கிடைச்ச மூணையும் கையில் எடுத்துக்கிட்டு, எதுக்கு முன்னுரிமைன்னு ஒரு யோசனை. அட்டையில் இருக்கும் படங்களைப் பார்த்தால்.....ப்ச். ஒண்ணும் சுவாரசியப்படலை. முதல்முதலாய், சிவி,நினைத்தாலே. இதுலே முதலாவதில் மட்டும் தெரிஞ்ச ஒரு முகம். பாக்கியராஜ்...... அப்பப் பார்த்து, இவர் ஃபோன்லே கூப்புட்டுப் பேசினார்.
என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு கேட்டப்ப, படங்கள் வந்துருக்கு. எதாவது பார்க்கலாமான்னு இருக்கேன்னேன். பேரையெல்லாம் கேட்டுட்டு, 'சிவி நல்லா இருக்குன்னு போட்டுருக்கான்'னு சொன்னார். வலையில் வரும் விமரிசனத்தையெல்லாம் விடாமப் படிக்கிறது அவர் வழக்கம். படத்தைப்பற்றி எந்த முன்முடிவும் இல்லாமப் படம் பார்க்கணுமுன்னுன்றது என் கருத்து. பார்வைகள் வேறுவேறு இல்லையா? படம் பார்த்தபிறகுதான் அதைப்பத்தி மக்கள்ஸ் என்ன சொல்லி இருக்காங்கன்னு தேடுவேன்.
போனாப் போட்டும், புருசன் பேச்சைக் கேக்கலாமுன்னு சிவி பார்த்தேன். பேய்க்கதை. தனியா இருக்கமே......... இதைப்போய்ப் பார்த்து வச்சேனேன்னு இருந்துச்சு. இப்ப....மனசில் இருக்கும் பேயை ஓட்டணும்.
முள்ளை முள்ளாலெ எடுக்கறது போல, மாத்து மருந்தா இன்னொரு படம் கொஞ்சம் பார்த்துக்கலாமுன்னு கையை நீட்டி எடுத்தப்ப வந்துச்சு நினைத்தாலே. ஒரு டிஸ்க் மட்டும் பார்த்துக்கலாம். மீதி நாளைன்னு இருந்தவளை.......
அழகான குடும்பம். அப்பா,அம்மா, பையன்,பொண்ணு. டைட்டில் சாங் அருமையா இருக்கு. குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பார்க்க நல்லா இருக்கு.அப்பவே மனசுலே ஒரு ச்சின்ன உறுத்தல்.
அது உண்மையாகும் விதமா, பொண்ணை(ஒரு பத்து வயசு இருக்குமா?) வீட்டுலே விட்டுட்டு, மத்த மூணு பேரும் கொட்டும் மழையில் ஒரு கல்யாணத்துக்குப் பக்கத்தூருக்குப் போறாங்க. குடிச்சுட்டுக் காரோட்டிவரும்
ஒருத்தராலே, இவுங்க வண்டி விபத்துகுள்ளாகி, எல்லாரும் அவுட். குடிகாரர் சமாளிச்சுக்கிட்டு விபத்து நடந்த வண்டியைக் கிட்டப்போய் பார்க்கும்போது அப்பா மட்டும் 'ரூபா( பொண்ணு பேரு)ரூபா'ன்னு முணங்கிட்டுச் செத்துப் போறார்.
ஆச்சு 12 வருஷம் ( என்ன கணக்கு?) தனியா வளரும் பொண்ணு இப்ப வேலையில் இருக்கு. அங்கே வேலை செய்யும் ராகுல்( அவர் அந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராம்) கூடக் காதல். ராஜஸ்தான்லெ இருந்து அவரோட குடும்பம் பொண்ணு பார்க்க வர்றாங்க. எல்லா 'கண்டிஷன்களும்' ஓக்கே.
கல்யாண நாளில் 'வருங்கால மாமியாரின்' சில நிர்பந்தங்களால் கல்யாணம் நின்னுபோச்சு. நம்மைப்போலவே கல்யாண வீட்டுக்கு வந்த கதைநாயகன் இதையெல்லாம் கவனிக்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து தன் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறாராம். இந்தப் பொண்ணு பிடிச்சுப் போச்சு.
