Monday, December 03, 2007

நாங்களும் வரலாமா?

மலர்கள் போட்டிக்குத் தோட்டநகரத்தில் இருக்கும் நாங்க கலந்துக்கலேன்னா எப்படிங்க? அதான்......................

சூரியனைக் காணோமே?
போட்டிக்கு ரெண்டுதானாமே......
*****************************************************************************************
வந்தது வந்துட்டோம். இன்னும் சிலர் உங்கள் கண்களுக்குக் காட்சி.
மலர்ந்தும் மலராத பாதி மலர்.......
மழையில் நனைஞ்சுட்டேன்.....

இது இன்றைய ஸ்பெஷல்....

மகள் கொண்டுவந்த கட்டிங்(??)கில் முதல் பூ:-)))

52 comments:

said...

மைக் டெஸ்டிங்..........

1 2 3 4

Anonymous said...

அன்றலர்ந்த மலர்கள் அத்தனையும் அழகு

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நம்ம mitre 10லே சூரியகாந்திச் செடிகள் கிடைச்சது. அதுவும் பூக்களோடும் ஏகப்பட்ட மொட்டுக்களோடும்.

விடமுடியுமா?

அதான் ஆசைக்கு ரெண்டே ரெண்டு:-)))

said...

தோட்ட நகரத்தில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். கண்ணுக்கினிய மலர்கள் - குளிர்ச்சி - அருமை அருமை.

said...

சூப்பரா இருக்கு பாட்டி

said...

தென்னம்பூவா அது ?
நான்காவது பூ நாகலிங்க பூ போன்று இருக்கிறது.

போட்டிக்கு 2 படம் தான் அனுப்பனும் என்ற விதி இருக்கிறதாம்.
:)

said...

ரீச்சர், எந்த ரெண்டு போட்டிக்கு. என்னவா இருந்தா என்ன? உங்க படம் நல்லா இருக்குன்னு நான் சொல்லறேன். நான் படம் போட்ட பின்னாடி என் படம் நல்லா இருக்குன்னு மறக்காம நீங்க சொல்லிடுங்க. ஓக்கேவா?

ரீச்சர் உங்க படம் சூப்பரா இருக்கு!! :))

said...

வாங்க சீனா.

ஊரே பூக்காடா இருக்கும்போது, நாமும் கொஞ்சம் தோட்டத்தைப் பேண வேணுமே.

தோட்டவேலை செய்ய எனக்குப் பிடிக்காதுன்னு நான் நினைக்கறேன். ஆனால் நம்ம வீட்டுலேயும் ஏகப்பட்ட செடிகள். ஆனா முக்காவாசி இண்டோர் செடிகள்தான்:-))))


கையில் எதுகிடைச்சாலும் நட்டு வச்சுருவேன். அறுவடைக் காலத்தில் கிடைக்கும் ஒரு சிலது பார்த்தாலே பரவசம்தான்:-))))

said...

வாப்பா பேரக்கிடா.

பாட்டிக்கு நீதான் நெய்ப்பந்தம் புடிக்கணும்,ஆமா:-))))

said...

வாங்க ஜிகே.

நாலாவது ரோஜாதாங்க. இங்கே நாகம் இல்லீங்களே.....அப்புறம் எங்கே நாகலிங்கம்?

(நோ பாம்பு)


தென்னையும் இங்கே இல்லைங்க. இது ஒரு வகையான அலங்காரப்பனை மரமாம். இதுவே 22 வயசான மரம்:-)))) ரெண்டு வருசத்துக்கொரு முறைன்னு இப்ப மூணாவது முறையாப் பூத்துருக்கு.


விதியை மதியால் வெல்ல முடியுமான்னு முயன்று பார்க்கறதுதான்.

said...

வாங்க கொத்ஸ்.

ஒண்ணும் சொல்லாட்டி, முதல் ரெண்டு படத்தைப் போட்டிக்கு எடுத்துக்குவாங்களாம். எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு கோடு போட்டுப் பிரிச்சுவச்சுருக்கேன்,பார்க்கலையா?

