Friday, October 12, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 33

மதியம் மூணரைக்குப் போய் பால் & கேட் ஃபுட் வாங்கிக்கிட்டு அங்கெ போனேன், அலாரம் போட்டுவிட்டு வரலாம்ன்னு. இதொரு தொந்திரவு புடிச்ச வேலையா இருக்கு. கேரி இன்னும் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார். விளக்குகள் எல்லாம் வேலை செய்யுதாம். ஃபோயரில் உள்ள 'வாட்டர் ஃபால்ஸ்' அட்டகாசமாக இருக்கு! லவுஞ்சிலும் கிறிஸ்டல் லைட்ஸ் நல்லாவே இருக்கு! ஹாலோஜன் விளக்குகள் எல்லாம் போட்டாச்சு!
மற்ற லைட்டுகள்னு ஒரு சாதாரண குண்டு பல்ப்'' போட ஆரம்பிச்சார். இதையா 'ரெட்பாத்'லெ கொடுத்துருக்காங்க? நான் அதை வேண்டாம்னு சொன்னேன். நாங்கள் செலக்ட் செய்தது வேறே. ஸ்பிரிங் மாதிரி சுருண்டுள்ள லாங் லைஃப் வேணும். லாங் லைஃப் வெளியே நீண்டு இருக்குமே என்றார் கேரி. அதுக்குத்தான் சுருண்டு இருக்கறது போடறோம்ன்னு சொன்னேன்.
நம்ம பெட்ரூமிலே ட்ரெஸ்ஸர்க்கு போட்ட விளக்கில் ஒரு பல்ப் வேலை செய்யல்லை. கழட்டி வாங்கினேன். அடுத்த வாரம் கொண்டு போய்க்
கொடுக்கணும்!



வீட்டுக்குள்ளெ 'பவர்' வந்தால் ஹீட் பம்ப் ஒரு மணி நேரம் ஒடவிடுங்கன்னு அந்தப் பையன் ஆண்ட்ரூ சொன்னதாலே அதை ஆன் செஞ்சு
30 டிகிரிலே ஓட விட்டேன். ரெண்டு தான் வேலை செய்யுது. மாஸ்டர் பெட் ரூமுதுக்கு இன்னும் கனெக்ஷன் கொடுக்கலையாம்.


இனி கேரி புதன் கிழமைதான் வருவேன்னார். கிறிஸ்மஸ் வாழ்த்துச் சொல்லிட்டு வந்தேன்.


அப்ப நம்ம பாசுதேவ், சசி & ஷிவானி வந்தாங்க. உள்ளெ ஒரு 'டூர்' கொண்டு போனேன். ரொம்ப 'இம்ப்ரெஸிவ்'வா இருக்குன்னு சொன்னாங்க. அவுங்க வீட்டுலே 'கிச்சன்லே மார்பிள் பெஞ்சு டாப் இருக்கு! இதைப்போய் நல்லா இருக்குன்றாங்க. எல்லாம் ஒரு மரியாதைக்குச் சொல்றது:-))))



அப்புறம் எல்லாக் கதவையும், ஜன்னலையும் செக் செஞ்சுட்டு வெளியே பூட்டிட்டு கார்கிட்டே போறேன், அந்த வெள்ளைக்காரப் பெரியவர்
வழக்கம்போல நின்னு பார்த்துக்கிட்டு இருக்கார். கொஞ்ச நேரம் நின்னு பேசுனேன். வீட்டின் பின் பக்க தோட்டம் பார்க்கலாமான்னு
கேட்டார். அவர் ஃபார்மர். அதனாலெ மண்ணுன்னா ஒரு ஆர்வம். கதவைத் திறக்காம பின்னாலெயே கொண்டு போனேன். நல்லதாப் போச்சு. பின்பக்கம்
ஒரு ஐ லிட் விளக்கு எரிஞ்சுகிட்டே இருக்கு. ரொம்ப அருமையான மண்ணா இருக்காம். நல்ல செடிகளா வையுங்கன்னார். என்னென்ன மரங்கள் வைக்கற ஐடியா இருக்குன்னு கேட்டார். இன்னும் முடிவு பண்ணலைன்னு சொல்லி வச்சேன். அவர்கிட்டே எதெல்லாம் நல்லதுன்னு கேட்டு வச்சுருக்கலாம். நல்ல ச்சான்ஸை விட்டுட்டேன்(-:




அவர் போனதும் கதவைத் திறந்து அலாரம் எடுத்துட்டு மாஸ்டர் பெட்ரூம் பக்கம் போய் அந்த லைட்டுக்கு ஸ்விட்ச் எங்கே இருக்குன்னு
எதுன்னு தேடி ரொம்ப நேரம் கழிச்சுக் கண்டு பிடிச்சேன். அணைச்சுட்டு வந்தேன்.


