Friday, March 23, 2007

கிறுக்ஸ் & கிறுக்ஸ்(weird)

வியர்டு...நானா?


எல்லாருக்கும் ஒரு வழின்னா இந்த இடும்பிக்கு வேற வழின்னு எத்தனைமுறை சொல்லி இருக்கேன். இதுலே இருந்து தெரிஞ்சுக்கிட்டு இருக்கவேணாம், நீங்க?



வல்லி வேற ச்சும்மா இருக்காம இப்படிச் சந்திக்கு இழுத்து விட்டுட்டாங்க.உண்மையைச் சொல்லியே ஆகணுங்கற நிலைக்கு வந்துட்டேன். இப்ப என்னன்னா நம்ம கோவியாரும் ஆட்டைக்கு வாவான்னு சுண்ணாம்பு இல்லாமக் கூப்புடறாரு:-))))


ஆங்கில ஜாதக(??) முறைப்படி நான் கும்பராசியாம். இதோட ஸ்பெஷல் குணம்என்னன்னா............ அன் பிரடிக்ட்டபிள். கரெக்ட்டாப் போட்டுருக்கான். எதுஎதுக்குக் கோச்சுக்குவேன் எதெதுக்கு இல்லைன்னு எனக்கே தெரியாது!


1. ரொம்பப் பத்திரமா இருக்கட்டுமுன்னுன்னு எங்கியாவது ( பத்திரமாத்தான்) எடுத்து வச்சுட்டு எங்கேன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருப்பேன். சரி. இந்தத் தொல்லை வேணாம். இப்பத்தான் கம்ப்யூட்டர் இருக்கே. அதுலே எழுதி வச்சுட்டாப் போதும்னு எழுதிவச்சுட்டேன். இப்ப எந்தத் தலைப்புலே சேவ் செஞ்சுருக்கேன்னு நினைவில்லே. பட்டாணி பாட்டில்னு ஒரு இடத்துலே எழுதிவச்சுருக்கேன். இதுவரை ஒரு பத்துமுறை அதைத் தலைகீழாக் கொட்டித் தேடியாச்சு.எதைத் தேடுறேன்னு தெரிஞ்சாத்தானே? தினமும் பகல்லே ஒரு மணி நேரம் தேடறதுக்குன்னே ஒதுக்கியாச்சு. தேடுவேன் தேடிக்கிட்டே இருப்பேன்...........


எதை? அது தெரிஞ்சா நான் ஏன் தேடப்போறென்?



2. காசு எடுத்து வைக்கன்னு ஒரு குறிப்பிட்ட இடம் இல்லாம அங்கங்கே டப்பாக்களில் (குறிப்பா சமையலறை அலமாரியிலே) வச்சுருப்பேன். நான் செத்துப்போயிட்டா.......... கேரேஜ் சேல் போடறதுக்கு முந்தி,எல்லா டப்பாக்களையும் செக் பண்ணிட்டுப் போடுங்கன்னு கோபால்கிட்டே சொல்லி வச்சுருக்கேன். இந்த புத்தி ஒருவேளை எங்க பாட்டிகிட்டே இருந்து வந்துச்சோன்னு ஒரு சந்தேகம். இத்தனைக்கும் அந்தக் 'குறிப்பிட்டப் பாட்டி 'நான் பிறக்கு முன்னேயே போய்ச் சேர்ந்துட்டாங்களாம். (மறுபிறவி???)



3. சாவுன்னதும் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. நான் மண்டையைப் போட்டதும் என்னென்ன செய்யணுமுன்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன். அப்ப அந்த நிலையிலே கோபாலுக்குத் தடுமாற்றம் வந்துட்டா? ( குஷியிலேஆட்டம் போட்டுக்கிட்டு இருப்பாரோ? ) என்னென்ன உடை, காது, கழுத்துக்கு என்ன நகை( ச்சும்மா வெள்ளியிலே ஒரு செட் வாங்கி வச்சுருக்கேன்,இதுக்குன்னே.அப்பவும் அலங்காரமாப் போகணும்))சாம்பலை எங்கே போடணுமுன்னு எழுதிவச்சாச்சு. அதுவும் கணினியிலேதான். ( அடிப்பாவி! சாம்பலையா கம்ப்யூட்டர்லே போடறதுன்னு யாரு அங்கே சவுண்டு வுடறது?)ஆனா டைட்டில் பக்காவாக் கொடுத்துட்டேன், 'துளசி'ன்னு!!! !!!என் சவப்பெட்டிக்குள்ளே எங்க கப்புவோட அஸ்திப்பெட்டியையும் வச்சுரணும். ஆங்....... இந்தியக்கொடியும் வாங்கிவந்து வச்சுருக்கேன், பெட்டிமேலே போர்த்த.( ஆ......பெரிய தியாகி.கொடி கேக்குதோ?) எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்துலே ரெடியா இருக்கு.