(இனி போடப்போற )உங்க படங்களும்
அருமையா அட்டகாசமா, சூப்பரா இருக்கு.

எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மெண்ட்தான்:-)))))

said...

பூக்கள் அனைத்தும் அருமைங்க!

உங்க ஊர்ல திரும்பின இடமெல்லாம் அழகு ததும்பும் இயற்கைக்கும், பூக்களுக்கும் பஞ்சமேயில்லைங்களே..இன்னும் நல்ல நல்ல படமா எடுத்துப் போடுங்க :)

said...

நானும் தென்னைன்னு தான் நினச்சேன்...
ஆனா வித்தியாயசமான அழகு, அதையும் இவ்வ்வ்வ்ளோ அழகா ஃபோட்டோ புடிச்சது நீங்க தானுங்கோவ்.....

said...

எல்லாமே சூப்பர்ப்ங்க. கலக்கிட்டீங்க.

said...

உங்கள் தளத்தில் கடந்த ஒரு பதிவில் பூக்களைப் பார்த்துஅசந்தேன்..
இப்போட்டி என்றதும் உங்கள் படங்களை எதிர்பார்த்தேன்..வந்து விட்டது..மிகவும் அழகான மலர்கள்

said...

ரீச்சர் உங்க படம் சூப்பரா இருக்கு!! :))
இந்த படம் எங்கே இருக்கு,எனக்கு தெரியலையே??

said...

மழையிலே நனைந்தப் பூக்கள் நல்லாயிருக்கு

said...

படங்கள் நல்லா வந்துருக்கு அக்கா..

போட்டிக்கு மழையில நனைச்சே குடுத்திருக்கலாம்னு சொல்ற மாதிரி, அந்த முதல் மழை பூ சூப்பர்!

said...

வாங்க கோபாலன் ராமசுப்பு.

வீட்டைவிட்டு வெளியில் போய் எடுத்தா இன்னும் அழகழகான மலர்கள் கிடைக்கும்.

நாந்தான் கெமெராவைக் கொண்டுபோக மறந்துட்டு, இங்கே குண்டு சட்டியில் குதிரை ஓட்டிருவேன்;-))))

said...

வாங்க மங்கை.

நமக்குத்தான் எல்லாத்துலேயும் வித்தியாசமா இருந்தாத்தானே தூக்கமே வருது:-))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இந்த வாரமாவது கொஞ்சம் வெளியே போய் படமெடுத்துப் போடறேன்.

அப்பவும் வந்து பாராட்டணும்,ஆமா:-))))

said...

வாங்க பாசமலர்.

உங்க பெயரிலேயே மலர் இருக்கு.
அதான் பூக்களைப் பிடிச்சுப்போச்சு இல்லீங்க?:-)

said...

வாங்க குமார்.

அதெப்படித் தெரியும்?
இனிமே 'தானே' வரப்போகுது:-)

said...

வாங்க தேவ்.


எல்லாம் இயற்கையின் கொடைதான்:-)

said...

வாங்க ராம்ஸ்.

எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளைக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள்!!

எல்லாம் உங்களைப் பிச்சுப்பிடுங்கி வாங்குன கேமெராதான்:-))))

அதான் நல்லாவே வந்துருக்கு:-)

said...

வாங்க டெல்ஃபீன்.

பூ 'தண்ணியிலே மிதக்குறதைப் பார்த்தீங்கதானே? :-)))))

said...

டீச்சர் எல்லா பூவும் சூப்பர். சின்ன சந்தேகம். வாழப்பூ அங்க கிடைக்குமா?

said...

நல்லா இருக்கு படங்கள், பிற்தயாரிப்பு செய்து பார்தீங்களா. வாழ்த்துக்கள்.

said...

கண்டிப்பா வந்து பாராட்டுவேன். ஆமாம் நீங்க ஏன் கிளாசுக்கு வர்ல?

husbandology பாடம் 2 நாளைக்கு வரபோகுதே!

said...

யெக்கா! தூள் படம் யெக்கா.. நான் கலந்துக்கற முடிவ மாத்திகிட்டேன்..

said...