தடைப்பட்டத் திருமணத்தால் மனம் ஒடைஞ்சு கிடைக்கும் பெண்ணின் மனசை எப்படித் தன்பக்கம் திருப்பறாருன்னு போகுது கதை. அந்தக் காம்பவுண்ட்லேயே வாடகைக்கு வரார். சின்னச்சின்ன சம்பவங்கள் சுவாரசியம் சேர்க்குது. துள்ளியோடும் நா(ய்)க்குட்டிக்கூட வருது.
நாயகனைப்பார்த்ததும் என் மனசுக்குள்ளே அவர் நம்ம பதிவர்களில் ஒருத்தராக இருக்கறதுபோல ஒரு தோணல் என் மனசில். ஏன்? எப்படி? வேலையில்லாத 'வெட்டிப்பயல்'ன்னு வசனம் வருதே...அதனாலா? :-))))
கதையின் முடிச்சு இப்ப எப்படி இருக்குன்னா..... நாயகியின் குடும்பம் 'மேலே போக'க் காரணமா இருந்த குடிகாரரின் மகந்தான் நாயகன். 'கதையின் முடிவு என்ன? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வெள்ளித்திரையில் காண்க'ன்னு சொல்லக்கூடாதாமே.....பத்திரிக்கை விமரிசனம் போல . அதுவுஞ்சரிதான். நான் மட்டும் என்ன 'வெள்ளித்திரை'யிலாப் பார்த்தேன்?
முடிவு சுபம். முடிவுக்கு முந்தின காட்சிகள் அருமை.
சுசின் (இவரை எங்கியோ பார்த்த ஞாபகம்) நடிப்பு 'நாட் பேட்'. நாயகி நர்கீஸ். இவுங்களும் எதோ இந்தி விளம்பரத்துலே வந்துருக்காங்களோ? பிரமாத அழகு இல்லைன்னாலும், சில கோணங்களில் நல்லாவே இருக்காங்க.
அந்த காம்பவுண்டில் இருக்கும் வீடுகள் அழகா இருக்கு.
ரிமோட்டைக் கையில் எடுக்க அவசியம் வரலை. அனாவசியச் சண்டைகளோ, கூட்டங்கூட்டமாய்ப் பாடியாடும் கோஷ்டிகளோ இல்லைன்றதே பெரிய நிம்மதி.
காதைக்கிழிக்காத, ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை. எல்லாம் நம்ம விஜய் அண்டனிதான். அருமை. எந்தப் பாட்டையும் ஃபாஸ்ட் பார்வெர்டு பண்ணத் தோணலை.
படத்துலே செய்தி ஒண்ணும் இல்லையா?
இருக்கே.......
குடிச்சுட்டுக் காரோட்டக் கூடாது.
காதல் கல்யாணமா இருந்தாலும் பெண்கள் சுயமரியாதையை விட்டுத் தரக்கூடாது.
வேலை இல்லாம வெட்டிப்பயலா இருக்கக்கூடாது.
சின்னப்பசங்களைத் தனியா வீட்டுலெ விட்டுட்டு மொத்தக் குடும்பமும் கல்யாணத்துக்குப் போகக்கூடாது.............(திஸ் ஈஸ் த்ரீ மச். ஸ்டாப்)
மொத்தத்தில் படம் எனக்குப் பிடிச்சிருக்கு.
Wednesday, November 14, 2007
நினைத்தாலே பிடிச்சிருக்கு
Posted by துளசி கோபால் at 11/14/2007 11:23:00 AM
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
ஹய்யா எனக்கும் ரொம்பப் பிடிச்சது ஏனோ தெரில எல்லாமே இயல்பான காட்சிகள். ஸ்பெஷலா எனக்கும் கதாநாயகன பிடிச்சு இருக்கு ஏன்னு தெரில சிம்ப்ளிசிட்டி (இதுக்கு தமிழ் என்ன?)யா இருக்குமோ?
வாங்க தயா.
ஆர்ப்பாட்டமில்லாத பாடல் காட்சிகள் இயல்பா இருக்குல்லே.
அந்த நர்சரியும் நல்லா இருக்கு.
முக்கியமா திருச்சி மலைக்கோட்டை, காவேரி ,இன்னும் சுத்துப்புறக்காட்சிகள் எல்லாம் அருமை.
சிம்ப்ளிசிட்டி= எளிமை( சரியா?)
