Monday, February 26, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 7)

இசை உலகில் ஜாகீர் ஹுஸைனைத் தெரியாதவங்க யாராவது இருக்காங்களா? நம்ம வீட்டில் அல்லா ரக்கா & ஜாகீர் ஹுஸைன் தபேலா ஜுகல்பந்தி சிடியை அடிக்கடிப் போட்டுக் கேக்குற வழக்கம் கோபாலுக்கு உண்டு. 'அடடா..... கொன்னுட்டான்'னு பாராட்டிக்கிட்டே இருப்பார்.



நாளைக்கு சுல்தான்கான் சாரங்கியும், ஜாகீரோட தப்லாவும் இருக்கு. கட்டாயம் போகணுமுன்னு முடிவு செஞ்சுட்டோம். 'ஏன், நாம்தான் டெல்லிக்குப்
போறோமே அங்கே எதாவது இசை நிகழ்ச்சியை வடக்கத்திச் சூழலில் பார்க்கலாமே'ன்னும் ஒரு யோசனை.



"அப்படி எதாவது இருந்தா அதையும் பார்த்துக்கலாம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது தவறவிட வேணாம். அதுவுமில்லாம இங்கே டிக்கெட் சுலபமாக்
கிடைக்கும். காமராஜர் அரங்கம்தான். 2000 பேர் உக்கார முடியுமே!"



1000, 200 டிக்கெட்டுகள்தான் இருக்காம். 200 போதும். நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கே, ஒரு
காஃபி குடிக்கலாமுன்னா, இசைவிழா முடிஞ்ச கையோட இந்த கேண்டீன்கள் எல்லாம் குளோஸ்(-:



அண்ணாசாலையில் அரங்கத்துக்குப் பக்கத்துலேயே ஒரு ஹோட்டல் இருந்துச்சு. உள்ளெ ஈ, காக்கை இல்லை. எல்லாம் படு நீட், வெயிட்டர் உள்பட! ரெண்டு காஃபி ப்ளீஸ்! வேற எதாவது ஸ்நாக்ஸ்......? என்ன இருக்குன்னு பார்த்தா 'ஃபிங்கர் சிப்ஸ்' இருக்காம். ஆளை விடுப்பா.



ஆற அமர வந்தது. சுமார் ரகம். அட்மாஸ்ஃபியருக்குத்தான் காசு. 200 ரூபாய். 'என்னமாதிரி ஜாய்ண்ட்'ன்னு தெரியலை. போட்டும்.



சொன்ன நேரத்துக்கு ஆரம்பிச்சுருவாங்கன்னு அரங்கம் போனோம். தலையில் சிகப்பு விளக்கு வச்ச கார்களும், சீருடை போட்ட டிப்டாப் ட்ரைவர்கள் ஓட்டிக்கிட்டு வந்த படகுக்கார்களும் சர்சர்ன்னு வந்து பெரியமனுஷங்களை
வாசலில் விட்டுக்கிட்டு இருக்கு. வேடிக்கை பார்க்கக் கசக்குதா என்ன? உள்ளெ ஃபோயர்லே 'வொர்ல்ட் ஸ்பேஸ் ரேடியோ'க்கு
விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஜேசுதாஸ் பாட்டு முழங்குது. காக்ரா அணிஞ்ச இளம்பெண்கள் ப்ரோஷர் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இதை வாங்கினால் ஒரு டின்னர் செட் இலவசமாம். அந்த செட்டுக்குள்ளே சாப்பாடு? நாமே சமைச்சுக்கணுமா?



மணி ஆனாலும், உள்ளெ போக கேட் திறக்கலை. மேடையைச் சரிசெஞ்சுக்கிட்டு இருக்காங்களாம். சுத்துமுத்தும்
பார்வையை ஓட்டுனா............. ரசிகர்கள் நடை, உடை, பாவனைகள் எல்லாம் ஏதோ வட இந்தியாவுலே இருக்கமோன்னு நினைக்க வச்சது. முக்காலே மூணு வீசம் ஆண்கள் சல்வார் குர்த்தா. கொஞ்சம்பேர் ( மேல் தட்டு வாசிகள்?) சாக்குப் பையும், கலரடிச்ச தலையும். சிலபல வெள்ளைக்கார முகங்கள். யார் முகத்திலும் சிரிப்பே இல்லை. ரொம்ப சீரியஸ்ஸா தப்லா வாசிக்கிறாங்க போல மனசுக்குள்ளே! ஆஹா..... நாம் நினைச்ச வடக்கத்திச் சூழல் இங்கேயே கிடைச்சிருச்சு!