அவ்வ்வ் எல்லாரும் இப்படி வெளுத்து வாங்கினா நாங்க எல்லாம் எங்கே போவது?

ரொம்ப அருமையா இருக்கு உங்க புகை படங்கள்.

said...

வாங்க ஆடுமாடு.

வாழைப்பூவா? எதுக்கு வடை செஞ்சு தின்னவா?

இங்கே நம்ம சிட்டிக்கவுன்ஸில் வச்சுருக்கும் பொட்டானிக்கல் கார்டன் க்ளாஸ் ஹவுஸிலே நாலைஞ்சு வருசம் முன்னே ஒரு வாழைமரம் நின்னுச்சு. நல்லா நாலஞ்சு மீட்டர் உயரம். அதுலே ஒரு சமயம் குலைதள்ளூச்சு. பக்கத்துலேயே ஒரு காஃபிச் செடியும் இருந்துச்சு. கொஞ்ச நாளில் யாரோ விஷமிகள் கண்ணாடி வீட்டுக்குள்ளே புகுந்து மரங்களையெல்லாம் வெட்டி நாசப்படுத்திட்டாங்கன்னு பேபரில் பார்த்து மனசொடிஞ்சு போச்சு. அட்லீஸ்ட் அந்த வாழைத்தண்டு கிடைச்சிருந்தா ஒரு கூட்டு வச்சுத்தின்னுருப்பேன்.


அது மனசுலேயே ஆழமா வேரூணிப் போன நினைப்பு. இப்பப் பாருங்க நம்மூட்டுலேயே ஒரு வாழைமரம்(????!!!) அப்புறம் ஒரு காஃபிச் செடி.

said...

வாங்க ஒப்பாரி.

பிற் தயாரிப்பு எல்லாம் செய்யத் தெரியலைங்க. நானே ஒரு க கை நா.(-:

said...

புதுகைத் தென்றல்,

எங்கேப்பா வகுப்பு நடக்குது? 'தமிழ்மணம் கேம்பஸ்' முழுக்கச்சுத்தித் தேடியும் கண்ணுலே அகப்படலை. இடம் சொல்லுங்க,ஓடியாரேன்.....
எதுக்கும் எனக்கு ஒரு ப்ராக்ஸி கொடுத்துருங்க.:-)))

said...

வாங்க பினாத்தலாரே.
இது என்ன ஓவர் பினாத்தல்? எதாவது உ.கு. இருக்கோ?
அக்கா ஒரு அப்பாவிப்பா(-:

said...

வாங்க குசும்ப்ஸ்.

இப்படியெல்லாம் நீங்க சொல்லுறதைப்பார்த்தா 'ஏதோ இருக்கு'ன்னு ஒரு சந்தேகம் வருதேப்பா:-))))

said...

தமிழி மணத்தில இன்னும் சேர்க்கலை.

www.pudugaithendral.blogspot.com vaanga.

said...

நீங்க போட்டிக்கின்னு தேர்வு செய்த படங்களை விட எங்களோட பார்வைக்கு அளித்த படங்கள் கண்ணைக் கொள்ளை கொள்ளுது.மறு பரிசீலனை செய்யலாமே?

said...

பூக்கள் நிறம்பிய பூக்கள் அழகோ அழகு.

said...

எல்லாத்தையுமே அனுப்புங்களேன்...புடிச்சத எடுத்துக்கட்டும்.

/மகள் கொண்டுவந்த கட்டிங்(??)கில் /

மகள்....கட்டிங்....அதுல, ஒங்களுக்கு வேற கொண்டுவறாங்களா?? :)

அப்புறம், வாழை மரத்துக்கு என் அஞ்சலி. வாழைத்தண்டு உங்களுக்குக் கிடைக்காம செஞ்ச அந்த விஷமிகளுக்குக் கண்டனங்கள் :)

said...

வாங்க நட்டு.

எல்லாருக்கு ஒரு வழின்னா இடும்பியான எனக்கு வேற வழியாச்சே:-)))

அதான் வித்தியாசமான பூவா போட்டிக்கு அனுப்பிட்டேன்::-))))

said...

