Saturday, March 31, 2007

சிங்கைச் சீனு & கோ


இதோ உங்களுக்காகவே நம்ம 'ச்சீனு அண்ட் கோ' அருள் பாலிக்கும் காட்சியைச்சுடச்சுட வலையேத்தி இருக்கேன். இன்னிக்கு சனிக்கிழமை ஸ்பெஷல்......... ஷோ!

படம் உதவி: கோபால்( சிங்கையில் இருந்து)

19 comments:

said...

ரொம்பத்தான் உங்களுக்கு ச்சீனு பார்த்ததும் ச்சுப்பு க்கு போட்டியோன்னு பயந்துட்டேன்.
கன்னத்துல போட்டுக்கிட்டேன்.கோவிந்தா....

said...

ஏடு கொண்டலவாடா வேங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா!!

said...

துளசி
வேங்கடேசன் தரிசனம் பெற்றுக்கொண்டேன்,நன்றி

said...

ஆஹா சனிக்கிழமை ரியலி ஸ்பெஷல். நன்றி..ச்ச்சீசீன்னு இஸ் ச்ச்சோஓஓஓஒ ச்ச்வீட்ட்

said...

வாங்க கண்மணி.

ச்சுப்புவுக்குப் போட்டியா இருக்கணுமுன்னா அது நம்ம 'கப்பு'தான். ஆனா...........
அவ இவுலகவாழ்வைத் துறந்து ஒன்னரை வருஷம் ஆகப்போகுது(-:

இப்பக் கோபாலகிருஷ்ணனுக்கே நாங்கள் அடிமைகள்( சாசனம் எழுதிக் கொடுத்தாச்சு.
யாரோ சொன்னாங்களே, கொத்தடிமைகளை ஒழிச்சுட்டோமுன்னு!)

said...

கொத்ஸ், செல்லி, மங்கை,

வாங்க வாங்க வாங்க.

குடும்பமே உதவுதுங்க வலை பதிய!

நேயடுக்கு பலம் கூடுதல். பழமாலையைப் பார்த்தீங்களா?

இன்னிக்கு மத நல்லிணக்க நாளா வச்சுக்கணும். பங்குனி உத்திரம்,
பாம் சண்டே, மிலாடி நபின்னு கூட்டுச் சேர்ந்துபோச்சு. அதான் பெருமாள் நானும் நானும்ன்னு
வந்துட்டார்!

said...

பந்த் அடிக்கிறோம்...இன்னிக்குனு பெரிய பதிவு போடாமெ ஏமாத்திட்டீங்களே

said...

ஆகா. அருமையான பெருமாள் தாயார் சேர்த்திச் சேவை பங்குனி உத்திரத் திருநாளில். மிக்க நன்றி துளசியக்கா.

said...

\\படம் உதவி: கோபால்( சிங்கையில் இருந்து)//

super. செய்திக்கு நடுவில் வருவது போல இருக்கு.

said...

வாங்க சிஜி.

பதிவுக்கு மட்டும் பந்த் இல்லையா? :-))))

63வர்க்கு கூட்டம் நெரியுது. நீங்க போகலையா?

said...

வாங்க குமரன்.

நேத்து கோபால் அனுப்புன படம். நல்ல நாளில் எல்லாருக்கும் அருள் இருக்கட்டுமுன்னுதான்
இங்கே போட்டேன்.

said...

வாங்க முத்துலெட்சுமி.

இது மட்டுமில்லைங்க. நேத்து அங்கே வீரமாகாளியம்மன் கோவில் வளாகத்தில்
முருகனுக்கு பாலபிஷேகம் நடந்து ரதம் சோடிச்சு வச்சுருந்தாங்களாம். கூடவே நல்ல
நாதஸ்வர & தவுல் வாசிப்பு. கொஞ்ச நேரம் செல் போன்லே என்னைக் கூப்புட்டு அந்த
சங்கீதத்தையும் கேக்க வச்சாரு. படமும் செல்லில் எடுத்ததுதான்.

செல்லால் தொல்லைன்னு சொன்னாலும் சிலசமயம் எப்படி உதவுது பாருங்க.

said...

ஆஹா,நம்ம அனுமாருகாரு எப்படிப் பவர்ஃபுலாக் காட்சி அளிக்கிறார்.
சாமி காப்பாத்து.

said...

வல்லி,

ஆரஞ்சு, ஆப்பிள், க்ரீன் ஆப்பிள் எல்லாம் மாலையாக் கோர்த்தா என்னா கனம் இருக்கும்? :-))))

ஆமாம். இந்த மாலை ஏன் அரசியல்வியாதிகளுக்குப் போடறதில்லை?

said...

அந்த வீரமாகாளியம்மன் ரதம் கிளம்பும் போது நான் அங்கு தான் இருந்தேன்.
கையில் கேமரா வைத்துக்கொள்ளவில்லை,அதனால் எடுக்கமுடியவில்லை.
ஒரு பதிவு போச்சே!!

said...

தெரிந்திருந்தால்
"பின்னூட்டம் மட்டும் படிப்பவர்கள்" சந்திப்பு என்று போட்டு கொண்டாடியிருக்கலாம்.
:-))

said...

வாங்க குமார்.

அன்னிக்கு ஒரு மூணு மணி நேரம் இருந்துச்சுன்னு சிராங்கூன் ரோடு பக்கம்
வந்துட்டு வந்தார். ஃப்ளைட் நேரம் மாத்திட்டாங்க. முந்தி 9 மணிக்கு இருந்தது,
இப்ப 7.50க்கு (-:

அன்னிக்கு மழைவேற பலமா பிடிச்சுக்கிச்சாமே! ( உங்கூர் மழைக்குக் கேக்கணுமா? )
அதனாலே கொஞ்சம் சீக்கிரமாவே திரும்பிட்டாராம்.

அந்தப் பக்கம் போகணுமுன்னா இனிமே எப்பவும் கேமெராவும் கையுமாப் போறதுதான் நல்லது:-)
ஃப்ளாஷ் நியூஸுக்குப் பஞ்சமா?

said...

உங்களுடைய இந்த தொடரை அப்படியே தனி ஃபோல்டரில் சேமித்து வைத்து பிறகு எப்போதாவது தில்லி செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது கைடாக பயன்படுத்தப் போகிறேன்.

அத்தனை அருமையாக உள்ளது.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

//அப்படியே தனி ஃபோல்டரில் சேமித்து //

ஓ....... அப்ப புத்தகம் போட்டா விற்கப்போற ஒரே பிரதிக்கும் 'நாமமா?':-))))