் கொடுத்தேன்.
அப்ப நம்ம 'ப்ரிஜெட் டெய்லர்' அங்கே வந்தாங்க. என்னன்னா, அந்தப் பக்கம் வந்தேன் அப்படியெ உங்க வீட்டைப் பார்க்கலாம்ன்னு இங்கே வந்தேன்னு சொன்னாங்க. இவுங்க இந்த ஏரியாவிலே பேர்போன ரியல் எஸ்டேட் ஏஜெண்ட். வீட்டை விக்கணுமுன்னா எங்கிட்டே சொல்லுன்னு எப்பப் பார்த்தாலும் சொல்வாங்க. இங்கெ இருந்து வேற இடம் போனாத்தானே?.
இருக்கற விட்டை வித்துட்டு நான் எங்கே போவேன். நல்ல காலம் வந்தாச் சொல்றேன்னு சொல்லிக்கிட்டு இருப்பேன்.
உள்ளே கூட்டிட்டுப் போய் காமிச்சேன். அவ்வளவுதான். நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு வேணும் இந்த வீடுன்னு
சொன்னாங்க. நான் உடனே இந்த வீட்டை வித்தா எவ்வளவு வரும்னு கேட்டேன். 450. அதெப்படி அதுக்கு மேலே ரொம்ப செலவாயிடுச்சேன்னு
சொன்னேன். நிறைய காசுக்கு விக்கலாம். மில்லியன் டாலர்கூடப் போகும் அப்படின்னாங்க. இந்த ஏரியவுலே மில்லியன் டாலர் வீடு
யாரு வாங்குவாங்கன்னேன். எல்லாம் ஆளு இருக்குன்னு சொல்லிட்டு, வீடு நல்லா இருக்குன்னு சொல்லிச் சொல்லி மாஞ்சு போனாங்க.
கண்ணேறு கழிக்கணும்!
அப்புறம் போறப்ப, 'இங்கே குடிவந்த பிறகு அந்தப் பழைய வீட்டை நான் நல்ல விலைக்கு வித்துத் தரேன்'னாங்க. அப்பப் பார்க்கலாம்.
நானும் கடைக்குப் போய் இந்தப் பசங்களுக்குச் சாப்பாடு வாங்கிகிட்டு இருக்கறப்ப இவர் ச்சீனாலெ இருந்து கூப்பிட்டார். விஷயம் சொன்னேன்.
வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு மூணரைக்குப் போனேன். இவர் எழுதிக்கொடுத்த 'ஒர்க் ஆர்டர் நோட்' எங்கியோ வச்சுட்டேன். இப்பக் காணோம்.
அதை தேடிக்கிட்டே நேரம் போயிருச்சு. நாலு மணிக்கு பில்டர் வேலையை நிறுத்தியாச்சு. நாளைக்கு காலையிலே ஏழரைக்கு வராராம்.
டவுன் பைப் பத்திக் கேட்டேன். இவருக்கு டைம் இல்லையாம் வேற ஆளு வருமாம். வெள்ளைக்கலர் பி.வி.சி. போடுங்க. நாம கலர்
அடிச்சுக்கலாம்ன்னு சொன்னேன்.
தொடரும்...............
16 comments:
இம்புட்டுக் கஷ்டத்துக்கு அப்புறம் ஒரு வழியா முடியற நேரம் நெருங்குதுன்னு நினைக்கிறேன். எங்களுக்கே ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு!!
குளிருன்னா இதெல்லாம் தேவைதான். இங்கயும் குளிரத் தொடங்கீருச்சு. ரூமுரூமுக்கு ஹீட்டர்தான். இப்பயே கிடுகிடுங்குது. போகப் போக எப்படியிருக்குமோ.
போ னு ஒருபையன் பையன் பேரு, அவர் சொன்னதும் போனிங்களா:))
கண்ணாடி ஸ்டீம் ஆச்சுன்னா நான் அதில கோலம் போட்டுடுவேன்.:))
இப்படி ஒரு வழி இருக்கா.
என்ன செயல்பாடும்மா. அற்புதமா இருக்கு. நீங்க எழுதறதனாலதான் இப்படி வழிமுறை இருக்குனு தெரியறது.
tiles நல்லா இருக்குங்க..
கேரி- பல ஆயுதங்களை தொங்கவிட்டுக்கொண்டு திரிகிறார்-காளி கையில் உள்ளது போல்.:-)
பாத்ரூம் தரை & கண்ணாடிக்கும் ஹீட்டரா?
புதிய தகவல்.
வாங்க கொத்ஸ்.
//ஒரு வழியா முடியற நேரம் நெருங்குதுன்னு ...//
பதிவைச் சொல்றீங்களா? அப்படியெல்லாம் அல்ப சந்தோஷம் அடையவேணாம்:-)))))
ஃபிக்ஷனா இருந்தா நம்ம இஷ்டத்துக்குச் சுருக்கிறலாம். இது 'நான்'ஃபிக்ஷனாச்சே.
