4/2
காலையிலே 9.30க்குப் போனேன். அந்த 'லக்ஸ் ஆளு க்ரெம்' வந்து என்னென்னன்னு சொன்னார். எல்லா இன்லெட்டும் வேலை செய்யுதான்னு
பார்த்தார். இந்த மெஷினை யூஸ் செஞ்சிருக்கேன்னார். அப்படியான்னு கேட்டேன்!
சாயந்திரம் எட்டுக்கு கிங் வந்து அளந்தார். அப்புறம் அடுக்களையிலே பெஞ்சுலே ஸ்டீல் மேலே ஒட்டியிருந்த ஃப்லிம் எடுத்துச் சுத்தம் செஞ்சார்.
ஊஞ்சல் தயாரா இருக்காம். கார்பெட் போட்டது எனக்குத்தெரியாது. இல்லேன்னா ஊஞ்சல் கொண்டு வந்திருப்பேன்னு சொன்னார்.
நான் எப்ப வருவீங்கன்னு கேட்டதுக்கு ஞாயிறுன்னார். நாளைக்கு முடியுமான்னு கேட்டேன். ஏன், ஏதாவது ஸ்பெஷல்லான்னார்.
ஆமா. எனக்கு பிறந்தநாள்ன்னு சொன்னேன். நாளைக்கு பகல் 2 மணிக்கு வரேன்னுட்டுப் போனார்.
நான் போனப்ப எல்லா ஃபோட்டோ ஆல்பமும் கொண்டு போய் அடுக்கி வச்சேன்! எவ்வளோ படங்கள் எடுத்துத் தள்ளி இருக்கோம் இந்த 22 வருசத்துலென்னு புரியுது. இப்போ டிஜிட்டல் வந்தபிறகு நல்லதாப் போச்சு. இல்லேன்னா ஆல்பம் வாங்கியே போண்டியாகி இருப்போமோ? போட்டொ எடுத்துக்கிட்டா ஆயுசு கம்மியாகிருமுன்னு முந்தி ஒரு நம்பிக்கை இருந்துச்சாம். பாட்டி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அந்தக் கணக்குலெ பார்த்தா 'எப்பவோ நான் போயிருக்கணும்' :-)
5/2
இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்! காலையிலே வீட்டுலே சாமி விளக்கேத்திட்டுக் கோயிலுக்குப் போனேன். மகள் செல்ஃபோன்லே
கூப்பிட்டு இருக்காள். நான் கோயிலுக்கு உள்ளே போறப்ப ஃபோனை ஆஃப் செஞ்சு வச்சிருந்தேன். வெளியே வந்து 'ஆன்' செஞ்சப்பத்தான்
தெரிஞ்சது மகள் கூப்பிட்டது!
நான் பதிலுக்குக் கூப்பிட்டேன். 'ஹாப்பி பர்த்டே' சொன்னாள். அப்புறம் வீட்டுக்கு ஃபோன் செய்ன்னு சொல்லிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்.
அப்புறம் அவளே கூப்பிட்டு 1.30க்கு வரேன்னதும். நான் ஊஞ்சல் விஷயம் சொல்லி அங்கே போகணும்னு சொன்னேன்.
அவ ஒரு மணிக்கே வந்து என்னைப் பார்த்து விஷ் செஞ்சிட்டு 'கல் பதிச்ச யானை' கொடுத்தா. அப்புறம் அங்கே வந்து பார்க்கறேன்னு
சொல்லிட்டுப் போயிட்டாள்.
மகள் கொடுத்த யானையும், கோபால் ஜப்பானில் இருந்து வாங்கியாந்த பூனையும்
நான் ரெண்டு மணிக்குப் போனேன்! கிங் ஊஞ்சலைக் கொண்டுவந்து போட்டார். நல்லாதான் இருக்கு! முதல்முதல்லே சாமிக்கு இருக்கட்டுமுன்னு அங்கெ கப்போர்ட்லெ இருந்த சாமிப்படத்தை வச்சு மனசுலே கும்புட்டுக்கிட்டேன். ரீ இன்ஃபோர்ஸிங்/சப்போர்ட் கொடுக்கன்னு ஒரு மெட்டல் ஸ்ட்ரிப் கொண்டு வந்திருந்தார். அதை வச்சிட்டுப் போறேன். வேணும்ன்னா போடலாம்னு சொன்னார்! நான் தான் இப்பவே போட்டுருங்கன்னு சொல்லி போட வச்சேன். . கிங் போன பிறகு மகள் வந்தாள். ஊஞ்சல் ரொம்ப நல்லா இருக்காம்! ரொம்பப் பிடிச்சுப்
போச்சாம்! உக்கார்ந்து ஆடுனா,. படுத்து ஆடுனா! நான் சிரிப்பை முகத்துலே காட்டாம இருக்க ரொம்பப் பாடுபட்டேன்.
