Monday, November 26, 2007

கீத்துக்கொட்டாயும் கயித்துக்கட்டிலும்

வெய்யில் காலத்துக்கு இதமாக இருப்பது எது?


வீட்டு முன்னாலே ஒரு தென்னோலைப் பந்தலும், கயித்துக்கட்டிலும்.
தரையெல்லாம் ஆத்துமணல் தூவித் தண்ணி தெளிச்சுவிட்டுட்டா அப்படியே 'சில்'ன்னு ஆளைத்தூக்கிட்டுப் போயிறாதா?



நாகரிக உலகமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் காலக்கட்டத்தில் இதுக்கெல்லாம் நான் எங்கே போவேன்?



கவலைப்படாதே சகோத(ரா)ரின்னு நம்ம ஏக்கத்தைப் புரிஞ்சுக்கிட்ட ச்சீனர்கள் உதவிக்கு ஓடோடி வந்துட்டாங்க.


நூத்திஎழுபத்தியொம்போது தானாமே! இப்பத்தான் வீட்டுக்கு வந்த 'ஜங்க் மெயிலில் பார்த்தேன். ரொம்பநாளா ஒரு கண்ணு இதுமேலே இருந்துச்சுதான். ஆனா வேணுமா வேணாமான்னு முடிவெடுக்கத்தான் நாளாச்சு. 229ன்னு போட்டுருந்தான். இப்போ அம்பதைக் குறைச்சிருக்கான்:-) ஸ்டோர்வொய்டு ஸேல்னு, எதையெடுத்தாலும் 15% அல்லது 20% கழிவுன்னு வர்றதும் வழக்கம்தான். நமக்கு 'உண்மையாவே' வேணுங்கற பொருட்கள் மட்டும் ஸேலில் இல்லைன்றதைப் பொடிப்'பிரிண்டுலே போட்டுருவாங்க. (-: எலெக்ட்ரானிக்ஸ் & எலெக்ட்ரிகல் ஐட்டம்ஸ் எக்ஸ்க்ளூடட்.




ஆனாலும் இங்கே என்னமோத்தான் ஆகிக்கிடக்கு. அவுட் டோர் ஃபர்னிச்சர் சரி. தொலையட்டும் இந்த கேம்பிங் ஆக்ஸஸரீஸ்ன்னு இருக்கறதைப் பார்க்கணுமே....




நாலு தட்டு அலமாரியாம், ஸ்டோரேஜ் வச்சுக்கற மேசையாம். பாத்திரம் கழுவும் கேம்ப் ஸிங்க், கேம்ப் கிச்சன்,சோலார் ஷவர், ரெண்டு அறையுள்ள டெண்ட், நாற்காலிகள் (இதுலே ட்ரிங் கேன் வச்சுக்கற ஹோல்டர்ஸ் வேற), கட்டில்கள், கேம்ஸ் விளையாடிக்கன்னு தனியா ஒரு சதுர மேசை இப்படி அட்டகாசம். இவ்வளவும் வேணுமுன்னா பேசாம வீட்டுலேயே இருக்கலாம்தானே?




கஸீபோ வாங்க ஓடினோம். 'நோ ரெயின் செக்' காலையில் போயிருக்கலாம். வசதிப்படலை. இதுக்குள்ளெ வித்துப்போயிருக்குமோ என்னவோ? 'நமக்கு விதிச்சிருந்தாக் கட்டாயம் கிடைக்கும்' இது ஆத்ம விசாரம். கிடைக்கணுங்கறது கிடைக்காமல் போகாது:-)



கிடைச்சது. கூடவே ஃப்ரீ போனஸ் நெட். ஈக்கள் வராம இருக்கும் வலைச்சுவர்.



வீட்டுக்குக் கொண்டுவந்து இறக்குனதும் முதல் காரியம் நம்ம கிங்குக்குச் சேதி சொல்லணும். அவர் வந்து போட்டுத் தரட்டும். எனக்கு 'பல்'வேலை இருந்துச்சு. போயிட்டுத் திரும்பும்போது, நம் வீட்டு வாசலில் ஒரு கும்பல் நிக்குது. (நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று கொள்க)

கிங் & கோ வந்து பேக்கைத் திறந்து பார்த்துப் பாராட்டிக்கிட்டு இருக்காங்க. அவரோட தம்பிக்கு ஒண்ணு வாங்கிக்கணுமாம். தரையோடு சேர்த்துப் பிடிப்பிக்க பலமான ஒரு பொருள் வேணும். 'பேக்'கில் வந்த கம்பிக்குப் பலம் போதாது. அடிக்குற காத்துலே பிச்சுக்கும். இன்னிக்கு வியாழந்தான். இன்னும் ரெண்டு நாள் வீக் எண்ட்லே வேலையை வச்சுக்கலாம்.

