Tuesday, November 06, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 44

28/2
பத்துநாளா வீட்டை ஒழுங்கு பண்ணறதும் சாமான்களை எடுத்து வைக்கறதுமாவே இருக்கோம்! பசங்க ஒரு வழியா செட்டில் ஆயிருச்சுங்க!
கப்பு மகளுக்கு ஒதுக்குன ரூமை எடுத்துக்கிட்டா(ள்)ன்! அவ(ளு)னுக்கு 'டபுள் பெட்!'


கராஜ் பின் கதவு மூலம் வெளியே போறான். கொஞ்ச நேரத்துலே நல்ல பிள்ளையா தானே திரும்பிடுறான்! சாப்பாடு, டைம் டைமுக்கு!
'அப்பி, ச்சுச்சூ' எல்லாம் 'லிட்டர் ட்ரே'லே! ஜமாய் ராஜா ஜமாய்!!!!


ஜிகே மட்டும் லேசுப்பட்டவனா? பெரிய ஆள்! கப்பு ஒரு அறையை எடுத்துக்கிட்டதும், இன்னொரு படுக்கை அறையை இவன் எடுத்துக்கிட்டான். பழைய வீட்டுலே அறைகளுக்கு எண்கள் வச்சுச் சொல்லிக்கிட்டு இருந்தேன்.
இங்கே அறைகளுக்கு இனி இவுங்க பெயர்தான். கப்பு ரூம், ஜிக்கு ரூம்:-)



அங்கே ரொம்ப நாள்(வருசம்)வரைக்கும் ஒரு அறையை 'எம்மா ரூம்'னே சொல்லிக்கிட்டு இருந்தோம். அவுங்கதான் அங்கே பழைய ஓனரின் பொண்ணு..அப்புறம் ஒரு நாள் திடீர்னு ஞானோதயம். இந்த வீட்டைத்தான் நாம் வாங்கிட்டோமே.... இன்னும் என்ன எம்மா?ன்னு:-)))) நம்பர் போட்டது அதுக்குப் பிறகுதான்.






நாளைக்குக் காலையிலே காங்க்ரீட் போட ஆளுங்க வராங்களாம்! நேத்தே கம்பியெல்லாம் போட்டு ரெடி பண்ணிட்டாங்க.
1/3
காலையிலே 6 மணிக்கெல்லாம் வந்துட்டாங்க.. வெளியே அலங்காரத்தூண்களுக்கு ப்ளாஸ்டிக் ராப்பர் போட்டுச் சுத்திட்டு, காங்க்ரீட் ஊத்திட்டாங்க.









அப்புறம் அதும்மேலேயே ஒரு மஞ்சக்கலர் பவுடரை அள்ளித்தெளிச்சுக்கிட்டு இருக்காங்க. அப்புறம் அதைச் சமப்படுத்தி இன்னும் ஒரு டார்க் ஷேடு மஞ்சப் பவுடர் போட்டுக்கிட்டே இருக்காங்க!

நானும் கிளம்பி லைப்ரரிக்குப் போயிட்டு 12 மணிக்கு வந்தேன். அப்ப(வும்) ஒரு செம்மண்ணு கலருலே இன்னோரு பவுடரைத் தூவிக்கிட்டு இருந்தாங்க!
ரெண்டு பக்கமும் கம்பிப்பிடி வச்ச ஒரு பலகையிலே ஒரு ஆள் ஏறி நிக்கறார். அதே மாதிரி இன்னொரு பலகை பக்கத்துலே இருந்துச்சு. அதுலே
தாவிக்கிட்டு மறுபடி முதல் பலகையை இந்தப்பக்கம் வச்சுட்டு உடம்பை அழுத்தி இந்தப் பலகைக்கு ஒரு தாவு. ஸ்டாம்ப்டு காங்க்ரீட்டுக்கு டிசைன்
போடறாராம்:-) இதுக்கு மட்டும் மெஷின் இல்லைபோல. ஈரக் காங்ரீட் மேலே
மெஷினை ஓட்டமுடியாதாமே. அழுந்திருமாம்.