நான் கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்தேன்! அப்புறம் மாஸ்டர் பெட்ரூம் சின்ன ஜன்னலுக்குக் கர்டெயின் போட உதவி செஞ்சது மகள்தான்.
அங்கிருந்து ரெண்டு பேரும் 'வேர் ஹவுஸ்' கடைக்குப் போனோம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரப்பிஷ் பின் ( 50% சேல்) வாங்கினோம்.அப்புறம் மெட்டல் பக்கெட் 'சவுத் சிடி' வேர்ஹவுஸ்லே இருக்குன்னு அங்கே போனோம். போற வழியிலே அவளோட ஃப்ளாட்டுக்குப் போனோம். நல்லா அருமையா வச்சிருக்கா. 'கலர் ஸ்கீம் ப்ளூ'. பயங்கர கோஆர்டினேஷன். அட்டகாசமா இருக்கு. நல்லா இருந்தாச் சரி! பாராட்டினேன். வேற என்ன சொல்றது? எல்லாம் தனக்குத் தனக்குன்னா மிடுக்காத்தான் களை வெட்டுறாங்க.:-)
சவுத் சிடி கடையிலே மெட்டல்ன்னா, Zinc ஸிங்லே இருந்தது. சரின்னு ஒண்ணு வாங்கினேன். வேற எங்கியோ ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பக்கெட் விளம்பரம் பார்த்த ஞாபகம். கிடைச்சா ஒண்ணு வாங்கிக்கணும்.
சாயந்திரம் 7 மணிக்கு ரூபியோட அப்பாவுக்காக நடந்த இரங்கல் கூட்டத்துக்கு டெலினா வீட்டுக்குப் போனேன்.
இவர் இப்பத்தான் சிங்கப்பூர்லே இருந்து கூப்பிட்டார். கோயிலுக்குப் போயிட்டு சாமான் ஏதாவது வாங்கிக்கிட்டு (எல்லாம் நொறுக்குத் தீனிவகைகள்தான். இங்கெதான் ஒண்ணும் கிடைக்கறதில்லையே) திரும்ப ஏர்போர்ட்டுக்கு எட்டு மணிக்குப் போயிருவாராம்! ஒம்போது மணிக்கு ஃப்ளைட். இன்னும் ஊஞ்சல் விஷயம் சொல்லலை! நாளைக்கு அவரே வந்து பார்க்கட்டும்!
பொதுவா இன்னைக்கு நாள் நல்லாப் போச்சு! கடவுளுக்கு நன்றி.
6/2
இன்னைக்கு இவர் வந்துட்டார். காலையிலே நம்ம பக்கத்து வீட்டு (31) கார்ல் ஃபோன்லே கூப்பிட்டு அவங்க பக்கம் ஃபென்ஸுக்கு
ஸ்டெயின் செய்யப்போறென்னு சொன்னார். பிரவுண் கலர்ன்னு சொன்னார். நான் எதுவா இருந்தாலும் சாயந்திரம் இவர் வந்தபிறகு வந்து பாக்கறேன்னு சொல்லிட்டேன். அவுங்க என்ன கலர் அடிச்சாலும் சரி! நமக்கென்ன? அந்தக் கலர் இந்தப்பக்கம் ஊறிவராம இருக்கணும்! அவ்வளவுதான்!
இவர் , என்னைக்கும் இல்லாத பழக்கமா வந்ததும் சாப்பிட்டுட்டுத் தூங்கிட்டார். அப்புறம் சாயந்திரம் போய் பார்த்தோம். "அட! ஊஞ்சல் போட்டாச்சா? நல்லாத்தான் இருக்குல்லே?" ஊஞ்சலில் படுத்தெல்லாம் பார்த்தார்.
ம்ம்ம்...கொடுத்துவச்ச மகராசன்:-) போகட்டும். ஆலிலைக்கண்ணனைப்போல் ஊஞ்சல் கோபால்.
