Wednesday, March 28, 2007

தில்லிக்காரங்க தமிழ் பேசறாங்க.

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 8)

வடக்கே வந்ததும் முருகன் செஞ்ச முதல் வேலை தில்லிக்காரங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்ததுதான்.

மலை....... சொல்லுங்க ம லை

மலெய்

கோவில்......... சொல்லுங்க கோ வில்

மந்திர் ம ந் தி ர்

மலைக்கோவில்
மலெய்மந்திர்

அப்படியே இருந்துட்டுப் போட்டும். அச்சா....அபி, 'மலை மந்திர் ஜாயியே.'..... இது போதும்.ராமகிருஷ்ணா நகர் உத்தர சுவாமி மலை. இன்னிக்கு கார் எனக்கு. முருகன் இங்கே வந்தது சமீபத்துலெதானாம். 1973. மெய்யாலுமா? இல்லே கிடைச்ச நியூஸ் சரிதானா?

குன்றைப் பார்த்தாக் குமரன் விடுவானா? வாகா இங்கே ஒரு இடம் கிடைச்சிருச்சு. நீலமயில் ஏறும் மயில்வாகனனுக்கு ஏத்தமாதிரி நீலக் கலர் கிரானைட் கல் இழைச்ச கோயில். சோழர்காலத்துச் சிற்பக்கலையை ஒட்டிக் கட்டப்பட்டது. முதல்லே 'தான்' வந்துட்டு, அப்புறம் அண்ணன், அம்மா, அப்பான்னு குடும்பத்தைக் கூட்டிவந்துருக்கார்.

கோயில் வளாகத்துக்குள்ளே நுழையும்போது கண்ணில் பட்டது கரும்புக்கட்டு. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாள்தானே இருக்கு. பச்சைமஞ்சள் கொத்துகளும் குவிச்சு வச்சுருக்காங்க. இந்த ஏரியாவுலே நம்ம மக்கள்ஸ்அதிகமா இருக்காங்களாம். கோயில்கள்தானே எப்பவும் சமூகக்கூடமா இருந்து வருது. அதான் பொங்கல் பண்டிகைக்குவேண்டிய சாமான்கள் இங்கே கிடைக்கறமாதிரி ஒரு வசதி செஞ்சுருக்காங்க.

முதலில் வரும் சந்நிதி நம்ம மதுரை மீனாட்சிக்கு. அப்புறம் கற்பக விநாயகர், சுந்தரேஸ்வரர்ன்னு இருக்கு.நவகிரகங்கள் ஒரு பக்கம் இருக்காங்க.முன்னாலே பெரிய முற்றம். அதுக்கு எதிரில் அரங்கம் போன்ற அமைப்பு. உற்சவ மூர்த்திகளை விசேஷத்தின்போது இங்கே கொண்டு வந்துட்டா எதிரில் ஒரு ஆயிரம்பேருக்குக் குறையாம உக்கார்ந்து பார்க்கலாம். கோயில்லே பாட்டுக்கச்சேரி எதாவது நடத்துனாலும் இந்த இடம் அருமையா இருக்கும்.