ஏக் தால், தீன் தால், கரானா, வாவா இப்படிச் சில வார்த்தைகளை வச்சுக்கிட்டு எப்படி சமாளிக்கப் போறோமோன்னு ஒரு கலக்கம். அதெல்லாம் பிரச்சனையே இல்லைன்னு ஆகிப்போச்சு.



ஒன்னரை மணி நேரக் கச்சேரி. சுல்தான் கான் மெலிசான குரலில் ஒரு பாட்டும் பாடினார். இனிமையா ஒவ்வொரு உருப்படிக்கும் முன்னே விளக்கம் சொல்லி வாசிச்சார் ஜாகீர். அந்தக் காலத்துலே பாட்டுத் தொகுப்பை சீதனமாக்கூடக் கொடுப்பாங்களாம். நல்ல ஐடியாவா இருந்துருக்குல்லே?
பின்னே எப்படிக் காலம் மாறி, எல்லாத்தையும் காசாலே அளக்கும் நிலை வந்துச்சு? (-:


நானும் போனேன் (ஜாகீர்) கச்சேரிக்கு!!!



value="http://www.youtube.com/v/_rGOF9H_Oe8"> value="transparent">width="425" height="350">

இன்னும் ஒரு நாள்தான் இருக்கு டெல்லிக்குப்போக. அங்கே இருந்து திரும்ப வந்தபிறகு பொங்கல் கொண்டாட்டங்கள் இருக்கறதாலே இந்த ஆட்டம்பாட்டத்தை நீட்டிக்க முடியாது. இப்போதைக்குக் கடைசியா ஒரு நடன (அரங்கேற்றம்) நிகழ்ச்சியைப் பார்த்துக்கலாமுன்னு ஜனவரி 7-ல் மறுபடியும் வாணி மஹால்.



எனக்குப் பக்கத்துலே வந்து உக்காந்தாங்க ஒரு அம்மா. கைப்பையைத் திறக்கும் போதெல்லாம் குபீர் குபீர்ன்னு அந்தக் கால குமுதம் தீபாவளி, பொங்கல் மலர்களை நினைவுபடுத்தும் வாசனை அள்ளிக்கிட்டுப் போகுது. பேச்சை ஆரம்பிக்க அதுவெ காரணமாவும் ஆச்சு. அத்தராம். 'காதி கிராம உத்யோக்'லே கிடைக்குமாம். நடனத்துக்குப் பாட்டுப் பாடும் பாடகியின் அம்மாவாம். மூத்த பெண்ணும் பாடகிதானாம். இவுங்களும் அதெ அதே. சங்கீதக் குடும்பம்.



ஒவ்வொரு பாட்டு முடிஞ்சதும் பாடகியிடமிருந்து ஒரு பொருள் பதிந்த பார்வை அம்மாவுக்கு. ஒரு ச்சின்னத் தலையாட்டல் தாயிடமிருந்து.

" சாதாரணமாப் மேடையில் பாடறதுக்கும், இப்படி நடனத்துக்குப் பாடறதுக்கும் வெவ்வேற மாதிரி பாட்டுக் கத்துக்கணுமா? "

கோபாலின் சந்தேகம்.