வெள்ளிக்கிழமை வந்த ஜங்க் மெயிலில் இன்னொரு கடையில் கயித்துக்கட்டில் இருக்கு. 25% கழிவு. ஊரே கோடைக்கு தயார் ஆகுது. ச்சீனர்களுக்குத்தான் மக்கள் மேல் எவ்வளோ பரிவு!!!!! அடடா......

ஒவ்வொண்ணுக்கும் சரியான குறிப்புகள். படத்தோடு விளக்கங்கள். 'ஏ'வை, 'பி' யோடு இணைக்கவும். 'எஃப்' யைக்கொண்டு முடுக்கவும்( இது ஸ்க்ரூ) இப்படி......
பரபரன்னு இணைச்சு கட்டிலை உருவக்கி முடிச்சதும், எதோ தனக்குத்தான் எல்லாம் தயாராகுதுன்ற நினைப்பு இங்கே ஒருத்தருக்கு:-))))

ஆமா....நம்மூர்களிலே இன்னும் கயித்துக்கட்டில் இருக்கா இல்ல அதுவும் கால வெள்ளத்தில் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சா?

இனி கொட்டாய் வேலை பாக்கி. மூணு மீட்டர் பை மூணு மீட்டர். போட நினைச்சிருக்கும் இடத்தில் சரி வருமான்னு தெரியலை. இடத்தை அளந்தா
2.97 மீட்டர்தான் இருக்கு . வுட்டுற முடியுதா?

எடுத்துப் பிரிச்சுப்போட்டு வேலையை ஆரம்பிச்சோம். 1,2,3ன்னு வகைகளைப் பிரிச்சாச்சு. செல்லம்போல எல்லாத்தையும் யோசிச்சு வச்சுருக்கான் ச்சீனாக்காரன்!!!!

சொன்னபடி செஞ்சோம். இடம் பத்தாதுன்னு நினைச்சுக்கிட்டு கொஞ்சதூரம் தள்ளி அசெம்பிள் பண்ணியாச்சு. இப்ப எப்படி இதை நகர்த்தணும்? நாலுபேர் இருந்தா ஆளுக்கு ஒரு பக்கம் பிடிக்கலாம். இருப்பதோ நாலு கைகள்.
அரையடி அரையடியா நகர்த்துவோமுன்னு சாதிச்சுப்புட்டொம்லெ:-)))

ஒரே ஒரு சோகம் என்னென்னா மரக்கிளைகள் தடுக்குமுன்னு நினைச்சுப் பரபரன்னு கிளைகளைத் தரிச்சதுதான். ஒரே ஒரு கிளையை வெட்டியிருந்தாப்போதும். ஆனா நம்மாளு சிவன், அழிக்கறதில்.




அப்புறம்?
அப்புறமென்ன...? என்கிட்டே கொஞ்சம் வாங்கிக்கட்டிக்கிட்டார்(வழக்கம்போல)
சிலபேருக்கு அப்படி ஒரு ராசி. என்னதான் மாஞ்சுமாஞ்சு செஞ்சுகொடுத்தாலும் கடைசியில் ஒரு (அவப்)பேரு.

அதெல்லாம் முளைச்சு வந்துருமாம், கொஞ்சநாளில்.

பார்க்கலாம், பக்கத்துவீட்டு மரம் முளைக்குதான்னு!!!!

பந்தல் போட்டாச்சு.

39 comments:

said...

//பந்தல் போட்டாச்சு.//

அப்புறம் என்ன பந்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே!! :)))

said...

கொத்தனார் பந்திக்கு முந்தறாரு. நானும் நானும் -எப்போ எப்போ

ஆமா அழகா கட்டில் ரெடி - கூர ரெடி - கோபாலைத் திட்றதே கொறச்சிக்கறது நல்லது - ஆமா சொல்லிப் புட்டேன்

பக்கத்து வூட்டு மரத்தே வெட்னாக்கூட திட்னா எப்படி ?? ம்ம்ம்

பக்கத்து வூட்டு வாண்டுக வந்துடுச்சுங்களா மொத போணி பண்ண

said...