4. எங்க அம்மா இறந்ததுக்கு நான் இன்னும் சரியா துக்கம் அனுஷ்டிக்கலைன்னு ஒரு நீங்காத குறை மனசுலே இருக்கு.அப்ப எனக்கு வெறும் 11 வயசுதானே........... தீவிரம் புரியாம இருந்துருக்கேன். அதனாலே ஒரு நாள் முழுக்க முழுக்க அம்மாவுக்காகவே ஒதுக்கி வச்சுரணும். வேளை வரலை. ஒரு மணிநேரம் மனசு அலை பாயாம இருக்கான்னு பயிற்சி எடுத்தாத்தானே ஒரு 24 மணிநேரம் ஒரே எண்ணமா இருக்க? அம்மா நினைவா ஒரு ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன்.எதாவது நாடகமுன்னா அதுலேயாவது டாக்டர் வேஷம் கட்டிரணும்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.



5. ராமாயணம், மகாபாரதம்( ராஜாஜி எழுதுனது) உபன்னியாசமா செய்யணுங்கறது ஒரு எண்ணம். கேக்க ஆள் வேணுமே!நம்ம பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். அதுவும் பேசாம உக்கார்ந்து கேக்கும். இப்பச் சொல்லுங்க நான் வியர்டா இல்லே அது என்னைக்காட்டிலும் வியர்டா?



6. ப்ளொக் எழுதறதை ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டு அல்லும் பகலும் இதே நெனப்பா இருக்கறது. இதுதான் இருக்கறதுலேயே 'பெரிய வியர்டு' சமாச்சாரமுன்னு நினைக்கறேன்.



என் பங்குக்கு ஆட்டத்தில் சேர அழைப்பு இவுங்களுக்கு:


சிவஞானம்ஜி

டிபிஆர் ஜோசஃப்

மதுமிதா

அருணா ஸ்ரீனிவாசன்

செல்லி



இன்னும் யார் யாருக்கு 'உண்மை விளம்ப' ஆசை இருக்கோ அவுங்கெல்லாம் கூடச் சேர்ந்துக்கலாம்.



ஆட்டம் அன்லிமிட்டட்:-)))))

39 comments:

said...

சத்தியமா சொல்றேன்!
நீங்க வியர்டுதான்!
கோவி சொன்ன போது நம்பலை!
[அவர் இப்படி நேரா சொல்லலை என்பதை இங்கே பதிகிறேன்! இல்லேன்னா அவர் வியர்டு ஆயிடுவாரு! அவர் சொன்னதை வைத்து நானா கணிச்சது!]
ஆனா, இப்ப முழுசா நம்பறேன்!

:))

said...

அட எங்கொப்புரானே! ரொம்ப நாள் முன்னாடி உலாத்திட்டு இருந்த இந்த சங்கிலிய நான் தாண் தூசு தட்டி கிளப்பி விட்டேன், அது கடைசில உங்க கிட்டயே வந்துடுச்சா! நீங்க போடலேன்னு தெரிஞ்சு இருந்தா நானே குடுத்துருப்பேனே ;)

said...

porkodi-my friend-gopinath-ragavan-valli-thulasi! இது எப்படி இருக்கு? ;) இது இன்னும் ஏகப்பட்ட பேருக்கு வேற போகுதே! ஹையா!

said...

உங்க பூனை ராமாயணம், மஹா பாரதம் எல்லாம் கேக்குமா?!!
ருத்ராட்சப்பூனையா இருக்கும் போல இருக்கே. உங்க பூனையுமில்ல weird

said...

வாங்க எஸ்.கே.

என்ன................ கோவி சொல்லிட்டாரா? :-))))))

said...

வாங்க பொற்கொடி.

நீங்க ஆரம்பிச்சு வச்சதா? பேஷ் பேஷ்.

எல்லாரையும் 'கொஞ்சமா' உண்மையைப் பேச வச்சுருக்கீங்க:-))))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

//ருத்திராட்சப்பூனை................//

ஆனா..........ருத்திராட்சம் வாங்குனது 'இந்த'ப் பூனைக்கு இல்லைங்க:-))))

said...