வாங்க தஞ்சாவூரான்.

அதான் போட்டியின் விதிகளில் தெளிவா இருக்கே. எந்தப் படங்கள்னு சொல்லலைன்னா முதல் இரண்டு படங்களைப் போட்டிக்கு எடுத்துக்குவாங்கன்னு.

நிறைய கட்டிங்க்ஸ் கொண்டுவந்து வச்சா. அதுலே ஒண்ணுதான் முதலில் பூத்துருக்கு:-))))

'மகள் தாய்க்குக் கொடுத்த கட்டிங்'னு தலைப்பு வச்சுருக்கலாமோ? :-))))

நம்ம வீட்டு வாழையும் 6 மீட்டர் உயரம் வளரும் அபிசீனிய வகையாம்.

மூணுவருசமா இருக்கு. இப்பத்தான் ஒரு மீட்டர் வந்துருக்கு:-)

said...

வாவ்வ்வ்வ்..வாவ்வ்வ்வ் வாவ்வ்வ்வ்வ்..

(*என்னதிது பப்பியோட பாஷை பாதிரி இருக்கேன்னு பாக்கறிங்களா?..நாந்தேன்..ஹிஹி..)

சூப்பருங்க துளசி அக்கா.. படத்த பாக்கும்போதே.. கண்ணு தன்னிச்சையா விரியுது.. படத்துலயிருந்து மலர்களின் வாசனைக்கூட வந்துச்சுன்னா பாத்துக்கோங்களேன். அத்தனை ஃபிரஷ் ஃபிரஷ்.. அருமையா கலைநயத்தோட எடுத்திருக்கிங்க..கலக்கலா வந்திருக்கு...

said...

அருமையா இருக்குது படங்கள். பின் தயாரிப்பு செய்யலையா? மலர்ந்தும் மலராத மலர் கொள்ளை கொள்ளுது.... :)

said...

வாங்க ரசிகன்.

பேருக்கேத்தமாதிரி இருக்கு உங்க ரசனை!!!!

நமக்கும் பப்பி,மியாவ் பாஷை எல்லாம் புரியும்:-)))

நன்றி.

said...

ஆஹா.....காட்டாற்றின் திசை இன்னிக்கு நம்ம பக்கம்:-))))

இப்பத்தான் மேக்ரோ வந்துருக்கேன்.. பிற் தயாரிப்பு இன்னும் கத்துக்கலை.
( மக்கள்ஸ் பிழைச்சாங்க!!)

said...

வாங்க ராகவன்

முருகன் என்றாலும் அழகு.பூக்கள் என்றாலும் அழகு.

சரியா?

said...

சூப்பரோ சூப்பர்.
துளசி!எபடிப்பா இத்தனை அழகு சேருது உங்க வீட்டில???

அருமை அருமை அத்தனையும் அருமை. இதில வகுப்பு மாணவி வேறயா:)))
டீச்சரே மாணவி!!

இதோ தந்தேன் முதல் பரிசை.

said...

பூக்கள் கொள்ளை அழகு!அதுவும் அந்த கடைசி ரோஜா இருக்கே ரொம்ப அழகாயிருக்கு.

said...

வாங்க வல்லி.

வாழ்க்கை முழுதும் படிப்பு இருக்கேப்பா. அதான் டீச்சரும் ஒரு மாணவியா ஆனது:-)))))

முதியோர்க் கல்வி:-)))))

said...

வாங்க வல்லி.

வாழ்க்கை முழுதும் படிப்பு இருக்கேப்பா. அதான் டீச்சரும் ஒரு மாணவியா ஆனது:-)))))

முதியோர்க் கல்வி:-)))))

said...

வாங்க செல்லி.

கடைசிப்பூ?

ஆஹா......மகள் வீட்டுத் தோட்டத்துலே இருந்து கொண்டுவந்த 'கட்டிங்'

நன்றி செல்லி.

மகளுக்குச் சொல்லிடலாம்.