நான் மறுபடியும் ஒரு மீட்டிங்குக்கு போயிட்டு சாயந்திரம்தான் வந்தேன். செங்கல்சிகப்பா பவுடர் அப்பியிருக்கு! குறுக்காலெ யாரும் போகாம இருக்க
கயிறு கட்டி வச்சிருக்கு! அவுங்க மறுபடி நாலைஞ்சு நாளுலே வந்து கழுவிட்டு சீலெண்ட் போடுவங்களாம்! அதுவரைக்கும் பின்பக்க வழிதான்!




2/3
நெட் கனெக்ஷன் ADSL போட ஒரு ஆள் டெலிகாம்லெ இருந்து வந்தார். பாக்கறதுக்கு இந்தியன் மாதிரி இருக்கேன்னு கேட்டேன். தென்
ஆப்பிரிக்காவாம். பேர் குமாரன். கேபிள் போடறப்ப ஒர்க் ஆர்டர்லே என் பேரைப் பார்த்துட்டு, நீங்கதான் துள்சியா. என் மனைவிக்கு ஒரு
துள்சியைத் தெரியும்ன்னு சொன்னார். அப்பத்தான் ஞாபகம் வருது, ஒரு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவங்க ஒரு உதவி முந்தி கேட்டது!
அவுங்க மனைவி பேரு அவாந்த்ரியான்னு கேட்டா, ஆமாம்ன்னு சொன்னார். பாருங்க உலகம் எப்படி சுருங்கிருச்சுன்னு!


புது கனெக்ஷன் நல்ல ஸ்பீடா இருக்குன்னு நினைக்கறேன்! பார்க்கலாம். ஆனா, டிஸ்கனெக்ட் செய்யாம அப்படியே விட்டுறலாமுன்னு சொன்னதுதான் எப்படியோ இருக்கு!`' டயல் அப்'லெ அப்பப்ப டிஸ்கனெக்ட் பண்ணி அதுவே ஒரு பழக்கமா ஆகிப்போயிருக்கு. மனுஷன் பழக்கத்தின் கைதிதானெ? நல்ல வேளை இதுக்கு ஃப்ளாட் ரேட்தான்.


4/3
9 மணிக்கு ரெண்டுபேர் வந்து ஹைப்ரெஷர் மோட்டார்வச்சுக் கழுவுறாங்க, கழுவறாங்க, அப்படிக் கழுவுனாங்க! அழுக்குச் சிகப்பான கலருலே தண்ணி
அடிச்சுக்கிட்டுப் போகுது! அப்புறம் பார்த்தா, கதவுக்குள்ளெயும் தண்ணி கசிஞ்சு, உள்ளேயும் நனைஞ்சிடுச்சு! பழைய துணி எடுத்துத்
துடைச்சுக்கிட்டு இருந்தேன்!
கொஞ்ச நேரம் கழிச்சு வரோம் அதுக்குள்ளெ நல்லா காயணும்ன்னு சொல்லிட்டுப் போனாங்க! பழையபடி 2 மணிக்கு வந்தாங்களா, அவுங்க
கூடவே தார் போடற ஆளுங்களும் வந்து ஃபுட் பாத்'லே தார் போட்டு ரோல் செஞ்சாங்க!




அப்புறம் ஒரு சீலண்ட் மாதிரி என்னத்தையோ ஸ்ப்ரே செஞ்சாங்க. ரெண்டுதடவை ஸ்ப்ரே செஞ்சுட்டு, திங்கள் கிழமை நடக்கலாம். நாலுநாள் கழிச்சு வெள்ளிக்கு வண்டியை அதும்மேலே விடலாம்ன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க! இனி கேட் ஃபென்ஸ் போடற கேரிக்குச் சொல்லணும்! எத்தனை கேரிகள் இங்கெ!!!!



