Wednesday, November 07, 2007

பீஸ் ஸால் (கே) பாத்

பயந்துட்டீங்களா? இல்லைதானே? இது இருபது வருடங்களுக்குப்பின்.......
அப்ப இது?


சிம்பிள். .....இருபது வருடங்களுக்கு முன்.....எடு அந்தக் கொசுவத்தியை:-)


தீபாவளி வருதே, கொஞ்சம் கடலை மாவு இருந்தால் (என்) மனசுக்குப் பிடிச்ச மைசூர்பா(க்) பண்ணிக்கலாமே.......தேடுதேடுன்னு தேடினேன். ஊஹூம்......



கடைசியில் இங்கே இருந்த ஒரே கடையில் கேட்டப்ப, அந்தச் சீனருக்குப் புரிய வைக்கறதுக்குள்ளே தாவுதீர்ந்து போச்சு. கடலைப்பருப்பைக் கண்டுபிடிச்சு, அதைப் பவுடரா அரைச்சுக் கிடைக்குமான்னு 'விளக்கி'னேன்.
பக்கத்துலே ஒரு மணி நேரப்பயணத்துலே இருக்கும் ஊரில் ஒருத்தர் 'மில்' வச்சுருக்காராம். அவரைக் கேட்டுட்டுச் சொல்றேன்னார். இந்த நிலைமையில் 'அரைக்கிலோ போதுமுன்னு சொன்னா எங்கே கொலை செஞ்சுருவாரோ'ன்ற பயத்தில் ரெண்டு கிலோ வேணுமுன்னு சொல்லி வச்சோம்.



ஒருநாள் அவர் உண்மையாவே ஃபோனில் கூப்புட்டுச் சொல்றார், கடலைமாவு அரைச்சு வந்துருச்சாம். ஓடுனோம்.......வாங்கியாறத்தான்.



அதுக்கப்புறம் இன்னும் சில வருசங்கள் ஆனதும் ஃபிஜி இந்தியன் கடைகள் (ஒண்ணு தொறந்தா இன்னொண்ணு மூடிரும் ) வந்துவந்து போகும் காலக்கட்டத்தில் 'பேஸின்' கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு.





ஆக்லாந்துலெ இருந்து இனிப்புகள் பாக்கெட் போட்டு, இந்தியன் கடைகளில்( இப்ப நாலு இருக்கு)கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. பரவாயில்லை,சுமாரா இருக்கு. நமக்குக் 'கோமளவிலாஸ்' இனிப்புகள் கோபால் மூலமாக் கிடைக்குது. என்ன.....தீபாவளிச் சீஸனில் சிங்கைப் பயணம் அமையணும்.



போனவருசம் தீபாவளி சமயத்தில் ஆஸ்தராலியா போய்வரும் வாய்ப்புக் கிடைச்சதுலெ, இனிப்பு அங்கெயிருந்து வாங்கியாந்தோம்.


இந்த இருபது வருசத்தில் முதல்முறையா உள்ளூர்லே ஒரு இந்திய உணவகத்தில் இனிப்புகள் தீபாவளிக்குன்னே செஞ்சு, மக்களுக்குச் சேவை செய்யும்விதமா விற்க ஆரம்பிச்சிருக்காங்க.



கடை முதலாளி விவரம் சொன்னதும் பஹூத் குஷ் ஆச்சு. எண்ணி ஏழுவிதம் செய்யறாராம். அதுலெ பேஸின் லாடு, பேஸின் பர்ஃபி, குலாப் ஜாமூன் தவிர மற்றதையெல்லாம் வாங்கிவந்துட்டேன்.








நோகாம நோம்பு கும்புடக் கத்துக்கிட்டேன் இப்பெல்லாம்:-))))



இதோ.............படங்கள் உங்களுக்கு.



பட்டாஸ் இல்லாத தீவுளியா? நெவர்..... மூணு நாளுக்கு முன்னே வெடிச்சாத் தப்பா?








அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.



என்றும் அன்புடன்,


துளசி, கோபால் & (த ஒன் அண்ட் ஒன்லி ) கோபாலகிருஷ்ணன்.

43 comments:

said...

'இனிப்பான' தீபாவளி நல்வாழ்த்துக்கள்

said...

உங்களுக்கும் என் உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர். ;-)

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
உங்களுக்கும் என் உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர். ;-)

அக்காவுக்கும் , டீச்சர்கும் ஒரு ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்ய்....

said...

வாங்க வாங்க
மை ஃப்ரெண்ட், சங்கத்துச்சிங்கம் தேவ், டெல்ஃபீன் & பேபி பவன்.

சந்தோஷமா இந்தப் பண்டிகையைக் கொண்டாடுங்க. காரணகாரியம் பார்க்கணுமா என்ன?

