Friday, March 09, 2007

சிவகாமியும் பல்லவனும்.
நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 3)

கைலாச நாதர்


கோபால் இதுவரை காஞ்சீபுரம் போனதே இல்லையாம்! அதுலேயும் வலை உலக நண்பர் ஒருவரைச் சந்திச்சுட்டு வரும்போது கட்டாயம் போகணுமுன்னு சொல்லிக்கிட்டே வந்தார். நானும்தான் 'காஞ்சீபுரத்துலேயே போய் புடவை ஒண்ணுக்கூட வாங்குனதில்லை'. கட்டாயம் போகணுமுன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன்:-)மறுநாள் காலங்கார்த்தாலே எட்டரைக்குப் புறப்பட்டாச்சு. வழியெல்லாம் நல்லாவே இருந்துச்சு. ஒரு திருப்பத்துலே ஒத்தைக்கண்ணு அரக்கன் மாதிரி காற்றாலை ஒண்ணு எழும்பி நிக்குது. காற்றாலை பிஸினெஸ் ரொம்பநல்லாப் போகுதுன்னு பேச்சுவாக்குலெ தெரிஞ்சது. வழியெல்லாம் அடிக்கொண்ணுன்னு கல்வி நிலையங்கள்.எல்லாம் புதுசுபுதுசா முளைச்சிருக்கற காலெஜ்களாம். பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் மாணவமாணவியரின் கூட்டங்கள். எப்ப பஸ் கிடைச்சு எப்பப் போய்ச் சேருவாங்கன்னு தெரியலை.ஹூண்டாய் கம்பெனி டெலிவரி வண்டிகள் அகலமான சாலையின் ரெண்டு பக்கமும் வரிசைகட்டி நிக்குதுங்க. காஞ்சீபுரம் ரெயில்வே நிலையத்தைத் தாண்டி ஊருக்குள்ளெ வந்துட்டோம். பத்தரை மணியாயிருச்சு. முதல்லே நேராப் போனது காமாட்சி அம்மன் கோவிலுக்கு. பராமரிப்பு என்னவோ நடந்துக்கிட்டு இருக்கு. ஆனாலும் கொஞ்சம் பாழடைஞ்சு நிக்குதோன்னு ஒரு சம்சயம்.யானைக் கொட்டடியில் மூணு யானைகள். குளிச்சு முழுகி அலங்காரம் பண்ணிக்கிட்டு சாவகாசமா ஆடி ஆடி நிக்கறாங்க.அம்மன் சன்னிதியில் மேல்மருவத்தூர் பக்தைகளின் கூட்டம் சிகப்புப் புடவைகளோடு! நானும் ஒரு மெரூன் கலர்லேஇருந்ததாலே ரொம்ப சுலபமா கூட்டத்தோடு கலந்துட்டேன்:-)


'நகரேஷூ காஞ்சி'ன்னு புகழ்பெற்ற ஊர். காஞ்சீபுரத்தில் தடுக்கி விழுந்தால் எதாவது கோயில் வாசலில்தான் விழணும். நானும் இங்கே வந்து பனிரெண்டரை வருஷத்துக்குமேல் ஆச்சு. ஏறக்குறைய ஊரையே மறந்துட்டேன். அதாலேட்ரைவர் கிட்டேயே பொறுப்பை ஒப்படைச்சாச்சு. அவருக்கோ 'பனிரெண்டு மணிக்குக் கோவில்களை மூடிருவாங்க. அதுக்கு முன்னே சீக்கிரமா எத்தனை இடத்தைக் காமிக்க முடியுமோ அத்தனை'ன்னு ஒரு எண்ணம்.


கச்சபேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர்ன்னு ஓடுனோம்.ஏகாம்பரேஸ்வரர் கோவில் வாசலில் 'ராஜா'வைப் பார்த்தேன். நான் வந்துருவேன், எங்கேயும் போயிராதீங்கன்னு சொல்லிட்டுக் கோயில் உள்ளே போனேன்.(அவரைப்பற்றி அப்புறம் ஒருநாள் சொல்றேன்.) என்ன மாதிரி கோயில்? அடடா.........நின்னு நிதானமாப் பார்க்க ஒரு நாளையே ஒதுக்கலாம். அகலமான காரிடார். அசப்புலே நம்ம ராமேஸ்வரத்துலே பார்த்தது போலவே இருக்கு. என்ன உழைப்பு. ஒவ்வொரு தூணிலும் ஏகப்பட்ட வேலைப்பாடுகள். காற்றோட்டத்துக்கு மேலே கருங்கல்லில் பலகணி. ச்சும்மாச் சொல்லக்கூடாது.....................பார்த்துப் பார்த்துதான் கட்டி இருக்காங்க.


வெள்ளைக்கார டூரிஸ்ட்டுகளின் கூட்டம் நிறைய இருந்துச்சு. குருக்களும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தின்னு ஆளுக்கேத்த மாதிரி வெளுத்துக் கட்டிக்கிட்டு இருந்தாங்க.உலகளந்தானைப் பார்த்ததும் கோயிலை மூடிட்டாங்க. மகாபலியின் தலையில் ஒரு காலும், விண்ணை அளக்கும் மற்றொரு காலுமா இருந்தார். அவருடைய இடுப்பு ஆடை............... ஹைய்யோ..... மடிப்புமடிப்பா பார்க்கவேபரவசமா இருந்துச்சு. அநேகமா நம்ம மக்கள் பார்த்திருக்கக் கூடிய கோவில்கள் இதெல்லாம் என்றதாலே ரொம்ப விவரிப்பு இல்லாமக் கடந்து போயிடறேனே.முந்தி நான் வந்தப்ப இல்லாத ஒரு வசதி இப்ப இங்கே இருக்கு. சுற்றுலாக்காரர்களுக்குத் தேவைப்பட்ட ஒருமுக்கியமான விஷயம். அது நம்ம சரவணபவன். சாப்பாடு வசதி மற்ற சரவணபவன்களைப் போல்தான்னுசொன்னாலும், இங்கே டாய்லெட் வசதி அருமையாச் செஞ்சிருந்தாங்க.சாப்பாடு ஆனதும் இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கே கோயில்கள் மறுபடி திறக்க, என்ன செய்யலாமுன்னு யோசிச்சு (!!) 'பட்'ன்னு ஒரு முடிவுக்கு வந்தோம்(??) புடவைக் கடைகளைப் பார்வையிடலாமே! ஸ்ரீ விநாயகா சில்க்ஸ்,டி.கே. நம்பித் தெரு.நம்பலாம் போல இருக்கே! பெயர் ஓக்கே. நம்பிக் கடைக்குள்ளே நுழைஞ்சோம். தரையெல்லாம் பாய் விரிச்சு பரத்தி இருக்கு. சுத்திவரச் சுவர் முழுசும் அடுக்கடுக்காப் புடவைகள். நிறைய இளம் பெண்கள் வேலை செய்யறாங்க. சம்பிரதாயமாப் பாயிலே உக்காரணும். ஐய்யோ என் கால்.............. 'காலுக்கு ஆசை புடவைக்கும் ஆசை'


