Monday, November 19, 2007

ஊருக்கு உழைப்பவர்(கள்)

தன் வீட்டுக்குத் தவிடு இடிக்கவில்லையாம் ஊரார் வீட்டுக்கு இரும்பிடிக்கப் போனாளாம்.....

நாலுநாள் லீவு எங்களுக்கு மட்டும். மத்த மக்கள்ஸ்க்கு வெறும் மூணே நாள்தான். எங்கூர்லெ எக்ஸிபிஷன் நடக்குது. வருசாவருசம் மாடு,ஆடு, பன்னி, கோழின்னு எல்லா ரூரல் விஷயங்களும் வந்து போறக் கொண்டாட்டம்.
இல்லேன்னா எங்களைப்போல இருக்கும் 'நகரத்தார்'களுக்கு இந்தக் கிராம விவகாரம் எல்லாம் புரிபடுமா? வெறும் ஆடுமாடுக(கா)ளைப் பார்த்துப்பார்த்து 'போர்' அடிக்காம இருக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வேணுமுல்லெ? ராட்சஸ ராட்டினம், துப்பாக்கியிலே குறிபார்த்துப் பலூன் சுடறதுன்னு எல்லா மெரினா சமாச்சாரங்களும் இருக்கும், மொளகாய் பஜ்ஜி தவிர.


'சாஸேஜ் சிஸில்' ன்னு இறைச்சியும், வெங்காயமும் வதங்குற மணம்தான் ஒரே தூக்கல். நாடு எவ்வழியோ நாமும் அவ்வழின்னு மொத மூணு நாள் ஊர் சுத்தியாச்சு. இதுலே ஒரு நாள் நம்ம கிங் வந்து அடுக்களைப் பக்கத்து அவுட்டோர் ஏரியாவை 'பேனல்ஸ்' போட்டுச் சரி செஞ்சு கொடுத்துட்டார்.

நேத்து கடைசி நாள். ஒழுங்கு மரியாதையா வீட்டு வேலைகளைக் கொஞ்சம் செய்யவேணுமுன்னு முடிவு செஞ்சு, தோட்டத்துலே களையெடுக்க ஆரம்பிச்சோம். என்னத்தை 'லோ மெயிண்டனன்ஸ்'? 'பீச்'' கூழாங்கல்லுக்குள்ளில் இருந்து கண்டமேனிக்கு முளைச்சிருக்கு 'வீடுகள்'. வீட் இல்லாத வீட்டைப் பார்க்கவே முடியாதோ? ஆனா பாருங்க. உயிர் வாழணும் என்ற ஆசையில் கட்டாந்தரையைக்கூடப் பொருட்படுத்தாம முண்டியடிச்சு முளைக்குதுங்க பாவம். என்னைக்குமில்லாத கொலைவெறி இன்னிக்கு எங்களுக்கு(-:

ஆளாளுக்கு ஆ.....ஆயுதம் எடுத்துக்கிட்டுக் கிளம்புனோம். இன்னிக்கு வெய்யில் கண்ணைத் திறந்துருச்சு. நம்ம தாமரையும் ச்சின்னதாக் கண் திறந்துச்சு. இந்த சீஸனில் முதல் பூ.


"வெய்யில் வந்தா ஒரேதா 'ச்சுள்'ன்னு வரும்
காத்து அடிச்சா ஒரேதா 'ச்சில்'னு அடிக்கும்"

கோபாலின் பொன்வாக்கு.

அதானே...இடைப்பட்ட மாதிரி இருக்கக்கூடாதா?

