அமிதாப் குரல் மட்டும் ஆரம்பத்துலே வந்து ஏகலைவன் ( ஹிந்தியிலே ஏக்லவ்யா)கதையை ஒரு ச்சின்னப்புள்ளைக்கு( இதுவும் குரல் மட்டுமே) சொல்லுது. கட்டைவிரலைக் காணிக்கையாக்குன்னு சொன்னதும் குழந்தை கேக்குது, 'அதை வெட்டும்போது வலிச்சிருக்காதுல்லே?'
'இல்லை. பயங்கரவலி. எங்கே பார்த்தாலும் ரத்தமு'ன்னு அமிதாப் குரல் சொல்லுது.
நேத்து ஒரு சினிமாவுக்குப் போனேன். இந்திப்படம் . தியேட்டரில். ரொம்ப நாளா இங்கே தியேட்டருக்குப் போகலை. தோழி ஒருத்தர் 'சாயங்காலம் ஒரு எங்கேஜ்மெண்டும் வச்சுக்காதே. உன்னை சினிமாவுக்குக் கொண்டு போறோம்'ன்னுட்டாங்க. சரின்னு கிளம்பியாச்சு. பதிவு எழுத 'அனுபவம்' வாவான்னு கூப்புடுதே!
காஃபி கல்ச்சர்லே ஒரு கப்புச்சீனோ வேற கிடைச்சது. என்னோட சேர்த்து மொத்தம் 5 பேர்.தியேட்டர்லே பயமா இருக்காதா(!!)ன்னு கேட்டப்ப, 'ரங்தே பசந்தி' பார்த்தப்ப நாங்க ரெண்டேபேர்தான்னு சொன்னார் நண்பர் (தோழியின் கணவர்.) ரொம்ப சுவாரசியமான பேர்வழி. இவர்கிட்டேகொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தால் ஆச்சரியமான விஷயங்கள் வந்து விழும். நம்ம இந்திரா நூயி இவரோட பேட்ச் மேட்!
பிடிச்ச நடிகைகளைப் பத்திப் பேச்சு வந்தப்ப 'கரிஷ்மா கபூர்'னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மற்றொரு நண்பர். கலவரமான எங்கள் முகங்களைப் பார்த்ததும், 'முதல்லே எனக்கும் அவ்வளவாப் பிடிக்காதுதான்.ஆனா ஒரு முறை ஏர்ப்போர்ட்லே அவுங்களைப் பார்த்தேன். என்ன ஒரு அழகு தெரியுமா? கேமராதான்அவுங்களை கோரமா(???) காமிக்குது'. (நேரில்)பார்த்த நாள் முதல் பிடிச்சுப் போச்சுன்னார். நல்லவேளை,இப்ப அவுங்க நடிக்கறதில்லைன்னு அவரோட மனைவி மனசு(வயித்து)லே ஃப்ரூட் ஸ்மூதி வார்த்தோம்:-))))
அழகுன்னா மாதுரிதான். இதுக்கு அப்பீலே இல்லை. அவர்மேலே பைத்தியமா இருந்த ஓவியர் எம்.எஃப். ஹுஸைன் எடுத்த 'கஜகாமினி' இலவசமாத் தரேன்னு சொன்னேன். ஓவியரைப் பத்தி ஒரு துணுக்கு. எல்லா நாட்டுக்கும் விஸா எடுத்து வச்சுருப்பாராம். அன்னிக்கு எந்த நாடுன்னு தோணுதோ அதுக்குக் கிளம்பிப் போய்க்கிட்டே இருப்பாராம்! நாமெல்லாம் 'வியர்டு வியர்டு'ன்னு சொல்லிக்கிட்டுக் கிடக்கோம்!
