Friday, March 02, 2007

தமிழில் ஒரு சந்தேகம்.

சமீபத்தில்(???) ஒரு படம் பார்த்தேன். கதாநாயகன் பெயர் 'தமிழ்'. இதுக்கு முன்னேகூட
ரெண்டொரு தமிழ்ப் படத்தில் இந்தப் பேரைப் பார்த்துருக்கேன். அப்ப வராத ஒரு சந்தேகம்
திடீர்னு மனசுலெ இப்ப வந்துருச்சு.


தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழரசன், தமிழ்....... தமிழ்........ன்னு பல பெயர்களைச் சாதாரணமாத் தமிழ் நாட்டிலே பார்க்கறொமே. இதேபோல வேற யாராவது எந்த
மொழிக்காரர்களாவது அவுங்க மொழியைப் பேரா வச்சுக்கறாங்களா?



தெரிஞ்சவுங்க சொல்லுங்கப்பா.


தெலுங்கரசி, மலையாளச்செல்வன், கன்னடச் செல்வி, மராத்தி, இந்தின்னு
எங்கேயுமே இல்லையோ?


அப்ப இது நமக்கு மட்டுமே சிறப்பான ஒண்ணா?


இங்கே நியூஸியில் ' இங்கிலிஷ்'ன்னு சர் நேம் இருக்கு.

41 comments:

said...

'இந்தி'ரா அப்படின்னு எழுதி அவங்களுக்கும் இந்த சிறப்பை தந்த நம் பெருந்தன்மையை என்னவென்பது!!

said...

பிரெஞ்சுப் பெயர்கள்.

ஆண்:
François - ஃப்ரான்சூவா.
François Truffault - Famous French movie director.


பெண்
Françoise - ஃரான்சூவாஸ்
Françoise Sagan - Famous French playwright & novelist.

அவர்களும் மொழிப்பற்று உடையவர்கள்தான். தீவிரவாதிகள்னுகூட சொல்லலாம். ;)

-Mathy

said...

Thulasi,

Francois is a variant of Francis. One of my friend is named Francois.

But, my friend is quite proud of his name because as he says 'it celebrates in Frenchness'. :)

-Mathy

said...

கொத்ஸ்,

வாங்க. இந்திராவா? ஹிந்திராவா?
நம்ம நாட்டுலெ எல்லா மொழியிலும் இந்திரா இருக்கறதாலே அப்பவே ஹிந்தி
தேசிய மொழி ஆயிருச்சோ? :-)

ஆனானப்பட்ட தேவர்களின் அரசனே (ஹி)இந்திரன்னு பேர் வச்சுருக்கிட்டாரே!


வாங்க மதி.

Francois

Francoise


அப்ப ஒரு எக்ஸ்ட்ரா 'இ' பொண்ணா? :-)


ஆங்கிலத்தில் எதாவது கேள்வி கேட்டாலும், அவுங்க பிரெஞ்சுலெதான் மறுபடி சொல்வாங்கன்னு
பிரெஞ்சுக்காரர்களைப் பத்தி ஒரு சமயம் எங்கியோ படிச்சது ஞாபகம் வருது.

இதுக்குப் பயந்துக்கிட்டுத்தான், ஒரு சமயம் பாரீஸ் போனப்ப, எதிரில்
தென்பட்ட போலிஸ்காரரிடம் ஈஃபிள் டவர் எங்கே இருக்குன்னு 'செய்கை' மொழியில்
கேட்டேன். அவரும் செய்கையில் எந்தப் பக்கம்ன்னு சுட்டிக்காட்டினார்:-))))

உங்க நண்பருக்கு நம்ம தமிழரசி/தமிழரசனைப் பத்தியும் சொல்லுங்க.

said...

Francois Quesnay.....Royal Physician;leader of PHYSIOCRATEs-a school of economic thought(1750-1776) in France

sivagnanamji

said...