வாங்க கொத்ஸ்.

பந்தி விசாரிக்க நீங்க வரணும். அப்பத்தான் பந்தி:-)))

said...

வாங்க சீனா.

வீக் எண்ட் வந்துச்சுன்னா நம்ம கேட்லெதான் பசங்க காது:-))))

அதிலும் கடைக்குட்டி( இப்போதைக்கு)ரொம்ப க்யூட். வீடுகளுக்கு மருந்தடிக்கும் கோபால்கூடவே போய், எதெது வீடுன்னு காமிக்குது. அதுவே முளைச்சு, மூணுவயசுதான்.

என்னாவிவரம் பாருங்க!!!!!!

கோபாலுக்கு ஆதரவு இணையத்துலே அதிகமாயிக்கிட்டு இருக்கு. பேசாம ஒரு கட்சி ஆரம்பிச்சுற வேண்டியதுதான்.:-)))

said...

துளசி,

இந்த் மாதிரி ஒன்னத்தான் நானும் தேடிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் எந்த கடை என்னா பிராண்டுன்னு போட்ட உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்.

said...

வாங்க சுரேஷூ.

எந்த ஒண்ணு? கட்டிலா? பந்தலா?

கட்டில்- எல்லாம் நம்ம வேர் ஹவுஸ்தான். 40 இப்ப 30க்கு. இந்தவாரம் செவ்வாய் வரை.( ஒரு நாள்தான் இருக்கு)

பந்தல்- நம்ம கே மார்ட்.

நோ ரெயின் செக்காம். சீக்கிரம் போங்க.

Anonymous said...

\\வெய்யில் காலத்துக்கு இதமாக இருப்பது எது?\\ நிழல்தான். அப்பறம் பந்தியில சாப்பாடு. எல்லாருக்கும் வெயில் வந்துருச்சுன்னு சந்தோசம்னா எனக்கு Hay Fever ஆரம்பிச்சுட்டுது. கண்ணெல்லாம் அரிக்க ஆரம்பிச்சு சிவந்துட்டுது. செடிக்கு தண்ணி ஊத்த போக முடியலை. இந்தக்கயித்துக்கட்டில்ல படுத்தா எப்படி தூக்கம் வருதுன்னே தெரியாது. எங்க வீட்டுலயும் இருந்த்து. Ware House தானே ! வாங்கிடுவோம்

said...

போட்டோல பார்க்கும் போது கொட்டகை சூப்பர். பாத்து பாத்து ஒவ்வொண்ணா பண்றீங்க.

//ஆமா....நம்மூர்களிலே இன்னும் கயித்துக்கட்டில் இருக்கா இல்ல அதுவும் கால வெள்ளத்தில் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சா?//

என்ன எடக்கா? அதெல்லாம் போயி வருஷக்கணக்காச்சு.

இப்ப எல்லாரு வீட்லயும் இரும்பு கட்டில்தான். எங்க வீட்டு பாட்டியே இதுல (இரும்பு கட்டில்) படுத்தாத்தாம் பேரா நல்லாயிருக்குங்குது.

said...

மேடம்,

பந்தல் சூப்பர்.

அந்தக் கால உடல் உழைப்புக்கு கயித்துக் கட்டில் ஓ.கே. இப்போ உள்ள வேலை அழகுக்கு இப்படிக் கட்டிலில் படுக்கும் முன் யோசிச்சுக்கோங்க, முதுகுவலி குறித்த பிரக்ஞையுடன்.

said...

காலம் கலிகாலமாயிடுச்சிய்ய்ய்ய்.. துளசி அக்கா.. நீங்க கோபால் மாமாவை நல்ல வெய்யிலுல வேலைவாங்க்குறதுமில்லாம.. அத படம் புடிச்சு போட்டு ,சொம்மா இருக்குற மத்தவிங்களையும் தூண்டி ,கல்யாணமாகி மாட்டிக்கிட்ட ஆண்கள் வாழ்க்கையிலயும் கேள்வி குறியாக்கிட்டீங்க..

கோபால் மாம்ஸ்க்கு ஆதரவா.. நாங்கெல்லாம் "கணவன்மார் வதை தடுப்பு" சங்கத்துல புகார் குடுக்கப் போறோம்..

said...