பெரியமனுஷங்களுக்கு இப்படித்தான் எதாவது கிறுக்கு இருக்குமுன்னு சொன்ன தோழியைப் 'புன்முறுவலோடு'பார்த்தேன்:-)))))
காஃபியை முடிச்சுட்டு, மேலே தியேட்டர் வாசலுக்குப் போனோம். இன்னொரு தோழி நின்னுக்கிட்டு இருந்தாங்க. கணக்கு ஆறு! இல்லை....... அவுங்க குடும்பம் சேர்த்தா எட்டாச்சு. ரெண்டு நிமிஷத்துலே நண்பர் ஒருத்தர் மகளும் வந்து சேர்ந்தாங்க. 'படம் ரொம்ப சுமார்தானாம். ச்சின்னப்படம் வேற'ன்னு அவுங்க பங்குக்குச் சொல்லிவச்சாங்க. வெளியிலே இருந்த விளம்பரத்துலே,'அமிதாப்' பேர் இல்லைன்னு மற்றொரு நண்பருக்குக் கவலை!
'ஜிலோ'ன்னு இருந்த தியேட்டருக்குள்ளெ போய் உக்கார்ந்தோம். தலையை எண்ணுனா மொத்தம் 11. ஒவ்வொருமுறையும் வாசக்கதவு திறக்கும்போது ஒரு எதிர்பார்ப்பு. ரெண்டு ரெண்டா ரெண்டு பேர். பதினைஞ்சு பழுதில்லை!
'தாலிஸ்மான்'னு ஒரு ட்ரெயிலர். நம்ம லார்டு ஆஃப் த ரிங்கோட இந்தியன் வர்ஷன் போல இருக்கு. அடுத்து 'முன்னாபாய் மூணு'. நகையும் நட்டுமா சர்க்யூட்டை பெரிய திரையில் பார்த்தப்பப் பளிச். அமெரிக்காவுக்குப் போறாங்க ரெண்டு பேரும்.
இதோ மெயின் படம் போட்டாச்சு. அமிதாப் குரலோடு டைட்டில் ஆரம்பம். ராணி மரணப் படுக்கையில் இருக்காங்க. இளவரசி ராக்கிங் ச்சேர்லே ஆடிக்கிட்டு இருக்கு. ராஜா முழிச்சுக்கிட்டு நிக்கறார். ராணியின் உதடுகள் உச்சரிக்குது,'ஏக்லவ்யா ஏக்லவ்யா'னு. ராஜா, ஷேக்ஸ்பியரோட டயலாக்கைச் சொல்லிக்கிட்டே ராணியின் கழுத்தை அமுக்கிக் காரியத்தை முடிக்கிறார்.
ராணியின் சாவுக்கு, லண்டன்லே இருந்து இளவரசர் வர்றார். இப்படியே முழுக்கதையையும் சொல்லப் போறதில்லை.அப்புறம் குடும்ப கவுரவம், பழிக்குப் பழின்னு கதை போகுது. தர்மம் எது? எப்படின்னு சொல்லிக்கிட்டே போறாங்க.அதை விடுங்க. படம் பார்த்தாக் கதை தெரிஞ்சுட்டுப் போகுது.
முக்கியமாக் குறிப்பிட வேண்டியது அந்த கோட்டை கொத்தளக் காட்சிகள். அடடா......... என்ன அருமையான இடங்கள்.ராஜபுத்திர ராஜ வம்சத்து சாவு சமாச்சாரங்கள், சம்ஸ்காரங்கள் எல்லாம் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடியுது.ஒட்டகக்கூட்டம், ஓடும் ரயிலு( கூட்ஸ் வண்டிதான்)ன்னு ஒரு சீன் அட்டகாசம் போங்க. ஒரே ஒரு பாட்டுதான். அதுவே ஒரு பெரிய ஆறுதல்.இனிமையான தாலாட்டுப்பாடல். மெல்லிய குரல். அருமையான இசை.ஷாந்தனு மொய்த்ராவாம். கலர்க்கலரா உடுப்புப் போட்டுக்கிட்டு ராஜஸ்தான் மக்கள் ஆடுறதுக்கு ஸ்கோப் இருந்தும், அதையெல்லாம் வைக்காததுக்கே ஒரு சபாஷ் போடலாம்! பின்னணி இசையில் முக்கியமாச் சொல்லவேண்டியது அங்கங்கே வந்துபோகும் காயத்ரி மந்திரம்.