எங்க கம்பனி ரீஜனல் மனேஜரோட பெயர் Mr. French. அவர் பிரான்ஸ்ல இருந்து கனடாவுக்கு வந்து குடியேறியவர்

said...

இங்கு பேரெல்லாம் தேவையில்லை!!
That இந்தியன் (we)
That சைனீஸ்(From China)
that தாய் (தாய்லாந்து)
that மியன்மார்(Burma)
இப்படித்தான் அடையாளங்கள்.
பலர் இருக்கும் பட்சத்தில்,நீள அகல விபரங்கள் வரும்.

said...

சரியான கேள்வி!

இந்த கேள்வி எனக்கும் உண்டு.

பின்னூட்டங்களில் கருத்துகளைப் படிக்க ஆர்வமாயிருக்கிறேன்!

said...

மைதிலி?

said...

அக்கா!
இந்த பிரான்சுவா;பிரான்சிஸ்;பிரான்சின் எனும் பெயர்கள் இங்கே மிக மிகமலிவு. ஆனால் அத்துடன் ஒரு ராசா,ராணி,செல்வன் ;செல்வி,நாதன்,குமார் போடும் பழக்கம் இல்லை.
மேலும் அனொடல் பிரான்ஸ்-ANATOLE FRANCE(1844-1924) பிரபல எழுத்தாளர்; இவர் குடும்பப்பெயரே பிரான்ஸ்...

said...

அட.. போக்கிரி பார்த்துக்கிட்டு இருக்கும்போது.. நானும் இதைததான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. தமிழ் போக்கிரியில் ஹீரோ பேர் தமிழ்ன்னு வச்சப்ப, ஏன் தெலுங்குல தெலுங்குன்னு பேர் வைக்காம பாண்டின்னு வச்சாங்கன்னு...

said...

நல்ல கேள்விதான்.
பதில்தான் தெரியலை. ஊர்ப் பேர் வச்சுக்கிறவங்க, தொழில் பேரு வச்சுக்கிறவங்க நிறைய.
மொழிப் பேரு.... ம்ஹூம்.
பின்னூட்டத்தைப் பார்த்துத் தெரிஞ்சிக்கிறேன்.

said...

எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் சந்தேகம் உதிக்குது துளசியம்மா

said...

அக்கா,
ஹிந்தி காரங்க அவங்க செய்யும் தொழிலையே 'சர்' நேம் ஆக வெச்சுக்கறதுனால பேருக்கே அவசியம் இல்லாம போயிடுது.அதனால தான் அவங்களுக்கு மொழி பேரு இல்லையோ?

said...

இதைப் பத்தி தங்கமணி ஒரு பதிவு போட்டிருந்ததா ஞாபகம்.

"தமிழ்" ன்ற வார்த்தை ஒருவித கலகக் குரலா உபயோகப் படுத்தப்படுறதையும் அதில இருக்கற அரசியலையும் அவர் விளக்கியிருந்தாரு.

சுட்டி கிடைச்சா குடுக்கறேன்

said...

அப்படியாவது மக்கள் தமிழ் பேரு வைக்கிறாங்களானு பாக்குறாங்க போல...

தெலுங்கரசி, மலையாளச்செல்வன், கன்னடச் செல்வி.

கல்யாணப் பத்திரிக்கைல பதிச்ச மாறி பேரா இருக்கு... சிரிப்ப அடக்க முடியல!!

said...

வெளிநாட்டை விட நம்ம நாட்டிலே தான் மொழிப்பற்று மிக அதிகமுனு நிருப்பிக்கற்த்துக்கு, இதைவிட வேறு என்ன வேணும் சொல்லுங்க.

அன்புத்தோழி

said...

மலையாளப் பெண்பாற் பெயர் 'கைரளி' என்பது 'கேரளம்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததென்று நினைக்கிறேன். அல்லது, இரண்டுக்கும் ஒரே வேராக இருக்கலாம்.