" அப்படியெல்லாம் இல்லை. பாட்டுக் கத்துக்கறது எப்பவும் போலத்தான்"

" ஆனா....... ரிகர்ஸலுக்குன்னு பலதடவை போகவேண்டி இருக்குமில்லையா?" ( இது நான்)

" ஆமாங்க. அது என்னவோ நிஜம். இல்லாட்டா...பாடுறவங்களுக்கும், ஆடுறவங்களுக்கும்
ஒரு கோ ஆர்டிநேஷன் கிடைக்காது"

அடுத்தவாரம் பாடகியின் மேடைக்கச்சேரி இருக்காம். ஒல்லியான உடல்வாகு. கணீர் ன்னு குரல்.
அருமையாப் பாடுனாங்க. அதென்னவோ எல்லாரும் பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானாவையே பாடுற மாதிரி இருக்கே? அதுதான் இப்ப ரொம்ப ஃபேமஸ். (ஃபாஷன்? )

value="http://www.youtube.com/v/azSJfVqRnkM"> value="transparent">width="425" height="350">

நாளைக்கு மாலைதானே டெல்லி ஃப்ளைட்?
அதுக்குள்ளெ அந்த காதி கிராம உத்யோக் போயிட்டு வந்துரணும்.
மனசுலே முடிச்சுப்போட்டாச்சு.


நான் கண்ட இசைவிழாவை இத்துடன் நிறைவு செய்கின்றேன். வருகை தந்த அனைவருக்கும்,
பின்னூட்டி என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றி.

27 comments:

said...

இப்ப என்ன தபெலா கத்துக்கப் போறீங்களா? பாவங்க...தபெலா

சிஜி

said...

அது எப்படியோ எப்பவும் உங்க பக்கத்தில ஒரு intersting personality வந்து உக்கார்ந்தர்ராங்க...
இந்த கூர்ந்து நோக்கும் பழக்கத்த இருந்தாலும் அநியாத்துக்கு வளர்த்து வச்சிறுக்கீங்க துளசி...

மார்கழி மாச கச்சேரியின் நேரடி ஒளிபரப்பு மாசியில் இனிதே முடிவடைந்தது...

வைர மாமிய மறக்க முடியாது

நல்லா இருந்துச்சு துளசி

said...

வாங்க சிஜி,

இப்பத்தானே //பின்னூட்டி என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றி.//ன்னு
எழுதுனேன். உடனே அதை வாபஸ் வாங்க முடியாது:-))))

நீங்க மட்டும் சுல்தான்கான் மாதிரி சாரங்கி வாசிக்கக் கத்துக்கிட்டா நானும் தபேலா
கத்துக்குவேன். அப்புறம் ஜுகல்பந்தியோ பந்திதான்:-))))

said...

அக்காவ்,
ஏப்ரல் 21, என் பொண்ணோட நடன நிகழ்ச்சி இருக்கு. காலண்டர்ல குறிச்சி வைச்சுக்கோங்க. முன் வரிசையில இடம் போட்டு வைச்சுறேன்

said...

வாங்க மங்கை.

மாமியை மறந்தாலும் வைரத்தை மறக்க முடியாதுப்பா:-))))

1994 ஜூன்லே 'மகளிர்மட்டும்' சினிமா நைட் ஷோ போயிருக்கோம்.முன் ஸீட்
மாமியின் மூணு கேரட் ப்ளூ ஜாகர் ஜொலிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.

ஒரு விஷயம் தெரியுமா? நம்மூர்லெ ப்ளூ ஜாகர்ன்னு சொல்றமே அப்படி ஒரு பேர்
உள்ள வைர வகை இல்லவே இல்லைன்னு வெளிநாட்டு & உள்நாட்டு வைர வியாபாரிகள்
சொல்றாங்க! எப்படி இந்தப் பேர் வந்துச்சுன்னு தெரியலை. 'விக்கி பசங்களைக்' கேட்டுறலாமா? :-)

said...

ஊருக்குப் போறீங்கன்னு ஒரு பட்சி வந்து சொல்லுச்சு. நிகழ்ச்சி எங்கே?
அங்கேயா இங்கேயா?

said...

//1994 ஜூன்லே 'மகளிர்மட்டும்' சினிமா நைட் ஷோ போயிருக்கோம்.முன் ஸீட்
மாமியின் மூணு கேரட் ப்ளூ ஜாகர் ஜொலிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.///

94 ஆஆஆஆ...துளசி...ஹ்ம்ம்ம் உங்களுக்கு தான் 1947 கூட 'சமீபத்தில' ஆச்சே...

said...

