28/1
கண்ணாடிக்கடை 'டான்' ஃபோன் செஞ்சு, இன்னைக்கு மத்தியானம் கண்ணாடி வராது. அதைச் சரி செய்யறப்ப உடைஞ்சிடுச்சு! வேற ஒண்ணு செஞ்சு,
கண்ணாடிக்கடை 'டான்' ஃபோன் செஞ்சு, இன்னைக்கு மத்தியானம் கண்ணாடி வராது. அதைச் சரி செய்யறப்ப உடைஞ்சிடுச்சு! வேற ஒண்ணு செஞ்சு,
செவ்வாய்க்கிழமை போடறேன்''னு சொல்லிட்டார். சரி. ஆவுறது ஆவட்டும்! அதான் மத்த ரெண்டு படுக்கை அறைகளின் வார்ட்ரோப்
ஸ்லைடிங் கதவுகளில் ரெண்டு மீட்டர் உயரக் கண்ணாடி போட்டுருக்கே. அதுலே பார்த்துக்கிட்டா ஆகாதா?
ஸ்லைடிங் கதவுகளில் ரெண்டு மீட்டர் உயரக் கண்ணாடி போட்டுருக்கே. அதுலே பார்த்துக்கிட்டா ஆகாதா?
சோஃபா இன்னைக்கு டெலிவரி செய்யறாங்க. ஆனா எப்பன்னு தெரியாது. ஃபோன் செஞ்சு விவரம் கேட்டிருக்கேன்.
மத்தியானமா 1 மணிக்கு மறுபடி ஃபோன் செஞ்சுகேட்டா, அவுங்க இப்பத்தான் டெலிவரி வண்டியிலே ஏத்திக்கிட்டு இருக்காங்களாம்!
நமக்கு ஃபோன் செய்யணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கறப்ப நாமே ஃபோன்லே கூப்பிட்டுட்டோமாம்! அடாடாடா......
நானும் இவருமா உடனெ அங்கே போனோம். சோஃபா வந்துருச்சு! பூதம் மாதிரி இருக்கு! எல்லா இடத்தையும் இது ஒண்ணே அடைச்சிடுச்சு! வீடு ரொம்பச் சின்னதாத் தெரியுது:-) அஞ்சு இருக்கையில் நாலு இருக்கையை
ரெக்ளைனராப் பண்ணிக்கலாம். கோபால் ரொம்ப நாளாக் கேட்டுக்கிட்டு
இருந்தாரேன்னு வாங்கிப்போட்டாச்சு.
அப்புறம் 2.30க்கு மோஷீன் வராராம்!அங்கே 2.25க்குப் போனேன். அவர் ஸ்பாவோட டைல்ஸ் ஃபிக்ஸ் செஞ்சுட்டார். அவசியம்னா
எப்படித் திறக்கணும்ன்னும் சொன்னார். ஒரு ச்சின்ன ஜன்னல் போல இருக்கு. அந்த டைலை நெம்பித் திறந்தா உள்ளெ இருக்கும் பம்ப், மோட்டாரில் ரிப்பேர் செஞ்சுக்கலாமாம். அப்படியே அந்தக் கட்டைச் சுவர்லே கூர்மையா இருந்த ட்ரிம் மெட்டல் ஃப்ரேமை இழைச்சுக் கொடுத்தார். இல்லைன்னா ஆபத்தாச்சே! கையை வெட்டிருமே!
நான் கொஞ்சநேரம் அங்கெயே இருந்து மத்த ரெண்டு படுக்கை அறைக் கர்ட்டெயினுக்கெல்லாம் ஹூக் போட்டேன். அப்பத்தான் கவனிக்கறேன்
ரெண்டு விதமானது வாங்கி வந்திருக்கோம். அவ்வளவு கவனம்...!!!!!! பார்க்கலாம். சாயந்திரம் இவர் வந்தபிறகு முடிஞ்சா அதுங்களைப் போட்டுறலாம்!
