'நினைவலைகள்' என்னும் சொல்லை 'சிந்தா நதி'யில் பார்த்தேன்.
இவர்தான் எல்லா அலைகளுக்கும் முன்னோடியா?
ஜனனி, கங்கா,அரவான், புற்று இப்படி மறக்கமுடியாதவை மனதுக்குள் வட்டம் போடுது.
எத்தனைதான் படிச்சாலும், அந்தக் காலத்தில் (விகடனோ இல்லை குமுதமோ ஞாபகம் இல்லை) வந்த ஒரு சிறுகதை மட்டும் எங்கள் நெஞ்சில் பதிஞ்சு போயிருக்கு.
ஏழைக் குடும்பத்தில், சாப்பிட ஒன்னுமில்லாத நிலையில், எங்கோ யார் தோட்டத்திலோ இருந்து கொண்டுவந்த கத்தரிப்பிஞ்சுகளை ஒரு ச்சின்ன அடுக்கில் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுக் குழந்தைகள் எல்லாரும் கூடத்தின் தரையில் படுத்து உருள்வார்கள்.
கத்தரிக்காயை அதுவும் ச்சின்னச் சின்ன குண்டுக்கத்தரிக்காயைப் பார்த்ததும்
நேரா லா.ச.ரா வீட்டுக்குப் போயிரும் எங்கள் மனசு.
இங்கே இந்த 'எங்கள்' எங்க கோபாலையும் சேர்த்துத்தான்.
எழுத்து....மரணமில்லாப் பெருவாழ்வு இல்லையா?
அன்னாரின் மறைவு.......
அவருக்கு ஆன்ம சாந்தி கிடைக்கணும். குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றோம்.
Wednesday, October 31, 2007
லா.ச.ரா
Posted by துளசி கோபால் at 10/31/2007 08:57:00 AM
Labels: லா.ச.ரா இரங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். அஞ்சலிகள்.
இன்னும் அவரது படைப்புகளை அவ்வளவாக வாசிக்கவில்லை என்று வெட்கமாக இருக்கிறது.
அவரை இழந்து வருந்தும் உறவினருக்கும் நட்பிற்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
வாங்க சுந்தர் & ராகவன்.
நானும் அப்பப்ப வார இதழ்களில் வந்ததைத்தான் படிச்சிருந்தேன்.
இந்த முறைதான் புத்தகத் திருவிழாவில் ஜனனி, கழுகு, சிந்தாநதி,கங்கா வாங்கிவந்தேன்.
ஒவ்வொண்ணும் ஒருவிதத்தில் அருமையா இருக்கு.
வானதிப் பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க. விலையோ...கொள்ளை மலிவு.
இப்ப முன்னாடி படிச்சதெல்லாம் நினைவு இல்லை.. நான் என்கிற அவருடைய புத்தகம் மட்டும் நியாபகம் இருக்கு சமீபத்தில் படிச்சதால.
அவருக்கு என் அஞ்சலிகள்.
டீச்சர்
எனக்கிந்த தகவல் தெரியாதே :(
எப்போ?
லா.ச.ரா வின் படைப்புகளையெல்லாம் அத்தன சீக்கிரம் மறந்திடமுடியும்னு தோணல..
பச்சை கனவும் கழுகும் மனசில ஒடியபடியே இருக்கு கழுகில சின்ன சின்னதா பத்து கவிதைகளுக்கு மேல வரும்.. 'நான் நானில்லை' ன்னு தொடங்குகிற ஒரு கவிதை ஏகப்பட்ட சிந்தனைகளை அசைச்சு போட்டுச்சி..
தாக்ஷாயனி யை நினைவிருக்கா உங்களுக்கு? நீளமான கூந்தலோட தம்பூர் வாசிக்கும் அந்த பெண்ணின் சித்திரம் ரொம்ப நாள் மனசில நின்னுட்டே இருந்தது..என்ன ரொம்பவும் தூக்கி வாரிப்போட செய்த ஒரு சிறுகதை நினைவுக்கு வருது பெயர் நினைவில்ல..