நாளைக்கு கிறிஸ்மஸ் பண்டிகை!



25/12
இன்னைக்கு யாரும் வேலைக்கு வரமாட்டாங்கல்லே?. அதால நிம்மதியாத் தூங்கினேன். தினமும் காலையிலெ 6 க்கு எந்திருச்சு, குளிச்சு
சாமி கும்புட்டு அங்கே 8க்கு முன்னாலெ போகணும். இன்னிக்கு லீவு! நான் எந்திரிக்கறப்பவே எட்டரை ஆயிருக்கு. பசங்கதான் பாவமா
வெளியே உக்காந்திருந்தாங்க! ஜிக்கு பண்ண அநியாயத்தாலே 'கேட் டோரை' மூடும்படி ஆனதால் யாருக்குமே உள்ளெ வரமுடியாம ஆயிருச்சுல்லே!
குளிக்கறப்ப ஒரு ஐடியா வந்துச்சு! இன்னைக்குக் கிறிஸ்மஸ் பண்டிகை. நம்ம புதுவீட்டுலே சாமி கும்பிடலாம்ன்னு!



எல்லா வேலையும் முடிச்சுட்டு 11 மணிக்கு சாமிப் படம், ரெண்டு ச்சின்ன விக்ரஹங்க ( புள்ளையார், லக்ஷ்மி)ஊதுவத்தி, ஸ்தோத்திரப்
புஸ்தகம், ரெண்டு வாழைப் பழம் ( ப்ரசாதம்!) கோலப் பலகை, உக்கார ஒரு டெனிம் விரிப்பு. ஊதுவத்தி ஸ்டேண்டு, வத்திப்பெட்டி எடுத்துக்கிட்டேன்.
அங்கே போய் அலாரம் எடுத்துட்டு, விரிப்பை விரிச்சு, பலகை வச்சு, அதும் மேல சாமி படம், விக்ரஹம் எல்லாம் வச்சு, ஊதுபத்திக் கொளுத்தி வச்சேன். இதுக்கு நடுவிலே ஹீட் பம்ப் ஆன் செஞ்சுகிட்டேன். ச்சும்மா 30 டிகிரி! இதமா இருக்கு


லக்ஷ்மி அஷ்டோத்திரம், கனகதாரா ரெண்டும் படிச்சேன். பாடுனேன்றதுதான் பொருத்தம். ஆனா, தொண்டை மக்கர். சொல்லத் தெரியாம ஒரு வலி. தொண்டையிலே கான்சரோ?


ஒருமாதிரி சாமியைக் கும்பிட்டுட்டு,,ஒரு பழத்தையும் தின்னுட்டு, ஒருதடவை வீட்டைச் சுத்திப் பார்த்துட்டு, ஹீட் பம்ப் ஆஃப் செஞ்சுட்டு,
அலாரம் போட்டுட்டு வந்துட்டேன். விரிப்பை மட்டும் லாண்டரி கப்போர்டுலே வச்சிருக்கேன். சாமிப் படத்தை அங்கேயே வச்சிட்டு வந்திருக்கேன். அந்த இடம் அவருக்கும் பழகட்டும்!



சாயங்காலமா கோயிலுக்குப் போனேன். இன்னிக்கும் 'ஏகாந்த சேவை'! நிஜமாவே ஏகாந்த சேவைதான். இவரும் ஊரிலே இல்லாததாலே
நான் மட்டும். இவரு இல்லாட்டா நான் காலையிலே போவேன். இப்ப கோடைகாலம். ராத்திரி 9 வரை வெளிச்சம் இருக்கேன்னு சாவகாசமா
சாயந்திரம் போனேன். ப்ரசாதம் கிடைச்சது! இவரோட கோயில் 'ட்யூடி'யெல்லாம் நான் செஞ்சேன்.