வேலை செய்யும்போது வாயைத் திறக்காம இருக்க முடியுதா? பேச்சு சத்தம் கேட்டுறக்கூடாது...நம்ம பக்கத்து வீட்டுப்பசங்க 4+1+1 ஓடிவந்துரும். அந்த 4 வரலைன்னாலும் 1+1 தினமும் ரெண்டு மூணுமுறை வந்து என்னைக் கண்டுக்கிட்டுப் போகுங்கள். அதுலே 1 நம்ம வீட்டுக்கு யார் வந்தாலும் கதவைத் திறக்கும்போது அவுங்க பின்னால் நின்னு தரிசனம் கொடுக்கும். காதெல்லாம் நம்ம கேட்டுலேதான்:-)
Boony

இன்னொரு 1 வந்தால் நேரா நம்ம ஜிகேவோட சாப்பாட்டுத் தட்டைத்தேடி ஓடும். அவன் வந்துபோனபிறகு நமக்குத் தட்டுக்கழுவும் வேலை மிச்சம். சுத்தமா நக்கி வைக்கறதுதான்.
Olli

களையெடுக்கறேன் பேர்வழின்னு தரையில் உக்கார்ந்து ஒவ்வொண்ணா பிடுங்கியெடுத்துக்கிட்டு இருந்தப்ப 2+1+1 ன்னு வந்தாங்க. எய்மி, ஐலா, பூனி & ஆலி. தோட்டத்தைப் பார்வையிட்ட பிறகு என்கூட 'பீச்'சில் உக்கார்ந்துக்கிட்டே பேச்சு.

"தாமரைக்குளத்திலே ஒரு தவளையை விடக்கூடாதா? "

" எதுக்கு அதெல்லாமுன்னு ச்சும்மா விட்டுட்டேன்"

" ஜஸ்ட் ஒண்ணே ஒண்ணு விட்டுவையேன். பொண்ணா இருக்கட்டும். அதுலே இருந்து குழந்தைகள் நிறைய வந்துரும்"

"ஆமாம் ஆமாம் . ஜஸ்ட் ஒன்"

ஆலோசனை சொன்ன அக்கா எய்மிக்கு வயசு 6. ஆமாம் போட்ட ஐலாவுக்கு வயசு மூணரை.

"செடிகளுக்குத் தண்ணீ ஊத்தவா?" ஐலா.

" உனக்கப்புறம் நானு" எய்மி.

"பசங்களே.....இப்பத் தண்ணியைத் திறந்துறாதீங்க. நான் இங்கே வேலையை முடிச்சுட்டு எந்திரிச்ச பிறகு " நான்

( முதல்லே தரையிலிருந்து எந்திரிக்க முடியுதான்னு பார்க்கணும்)

" டன்?" கோரஸ்.

"நாட் யெட்" நான்.

அதுக்குள்ளே கோபால் நிறைய வெட்டிமுறிச்சுட்டு எல்லாத்தையும் ஒரு ப்ளாஸ்டிக் தார்பாலீன்லே இழுத்துக்கிட்டு வந்தார்.


பேச்சோடு பேச்சா.....

" ஐலாவுக்கு எதாவதுத் தின்னக் கிடைக்குமா?"

அப்ப உனக்கு ஒண்ணும் வேணாம்தானெ? நேத்துப் பல்வேற பிடுங்கி இருக்கே"

"அது நேத்துதானே. இன்னிக்கு எல்லாம் தின்னலாம். 'ஆஆஆஆ' பார்த்தியா....ரத்தம் வரலை"
Ila



Amy

பிஞ்சுங்க எவ்வளவு அழகா உதவி செஞ்சதுன்னு பாருங்க. சின்னது தண்ணீ ஊத்துது. பெருசு நடைக்கல்லெல்லாம் கூட்டிப்பெருக்கிக் கழுவுது. அவுங்க அம்மா பார்த்துருக்கணும்............தன்வீட்டுக்கு உமி இடிக்க முடியாதாம் ஆனா ஊரார் வீட்டுக்கு இரும்பிடிச்சுக் கொடுப்பானாம்....


துள்சீ'ஸ் லிட்டில் ஹெல்ப்பர்ஸ்

வேலையை முடிச்சதும் ஆற அமர ஒரு ஓய்வு.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலா?