துளசியக்கா,

நலம். நலமறிய ஆவல்.
(ஆஹா!என்னடா இது என்னிக்கும் டீச்சருன்னு கூப்பிடற பையன் இன்னைக்கு அக்கான்னு ஆசையாக் கூப்பிடறானே. என்ன நடக்கப் போகுதோ. தெரியலையே.)

நிற்க.
(சரி உக்காந்துக்குங்க, எதாவது சொன்னா ஏட்டிக்குப் போட்டியா சொல்லறதே வழக்கமாப் போச்சு.)

தங்கள் கிறுக்ஸ் பதிவு படிக்கக் கிடைத்தது.
(தினமும் இங்க வந்து மேயற பையன், யாரோ தாம்பாளத்தில் வெச்சுக் குடுக்கற மாதிரி கிடைச்சுதுன்னு சொல்றான் பாரு. எல்லாம் நேரம்டா சாமி)

அதனைப் 'பத்தி' எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்த மடல். (பின்னூட்டம் போடுடான்னு பத்தி பத்தியா எழுதறானே)

விரிவாக எழுத வேண்டிய விதயம்தான் என்றாலும் பலர் வந்து செ(சொ)ல்லும் இடமென்பதைக் கருதி சில கருத்துக்கள் மட்டுமே சொல்லலாம் என்று இருக்கிறேன். (சில கருத்துக்கே இந்த ஆர்ப்பாட்டமா? நீ முழுசும் சொன்னா நாடு தாங்காதுடா சாமி)

1) //தேடுவேன் தேடிக்கிட்டே இருப்பேன்//

பேசாம சர்ஃப் எக்ஸல் விளம்பரத்துக்கு முயற்சி பண்ணுங்களேன். (பேசாமலா? டேய் இதைச் சொல்ல கோபால் எம்புட்டு கையூட்டு குடுத்தாரு?)

2) //காசு எடுத்து வைக்கன்னு ஒரு குறிப்பிட்ட இடம் இல்லாம அங்கங்கே டப்பாக்களில்//

இந்த பாருங்க, இந்த மாதிரி கண்ட இடத்தில் எல்லாம் வைக்கக் கூடாது. நான் ஒரு உண்டியல் அனுப்பறேன். சாவி என் கிட்டியே இருக்கட்டும். அதில் போட்டு வையுங்கள். உண்டியல் நிரம்பி வழிந்தால் என்னடா செய்வது என்ற கவலை வேண்டாம். அதை என்னிடம் அனுப்பி வையுங்கள், புதிதாகத் தருகிறேன். (ஆஹா, பையன் எங்க போறான்னு லேசா தெரியற மாதிரி இருக்கே!)

3) //சும்மா வெள்ளியிலே ஒரு செட் வாங்கி வச்சுருக்கேன்,இதுக்குன்னே.//

அப்படியே அந்த 'துளசி' பைலை எடிட் செய்து, இப்போ இருக்கிற தங்க நகையெல்லாம் எனக்குப் பார்ஸல் செய்யுமாறு எழுதி வையுங்க. உங்க ஞாபகமா இந்த 'தம்பி'க்கு அதுவாவது இருக்கட்டும். (அப்படி போடுறா ராசா, அக்கான்னு ஆரம்பிச்ச போதே நினைச்சேன், பையன் எங்கயோ போறானேன்னு!)

4) //டாக்டர் வேஷம் கட்டிரணும்னு //
ஏற்கனவே ஒரு டாக்டர் வந்து கார் ரேஸர் அப்படின்னு வேஷம் கட்டறாரு. அப்போ நீங்க டாக்டரா வேஷம் கட்ட என்ன கவலை. (கார் ரேஸரா,அப்படின்னா காருக்கு தாடி மீசையெல்லாம் இருக்கா? அதை தமிழில் எழுதினா இரேசர் அப்படின்னு எழுதணமே, அப்போ அழிப்பானா? அது ரப்பர் அப்படின்னு நம்ம ஊரில் சொல்லுவாங்களே. ஆனா அந்த கார் பந்தயங்களில் வர்ணனையாளர்கள் laying down the rubber என டயரைத் தானே குறிப்பிடுகிறார்கள்....தம்பி, dont lose focus. விஷயத்துக்கு வா!)