விழாக்காலம். அன்போடு இருக்கலாம்.

said...

மிட்டாயி பஹுத் அச்சா ஹை. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

said...

துளசியக்கா.. மசூர்பாக்கு சூப்பர்..அது சரி.. பூனை என்ன கோவிச்சுகிட்டு இருக்கு.. ஸ்வீட் பிடிக்காதோ.. நீங்க வச்ச எல்லா ஸ்வீட்டும் எனக்கு பிடிக்கும்.. அதிலேயும் 3 வது பாதாம் பர்பி / காஜூ கத்லி மாதிரி இருக்கு.. ரெண்டுமே என் லிஸ்டிலே 1 ராங்க்...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

said...

நோகாம நோம்பு கும்புடக் கத்துக்கிட்டேன் இப்பெல்லாம்:-))))

ஹா..ஹா...
துளசி அக்கா.மனங்கனிந்த. தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
அன்புடன் ரசிகன்..

said...

happy diwali

said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!


யக்கோவ்.. இனிப்புகள் சரி... காரம் எங்கே? அப்புறம்.. தீபாவளி மருந்து?

said...

கோபால் சாருக்கும் உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர்!

//காரணகாரியம் பார்க்கணுமா என்ன?
விழாக்காலம். அன்போடு இருக்கலாம்//

நச்!

சரி..ஸ்வீட்-ல எல்லாம் இருக்கு!
(என்) மனசுக்குப் பிடிச்ச மைசூர்பா(க்) எங்கே எங்கே எங்கே?
நீங்களும் ஷைலஜா கொடுக்கப் போவதா சொன்ன மைசூர்பாக்கு தான் கொடுக்கப் போறீங்களா? ஐ மீன் மைசூர் அல்வா? :-))))

said...

டீச்சர் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அந்த 4வது படத்தில் இருந்து ஒரு ரெண்டு துண்டை பார்சல் பண்ணிடுங்க :))

said...

உங்களுக்கும் GKக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

Anonymous said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

said...

அத்தனையும் வாங்கி ஜிகே முன்னாடி வெச்சுட்டீங்க. நீங்களும் ஒரு வாய்ச் சாப்புட்டுக்கிருங்க.

இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்.

said...

அட பீஸ் பாத் அப்படின்னு தலைப்பு படிச்ச உடனே எதோ சாப்பாடுன்னு வந்தேன். இப்படி ஸ்வீட்டைக் காட்டி வயத்தெரிச்சலைக் கிளப்பறீங்களே. நமக்கு இதெல்லாம் ஆகாதாம். தங்கமணி சொல்லிட்டாங்க.

தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

அப்படியே புளி கிடைக்காமல் குழம்பு வைக்க கஷ்டப்பட்டதையும், நல்லெண்ணை இல்லாமல் தீபாவளியன்று 'கங்கா ஷ்நானம்' இல்லாது போனது பற்றியும் 'வீ.வா.வா' முடிஞ்சதும் விரிவா ஒரு பதிவ எழுதுங்க.

இனிய தீபாவளி நல்வாழத்துக்கள்.

பி.கு.; 'வீ.வா.வா' எஃபெக்டுனால 'பேஸன்' 'பேஸின்' ஆயிருச்சு போல.

said...

துளசி
ஏதோ செளசால் பெஹலேன்னு பாட்டு பாட போறீங்களோன்னு நினைச்சேன். ஒரே சுவீட் படமா பதிவே இனிக்குது. உங்களுக்கும், கோபால், பொண்ணு, ஜிகே எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். புது பேனர் போட்டு சங்கத்துல கொண்டாடலையா?

said...

வாங்க வித்யா.

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள்.

வாங்க தீபா.
அனாவசியமா இதெல்லாம் எதுக்குன்னு பூனை
நினைக்குதோ.....:-)



வாங்க ரசிகன்.

வயசாகுதுல்லெ....இனி இப்படித்தான் பண்டிகைகள்:-))))


வாங்க குணா.

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க குணா.

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க பாரதீய நவீன இளவரசரே.....

காரத்துக்கு இட்லி மொளகாய்ப்பொடி இருக்கு. போதாதா?

மருந்து......?

தினமும் மருந்தாலெதான் வாழ்க்கை ஓடுது. இன்னிக்குமான்னு விட்டுட்டேன்:-)

said...

வாங்க KRS.

உங்க வா(ழ்)த்தைக் கோபாலுக்கு அனுப்பி இருக்கேன்.
அல்வாவுக்குப் பயந்துக்கிட்டு ஆள் எஸ்கேப்:-))))
ஊரில் இல்லை.