சாயந்திரம் மறுபடியும் போய் கர்ட்டெயின் போட்டுட்டு வந்தோம். மாஸ்டர் பெட் ரூமுக்குள்ளே இருக்கற குட்டி ஜன்னலுங்களுக்குத்
துணி வாங்கித்தான் தைக்கணும்! தெர்மல் பேக்கிங் இருக்கறதாலே கவனமாத்தான் தைக்கணும். ஊசிவேற சீக்கிரம் தேஞ்சிரும்(-: வீட்டுக்குள் இருக்கும் சூட்டை வெளியிடாமல் இருக்கத்தான் இந்த தெர்மல் துணி போடறது.
சாதாரண துணிகளில் நல்லபக்கத்தில் அழகான டிஸைன்கள் இருக்குல்லையா? அதுக்கு அடுத்த மறுபக்கத்தில் ரப்பர் கோட்டிங் ஒருவித அக்ரிலிக் இன்சுலேஷன் கொடுத்துருக்கும். டிஸைன் பக்கம் நமக்குத் தெரியும்படியாப் போட்டுக்கணும். வெளியே இருந்து பார்த்தால் எல்லா வீடுகளிலும் வெள்ளைத் திரைச்சீலையாத்தான் இருக்கும்:-)))
29/1
இன்னைக்கு இவர் சீனாவுக்குப் போறார். காலையிலே கோயிலுக்குப் போயிட்டு அப்படியே 'ஃபிட்ஸெரல்ட் அவென்யூ'லே
இருக்கற 'மில்லர்ஸ்'க்குப் போய் மேட்சிங் துணி வாங்கியாச்சு! வீட்டுக்கு வரும்போது அப்படியே அங்கெயும் போய் ஒரு பார்வை(யும்) பார்த்துட்டு வந்தாச்சு!
நாளைக்கு அங்கே சாவகாசமாப்போய் கொஞ்சம் சுத்தப்படுத்தணும்!
30/1
மத்தியானம் 1 மணிக்குக் கிளம்பினேன். அதுக்கு முன்னாலே மாஸ்டர் பெட்ரூமுக்குப் போட ரெண்டு சிங்கிள் கர்டெய்ன் தைச்சேன்.
கொஞ்சம் துணிங்க, நேத்து தேய்ச்சு வைச்ச பாத்திரம்ங்கன்னு எடுத்துக்கிட்டு அப்படியே நம்ம வேக்குவம் க்ளீனரையும் கொண்டு போனேன்.
சாமான்கள் எல்லாம் அடுக்கி வச்சிட்டு, வீடு முழுசும் வேக்குவம் க்ளீனரால் சுத்தம் செஞ்சு, ரெண்டு டாய்லெட்டையும் சுத்தம் செஞ்சேன்.
நம்ம பாத்ரூமை மோப் பண்ணிட்டு, துணிங்களை அடுக்கிட்டுக் கொஞ்சநேரம் படுத்திருந்தேன். புது லெதர் சோஃபா நல்லாதான் இருக்கு! முதுகு வலி கொல்லுது.
இன்னும் இவர்கிட்டே இருந்து ஃபோன் ஒண்ணும் வரலை! அதுவேற கவலையா இருக்கு!
சொல்லி(எழுதி)வாய் மூடலை. இதோ ஃபோன் பெல் அடிக்குது! இவர்தான். நல்லா இருக்காராம். மத்தியானம் கூப்பிடப்ப நான்
இல்லையாம்! அங்கெ போயிருந்தேன்னு சொன்னேன்.
31/1
11.10க்கு ஃபிஸியோ போயிட்டு வந்தேன். அப்புறம் ஈவ்லின் வந்தாங்க. சாப்பிட்டுட்டு, அங்கெ போனோம். ரெண்டு பாக்ஸ் துணிங்களும் கொண்டு போனோம்.
சாயந்திரம் 7 மணிக்கு இந்தப் பசங்களுக்கு 'கேட் ஃபுட்' வாங்கக் 'கவுண்ட் டவுன்'போனேன். அப்போ இன்னும் 3 அட்டைப்பெட்டிகளைக் கொண்டுவந்தேன்.