5) //அது என்னைக்காட்டிலும் வியர்டா?// நீங்க வேற, அது வியர்ட் எல்லாம் இல்லை. நீங்க நைசா தமிழ்மணம் பக்கம் போன பின்னாடி நீங்க கோபாலுக்குன்னு வாங்கி வெச்சு இருக்கிற சாமியார் மாலையை எடுத்து மாட்டிக்கிட்டு அப்படியே எலிங்க பக்கம் போயி நான் சாமியாராயிட்டேன், எலி எல்லாம் சாப்பிடறது இல்லை, அப்படின்னு சொல்லிக்கிட்டு நீங்க சொன்னதை திருப்பிச் சொல்லிக்கிட்டு கபடானந்தாவா எலியைப் பிடிச்சு தின்னுக்கிட்டுத் திரியுதாம். (டேய் மூணாம் கிளாஸ் கதையை எல்லாம் எடுத்து விடறயேடா!)

6) //6. ப்ளொக் எழுதறதை ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டு அல்லும் பகலும் இதே நெனப்பா இருக்கறது.//

ஐந்து விஷயங்கள் எழுதச் சொன்னா ஆறு எழுதற இந்த கேரக்டர்தாங்க இருக்கறதிலயே வியர்டு. ஆனாச் சொன்ன விஷயம் நமக்கும் அப்ளை ஆவுது. அதனால சும்மா இருக்கேன். (வேற எதுவும் தோணலைன்னா சும்மா இந்த மாதிரி பீலா விடறதே வழக்கமாப் போச்சுடா உனக்கு!)

இப்படிக்கு

அன்புத்தம்பி கொத்ஸ்

said...

டீச்சர், போன பின்னூட்டம் ரொம்ப பெருசாப் போச்சோ? உங்க எழுத்தின் தாக்கமா அதை வெச்சுக்கலாம். (நீங்க நீளமா எழுதற சொல்லலை, உங்க எழுத்தின் வீரியத்தைச் சொன்னேன்.)

அப்புறம் ஒரு சந்தேகம். (ஆரம்பிச்சுட்டாண்டா!) அதுல அடைப்புக் குறிக்குள் இருக்கறது நீங்க சொல்லறதா இல்லை என் மனசாட்சியா???

said...

அம்புட்டு பெருசா பின்னூட்டம் போடறதுக்குள்ள அந்த ருத்திராட்சப் பூனை மேட்டரை இப்படி ஒரு வரியில் ஹைஜாக் பண்ணிட்டாங்களே!!! :(((

said...

வியர்னு சொல்லிட்டுச் சோகமா (கொஞ்சம்) எழுதிட்டீங்க.

நீங்க பட்டாணி பாட்டில்.
நான் பீரொலே ஒரு குறிப்பும் சாவியும்.
இங்கிருந்து போறத்துக்கொள்ள அது என்ன சாவினு மறந்து போயிரும்.
எங்க மாமியாருக்கு மாம்னார் மேலே அவ்வளவு நம்பிக்கை.
அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு நான் போயிட்டேன்னா, நானே போய் க்றிஷ்ணாம்பேட்டைலெ போய் படுத்துக்குறேன். நீ அப்புறம் மேற்கொண்டு பார்த்துக்கோனு சொல்வாங்க.:-)

said...

//ஆனா..........ருத்திராட்சம் வாங்குனது 'இந்த'ப் பூனைக்கு இல்லைங்க:-))))//

சரிதான் இந்தப் பூனையும் 'போயி' 'பால்' குடிக்குமா என்பது போல இருக்கும் அந்தப் பூனைதானே!! (போய் என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன?)

said...

//ப்ளொக் எழுதறதை ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டு அல்லும் பகலும் இதே நெனப்பா இருக்கறது. இதுதான் இருக்கறதுலேயே 'பெரிய வியர்டு' சமாச்சாரமுன்னு நினைக்கறேன்.//

இது நூத்துக்கு நூறு கிறுக்குத் தனம்ன்னு ஒத்துக்குறேன்..

said...

//சாவுன்னதும் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. நான் மண்டையைப் போட்டதும் என்னென்ன செய்யணுமுன்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன்.//

துளசியம்மா,

எங்க ஊரில் கூட ஒருவர் இறக்கும் முன் கல்லறை எழுப்பினார்.

எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் துனிவு உங்களிடம் நிறைய இருக்கு.

said...