குன்றின் அமைப்பையொட்டியே ரெண்டு நிலையாக் கட்டி இருக்காங்க. படி ஏறுனதும் ஒரு பிரமாண்டமான ஹாலில் நிப்போம். ஆதி சங்கரருக்கு நேர்ந்துவிட்டுருக்காங்க. பஜனை, தியானம்னு கூட்டம் கூடும்போது வசதியா இருக்கலாம்.61 வது கந்த சஷ்டிக்காக வரைஞ்ச முருகனின் ஓவியம் அருமையா இருக்கு. இந்தக் கோயிலுக்கு வயசு 34ன்னாஇதுக்கு முந்தி வேற இடத்துலே வழிபாடு நடத்திக்கிட்டு இருந்துருப்பாங்க போல.
இடது பக்கம் இன்னும் படிக்கட்டுகள் உயரே போகுது. போய்ச் சேரும் இடம் சுவாமிநாதனின் சந்நிதி. துவாரபாலகரைக் கடந்து உள்ளே போனால் வேல் மின்ன நிக்கிறார் வேலவர். இங்கே அவர் கார்த்திகேயன். அவரை வலம் வரும்போது 'ஜெயஜெய தேவி துர்க்கா தேவி'ன்னு பாட்டுச் சத்தம் கொஞ்சம் உரக்கக் கேட்டுச்சேன்னு அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால்............ஒரே பெண்கள் கூட்டம். ஓஓஓஓஓ இன்னிக்கு வெள்ளிக்கிழமையா? அதான் ராகுகால பூஜைக்காக எலுமிச்சம்பழமும் விளக்குமா இருக்காங்க. அங்கே மலைமேல்இருந்து பார்த்தா சுத்துவட்டம் அரைவாசி தில்லி தெரியுது. நல்ல பெரிய வளாகம்தான். பக்கத்துலே அடுத்த கட்டிடத்தில் வேற எதோகோயில் இருக்கோ என்னவோ....... அந்தக் கூரை கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.
யாரையாவது கேக்கலாமுன்னா யாரை? எல்லாரும்அங்கே பஜனையில் இருக்காங்களே. எதாவது ஆசிரமமா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. தில்லியிலே தடுக்கி விழுந்தாஎதாவது ஹனுமார் கோயிலில்தான் விழோணும். அப்படி எங்கே பார்த்தாலும் நேயடே நேயடு! ( அதான் தில்லியிலே குரங்குகள் அட்டகாசமுன்னுசெய்தி வந்துச்சோ? )

அம்மாங்களோட வந்த ச்சின்னப்புள்ளைங்க ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தாங்க. வெயில் காலங்களில் இந்த இடத்துக்கு பயங்கரக்கூட்டம் வருமுன்னு நினைக்கிறேன். மாசக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற முருகனுடைய விசேஷ நாட்களில் கூட்டம் நெரியுமாம். கீழே ஆஃபீஸில் சொன்னாங்க. அனுமதி கேட்டுக் கொஞ்சம் படங்கள் எடுத்துக்கிட்டேன்.

பின் குறிப்பு: உங்களுக்குப் படங்கள் காமிக்கணுமுன்னு தோணுது. அதனாலே வழக்கத்துக்கு மாறாச் சின்னப் பதிவுகளா போடறேன்.

45 comments:

said...

ஏன் இன்னிக்கு இவ்ளோவ் லேட்?

said...

வாங்க சிஜி.

நியூஸ் ப்ரிண்ட் வர லேட்டாச்சுன்னு சொல்லவா?

பவர் கட் ன்னு சொல்லவா?

ப்ரிண்டிங் இங்க் சப்ளை தீர்ந்துபோச்சுன்னு....?

எல்லாம் ப்ளொக்கர் ஸ்ட்ரைக்தான்.

பப்ளிஷ்னு போட்டவுடனே 'மன்னிச்சுக்கோ. இப்ப முடியாது'ன்னு அலறுது.

மணிக்கணக்கா மெனெக்கெட வேண்டியதாப் போச்சு.

எனக்கு மட்டுமா இல்லே எல்லாருக்கும் இப்படியான்னு தெரிஞ்சுக்கிட்டா
'நெஞ்சுக்கு நிம்மதி':-))))

said...

துளசி
அழகான முருகன் கோவில்.60 க்குப் பிறகு போற கோயில் தரிசனத்துக்கு இப்பவே கிளம்பிடீங்களா?

//நீலக் கலர் கிரானைட் கல் இழைச்ச கோயில்.//
உண்மையிலேயே நீலக் கலர் கிரானைட் கல் தானா அல்லது பெயின்ற் அடிச்சிருக்காங்களா?

said...

//முதல்லே 'தான்' வந்துட்டு, அப்புறம் அண்ணன், அம்மா, அப்பான்னு குடும்பத்தைக் கூட்டிவந்துருக்கார்.//

நம்ம ஆளுங்க எந்த வெளியூர் / வெளிநாடு போனாலும் பண்ணறதுதானே! அதுக்கும் கடவுள் இருக்காரா? நாம எங்கயோ போயிட்டோம்.