இங்கெ சூப்பர் மார்கெட்டுகளில் சாமான்கள் வரும் கார்ட்டன்களை ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள். அதில் நல்ல தரமானதாப் பார்த்து எடுத்துக்கிட்டு வந்தால் நமக்கு ஸ்டோரேஜ்க்கு ஆச்சு. எல்லாம் இலவசம்தான்.அவுங்களுக்கு அது வேஸ்ட்.கழிச்சுக்கட்டணும். நமக்கு அது தேவை. அது நிறையத் துணிங்களைக் கொண்டு போனேன். என் பக்கத்து வார்டுரோப்(311) க்ளியர் செஞ்சாச்சு! அங்கே எல்லாத்தையும் என் பக்கமா(???) அடுக்கி வச்சிட்டு வந்தேன். மொத்தம் கட்டம்கட்டமா 22 ஷெல்ஃப் இருக்கு. அதுலெ ஒரு அஞ்சு இல்லெ ஆறு கோபாலுக்குக் கொடுத்துரணும். பாவம்......
நாளைக்கு இன்னும் கொஞ்சம் கொண்டு போகணும்! இனி தினமும் இந்த வேலைதான்.
1/2
இன்னைக்கும் கொஞ்சம் சாமான்கள் கொண்டு போனேன். மகளோட, என்னோட சல்வார் கமீஸ் எல்லாம் கொண்டு போய் அடுக்கினேன்.
அப்படியே நம்ம மூணாவது ரூம் மரக் கப்போர்டுலே இருக்கற புடவைங்க, ப்ளவுஸ் எல்லாம் கொண்டுபோய் அடுக்கிட்டு வந்தேன்.
2/2
இன்னைக்கு புக்ஸ், மத்த சாமான்கள் கொஞ்சம் கொண்டு போனேன். மகள் இன்னைக்கு சாப்பிடவர்ற நாளாச்சே! ஆலனும், மகளும் வந்துருந்தாங்க. அப்புறம் அவுங்க உதவறேன்னு சொன்னதாலே பட்டுப் புடவை பீரோவை
எடுத்துக்கிட்டுப் போனோம். அங்கெ வச்சு எல்லாப் புடவைங்களையும் அடுக்கி வச்சாச்சு!
அவளுக்கு இப்ப அந்த வீடு, அந்த சோஃபா எல்லாம் ரொம்பவே பிடிச்சுருக்காம்! தினமும் வருவாளாம்!!!!!!!
இவர் அங்கே ஃபோன் செஞ்சார். நல்லா இருக்காராம். பின்னே? சுதந்திரம்:-))))
3/2
இன்னைக்கு மத்தியானமாத்தான் போனேன். கண்ணாடி போடறதுக்கு வரேன்னு சொல்லியிருக்காரு 'டான்' பகல் 1.30க்கு!
கண்ணாடி போட்டாச்சு.அப்புறம் வாஷ் பேஸின் மேலே ( முந்தி வச்சது, லூஸ் ஆகி கீழே விழுந்துருக்கு. நல்லவேளை உடையலை. கீழே கார்பெட்
மெத்துமெத்துன்னு இருக்கே ) ப்ளேன் கண்ணாடியும் சரியா வச்சுக் கொடுத்திட்டுப் போனார்.
நான் அங்கிருந்து ஃப்ரெஷ்சாய்ஸ் போய் கொஞ்சம் சாமான்கள் வாங்கிக்கிட்டு வந்தேன். 3.30க்கு எலிநோர் வந்தாங்க! அவுங்களுக்கு
ரொம்பவே பிடிச்சுப் போச்சாம். கொஞ்சம்(!) பொறாமையாவும் இருக்காம்!
கொஞ்சம் கொஞ்சமா சாமான்கள் கொண்டு போய்க்கிட்டு இருக்கேன்!
சாயந்திரம் கிங் ஃபோன்லே மெஸ்சேஜ் விட்டிருந்தாரு. என்னன்னு கேட்டேன். அவர் அமெரிக்காவிலிருந்து வந்து 2 நாள் ஆச்சாம்.