(ஆம், மொழிப்பெயர் இல்லைதான்! :)

said...

unfortunately, used in generic and derogatory fashion all over the world: Konga, Cherian, Vadakkan, Sami, Paki, Anna, Bhaiyya, Madrasi, Sardar. All these are found in names and used in a bad sense too. The meanings are pure, the use ignorant.

said...

நீங்க மாஞ்சு மாஞ்சு எழுதினமுந்தயை பதிவுகளை காட்டிலும் அதிக பின்னூட்டம் இதற்கு வருகிறது.
இங்கு வந்திருந்த போது சொன்ன
"நாளை ஞாயிற்றுக்கிழை" ஜோக் தான் ஞாபகம் வருகிறது.
:-))

said...

வாங்க சிஜி & ஆதிபகவன்.

ப்ரெஞ்சுக்காரங்களும் நம்மளைப்போல்தான் இல்லே? :-)

வாங்க குமார்.

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?
இந்தப் பழக்கம் நம்மூர்லெயும் இருக்கே. பக்கத்து வீட்டுலே ஒரு மலையாளி
இருக்காங்கன்னு சகஜமா நாமும் சொல்றோமுல்லே:-)

எங்க பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு நாங்க இண்டியன் ஃபேமிலி:-))))

வாங்க எஸ்.கே.

பின்னூட்டங்கள் எல்லாம் சுவாரஸியமாத்தான் இருக்கு:-)

said...

வாங்க சம்பத்.

//கன்னட பிரசாத்.//

உண்மைக்கும் இதுதான் அவர் பெயரா? இல்லெ........ ரெண்டு மூணு பிரசாத் இருக்கறதாலே
இவர் கன்னட பிரசாத் ஆயிட்டாரா?


பூங்குழலி,

//மைதிலி//

ஆங்...........?????????? புரியலையே(-:

வாங்க யோகன் பாரீஸ்.
//இந்த பிரான்சுவா;பிரான்சிஸ்;பிரான்சின்
எனும் பெயர்கள் இங்கே மிக மிகமலிவு. ஆனால்
அத்துடன் ஒரு ராசா,ராணி,செல்வன் ;செல்வி,நாதன்,
குமார் போடும் பழக்கம் இல்லை.//

போட்டுருந்தா ஜோரா இருக்கும் இல்லை? :-)

உங்க 'பாரீஸ்' ம் இப்படித்தான் வந்ததா?

வாங்க மை ஃப்ரெண்ட்.

மலையாளப்படங்களில் தமிழனைத் திட்டறதுக்கு 'பாண்டி'ன்னு
சர்வசாதாரணமாச் சொல்லறப்போ........... கோபம்தான் வருது.

அந்தக் காலத்தில் பாண்டியநாட்டான்னு சொல்றதுக்கு பாண்டின்னு சொல்ல
ஆரம்பிச்சு, இப்ப கொஞ்சம் இழிவா பயன்படுத்தறாங்கன்னு எனக்கு
ஒரு சம்சயம் கேட்டோ!

said...

வாங்க வல்லி.

40க்கு பயந்து பதில் சொல்லாமக் கொஞ்சநேரம்(?) ச்சும்மா இருந்தேன்.

வாங்க கார்த்திக்.

எல்லாம் உக்காந்து யோசிக்கறதுதான்:-)))))

சந்தேகம் இதுலே மட்டுமா? தமிழ்சினிமாக் காட்சிகளில்
பலது எதுக்கு இப்படி வருதுன்னு ஒரு பெரிய பட்டியலே
எழுதி வச்சுருக்கேன்:-)))


வாங்க ஸ்ரீவித்யா.

தொழிலுக்கும் மொழிக்கும் முடிச்சுப் போட்டுட்டாங்கன்றீங்களா? :-)))

வாங்க முனியாண்டி.