ஒரே ஒரு புடவைதாங்க வேணுமுன்னுக் கடைக்காரர்கிட்டே கறாராச் சொல்றார் கோபால்.( முன் ஜாக்கிரதை முத்தண்ணா!)அதையெல்லாம் காதுலேயே போட்டுக்கலை நான்! பரபரன்னு புடவைகள் அலமாரியிலே இருந்து தரைக்கு இறங்குது.வேண்டாம் வேண்டாமுன்னு கதறக்கதறப் புடவைகளைப் பிரிச்சுப்போட்டுக்கிட்டே இருக்கார். அதே வேகத்தை,அந்தப் பொண்ணுங்க பிரிச்சதைத் திரும்ப மடிக்கறதுலே காட்டுறாங்க. சபாஷ்.......சரியான போட்டி!!!!'மகளுக்கு மட்டும் ஒரு புடவை வாங்குனாப் போதுமில்லே?'ன்னு கேட்டார். போதுமே! அதுக்கு என்னோட அளவுலே ஒரு ப்ளவுஸ் தச்சுக்கிட்டாப் போச்சு:-) அதுக்கப்புறம் கிஃப்ட் கொடுக்கன்னு கொஞ்சம் விலை குறைஞ்ச(??) புடவைகளைப் பாருங்கன்னு அது ஒரு மழையா தரையில் இறங்குச்சு. இங்கே நியூஸியில் இருக்கும் ஒரு தோழிக்கு ஒண்ணு வாங்கலாமுன்னு அதுலே ரெண்டு கலர்லே ரெண்டு ( பின்னே எனக்கொண்ணு இருந்தாத்தானே நாங்க தோழிகள் ரெண்டுபேரும் ஒரே மாதிரிக்கட்டிக்க முடியும்?) வாங்கினோம். அங்கே மாடியில் பட்டு நெசவு செய்யும் தறி வச்சிருக்கோமுன்னு சொல்லிக் கொண்டுபோய்க் காமிச்சார் கடைக்காரர்.இவ்வளவு நடந்தும் மணி இன்னும் மூணு கூட ஆகலை. அடுத்த கடை? வம்பு வேணாமுன்னு நேராக் கைலாசநாதர் கோயிலுக்கு வந்தோம். ஒரு முப்பத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னே இங்கே வந்துருக்கேன். சுதையாலே செஞ்சகோயில்ன்னு தோழி( காஞ்சீபுரத்துக்காரி) சொன்னாள். அழுக்கு வெள்ளை நிறத்தில் பார்த்த நினைவு. இங்கே கருவறையைச் சுற்றி வர ஒரு ச்சின்ன வழி இருக்கு. இந்தப் பக்கம் ரெண்டு படி மேல் ஏறி அந்தப் பக்கம் இறங்கி வலம் வந்தால் வெளி வரும் வழி முழுசும் அடைபட்டுத் தரையோடு ஒரு பொந்து மாதிரி இருக்கும். எலி வளை மாதிரி கொஞ்சம் பெரிய அளவு. அதில் தவழ்ந்துவெளியே வரணும். அப்படி வந்தவங்களுக்கு அடுத்த பிறவி என்பதே இல்லையாம். ரொம்ப ஒல்லியாக இருந்தக் காலக்கட்டம். நிமிஷமா வலம் வந்து வெளியேயும் வந்தாச்சு,அப்ப!


சுதையின் நிறம் இல்லாமல் இப்பப் பழுப்பு 'சேண்ட் ஸ்டோன்' கலரில் இருக்கு கோவில். மத்திய அரசின் தொல்பொருள் இலாகாவின் மேற்பார்வையில் வந்திருச்சாம் கோவில். ஏழாம் நூற்றாண்டுக் கடைசியில் கட்ட ஆரம்பிச்சு எட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிக்கப்பட்டதாம். ராஜசிம்ஹ பல்லவன் ஆரம்பிச்சதை,அவர் மகன் மகேந்திர பல்லவன் முடிச்சு வச்சிருக்கார்.


இன்னும் ஒரு மணி நேரம் இருக்கேன்னு நின்னு நிதானமாச் சுத்திப் பார்த்தோம். ச்செல்லம்போல யாழிகள் வரிசைகட்டி நிக்குது. குட்டிகுட்டியா மாடங்கள்,ஒரு ஆள் உட்காரக்கூடிய அளவில் ஒரே பக்கம் பார்த்த மாதிரி . கிழக்குன்னா எல்லாம் கிழக்கேதான். அதுக்குள்ளெ இருந்து தியானம் செய்வாங்க போல. அதிலும் கண்ணைமூட விருப்பம் இல்லாத சிலர் ஓவியம் வரைஞ்சு தள்ளி இருக்காங்க. இததனை வருஷங்களுக்குப் பிறகும் அழியாத வர்ணங்கள். அஜாந்தா ஓவியங்களில் பயன்படுத்திய வகை வர்ணமோ? இறைவனும் இறைவியும் ஆற அமர உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கறது மாதிரியான சிற்பங்கள் எக்கச்சக்கமா இருக்கு. ரிலாக்ஸ் டைம்:-)


தூங்கும் யாழி சிற்பம் பார்க்கும்போது எனக்கு 'கோபால கிருஷ்ணன்' நினைவு வந்து ஒரு நிமிஷம் சோகமானேன்.எல்லாம் பிரிவுத்துயர் தான்.


இங்கே வந்தது முதல் சிவகாமி,ஆயன சிற்பி, சுகபிரம்ம ரிஷி, மாமல்லன்ன்னு நினைவுகள் ஓடி வர்றதைத் தடுக்க முடியலை. எதுக்குத் தடுக்கணும்? அது பாட்டுக்கு இருந்துட்டுப் போட்டும். ஆமா........ இந்த ஊருக்கும் மாமல்லபுரத்துக்கும் எவ்வளவு தூரம்?னு திடீர்னு கோபாலைக் கேட்டேன். எதுக்குன்னு புரியாத நிலையில் 'ஒரு 60 கிலோ மீட்டர்இருக்கலாமுன்னு' சொன்னார்."குதிரை, மணிக்கு 15 கிலோ மீட்டர்ன்னு போனாலும் 4 மணி நேரம் ஆயிருமே. தினம்தினம் போய்வர்றது சாத்தியமா?"


" எதுக்குக் குதிரை மேலே போகணும்? கார்லே போகலாமே" சொன்னது கோபால். அவருக்கு சிவகாமியின் சபதத்தைக் கோடி காமிச்சு மாமல்லன் தினம் சந்திக்கப் போனதையும் எடுத்துவிட்டேன்.


" ஓ..அப்படியா? அப்ப இங்கெல்லாம் காடுகளாத்தானெ இருந்திருக்கும். குறுக்காலே போனா அவ்வளவு தூரம் இருக்காது"கதை விடறார். என்னதான் கல்கியின் கதை கற்பனைன்னு தெரிஞ்சாலும், அப்ப அது மனசுலே ஏற்படுத்திய தாக்கத்தையும்,எத்தனையோ வருஷங்கள் ஆனபிறகும் இப்படி ஓரமா நின்னு நம்மை ஆட்டி வைக்கறதையும் பார்க்கறப்ப, எழுத்துன்னா இது எழுத்து. நாமும் எழுதறோமேன்னு ஒரு குற்றவுணர்ச்சியும் முளைச்சது..... முளையில் கிள்ளி எறிஞ்சேன்.எல்லோரும் கல்கியா ஆக முடியுமா?