படம் பேரு என்ன ரீச்சர்? சிவி யா? கேள்விப்பட்டதே இல்லையே! :(
ஓஹோ! பேய்ப்படம்தான் சிவியா? அது எப்படி இருந்தது? பார்த்தவரை? நம்ம வினையூக்கி கதை மாதிரி இருந்ததா?
இந்த படம் பேரு நினைத்தாலே.
//கையை நீட்டி எடுத்தப்ப வந்துச்சு நினைத்தாலே.//
இப்படி படிக்கும் பொழுது அது படம் பேரு மாதிரி தெரியலை. அதான் கன்பியூஷன். ஆனா ரீச்சர் இப்படி எல்லாம் விட மாட்டாங்களேன்னு ரெண்டாவது வாட்டி படிச்சப்போ புரிஞ்சுது.
//காதல் கல்யாணமா இருந்தாலும் பெண்கள் சுயமரியாதையை விட்டுத் தரக்கூடாது.//
ஆண்கள் வழக்கம் போல விட்டுத்தரது தப்பில்லைன்னு சொல்ல வறீங்க போல!
//வேலை இல்லாம வெட்டிப்பயலா இருக்கக்கூடாது.//
கல்யாண மாப்பிள்ளையை இப்படியா திட்டறது?
//சின்னப்பசங்களைத் தனியா வீட்டுலெ விட்டுட்டு மொத்தக் குடும்பமும் கல்யாணத்துக்குப் போகக்கூடாது...//
சின்ன பசங்க வீட்டில் இருந்தா மொத்த குடும்பமும் எப்படி போக முடியும்?
:) அந்தக் கதாநாயகிதாங்க பின்னாடி டிசிபி ராகவன் கூட "பார்த்த முதல் நாளே"ன்னு பாடீருக்காங்க. ஆமா கமலினி முகர்ஜி. அந்தப் படத்துல கதாநாயகனா நடிச்சவரு பேரு ராஜான்னு நெனைக்கிறேன். ஐதராபாத்துல வேலை விஷயமா மூனு வாரம் இருந்தப்ப வாங்கிப் பாத்த வீடியோ அது. நல்ல படம்.
அதென்னது இன்னொரு படம். சிவியா? சிபியா? ஓ சிவியா. அப்படீன்னா?
டீச்சர். மார்னிங் ராகா அப்படீன்னு ஒரு படம் இருக்கு. இங்கிலீஷ்தான். பாருங்க. ரொம்ப நல்லாயிருக்கும். The Morning Raga. ஷபனா ஆஸ்மீ, தலைவாசல் விஜய் எல்லாம் நடிச்சிரூக்காங்க.
//படம் பேரு என்ன ரீச்சர்?//
கொத்ஸ் போலவே எனக்கும் இரண்டாவது தடவை படிச்ப்பதான் எந்த படத்தோட விமர்சனம்னு தெரிஞ்சது.
"நினைத்தாலே" அப்படின்னு ஒரு கொட்டேசன் போட்டிருந்தீங்கன்னா ஃபர்ஸ்ட் டைம்லயே எந்த படம்னு தெரிஞ்சிருக்கும் :)
விமர்சனம் நல்லாருக்கு.
சிவி படத்துல பாக்கியராஜா? பாவம் அவர்
கேள்வியேபடாத படமா இருக்கே, டீச்சர்!
ராகவன், The Morning Raga DVD எடுத்தேன். நல்லா இருக்கும்னு தோணிச்சி... இன்னுமேதான் பார்க்கணும்!!
வாங்க கொத்ஸ்.
என்ன இன்னிக்கு இவ்வளோ கன்ஃப்யூஷன்?
நல்லவேளை அப்புறம் புரிஞ்சுக்கிட்டதுக்கு.
கல்யாணமாப்பிளையை இன்னைக்குவரை கலாட்டாப் பண்ணலாம்.
நாளை முதல் 'அல்லுடு ,கோடலு சொத்து':-)))
சின்னப்பிள்ளைகள் நீங்கலாக உள்ள மொத்தக்குடும்பமும்:-)
எல்லாம் டீ/ரீச்சர் சாமிகள்:-)))
வாங்க ராகவன்.
இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போட்டுருக்கீங்க!!!
ராகவனின் கமலினியா இது. மெய்யாலுமா?