//மலெய்மந்திர்//
இது சில இளவட்டங்கள் வாயில் மாட்டிக்கிட்டு மலாய் மந்திர் ஆவுது. சீக்கிரமே மலாய் ஸ்வீட் எதாவது பிரசாதமா குடுக்க ஆரம்பிச்சு ஒரு கதையும் வரலாம். :))

said...

அக்கய்யா! குட்டா குடி சூசினானு
சால பாகுந்தண்டி!

said...

//எனக்கு மட்டுமா இல்லே எல்லாருக்கும் இப்படியான்னு தெரிஞ்சுக்கிட்டா
'நெஞ்சுக்கு நிம்மதி':-))))
//
எனக்கும் இந்த பிரச்சனை இருந்திச்சி. இப்போ கொஞ்ச நேரமா எந்த பிரச்சனையுமில்லாம இருக்குது.

பிரமாதமா படத்துடன் விளக்கியதற்கு நன்றி. தில்லியில தடுக்கி விழுந்தா ஆஞ்சனேயர் எனக்கு புதுச் செய்தி

said...

டீச்சர்

மலை மந்திர் பதிவு பஹூத் பாக உந்தி ஹை!

இப்படின்னு தெரிஞ்சிருந்தா, பேசாம நியூசி வந்து, உங்க கூடவே வந்துட்டிருப்பனே! சும்மா, இந்தியப் பயணத்தை, ஒரு presidential state visit மாதிரி கலக்கியிருக்கீங்க!
ஃபோட்டாவெல்லாம் படு தூள்!

கோவிலின் டாப் வியூ, ஏதோ ஹெலிகாப்டரில் இரு~ண்து எடுத்தாப்ல இருக்கு.

said...

மலை மந்திர் அமைப்பு போலவே, சென்னைக் கிரோம்பேட்டைக்கு அருகே குமரன் குன்றமும் இருக்கும். அதே சுவாமிமலை சுவாமிநாதன் தான்.

பின்பு அங்கிருந்து பல்லாவாரம் திருநீர்மலை செல்லலாம். மலையில் உள்ள கொய்யா மரங்களில், கொய்யா, கொய்து கொண்டே படி ஏறுவது, ஜாலியாக இருக்கும்!

said...

நீங்க போனது காலைலயா? கூட்டமே இல்ல. கோயில நல்லா பளிச்சுனு வச்சிருக்காங்க. டாப் வ்யூல ஒரெ பனிமூட்டமா இருக்கு. நல்ல குளிரா இருந்துருக்குமே.

said...

சூப்பர் படங்கள் துளசி.உங்களுக்கும் ப்ளாக்கர் மன்னிப்புக் கேட்டுச்சா;-)

ஸ்ரீராம நவமி பதிவு தசமி அன்னிக்குப் போடறபடி ஆச்சு.
மலாய் மந்திர்னதும்
டெல்லி மலாய்ப் பால் சாப்பிட்டீங்களோனு ஒரு நப்பாசை.

said...

வாங்க செல்லி.

என்ன 60க்குப் பிறகா? இப்ப 2007 நடக்குது தெரியுமில்லே?
ஆமா நீங்க சொன்னது 1960தானே? :-)))))

பெயிண்ட் எல்லாம் இல்லையாக்கும். அச்சு அசல் நீலக்கல்லாக்கும்.
( மனுஷங்களுக்கு சந்தேகம் எப்படியெல்லாம் வருது பாருங்க!)

said...

வாங்க கொத்ஸ்.

மக்கள் எவ்வழி கடவுள் அவ்வழின்னு கேள்விப்படலையா? :-)))))

ஆமாம் பால்கோவா பிரசாதமாக் கொடுத்தா அதுலே என்ன தப்பு?
(தின்னுட்டுக் கையைக் கழுவவேணாம்)

said...

ஆஹா......'ரண்டி' மாஸ்டரு காரு.
ரண்டி ரண்டி.

( கொத்ஸ், வாத்தியாரைத் திட்டிட்டேன்னு பின்னூட்டிறாதீங்க)

said...

வாங்க காட்டாறு.