தங்கமணி சுட்டி கிடைச்சாக் கண்டிப்பாச் சொல்லுங்க. அவர் என்ன எழுதி இருப்பாருன்னு ஒரு
ஆர்வம்தான்!


வாங்க ஜி.

//அப்படியாவது மக்கள் தமிழ் பேரு வைக்கிறாங்களானு
பாக்குறாங்க போல...//

தமிழ்ப்பேருக்கு விதி விலக்கு இதுக்கெல்லாம் உண்டா? :-))))

அன்புத்தோழி வாங்க.

அதெல்லாம் நிரூபிச்சுருவொம்லெ:-)))

வாங்க வித்யாசாகரன்.

கைரளி, கேரளம் நீங்க சொல்றது சரி. ஆனாலும் யாரும் கைரளின்னு பேர் வச்சுக்கலையே.
அவுங்க அரசாங்க கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகளுக்குத்தான் கைரளின்னு
பெயர் இருக்கு.


வாங்க sampaadak,

நீங்க சொல்றதுதான் நடக்குது. வடக்கே போயிட்டா தென் மாநிலங்கள் எல்லாமே
மதராஸ்தான்(-:

said...

ஐயகோ காலத்தின் கொடுமை துளசி காலக்கொடுமை! வரும் பின்னுட்டக்காரர்களை வருக, வருக என்று ஒவ்வொருக்கும் தனி மரியாதைக் கொடுக்கும் உங்களுக்கு இந்த கதியா :-)
இனி இலவசம் என்ன செய்யப் போகிறார் என்று நான் மட்டுமல்லா, இவ்பதிவுலகமே பார்க்க
ஆவலாய் காத்திருக்கிறது :-))))

said...

அவுஸ்திரேலியாவில் ஒரு நடிகர், பாடகரின் பெயர் ஜொன் இங்கிலிஷ்.(Jon English)

said...

இப்ப தமிழகத்துல ரொம்ப பாப்புலரான பேரு " கன்னட பிரசாத்" அதுக்கு முன்னாடி "கிரீஷ் கர்னாட்"ன்னு ஒரு நடிகர்/இயக்குனர் இருந்தாரு. எனக்கு தெரிஞ்சி "கேரளியன்" அப்ப்டின்னு பேர் கொண்டவரு இருக்காரு.

ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லியிருக்கேன்

said...

துளசியம்மா... அனைவரின் மனதிலும் இருந்த ஆனால் கேட்கப் படாத கேள்வி! தங்களின் சந்தேகத்தை தீர்க்கும் அளவிற்கு எனக்கு பதில் தெரியவில்லை எனவே நானும் பின்னூட்ட சுவாரஸ்யங்களை ரசித்துக் கொண்டிருகின்றேன்!

//ஐயகோ காலத்தின் கொடுமை துளசி காலக்கொடுமை! வரும் பின்னுட்டக்காரர்களை வருக, வருக என்று ஒவ்வொருக்கும் தனி மரியாதைக் கொடுக்கும் உங்களுக்கு இந்த கதியா :-)
//

எங்க டீச்சருக்கே இந்தக் கதியா?:)))))))))

அன்புடன்...
சரவணன்.

said...

துளசி,

கர்னாடகா, கேரளா , ஆந்திரா எல்லாம் மொழிப்பற்றுல நமக்குக் கொஞ்சமும் குறைஞ்சது இல்லைன்னாலும் தமிழ்த்தாய், தமிழ்த்தெய்வம் என்ற ஒரு நிலையில தமிழை உசத்தி வெச்சுட்டோம். தமிழில உள்ள அளவு மொழி வாழ்த்துப் பாடல்கள் மத்த மொழிகளில் இல்லைன்னு நினக்கிறேன். அதனாலயும் இருக்கலாம்.

//மைதிலி//

அந்தக் காலங்களில பெண்களுக்கு அப்பாவுடைய பெயரையோ, அல்லது (அவர் ஆளும்) நாட்டோட பெயரையோ குறிப்பிடற மாதிரி பேர் இருக்கும்.