மகளுக்கு கல்யாணம் செய்து வைக்க முடியாத ஓர் தகப்பன்..எங்கயோ ஓடிப்போய் திரும்ப வருவான்..ஒரு இருட்டான இடத்தில அவனை ஒரு பெண் வலிய கூப்பிடுவாள் நல்ல வெளிச்சத்தில அவள் முகம் பார்த்து அதிர்வான்.. அந்த பெண் சுதாரித்து அப்பா ன்னு ஓடி வந்து கட்டிப்பா
ரொம்ப நாள் இயல்பா இருக்க முடியல இந்த கதை படிச்சிட்டு
வார்த்தைகளின் மூலமா ஏகப்பட்ட அதிர்வுகளை ஏற்படுத்திய அற்புத படைப்பாளிக்கு அஞ்சலி...
ம்ம்ம்ம், உங்களுக்குக் கத்தரிக்காய்னா எனக்கு அவரோட "தீபாவளி" பற்றிய ஒரு கதையும், இன்னொரு கதையில் அம்மாவின் வளையல் பற்றி எழுதி இருப்பதும் நினைப்பு வரும்.
அய்யனார் குறிப்பிட்ட காட்சி தான் "மகாநதி" படத்தில் வந்தது. படம் பார்க்கும்போதே நினைச்சுப்பேன். லா.ச.ரா. கதை மாதிரி வந்திருக்கேனு. :((((
"மகாநதி படத்தில் வேறுவிதமாய் வந்தது" னு எழுதி இருக்கணும். விட்டுட்டேன்.
லா.ச.ராவின் எழுத்துக்கள் நம்மை நதியின் நீர்ச் சுழலில் இழுத்து வீசும் தன்மையுடையது. தர்க்க ரீதியாக இல்லாமல் மன ஓட்டத்தின் வேகத்தில் அவரின் நடை இருக்கும். எனக்குப் பிடித்த எழுத்தாளர்.
'ஒரு குடம் தண்ணீர் விட்டு ஒரு பூ பூக்கும் செடி; ஒரு குடம் தண்ணீர் விட்டும் ஒரே பூ பூக்கும் செடி; ஒரே குடம் தண்ணீர் விட்டு ஒரு பூ பூக்கும் செடி' என்று ஒரு முன்னுரையில் மாற்றி மாற்றி எழுதிச் சென்றிருப்பார்...
அற்புதமான எழுத்தாளர்...
இது வல்லியின் பின்னூட்டம்
லா.ச.ரா மறைவுக்கு அஞ்சலி சொல்றது கூட வருத்தமாகத் தான் இருக்கு.
துளசி .
ஒரு விரசமில்லாமல் கதைகள் படித்த காலம்.
நீங்கள் எடுத்துக் கொடுத்த கதையும் நினைவுக்கு வருகிறது.
அவங்க குடும்பத்துக்கு நமளோட வருத்தங்களைத் தெரிவிகலாம்
வாங்க அய்யனார்.
முந்தாநாள் செவ்வாய்க்கிழமைதான் இந்த சேதி வந்தது. நம்ம 'நம்பிக்கை' குழுவின் மடல் வந்ததுங்க. அவருக்கு வயசு 91. நல்ல பழுத்த வயசு, நிறைய அனுபவங்கள் கிடைச்ச வாழ்க்கைன்னாலும் நமக்குத் துன்பச்செய்தி கேட்டதும்
'பக்'ன்னுதான் இருக்கு.
தினசரிகளில் இவரைக் கண்டுக்கவேயில்லை(-:
மறக்கக்கூடிய எழுத்தா? எல்லாம் மனசுலே அப்படியே கனன்று கொண்டிருக்கும் அக்னிக்குஞ்சுகள்.
வாங்க கீதா.
சேதி அறிஞ்சதும் 'சட்'னு உங்க ஞாபகம் வந்துச்சு. அவரும் அம்பத்தூர் என்றதாலே, நீங்க நேரில் போய் அஞ்சலி செலுத்தச் சான்ஸ் இருக்கேன்னு நினைச்சேன்.