பூனைங்க பிறாண்டாம விட்டதா? :-))))

//தில்லியில தடுக்கி விழுந்தா ஆஞ்சனேயர் எனக்கு புதுச் செய்தி//

பூனை போய் குரங்கு வந்தது டும் டும் டும் :-))))))

said...

வாங்க KRS.

//presidential state visit மாதிரி ...//

மாதிரியா? நியூஸியிலிருந்து போன அஃபிஷியல் விஸிட் இது:-))))))

//மலை மந்திர் அமைப்பு போலவே, சென்னைக் கிரோம்பேட்டைக்கு
அருகே குமரன் குன்றமும் இருக்கும். அதே சுவாமிமலை சுவாமிநாதன் தான். //

அதான் ஒரு மலையைப் பார்த்தா வுடறதில்லையே!

திருநீர்மலைபோகணுமுன்னு நினைச்சுப் போக முடியலை. முந்தி எப்பவோ போனதுதான்.
கொய்யா ஞாபகம் இல்லை(-: எனக்குமுன்னே யாரோ கொய்துட்டாங்க போல!

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

காலைநேரம்தாங்க. ஒரு பத்துமணி இருக்கும் அங்கே போனப்ப. நல்லா சுத்தமா அழகா வச்சுருக்காங்க.
பாராட்டவேண்டிய விஷயம்.

நியூஸியில் இருந்து போனதாலே குளிர் 'விட்டு'ப்போச்சு:-))))

said...

வாங்க வல்லி.

தின்னும் பொருட்களைக் கண்ணாலே முழுங்கறதோடு சரி.
அதனாலே மலாய், கிலாய் எல்லாம் 'மூச்'!
பேசப்பிடாது:-)))

said...

ஆமாம்,இது சின்ன பதிவா?!
ஓ! பிளாக்கர் சொதப்பிடுத்தா?அதானே பார்த்தேன்,எப்படி நம் கண்ணில் படாமல் தப்பியது என்று.
இ.கொத்தனாரே!! வயிறு வலிக்குது.
இனிமேல் இவர் வருவதற்கு முன்பு வந்திட்டு போயிடனும்.:-)))

said...

வாங்க குமார்.

ப்ளொக்கர் ஆட்டம் ஜாஸ்தியாப் போச்சு. அப்புறம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு வழியா ஆச்சு. இதுலே
எல்லாப் படத்தையும் டபுள் எண்ட்ரி வேற போட்டுத் தாராள மனசைக் காமிச்சது:-)

said...

//பக்கத்துலே அடுத்த கட்டிடத்தில் வேற எதோகோயில் இருக்கோ என்னவோ....... அந்தக் கூரை கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. //

That is a Bengali (Kali)temple. Thephotos were good and you took me back to the nostalgy of delhi life.

said...

வாங்க தியாகராஜன்.

ஆஹா....அது பெங்(காளி)காலி கோயிலா?

நன்றிங்க என் சந்தேகத்தைத் தீர்த்ததுக்கு.

(யாரங்கே? அந்த ஆயிரம் பொற்காசை இன்னிக்கு இங்கே புதுசா வந்துருக்கும் தியாகராஜனுக்கு அனுப்பிவையும்)

ச்சும்மா.....கோச்சுக்காதீங்க.:-)))))

இப்ப டெல்லியை விட்டுப் போயிட்டீங்களா?

said...

//ஆஹா......'ரண்டி' மாஸ்டரு காரு.
ரண்டி ரண்டி.

( கொத்ஸ், வாத்தியாரைத் திட்டிட்டேன்னு பின்னூட்டிறாதீங்க)//

அதெல்லாம் செய்வேனா, எனக்குத் தெரியாதா?

இது வந்து அந்த ரண்டக்க ரண்டக்க பாட்டு இருக்கே அந்த மாதிரி ஆனா பொம்பளைங்க பாடறது அதனால் ரண்ட அப்படின்னு சொல்லாம ரண்டி அப்படின்னு சொல்லறீங்க. அதானே!!

said...

