Thursday, December 13, 2007

Just to keep in touch

டிசம்பர் வந்துருச்சு. வருசக்கடைசி. கையைக் கடிக்குது. போன பதிவில் போன வருச லிங்கைக் கோர்த்துவிட்டது தப்போன்னு இருக்கு. 'பசங்க' அதைப் படிச்சிட்டு(???!!!!) லீவுக்கு இப்படி ஆ(ளா)லாப் பறக்கறாங்க.

இனிவரும் நாட்களில் நம்ம தோட்டத்தை வச்சேக் கொஞ்சம் ஜல்லியடிச்சு
நாட்களைக் கடத்தணும்போல.. போதாக்குறைக்கு நானும் PIT மாணவின்னு
அப்பப்பக் காமிச்சுக்கணும் இல்லையா?
ஆழ்ந்து படிக்காம மேலோட்டமா நானும் வந்தேன்னு இருக்கும் என் வகுப்புத் தங்கங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
முந்தாநாள் முத்துலெட்சுமி கேட்ட கேள்விக்கு இது(வும்) பதிலாக இருக்க வாய்ப்புண்டு.
தலைவெட்டி நியூஸியில்:-)
பொதுவா சூரியகாந்திச்செடி, நெடுநெடுன்னு உசரமா வளர்ந்து உச்சாணியில் ஒரு பூ மட்டுமே பூக்கும்தானே?
இது என்னவோ குள்ள வகையாம். பரபரன்னு எல்லாப் பக்கங்களிலும் கிளைகள்விட்டு 16 பூக்கள் வந்துருக்கு. கொடுத்த காசு செரிச்சாச்சு:-)))
இங்கே நம்ம வீட்டுலே இருக்கும் லொபெலியாப் பூக்கள் நிஜத்தில் ஒரு கலராவும், நிழலில் ஒரு கலராவும் இருக்கு. டார்க் பர்ப்பிள் கலரில் இருப்பது,
படத்தில் மட்டும் ப்ளூவாத் தெரியுது. காரணம் தெரிஞ்சவுங்க சொல்லுங்க,
நம்ம கெமெராவுக்கு கலர் ப்ளைண்ட்????
கண்ணுக்குக் காட்சி.சற்றே வயிற்றுக்கும் உணவு. இந்த வருசம் ராஸ்பெரி நிறைய வந்துருக்கு. ( ஒரு செடி பத்து டாலர்ன்னு மார்கெட்டிலே பார்த்ததும்
வீட்டுக்கு வந்து, செடிகளை எண்ணி நூறு டாலர் கோபாலுக்கு மிச்சம் பிடிச்சதைச் சொன்னேன்:-)
கடைசியா( இப்போதைக்கு) நம்ம ஜிகேவுக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசா ஒரு
பாப்பா வாங்கி இருக்கு. அவனைப் போலவே இவன்.

40 comments:

said...

உங்களுக்கே கையை கடிக்குதா? :-))
கடைசி படம் நன்றாக இருக்கு.

said...

வாங்க குமார்.

பதிவு எழுத மூட் இல்லாம, நேரமில்லாம இருக்கும் கை கடிப்பு இது:-))))

said...

//நானும் PIT மாணவின்னு//
டீச்சர் நீங்க எப்போ மாணவியானீங்க?
நீலக்கலர் பூத்தொட்டி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

said...

ஆகா துளசி நீங்களே இப்படி சொன்னா எப்படி..? உங்க வீட்டு கத்தாழைப்பூவும் நல்லா இருக்கு.. பழங்கள் பாக்கவே ஆசையா இருக்கு..

said...

வாங்க தம்பி.

வயசான காலத்தில் எல்லார்கூடவும் வகுப்புலே வந்து மாணவியா உக்கார முடியுதா? ச்சும்மா ஒரு ஓரமா நின்னு, பாடத்தைக் கவனிக்கிறதுதான்:-))))

வாழ்க்கைபூராவும் கல்வி கற்கணும். அதான் இதுவரை கற்றது கை மண் அளவுன்னு சொல்லிவச்சுப் போயிருக்கே ஒரு பெருசு.

said...