மைசூர் பா(க்) பண்ணாத் தனியாத்தான் திங்கணும். நீங்க புறப்பட்டு வாங்க.
செஞ்சுறலாம்:-)

said...

வாங்க கோபிநாத்.

ரெண்டு துண்டு என்னங்க ரெண்டு துண்டு? மொத்தமே உங்களுக்குத்தான்:-)

வரப்போற (இன்னும் 3 மாசம் கழிச்சு)பிறந்தநாளுக்கான அட்வான்ஸ் வாழ்த்துக்கு நன்றி:-)

said...

வாங்க இளா.
நன்றி. உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நமக்குத்தானெ மொத தீபாவளி:-)))

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ராகவன்.

ஜிகேவுக்குப் பார்க்கத்தான் முடியும். சக்கரைநோய் இருக்குல்லே.....பாவம்(-:

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

டீச்சர்,

தீபாவளி பொறந்தாச்சு. எல்லாருக்கும் ரிப்ளை போடுறது கொஞ்சம் விட்டுட்டு எங்களுக்கு இட்லி, தோசை, கோழி கறி, மட்டன் பிறட்டல்ன்னு செஞ்சு பார்சல் பண்ணுங்கோ. :-)

தீபாவளி வாழ்த்துக்கள். :-)

said...

வாங்க கொத்ஸ்.

peas cha(va)l bath ன்னு நினைச்சுட்டீங்களா?

நம்ம ஜிகெவும்தான் இதெல்லாம் சாப்புடக்கூடாது. அதான் கண்ணாலே சாப்புடறான்.

இன்னிக்கு மட்டும் ஒரு விள்ளலுக்குத் தங்கமணிகிட்டே ரெகமெண்ட் பண்ணவா?

said...

வாங்க சுரேஷு.

ஹேப்பி 'தீ' வாளி.

'இதயம்' கிடைக்குது இப்ப:-)))

//பி.கு.; 'வீ.வா.வா' எஃபெக்டுனால 'பேஸன்' 'பேஸின்' ஆயிருச்சு போல.//

கண்டுபிடிச்சுட்டீங்களா? :-)))) அதெ அதே...:-)


உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க பத்மா.
நலமா? ஆளையே காணோம்?

சங்கத்துலே சனிக்கிழமைக் கொண்டாட்டம். புது பேனர் நவராத்திரிக்கே வந்துருச்சு:-)))

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. உங்க வீட்டுலெயும் எல்லாருக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.

said...

.:: மை ஃபிரண்ட் ::. has left a new comment on the post "பீஸ் ஸால் (கே) பாத்":

டீச்சர்,

தீபாவளி பொறந்தாச்சு. எல்லாருக்கும் ரிப்ளை போடுறது கொஞ்சம் விட்டுட்டு எங்களுக்கு இட்லி, தோசை, கோழி கறி, மட்டன் பிறட்டல்ன்னு செஞ்சு பார்சல் பண்ணுங்கோ. :-)

தீபாவளி வாழ்த்துக்கள். :-)

அக்காவுக்கு ரிப்பிட்டெய்ய்ய்ய்.... ஆனா நாங்க சைவம் அதனால இட்லி, தோசை, வடை, பொங்கல், பாயசம் பார்சல் பண்ணுங்கோ. :-)

said...

என்னங்க மை ஃப்ரெண்ட்.

தீபாவளிக்கு அசைவமா? அடடா.....
கொஞ்சம் பொறுங்க. சைவ ஆடும், சைவக்கோழியும் கிடைக்குதான்னு பார்க்கலாம்.

இங்கே ஒரு ச்சீன வெஜிடேரியன் சாப்பாட்டுக்கடையில் எல்லா நான்வெஜ் டிஷ்ஷும் சைவமாக் கிடைக்குது. டொஃபூலெ செஞ்ச கோழி,ஆடு,மாடு எல்லாமெ:-)

said...

பேபி,
எப்பவும் ரிப்பிட்டுத்தானா?:-))))

பெரியவுங்களைப்பார்த்துக் கத்துக்கும் பருவம்.இல்லே?

தீபாவளிக்குப் பொங்கல் பண்ணிறலாம். பிரச்சனை இல்லை. பொங்கலுக்குத்தான் தீபாவளி பண்ண முடியாது :-)

நம்ம வீட்டுலெ இன்னிக்கு வெ.தோசை மட்டும்தான். அனுப்பவா?

செஞ்சாத் திங்க ஆளில்லை(-:

said...

//துளசி கோபால் said...
என்னங்க மை ஃப்ரெண்ட்.

தீபாவளிக்கு அசைவமா? அடடா.....
கொஞ்சம் பொறுங்க. சைவ ஆடும், சைவக்கோழியும் கிடைக்குதான்னு பார்க்கலாம்.