//கொய்யா ஞாபகம் இல்லை(-: எனக்குமுன்னே யாரோ கொய்துட்டாங்க போல!//

டீச்சர், ஒரு சந்தேகம்!

அப்படி கொய்திட்ட பழம் கொய்த பழம் தானே? அப்போ கொய்யா பழமா இருக்க முடியாது. அதனாலதான் உங்களுக்கு கொய்யாப் பழ ஞாபகம் இல்லை.

அப்போ கொய்த எல்லா பழமுமே கொய்த பழமா? அப்போ கொய்யாத எல்லா பழமும் கொய்யாப் பழமா? கொய்யாமல் ரொம்ப கனிஞ்சு போன பழத்தைக் கொய்யாப் பழம்பழம் அப்படின்னு சொல்லணுமா? அந்த பழம் தானா கீழ விழுந்தா அது கொய்ததா அர்த்தம் ஆகாதே. அப்போ அது கொய்த பழம்பழமும் இல்லை, கொய்யாப் பழம்பழமும் இல்லை. அப்போ அது என்ன?

இப்போ பழம் அப்படின்னு பொதுவாச் சொன்னதை கொய்யாப் பழத்துக்குச் சொன்ன அது கொய்யா கொய்யா பழம்பழமா அல்லது கொய்யா பழங்கொய்யாப் பழமா?

என்னங்க எங்க ஓடறீங்க? நீங்கதானே க்ளாசில் சந்தேகம் வந்தா உடனுக்குடனே கேக்கச் சொன்னீங்க? டீச்சர்... டீச்சர்...

said...

//தின்னும் பொருட்களைக் கண்ணாலே முழுங்கறதோடு சரி.//

டீச்சர், ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆகிப் போச்சு பாருங்க. சரியா எழுதணுமுன்னா. "தின்னும் பொருட்களைக் கண்டாலே முழுங்கறதோடு சரி." இப்படி இல்ல வரணும்?

//அதனாலே மலாய், கிலாய் எல்லாம் 'மூச்'! பேசப்பிடாது:-)))//

ஆமாம் பேசி டயம் வேஸ்ட் பண்ணக்கூடாது. மேல சொன்னா மாதிரி ஒரே லபக். :))

said...

//இ.கொத்தனாரே!! வயிறு வலிக்குது.
இனிமேல் இவர் வருவதற்கு முன்பு வந்திட்டு போயிடனும்.:-)))//

சும்மா குட்டிப் போட்ட பூனை மாதிரி (அட கோ.கி தப்பு ஒண்ணும் செய்யலைங்க, சும்மா பழமொழி சொன்னேன்.) இங்கயே சுத்திக்கிட்டு இருக்கேன், எனக்கு முன்னாடி வந்துட முடியுமா? சும்மாவாய்யா நான் கிளாஸ் லீடர்? வந்துட்டாரு பெரூஊஊஊசா சொல்லறதுக்கு. :))

said...

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இக்கோவிலுக்கு செல்லும் வழக்கம், அன்று அந்த ஆண்டியப்பன் அரசனாக காட்சி தருவான். காண கண் கோடி வேண்டும் அட பங்குனி உத்திரத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கோ!

அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று ஒரு மணி நேரம் வரை செலவிடுவேன்! ரொம்ப நல்ல அமைதியான கோவில்.

//எதிரில் அரங்கம் போன்ற அமைப்பு. உற்சவ மூர்த்திகளை விசேஷத்தின்போது இங்கே கொண்டு வந்துட்டா எதிரில் ஒரு ஆயிரம்பேருக்குக் குறையாம உக்கார்ந்து பார்க்கலாம். கோயில்லே பாட்டுக்கச்சேரி எதாவது நடத்துனாலும் இந்த இடம் அருமையா இருக்கும்.//

திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் இங்கு தான் நடைபெருகிறது.

மேலும் அந்த வெளியிடத்தில் தான் சொர்க்கபனை (திருக்கார்த்திகை) எரிக்கும் வைபவமும் நடக்கிறது.

சுவாமி புறப்பாடு நடக்கும் போது மக்கள் யாவரும் (4-8 பேர்) சுவாமியை சுமந்து மலை மேல் செல்லலாம். எனக்கும் இருமுறை அந்த வாய்ப்பு கிட்டியது.