இருக்காதேப்பா. இது புதுப்படமாச்சே. ம்ம்ம்ம்ம்
மார்னிங் ராகா இன்னும் பார்க்கலை. வீடியோக் கடையில்
எடுத்துட்டாப்போச்சு.
பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பின் பெயர் சிவி(யாம்)
வாங்க அரைபிளேடு.
கொட்டேஷன் கொடுக்காதது 'நம்ம வகுப்புலே புள்ளைங்க கவனமா இருக்காங்களான்னு கண்காணிக்கத்தான்':-)
வாக்கியத்துக்கு இடையிலின்னு இல்லாம வார்த்தைக்கு இடையில், எழுத்துக்கு இடையில்னு ஊடுருவிப்படிக்கும் கூட்டமில்லையா ?
வாங்க ச்சின்ன அம்மிணி.
மேலெ எழுதுன வரியை உடனே பொய்யாக்கணுமா? :-)))
வகுப்பில் இன்னும் கவனம் தேவை:-)
முதல் முதலாய்- பாக்கியராஜ்
சிவி- பேய்
நினைச்சாலே- ????? ( பிடிச்சிருக்கு)
அய்யோ அய்யோ...... யப்பா.......
வாங்க தென்றல்.
கேள்விப்படலையா........!
அதான் எனக்கு வந்துருக்கு இந்தப் படம்.
நம்ம கூட்டத்தில் தயா பார்த்துருக்காங்க:-)
அழகான காட்சிகளோடு இந்தப் படத்தைப் பார்த்ததும் ஹோம்சிக் வந்துச்சு. இப்ப மலைக்கோட்டையைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது அந்த சிக்னெஸ் போயிருச்சு.
நம்ம அபி அப்பாவின் தீபா வெங்கட் கையிலே குழந்தையைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு.எங்கே அதுதான் வளர்ந்து வில்லனைக் கொல்லப்போகும் கதை நாயகனோன்னு:-)
பட விமர்சனம் எழுதறதுலேயும் தூள் கெளப்புறீங்க - ம்ம்ம்ம் நன்று
சிவினு படம் வந்தது தெரியும்.
பட விமரிசனமே பார்த்த திருப்தி.
அபி அப்பாவோட தீபாவா:))
இது!!!!
பிறந்த நாள் பரிசா:)))
//வாக்கியத்துக்கு இடையிலின்னு இல்லாம வார்த்தைக்கு இடையில், எழுத்துக்கு இடையில்னு ஊடுருவிப்படிக்கும் கூட்டமில்லையா ?//
அப்படிய்யா????
வாருகிறதுனு கேள்விப்பட்டு இருக்கேன்.
தூக்கிப் போடுகிறதே:)))
வாங்க சீனா.
நம்ம தளத்தின் தலைப்பைக் கொஞ்சம் கண்ணை உயர்த்திப்பாருங்க.
அங்கேயே இருக்கு எல்லாம்:-))))
வாங்க வல்லி.
இது எனக்கு மட்டுமே எடுத்ததுன்னு யாரும் (நாக்குமேலே பல்லைப்போட்டு) சொல்ல முடியாது.
நம்ம தயா(வும்)பார்த்துருக்காங்க,பாருங்க.
அபி அப்பாவின் பிறந்தநாள் பரிசா?
அபி அம்மா இதோஓஓஒ வந்துக்கிட்டு இருக்காங்களாம்:-)
விமர்சனம் நல்லாயிருக்கு. இப்படி ரிமோட்டுக்கு வேலை இல்லாத படம் பார்ப்பதே ஆனந்தம் தான். டைரக்டருக்கே தோணாத உங்க "மாரல் ஆப் த ஸ்டோரி" ரொம்பவே நல்லா இருக்கு.
துளசி
ஒரு பட விம்ரிசனமா இல்லை இரண்டும் சேர்த்தா? பார்க்க விரும்பற பட்டியல்ல இந்த படம் எல்லாம் இல்லை.
வாங்க புபட்டியன்.
அதெல்லாம் கதை மாரல்களைத் துருவித்துருவிக் கண்டுபுடிச்சுருவொம்லே:-))))
வாங்க பத்மா.
பார்க்கணுமுன்னு இங்கே ஒரு லிஸ்ட்டும் இல்லை பத்மா. நம்ம வீடியோ க்ளப்க்காக வர்ற எல்லா படங்களையும் நான் பார்த்தே ஆகணும். உள்ளூர் சென்ஸார் போர்டு நாந்தானே?