பொதுவாக் குழந்தைகள் ரொம்ப வெகுளி இல்லே? அப்ப எப்ப இந்த பேதங்கள்
வரத்தொடங்குது?

35 comments:

said...

ஹஹா! உங்க வீடு, பக்கத்து வீட்டுகாரங்களையும் வா வாங்குது போல! :p

said...

சின்ன உதவியாளர் பெரிய வாலாய் இருப்பார் போலத் தெரிகிறதே.தன்னோட பச்சை வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு சமத்தாய் வேலை பார்க்கிறாறே

said...

இவ்வளவு அழகா ஹெல்பர்ஸா.
செம ஸ்வீட்டா இருக்காங்களே.
சமத்துக் குட்டிங்க.

நல்லா சொன்னீங்க. அவங்க அம்மா சொன்னா கேக்கறது சிரமம்.

பக்கத்து வீடுனா, கறுக் முறுக்+ செல்லம் கிடைக்குமே:))

said...

பதிவு ரொம்ப அழகாக இருக்கு...:)

said...

//அப்ப எப்ப இந்த பேதங்கள்
வரத்தொடங்குது? //

பெரியவங்க புகுந்து குழப்பும் போது :) இதை எழுதும் போது பக்கத்தில கோவில் மணியடிக்குது :))

அழகான அண்டைவீட்டு மழலைகள். இப்போதும் வந்து போவது உண்டா?

said...

// அவுங்க அம்மா பார்த்துருக்கணும்............தன்வீட்டுக்கு உமி இடிக்க முடியாதாம் ஆனா ஊரார் வீட்டுக்கு இரும்பிடிச்சுக் கொடுப்பானாம்....//
ஹா..ஹா.. துளசி அக்கா.. பாத்து.. பக்கத்து வீட்டுக்காரங்க சண்டைக்கு வரப்போராங்க..

said...

// , பூனி & ஆலி// இவிங்கத்தான் நீங்க சொன்ன பூனியும் ஆலியும்மா.. என்னவோ ஜியாகிராபில வர்ர எனக்கு தெரியாத இனமுனெல்ல நெசச்சிப்புட்டேன்..
எய்மியும் ,ஐலாவும் ரொம்ப அழகாயிருக்காங்க.. (பூனியும் ஆலியும் கூடத்தேன்..)

said...

// வீட்டு வேலைகளைக் கொஞ்சம் செய்யவேணுமுன்னு முடிவு செஞ்சு,//
எதுக்கு நீங்க நம்ம கோபால் மாமா டிபார்ட்மெண்டுலலெல்லாம் தலையிட்டு டிஸ்டர்ப் செய்யனுங்கறேன்?..

said...

// பொதுவாக் குழந்தைகள் ரொம்ப வெகுளி இல்லே? அப்ப எப்ப இந்த பேதங்கள்
வரத்தொடங்குது?//
விளையாட்டா கேட்டுட்டாலும் நிஜமாவே ரொம்பவே சிந்திக்க வேண்டிய கேள்விதான்..

said...

குட்டீஸ்கு எங்க வாழ்த்து

said...

வாங்க அம்பி.

பசங்களுக்கு நம்ம வீட்டுக்கு வர்றதுன்னாவே கொண்டாட்டம்தான். ஊஞ்சலில் ஆடலாமே:-)))

said...

வாங்க கோமதி.

ச்சின்னது ரொம்ப அழகு. இப்பத்தான் இங்கே வர ஆரம்பிச்சிருக்கு. எல்லாமே அதிசயம் அதுக்கு. 'ஆஆ...உனக்கு எவ்வளவு நீள முடி'ன்னு ஆச்சரியம்.
நம்ம பூனை எங்கேன்னு கேட்டப்ப, நான் தூங்கறான்னு சொன்னேன்.

"எங்கே தூங்கறான்?"