வாஷ்பேஸின் முன்னுக்கு பலகை அடிக்க அளவு எடுக்கணுமாம். நாளைக்கு சாயந்திரம் 8 மணிக்கு வரேன்னார். அவரோட அண்ணன்
எப்படி இருக்கார்னு கேட்டதுக்கு பதில் வந்தது, 'அவர் இறந்துட்டாராம்' அடப்பாவமே(-:.
அப்புறம் லக்ஸ் டோனி ஃபோன் செஞ்சார், எப்ப 'டெமோ' காமிக்கறதுன்னு கேட்டு? நாளைக்குக் காலை 9.30 மணின்னு சொல்லிட்டு
அப்படியே,அட்வான்ஸ் போக மீதி இருக்கறதுக்கு செக் கொண்டுவந்துருங்கன்னார். இந்த ஆளுங்களுக்கு பணம் ஒண்ணே குறி! நான் சொன்னேன், 'கோபால் ஊரிலே இல்லை. உடனே காசு வேணும்ன்னா
'டெமோ'வை அடுத்தவாரம் வச்சிக்கோ'ன்னு!
அதுக்கு, 'இல்லையில்லை, நாளைக்கே வரேன். கோபால்
வந்தபிறகு செக்கைக் கொடுங்கன்னு' சொன்னார்.
வந்தபிறகு செக்கைக் கொடுங்கன்னு' சொன்னார்.
இந்த 184$க்காக கட்டுன வீட்டை விட்டுட்டு ஓடிருவமா?
தொடரும்.................
தொடரும்.................
14 comments:
வீட்டுக்குள் இருக்கும் சூட்டை வெளியிடாமல் இருக்கத்தான் இந்த தெர்மல் துணி போடறது.
இங்கு தான் குழப்புது.
கண்ணாடி,சுவர் எல்லாவற்றிலும் சூடு வெளியில் போகாமல் இருக்க தேவையானது இருக்கும் போது இந்த Curtain க்கு அது தேவையா?
//அஞ்சு இருக்கையில் நாலு இருக்கையை
ரெக்ளைனராப் பண்ணிக்கலாம். //
இதுக்குத்தான் நான் இப்போ அடி போட்டுக்கிட்டு இருக்கேன். அம்மிணி மனசுதான் கரையவே மாட்டேங்குது. :))
வாங்க குமார்.
இந்த தெர்மல் பேக் அப் இருக்கறதாலெ ஏழு மடங்கு இன்சுலேடிவ் வேல்யூ கூடுமாம். வீட்டுக்குள்ளே தெர்மாஸ்டாட் இருக்கற ஹீட் பம்புக்கு இன்னும் வேலை சுலபமாச்சே. பவர்பில் கொஞ்சம் குறையும்.
இப்பத்தான் டபுள் கண்ணாடி வீடுகள் வந்துக்கிட்டு இருக்கு. பழைய வீடுகளில் ஹீட்லாஸ் நிறையத்தானே இருக்கு.
இன்னும் ஒரு அட்வாண்டேஜ் என்னன்னா..... சூரிய ஒளிபட்டு சாதாரணக் கர்ட்டன் ஒரு பக்கம் வர்ணம் சீக்கிரம் போய் அசிங்கமாத் தெரியுமே. இதுலே அந்தப் பிரச்சனை இல்லை. வெள்ளையா இருக்கே.
வாங்க கொத்ஸ்.
அம்மணி இன்னும் 10 வருசத்துலெ 'சரி'ன்னு சொல்லிருவாங்க.
நானும் 10 வருசம் அடி போட வச்சேன்:-)))))
இடம் ரொம்ப அடைக்குது.
இப்ப மின்சாரத்துலெ இயங்கும் வகை வந்துருக்கு. நீட்ட மடக்க சுலபம். வாங்குனா அது வாங்குங்க.
நம்மது நீட்ட ரொம்ப சுலபம். மடக்கணுமுன்னா கொஞ்சம் பலம் போடவேண்டி இருக்கு.
அதை மாத்திக்கலாமுன்னா இதை விக்கணும். நட்டமாகுமேன்னு இருக்கேன்.