ஆனா.....'பிரபலம்' இல்லாத நடிகர்கள் நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் நடிக்கிறாங்க. நோ பன்ச் டயலாக்;-)))
// சிவி பார்த்தேன். பேய்க்கதை. தனியா இருக்கமே......... இதைப்போய்ப் பார்த்து வச்சேனேன்னு இருந்துச்சு. இப்ப....மனசில் இருக்கும் பேயை ஓட்டணும்.//
ஆமாங்க துளசியக்கா.. நானுங்க்கூட அந்த படத்த பாத்து தொலச்சிப்புட்டேன்.. அப்பீடியே விட்டாக்கா.. கழுத்து மேல யாரோ ஒக்காந்து இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்க்ஸ்.. இங்க தனியா வேற இருக்கேனா?..அதனால.. வேர ஒரு நல்ல படமும் கன்டினிவா பாத்துட்டேன்..
(நெறயா பேரு உயிரோட இருக்கும் போதே..ஹஸ்பெண்டு தலையில ஏறி ஒக்காந்துக்கிட்டு எறங்க மாட்டேங்கராய்ங்களாமே..உண்மையா?.கல்யாணமான நண்பர்கள் சொல்லுறாய்ங்கல்ல....)
அந்த இன்னொரு படம் "நினைத்தாலே.." அது கதை நல்லாயிருக்கு.. ஆனாக்கா ஹீரோவ பாத்தாக்கா அப்பத்தேன் தூங்கி எழுந்த மாதிரி ஒரு சோக முகம்.. ஹீரோயினும் அம்புட்டு சொல்லிக்கிறமாதிரி இல்ல..என்ன இருந்தாலும் நம்ம இலியானா..இல்ல ,பாவனா மாதிரி வருமா?ஹிஹி..
அந்த இன்னொரு படம் "நினைத்தாலே.." அது கதை நல்லாயிருக்கு.. ஆனாக்கா ஹீரோவ பாத்தாக்கா அப்பத்தேன் தூங்கி எழுந்த மாதிரி ஒரு சோக முகம்.. ஹீரோயினும் அம்புட்டு சொல்லிக்கிறமாதிரி இல்ல..என்ன இருந்தாலும் நம்ம இலியானா..இல்ல ,பாவனா மாதிரி வருமா?ஹிஹி..
//சுசின் (இவரை எங்கியோ பார்த்த ஞாபகம்)//
தெரியலையா? வைஜயந்தி மாலா வைஜயந்தி மாலான்னு ஒரு நடிகை இருந்தாங்களே...அவங்களோட மகன்தான் அவரு.
புள்ளைய எப்படியோ டெவலப் பண்ண நினைச்சாரு.லண்டன்ல இருந்து புள்ளையாண்டன் சினிமா ஆசையில கோலிவுட்டுக்கு வந்திருக்காரு.
'முதல்முதலாய்' படத்துல பாக்யராஜ் வர்ற சீன்ஸ் எல்லாம் நல்லாயிருக்குமே...படத்துக்கு அவர்தான் ஸ்கிரீன்ப்ளே.
வாங்க ரசிகன்.
தலையில் ஏத்திக்கிற டெக்னிக் எல்லாம் நம்ம பரமசிவன் கொடுத்த ஃபார்மலா. அதை வேணாமுன்னு ஒதுக்குனா சாமிக்குத்தமாயிரும்லெ:-)))
ஹீரோவைப்பார்த்தா தூங்கி எழுந்த முகமா? அப்ப நம்ம பதிவர்கள் ஞாபகம் வந்தது சரிதானாப்பு?
அடடா...... எங்கெ எப்படிக் கனெக்ஷன் ஆவுது:-)))
வாங்க ஆடுமாடு.
அடடா அடடா அடடா...... உன் கண் உன்னை ஏமாற்றினால்.......
வைஜயந்தி மகனா?
இன்னொரு இடத்தில் லலிதா பத்மினி ராகினின்னு சொன்னதுக்கெ என்னை 18 ஆம் நூற்றாண்டு பழய ஆளுன்ற லெவலுக்குப் போயிருக்கு.