7/2
வாசல் முன்னாலே காங்க்ரீட் போடற 'சிடி கேர்' ஆளுங்க யாரும் வரலை!
நாங்க தினமும் கொஞ்சம் கொஞ்சமா சாமான்களை எடுத்து வச்சுக்கிட்டு இருக்கோம். இந்த வீக் எண்ட் மூவர்ஸ்க்கு சொல்லி இருக்கு. நம்ம பெட்ரூம் ஸ்யூட், மத்த மூணு படுக்கைகள், ஃப்ரீஸர், ட்ரையர்னு சில சாமான்களைதான் கொண்டுபோறொம். புக் ஷெல்ஃப் ஒரு மூணு இருக்கு. ஷோ கேஸ், டைனிங் டேபிள், சின்ன மேஜை ஒண்ணு, கம்ப்யூட்டர் மேஜை ஒண்ணு. அவ்வளோதான். எக்ஸர்சைக்கிளும், ட்ரெட்மில்லும் கட்டாயம் கொண்டுபோகவேண்டிய ஐட்டங்கள்:-) தினமும் உடற்பயிற்சி செய்யறேனோ இல்லையோ அதுகளைப் பார்த்துக்கிட்டு இருந்தாலாவது உடம்பு கொஞ்சம் இளைக்குமோன்னு ஒரு நப்பாசைதான்.
சோஃபா செட்டை மகளுக்குக் கொடுத்தாச்சு. நல்லவேளை பியானோவை முந்தியே வித்துட்டோம்:-)))) அது இப்ப இலங்கையில் யார் வீட்டுலெ இருக்கோ?
நம்ம பெட்ரூம் ஃபர்னிச்சர் கொஞ்சம் யுனீக் டிஸைன். மவோரி கார்விங் டிசைன். இந்த மாதிரி நான் வேற எங்கேயும் பார்த்ததில்லை. கவுரி மரத்தில் செஞ்சது. அதைமட்டும் மாத்தவே கூடாதுன்னுதான் நம்ம மாஸ்டர் பெட்ரூமுலே ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு இடம் சரியான அளவு விட்டு, ஜன்னல்களை வச்சுருக்கு. நம்ம 'ஆர்க்கிடெக்ட் டிசைனர் பொய்ட்' ஒருமுறை நம்ம (பழைய) வீட்டுக்கு வந்து, இங்கிருந்து புது வீட்டுக்குக் கொண்டுபோகும் சாமான்கள் என்னெல்லாம்னு கேட்டு அதுக்குத் தகுந்தாப்புலே இடம்விட்டுப் ப்ளானில் வரைஞ்சும் கொடுத்தார்.
8/2
சாமான்களைக் கொண்டு போற வேலையை முடுக்கி விட்டோம்! இன்னைக்கு நம்ம கணேஷ் உதவி செய்ய வந்தார். கோபாலும்ஒரு ட்ரெய்லரை
வாடகைக்கு எடுத்து, சில ஷெல்ஃப்ங்களை கொண்டு போனார். ஆன்னா ஊன்னா கணேஷைக் கூப்புட்டுருவோம். புள்ளையாரை மறக்கலாமா? :-))))
நம்ம கிச்சன் கிங்கும் சாயந்திரம் வந்து வாஷ் பேசின் சிங் ஸ்டேண்டை மூடற பலகையைச் செஞ்சு கொண்டு வந்தார். ஆனா அளவு
சரியில்லை! சரி பண்ணிட்டு வரேன்னு போனார்.
11/2
இன்னைக்கு கோபால் லீவு போட்டார். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க, நசநசன்னு ஒரே மழை! அப்படியும் பல சாமான்களைக் கொண்டு போனோம்.
நாளைக்கு காலையிலே எட்டரைக்கு 'மூவர்ஸ்' வராங்க!
12/2
நாங்க காலையிலே 6 மணிக்கு முன்னாலேயே அவதி அவதின்னு எந்திரிச்சு, கொஞ்சம் சாமான்களை ஒழுங்கா எடுத்து வச்சிட்டோம்.
8.50க்கு மூவர்ஸ் வந்தாச்சு! 3 ஆளுங்க. வந்தவுடனே முதல் வேலையா, ஒரு அச்சிட்ட தாள்லே விவரம் எல்லாம் கையெழுத்து வாங்கியாச்சு!