முன்னால் ஒரு கல்மண்டபம். தூண்களால் நிறைஞ்சிருக்கு. தூண்களில் எல்லாம் கல்வெட்டுக்கள் போல எழுத்துக்கள்.முழிச்சுப் பார்த்தா தமிழ் எழுத்துக்களாத்தான் இருக்கு. ஆனாலும் படிக்கத் தெரியலை(-: இந்தக்கோயிலுக்கு சட்ன்னு டூரிஸ்டுகள் ரொம்ப வர்றதில்லை போல இருக்கு. அங்கே கோயிலைப் பார்த்துக்கொள்ள இருக்கும் அரசாங்க ஊழியர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அவர்தான் எங்களிடம் விளக்கங்கள் சொல்லிச் சுத்திக் காமிச்சார். மழைத்தண்ணி வெளியேற அருமையான திட்டம் போட்டுக் கட்டி இருக்காங்க அந்தக் காலத்துலேயே. பார்க்கப்பார்க்கப் பிரமிப்புதான்!நாலரைக்குத்தான் கோயில் பூஜைக்காக குருக்கள் வருவாராம். இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு.


அப்ப ஒரு வெள்ளைக்கார ஆணும் பெண்ணும் வந்தாங்க. இத்தாலியர்களாம். அவுங்ககிட்டே நமக்குத் தெரிஞ்ச கோவில் சரித்திரத்தை அளந்து விட்டோம். அப்ப அங்கே திடீர்ன்னு நாலைஞ்சு சுகப்பிரம்மங்கள் பறந்து வந்தாங்க. அடடா.....என்ன அழகு. க்கீ க்கீன்னு சத்தம். கோயில் மண்டபத்தின் மேலே இருக்கும் ச்சின்னத்துளைகளில் நுழைஞ்சு போறதும் வர்றதுமாக் கொஞ்சநேரம் போச்சு. 'முதல்லே இதுகளை விரட்டணும். இல்லாட்டா இந்தக் கட்டிடத்தை துளையிட்டேஅழிச்சிருமு'ன்னு இத்தாலியம்மா திருவாய் மலர்ந்தாங்க. அவுங்க சொல்றதுலெ ஒரு பக்கம் நியாயமுன்னு இருந்தாலும்,அதுங்க எங்கே போகும்? சிவகாமியின் தோளில் உக்கார்ந்து மாமல்லன் பெயரைக் கொஞ்சும் மொழியில் சொன்னவரின் வாரிசுகளாச்சே!


கோயில் திறந்ததும் நாங்கள்( மட்டும்) உள்ளே போனோம். பெரிய சிவன், லிங்க ரூபத்தில். தீபாராதனை முடிஞ்சதும்,கோபாலை ' மறுபிறவியில் இருந்து தப்பணுமுன்னா இதுலே போங்க'ன்னு சொன்னேன். அவரும் போய் வந்தார். 'நீபோகலையா?'ன்னு கேட்டார். அதெல்லாம் முப்பத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னேயே போய் வந்தாச்சுன்னேன். இப்பஇருக்கற சைஸுலே வெளியே தவழ முடியாம அட்டாக் ஆகிப்போச்சுன்னா? :-))))


அங்கிருந்து கிளம்பி வரதராஜனைப் பார்க்கப்போனோம். அங்கே இருக்கும் தங்கவெள்ளிப் பல்லிகளைத் தொடணும்.அதுக்கு ஒரு ரூபா டிக்கெட். 'மூடப்போறாங்க, சீக்கிரம் போங்க'ன்னு விரட்டிக்கிட்டு இருந்தாங்க. பெருமாள்ஆஜானுபாகாக நிக்கிறார். ஜனங்கள் பல்லி மூடப் போறாங்களாமேன்னு துடிக்குதுங்க. பட்டருக்கு சிரிப்புப் பொங்குது.பெருமாளை விட்டுட்டு பல்லி பல்லின்னு பல்லிக்கு வந்த மவுஸைப் பார்த்தீங்களான்றார்:-))))


நாங்களும் பல்லியைத் தொட்டுத் தடவிட்டு வந்தோம். பல்லி விழுந்த தோஷம் போகுமாம். இங்கே நியூஸியிலே ஏது பல்லி?


படி இறங்கி வரும்போது, எதிரில் வந்த வடநாட்டுக் கும்பல்,'ச்சிப்கொலி கஹாங்?'ன்னது. 'இதரி ஹை. ஜால்தி ஜானா. வர்ணாபந்த் ஹோஜாயேகா'ன்னு என் பங்குக்குச் சொல்லி விரட்டிட்டு வந்தேன்.


பெரிய கோயில். இன்னும் வளமா வைக்கலாம். பெருமூச்சோட வெளியே வரும்போது......... வாசலில் இருந்த கடையில் செம்பருத்திப் பிள்ளையார் ஒண்ணு ( நம்ம கலெக்ஷனுக்கு) வாங்கி வந்தேன்.


தொடரும்............


இது துளசிதளத்தில் 500வது பதிவு. ஆதரவாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

117 comments:

said...

//இது துளசிதளத்தில் 500வது பதிவு. //

டீச்சர், யப்பா!!!!!!!

வாழ்த்த பதிவில்லை வணங்குகிறோம். இது போக மத்த எடத்துல எழுதினதா?!!! பொளந்த வாயை மூடவே முடியலைங்க!! ::))))))

said...

வாங்க கொத்ஸ்.

க்ளாஸ் லீடர்ன்ற வகையில் நீங்க சொன்னா வகுப்பே சொன்ன மாதிரி:-))))

//வாழ்த்த பதிவில்லை//

ஏன்? ஏன்?ஏன்?

பதிவு ஏன் இல்லாமப்போச்சு?:-))))))))))))))))

said...

500 வது பதிவா?
சரியா எண்ணிப் பாருங்க. 501 வருது..
சரி வாழ்த்துக்கொத்தைப் பிடிங்க

said...

துளசிக்கா

வாழ்த்த பதிவில்லை! வணங்குகிறோம்!

500 வது பதிவு கொண்டாட இந்தியாவுல இருந்து வாங்கிட்டு வந்த இலந்தவடைய பிரிச்சி நீங்களே சாப்டுக்கங்க!ஹிஹி

said...

டீச்சர், நான் சரியாச் சொல்லலை போல இருக்கு. வாழ்த்தும் அளவிற்கு நான் பதிவு போடலை அதனால நானும் இந்த அளவு வரணும் அப்படின்னு வணங்கிக்கறேன். இன்னிக்குத்தானே மகளிர் அனைவருக்கும் சேர்த்து வாழ்த்துச் சொல்லி பதிவு போட்டு இருக்கேன். :)

said...