வாங்க முத்துலெட்சுமி.

இந்தக் கத்தாழை Havorthia bolusii வகை.


பழங்களைத் தினம் பறிச்சு ஃப்ரெஷா முழுங்கிக்கிட்டு இருக்கேன், can you ever get fresher than this?னு:-)))'

தினம் பழம் சாப்புடணுமுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க:-)

Anonymous said...

குட்டிப்பூனையைப்பாக்கறதுக்காகவே தெற்கெ வரணும்போல இருக்கு. ஜிகே மாதிரியே இருக்கு. குட்டிப்பூனைக்கு இன்னூம் பேர் சூட்டல் நடக்கலியா.

Anonymous said...

\\'பசங்க' அதைப் படிச்சிட்டு(???!!!!) லீவுக்கு இப்படி ஆ(ளா)லாப் பறக்கறாங்க. \\ உள்குத்து எதுவும் இல்லியே.

said...

துளசி
குள்ளச் சூரிய காந்தியும், பேப்பிள் பூவும், றாஸ்பெரியும் சூப்பர்.

றாஸ்பெரியைப் பார்க்க மல்பெரி தான் நினைவுக்கு வருது.

said...

பூக்கள்..பழம்...பூனைக்குட்டி அருமை...

said...

மேடம்,

// பழங்களைத் தினம் பறிச்சு ஃப்ரெஷா முழுங்கிக்கிட்டு இருக்கேன், can you ever get fresher than this?னு:-)))'

தினம் பழம் சாப்புடணுமுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க:-)//

ஒருவார காலத்துக்குள் உங்களுக்கு உத்தரவாதமாக வயிற்றுவலி வரா விட்டால் ஒர் தமிழ்ப் பழமொழியே தப்பாகிவிடும் அபாயம் இருக்கிறதே!

said...

பூக்கள்..பழம்...பூனைக்குட்டி அருமை...

repeatuuuuuuuuuuu

said...

//சற்றே வயிற்றுக்கும் உணவு. இந்த வருசம் ராஸ்பெரி நிறைய வந்துருக்கு//

ராஸ்பெரி நல்லாயிருக்கு. நாக்கில் எச்சில் உர்ர்ர்ர்...

said...

உள்ளேன் ரீச்சர்!

said...

பூனைக்குட்டி சூப்பர்..
கருமை நிறத்தொரு பூனை,
துளசி(மேடம்)
வீட்டில் வளருது கண்டீர்

said...

\\குள்ள வகையாம்\\\

அழகாக இருக்கு..:)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

பெயர் வச்சாச்சு. நம்மூட்டுலேதான் எல்லாத்துக்கும் உடனே பெயர் வச்சுடறது 'குடும்பப் பழக்கமாச்சே':-))))

ஜிக்குஜூ.

நல்லா இருக்கா? ஜிகேவின் ஜூனியர்:-))))

கட்டாயம் வாங்க.

said...

வாங்க செல்லி.

//றாஸ்பெரியைப் பார்க்க மல்பெரி தான் நினைவுக்கு வருது.//

அட! மல்பெரி இப்படியா இருக்கும்!!! நான் மல்பெரியை இதுவரை பார்த்ததில்லைங்க. பட்டுப்பூச்சி விவரம் படிச்சிருக்கேன்.

said...

வாங்க பாசமலர்.

எல்லாமே 'ப' வரிசையில்:-)))

நன்றிப்பா

said...

வாங்க ரத்னேஷ் அப்பா.

நானும் ஒரு தமிழ்ப் பழமொழியைக் காப்பாத்தவே இப்படிச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

ஒரு வாரத்தில் வயிற்றுவலியா?

அடடா..... அப்ப ஒரு வாரம் கழிச்சுத் தின்னட்டுமா? :-)))

இப்பவே தோட்டத்தில் பறவைகள்
எனக்குமுன்னே வந்துருது.

அதுக்கும் வயிற்றுவலி வருமா?

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நீங்களும் 'ப'வரிசையா? :-))))

said...