8 மணிக்கு அவுங்க டெப்போவிலிருந்து புறப்பட்டாங்களாம்! இந்த ஊர்லே 15 நிமிஷம் போதும் ஒரு கோடியிலே இருந்து மறுகோடி போக!
அதுக்கப்புறம் ரெண்டே மணிநேரத்துலே எல்லாப் பெரிய சாமானும் அங்கே போய், இறக்கியும் வச்சாச்சு! 10.52க்கு ஃபினிஷ்! ஆனா திருப்பிப் போக
அதுக்கப்புறம் ரெண்டே மணிநேரத்துலே எல்லாப் பெரிய சாமானும் அங்கே போய், இறக்கியும் வச்சாச்சு! 10.52க்கு ஃபினிஷ்! ஆனா திருப்பிப் போக
அரைமணி சேர்ப்பாங்களாம். மொத்தம் 3 மணிநேரம். அது என்ன கணக்கோ?மணிக்கு $75. ஜி.எஸ்.டி. தனி. மொத்தம் 255$ஆச்சு. கேஷ் கொடுத்தா 250$ போதுமாம். சரின்னு கொடுத்தாச்சு!
இன்னிக்குத்தானே அஃபிஷியலா வீடு மாத்தறோம். நம்ம வீட்டு ஸ்வாமி விக்கிரகங்களைக் கொண்டுபோய் முதலில் ஊஞ்சலில் வச்சேன். இன்னிக்கு ஊஞ்சல் சேவை:-) திருச்சானூர்லே ஒரு சமயம் பார்த்த தாயாரின் ஊஞ்சல்
மனக்கண்லே வந்துச்சு. அரக்கப்பரக்க ஓட்டமும் நடையுமா கோவிலுக்குள் காலடி வைக்கிறேன், எதிரில் மண்டபத்தில் ஊஞ்சலில் பளபளன்னு டாலடிச்ச வைர நகைகளோடு ......ஹப்பா.....
அப்பாடான்னு மூச்சு விடறப்பப் போன் பெல் அடிக்குது. யாரா இருக்குமுன்னு
யோசனையோட எடுத்தா......
" உங்க வீட்டுக்கு நல்ல ஆஃபர் வந்துருக்கு. விக்கப்போறிங்களா?"
ரியல் எஸ்டேட் ஆளுதான்.
(அடப்பாவிகளா.... இப்பத்தான் வந்து செட்டில் ஆகப்போறோம். அதுக்குள்ளேயா?)
"உங்களுக்கு யார் சொன்னது வீட்டை விக்கறோமுன்னு?"
" இல்லை. ஒரு buyer அந்தப் பக்கம் வந்தப்ப வீட்டைப் பார்த்தாராம்"
" இன்னிக்கு பிஸியா இருக்கேன். விக்கறதா இல்லையான்னு நாளைக்கு யோசிச்சுச் சொல்லவா?"
யாரு ஃபோன்லே?ன்னு கேட்டுக்கிட்டே வந்தார் கோபால். வீட்டை விக்கறயான்னு கேட்டாங்கன்னு சொன்னேன்:-)
மத்தியானதுலே இருந்து ஆரம்பிச்சிடுச்சு வீட்டை ஒழுங்குபண்ணற வேலை! மகளும், ஆலனும் வந்து டிவி, ஆடியோ சிஸ்டம் எல்லாம்
வச்சுத் தந்தாங்க! அடுக்களை ஒருமாதிரி சரி பண்ணிட்டேன். ஆனா, எது எது எங்கேன்னு புரிய நாளாகும்! அடுக்களை பேண்ட்ரி மட்டும் எல்லாம் ப்ளீர்னு இருக்கு. மூணு லிட்டர் ஜூஸ் வாங்கும் பாலிக்கார்பொனேட் பாட்டில்களில்
பலசரக்கு வச்சுக்கற பழக்கம். எல்லாம் யூனிஃபார்மா ஒண்ணுபோல இருக்கும். என்ன இருக்குன்னும் கண்ணுக்கும் தெரியும்.கொஞ்சம் அழுக்காச்சுன்னா, தூக்கிப்போட்டுட்டு வேற பாட்டிலில் ரொப்பிக்கலாம். அதான் எப்பவும் ஜூஸ் வாங்கிக்கிட்டேதானே இருக்கோம். (ச்சும்மா ஒரு கிச்சன் டிப்ஸ் உங்களுக்கு)
இவர் படுக்கை அறையைச் சரி செஞ்சாரு. இன்னும் ரெண்டு பெட் ரூம் அப்படியே கிடக்கு! எல்லா சாமானையும் அங்கேதான் கொட்டிக்
குவிச்சு வச்சிருக்கு!