அந்த குழந்தைகள் ரொம்பவே அழகு.. .

IYLAA AND EYIMI BOTH ARE VERY CUTE..

இத "ரசிகன்"அண்ணன் சொன்னார் (எல்லாம் ஒரு மரியாதைதேன்..ஹிஹி..)ன்னு அவிங்ககிட்ட காட்டிடுங்களேன்..

said...

//அப்புறமென்ன...? என்கிட்டே கொஞ்சம் வாங்கிக்கட்டிக்கிட்டார்(வழக்கம்போல) //

இதுக்கும் ஒரு சம்மன் வரும் தயாரா இருந்துக்கோங்க...


// பார்க்கலாம், பக்கத்துவீட்டு மரம் முளைக்குதான்னு!!!!//

அடப்பாவமே.. பக்கத்து வீட்டு மரத்தை வெட்டிப்புட்டுத்தேன் இம்புட்டு பேச்சா?...நெசமாவே இது கலிகாலந்தேன்..ஹிஹி..

said...

இப்போ எல்லா ஊரிலும் அபார்ட்மென்ட் தான். இதில் கயித்து கட்டிலாவது? கீத்துக்கொட்டகையாவது? ம்ம்ம்ம் எக்கப் பட்டுகிட வேண்டியதுதான்.

said...

//அப்புறம் என்ன பந்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே!! :)))//
மீ த பர்ஸ்டு, பந்திக்குதாங்க..

கீத்துகொட்டாய்னு சொன்ன வுடனே பகீர்னு ஆகிருச்சு, இதைத்தான் சொல்றீங்களோன்னு.

said...

அட அது பக்கத்து வீட்டு மரமா... சூப்பர்.

எனக்கும் ஓலப்பந்தல் ரோம்பப் பிடிக்கும். சின்ன வயசுல தூத்துக்குடி வீட்டுல எப்பவும் இருக்கும். கயித்துக் கட்டிலா...அதுல படுத்தா மேலு அழுத்துமே!!!!

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

எந்த நேரத்தில் (வாய்)பந்தல் போட்டோமோ...... ரெண்டு நாளா மறுபடியும் குளிர் வந்துருச்சு(-:

ஹே ஃபீவர்க்கு மருந்து எடுத்துக்கிட்டீங்களா?

said...

வாங்க ஆடுமாடு.

இரும்புக்கட்டில் அவ்வளவு சுகம் இல்லைங்களே..... கனம் வேற கூடுதல்.
'டக்'னு வெளியே எடுத்துப்போட முடியாது(-:

said...

வாங்க ரத்னேஷ்.

கொஞ்ச நேர ஓய்வுக்குத்தான் இதெல்லாம். அதுவும் இங்கே இருக்கும் காலநிலையில் அதுலே படுத்துத் தூங்கெல்லாம் முடியாது. நம்ம ஜீகேதான் இப்ப இதையும் புடிச்சுக்கிட்டார்:-))))

said...

வாங்க ரசிகன்.

புள்ளைகளுக்குக் காமிச்சுட்டேன் உங்க அன்பான பின்னூட்டத்தை:-)))
'திஸ் இஸ் நாட் த ரைட் ஸ்பெல்லிங்'ன்னு சொல்லுச்சு ( சின்னதில்)பெருசு(-:


பினாத்தலார் வகுப்புக்கு ஒழுங்காப் போறீங்கதானே? மட்டம்கிட்டம் அடிக்கலையே?

:-))))

said...

வாங்க புதுகைதென்றல்.

அபார்ட்மெண்ட்ன்னாலும் கயித்துக்கட்டில் போடலாம்தான்.
கயித்துக்குப் பதிலா 'தாபா' ஸ்டைலில் பட்டையான நாடாவும் நல்லாதான் இருக்கும்.
ஆனா.வழக்கொழிஞ்சு போச்சுன்றாரே நம்ம ஆடுமாடு!!!!

said...

வாங்க இளா.

உங்க கீத்துக்கொட்டகையை இவ்வளோ நாள் மிஸ் பண்ணியிருந்துருக்கேன்(-:

நீங்க வாங்க. பந்தி போட்டுறலாம்:-))))

said...

வாங்க ராகவன்.