//இங்கே அவர் கார்த்திகேயன்.//

இல்லையே இவர் சுவாமிநாதன் ஆச்சே!
அதனால் தான் வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.


கோவிலில் தற்சமயம் நான்கு மயில்களை வளர்த்து வருகிறார்கள்.

//பக்கத்துலே அடுத்த கட்டிடத்தில் வேற எதோகோயில் இருக்கோ என்னவோ....... அந்தக் கூரை கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.//

அதுவா, அது ஒரு வங்க மக்களால் கட்டப்பட்ட ஒரு காளி கோவில். அங்கு நவராத்திரி வைபவம் ரொம்ப அருமையா இருக்கும்.

நான் வசிக்கும் இடம் (ஹாஸ்டல்) இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

said...

குன்றிருக்கும் இடமெங்கும் ஓடி விளையாடும் குழந்தைதான் நம்மைக் குழந்தையாகக் கொண்டு காப்பாற்றுகிறான்.

மலை மந்திர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தில்லியில் இருக்கும் எனது நண்பர் ராஜேஷ் அடிக்கடி செல்லும் கோயில் அது. மலையை மலெய் என்று சொல்கிறார்களே என்று முதலில் சங்கடப்பட்டதுண்டு. நல்லவேளைக்கு மலாய் என்று சொல்லாமல் விட்டார்களே என்று மகிழ்ந்தேன்.

அழகாகவும் துப்புரவாகவும் இருக்கிறது திருக்கோயில். செல்ல வேண்டும் என்ற ஆவலைக் கொடுக்கிறது.

ஒருமுறை தில்லியில் ஒருநாள் வேலையாகச் சென்றிருந்த பொழுது வேலையை முடித்து விட்டு திரும்ப ஏர்போர்ட்டுக்கு வரும் வழியில் ஏதோ கோயில் மாதிரி இருக்கேன்னே எட்டிப் பாத்தேன். மனசுக்குள்ள முருகன் கோயில்னு தோணுச்சு. மலை மந்திர்னு சொல்றாங்களே...அதா இருக்குமோன்னு...நெனச்ச மாதிரியே அதான். ஆனா போக முடியலை. பிளைட்டு போயிருமே. முருகன் கூப்பிடுற அன்னைக்குப் போய்க்கிற வேண்டியதுதான்.

said...

அய்யோ கொத்ஸ், சிரிச்சுச்சிரிச்சுக் கண்ணுலே தண்ணி வந்துருச்சுப்பா.
எல்லாம் 'உக்காந்து' யோசிக்கறதா?

//என்னங்க எங்க ஓடறீங்க? நீங்கதானே க்ளாசில் சந்தேகம் வந்தா
உடனுக்குடனே கேக்கச் சொன்னீங்க? டீச்சர்... டீச்சர்... //


கொய்யா கொய்யான்னு ஏனைய்யா நீர்?

'போய்யா கொய்யா'ன்னு சொல்லிறலாமான்னு கை விறுவிறுக்குது. ஆனாலும் கண்ணியம் காக்கணுமேன்னு
அப்படிச் சொல்லலை!

கண்டால் இல்லைப்பா. கண்ணால் மட்டுமே. கண்ணால் மட்டுமே கண்ணால் மட்டுமே
( பாருங்க நம்ம கதியை இப்படி ஏலம் போடுற அளவுக்கு ஆகிப்போச்சு)

said...

////இங்கே அவர் கார்த்திகேயன்.//

//இல்லையே இவர் சுவாமிநாதன் ஆச்சே!
அதனால் தான் வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.//

நான் கார்த்திகேயன் இங்கேன்னு சொன்னது
வடக்கத்திக்காருங்களுக்கு முருகன்னா கார்த்திகேயன்னு:-)))))

முருகான்னு சொன்னா கோழி புடிச்சுருவாங்களே:-)))))

மயில் வளர்க்குறாங்களா? அடடா.......தெரியாமப்போச்சே(-:

தில்லிக் கோயில்களைப் பத்துன ஒரு பெரிய லிஸ்டை நம்ம தியாகராஜன்( புதுசா வந்துருக்கார்)
அனுப்பிட்டாருங்க. அது போன பதிவுலே பின்னூட்டமா வந்துருக்கு பாருங்க.:-))))

said...

