மக்கள்ஸ்,
இங்கே நம்ம தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு பேனர் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கு.
அதுக்குப் பொருத்தமான டிஸைன்களை வரைஞ்சு தரக்கூடியவர்களைத் தேடி
அலுத்துப் போயிட்டோம்.
நம்மில் யாராவது இந்தப் பணியைச் செய்து தர இயலுமா? கொஞ்சம் அலங்கார வேலைகள்
செய்ய வேண்டி இருக்கும். பேனரின் நீள அகலங்கள் 3 x 1.5 மீட்டர் வரணும்.
குறிப்பாகத் தமிழர்கள் ( இலங்கை & இந்தியா) செய்து தர இயலுமானால்
அவர்களுக்கு நம் அலங்கரிப்புத் தேவைகளை விளக்குவது சுலபம். எங்களுடைய
தமிழ்ச்சங்கத்தின் logo முக்கியம்.
இதற்காக ஒரு தொகையும் சங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து
விருப்பம் உள்ளவர்கள், அல்லது உங்களுக்குத் தெரிஞ்ச நண்பர்கள் யாராவது
உதவ முடியும் என்று நீங்கள் நினைத்தால் பின்னூட்டம் மூலமாக உங்கள்
மெயில் ஐடியைத் தெரிவித்தால் ( அதை நான் வெளியிடமாட்டேன் என்பது உறுதி)
உங்களைத் தொடர்பு கொண்டு விளக்கங்கள் தர எண்ணம்.
தயவுசெய்து உதவணும். செய்வீங்கதானே?
ரொம்ப எதிர்பார்ப்புடன்,
துளசி
Wednesday, February 21, 2007
நம்மில் யாராவது graphic designer ஆக இருக்கும் வாய்ப்பு உண்டா?
Posted by துளசி கோபால் at 2/21/2007 12:59:00 PM
Labels: பதிவர் வட்டம், பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
உள்ளேன் டீச்சர்.
வந்ததைச் சொன்னேன்!வரையறதுக்குச் சொல்லலை! ஹிஹி!
அதென்ன உதவின்னு பதிவு போட்டா பின்னூட்டம் இவவளவு கம்மியா போயிருது? நமுக்கு தெரிஞ்சவிய்ங்கட்ட சொல்லியிருக்கேன் என்ன நடக்குதுன்னு பாப்போம்.
அப்படியே இங்க பாருங்க:
http://www.huttcity.com/tamil-takies
இதெல்லாம் சொந்த டிசைன். இப்பதான் பிள்ளயார் சுழி. இன்னும் நெரையா மெனக்கிடனும்
கொத்ஸ்,
வேற யாராவது கண்ணுலே ( கருத்துலே ) பட்டா, அவுங்ககிட்டேயும் செய்தியைச்
சொல்லிப்பாருங்க.
வெவரத்தை சொல்லியாச்சு. ஆஜரானதுக்கு இது அட்டெண்டண்ஸ் பின்னூட்டம்.
உதவணும்னு ஆசைதான்!
தெரியாதே என்ன செய்றது?
துளசி,
தமிழ்ச்சங்க லோகோ நல்ல படியா வந்ததும் அதியும் பதிவு பண்ணுங்க.
வாங்க கிவியன்.
நல்ல நியூஸ்தான் கொடுத்துருக்கீங்க. நாடகமுன்னா எனக்கு ஒரே............
வேசம் கட்டிரணும்:-)))
உதவிக்கரங்கள் தனிமடலில் நீட்டப்பட்டுருக்கு. நம்ம மக்கள்ஸ் ரெண்டாம்பேருக்குத் தெரியாமத்தான்
உதவணுங்கறதுலே நம்பிக்கை உள்ளவங்க. நல்லா இருக்கணும்.
ரவி,
அட்டெண்டன்ஸ் பதிஞ்சாச்சு. நன்றிப்பா.
சிஜி வாங்க வாங்க.
//உதவணும்னு ஆசைதான்!
தெரியாதே என்ன செய்றது? //
அப்படியே இதை சி(வா)ஜி ஸ்டைலில் சொல்லிப் பாருங்க:-))))
நல்ல மனசுக்கு நன்றிங்க.
வல்லி,
நல்லபடி அமையும் என்ற நம்பிக்கை வந்துருச்சு.
இப்ப இருக்கும் டிசைனைப் பார்க்கணுமுன்னா
இங்கே நம்ம நம்ம தமிழ்ச்சங்கம் பக்கத்துலே பாருங்க.
பழைய பதிவு - இப்போ கமெண்ட் போட்டா ஒதெப்பீங்க - ஏறகெனவே புது லோகோ தமிழ்ச்சங்க ம் பற்றிய படங்கள் துளசி, கோபால் படங்கள் எல்லாம் வேற பதிவுலே படிச்சி மறு மொழியும் போட்டாச்சு
Post a Comment