"அவனோட அறையில்"

' என்ன அவனுக்குத் தனி அறையா? "!!!!!!

கண்ணை அகலவிரிச்சுப் பேசும்போது கொள்ளை அழகுப்பா.

said...

வாங்க வல்லி.

எனக்கும் இப்பத்தான் ஞாபகம் வருது. எங்க முனியம்மா வீட்டுலே நான் போய் பாத்திரம் கழுவ உதவி செஞ்சிருக்கேன்:-))) எல்லாம் கதை கேட்டுக்கிட்டேதான்.

முனியம்மாவின் கதைகளில் அப்ப ஒரு ரகசிய சுவாரசியம். எல்லாக் கதைகளிலும் ஒரு 'கள்ளப்புருஷன்' இருப்பான்:-))))

said...

வாங்க கோபிநாத்.

'லவ் தை நெய்பர்' இல்லையா? ;-))))

said...

வாங்க கபீரன்பன்.

கோவில் மணி நீங்க சொன்னது 'சத்தியம்'ன்னு சொல்லுது.

பூனி & ஆலி தினசரி வருவாங்க. பசங்க வேலிப்பக்கமிருந்து பேசும். அப்புறம் ஒரு பந்தை இந்தப்பக்கம் எறிஞ்சுட்டு அதை எடுக்கற சாக்கில் வரும்:-))))

பதிவு, முந்தாநாள் நாள் குறிப்பு:-)))

said...

வாங்க ரசிகன்.

பக்கத்து வீட்டம்மா சண்டைக்கு வர நேரமில்லாதவங்க. நர்ஸ்ஸம்மா. நாலு பிள்ளைங்க, ரெண்டு பூனை & ரெண்டு நாய் இருக்கும் பெரிய குடும்பி:-)

ஆலி பூனிக்கே இப்படின்னா முள்ளியை என்னன்னு சொல்வீங்க? அது ஹெட்ஜ்ஹாக் இனம்:-)


முள்ளி பேர் உபயம் நம்ம வல்லி சிம்ஹன்.


என்னதான் கோபால் மாமா டிபார்ட்மெண்ட்டுன்னாலும் அப்பப்ப கூடவே வேலை செய்யறமாதிரி நானும் ஒரு 'ஆக்ட்' கொடுக்கவேணாமா? அஞ்சு நிமிஷத்துக்கொருதடவை, ஃபோன் பெல் அடிக்குதுன்னு உள்ளெ வருவேன். அப்புறம் வேலை செஞ்சு களைப்பா இருக்கும் வூட்டுக்காரருக்கு 'ஜூஸ், நொறுக்ஸ்' எல்லாம் கொடுக்கணுமுல்லே? 'ஆஆஆஅ காமிங்க....ஃபீடிங் டைம்':-))))

said...

வாங்க பேபி பவன்.

குட்டீஸ்க்கு சொல்லிடறேன். அதுசரி, அங்கெ என்னவோ கொசுவத்தி கொளுத்தி வச்சுருக்கீங்க. கொசுவத்திக்கு நாந்தான் 'ஹோல்சேல்' வியாபாரம் தெரியுமில்லே? இனிமே இங்கே இருந்து வாங்கிக்கணும்:-))))

said...

குழந்தைகளுக்கானது உலகம். நம்ம அத நல்லாவே கெடுத்து வெச்சிருக்கோம்.

என்னது? எப்ப பேதம் வருதா? வயசு வரும் போதுதான். அப்பத்தான பேதம் அப்படீங்குற வேதம் வருது.