யாருமில்லாத அத்துவான மணல்காட்டுலே நீண்டு போகும் ரயில் பாதை மனசை என்னவோ செய்யுது.பெரிய திரையில் பார்க்கும் அனுபவம் தனிதான் இல்லே? போட்டோகிராஃபி அற்புதம். நடராஜன் சுப்ரமணியன்னு டைட்டிலில் பார்த்த நினைவு.
அமிதாப், பொம்மன் இரானி, ஷர்மிளா டாகோர், ஸைஃப் அலிகான், வித்யா பாலன், ஜாக்கி ஷெராஃப், சஞ்சய் தத்,ஜிம்மி ஷெர்கல், ரைமா சென்னுன்னு நட்சத்திரப் பட்டாளம். அமிதாப் தன் வயசுக்கேத்த ரோல் செய்யறது ரொம்பப் பிடிச்சிருக்கு. கொஞ்சமே வந்தாலும் சஞ்சய் தத், சூப்பர். 5000 வருஷமா ஒடுக்கப்பட்ட இனமுன்னு சொல்றப்ப 'சுருக்'
இதுவரை பார்க்காத ராஜஸ்தான் கோட்டைகளுக்கு, நேரில் போகணுமுன்னு ஒரு ஆவல் முளைக்குது. தோழியின் கணவர் படத்துலே வந்த ஒரு கோட்டையைப் பார்த்துருக்காராம்.(ஆச்சரியப்படுத்துவாருன்னு சொன்னேனே!)
வெளியே வரும்போது கவனிச்சேன். எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துருக்கு!
Monday, March 26, 2007
ஏகலைவன்
Posted by துளசி கோபால் at 3/26/2007 12:56:00 PM
Labels: அனுபவம்/நிகழ்வுகள், சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
பரவாய்ல்லையே. எல்லா புது படங்களயும் பாத்திடரீங்க. இந்த வாரம் தான் ரொம்ப நாளைக்கப்பரம் தமிழ் படம் தாமிரபரணி பாத்தேன். பரவாயில்ல. ஹீரோயின் ஓரளவுக்கு நடிக்கறாங்க.
Borat கூட பாத்தேன். ரொம்ப offensive language. Dont watch it if you are easily offensed.
வாங்க ச்சின்ன அம்மிணி.
இங்கே நம்மூர்லே தமிழ்படத்துக்கு ஒரு ச்சின்ன வீடியோ லைப்ரரி வச்சு நடத்திக்கிட்டு இருக்கேன்.
அதனாலே தமிழ்ப்படம் ரெகுலரா வந்துருது. இதுலே வர்ற லாபம் முழுக்க 100% தரும
காரியங்களுக்குப் போகுது.
நம்ம ஹுசைனுக்கு வெளிநாட்டு டிகெட்டுனா...
பாடகர் ஒருவர் பல கலர் பேனாக்களை வைத்திருப்பாராம்.எதுக்கு இவ்வளவு என்றால்? மூடுக்கு தகுந்த மாதிரி உபயோகப்படுத்துவேன் என்பாராம்.அவர் தான் திரு.P.B.ஷ்ரினிவாஸ்.
நமக்கு பிடிச்சது கஜோல்தான். கன்வென்ஷனல் அழகு கிடையாது. ஆனாலும் அழகு. அசாத்திய திறமை. இன்னும் கொஞ்ச நாள் நடிச்சு இருக்கலாம். (மின்சாரக் கனவு தவிர வேற என்ன படம்? ஞாபகத்துக்கு வரலை!)