வர்றப்போ அப்படியே வீட்டுக்கும் (புது வீட்டுக்குத்தாங்க!)போய் ஒரு நிமிஷம் லைட் போட்டுட்டு ச்சும்மா ஒரு நிமிஷம் செக் பண்ணிட்டு
வந்தேன். நான் அங்கே போறப்போ, ஒரு கார் நம்ம வீட்டு முன்னாலெ நின்னுகிட்டு இருந்தது. என்னடா இது யாரா இருக்கும்ன்னு தெரியாம நான்
வண்டியிலேயே உக்காந்திருந்தேன். நம்ம வண்டியைப் பார்த்ததும் அந்தக் கார் மெல்ல நகர்ந்து, போயிருச்சு! போற வர்றவுங்க நின்னு நின்னு பார்த்துட்டுப் போறாங்க. நல்லதா கெட்டதான்னு தெரியலை!


இன்னைக்கு ராத்திரி இவர் சென்னைக்குப் போய்ச் சேருவார்.


26/12
இன்னைக்கு 'பாக்ஸிங்க் டே'! நம்ம தமிழ் சொஸைட்டி பிக்னிக் இருக்கு. அவ்வளவு தூரம் 'க்ரோயன்ஸ் பார்க்'குக்குத் தனியாப் போகணுமேன்னு
போகவேண்டாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன். அப்ப சங்கத் தலைவர் ஃபோன்லே கூப்பிட்டு, காலநிலை சரியா இல்லைன்னு இடத்தை மாத்திட்டோம். மிடில் பார்க் தெருவிலே ( நம்ம புது வீடு இருக்கற தெருவுதாங்க!) 'செயிண்ட் தாமஸ் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் க்ரெளண்ட்'லேன்னு சொன்னார். நம்ம(!) தெருவாச்சேன்னு நான் போனேன். எப்ப? 1 மணிக்கு மேலெ ஆயிருச்சு. அங்கே அப்பத்தான் 'பார்பெக்யூ' ஆரம்பிச்சு இருக்காங்க!
நான் ஒண்ணும் சாப்பிடாம மார்கழி மாசம்ன்னு சொல்லிட்டுக் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துட்டேன். வர்றப்ப அப்படியே நம்ம வீட்டைத் திறந்து
பார்த்துட்டு ஒரு அஞ்சு நிமிசம் இருந்துட்டுத்தான் வந்தேன்.



மணி 3 ஆயிருச்சு. இந்தியாவுலே காலையிலே 7.30 ஆச்சு. ஃபோன் செஞ்சேன் இவரு பத்திரமாப் போய்ச் சேர்ந்தாரான்னு கேக்க. ராத்திரி
11 மணிக்குப் போனாராம். அப்ப இங்கே இன்னிக்குக் காலையிலே 6.30! 'எல்லாம் நல்லா இருக்காங்களாம். '


சாயந்திரமா நம்ம தேவி கணேஷ் கூப்பிட்டு திருவல்லிக்கேணியிலே கடல் கொந்தளிப்பு. தண்ணி ஊருக்குள்ளெ வந்துருச்சுன்னு சொன்னாங்க.
உடனே இவரைக் கூப்பிட்டேன். லைனே கிடைக்கலை. பலதடவை கூப்பிட்டுப் பார்த்தேன். ஊஹூம்......


மனசுக்கு கவலை வந்துருச்சு. நம்ம 'ப்ளாக்'லே செய்தி ஏதாவது உண்டான்னு கேட்டேன். அப்பத்தான் தெரியுது இது வெறும் சமாச்சாரமில்லே. பேரழிவுன்னு! ப்ளாக் நண்பர்கள் எல்லாம் விவரம் அள்ளித் தந்தாங்க. நம்ம இரா.மு. தனிமடல் அனுப்புனாரு. கவலை வேணாம். வீட்டு அட்ரஸ், ஃபோன் நம்பர் தாங்க. நான் போய் நேரில் பார்த்துட்டு வந்து மெயில்லே சொல்றேன்னு! நல்ல மனசு. அதுக்குள்ளெ திரும்பித் திரும்பி முயற்சி பண்ணதாலெ லைன் கிடைச்சிருச்சு. இவுங்க எல்லாம் நலம்தானாம். வேளச்சேரின்னதாலே ஆபத்து இல்லையாம். நாளைக்கு பெங்களூர் மச்சினர் வராரம். அவரோட எல்லோரும் 'பீச் பக்கம் பிக்னிக்' போறாங்களாம்!