அதான் கோபால் இருக்காரே,மடக்கன்னு:-))))
கோகி அதுலெ ஒரு சிங்கிளை எடுத்துக்கிட்டார். அது 24 மணிநேரமும் நீட்டலில்தான்:-))))
சோம்பேறிப்பையன் வீட்டுக்கு வந்தாச்சா. சொகுசா டீ வி முன்னாடி போட்டு டீ வி பாத்துட்டு எந்திரிக்க மனசே வராதே. வீட்டு வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதா?
இது வல்லியின் பின்னூட்டம்: மெயிலில் வந்தது
வார்டுரோப்(311) க்ளியர் செஞ்சாச்சு! அங்கே எல்லாத்தையும் என் பக்கமா(???) அடுக்கி வச்சிட்டு வந்தேன். மொத்தம் கட்டம்கட்டமா 22 ஷெல்ஃப் இருக்கு. அதுலெ ஒரு அஞ்சு இல்லெ ஆறு கோபாலுக்குக் கொடுத்துரணும். பாவம்...... //
இதென்ன கொஞ்சம் அதீதமா இருக்கே.17 எங்கே 6 எங்கே
தம்பியை இப்படி விட்டுடறீங்களே.
பாவம்பா:)))
வாங்க ச்சின்ன அம்மிணி.
நான் டிவி பார்க்கற பழக்கமில்லை. செய்திகள் மட்டும். முதல் 20 நிமிஷம். அதோடு சரி.
சோம்பேறிப்பையனிடம் தஞ்சம் கோபாலும் கோகியும்தான்:-))))
வாங்க வல்லி.
தம்பிமேல் உள்ள அனுதாபத்தில் கணக்குத் தப்பாப்போட்டுருக்கீங்க.
கொத்ஸ், உங்களை ஃபெயில் ஆக்கிருவார்.
(என்மேல் உங்களுக்கு அனுதாபம் இருக்கறதால்தானெ 'கொசுறு' ன்னு ஒண்ணைக்கூடப்போட்டுக் கொடுத்தீங்க:-))))
தேங்க்ஸ்
அட ஆமாம்பா. ஒண்ணு கூடித்தான்
போச்சு.
ரிக்ளைனர் ஆடாம இருக்குமா.
எங்க
சின்னவன் வீட்டில எல்லாப் பக்கமும் சுத்துதே:)))
பூதம் மாதிரியான ஷோபா நல்லாயிருக்கு.
வாங்க வல்லி.
அதெல்லாம் ஆடறதில்லை. சிங்கிள் ரெண்டும் 360 டிகிரி வட்டமாச் சுத்துது:-)
இந்தப்பக்கமுன்னா இங்கே, அந்தப்பக்கமுன்னா அங்கெ:-)
வாங்க ஆடுமாடு.
பூதமுன்னாலும் நல்லா இருக்கு வசதியா. ஆனா இடத்தை அடைச்சுக்குது(-:
கர்ட்டன் விளக்கம் தான் மனசுல நிக்குது என் கர்ட்டன் காதல் எப்ப் நிறைவேருமோ?
வாங்க முத்துலெட்சுமி.
உங்கூர்லெ கரொல்பாக் டி.பி.குப்தா ரோடுலெ பாருங்க. அழகழகான கர்ட்டெய்ன்ஸ் கொட்டிக்கிடக்கு. நம்ம பக்கம் யூவி பாதிப்பு அதிகம் இல்லைன்றதாலே இன்னும் கலர்ஃபுல்லாப் போடலாம்.
சொன்னா நம்பமாட்டீங்க. ச்சென்னையில் ஒரு முறை கைத்தறிப்புடவைகள் 30,40 ருபாய்க்கு வித்துச்சுல்லே. அப்ப நம்ம நண்பர் ஒருத்தர் ஒரே மாதிரி பல புடவைகள் வாங்கி வீட்டுலே அழகாத் திரைச்சீலைகள் நிறைய கொசுவத்தோடப் போட்டுருந்தார். அட்டகாசமா இருந்துச்சு. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்:-))))
தேங்கிக்கிடந்த புடவைகளும் வித்தமாதிரி, திரைச்சீலையும் போட்ட மாதிரி!
Post a Comment