துளாசி
இது புதுப் படமா? மாதுரி நடிச்ச என்றால் பழசுதான். பழைய படங்களை இப்பவும் இப்பிடி//என்னோட சேர்த்து மொத்தம் 5 பேர்.தியேட்டர்லே பயமா இருக்காதா(!!)// பார்க்க சான்ஸ் கிடைச்சிருக்கா?
நமக்கெல்லாம் இப்பிடி இல்லேன்னு கவலையா இருக்கு!
வருகையைப் பதிவு செய்கிறேன்
வாங்க குமார்.
பல கலர் பேனா- பி பி ஸ்ரீனிவாஸ் இது நான் கேள்விப்படாத துணுக்.
பேசாம 'வியர்டு லிஸ்ட்டு'ப் போடச் சொல்லி இருக்கலாம் அவரை:-)))))
//பெரியமனுஷங்களுக்கு இப்படித்தான் எதாவது கிறுக்கு இருக்குமுன்னு சொன்ன தோழியைப் 'புன்முறுவலோடு'பார்த்தேன்:-)))))\\
யக்கோவ் புரிஞ்சிடுச்சி
கிறுக்குத்தனம் இருந்தா நாமும் பெர்ர்ர்ர்ரிய மனுஷங்க ஆயிட்டம்னு அர்த்தமா
தியேட்டர்ல படம் பாத்தே நாளாச்சு. ஒங்க தம்பி அதாங்க என் பையன்
அட்டகாசம் தாங்க முடியறதில்ல.
அவன் பெரிசாகட்டும் ...பார்க்கலாம்.
ஹ்ம்...
வாங்க கொத்ஸ்.
ராஜு மெச்சிந்தி ரம்பை:-))))
தமிழில் மின்சாரக்கனவு மட்டுந்தான்னு நினைக்கிறேன்.
நேத்து நண்பர்கள் கூட்டத்துலேயும்(!!!) கஜோல் பிடிக்குமுன்னு
சொன்னாங்கதான். கரிஷ்மா பிடிச்சிருக்குன்னு சொன்ன நண்பர்,
முதல்லே சொன்னது யாரைத் தெரியுமா? தீப்தி நாவல், ஷபானா ஆஸ்மி!
உடனே அவரோட மனைவி சொன்னதுதான் டாப்." இது உன் வயசைக் காட்டுது":-))))
செல்லி,
இதானே வேணாங்கறது? :-)))))
பதிவை முழுசாப் படிக்கலையா? இதையும் 'வியர்டு'லே சேத்துறட்டுமா?
புதுப்படமப்பா இது.
மாதுரி இதுலே ஏதப்பா?
வாங்க சிஜி.
ஆஜர் போட்டாச்சு:-)
கண்மணி,
அதே அதே
'பொருள் பதிந்த புன்னகை'ன்னு எழுதி இருக்கலாமோ? :-))))
வாங்க முத்துலெட்சுமி.
இப்படி திடீர்னு உறவை மாத்தலாமா? :-)))))
நம்மாளு, தூங்கணுமுன்னா ஒரு 'ஸ்பெஷல் தலாணி' வேணும். தியேட்டரில்
ஒருதரம் ஜஸ்ட் ஒரே ஒருதரம் போயிட்டு, தூக்கம் வந்துட்டு தலாணி தலாணின்னு
கதற ஆரம்பிச்சதுலே வூட்டுக்கு ஓடிவந்த வீரம(ர)றபு நம்மது:-))))
காலங்காத்தால அவசரமா பின்னூட்டம்
போட்டதில் குழம்பிட்டேன் போல
உங்க தம்பி இல்ல அண்ணன் தான்.
அட வயசுல என்ன கணக்கா இருக்கீங்கப்பா.
பெரியமனுஷங்களுக்கு இப்படித்தான் எதாவது கிறுக்கு இருக்குமுன்னு சொன்ன தோழியைப் 'புன்முறுவலோடு'பார்த்தேன்:-)))))
இதல்லவோ மெயின் பாயிண்ட் துளசி.