வாங்க ராகவன்.

குமரனைப் பத்தி எழுதுனப்பவே உங்களை நினைச்சேன். மலையில் முருகனைப் பார்த்தப்பவும்
உங்க நினைவு வந்துச்சு. ( ஏன்னு தெரியலை)

கோயில் அட்டகாசமா இருக்கு. படு சுத்தம்.

எந்தக்கோயிலுக்கும் வாசலில் நின்னாக்கூட உள்ளே போய்ப்பார்க்கவும் அவனருள் வேணும்.
இதுவும் என் அனுபவத்தில் நிறையப் பார்த்துருக்கேன்.

said...

//'போய்யா கொய்யா'ன்னு சொல்லிறலாமான்னு கை விறுவிறுக்குது. ஆனாலும் கண்ணியம் காக்கணுமேன்னு
அப்படிச் சொல்லலை!//

அதான் சொல்லிட்டிங்களே அப்புறம் என்ன
;-)

said...

//அய்யோ கொத்ஸ், சிரிச்சுச்சிரிச்சுக் கண்ணுலே தண்ணி வந்துருச்சுப்பா.
எல்லாம் 'உக்காந்து' யோசிக்கறதா?//

பின்ன நடுராத்திரியில் பேய் மாதிரி எழுந்து வர்கார்ந்து பின்னூட்டம் போடுறார் போல, மணிய பாருங்க....

said...

புலி,

இண்டு இடுக்குலே படிச்சு, இப்படிப் புடிச்சுக்கொடுக்கறது நல்லதுக்கில்லே,
சொல்லிட்டேன்....ஆமா:-)))))))

மணி என்னப்பா பெரிய மணி?
எனக்கு இப்பத்தான் ஏழே முக்கால்.( நல்லவேளை ஏழரை இல்லை)

said...

//எனக்கு இப்பத்தான் ஏழே முக்கால்.( நல்லவேளை ஏழரை இல்லை)//

அதாவது ஏழரை ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சுன்னு சொல்லறீங்க. இதுக்கும் என் கொய்யா பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லையே? !!

said...

// துளசி கோபால் said...
வாங்க ராகவன்.

குமரனைப் பத்தி எழுதுனப்பவே உங்களை நினைச்சேன். மலையில் முருகனைப் பார்த்தப்பவும்
உங்க நினைவு வந்துச்சு. ( ஏன்னு தெரியலை) //

ஆகா! உண்மையிலேயே அடியவர் பலர் முருகனுக்கு இருக்கும் பொழுது...ஒப்புக்குச் சப்பாணியான என்னையும் முருகனைப் பத்தி நெனைக்கும் போது நெனைக்க வெச்சானே அந்த முருகன். ஆகா! முருகனின் கருணைக்கு நன்றி பல.

// கோயில் அட்டகாசமா இருக்கு. படு சுத்தம்.

எந்தக்கோயிலுக்கும் வாசலில் நின்னாக்கூட உள்ளே போய்ப்பார்க்கவும் அவனருள் வேணும்.
இதுவும் என் அனுபவத்தில் நிறையப் பார்த்துருக்கேன். //

இப்பச் சொன்னீங்களே...இது வாஸ்த்தவம். திருமலை தென்குமரின்னு ஒரு படம் வந்தது. பாத்திருக்கீங்களா? எல்லாரும் கூட்டமா டூர் போவாங்க. அப்ப...மைசூர் வந்ததும் இளைஞர்களெல்லாம் பிருந்தாவனம் போயிருப்பாங்க. பெருசுகள்ளாம் கோயில்ல இருப்பாங்க. அடடா! அவங்கள்ளாம் பிருந்தாவன் போயிட்டாங்களே...நம்மளும் போயிருக்கலாமேன்னு நெனச்சுக்கிட்டே இவங்க கோயிலுக்குப் போவாங்க. கோயில் பூட்டியிருக்கும். அங்க போனவங்க...எல்லாருமா வந்த இடத்துல நம்ம மட்டும் அசடு மாதிரி பிருந்தாவனத்துக்கு வந்துட்டமேன்னு நெனைப்பாங்க. ஒடனே கெளம்பி கோயிலுக்குப் போவாங்க. இவங்க வரவும் கோயில் தெறக்கவும் சரியா இருக்கும்.

said...