தொடரும் .......
( வீட்டுலே ஹைலைட் ஊஞ்சல் என்றதாலே சில படங்களை கூடுதலாப் போட்டுருக்கேன். எல்லா ஆங்கிளிலும் பார்க்கணுமா இல்லையா? :-))))
=========================
17 comments:
ஊஞ்சல் நிஜமாகவே அருமை தான்.
மளிகை சாமான்கள் தட்டில் மே....லே குக்கரா? அப்ப எப்பயாவது தான் எடுப்பீங்களா?
பிளாஸ்டிக் பாட்டிலுக்காக shelf ஆ? இல்லை வேறு மாதிரியா? ஏனென்றால் அவ்வளவு பெரிய பாட்டிலில் கால் வாசி தான் சாமான்கள் இருக்கு!! :-))
கடைசியாக ....
அந்த புனல் எதுக்கு?
முதலில் ரீச்சருக்கு,
அனந்தபத்மநாபஸ்வாமி போட்டோ, சாரி சாரி நம்ம கோபால் சாமி போட்டோ நல்லா இருக்கு!! ஊஞ்சல் சூப்பரா இருக்குங்க.
அடுத்தது குமாருக்கு
1)அது ரெகுலர் யூஸ் குக்கர் இல்லை. எப்பவாவது விருந்தாளிகள் வந்தா எடுக்கிறது. அப்போ எடுத்தத் தரத்தான் எங்க இவர் இருக்காரே. நமக்கு முதுகு வலி இருக்குல்ல. அதான்..
2) அதெல்லாம் அந்த வீட்டில் இருந்து கொண்டு வந்த சாமானாச்சே. அது மட்டுமில்லாமல் கொஞ்சமா இருந்தா தூக்கிக் கொட்டறது ஈசி இல்லையா. மீண்டும் நம்ம முதுகு வலியை ரெபர் பண்ணிக்குங்க.
3) புனல் எதுக்கா? கடையில் பிளாஸ்டிக் கவரில் வர சாமானுங்க எப்படி பாட்டிலுக்குள் போகும்?
ரீச்சர், நான் பாஸா? :))
வீடுன்னா இப்படி இல்ல இருக்கணும். ஊஞ்சல் என்ன. அது மேல அனந்த சயனம் என்ன(கோகி போட்டிக்கு வர்றதில்ல போல இருக்கு ஊஞ்சலுக்கு).
கனம் தாங்காதுன்னு சாமான் கொஞ்சமா எல்லாத்திலயும் போட்டு பான்ட்ரிக்குள்ள வைச்சிருக்கீங்க போல இருக்கு.
//" உங்க வீட்டுக்கு நல்ல ஆஃபர் வந்துருக்கு. விக்கப்போறிங்களா?"
ரியல் எஸ்டேட் ஆளுதான்.//
மில்லியன் டாலர் குடுத்தாலும் இப்ப விக்கறதில்லைன்னு சொல்லிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன்.
யானையும் பூனையும் தானா வகைக்கு ஒண்ணா உங்ககிட்ட வந்து சேந்துருது
வாங்க குமார்.
கொத்ஸ் பாருங்க உங்க சந்தேகங்களைத் தீர்த்து வச்சுருக்கார்:-)
அது மில்க் குக்கர். மைக்ரொவேவ் யுகத்துக்கு முன்னே ஃபிஜி வாழ்க்கையில் வாங்குனது.
மத்ததெல்லாம் கொத்ஸ் சொன்னபடியேதான்:-)
வாங்க கொத்ஸ்.
அ.ப.சு. நல்லா இருக்காரா? நன்றி:-))))
குமாருடைய ஐயங்களைத் தீர்த்ததுக்கு அவரே
பொற்கி(ளி)ழி கொடுப்பார்.
சபாஷ்.சரியான பதில்.
பாஸா? வெறும் பாஸ் இல்லேப்பா டிஸ்டிங்ஷன் :-)))
ஆஹா! அது மில்க் குக்கர் மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். ஆனா இந்த காலத்தில் யாரு கிட்ட மில்க் குக்கர் இருக்குமுன்னுதான் நினைச்சேன். அது மட்டுமில்லாம நீங்க பதில் சொல்லறதுக்கு முன்னாடி நான் சொல்லிடணுமேன்னு அவசரம் வேற!