ஒரு ஐம்பது ஐநூறை வாய் பிளந்து பார்க்கிறது. வாழ்த்த வாய் வர வைல்லை. வணங்க கை வருகிறது.

அந்த ஊரையும் அதில் வாழ்ந்த சிலரையும் கல்கி நமகுள்ளே தள்ளிவிட்டிருக்கிறார். நிரந்தரமாய்.

ஒரு கல்லுளியின் ஒலி ஆயனரையும்
ஒரு தாளக்கட்டான ஒலி சிவகாமியையும்
ஒரு குதிரைக் குளம்பொலி பரஞ்சோதியையும்
ஒரு நம்பியார் இருக்கும் சுவரொட்டி நாகநந்தியையும்
ஒரு சிவாஜி இருக்கும் சுவரொட்டி மஹேந்திரனையும்
(உங்களுக்காக)
ஒரு கிளியின் கிறீச்சொலி சுகப்பிரமனையும்
நினைவு படுத்தும் ஊர்.

ஒரு உலகப் பலகலைக்கழகத்தைக் கொண்டிருந்த 'நகரேஷு காஞ்சி'.

குதிரைகள் மணிக்கு முப்பதிலிருந்து நாற்பது கிமீ வரை செல்ல முடியும் என்பது யூகம். விக்கிகள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா?

said...

எப்படித்தான் அலுக்காம சலிக்காம எழுதறீங்களோ:)) பாராட்டுக்கள் துளசி

said...

வாவ், (நான்) பிறந்து வளர்ந்த ஊரைப்பற்றி படிப்பதில் ஒரு அலாதி சுகம்!
கரும்பும் கொடுத்து தின்னக் கூலியிம் கையில் கொடுத்தாற்போல இருந்தது!

500 பதிவுதானா இதுவரை, 5000 பதிவுகள் வந்திருக்கும் என்று நினைத்தேனே!

said...

500 பதிவுகளை கொடுத்து எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி.
பதிவைப்பற்றி
வேண்டாம் வேண்டாமுன்னு கதறக்கதறப்
என்ன ஆடா? :-))
இது எழுத்து. நாமும் எழுதறோமேன்னு ஒரு குற்றவுணர்ச்சியும் முளைச்சது...
இப்படி நீங்களே சொன்ன!! நாங்கள் எல்லாம் என்னத்த சொல்கிறது??

said...

மிக சுவையான பதிவு!

எத்தனை எழுதினாலும், இன்னும் திருப்தி வராமல் இருக்கும் உங்களின் இந்த மனப்பான்மைதான் இன்னும் உங்களை எழுதவைக்கிறது!

எதிலுமே பார்க்க வேண்டியதையும் தவிர்த்து[!!] மற்றதையும் பார்க்கும் உங்கள் சிந்தனை வியக்க வைக்கிறது!

வாழ்த்துகள்!

said...

டீச்சர்,

இந்தப் பதிவை பாருங்க. உங்க 500ஆவது பதிவு ஸ்பெஷல்!!

said...

வாங்க சிஜி.

பெரியவர்,நீங்க வாழ்த்தியது மனசுக்கு நிறைவா இருக்கு. அதென்ன.....
பூங்கொத்துலே தாமரை இல்லை?

said...

பெருசு,

வாங்க. இலந்த வடையெல்லாம் நாய் பிடிச்சுரப் போகுதுன்னு ப்ளைட் விட்டு இறங்குறதுக்கு
முன்னாலேயே தின்னு தீர்த்துடறது இப்பெல்லாம் வழக்கமாப்போச்சு:-)

said...

வாங்க ஓகையாரே.
'ஒரு' கவிதையாவே பின்னூட்டிட்டீங்க:-)
நன்றிங்க.

ஏம்ப்பா.விக்கிப் பசங்களா......... என்னமோ கேக்குறாரு பாருங்க, குதிரையின்
வேகம்? பதில் சொல்லுங்கப்பா.

said...

வாங்க பத்மா.

//எப்படித்தான் அலுக்காம சலிக்காம எழுதறீங்களோ:))//

படிக்கறவங்களுக்கு அலுத்துப் போகுதான்றதுதான் கவனிக்கணும் பத்மா.

எழுதறவ(னு)ளுக்கு என்ன? எழுதுனவ(ன்)ள் ஏட்டைக் கெடுத்தா(ன்)ள், பாடுனவ(ன்)ள்
பாட்டைக் கெடுத்தா(ன்)ள்னு பழமொழி வேற எப்படி வந்திருக்கும்?:-)))))

said...

வாங்க ஜீவா.

நீங்களும் காஞ்சியாளு தானா? எதாவது விட்டுப்போச்சான்னு சொல்லலாமுல்லே?

said...

வாங்க குமார்.

//வேண்டாம் வேண்டாமுன்னு கதறக்கதறப் ...//

ஆமாங்க. அந்தக் கலர் வேணாமுன்னு சொல்லச் சொல்ல கேக்கற 'பாவமே' இல்லைங்க அங்கெ:-))))

இன்னும் நல்லா எழுதணுங்கற 'பயம்' வந்துருச்சுங்க.

said...

வாழ்த்துக்கள் துளசி

said...

வாங்க SK.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க. இந்த வாழ்க்கையை முழுசுமா வாழ்ந்து பார்த்துறணுமுன்னு கண்ணையும் காதையும்
திறந்து வச்சுக்கிட்டு இருக்கேன். அதான் பார்க்குறதெல்லாம் மனசுலெ பதிஞ்சுருது.

said...

கொத்ஸ்,

எனக்கு..........இப்படி ஒரு மாணவரா?
அப்படியே புல்லரிச்சுக் கிடக்கேன்.

நன்றிப்பா நன்றி.

said...

வாங்க மாதங்கி.

'நீங்களா நம்ம வீட்டுலே'ன்னு வாயடைச்சுப்போச்சு!!

நன்றிங்க.

said...

அன்பு துளசியக்கா,
ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

இன்னும் அதிகமாக எழுதுங்கள்..

அன்புடன்
சீமாச்சு

said...

வாங்க சீமாச்சு.

பிறந்த வீட்டு சீதனமா? :-)))))

நன்றிப்பா.

said...

வாழ்த்துக்கள் துளசி.

படிச்சிகிட்டே வரும்போது யோசித்தேன் எப்படி கைலாச நாதர் கோயிலில் உள்ள போய் வெளிய வந்துன்னு எங்க அம்மா போனதும் என் மகள் ஆச்சி பாத்து வந்துடுவீங்களான்னு கேட்டு பயப்பட்டது நியாபகம் வந்துடுச்சு.நல்லவேளை .நாங்களும் ஓடி மூடப்போற நேரம் தான் பல்லி பார்த்தோம். அப்புறம் தான் சாமி. என்னபண்ண சாமி வெய்ட் பண்ணார் . பல்லி வெய்ட் பண்ணலயே.

said...

சாதனைக்கு கரம் கூப்பி வணங்குகிறேன்.
வாழ்த்துக்கள்.

சென்ஷி

said...