எனக்கு 'திக்'ன்னு ஆச்சு. அங்கங்கே 5000 ஆளுங்க செத்துட்டாங்கன்னு நியூஸ் வருது. இன்னும் கடல் கொந்தளிப்பு 4 நாளைக்கு இருக்கும்
கடல் பக்கம் யாரும் போகவேணாம்ன்னு வார்னிங் வந்துக்கிட்டு இருக்கு. இவுங்க பீச்சுப் பக்கம் ஊர்சுத்தப் போறாங்களாம். 'திருந்தாத ஜென்மங்கள்!'
நான் கோவத்துலே ஃபோனை கட் செஞ்சுட்டேன். எப்படியோ போட்டும்.
----------------------------------------------------

6 comments:

Anonymous said...

//அப்ப நம்ம பாசுதேவ், சசி & ஷிவானி வந்தாங்க. உள்ளெ ஒரு 'டூர்' கொண்டு போனேன். ரொம்ப 'இம்ப்ரெஸிவ்'வா இருக்குன்னு சொன்னாங்க. அவுங்க வீட்டுலே 'கிச்சன்லே மார்பிள் பெஞ்சு டாப் இருக்கு! இதைப்போய் நல்லா இருக்குன்றாங்க. எல்லாம் ஒரு மரியாதைக்குச் சொல்றது:-))))//

பின்னே. இவ்வளவு செலவு பண்ணி வீடு கட்டி இருக்கீங்க. நல்லா இல்லேன்னு அவ்வளவு சீக்கிரம் யாராச்சும் சொல்லிட முடியுமா என்ன.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

அட.... என்னங்க நீங்க?

said...

என்னங்க இது! ஒரு படம் கூட போடாமல்,பதிவை படிச்ச மாதிரியே இல்லையே.
பின்பக்கம் விளக்கு எரிந்துகொண்டு இருந்தது என்பதுக்கு பக்கத்திலாவது அந்த விளக்கு போட்டோ போட்டிருக்கலாம். :-)))))

said...

வாங்க குமார்.

பொருத்தமா படம் இல்லைன்னு இருந்துட்டேன். உங்க ஐடியா :-))))

said...

//இதுக்கு நடுவிலே ஹீட் பம்ப் ஆன் செஞ்சுகிட்டேன். ச்சும்மா 30 டிகிரி! இதமா இருக்கு//

உங்க ஊரில் கிறுத்துமஸ் கோடை காலத்தில்தானே. அப்புறம் அப்போ எதுக்கு இந்த ஹீட் பம்ப்?

//தொண்டையிலே கான்சரோ?//

அப்புறம் கான்சர் மேட்டர் என்ன ஆச்சு? :)) (நல்ல நாளா இருந்தா நல்லது நினைக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க. அதுக்காக இப்படியா!)

//நான் கோவத்துலே ஃபோனை கட் செஞ்சுட்டேன். //

போனை வெச்ச பின் திட்டித் தீர்த்ததைப் பத்தி ஒரு வார்த்தை கூடச் சொல்லலையே!!

said...

வாங்க கொத்ஸ்.

எங்கூரு சம்மரை நீங்கதான் மெச்சிக்கணும். 25 இல்லெ 26 க்கு மேலெ போனா அதிசயம். அதிலும் எப்பவாவது ஒரு 29/30 வந்துருச்சுன்னா அவ்ளோதான்.

'இண்டியன் சம்மர்'ன்னு அதுக்குப்பேர் வச்சுருக்காங்க.

அதிலும் கோடை ஆனாலும் சதர்லியும் வந்து போகும். குளிர் ஃப்ரம் அண்டார்ட்ட்டிக்கா வந்துச்சுன்னா நடுக்கம்தான்.

ஒரேநாளில் நாலு சீஸனும் வரும் ஊர்ன்னு எங்க ஊருக்கு ஒரு ஸ்பெஷல் பெருமையும் இருக்கு.

நான் சொல்றதெல்லாம் செண்டி(கிரேடு) சமாச்சாரம்:-))))


கான்சர் இதுவரைக்கும் இல்லையாம்!