வளையல் நான் படிச்சதில்லை.
வாங்க முத்துலெட்சுமி.
அவருடைய கதைகளில் ஒவ்வொண்ணும் ஒரு விதம். ஆனால் பல கதைகளுக்குத் தலைப்பு பெண்கள் பெயரில்தான்.
அங்கே தமிழ்ப்புத்தகங்கள் நூலகங்களில் எக்கச்சக்கமாகக் கிடைக்குமெ. நிதானமா படிச்சுப்பாருங்க.
வாங்க ஜெ.சுந்தர்.
முதல்முதலா வந்துருக்கீங்க போல? நலமா?
நீங்க சொன்னது சரிங்க. அந்த முன்னுரைகளே படிக்க ரொம்ப சுவாரசியமா இருக்கும்.
வருகைக்கு நன்றி.
வாங்க வல்லி.
//விரசமில்லாமல்......//
ரொம்பச்சரி.
வாசகனின் யூகத்துகே விட்டுறலாமுன்னுதான்:-)
எழுத்தாளன் மனசில் ஒரு சிறு தீ எப்பவும் இருக்குமா?
ஒரு வாரம் காய்ச்சல். நெட் பக்கம் தலை காட்டலை. அதுக்குள்ள இவ்ளோ எழுதிட்டீங்க டீச்சர். லா.ச.ரா மறைந்த செய்தி கேட்டு அம்பத்தூருக்கு அவர் வீட்டுக்கு போய்ட்டு வந்தேன். அவரை பற்றி ஒரே ஒரு விஷயம். இன்னைக்கு எல்லாரும் நவீன எழுத்துன்னு சொல்லிட்டு இருக்கிறதை அவர் அப்பவே பண்ணிட்டார்ங்கறதுதான். நன்றி. ஆழ்ந்த இரங்கல் என் சார்பாகவும்.
//தினசரிகளில் இவரைக் கண்டுக்கவேயில்லை//
எல்லா தினசரியும் செய்தி போட்டிருந்தாங்களே...
ஒரு பேட்டியில் பூக்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வரும்போது கடைசியில் // ஒரு குடம் தண்ணீர் வார்த்து ஒரே பூ; ஒரே குடம் தண்ணீர் வார்த்து ஒரு பூ// என்று சொன்னதை வாசித்தது - அனேகமாக 68-ல் என்று நினைக்கிறேன் - இன்னும் நினைவில் இருக்கிறது.
//ஒரு பேட்டியில் பூக்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வரும்போது கடைசியில் // ஒரு குடம் தண்ணீர் வார்த்து ஒரே பூ; ஒரே குடம் தண்ணீர் வார்த்து ஒரு பூ// என்று சொன்னதை வாசித்தது - அனேகமாக 68-ல் என்று நினைக்கிறேன் - இன்னும் நினைவில் இருக்கிறது.
//
என்ன நண்பரே !! பார்க்கவே முடியவில்லை. வருவதில்லையா ?? இல்லை நான் தான் பார்க்க வில்லையா ??
வாங்க ஆடுமாடு.
காய்ச்சல் குணமா?
//இன்னைக்கு எல்லாரும் நவீன எழுத்துன்னு சொல்லிட்டு இருக்கிறதை அவர் அப்பவே பண்ணிட்டார்ங்கறதுதான்//
சரியாத்தான் சொன்னீங்க.
நாங்க நெட்லே இ-பேப்பரில் ஒண்ணும் வரலைன்னு சொன்னேங்க.
உள்ளுர் பத்திரிக்கைகளில் வந்துச்சுன்னு தெரிஞ்சதில் திருப்தியாச்சு.
அடக்கத்துக்கு நீங்கபோனதுபற்றி விரிவா எழுதுங்களேன்.
எங்களைமாதிரி தொலைதூர மக்கள்ஸ் தெரிஞ்சுக்கலாமேன்னுதான்.
வாங்க தருமி.
ரொம்பநாளுக்கு ரொம்ப நாள்.