வாங்க ஆடுமாடு.

நல்ல பழம்தான். ஆனா எடுத்து வைக்க முடியாது. ஒரே நாளில் கெட்டுப்போயிருது.

இங்கே இந்த மாசக்கடைசியில் இருந்து பெரிய தோட்டங்கள்/பண்ணைகள் வச்சுருக்கறவங்க 'பிக் யுவர் ஓன்' ன்னு விளம்பரம் செய்வாங்க. விலையும் கிலோ கணக்கில். ஆனா மலிவாத்தான் இருக்கும்..

நாம் செய்தித்தாளில் விளம்பரம் பார்த்துட்டுப் போகலாம். ச்சின்னச்சின்ன ப்ளாஸ்டிக் வாளிகள் வச்சுருப்பாங்க. நாமே பறிச்சு அதில் சேகரிச்சு வெளியே வந்தால் ஒரு ஷெட் போட்டு உக்கார்ந்திருக்கும் பண்ணைச்சொந்தக்காரர் அதை எடை போட்டு நம்மகிட்டே காசு வாங்கிப்பார்.

ஒரு அரைக்கிலோ வாங்கினாலும் சரி. அதான் பறிக்கும்போதே அது நேரா வாளியில் விழாம வாயில்தானே விழும் முக்காவாசி.

விதைக்கிற காலத்தில் விதைக்காம அறுக்கிற காலத்தில் அறுவா தூக்கிக்கிட்டுப் போறது இப்படித்தான்:-)))

said...

வாங்க கொத்ஸ்.

பல 'அலுவல்கள்' இருந்தும் வந்துட்டுப் போனதுக்கு நன்றி:-)))

said...

வாங்க தங்ஸ்.

கவிதை நல்லா இருக்கு. எல்லாம் பூனைக்குட்டியின் ஆசீர்வாதம்தான்:-)))

said...

வாங்க கோபிநாத்.

குள்ள வகையில் விதைகள் வராதோன்னு ஒரு சந்தேகம் இருக்கு.

ஆனா பெரிய பூ அம்மா, அதைச் சுத்திக் குழந்தைங்கன்னு நினைச்சா ஒரே பாசக்கார குடும்பமா இருக்கும்போல:-)))

said...

துளசி அக்கா..எல்லா பூவும் சூப்பர்..
அதுவும் அந்த 100 டாலர் சிக்கனம் அருமை... அத கேட்டுப்புட்டு நம்ம கோபால் மாம்ஸ் முகத்துல ஈயாடியுருக்குமே...ஹிஹி...

கருப்புக்கு தொனையா வந்த அட்டக்கருப்பு அட்டகாசமாவே இருக்கு..:)))

said...

\\துளசி கோபால் said...
வாங்க கோபிநாத்.

குள்ள வகையில் விதைகள் வராதோன்னு ஒரு சந்தேகம் இருக்கு.

ஆனா பெரிய பூ அம்மா, அதைச் சுத்திக் குழந்தைங்கன்னு நினைச்சா ஒரே பாசக்கார குடும்பமா இருக்கும்போல:-)))\\

நம்மளை மாதிரின்னு சொல்லுங்க ;))

said...

பேசாம பி.சி.ச்ரிராம், பாலு மகேந்திரா கிட்ட அஸிஸ்டண்ட் ஆக போய் சேந்துரலாம் :)

படங்கள் சூப்பர் !

எ.அ.பாலா

said...

பேசாம பி.சி.ச்ரிராம், பாலு மகேந்திரா கிட்ட அஸிஸ்டண்ட் ஆக போய் சேந்துரலாம் :)

படங்கள் சூப்பர் !

எ.அ.பாலா

said...