ஐந்நூறு பதிவா .. அப்டின்னு சொல்லில் சொல்லி மாளலை. மண்டபத்தில நின்னு தனியா புலம்ப்றது மாதிரி ஆயிருச்சிங்க .. நிச்சயமா எட்டாத உசரம்தாங்க ..

(ரொம்பவே) அண்ணாந்து வாழ்த்துகிறேன். வளர்க ...

said...

இலவச கொத்தனார் சொன்னா மாதிரி கூடிய விரைவில் ஆயிரம் பதிவெழுதிய அபூர்வ சிந்தாமணியாக அடியாளின் வாழ்த்துக்கள். இங்க நிறைய பேர் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்னு சொல்லியிருக்க நான் மட்டும் தடாலடியா வாழ்த்தறேனேன்னு பார்க்கறீங்களா? ஆங்கிலத்தில் விஷ், ப்ளசிங்க்ஸ் இந்த இரண்டு வார்த்தைக்கும் எனக்கு தெரிஞ்ச வரை தமிழ்ல வாழ்த்து ஒன்னுதான் மொழிபெயர்ப்புன்னு நினைக்கறேன். ஆகையினால் என்னுடைய வாழ்த்து - விஷ் அப்படின்னு பொருள்படற வாழ்த்து. உங்க எழுத்தை பத்தி சொல்லணும்னா கொத்தனார் மாதிரி ஒரு தனிப்பதிவே எழுதணும். இயலாமைனால இப்போதைக்கு இந்த சின்ன பின்னூட்டம் மட்டும்.

said...

ஐஐஐஐஐஐஐ..... நூறா!!!!!!! அம்மாடீஈஈஈஈ.....

வாழ்த்துக்கள் துளசிக்கா.. இன்னும் நிறைய பதிவு போட்டு துளசிதளமும் நீங்களும் நீடூழிவாழ என் வேண்டுதல்கள்..

(காஞ்சிபுரம் ஆனை படங்கள் போட்டிருக்கக் கூடாதா? :) )

said...

வாழ்த்துகள் டீச்சர். ஐ நூறு என்று பாராட்டிச் சில காலமே ஆகியிருந்தும் ஐநூறு வந்தமைக்கு வாழ்த்துகள். ஐ ஆயிரம் என்று வாழ்த்திச் சில பொழுதிலேயே அது ஐயாயிரமாகக் கூட விருப்பங்கள்.

காஞ்சின்னு சொன்னா நினைவுக்கு வர்ர சில பாட்டுகள்
1. காஞ்சிப் பட்டுடுத்திக் கஸ்தூரிப் பொட்டு வைத்து
2. காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
3. நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று

காஞ்சிபுரத்துல கச்சியப்பர் கந்தபுராணம் எழுதுன கோயிலுக்குப் போனீங்களா?

பெருமாளை விடப் பல்லிக்குப் பெருமை....ம்ம்ம்..இதாங்க நடக்குது. கடவுள விட மத்ததுகளுக்குப் பெருமை.

சிவகாமி, ஆயனர் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள்தான். ஆனால் நம்ம மனசுல எப்படிப் பதிஞ்சு போயிருக்காங்க பாத்தீங்களா. ஒரு ராமராஜன் படத்துல நம்பியாரு சிற்பியா வருவாரு. படம் பேரு நினைவில்லை. அதுல ஒரு பழைய கோயிலைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். அந்தக் கோயில் சிற்பங்களைப் பாத்ததும் அவரு சொல்வாரு...ஆகா...எல்லாம் ஆயனச் சிற்பி வடிச்சது. சிவகாமியை வைச்சு வடிச்சதுன்னு. :-)

said...

வாழ்த்துக்கள்

said...

/"பூங்கொத்திலே தாமரை இல்லை.."/

இப்போ கை காலம்;சூரிய நேரம்
தாமரை மலரல்லே.....

said...

//ஆங்கிலத்தில் விஷ், ப்ளசிங்க்ஸ் இந்த இரண்டு வார்த்தைக்கும் எனக்கு தெரிஞ்ச வரை தமிழ்ல வாழ்த்து ஒன்னுதான் மொழிபெயர்ப்புன்னு நினைக்கறேன்.//

உடனே ஞாபகத்துக்கு வந்தது நமஸ்காரம், ஆசீர்வாதம் என்ற வார்த்தைகள்தான். அதை அப்படியே சொன்னால் குமரன் 'கோவி'ச்சுக்குவாரேன்னு கொஞ்சம் யோசிச்சதில் கிடைத்த சொற்கள் - வணக்கங்கள் மற்றும் ஆசிகள்.

நம்ம அரசியல்வாதிகளும், அவர்களது அடிப்பொடிகளும் அடிக்கும் கூத்தில் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்ற சொல்லாடல் நமக்குப் பழகிப் போச்சு இல்லையா? அங்க பாருங்க வெறும் விஷ் என்பது கூட கொஞ்சம் அழகா சிறியோர் பெரியோரை வணங்க வேண்டும். பெரியோர் சிறியோரை வாழ்த்த வேண்டும் என வருகிறது.

சரிதானே? ரொம்ப சொல் ஒரு சொல் படிச்சிட்டேன்னு நினைக்கிறேன். :)))

said...

வாங்க முத்துலெட்சுமி.

சுடரைக் கைமாத்துன கையோடு வாழ்த்துச் சொல்லி இருக்கீங்க.
ரொம்ப சந்தோஷமா இருக்கு.

said...

வாங்க சென்ஷி.
என்னங்க 'சாதனை'ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டீங்க?
ஒரு மைல்கல்லுன்னு வேணுமுன்னா சொல்லலாம். இன்னும் போக
வேண்டிய தூரம் நிறைய இருக்கு.

said...

வாங்க தருமி.

அண்ணாரவேணாம். முகத்துக்கு நேராவே சொல்லிருங்க:-)
மண்டபத்துலே இருந்து வீட்டுக்கு வந்துட்டீங்கதானே?

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

லக்ஷ்மி,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

said...

பொன்ஸ்,
தேங்க்ஸ். யானைகளைத் தனியாப்போடணும். ப்லொக்கர்தான் 'அஞ்சுக்கு மேல் வேண்டாம்'ன்னு
கட்டுப்பாடு செய்யுதே(-:

said...

ராகவன்,

வாங்க. ஆமாம் அது ராமராஜன் படமா?
கார்த்திக், திவ்யா உன்னி நடைச்சு அப்படி ஒரு படம் வந்த ஞாபகம் இருக்கே.
படம்பேர் கூட 'கண்ணன் வருவான்'

வாழ்த்துகளுக்கு நன்றிங்க. எல்லாக் கோயில்களுக்கும் போக நேரமில்லாமப்போச்சு.
இதுக்கே திரும்பி வரும்போது ட்ராஃபிக் ஜாம்லே மாட்டிக்கிட்டு ராத்திரி 9 ஆயிருச்சு
தி. நகர் வர. வாலாஜாப்பேட்டை வழியா சீக்கிரம் போலாமுன்னு ட்ரைவர் நினைச்சாராம்.
அதான் இப்படி..............(-:

said...