இங்கே ஒரு ச்சீன வெஜிடேரியன் சாப்பாட்டுக்கடையில் எல்லா நான்வெஜ் டிஷ்ஷும் சைவமாக் கிடைக்குது. டொஃபூலெ செஞ்ச கோழி,ஆடு,மாடு எல்லாமெ:-)
//

தீபாவளி அன்னைக்குதான் எல்லாரும் வீட்டுல இருப்போம். அன்னைக்குதானனேங்ககாம்மா அவங்க சமையலை எங்க மேலே டெஸ்ட் பண்ணமுடியும்?

தீபாவளி அன்னைக்கு நானும் வெஜிடேரியந்தான். கோழி, ஆடு வகைகள் சைவங்கிறதுனால அது மட்டுமெ சாப்பிடுவொம். கீரை, பழங்கல் எல்லாம் நாந்வெஜ் என்பதால் இன்னைக்கு அந்த பக்கம் திரும்பிகூட பார்க்கப்போவதுல்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறேன். :-))

இங்கேயும் சைனீஸ் வெஜிடேரியன் நிறைய கிடைக்கும். :-))

said...

இனிப்பான பதிவு. படத்துல நமக்கு புடிச்சது, முந்திரி (கா) பர்பிதான்...வச்சு வெளு வெளுனு வெளுப்பேன்!

நேத்து, தங்கமணியோட சேர்ந்து, முறுக்கும் லட்டும் செஞ்சேன்!!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

said...

அட்டகாசம், துளசி! பட்சணம், வெடி, குதூகலமான எழுத்து, எல்லாமே பிரமாதம். வேறெதுவுமே தேவை இல்ல்லை.

நிறைவாக இருந்தது.

மிகுந்த அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

said...

\\துளசி கோபால் said...
வாங்க கோபிநாத்.

ரெண்டு துண்டு என்னங்க ரெண்டு துண்டு? மொத்தமே உங்களுக்குத்தான்:-)

வரப்போற (இன்னும் 3 மாசம் கழிச்சு)பிறந்தநாளுக்கான அட்வான்ஸ் வாழ்த்துக்கு நன்றி:-)\\

ஆஹாக..சொதப்பிட்டனா...சாரி டீச்சர்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)

சொதப்பியதால் தானே உங்கள் பிறந்தநாள் தெரிஞ்சிக்கிட்டேன்..டாங்கீஸ்

said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் துளசி. உங்களுக்கு இன்னேரம் தீபாவளி முடிஞ்சே போயிருக்கும் :)

said...

வாங்க தஞ்சாவூரான்.

//நேத்து, தங்கமணியோட சேர்ந்து, முறுக்கும் லட்டும் செஞ்சேன்!!//
நாடுவிட்டு வந்துட்டா நடக்கும் நல்லதுகளில் இது(வும்) ஒண்ணு.
வேலைகளைப்பகிர்ந்து செய்யறதைச் சொன்னேன்:-)

said...

வாங்க எல்லே ராம்.

அடடா....பெரிய மனுசங்கெல்லாம் வந்துருக்கீங்க.
எனக்குக் கையும் ஓடலை,காலும் ஓடலை.
'ஆ வி தீ ம' லெ வந்ததுக்கும் வாழ்த்து(க்)கள்.

ஒரு நண்பர்கிட்டேச் சேதி சொல்லி இருக்கேன். அவரும் 'வாங்கி'ப்படிச்சுட்டுச் சொல்றேன்னார்;-))))

said...

கோபிநாத்,
இதுக்குத்தான் வகுப்புலே விழிப்பா இருக்கணுங்கறது:-))))

said...

வாங்க ஜெயஸ்ரீ.

தீபாவளி மட்டும்தான் முடிஞ்சது. அதுக்கு ரெண்டு நாள் முன்னெ ஆரம்பிச்ச 'தன் தேரஸ்' அடுத்த தீவுளிவரைத் தொடரும்:-))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி. உங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
(நான் அனுப்பின கங்கா வந்து சேர்ந்தாளா?)

said...

அனைவருக்கும் என் (belated) தீபாவளி வாழ்த்துக்கள்! தீபாவளி பட்சணமெல்லாம் அதிகமா சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காம சுறுசுறுப்புடன் திகழ என் வாழ்த்துக்கள். (அனுபவம் பேசுது... வேறென்ன :))

http://srinig.wordpress.com/

said...

துளசி, அய்யோடா இது படத்தில மட்டும் பாக்க முடியுதே.
ஜிகே செல்லம்
நாமெல்லாம் ஒரு குருப்பு.
:))
ரெண்டு கிலோ மைசூர்பாகை என்ன செய்தீங்க.:))

ஐ மீன் கடலை மாவு!!!