இந்தக் கட்டில் அழுத்தலை. கூட ஒரு தலைகாணியும் கொடுத்துருக்கான். அது நகராம இருக்கக் கட்டிப்போட்டுறணுமாம். நாடா வச்சுருக்கு:-))))

said...

துளசி அவர்களுக்கு

உங்களுடைய வீடு கட்டும் & மற்றைய பதிவுகளையும் ஆர்வத்துடன் படித்தேன். பதிவுகள் நன்றாக இருந்தன.

விஜி (வாசனின் மனைவி)

அல்புகர்க்கி, நியு மெக்சிக்கோ

said...

வாங்க வாசன் & விஜி.

நலமா? ரொம்ப நாளுக்கப்புறம் உங்களை இங்கே பார்க்கிறேன்.

வீடு பிடிச்சிருக்குதானே? :-)))))

நல்வரவு விஜி.

said...

அப்புடியே வேப்பமரம் ஒன்னு வச்சுருங்க. மறக்காம, பந்திக்கு சொல்லியனுப்புங்க :)

எங்க கிராமத்து வீட்ல (இருக்குறது ஒரு வீடுதான்..என்னமோ, ஊருக்கு ஒரு வீடு இருக்குறமாதிரி!!) இன்னும், கயித்துக் கட்டுலு இருக்கு. ஆனா, சொகுசு கண்ட ஒடம்ப அதுல சாச்சா வலிதான் வருது :(

said...

கயித்துக் கட்டில், கயித்துக் கட்டில் தான். வெவெரம் புரியாம சிலர் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் மேல் வலிக்கும் என்று. எல்லாம் அதன் பின்னலைப் பொறுத்து என்று தெரியலை :))

said...

கீத்துக்கொட்டாய் ரெடி! கயித்துக்கட்டிலும் ரெடி!காலத்துக்கேற்ப மெட்டீரியல்தான் வேறயே தவிர கான்செப்ட் ஒன்றுதான். பொரஜக்டரும் ஸ்க்ரீனும் வாங்கி படம் போட்டால் அம்சமான டெண்ட்கொட்டாய் ரெடி.
எனக்கு ரெண்டு பாஸ்!!!

said...

துளசி, கொட்டாயில ரூம் எங்க இருக்கு??
இல்ல நாந்தன் சரியாப் படிக்கலையா.
கயித்துக் கட்டில் உறுத்தாதா?
அதுக்கென்ன ரெண்டு மெத்தையைப் போட்டுப் படுக்க வேண்டியதுதான்,.
பசங்க ரெண்டும் அன்பு ச்செக்ல்லமா இருக்கு:))

said...

கட்டில் போட்டபோது கிருஷ்ணர் மாதிரி போஸ் கொடுக்கச்சொல்ல வேண்டியது.. மரக்கிளையை வெட்டிய உடன் சிவன் என்பதா?
அநியாயம். :-)

said...

வாங்க தஞ்சாவூரான்.

வேப்பமரமா? அப்புறம் அதுலே ஒரு 'முனி' வேணாமாக்கும்? ;-)))
கறி'வேப்பு' வச்சுருக்கேன். பரவாயில்லையா?
//ஆனா, சொகுசு கண்ட ஒடம்ப அதுல சாச்சா வலிதான் வருது :(//
இருக்குமில்லெ!!!! :-))))
சதங்கா சொன்னதைக் கவனிங்க.

said...

வாங்க சதங்கா.
வெறும் தேங்காநாரு கயிறுன்னா உறுத்தலா இருக்கும். எங்க வீட்டுலே முந்தி (ஊருலே) ஒரு கட்டில் இருந்துச்சு. அதுக்கு ஒருவிதமான பட்டுப்போல கயிறு இருக்கும்,பார்க்கறதுக்கு சில்க் போலன்னு. கலரும் 'ப்ளாண்ட்' தலைமுடி மாதிரி.

புளிச்ச நார் கயிறுன்னு சொல்லக்கேள்வி.
இந்தக் கட்டில் இல்லாம ஒரு வேலையுமாகாது. வத்தல் போட, மசாலா சாமான் காயவைக்க, பட்டுப்பொடவைகளைக் கொஞ்சம் காத்தாட வெயிலில் போட, தேய்ச்ச பாத்திரங்களைக் காயவைக்கன்னு இன்னும் பல உபயோகம்.

said...

வாங்க டெல்ஃபீன்.