இதெல்லாம்தான் சொ செ சூ:-))))
பாக்கியராஜ் படம் பரவாயில்லை. காமெடியாத் துப்பறியும் ஆட்கள்ன்னா எனக்குத் தெனாலி டெல்லிகணேஷ் & கோ தான் பிடிச்சது:-)
//இதெல்லாம்தான் சொ செ சூ:-))))//
அப்டின்னா? நான் கொஞ்சம் வுட்மண்டை. புரியற மாதிரி..?
'வைஜெயந்திமாலா என்றொரு நடிகை இருந்தாங்களே!'
ஐயோ!பாவம் அவர் இன்னும் இருக்கிறார்.
சிவி பேய்படம் என்றதும் சிடியை திருப்பிக்கொடுத்துவிட்டேன்.
படம் பார்ப்பதே அபூர்வம் அதில் போய் பேய் படமா?
வாங்க டெல்ஃபீன்.
சீரியஸ்(???)பதிவுகள் எழுதாமல் இருக்கும்போது சினிமாப் பதிவுகளும் ஈயப்படணுமாம்.
வள்ளுவரே சொல்லி இருக்காராம்:-)
அதுவாங்க ஆடுமாடு......
"சொந்த செலவில் சூனியம்"
இதுக்குக் காப்பிரைட் நம்ம வரவணையானிடம் இருக்கு:-)
இப்படிச் சில வலை மொழிகள் இங்கே இருக்கு:-)
வாங்க நானானி.
அவர் சினிமாவில் இப்ப இல்லைன்றதாலே இறந்தகாலத்துக்குப் போயிட்டார்:-)
எல்லாப் படமும் இப்ப டிவியிலே
வந்துருதா?
//வேலை இல்லாம வெட்டிப்பயலா இருக்கக்கூடாது.//
கொத்ஸ் கவனிக்கணும்
வேலை இருக்கிற வெட்டிப் பயல்ன்னா ஓ.கே. தானே டீச்சர் :-)
இனிமே சின்ன பட்ஜட் தயாரிப்பாளர்கிட்டே நியூசிலாந்துக்கும் ஒரு ரில் பெட்டி அனுப்பச் சொல்லணும்
;-0
/சுசின் (இவரை எங்கியோ பார்த்த ஞாபகம்) நடிப்பு 'நாட் பேட்'//
டீச்சர்,
இவர் வைஜயந்தி மாலான்னு பழைய நடிகை இருந்தாங்களே. அவங்களோட மகந்தான்..
கண்ணோடு காண்பதெல்லாம் படம் பார்த்தீங்களா? அதுல ஒரு காதல்ஜோடி படம் முழுக்க கலாட்டா பண்ணீ அர்ஜுனுக்கூம் சோனாலிக்கும் நடுவுல ஊடல் நடக்க காரணமா இருப்ப்பாங்களே.. அது இவர்தான்.. சில வருடம் கழித்து திரும்ப நடிக்க வந்ந்திருக்காரு...
நான் நினைத்தாலே படம் ஒரு சிடி கூடா பார்த்து முடிக்கலை டீச்சர்ர்.. படத்தின் காட்சிகள் பலவற்றில் fake-ஆக இருப்பதுப்போல் ஃபீலிங்.
வாங்க தேவ்.
வெட்டிப்பயலை இப்ப என்னத்துக்கு இழுக்கறீங்க? புது மாப்பிள்ளை அவர். கொஞ்சம் மிடுக்கு காமிச்சுட்டு வரட்டும்:-)))
வாங்க பிரபா.
சின்ன பட்ஜெட்....தயாரிப்பாளர்களா...?
சிலசமயம் எனக்கே எனக்கு மட்டுமுன்னுக்கூட படம் எடுத்து அனுப்பறாங்கப்பா(-:
வாங்க மை ஃப்ரெண்ட்.
நம்ம ஆடுமாடு சுசின் ஜாதகத்தை அனுப்பிட்டார்:-))))
//படத்தின் காட்சிகள் பலவற்றில் fake-ஆக இருப்பதுப்போல் ஃபீலிங்.//
இந்தப்படம்னு இல்லை. வர்ற பிரபலங்களின் படங்களும் இதுக்கு விதிவிலக்கல்ல:-))))
இந்தப் படம் ஆனந்த் என்ற அழகான தெலுங்குத் திரைப்படத்தின் சொதப்பலான தமிழாக்கம்
http://en.wikipedia.org/wiki/Anand_(2004_film)
Post a Comment