நடந்ததை நடந்தபடிச் சொல்லும்போது கொஞ்சம் இழுவையாத்தான் இருக்கும்.
நீங்களே கொத்தனார். புரிஞ்சுக்குவீங்கதானே?:-))))
வாங்க ராகவன்.
குளிருன்னாவே கொஞ்சம் பேஜார்தாங்க. வெய்யில்ன்னா,ஸ்...ஸ்...ன்னுக்கிட்டே வேலையைப் பார்த்துக்கலாம். குளிர் அப்படியெ ஆளை முடக்கிப் போட்டுருதே.
குளிர்காலம் வந்தவுடனெ anti-social ஆகிருவோம். ரொம்பத் தவிர்க்க முடியலன்னாத் தவிர யார் வீட்டுக்கும் விசிட் கூடக் கிடையாது.
ஆனா உண்மையிலே குளிர்காலம் ரசிக்ககூடியதாம். இங்கே மக்கள்ஸ் சொல்றது. ஸ்கீ போறவங்களுக்கு ஜாலி. நமக்கு?
வாங்க வல்லி.
அவர் ச்சீனாக்காரர். அங்கெ ஒரு நதியின் பெயர் போ Po. நாம் கங்கா, நர்மதான்னு பேர் வச்சுக்கறதுபோல அவுங்களும் வச்சுருக்காங்க:-)))
நான் வாசலிலேயே கோலம் போடலை.கண்ணாடியில் போட்டுருவேனா?
வாசலுக்கு ஸ்டிக்கர் கோலம்தான்:-)
வாங்க இளா. ரொம்ப நாளைக்கப்புறம் வந்துருக்கீங்க!!!
டைல்ஸ் நல்லா இருக்குன்னது சந்தோஷமா இருக்கு.
வாங்க குமார்.
அவசரமா ஸ்க்ரூ ட்ரைவர், இன்னபிற சாமான்கள் வேணுமுன்னா யார் எடுத்துக்குடுப்பா? காளிக்காவது எட்டு கை இருக்கு. சமாளிக்கலாம்.அதான்
பெல்ட்லே வச்சுக்கறது.
அண்ணன் மருமகனுக்கு அந்த பெல்ட் மேலே ஒரு கண். டூ இட் யுவர்செல்ஃப் ன்னு இருக்கும்போது வாங்குனா என்ன தப்புன்னு கேக்கறார்.
இங்கெயும் ஃபாதர்ஸ் டே பரிசு ஐட்டங்களில் இது கட்டாயம் இருக்கும்:-)))))
லேபில் மாத்தி வையுங்க டீச்சர். "/" போட்ட பின்னாடி tag பண்ணும் போது கஷ்டமா இருக்கும், சுலபமாவும் இருக்காது. லேபில் ஆங்கிலத்துல வைக்கிறது உசிதம்
ஏங்க இளா, அப்ப தமிழுக்கு சேவை பண்ணவேணாங்கறிங்களா? :-))))
ஆங்கிலத்துலெ வச்சுட்டாப் போச்சு.
வாசகர் வட்டம் மட்டும் பெருகாம இருக்கட்டும், அப்பப் பேசிக்கிறேன்:-))))
குளியலறைகளிலும் ஹீட்டிங் வயரா? நீர் இறங்கி மின் கசிவு ஏற்பட வாய்ப்பில்லையா?
வாங்க பாபு மனோகர்.
குளியலறையில் ஷவருக்கு நேரே கீழேயும், ஷவர் க்யூபிகிள் வச்சா அதுக்குக் கீழேயும் ஒயர்கள் போடறதில்லை. அதை விட்டுட்டு மத்த இடங்களில் ஒரு வாட்டர் ப்ரூஃப் லைனிங் வருது. அப்புறம் இந்த
ஒயர்களை இணைச்சு ஒரு ரெஸிட்யூவல் கரண்ட் டிவைஸ்(RCD)ஸ்விட்ச் இருக்கு. எதாவது ஆபத்துன்னா தானே நின்னுருமாம்.
அதனால் பயமில்லை.
இந்த விவரம் கோபால் சொன்னார்
சின்ன வயசிலே பாத்ரூம்லே வெந்நித் தண்ணிலே குளிச்சா, கண்ணாடிலே ஆவி படியும். வரச்சே பேரெ அதுலெ கிறுக்கிட்டு வருவேன் கை விரலாலே ! அது ரொம்ப நல்லா இருக்கும்.
வாங்க சீனா.
//சின்ன வயசிலே பாத்ரூம்லே வெந்நித் தண்ணிலே குளிச்சா, கண்ணாடிலே ஆவி படியும். வரச்சே பேரெ அதுலெ கிறுக்கிட்டு வருவேன் கை விரலாலே ! அது ரொம்ப நல்லா இருக்கும்.//
அதை இப்பவும் செய்யலாம்:-))))) நமக்குத்தான் இப்ப எதுக்கும் நேரம் இல்லை.
வயசாக ஆக ரசிப்புத்தன்மையும் மாறிப்போகுதே(-:
Post a Comment