பயணத்துக்கு மூட்டை முடிச்சுக்கட்டியாச்சா?
டெக்ஸாஸ்லெ கயித்துக்கட்டில் இருக்கச் சான்ஸ் இல்லை(-;
பேசாம இங்கெ ஒரு நடை வாங்க.

said...

வாங்க வல்லி.

விருந்தினர் பிஸியிலும் இங்கே எட்டிப்பாத்ததுக்கு தேங்க்ஸ்:-)

கொட்டாயில் ஏதப்பா ரூம்? நாலு பக்கமும் திறந்த வெளிதான். கொசுவலை மாதிரி ஒரு ஸ்கிரீன் zip வச்சு வந்துருக்கு அதன்கூடவே. அதை மாட்டி வைக்கலை. லானுக்கு புல்வெட்ட வரும் நபர் போகவும் வழி வேணுமே(-:

மெத்தையெல்லாம் வேணாம்ப்பா. ஈஸிச்சேருக்குப்போடும் விரிப்பு மாதிரி ஒண்ணு அதுலே இருக்கே. அதுலேயே படுத்துக்கலாம். நம்ம நாலுகால் ஆளு நகங்களால் பிறாண்டாமல் இருக்கணும்:-))))

said...

வாங்க குமார்.

ஊரில் எல்லாரும் நலமா? தீபாவளி நல்லா நடந்ததா?
வீட்டுப்பதிவு முடியும் சமயம் நீங்க லீவுலே போயிட்டீங்க. உங்க பின்னூட்டம் எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணினேன்(-:
இன்னொண்ணு, சிவனை எளிதில் ப்ரீதி செய்யலாமாம். வரமும் கிடைச்சுருமாம். நம்ம 'சிவனிடம்' தாமரைக்குளம் கட்ட இப்பத்தான் 'அடி'போட ஆரம்பிச்சுருக்கேன். இப்ப இருப்பது ஆழம் போதலை.
தாமரைத்தண்டுத் துவளுது(-:
அடித்தார் அடித்தால் அம்மியும் நகருமாமே:-)))

said...

இளா சொன்ன அதேக் காரணத்துக்கு தான் நானும் ஓடி வந்தேன்...ஆனா இந்தக் கீத்துக்கொட்டாயும் ஜோராத் தான் இருக்கு..ஒரு டிவியும் டிவிடி பிளெயரும் எடுத்து வைங்க... நல்ல படமா இந்தக் கீத்துக்கொட்டாயிலே உக்காந்துப் பார்த்து எங்க கீத்துகொட்டாயிலே விமர்சனம் போட்டுருவோம்.

said...

வாங்க நானானி.

ரெண்டு என்னங்க ரெண்டு ? எல்லாமே உங்களுக்குத்தான்.
நம்ம தமிழ்ச்சங்கத்துலே ப்ரொஜெக்டர் இருக்கு. நீங்கமட்டும் வரேன்னு சொல்லுங்க, ஒருநாள் ஓசியடிச்சுறலாம்.

என்ன ஒண்ணு, நல்லா இருட்ட பத்துமணி ஆகிரும். சாப்புட்டுட்டு நிம்மதியாப் படம் பார்க்க உக்காரலாம். நைட் ஷோ:-))))

said...

வாங்க தேவ்.

மேலே நானானிக்குச் சொன்னதேதான். கிளம்பி வாங்க. படம் ரெடி. எனக்காவே தயாரிச்சப் படங்கள் நாலைஞ்சு வந்துருக்கு. நாந்தான் ரிலீஸ் செய்யணுமுன்னு அவுங்களுக்கு என்னவோ ஒரு பிடிவாதம்:-))))

'ஞாபகம் வருதே, பாஸ், நாளையப்பொழுதும் உன்னோடு'
இதெல்லாம் கேட்டுருக்கமாட்டிங்கன்னு நம்பறேன்

said...

டீச்சர் என்ன ஒத்துமை

"ஆனா நம்மாளு சிவன், அழிக்கறதில்"

வீட்டுக்கு வீடு வாசாப்படி

சரி பந்தல் போட்டாச்சு அப்புறம்....

said...

வாங்க தி.ரா.ச.

//சரி பந்தல் போட்டாச்சு அப்புறம்....//


அப்புறமா?

தினம் காலையில் கண் முழிச்சதும்
பந்தல் இருக்கா? இல்லை காத்துலே போயிருச்சான்னு கவனிக்கணும்:-))))