நாங்க மதுரைல இருந்தப்ப வீட்டு வேலை ஒன்னு செய்ய மாட்டேன். இப்ப மட்டும் என்னவாம். அப்ப பக்க்கத்து வீட்டுக்கு வெளையாடப் போயிருந்தப்போ அந்த ஆண்ட்டி...ராகவன்...பொண்ணு பேரு மறந்து போச்சு. டி.ஆர்.ஓ காலனீல இருந்தோம். கூடப் போயி மாவரைச்சுட்டு வர்ரியான்னு கேட்டாங்க. சரீன்னு போய்ட்டு வந்தேன். வீட்டுக்குத் தெரியாம ஒழிஞ்சி ஒழிஞ்சி. ஆனா தெரிஞ்சிருச்சு. :))))))

Anonymous said...

குட்டிப்பிள்ளைங்க உங்களுக்கு உதவி செய்யறதைப்பாத்ததும் சின்ன வயசில பக்கத்து வீட்டுக்கு ஓடி ஓடி போனது ஞாபகம் வருது. வீட்டுக்கு உழைக்கிறோமோ இல்லியோ இப்படி ஊருக்கு உழைக்கிற கட்சியாச்சே நானும். இப்பத்தான் எல்லாம் மாறிப்போச்சு

said...

பொடிசுங்க கொள்ளை அழகு. சுத்திப் போட சொல்லுங்க.(அங்க இதெல்லாம் உண்டா?).

இப்படி குழந்தை பட்டாளத்தோட இருக்க கொடுத்து வச்சிருக்கணும்.

என் வீட்டம்மாவுக்கு பெரிய பேமிலி. அஞ்சு அண்ணன், அஞ்சு அக்காள்ஸ். மாமனார் வீட்டுக்குப் போனா குறைந்தத்யு சொந்த பந்த, அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் சேர்த்து 25 ஆஜராகும். மினி ஸ்கூல் மாதிரிதான்.

நான் வீட்டுக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு பார்ட்டி. முதல்ல இந்த கோஷ்டி பண்ணின கூத்துகளில் நொந்து நூடுஸ் ஆகிவிட்டேன்.
மாமனார் வீடா...எஸ்கேப்டா சாமின்னு இருக்கும்.

இப்ப அநியாயத்துக்கு பாசமாயிடுச்சு. ஊருக்கு போவும் போது கூட்டத்துல ரெண்டு மூணு குறைஞ்சா கூட ஒரு மாதிரி ஆயிரும். இது என் கதை.

குழந்தைகளோடு உரையாடுதல் கடவுளோடு இருத்தலுக்கு சமம்.

said...

உங்க வீட்டு ஹெல்பெர்ஸ் பிரமாதமா வேலை செய்யுராங்க - எய்மி - ஐலா - அழகுச் செல்வங்கள் - மழலைகள் - தவளை அதுவும் பெண் தவளைகள் - ஆமா ஆமா சொல்றதுக்கு ஒரு தம்பி அவசியம் வேணும் - இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே புரியுது

ரசிச்சேன் - மனம் மகிழ்வா இருக்கு

Olli - Boony - wow wow woow - super

said...

தோட்ட வேலை செய்யும் பூக்கள்!

ஒன்றும் தோன்றவில்லை. பார்த்துக் கொண்டே இருந்தது தவிர.

நீங்க டீச்சர்னு சொன்னாங்க சரிதான். பதில் சொல்லிக் கொடுத்திட்டுத் தானே (// குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலா?//)
கேள்வி கேட்கறீங்க? ( //எப்ப இந்த பேதங்கள்
வரத்தொடங்குது?//)

said...

//ஊருக்கு உழைப்பவர்(கள்)//

இப்பல்லாம் நீங்களும் நிறைய அடைப்புக்குறி பயன்படுத்த ஆரம்பிச்சுட்டீங்க...

said...

வாங்க ராகவன்.