மங்கை,

//சமீபத்தில் 1947 ...// இது இன்னொருத்தர்:-))))

1982 லே இந்தியாவை விட்டுட்டு, 1994லேதான் ஒரு படம் தியேட்டரில் பார்த்தேன். அப்ப அது ஞாபகம்
இருக்குமா இருக்காதா? அதுக்கப்புறம் இதோ இப்ப 2007 ஜனவரி முதல் தேதி ஒரு படம் பார்த்தேன்.

எல்லாம் வரலாறு ஆகிப்போச்சுப்பா:-)))) முதலாம் பானிப்பெட் ரெண்டாம் பானிப்பெட்டெல்லாம்
ஞாபகம் வைக்கலையா? :-))))

said...

உள்ளேன் டீச்சர்.மீதி எல்லாம் மத்தவங்க சொல்லியாச்சே.

said...

வரிசைகள் ஏழும்
வாஹ்வாஹ் கச்சேரிகளும்
"வாவா" சொல்லி ரசிச்சீங்களா கச்சேரியை? பொறாமைப்
படவைக்கற அளவு நல்லா சுத்திருக்கீங்க .

said...

வாங்க முத்துலெட்சுமி.

இந்த ஏழு பதிவுகளுக்கு பேசாம 'சரிகமபதநி'ன்னு வச்சுருக்கலாம்.
ஆனா ஏழு பதிவுலே 'அடங்காத அடங்காப்பிடாரி' ஆயிட்டா என்ன செய்யறதுன்னுதான்
தலைப்பை மாத்திட்டேன்:-)))))

கூடியவரை கிடைச்ச சந்தர்ப்பங்களைப்
பயன்படுத்திக்கலாமேன்னுதான் இந்தச் சுத்தல்:-)

said...

வாப்பா கொத்ஸ்.

'ப்ரெசெண்ட்' போட்டாச்சு.

ரெண்டு செண்ட் கருத்தைச் சொல்லி இருக்கலாமுல்லே? (-:

said...

ஒரு 2 பக்கத்துக்கு எழுதி 2 யுடியூப் போட்டு எழுதி கடைசியில் நன்றி சொன்னாலும்,திரு.சிவஞானம் ஜி மொத்தத்தையும் அள்ளிட்டாரு.
இவருக்கும் எஸ் கேயே ஐயாவுக்கும் எங்கிருந்து தான் இந்த துருப்பு சீட்டு கிடைக்குதோ!!
இதைப்போய் நான் உங்களிடம் சொல்கிறேனே??

said...

வாங்க குமார்.

எல்லாம் நோகாம நோம்பு கும்புடற ஆட்கள்.:-)))))

வேற என்னத்தச் சொல்ல? (-:

said...

டீச்சர், அந்தப் பை சணல்ல செஞ்சிருந்தாங்களா? இல்ல வெட்டி வேர்ல செஞ்சிருந்தாங்களா? இப்பல்லாம் ரெண்டுமே பிரபலமாகிக்கிட்டு வருது. ரொம்ப நல்லாவும் இருக்கு. நாங்கூட ரெண்டு வெட்டிவேர் விசிறி வாங்குனேன். ரொம்ப நல்லாயிருக்கு. வெயில் காலத்துல அதுல லேசா தண்ணி தெளிச்சிட்டு விசுறனாப் போதும். அடடா!

அடுத்து டெல்லியா....ம்ம்ம்ம்...ஏற்கனவே டெல்லி போனீங்களே...நான் வரிசை மாறிப் படிக்கிறேனோ!

said...

"நாளைக்கு சுல்தான்கான் சாரங்கியும், ஜாகீரோட தப்லாவும் இருக்கு. கட்டாயம் போகணுமுன்னு முடிவு செஞ்சுட்டோம். 'ஏன், நாம்தான் டெல்லிக்குப்
போறோமே அங்கே எதாவது இசை நிகழ்ச்சியை வடக்கத்திச் சூழலில் பார்க்கலாமே'ன்னும் ஒரு யோசனை. "
சார‌ங்கி சி.டி. வாங்கினீங்க‌ளா!! யாரும் இல்லாத‌ நேர‌ம் மெல்லிசா அத‌ ஓட‌விட்டு க‌ண்ண‌ மூடுனா ஆஹா அனுப‌விச்சு பாருங‌க‌ தெரியும்

said...