பிரேமலதா,

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

சிஜி,

இன்னிக்கு நம்ம வீட்டுலெயே தாமரை மலர்ந்தது:-))))

said...

கொத்ஸ்,

அதெல்லாம் குமரன் கோச்சுக்கமாட்டார். சொல் ஒரு சொல் எப்படி நம்ம மனசுலே
அழுத்தமாப் பதிஞ்சுபோச்சுன்னு மகிழ்ச்சிதான் அடையணும் அவர் நியாயமா:-)

இன்னிக்கு நாற்பதை எல்லாம் கண்டுக்கப் போறதில்லை:-)))

said...

500-ஆஆஆஆ!!!!!!!!!! பிரமிப்பா இருக்கு.

எனக்கு ஒரு 10 பதிவுக்குள்ளயே, மூச்சு திணறிப்போச்சு. அந்த பத்து கூட சினிமா, புத்தகம், கட்டுரைன்னு ஜல்லியடிச்சிட்டு இருக்கேன். உங்களால எப்படி தான் முடிஞ்சதோ? அந்த ரகசியத்தை எனக்கும் கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன்? (இதெல்லாம் சொல்லிக்குடுத்து வர்ரதில்லைன்னு நீங்க சொல்லுறது கேக்குது)

இந்த 500, 5000, 50000, 500000, 50000000, 500000000000000000000000 என்று வளர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

said...

ஐநூறு பதிவுகள் பதித்து எங்கள் இதயங்களில் இடம்பிடித்த டீச்சருக்கு வணக்கங்கள்; வாழ்த்துக்கள்! கிளாஸ்லீடர் சொல்லியதுபோல் ஆயிரம் பதிவிட்ட அபூர்வ பதிவராக வாழ்த்துக்கள் !

குதிரை ஒரு நிமிடத்தில் ஒரு மைல் (1.6 கி.மி) செல்லக்கூடியது. மகாலட்சுமி மைதானத்தில் சொன்னாங்க ! இந்த சுட்டியும் அதுதான் சொல்லுது (50-60 mph)

said...

வாழ்த்துக்கள் துளசி.
லேட்டாப் பார்க்கிறேன். சாரி.
என்ன ஒரு சாதனை இது.!
500ம் கோடி பெறும் எழுத்துக்கள்.
செல்வ மதிப்பாகச் சொல்லலை.. மன்சு மதிப்பாக சொல்கிரேன்.
ரொம்ப நாள் நீங்க எழுதி எங்களைச் சந்தோஷப் படுத்தணும்.

said...

" எதுக்குக் குதிரை மேலே போகணும்? கார்லே போகலாமே" சொன்னது கோபால். அவருக்கு சிவகாமியின் சபதத்தைக் கோடி காமிச்சு மாமல்லன் தினம் சந்திக்கப் போனதையும் எடுத்துவிட்டேன்.


" ஓ..அப்படியா? அப்ப இங்கெல்லாம் காடுகளாத்தானெ இருந்திருக்கும். குறுக்காலே போனா அவ்வளவு தூரம் இருக்காது"கதை விடறார். என்னதான் கல்கியின் கதை கற்பனைன்னு தெரிஞ்சாலும், அப்ப அது மனசுலே ஏற்படுத்திய தாக்கத்தையும்,எத்தனையோ வருஷங்கள் ஆனபிறகும் இப்படி ஓரமா நின்னு நம்மை ஆட்டி வைக்கறதையும் பார்க்கறப்ப, எழுத்துன்னா இது எழுத்து. நாமும் எழுதறோமேன்னு ஒரு குற்றவுணர்ச்சியும் முளைச்சது..... //
ஆஹா! துளசி, காஞ்சிபுரமும் சிவகாமியும் மாமல்லனும் மறக்க முடியுமா. நினைச்சு நினைச்சு அழுத நாட்களும் உண்டு.

இந்த ஒரு பார்வைதான் நம்மை தளத்தில் ஒன்று சேர்க்கிறது என்று நினைக்கிறேன்.
அந்தக் கிளி போட்டோ பிரமாதம்.
இத்தாலியம்மாவுக்குப் புறாவைப் பார்த்தால் சந்தோஷமாக இருந்து இருக்கும்.:-)

ஜிகேதான் அப்போ யாளியா இருந்தாரோ என்னவோ.
அந்தப் படம் காணோமே??
ஸ்ரீவினாயகாஸில்க்ஸ் எப்படி சொல்லிவச்ச மாதிரி போனீங்க?
அங்கேதான் நம்ம வீட்டுக் கல்யாணப் புடைவைகள் பூராவும் எடுத்தது. அவர் பேரு குமார்னு ஞாபகம்.
500 முடிஞ்சடும் 501 சுருக்கப் போட்டுடணும். நீங்க பதிவுபோட்டு நான் படிப்பதற்குள் ஒரு நாள் போய்விடுகிறது பாருங்கள்.
மறுபடியும் துளசியின் அன்புக்கும் எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

said...

டீச்சர்...
இப்ப தான் திருமலை தரிசனம் முடித்து வந்தேன்.
வந்து பாத்தா 500!
ஆகா...வாழ்த்துக்கள்!
சகஸ்ரநாமம் (ஆயிரம்) எப்போ? :-)

திருப்பதி லட்டு போல் என்றுமே திகட்டாத பதிவுகள் விடும் துளசி டீச்சர் வாழ்க வாழ்க!!

உங்க இந்தக் காஞ்சிப் பதிவைப் படித்து விட்டு இதோ நாளை காஞ்சிபுரம் செல்ல வேண்டும்!

said...

//பொன்ஸ் said...
(காஞ்சிபுரம் ஆனை படங்கள் போட்டிருக்கக் கூடாதா? :) //

வழிமொழிகிறேன்!
அட்லீஸ்ட் காஞ்சிபுரம் இட்லி படமாச்சும் போட்டிருக்கலாமே!

நானும் இன்னிக்கு நாற்பதை எல்லாம் கண்டுக்கப் போறதில்லை:-)))

said...

50 போட்ட ஆட்டமே தாங்க முடியல
இதுல 500 போட்டுட்டு ஒரு வரில சொல்றிங்க...

இதுக்கு பேர்தான் தன்னடக்கமா..

வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்

said...

அட நம்ம ஊரு, நாம க்ரிக்கெட் ஆடற கோயிலுங்க. 500 க்கு வாழ்த்து(க்கள்.). வைகுண்ட பெருமாள் கொயில் போகலையா ?

said...

500க்கு வாழ்த்துக்கள் டீச்சர்...

இன்னும் நிறைய எழுதி எங்களுக்கு எல்லாம் எப்பவும் போல உற்சாகம் கொடுக்கனும் :-)

said...

50 வது பின்னூட்டம் நான் தான் :-)

said...

வாங்க மணியன்.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

நீங்க கொடுத்த சுட்டி 'ரேஸ்' குதிரைகளுக்குத்தானே? நல்ல அருமையான 'ட்ராக்'லே போறத்கு வேற,
காட்டுப்பாதையிலே போறது வேற இல்லீங்களா?