ஜானகி - ஜனகனின் மகள்
மைதிலி - மிதிலை ஆளும் அரசன் மகள்
வைதேஹி - விதேஹ நாடு இளவரசி

(இது மூணுமே சீதையோட பேர்தான்)

அதே போல் துருபதன் மகள் திரௌபதை, பாஞ்சால நாடு இளவரசி பாஞ்சாலி

காந்தார நாட்டு இளவரசி காந்தாரி

இதுக்கு தமிழ்ல 'தத்தித்தாந்த நாமம்"
(தத்தித்தாவி வந்த பேர்)
அப்படின்னு பேர்.

said...

அய்ரோப்பாவில் இப்படியான பெயர்கள் உண்டு.அவை தமிழைப் போல் மொழியைக் குறிக்காது
இனத்தைக் குறிக்கும் பெயர்களாக இருக்கும்( தமிழ் என்பது இனத்தைக் குறிக்க எழுந்த பெயரா,
மொழியைக் குறிக்க எழுந்து பின் இனக்குழுவைக் குறித்ததா ஓர்ந்து பார்க்கப் பட வேண்டியது!
மொழியைக் குறிக்க எழுந்து பின்ன அம்மொழி பேசுவோரை குறித்தது என்பது என் புரிதல்)
இராம.கி அய்யாவின் இந்த இடுகையில் சில செய்திகளை சொல்லியிருக்கிறாரென எண்ணுகிறேன்.
http://valavu.blogspot.com/2006/04/blog-post.html

பெயர் வைப்பது, முதற்பெயர், புறப்பெயர்/பின்பெயர், குடும்பப் பெயர், பெயரின் தன்மை எல்லாம்
ஒவ்வோர் பைதிரத்தில் அதனதன் சுழ்நிலை,வரலாறு,காலம் என்பவற்றை வைத்து பார்க்கப்
படவேண்டியது.அது ஒரு தனிப் புலனம், மேலோட்டமாகச் சொல்லிச் செல்ல முடியாது.
(நேரம் கிடைக்கையில் வலைப்பதிய முற்பட்டால் மேலும் எழுதுவேன்!)

யூடித்(Judith) இத்தாலியத்தில் Guiditta, ஜுட்(Jude), யூதா என்பவையும் போன்றவையும்
அறியப்பட்ட பெயர்களே. ஓர் இனத்தைக் -திருப்பொத்தகத்தில்(bible) வரும் பெயரிலிருந்து
எழுந்த- குறிப்பனவையே.(இந்த Jude,Judith எல்லாம் அதிகமாக ஈழத்து தமிழ்க்
கிறித்தவரின் - பழஞ்சவையர்(RC)- முன் பெயரொன்றாக வருவனவை என்பது நான் கண்டுகொண்டது!)

இத்தாலியத்தில் இத்தாலா(Itala), இத்தாலியா (Italia) என்றும் எசுப்பானியத்தில் Espana என்ற பெண்பெயரும்
உள்ளன.

தவிர துருக்கியில் அட்டாதுருக்கு(Attatuerk), பசுதுருக்கு(Bashtuerk),ஒச்துருக்கு(Hostuerk) எனத்
துருக்கு என்னும் இனப் பெயர் அவர்கள் புறப்பெயரின் பின்னொட்டாக(suffix) வரும்.அங்கு இப்படி
நிறையத் துருக்குகள் உண்டு.