ஒன்னும் ஆறும் எனக்கும் பொருத்தமா வருது துளசி..காணாம போட்ட லிஸ்ட் ரொம்ப பெரிசு. ஆனா காணமன்னு சொல்லமாட்டேன். அதான் பத்திரமா வீட்டுல இருக்கே.

said...

பத்த வச்சிட்டிங்களே...........!

said...

nalla eludhi irukeenga valthukkal

said...

ரொம்ப சிம்ப்ளா முடிச்சிட்டீங்க , அதுவும் வியர்டுதான்.

said...

என்னெ அழைக்கற மூனாவது ஆள் நீங்க.

நன்றி.

முடிஞ்ச அளவுக்கு கிறுக்கனாவறதுக்கு முயற்சி பண்றேன்..

இதுல பிரச்சினை என்னன்னா ஒங்க பதிவ படிச்சிட்டு அட! இந்த கிறுக்குத்தனம் நமக்கும் இருக்கேன்னு தோனுது..

காப்பியடிச்சிட்டேன்னு சண்டைக்கு வராம இருந்தா சரி:)

said...

வாங்க (என் அன்புத்தம்பி)கொத்ஸ்.

நல்லவேளை என் வேலையை மனசாட்சி லகுவாக்கிடுச்சு:-)))))

மடல் ஆரம்பத்துலேயே தெரிஞ்சு போச்சு, 'சோழியன் குடுமி
ச்சும்மா ஆடாதே' இன்னிக்கு என்ன திடீர்ன்னு?:-)

நம்ம கோபாலகிருஷ்ணனைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொன்னதுக்கு,
அது இங்கே உக்கார்ந்து கறுவிக்கிட்டு இருக்கு. முதலாவது இங்கே எலி நஹி.
அப்படியே இருந்தாலும் நான் அதைபிடிச்சுப் பதப்படுத்தி டின்லே அடைச்சுத் தந்தாத்தான்
அது ஆச்சாரமா சாப்புடும். அப்ப்டி ஒரு நல்ல குணம். அதை சாமியாருன்னு
சொல்லிட்டீங்க(-:

// (போய் என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன?)//

அது இருக்கட்டும். எங்கே போய்? ன்னு சொல்லுங்க .

said...

வாங்க வல்லி.
இந்த மறதின்றது எதுக்கு இருக்கணுமோ அதுக்கு இல்லை.

முந்தாநாள் என்ன குழம்பு வச்சோமுன்னா( பிரிஜ்ஜைத் திறக்காம) நினைவுக்கு வராது:-))

ஆனா எப்பவோ நடந்தது எல்லாம் இந்த நிமிஷம் நடந்ததுபோல.

அய்யோ என் பட்டாணி பாட்டிலே.........இதோ வந்துட்டேன்.

said...

வாங்க தேவ்.

//இது நூத்துக்கு நூறு கிறுக்குத் தனம்ன்னு ஒத்துக்குறேன்.. //

இது நமக்கெல்லாம் பொதுக் கிறுக்கு:-))))))

said...

வாங்க கோவியாரே.

நீங்க துணிவுன்னு சொல்றதை இவுங்க அச்சானியமாப் பேசறேன்னு சொல்றாங்க(-:

said...

வாங்க முத்துலெட்சுமி

//அதான் பத்திரமா வீட்டுல இருக்கே.//

அதுசரி. வீட்டுக்குள்ளே எங்கே? அதுதானே பிரச்சனை:-)

said...

வாங்க சிஜி.

'பரட்டை'யை விட்டுட்டீங்க? :-))))

said...

வாங்க காபி.

நவராத்திரி மாதிரி ஆகிப்போச்சு. வீட்டு வீட்டுக்கு வெத்தலைபாக்கு சுண்டல்
வாங்க 'அஞ்சி அஞ்சி' ப்போகணும்.

ஆயிரம் பதிவர்கள் வீடு பாக்கி இருக்கு:-)))))

said...

வாங்க மணியன்.

//ரொம்ப சிம்ப்ளா முடிச்சிட்டீங்க , அதுவும் வியர்டுதான். //

உண்மையாவே 'வியர்டு'ன்னு காமிக்க இந்த அடையாளம் போதாதா? :-))))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

காப்பியாவது டீயாவது.

பலவிஷயங்கள் நமக்கெல்லாம் பொது. இல்லேன்னா பதிவர்களா ஆகி இருப்போமா? :-))))
நம்ம கிறுக்குக்கு வேற என்ன சொல்றது? :-))))

said...