படங்கள் சூப்பர். பூனைக்குட்டியின் பெயர் அதைவிட சூப்பர். ;-)

//நல்ல பழம்தான். ஆனா எடுத்து வைக்க முடியாது. ஒரே நாளில் கெட்டுப்போயிருது.
//

சுமூதி (smoothie) வேணுமா, பழங்களை ஃப்ரீஸரில் சேமியுங்கள். ஆப்பிள் சூஸ் எடுத்து, அதில் நன்றாக ஃப்ரீஸ் ஆன ராஸ்பெரிகளை மிக்ஸியில்/ஜூஸரில் போட்டு நுரை ததும்ப அடியுங்கள். ஸுமூதி ரெடி. இதில் லேசா லெமன் கலந்தீங்கன்னு வச்சுக்கோங்க...ம்ம்ம்.. சூப்பர் மணம்... சூப்பர் டேஸ்ட். அப்படியே வெண்ணிலா ஐஸ்க்ரீம் போட்டீங்கன்னா....

said...

எனக்கு ராஸ்பெர்ரீரீர்ரீ வேணும் உடனே வேணும் - ம்ம்ம்ம்ம்ம்ம்

பூ பழம் பூனை (ஜிக்குஜ்ஜூ) - அருமை அருமை - ஜூனியர் ஜீக்கே

said...

வழக்கம் போல் படங்கள் சூப்பரோ சூப்பர்!

said...

வாங்க ரசிகன்.

'ஈ' ஆடுனா அம்புட்டுத்தான். மாம்ஸ் ஒரேதா சாமியாடிருவார். இங்கே ஈக்கள் கூட ரொம்ப ஆரோக்கியமான ஹைப்ரீடா இருக்குப்பா. ஒவ்வொண்ணும் ஒரு வண்டு சைசில்:-)))))

நம்ம அட்டக்கருப்பு இப்பப் பக்கத்துவீட்டுப் பசங்களுக்கு ஃபேவரிட்டா இருக்கான். அதிலும் ச்சின்னது வந்தவுடன்,இவனை மடியில் தூக்கி வச்சுக்குது:-))))

said...

கோபிநாத்,

//நம்மளை மாதிரின்னு சொல்லுங்க ;))//

அப்படிப்போடுங்க அரிவாளை:-)))))

இல்லையா பின்னே?

said...

வாங்க பாலா.

நீங்க சொன்னவங்க எல்லாம் ச்சும்மாக் கிடக்கறாங்க போல!
கூட்டத்தில் நானும் கோ 'இந்தா'ப் போடணுமா? ;-)))))

வருகைக்கு நன்றி. கருத்துக்கும்தான்:-))))

said...

வாங்க காட்டாறு.

சுமூதியை எல்லாம் விட்டுப் பிரிஞ்சு வருசக்கணக்காகுது. உடம்பை வருத்தி இளைக்க முயற்சி செஞ்சுக்கிட்டு(???) இருக்கோம்.

இரத்த அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்காம். ( தமிழ்மணம் படிக்கிறதாலான்னு தெரியலை)

பறிச்சேன் தின்னேன் தான் சுலபம்:-)

said...

வாங்க சீனா.

உடனே வேணுமுன்னா உடனே நீங்க இங்கே வந்தாகணும். இன்னும் ரெண்டு மாசத்தோட இந்தப் பழத்தின் சீஸன் முடிஞ்சிரும்.

said...

வாங்க வி எஸ் கே.

இயற்கையான அழகுன்றதால் படத்துலே அள்ளிக்கிட்டு வருது:-)))

said...

உள்ளேன் டீச்சர்... :)

ராஸ்பெர்ரி ஸ்மூதி, கொழுப்பு இல்லாத பால் போட்டும் செய்யலாமே .... ஆனா, குடிக்கத்தான் முடியாது :(

வெறும் பழமா சாப்பிடறதுதான் பெஸ்ட். இங்கே, இந்தப் பழம் அனியாய விலை!!

said...

எனக்கும் கூட ரொம்பவே கையைக்கடிக்குது துள்சி!வீட்டில் மரவேலைகள் நடக்குது.
செவ் பெரீஸ் சூப்பர்! அப்படியே செடியிலிருந்து பறித்துப் பறித்து வாயில் போட்டால்...அஹாஅஹா..ஆஹா!
செர்ரி தோட்டம் போய் செர்ரிப் பழங்கள் சாப்பிட்ட ஞாபகம் வருதே..!