முதலில் நகர்நாட்டுப்(Rome) பெயராயிருந்து, பின்னர் இக்காலத்தில் ஒரு மொழிக்குடும்பப்
பெயராகக் கொள்ளப்படும் Roman என்பது அய்ரோப்பாவிலுள்ள அகவையேறிய பல ஆண்களுக்கு
முதற்பெயராக இருக்கும்,ஒரு காலத்தில் அது படிறமாகக்(fashion) கூட இருந்திருக்கலாம்
(Romano Prodi பழைய அய்.ஒ தலைவர், இக்கால இத்தாலித் தலைமையமைச்சர்)
மற்றும் Romeo, Romina போன்ற பெயர்கள் எல்லாம் பலரும் அறிந்தவையே.
இதில் ரொமானோ பிற்பெயராக/குடும்பப் பெயராகக் கூட வரும்.
(இதையெழுதுகையில் இன்னொரு புலனம் நினைவுக்கு வருகிறது.ஒல்லாந்து, நிதலம்(Netherlands)
மக்கள் பலர் நிலக்கிறுவ ஊற்றுகையைக்(geographic origin) வைத்துப் பின்பெயர் கொண்டிருப்பர்.
குடிமதிப்பின் போது எவ்வூரைச் சார்ந்தவர் என்பதைக் குறித்து, அதுவே பின்பெயராக
உருப்பெற்றிருக்கும்,Van Hoven,Hovenஎன்ற ஊரை வேராகக் கொண்டவர்.இது போன்ற முறைமை
உருசியாவிலும் இருந்தது -ova என்ற பின்னொட்டை தங்கள் ஊர்ப்பெயருக்குப் பின்னாலிட்டு
தம் புறப்பெயராக்கிக் கொள்வர்.தமிழரிடமும்- ஊர்ப்பெயரை பேருக்கு முன்னாலிடுவதும்
ஊர்ப்பெயரை ஒட்டிப் பெயர் புனைவதும் - முன்பு இப்பழகம்மிருந்தது )

இக்கால பிரான்சுப் பகுதியில் குறியேறிய பழம் செருமானியக் குடியான ·பிராங்கர்(Franks)
அடிகொண்ட Frank(செருமனியில் , ஒன்றுபட்ட அமெரிக்க நாடுகளில் இது மலிந்துகிடக்கும்
முதற்பெயர்), Franklin,Franko போன்ற ஆண் முதற்பெயர்களையும் இங்கே குறிப்பிடலாம்.
மற்றப் படி மேலே சிலர் குறித்த Francois=·பிரோசுவா என்ற பெயரும் இனத்தையே குறிக்கிறது.
மொழியை அல்ல.

குறிப்பிட்டுள்ளவற்றுள் பல பெயர்கள் முதலில் ஓர் இடத்தையோ, நகரத்தையோ வேறு ஒன்றையோ
குறிக்கப்பட்டெழுந்து பின்னர் இன/மொழிப் பெயராக ஆனவை.சொல்லாய்வுக்குள் போக விரும்பவில்லை!

இரானி என்பது ஈரானிலுள்ள புற/பிற்பெயரில் ஒன்று.

கிரிஷ் கர்நாட் பெயரிலுள்ள கர்நாட் கூட கருநாடகத்தைக் குறிக்கிறது போலும்.

தமிழினி, தமிழவன், தமிழ்ச்செல்வி, தமிழழகன்,தமிழரசி எனப் பெயரிடுவது ஒரு பெரிய எழுச்சிக்குப்
பிறகு எம்மிடையே வந்த பழக்கம்.

- பிரதாப்

said...

//'இந்தி'ரா அப்படின்னு எழுதி அவங்களுக்கும் இந்த சிறப்பை
தந்த நம் பெருந்தன்மையை என்னவென்பது!! //


இதில் தங்கள் எள்ளலுக்குட் பட்டிருப்பது ஹிந்தி என்பதை இந்தி
என்னும் தமிழர் பலுக்கலா? அல்லது
தமிழ் என்ற முன்னொட்டை வைத்துத் தமிழர் பெயர்புனைவதா?

said...