எப்படியோ இந்தப் படம் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.
எங்க பெரியவனுக்கு 'ஸ்ப்ரிங் ப்ரேக்'.வீட்டில சர்வசகலமும் மாறிக் கிடக்கு,.அவனை வச்சுகிட்டு வேற எதுவும் பார்க்க முடியாது.;-(
பாத்துட்டீங்களா ?
வித்தியாசமான படம். 2 மணி நேரம்தான்
அமிதாப் பச்சன், வித்யா பாலன், சஞ்சய் தத் மூணு பேருமே நல்லா நடிச்சிருக்காங்க.
தியேட்டர்ல ஓடுமா ன்னு தெரியல.
டீச்சர்,
படம் பார்க்கலாமா, வேண்டாமா?
சன் தொ(ல்)லைகாட்சி மாதிரி ஒரு வார்த்தைல சொன்னா நல்லா இருக்கும்.
முத்துலெக்ஷ்மி
டீச்சர் வந்து உங்க பையன் அக்காவா? அப்போ உங்களை நானெல்லாம் என்ன கூப்பிடணும்? முத்துலெக்ஷ்மி பாட்டியா?
ஐயாம் தி கன்பியூஷன்.
ஆஹா இப்போத்தான் உங்க பதிலைப் பார்த்தேன். தம்பி இல்லை அண்ணனா? சரிதான் அப்போ உங்க உறவு கன்பர்ம்ட் பாட்டி!!
//ராஜு மெச்சிந்தி ரம்பை:-))))//
டீச்சர் என்ன சொல்லறீங்க? ஏற்கனவே ஒரு கொல்ட்டித் தொல்லை தாங்கலை.
//முதல்லே சொன்னது யாரைத் தெரியுமா? தீப்தி நாவல், ஷபானா ஆஸ்மி!//
தீப்தி நாவலா? அது யார் எழுதினது? தமிழில் யாராவது மொழி பெயர்த்திருக்காங்களா?
ஷபானா ஆஸ்க்மியா? அவங்க என்ன விக்கி பசங்களுக்குப் போட்டியா? என்னது ஆஸ்க்மி இல்லை ஆஸ்மியா? என்னவோ போங்க.
முத்துலெட்சுமி,
கொத்தனார் கொ(கு)திச்சுக்கிட்டு இருக்கார் பாருங்க.
வல்லி வாங்கப்பா.
ஸ்ப்ரிங் ப்ரேக்? ஹை !!!அப்ப ஸ்நோ எல்லாம் போயிருச்சா?
போயே போயிந்தி! இட்ஸ் கான்!!
வாங்க ஜெயஸ்ரீ.
தியேட்டர்லே படம் போட்டவங்களுக்குக் கட்டுபடி ஆகாது(-:
நானும் இங்கே 3 படம் போட்டுக் கையை......
மட்டுமில்லே பூரா உடம்பையும் சுட்டுக்கிட்டேன் முந்தி!
வாங்க தென்றலே.
படம் ஒருக்காப்(??) பார்க்கலாம் அந்த ஒட்டகக்கூட்டம் ஓடறது அட்டகாசம்!
எனக்குக் கிடைச்சமாதிரி ஓசி டிக்கெட்டுன்னா இன்னும் அருமை:-)
கொத்ஸ்,
பொறுங்க மக்கா.
இப்பத்தான் குடும்பமரம் வரைஞ்சுக்கிட்டு இருக்கோம்:-))))
அது தெலுங்குன்றதும் புரிஞ்சுருச்சா? :-))))
ஷபானா, தீப்தி எல்லாம் ஹிஸ்டரியிலே போயாச்சுப்பா. அந்த
சப்ஜெக்ட்டு வரும்போது விளக்கறேன்.
Post a Comment