அட அதுக்குள்ள முடிச்சாச்சா.
இன்னும் எத்தனை காண்டீன் இன்னும் பாக்கி இருக்கு.
வடை போட்டோ வரலை.:-)
டெல்லில ஹல்டிராம் பானிப்பூரி சாப்பிட்டாப் போடுங்க.
வைர மாமியா. அது இரண்டாம் போருக்கு முன்னால வாங்கினதா இருக்கும். அதுக்கு அப்புறம் கிடையாது. அது என்ன. 1948லேருந்துதான் எங்க ஹிஸ்டரி ஆரம்பிக்கிறதுப்பா மங்கை.
அதுவும் துளசி என்னைவிட ரொம்ப வயசு சின்னவங்க.
தபேலா கச்சேரியை நேர்ல பார்த்த மாதிரி இருக்கு.
ஸாகிர் ஹுசேன் கிராப்புத் தலை இன்னும் அந்த மாதிரிதான் ஆடுதா? ரொம்ப அவசியம் எனக்கு.:-)

said...

// அப்புறம் ஜுகல்பந்தியோ பந்திதான்:-)))) //

அந்தப் பந்தியில் என்னென்ன மெனு ஐட்டம்னு சொல்லிவிட்டால் முந்திக்கலாம்.
:-)))

said...

வாங்க சின்ன அம்மிணி.

சாரங்கின்னதும் 'உம்ராவ் ஜான்( பழையது)'லே இழைஞ்சுவர்ற இசை............ ஹைய்யோ என்னன்னு
சொல்வேன்?

ஷெனாய்க்கூட எனக்குப்பிடிக்கும். இன்னும் சொன்னா சரோட், சிதார்ன்னு எக்கச்சக்கமா சிடிகளை வச்சுருக்கோம்.

இப்பெல்லாம் நேரம் கிடைக்கறதுல்லென்றதுதான் கஷ்டமாப் போச்சு(-:

said...

வாங்க வல்லி.

//ஸாகிர் ஹுசேன் கிராப்புத் தலை இன்னும் அந்த மாதிரிதான் ஆடுதா? //

பின்னே? ஆடாமலா? யூ ட்யூப்லெ பார்க்கலையா? :-)))))

ரெண்டு உஸ்தாத்ங்க சேர்ந்து செஞ்சக் கச்சேரியைப் பார்த்ததே பாக்கியமுன்னு இருக்கேன்.

வடை போட்டோ க்ளோஸப்புலே எடுத்தது ஒண்ணு மினுங்கலா இருக்கு:-))))

said...

வாங்க பாலராஜன்கீதா.

சாதாரணமோ சிறப்போ எல்லாத்துக்கும் இது பொது.
'பந்திக்கு முந்து':-))))

மெனு.. என்னன்னா? சிஜியைத்தான் கேக்கணும்:-)

said...

வாங்க ராகவன்.

//அடுத்து டெல்லியா....ம்ம்ம்ம்...ஏற்கனவே டெல்லி போனீங்களே...நான் வரிசை மாறிப் படிக்கிறேனோ!//

நீங்க சரியாத்தான் படிச்சுக்கிட்டு இருக்கீங்க. நாந்தான் அந்த 'தில்லி ச்சலோ' பதிவு நம்ம குடியரசு தினத்தைச்
சிறப்பிக்கறதுக்காக அந்த விழா நடக்கும் சமயம் போட்டேன். ஆறின கஞ்சி பழங் கஞ்சியாயிறக்கூடாதுல்லெ? :-))))

said...

Isai pathivugallam pottu kalakareenga akka.

said...