உங்க விளக்கத்தோடு கொஞ்சம் தோராயமாக் கணக்கு பார்த்தால் ஒரு ஒன்னரை மணி நேரத்துலே
பல்லவன் சிவகாமியைப் பார்க்கத் தடாகக்கரைக்குப் போயிருப்பார்ன்னு வச்சுக்கவா? :-))))

தமிழ்சினிமாவா இருந்தால்.......... அப்ப ஒரு பாட்டு வந்துரும், 'டக் டக்'ன்னு குதிரையின் குளம்பு ஒலியோடு!

said...

வாங்க வல்லி.

//500ம் கோடி பெறும் எழுத்துக்கள்.
செல்வ மதிப்பாகச் சொல்லலை//

அப்பப் பைசாவுக்குப் பிரயோஜனமில்லை:-))))))

நன்றி வல்லி.


பயணம் முழுசும் காணும் இடம் எல்லாம் 'அவன்' தோற்றமாத்தான் இருந்துச்சு. பாவம் ஜிகே:-)

said...

வாங்க KRS.
இந்தியப்பயணம் சிறப்பா அமையட்டும். நீங்க உங்க ஸ்டைலில் காஞ்சியைப் பத்தி எழுதுங்க.
ஆமாம், எம் பெருமா(ள்)ன் என்ன சொன்னார்? தரிசனம் நல்லாக் கிடைச்சதா?

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க தம்பி.

தன்னடக்கம் எல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு பயம்தான். உயரே போகும்போது கவனமா இருக்கணுமில்லை.
கீழே விழுந்தா அடி பலமா இருக்குமே, அதுவும் யானைக்கு!

said...

வாங்க A n& ( ஆனந்த்)

ஒரு நாளுலே உங்க ஊர்லே இருக்கற கோயில்களைப் பார்த்து முடிக்க முடியுமா? அதென்னப்பா,
உலகத்துலே பாதிக்கோயில்கள் அங்கேயே கட்டிப்போட்டுருக்காங்க?

முடிஞ்சவரை சுத்துனதுதான்.

வாழ்த்துகளுக்கு நன்றி

said...

பாலாஜி,

வாழ்த்துகளுக்கு நன்றி.
இந்தப் பின்னூட்ட விளையாட்டு இன்னும் இருக்கா?
அம்பது நீங்கதான்:-))))
அதுக்கு வாழ்த்து(க்)கள்.:-)))))

said...

வாங்க பிரசன்னா,

ஆர்வக்கோளாறுலே பூஜ்ஜியத்தை வாரிவிட்டுருக்கீங்க! எனக்கு, எண்ணிப் படிக்கத்தெரியலை(-:

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

டீச்சர் 50 போடுவதற்குள் முழி பிதுங்கி விட்டது.500 ஆஆஆஆஆஆ......அம்மாடா. மகளிர் தினத்தன்று நல்ல பரிசு.வாழ்க வளமுடன்.ஒரு இ' புக்காக போடுங்களேன்.

said...

500வது பதிவா? வாழ்த்துக்கள் துளசியம்மா! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

said...

வாங்க தி.ரா.ச.

வாழ்த்துகளுக்கு நன்றி.

//ஒரு இ' புக்காக போடுங்களேன்.//

படிக்க ஆளு வேணாமா? :-))))

said...

வாங்க கார்த்தி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

அங்கே அம்பதுன்னு அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்களே,
அதுக்கு வாழ்த்தைப் பிடியுங்க.
அதுவே 500 ஆகும் நாள் தூரத்தில் இல்லை:-)))

said...

அக்கா..

ரொம்ப தாமதமா வந்து இருக்கேன்.. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..வேனா இம்போசிஷன் எழுதறேன்..:-))...

கை ரிப்பேர் ஆனதுனால வர முடியலை

காஞ்சிபுரம் போனீங்களா..

//முன் ஜாக்கிரதை முத்தண்ணா///

இது எல்லாம் நமக்கு..ஹி ஹி...நாம யாரு..என்ன...

said...

ஆஹா துளசிக்கா
போன பின்னூட்டம் நம்மளோடது
பொண்ணு புதுசா பிளாக் ஆரம்பிச்சு அட்டகாசம் பண்ணறா.. பேற பாக்காம போஸ்ட் பண்ணிட்டேன்.. அது என் கணக்கில வச்சுகிங்க சொல்லிட்டேன்...
(கண்டிப்பா இம்போசிஷன் இருக்கு எனக்கு)

said...

வாங்க மங்கை.

அவந்தியோட பேருலே வந்ததையும் போட்டாச்சு. தலைக்கு மேலே போயாச்சு இதுலே
நாப்பது என்ன அம்பது என்னன்னுதான்:-))))

ஆமாம், கையிலே என்ன கோளாறு? அப்படியும் தீப்பந்தத்தை .......... (அடடா....... தப்பாச்
சொல்லிடேனே.) சுடரை மெதுவா ஒரு கையிலே புடிச்சு கை மாத்திக் கொடுத்துருக்கீங்க:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி நன்றி.

said...

துளசி அவர்களின் 500 பதிவவ முன்னிட்டு,

பதிவுலகின் லாரா என்ற பட்டத்தை நம் டீச்சர் துளசி அவர்களுக்கு மரியாதையுடன் வழங்கின்றேன்

said...

டீச்சர், உங்களுக்கு நான் கொடுத்த பட்டத்தை வைத்து நம்ம கொத்துஸ் செய்யும் அரசியலை வந்து என்னனு கேளுங்க டீச்சர்...

அவர் லொள்ளு ரொம்பவே அதிகமா போச்சு....

said...

ஆஹா!! நான் கொஞசம் லேட்டு. 500ஆவது பதிவா. சீக்கிரமே 5000, 50,000 & 5,00,000 ஆக வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்

said...

வாங்க சிவா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

கொத்ஸ், அடிச்சு விளையாடறாருன்னா ஆடிட்டுப்போகட்டுமே!

எல்லோரும் ஓரமா உக்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம்தானே? இன்னிக்குத்தான்
ஸ்கூல் லீவ் விட்டாச்சே!

ஆங்........ பட்டத்துக்கும் நன்றிப்பா:-))))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
அஞ்சுலட்சங்கறது கொஞ்சம் கூடிப்போச்சோ? :-))))

said...

டீச்சர், புலி குடுக்கற பட்டத்தை இப்படி ஏத்துக்காதீங்க. என் பதிவில் அவரைக் கேட்ட கேள்விக்கு நேரா பதிலே சொல்லலை! நான் கேட்ட கேள்வியை உங்க பார்வைக்கும் வைக்கிறேன், உங்க கிட்டவாவது பதில் சொல்லறாரான்னு பாக்கலாம்.

-------------
//பதிவுலகின் லாரா என்ற பட்டத்தை நம் டீச்சர் துளசி அவர்களுக்கு மரியாதையுடன் வழங்கின்றேன்.//

ஏம்பா சிவா, அப்படின்னா என்ன? அவர் கூட இருக்கறவங்க எல்லாம் சரியா பதிவு போடறது இல்லைன்னு எதனா உள்குத்து இருக்கா? அது பொதுவா தமிழ் வலைப்பதிவர்கள் பத்தி சொல்ல வந்தியா இல்லை பெண் பதிவர்கள் டீமைப் பத்தியா?