மலை மந்திர் என அழைக்கப்படும் தில்லியில் உள்ள முருகன் ஆலயப் புகைப்படங்களை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவும் அளவாகவே இருந்தது மற்றொரு சிறப்பு.

said...

என்ன கொத்ஸ்,

இதுக்கெல்லாம் சம்பந்தம் இருக்குமா? :-)))))

said...

ராகவன்,

அதே அதே.

அவனன்றி ஒரு அணுவும் அசையாது.

said...

பாரதீய மாடர்ன் ப்ரின்ஸ்,

என்னங்க நலமா? ரொம்ப நாளா ஆளையே காணோம்?

அது என்னங்க, அளவுன்னு சொல்லிட்டீங்க? :-))))

said...

வடக்கே வந்ததும் முருகன் செஞ்ச முதல் வேலை தில்லிக்காரங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்ததுதான்.//

யார்ங்க இந்த முருகன்.. சாமியா?

அவர் எங்க தமிழ் படிச்சார்?

ஓ! தமிழ்க்கடவுள்னு ஒரு பேர் இருக்கா அதனால சொல்றீங்களா?

அவர் இருக்கறப்பல்லாம் ஹிந்தின்னு ஒன்னு இருந்துதோ என்னமோ:)

சும்மா தமாஷ் பண்ணேன்.. சாமி குத்தம் வராதுல்லே

said...

உங்கள் பதிவும் அளவாகவே இருந்தது மற்றொரு சிறப்பு!

//அது என்னங்க, அளவுன்னு சொல்லிட்டீங்க? //

I mean......vazhakkamaana vaLa vaLa endru illaamal.... aiyO aiyO.."reject"pannappOreengaLa yen commenttai?

said...

அட நீங்க ஒண்ணு! இதையெல்லாம் ரிஜெக்ட்டு செய்யணுமா?

'நேத்து மலை மந்திர் போனேன்' இப்படி ஒத்தவரிப் பதிவு எழுதுனா
நம்ம 'ஸ்டைல்' என்னாவறது? :-)))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

சாமிக்கு மட்டும் கலாய்க்கறோமுன்னு புரியாதா?
அதெல்லாம் அவர் ஒரு நகைச்சுவையா எடுத்துப்பார்.

said...

துளசி டீச்சர் சுகமா இருக்கீங்களா?
ஒரு நல்லசுற்றுலா கெளம்பியாச்சு போல? நேற்றே இந்தப் பதிவிற்க்குப் பின்னூட்டம் போட்டேன் ஆனால் என் கணிணி சொதப்பலால் முடியவில்லை! அதான் தேடிப்பிடித்து இன்று வந்தேன்!

படங்கள் நன்றாக வந்துள்ளது! பதிவும் அருமை! கொடுத்துவைத்த ராகவன்,மற்றும் கொத்ஸின் அந்த கொய்யா பின்னூட்டம் நல்ல நகைச்சுவை!

அன்புடன்...
சரவணன்.

said...

வாங்க சரவணன்.

நலம்தான். சுற்றுலா போய்வந்தே ரெண்டு மாசமாகுது. இப்பத்தான் நிதானமா எழுதறேன்.

கொத்ஸ் அடிக்கிற லூட்டி இல்லேன்னாலும் நம்ம வகுப்பு(பதிவு)க்கு சரிப்படாதே:-))))
பின்னே உயிரோட்டம் வர்றதெப்படி?

எல்லா வகுப்புலேயும் சில வால் மாணவர்கள் இருப்பாங்களே.

அதுலேயும் இவர் க்ளாஸ் லீடர் வேற:-)))))