//ஆனாலும் யாரும் கைரளின்னு பேர் வச்சுக்கலையே.
//அவுங்க அரசாங்க கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகளுக்குத்தான் கைரளின்னு
பெயர் இருக்கு.
இல்லை. கைரளின்னு பேர் உள்ளவங்களை எனக்குத் தெரியும். எங்க தாத்தா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல. இப்போதைய தலைமுறைல யாரும் அப்படி வச்சுக்கறதில்லைங்கறது உண்மை. அதே மாதிரிதான் நம்ம ஊர்லயும். எங்க உறவுல, இப்போ குழந்தைகளுக்கு இப்படித்தான் பேர்! :(
ஸ்ரீநாத்
திஷ்யந்த்
ரேவந்த்
ஸ்ரீவந்த்
சச்சின் (நிஜம்மாவே!)
ராகவ் (ராகவன் இல்ல)

said...

/பூங்குழலி,

//மைதிலி//

ஆங்...........?????????? புரியலையே(-:
/


மைதிலி என்பது இந்தி அல்லாமல் பீகாரில் பேசப்படும் மற்றொரு மொழி.

http://en.wikipedia.org/wiki/Maithili_language

said...

வாங்க உஷா.

ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது அவுங்க சட்டதிட்டத்துக்கு உட்படவேணாமா?

ஆனா அதுக்காக, வர்றவங்களை வாய் நிறைய வாங்க கூப்பிட வேணாமுன்னு இருக்கா என்ன?

ஒரே பின்னூட்டத்துலே நாலைஞ்சுபேரை 'வாங்க'ன்னு தனித்தனியாக்
கூப்புட்டு உபசரிச்சாப்போச்சு:-)))
கல்யாணவீட்டுலே இப்படித்தானே செய்யறோம்:-)

ஒரே பின்னூட்டத்துலே ஒருத்தருக்குத்தான் பதில்ன்னு சட்டம் வந்தாத்தான் ஆபத்து:-)


செல்லி,

இங்கேயும் 'ஜான் இங்கிலீஷ் 'னு ஒருத்தர் போன மந்திரிசபையில்
மந்திரியாக இருந்தார். இப்ப எதிர்க்கட்சி
அங்கம்.


வாங்க ecr.

கன்னட பிரசாத் பற்றி இன்னிக்குத்தான் நட்சத்திரப் பதிவில் படித்தேன்.
இது தெரியாம முதலில் அந்தப் பேரைப் பார்த்துட்டு எதோ எழுத்தாளர்ன்னு நினைச்சிருந்தேன்(-:

கேரளியன், கர்னாட் எல்லாம் மாநில அடையாளமா வச்சுருப்பாங்க போல.


வாங்க சரவணன்.

பின்னூட்டங்கள் எல்லாம் உண்மைக்குமே நல்ல சுவாரசியமா இருக்கு. அதிலும் நம்ம
பிரதாப் நல்லா விரிவா பதில் தந்துருக்கார் பாருங்க.

said...

வாங்க ஜெயஸ்ரீ.

//இதுக்கு தமிழ்ல 'தத்தித்தாந்த நாமம்"
(தத்தித்தாவி வந்த பேர்)
அப்படின்னு பேர். //

விளக்கத்துக்கு நன்றிங்க. நம்ம குறும்பன் சொல்லி இருக்கறதைப் பாருங்க.

//மைதிலி என்பது இந்தி அல்லாமல் பீகாரில் பேசப்படும் மற்றொரு மொழி.//



வாங்க பிரதாப்.

சிரமம் கருதாமல் நல்ல விளக்கம் தந்ததுக்கு மிகவும் நன்றி. பல விஷயங்களைப் புரிந்து
கொள்ள முடிந்தது. நம் இராம.கி. ஐயாவின் சுட்டிக்கும் நன்றி. நம்மில் பலருக்கும்
இவைகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு அமைந்துவிட்டது என நினைக்கிறேன்.


//(நேரம் கிடைக்கையில் வலைப்பதிய முற்பட்டால் மேலும் எழுதுவேன்//

காத்திருக்கின்றோம்.