//அது இருக்கட்டும். எங்கே போய்? ன்னு சொல்லுங்க .//

பால் எங்க குடிக்கிறது? பனை மரத்துக்குக் கீழதான். :)

அப்புறம் அந்த ஃபைலை மாத்துனீங்களா இல்லையா? (காரியத்தில் கண்!)

said...

அடேங்கப்பா! துளசி மேடம் ஒத்துக்கிட்டேன் நீங்க வியர்டுன்னு ;)

இவ்வளவு தெளிவா எல்லா விசயத்தையும் ப்ளான் பண்ணி வைச்சிருக்கீங்க, நானும் பல நாள் இது மாதிரி நம்ம இறந்தால், என்ன வேளை பாக்கி இருக்கும்! அதை யார் யார் செய்யனும், அது இதுன்னு கண்டமாதிரி யோசிக்கறதுண்டு, சிலது எழுதி வைத்திருக்கேன்! பல விசயம் விட்டுப்போயிருக்கும்! ரொம்ப ஓவரா நீங்களும் திங் பண்ணுவிங்களோ!! என்னை மாதிரி!!! ஹீ! ஹீ!!! ஏன்னா நானும் கொஞ்சம் வியர்டு தான் ;)

said...

துளசிம்மா

என்ன ஒரு நம்பிக்கை உங்களுக்கு சரியான கிறுக்கா தேர்ந்தெடுக்கணும்னு மது பெயரைப் போட்டீங்களா

ஆனா உங்க பதிவைப் பார்த்த பிறகு என்ன எழுதப் போறேனோ. கொஞ்சம் அவகாசம் கொடுங்க

said...

வாங்க கொத்ஸ்.

காரியத்துலே கண்ணா?

இப்ப அந்த ஃபைலைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்:-)))))

said...

வாங்க ஜெய்சங்கர்.

பதிவர்ன்னு சொன்னதும் வியர்டுன்றது தானாத் தெரிஞ்சுருமே! இல்லேன்னா இப்படி
இதைக் கட்டிக்கிட்டு அழுவோமா? :-)))))

said...

வாங்க மது.

கிறுக்கன் அறியாத கிறுக்கா? :-)))))

said...

துளசி

நான் தான் வியேட் என்று பாத்தா, என்ன துளசி நீங்களும் அப்பிடியா?
சரி அதை விடுங்க வல்லி, கீதா, உஷா, மதுமிதா இவங்க கூட நம்ம கட்சிதான்.அப்போ கவலையே இல்ல,நாம நல்லா கிறுக்கலாம்:-)))

//எங்க அம்மா இறந்ததுக்கு நான் இன்னும் சரியா துக்கம் அனுஷ்டிக்கலைன்னு ஒரு நீங்காத குறை மனசுலே இருக்கு.//
இதே நிலமைதான் எனக்கும். ஆனா ஒரு வித்தியாசம் என்னென்றால், என் அம்மா காலமாகி எனக்கு போர்க் கால ஊரடங்குச் சட்டம் காரணமாகப் பத்து நாளுக்கு பின் தான் அறிவிக்க முடிந்தது என்பது தான் பெரிய துக்கம். இதுவும் என் விதியின் வியேட் வேலை.

said...

மூணாவது சொன்னது வச்சு பாத்தா நீங்க உண்மையிலேயே வியர்ட் தான்னு தோணுது அக்கா. :-)

//எங்க அம்மா இறந்ததுக்கு நான் இன்னும் சரியா துக்கம் அனுஷ்டிக்கலைன்னு ஒரு நீங்காத குறை மனசுலே இருக்கு.அப்ப எனக்கு வெறும் 11 வயசுதானே........... //

எனக்கும் இந்த குறை இருக்கு அக்கா. எனக்கு அப்ப 15 வயசு.

said...

வாங்க செல்லி.

//என் அம்மா காலமாகி எனக்கு போர்க் கால ஊரடங்குச் சட்டம் காரணமாகப்
பத்து நாளுக்கு பின் தான் அறிவிக்க முடிந்தது//

த்சு ...........

மனசு பேஜாராப் போச்சு(-:

said...

வாங்க குமரன்.

பொருத்தமான நாளும் கிடைச்சு, மனசும் அமையணும்.

பார்க்கலாம்(-:

said...

வாங்க டெல்ஃபீன்.
நலமா? உங்களை மறுபடியும் தொடர்பு கொள்ள முடியாம எதோ தடங்கல்
அப்ப.

அடுத்தமுறை கட்டாயம். நம்பணும்:-))))