துளசி மேடம், எளிமையான அதே சமயம் ஆர்வமூட்டும் உங்களது எழுத்துக்களை நான் தொடர்ந்து படித்து வந்தாலும் பின்னூட்டமிட அமைந்ததில்லை. உங்களது எவ்ரிடே மனிதர்கள் தொடரை படிச்சப்பவே நான் பின்னூட்டமிட நினைத்தேன். அப்போல்லாம் தமிழில் தட்டச்ச ஏற்பாடு பண்ணிக்கலை நான். நீங்களாவது கணினி கைநாட்டுன்னு சொல்லிக்கறதால அடுத்தவங்ககிட்ட கூச்சப்படாம உதவி கேட்டுடறீங்க. நமக்கோ பொட்டி தட்டுறதுதான் தொழிலே. அப்படியிருக்கும் போது இந்த வெக்கக்கேட்டை எங்கன்னு சொல்ல. வணங்கி உட்கார்ந்து எல்லாத்தையும் சரி செய்ய இவ்ளோ நாளாச்சு எனக்கு. இப்போத்தான் கொஞ்சமேனும் எழுத தொடங்கியிருக்கேன். நீங்களும் ஒரு பதிவுல வந்து கருத்து சொல்லியிருந்தீங்க. ரொம்ப நன்றி. வாரம் ஒரு முறையேனும் எழுதணும்னு யோசிச்சிருக்கேன்(நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.. அப்படின்னு பாட்டு பாடுது என் மனசாட்சி). நீங்க என்னவோ தன்னடக்கத்துல பாமரள்ன்னு சொல்றீங்க, ஆனா நான் நிஜமாவே அப்படித்தான்னாலும் கூட இந்த தொடரை வரி வரியா ரசிக்க முடிஞ்சதுக்கு காரணம் உங்களோட அந்நியோன்னியமான எழுத்து நடையும் காம்போதி கரகரப்பிரியான்னு ரொம்ப டெக்னிகலான வார்த்தைப்பிரோயோகங்களை தவிர்த்து பாடகியோட அம்மாவோட நடந்த இயல்பான உரையாடல் மாதிரியான விஷயங்களை பத்தி நீங்க எழுதற விதம்தான். தொடர வாழ்த்துக்கள்.

said...

வாங்க டுபுக்கு.

அதிசயமா இந்தப் பக்கம் வந்துருக்கீங்க.

//Isai pathivugallam pottu kalakareenga akka.//

இல்லையா பின்னே? :-) எல்லாம் நான் பெற்ற இனபம்.......இவ்வையகம்.....

said...

வாங்க லக்ஷ்மி.

இதுதான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்றதுன்றது:-)))))
நீங்கெல்லாம் ரசிச்சுப் படிச்சதே பரம சந்தோஷமா இருக்கு.

நீங்களும் எழுத ஆரம்பிச்சுட்டீங்கல்லே? ச்சும்மாக் கலக்குங்க.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க. ( ரொம்ப ஃபார்மலா இருக்கோ)

said...

என்ன்னாது - கடைசிப் பதிவா - சங்கீத சீசன் முடிஞ்சு போச்சா - இல்ல - லீவு ஓவரா

அத்தர் வாங்கியாச்சா - உங்க அனியன் இரா மு உபயோகிப்பாரே - சொன்னா பார்சல் அனுப்புவாரு. ஃப்ரண்டு பிடிக்கறதுலே நீங்க பெரியா ஆளு.

ஆக எல்லாம் ரசிச்சுட்டு ஊருக்கு வந்துட்டீங்க - நீங்க உண்மையிலேயே பிஸியஸ்ட் சுறு சுறுப்பான ஆளுங்க. ஒரு நிமிடம் கூட வேஸ்ட் பண்ணாம உபயோகமா பயன் படுத்துறீங்க - நெரெய கத்துக்கணும் உங்க கிட்டெ

//ஒவ்வொரு பாட்டு முடிஞ்சதும் பாடகியிடமிருந்து ஒரு பொருள் பதிந்த பார்வை அம்மாவுக்கு. ஒரு ச்சின்னத் தலையாட்டல் தாயிடமிருந்து.//

இந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு. மேடையிலே புதல்விகள் ஜொலிக்கும் போது ஒவ்வொரு அசைவுக்கும் அங்கீகாரம் தேடுறதும், கொடுக்கறதும் - அந்த சுகானுபவம் இப்ப இல்லீங்களே