உங்கள் அடுத்த கேள்விக்கு நம்ம கொத்ஸ்தான் பதில் சொல்லணும்:-)


வாங்க வித்யாசாகரன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க குறும்பன்.

//மைதிலி என்பது இந்தி அல்லாமல் பீகாரில் பேசப்படும் மற்றொரு மொழி. //


இது எனக்குப் புது விவரம். ரொம்ப நன்றிங்க.

அப்ப பீகார்லெ நிறைய மைதிலிகள் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

said...

துளசி மற்றும் குறும்பன்

மைதிலி என்பது பீகாரில் பேசப்படும் ஒரு மொழிதான். அப்போது மிதிலை இப்போதுள்ள பீஹாரில் தான் இருந்தது. மிதிலையில் பேசப்பட்ட மொழி அதனால் மைதிலி.

மைதிலி என்று சூட்டப்படும் பெயர்கள் அனைத்தும் சீதையைக் குறிப்பவை(மைதிலி மொழியை அல்ல).இது வால்மீகி ராமாயணத்திலேயே உள்ள பெயர். இந்தப் பெயர் தென்னிந்தியாவில்தான் அதிகம்(அதுவும் தமிழ்நாட்டில்). பீகாரில் அதிகம் மைதிலிகளைப் பார்க்கமுடியாது.

said...

//தமிழ்ப்பேருக்கு விதி விலக்கு இதுக்கெல்லாம் உண்டா? :-))))//

தமிழ்ல பேரு வச்சா படிப்பு இலவசம்னு முதலமைச்சர் சொன்னா மக்கள் பேரு வைக்கமாட்டாங்களா என்ன?

அந்த மாறி காலகட்டங்கள் வரும் போது... மக்கள் இந்த மாதிரியான படங்களைப் பார்த்து அறிவ பெருக்கி வருங்கால சந்ததியினருக்கு பெயர் சூட்ட இயதுவா இருக்கும்ல...

...ஹி..ஹி... :-)

said...

ஜி,

நல்லா சொன்னீங்க போங்க. தமிழ்ப்படத்துக்கு பேரு மட்டுமில்லை. அதுலே வர்ற கதாப்பாத்திரங்களுக்கும்
தமிழ்ப்பேர் வச்சாத்தான் வரி விதிவிலக்குன்னு இருந்தா இன்னும் நல்லா இருக்கும் இல்லை.

வில்லன் முதல் கதாநாயகன் நண்பன் வரை தமிழ்ப்பேர் கற்பனை செஞ்சு பாருங்க.

ஜோரே ஜோர்.

said...

டீச்சர்! என்னோட பழைய கம்பெனியில் புதித வந்த டேமேஜர் பேர் குரோஷி இட்டாலி - அவர் இட்டாலிகாரர்.(மொழி-இட்டாலி)

இப்போ உள்ள கம்பெனியில் P.M பேர் கிரேக் கிரிஸ்டோஃபைட்ஸ் - அவர் கிரேக்காரர்.

said...

வாங்க அபி அப்பா.

இனிமே யார் பேரைக் கேட்டாலும் அது அவுங்க மொழியோடு சம்பந்தம் இருக்கான்னு
பார்க்கற எண்ணம் வந்துருச்சு இல்லே?

ஆஹா..........பதிவுக்கு வெற்றிதான் போல!:-)))))

said...

ஹப்பா!! ஒரு சந்தேகத்துக்கு இவ்ளோ
பின்னோட்டங்களா.....?
ரொம்ப சுவாரஸ்யம் !
நிறைய தகவல்கள்!
ஊசிப்பட்டாசு பற்றவைத்தால்..
1000-வாலா அல்லவா வெடிக்கிற்து!!!

said...

வாங்க நானானி.

இதுலே உங்க சந்தேகம் எதாவது தீர்ந்ததா?

ஆமான்னு பதில் சொன்னீங்கன்னா....உடனே
பொற்கிழியை அனுப்பி வைக்கணும்:-))))