உங்களை நம்ம 'சீனா' தேடுறாரு பாருங்க.
வாங்க சீனா.
பல சமயங்களில் 'ஓசைப்படாமல்' வந்து படிச்சுட்டுப்போறது பலருடைய பழக்கம்தான்(நான் உள்பட)
//பல சமயங்களில் 'ஓசைப்படாமல்' வந்து படிச்சுட்டுப்போறது பலருடைய பழக்கம்தான்(நான் உள்பட)//
இல்ல இல்ல துளசி,
ஓசைப்படாமல் வரலே
டாம் டாம் அடிச்சுட்டே வர ஆசை தான்
ஒரு நாள் ஒரே ஒரு நாள் முழுவதுமாக ஒய்வு கிடைத்தால், துளசிதளம் முழுவதும் படித்து ரசித்து மகிழ்வாக மறு மொழி இடுவேன். முடியுமா ?? முயல்கிறேன். வெல்வேன்
ஆமா என்னோட பின்னூட்டத்துலே மட்டும் delete ன்ற icon trash bin கடைசீலே வருதே ஏன் ?? யாராச்சும் சொல்ல முடியுமா ? அதெ பயன் படுத்தி யார் வேணும்னாலும் அழிச்சிடலாமா பின்னூட்டத்தெயே ?? யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன் பிளீஸ்
சீனா,
அது ஹரிச்சந்திரனின் சந்திரமதியின் 'தாலி' போல. அவுங்கவுங்க கண்ணுக்கு மட்டுமே தெரியும்.:-))))
ப்ளாக் ஒனருக்கும், அந்தக் குறிப்பிட்ட பின்னுட்டம் போட்டவருக்கும் மட்டுமே தெரியும்.
//எழுத்து....மரணமில்லாப் பெருவாழ்வு இல்லையா?//
வாழ்வாங்கு வாழ்தலும் கூட டீச்சர்.
கல் சிரிக்கிறது நாவல் இன்னும் நினைவில் இருக்கு!
பாற்கடல் சான்சே இல்லை! அப்படி ஒரு எழுத்து ஓட்டம்! குடும்பம் ஒரு பாற்கடல்-னு சொல்லி விஷமும் உடனே அதற்கு மாற்றான அமுதமும் அதில் இருந்தே கிடைத்தது என்று சொல்லி அசர வைப்பார்!
இலக்கிய வானில், மணிக்கொடி எழுத்தாளர் லாசரா என்றும் சுடர்விட்டு ஒளிர்வார்!
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!
தகவலுக்கு நன்றி துளசி - நெரெய கத்துக்க வேண்டி இருக்கு
வாங்க KRS.
நல்லதும் கெட்டதும் ஒரே இடத்துலெ இருந்து வர்றதை எப்படிச் சொல்லிட்டார் பாருங்க.
ப்ச்............. இந்த மாதிரி எழுதணுமுன்னா என்ன தவம் செஞ்சிருக்கணும்!
அதுபரவாயில்லை சீனா. நானே ஒரு க.கை.நா.
எப்படியோ தட்டுத்தடுமாறித் தெரிஞ்சுக்கிட்டதுதான் இதெல்லாம்:-))))
நீங்க க.கை.நா வா ??? - நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை - துளசி
சீனா,
சிலதையெல்லாம் நம்பித்தான் ஆகணும்:-)
இந்த க.கை.நா.வுக்குக்கூட( இந்த சொற்களுக்கு)காப்பிரைட் எங்கிட்டேத்தான் இருக்கு.
அதுபோலவே நினைவலைகளுக்குள்ள 'கொசுவத்தி' (ஏத்தி வைச்சுக்கறது)க்கும் என்கிட்டேதான் உரிமை இருக்கு.
மேற்படி பதங்களைப்பயன்படுத்த என்கிட்டே ஒரு வார்த்தை அனுமதி கேட்டுக்கணும்.ஆமா......:-)
ஓக்க்க்கேஏஏ !!! இனிமே செஞ்சிட்டாப் போச்சு துளசி
Post a Comment