ஆமாம் அந்த மில்க் குக்கர் ஏன் எல்லா இடத்துக்கும் கூடவே வருது? எதாவது வேண்டுதலா? செண்டி'மெண்டல்'?
வாங்க ச்சின்ன அம்மிணி.
அதென்ன ஸீரோ ? அப்ப ஃபெயிலா?
கோகி போட்டிக்கு வர்றதில்லை. அங்கெ ஒரு யானையும் குரங்கும்(???!!!) இடம் புடிச்சிருக்கு.
முந்திதான் ஆக்லாந்துலெ இருந்து சாமான்கள் வரவழைப்போம்
இப்ப இங்கெயே இந்தியன் கடைகள் வந்துருச்சு. .
அதனாலெ ஒரு கிலோ ,ரெண்டுகிலோன்னு சமயத்துக்குத் தகுந்தாப்பல வாங்கிக்கிறோம்.
நல்ல கனம் தாங்குமாம். கிங் சொல்லி இருக்கார்:-)
கொத்ஸ்,
அந்த மில்க் குக்கருக்கும் ஒரு 'கதை' இருக்கு:-))))
mw வந்தபிறகு அதுக்கு யூஸ் இல்லை.
ஆனால் நிறையப்பேருக்குக் காஃபி கலந்தால் அதுலே வச்சா சூடா இருக்குமாம். (உபயம்: அ.வி/ம.ம)
வலை மாநாட்டுக்குப் பயன்படுத்திப் பார்க்கலாமா?:-)
'கதை' கேட்க நாங்க ரெடி. நல்ல 'உம்' கொட்டுவோமுன்னு தெரியும்தானே! :))
டீச்சர், ஊஞ்சல் சூப்பர்!!
ஏழுமலையான், நல்லா போஸ் குடுக்குறார்.. :)
தீபாவளி வாழ்த்துக்கள்!!
சந்தேகங்களை சிரிப்புடன் தீர்த்துவைத்தற்கு நன்றி.இ.கொத்தனார்.
வீட்டிலே இவரை வைத்து எப்படி தான் சமாளிக்கிறார்களோ!!!
அதுதானே ஜூஸ் பாட்டில்ல து.பருப்பு ,உ.பருப்பு எப்படிக் கொட்டு வீங்கனு நினைச்சேன். Koths arumaiyaana viLakkam.
சாரிப்பா நடுவில fஆண்ட் போயிருச்சு.
உஞ்சலில தாயார்தானெ ஆடணும் இங்க பெருமாள் தனியே போஸ் கொடுக்கிறாரே.
:))
5/2/ க்கு வாழ்த்துக்கள்.
சரி மில்க் குக்கர் வேண்டாம். அப்புறம் எதில பால் காய்ச்சி சாப்பிட்டிங்களோ அதைப் போட்டோ போடலாமில்லையா.:))
ஊஞ்சலோ ஊஞ்சல். ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப அழகு.
வாங்க தஞ்சாவூரான்.
இந்தப்போஸ் கிருஷ்ணாவதாரத்துலே வந்தது:-)))))
குமார்,
குவிஸ்லெ பதில் சொல்லிருங்க:-))))
வாங்க வல்லி.
(கொத்ஸ் இன்னொரு கிழி வல்லியிடமிருந்து வரும் உங்களுக்கு!)
அதான் ரைஸ் குக்கருலெ பால் காய்ச்சிக் குடிச்சாச்சேப்பா:-))))
'இங்கே'யும் ஊஞ்சலில் 'எப்பவும்' 'தாயார்'தான் ஆடறார்:-))))
பெருமாள் மார்பில் இருக்கும் லக்ஷ்மியை உத்துப்பாருங்கப்பா.
அப்படியா சேதி.
தம்பி, பொண்டாட்டியை நல்லா வச்சி இருக்காருனு தெரிய சந்தோஷம்ப்பா:))0
அதென்ன அ.பா,சு????????
ஏபிஎன் மாதிரி???:))))
துளசி அக்கா.. தீபாவளியே வந்துடுச்சு.. கொண்டாடனுமில்ல.. அதயும் இப்பிடி போட்டோவா போட்டு கலக்கலாமில்ல?..ஹிஹி..
Post a Comment