மாவு எல்லாம் அரைச்சுப்பழகுனாதான் 'பிற்காலத்துக்கு' நல்லதுன்னு அப்பவே புரிஞ்சுக்கிட்டு இருந்ததும் நல்லதுக்குத்தான்:-))))

//ஒழிஞ்சி ஒழிஞ்சி....//

ஒளிஞ்சி ஒளிஞ்சிப் போன மர்மம் என்ன? :-)))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

இப்பத்தான் எல்லாருடைய ரகசியங்களும் வெளியே வருது:-)))

ஊருக்கு இரும்பிடித்தோர் சங்கத்துக்கு ஏகப்பட்ட மெம்பர்ஸ் இருக்காங்க. கட்சி ஆரம்பிச்சுற வேண்டியதுதான்:-))))

said...

வாங்க ஆடுமாடு.

வீடு பூரா குழந்தைகளா ஓடி விளையாடுன காலம் போயே போயிந்தி.
எங்க அம்மாக்கூடப் பிறந்தவங்க 12 பேர் ( ஞாயமா பாட்டி?)

எதாவது விசேஷமுன்னா பாட்டி வீட்டில் எல்லாரும் கூடிருவாங்க. மாமாக்களும், சித்திகளும் அவுங்க பிள்ளைகளுமா ஒரு பட்டாளமே இருக்கும்.
கல்யாணமுன்னாக்கூட வேற வெளியாளுங்களே வேணாம்:-))
பொண்ணோ மாப்பிள்ளையோ மட்டும் வந்தாவே போதும்:-)))

ஆர்மிக்கு ஆக்குற மாதிரிதான் சமையல்:-)))
பாட்டி எல்லாருக்கும் கையில் சாதம் உருட்டிப்போடுவாங்க. மொத்தத்தையும் தின்னே தீர்த்துருவோம்.
இப்ப அதெல்லாம் சொன்னாக்கூட நம்பும் ஆளைக்காணொம்(-:

said...

வாங்க சீனா.

பிள்ளைங்க பள்ளிக்கூடம் போயிட்டாலும் பிரச்சனை இல்லை. நாலுகால் டிக்கெட்டுங்க இங்கே ஆஜராயிடும்:-)))

said...

வாங்க டெல்ஃபீன்.

எல்லாமே சூப்பருங்களா?

இதையே நேரில் வந்து சொன்னா இன்னும் சூப்பரா இருக்குமில்லெ!

said...

வாங்க ரத்னேஷ்.

உங்களையெல்லாம் இங்கே பாக்கறதே ரொம்ப மகிழ்வா இருக்கு.
பிள்ளைங்களும் பூக்களும் எல்லாரையும் இழுத்துக்கிட்டு வந்துருது:-))))

said...

வாங்க உமையணன்.
நலமா?

//இப்பல்லாம் நீங்களும் நிறைய அடைப்புக்குறி பயன்படுத்த ஆரம்பிச்சுட்டீங்க...//

இல்லையா பின்னே? நாமும் நாலுபேரைப் பார்த்துப் படிக்கணுமில்லே?
'வாழ்க்கை முழுதும் கல்வி' என்பது இதையும் சேர்த்துத்தான்:-))))

said...

அங்க வேலை முடிஞ்சுதா? இங்க அனுப்பி வையுங்க. வேலை தலைக்கு மேல இருக்குது!!! :))

said...

டீச்சர், சின்ன புள்ளைங்களை இப்படி வேலை வாங்குறீங்களே????

said...

பட் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. ;-)

said...

கொத்ஸ்,

உங்க குளிர்காலம் ஆரம்பிக்குதே...இப்ப என்ன தோட்டவேலை இருக்கு?

சம்மர் வரட்டும் வந்துடறோம். ஒரு 11 டிக்கெட் புக் பண்ணிருங்க.
4+ 4+ 1=1+1 என்ற கண்க்கில்:-))))

said...

வாங்க மை ஃப்ரெண்ட்.

எல்லாம் 'வாலண்டியர்ஸ்'தாங்க.
தாமாய் வர்றதுதான் 'வேலை செய்யன்னு':-))))

நேத்துக்கூட சம்மர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு வந்தாங்க.சூப்பரா இருந்துச்சு.