5/3 முதல் 17/3 வரை:
கேரிக்குச் சொல்லியாச்சு. வந்து அளவெடுத்துக்கிட்டுப் போயிட்டார். பின்னாலே தோட்டத்துக்கு என்ன செய்யலாமுன்னு மண்டையை
ஒடச்சுக்கிட்டு யோசிக்கிறோம். நமக்கோ வயசாகிக்கிட்டே போகுது. சுலபமா மெயின்டைன் செய்யறமாதிரி தோட்டம் வேணும்.
முந்திமாதிரி தோட்டவேலை செய்ய இப்பெல்லாம் தெம்பு இல்லை!

முன்னால் போட்ட ஸ்டாம்ப்டு காங்க்ரீட்லே ஒரு மயிரிழை அளவில் விரிசல் வந்துருக்கு. தெருப்பக்கம் இருந்து ஆரம்பிச்சு அப்படியே கராஜ் தூண் வரைக்கும் போயிருக்கு. காங்க்ரீட் போட்ட ஆளுங்களுக்குத் தகவல் அனுப்புனோம். அப்பத்தான் தெரியுது, போட்ட மறுநாளே ஒருத்தர் வந்து காங்க்ரீட்டைக் கட் பண்ணி இருக்கணுமாம். வரலையான்னு எங்களையே கேக்கறாங்க. தரையை கழுவவந்த ஆளுங்களும் அங்கே கட் பண்ணாததைப் பார்க்கலையாம்!


இப்ப ஒருத்தர் வந்து கட் பண்ணிட்டுப்போனார். விரிசல் விழுந்தை ஒண்ணும் பண்ண முடியாதாம். அது அப்படியேதான் இருக்குமாம். அதுக்குமேலெ ஒரு சீலண்ட் போடறேன்னு சொல்லிப் போட்டாங்க.






இதுக்கு நடுவிலே இந்த வீட்டுக்குப் பின்னாலே ஒரே டென்ஷன்! பின்னாலேன்னா இந்த வீட்டு வேலைங்க சம்பந்தமா
ஓடியாடிக்கிட்டு இருந்ததைச் சொல்றேன், நீங்கவேற வீட்டுக்குப் பின்பக்கத்துலே டென்ஷன் வந்து உக்காந்திருக்குன்னு
நினைச்சுக்கப்போறீங்க:-)


கொஞ்சம் மனசுக்கு ஓய்வு கொடுக்கலாமுன்னு பார்த்தேன். இவரும் சொன்னார் எங்கியாவது ஒருவாரம் ச்சின்ன ஹாலிடே
போகலாமுன்னு. இந்தப் பசங்க இருக்காங்களே, அவுங்களை எங்கே கொண்டு விடறது? அதுலே ஒரு ஆளுக்கு ஒடம்பு சரியில்லை.


சக்கரை வியாதி. கவனமாப் பார்த்துக்கிட்டு, அப்பப்பத் திங்கத் தரணும். இன்னொண்ணு, எங்கியாவது கொண்டுபோய் விட்டா, சாப்பிடவே சாப்பிடாது!



நான் மட்டும் சிங்கப்பூர் போகலாமுன்னு முடிவாச்சு. ஒரு வாரத்துலே இந்தியா போயிட்டு வர்றதுன்னா வேஸ்ட்தானே?
(ஆச்சு. போய்வந்து இதைப் பத்திப் பதிவுகளும் எழுதிக் குவிச்சாச்சு.)


பளபளன்னு இருக்கற காங்க்ரீட் தரையிலே கறுப்பா அசிங்கமா ஒரு டயர் தடம். இது அகலம் குறைஞ்சது. என்னவா
இருக்குமுன்னே மொதல்லே புரியலை. விசாரணைகளுக்கப்புறம் தெரியவந்த விவரம் கோவத்தைத்தான் கொடுத்துச்சு.


பசங்க செய்யற வேலையாம். எங்கியாவது இப்படி அழகாத் தரை இருந்தா சைக்கிள்லே போய் டயரைத் தேச்சு அங்கே
மார்க் பண்ணிட்டுப் போவறது ஒரு வேடிக்கை விளையாட்டாம். அந்த வார இறுதி வந்தவுடன், இதை அழிக்கறதுக்காக
என்னென்னவோ சொல்யூஷன் எல்லாம் வாங்கிவந்து போட்டு, ஊறவச்சு ப்ரஷ் வச்சுத் தேய்ச்சோம். லேசாப் போனதே
தவிர அப்படியேதான் இருந்துச்சு. தேய்ச்ச இடத்துலே காங்க்ரீட் மேலே போட்ட பாலீஷ் மறைஞ்சு மனசுக்குக் கஷ்டமாப்
போச்சு. மறுநாள் பார்த்தா இன்னும் ரெண்டு இடத்துலே இதே மாதிரி பண்ணிவச்சுட்டுப் போயிருக்கறான். யாருன்னு
தெரியலை. இதென்னடா புதுத் தொந்திரவுன்னு ஆச்சு.


கேட் போடற வேலையை முடுக்கி விட்டோம். கேட் ஒரு மாதிரி வந்துருச்சு.

அப்படியும் ஒரு நாள் இவர், ட்ரைவ் வே கேட்டைத் திறந்து வச்சுட்டுக் கராஜ் முன்னாலே வண்டியை நிறுத்திட்டுச் சாப்பிடவந்தார். ஒரு பத்து நிமிஷம்தான் இருக்கும். எவனோ அதுக்குள்ளே அங்கே காருக்குப்
பின்னாலே சைக்கிள் டயர் பர்ன் செஞ்சுவச்சுட்டுப் போயிருக்கான். சல்லியம்.



இனிமேப்பட்டு எப்பவும் கேட்டை அடைச்சு வைக்கணும். பசங்களுக்கு இங்கே ஏகப்பட்ட உரிமைகள் இருக்கு. பிடிபட்டாலும்
அவுங்களுக்குத் தண்டனை கிடையாதுன்றதாலே எல்லாம் துளிர்விட்டுக் கிடக்குங்க. எதுக்கும் இருக்கட்டுமுன்னு போலீஸ்லே ஒரு
புகாரும் கொடுத்து வச்சேன்.


தொடரும்...............

==========================

5 comments:

said...

தீபாவளி நல்வாழ்த்துகள் துளசி.

என்ன ஒரு கொழுப்பு இந்தப் பசங்களுக்குப்பா.

யாரும் ஒண்ணும் சொல்லக் கூடாதா.
அநியாயமா இருக்கே.

ரொம்ப சகிப்புத் தன்மை வேணும்னு தோணுது.
நம்ம வீட்டில மாங்காய் காய்ச்சாத்தன் இந்தப் பசங்க கல் அடிக்கும் மத்தபடி நம்ம ஊரு பசங்க அப்படி இல்லைனு நினைக்கிறேன்.

said...

டெஸ்ட்?????

said...

வாங்க வல்லி.

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

அதான்ப்பா பெத்த பிள்ளைகளையே டிஸிப்ளின் செய்யறோமுன்னு சொல்லி லேசா ஒரு தட்டுத்தட்டுனாலும் சட்டம் பாஞ்சுரும்.
நாமெல்லாம் மத்தவங்கதானே?

பொருமத்தான் முடியும், இன்னும் கொஞ்சம் பொறுமை வேணுமுன்னு:-)

said...

வீட்டுலதான் அவ்வளவு ரென்சன் அப்படின்னு நினைச்சா, ட்ரைவ்வே போடும் போது கூடவா!!

ரொம்ப கஷ்டம்தான்.

said...

வாங்க கொத்ஸ்.

இந்த ரென்சன் எப்படியெல்லாம் வேசங்கட்டிக்கிட்டு வருதுன்னு பாருங்க(-:

போதுண்டா சாமின்னு இருந்துச்சு:-)