இல்லை, ஏற்கனவே MCP அப்படின்னு பட்டம் வாங்கிட்டயா? அதான் கன்பியூஷன்.

said...

//எனக்கு ஒரு 10 பதிவுக்குள்ளயே, மூச்சு திணறிப்போச்சு. அந்த பத்து கூட சினிமா, புத்தகம், கட்டுரைன்னு ஜல்லியடிச்சிட்டு இருக்கேன். உங்களால எப்படி தான் முடிஞ்சதோ? அந்த ரகசியத்தை எனக்கும் கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன்? (இதெல்லாம் சொல்லிக்குடுத்து வர்ரதில்லைன்னு நீங்க சொல்லுறது கேக்குது)//

பிரசன்னா, டீச்சர் உங்களுக்கு நன்றி சொன்னதோட விட்டுட்டாங்க. உங்க கேள்விக்குப் பதில் சொல்லலை. மாணவர்கள் நாங்க என்ன சொல்லறோம் பாக்கலாமேன்னு நினைச்சாங்களோ என்னவோ. அதனால க்ளாஸ் லீடர் என்ற முறையில் நானே அவங்க இந்த கேள்விக்கு சொல்ற பதிலைச் சொல்லறேன்.

கண்ணைத் திறந்து வெச்சுக்குங்க. உங்களைச் சுத்தி என்ன நடக்குதுன்னு பாருங்க. சுத்தி நடக்கற விஷயங்களில் கவனமா இருந்தீங்கன்னா பத்து பதிவென்ன, 500 பதிவே போடலாம்.

பிரஸன்னா, டீச்சர் கிட்ட நாங்க எல்லாரும் கேட்ட கேள்விதான் இது.

டீச்சர், எங்க பதில் சரிதானே! :)

said...

//
//ஒரு இ' புக்காக போடுங்களேன்.//

படிக்க ஆளு வேணாமா? :-))))//

ஏன் டீச்சர், நாங்க எல்லாம் இல்லையா? அப்புறம் நம்ம பதிவுல வந்து இந்த் ஜி - Z என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க. அந்த மாதிரி புதுசா வந்தவங்களுக்கு அப்படியே குடுக்கலாமே.

(இது குடுக்கறது ராகிங் எல்லாம் இல்லைங்க. நீங்க வேற!!) :))

said...

//இலவச கொத்தனார் சொன்னா மாதிரி கூடிய விரைவில் ஆயிரம் பதிவெழுதிய அபூர்வ சிந்தாமணியாக அடியாளின் வாழ்த்துக்கள். இங்க நிறைய பேர் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்னு சொல்லியிருக்க நான் மட்டும் தடாலடியா வாழ்த்தறேனேன்னு பார்க்கறீங்களா?//

டீச்சர், இந்த லக்ஷ்மி க்ளாஸை சரியாவே கவனிக்கலை. அதாவது பதிவையும் பின்னூட்டங்களையும் சரியாவே படிக்கலை.

நான் என் பதிவில் உங்களை வாழ்த்தியது - ஆயிரம் பதிவு தந்த அபூர்வ துளசி. இவங்க சொன்னா மாதிரி சிந்தாமணி இல்லை.

இவங்க சொன்னா மாதிரி நானோ பெருசோ வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்னு அப்படின்னு சொல்லலை. வாழ்த்த பதிவில்லை வணங்குகிறோம்.

said...

மீண்டும் பிரசன்னாவிற்கு.

இந்த பதிவிலேயே டீச்சர் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க.

//வாழ்த்துகளுக்கு நன்றிங்க. இந்த வாழ்க்கையை முழுசுமா வாழ்ந்து பார்த்துறணுமுன்னு கண்ணையும் காதையும்
திறந்து வச்சுக்கிட்டு இருக்கேன். அதான் பார்க்குறதெல்லாம் மனசுலெ பதிஞ்சுருது.//

கிட்டத்தட்ட நான் சொன்னதுதான் பார்த்தீங்களா! :)

டீச்சர், 75 அப்!!! :)))

said...

ஐநூறா????????????????????????????????????????????????????????????????????????????????????????

said...

அக்கா,
வாழ்த்த வயது, பதிவு, பின்னூட்டம் எதுவுமில்லை!!! வணங்கிக்கிறேன்.

said...

இந்தபதிவுக்கு ஒரு ஐநூறு பின்னூட்டமாவது டச் செய்யவேண்டாமா..

said...

கொத்ஸு,
சதுரங்க சேனையையும் களத்தில் இறக்கவும்.

said...

பின்னூட்ட நாயகியின் ஐநூறாவது பதிவில் பின்னூட்டமிடுங்கள் என்று திக்கெட்டு பறைகள் முழங்கட்டும்!

(பின்னூட்ட நாயகி மாடரேட் செஞ்சு செஞ்சு கை டேமேஜ் ஆவக் கூடாதுன்னு ஸ்லோ ஸ்பீடுல போவோம், சரியா? )) :)))

said...

துளசியக்கா,

500வது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் அட்டகாசமான ஆயிரமாவது பதிவை எதிர்நோக்குகிறேன்!

நான் வலையில் வேற கும்மியடிச் சத்தத்துக்குள்ளே இருந்ததில் அக்காவோட அமைதியான 500 வது பதிவை உடனே கவனிக்கல. மன்னிக்கணும்.


பதிவுலகின் டீச்சர் நீங்க. பதிவுலகில் நானெல்லாம் ரொம்பவே அமைதியான மாணவன்.

இந்த நல்ல தருணத்தில் என்னையும் ஆசீர்வாதம் பண்ணுங்க உங்கள் வழியில் 500பதிவுகள் போடணும்னு!

said...

தாமதமான வருகைக்கு மன்னிக்கணும் துளசி. 500 பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 5,0000/- 50,0000/- என்று மேன் மேலும் எழுதவும் வாழ்த்துகிறேன். சிவா சொல்லித் தான் தெரிஞ்சது. ரொம்பவே தாமதமாய் வந்துட்டேன். அதுக்குள்ளே நிறையப் பேர் வந்து வாழ்த்தி இருக்காங்க. நானும் கைலாசநாதர் கோவில் போயிட்டு வந்து அதைப் பத்தி எழுதாமல் யோசிச்சிட்டு இருந்தப்போ உங்க பதிவைப் பார்த்தேன். அந்தக் கோயில் இருந்த நிலையையும், இப்போ இருக்கும் நிலையையும் பார்த்தால் மனம் பதறுகிறது. என்ன செய்ய? இம்மாதிரி புராதனச் சின்னங்கள் அநேகமாய் அழிந்து கொண்டு வரது.

said...

தகவலுக்கு நன்றி மணியன். ஆனால் அதெல்லாம் (1.6 x 60 = 96) மிக உயர்ந்த பட்ச வேகம். குதிரையின் வேகம் 40 கிமீ என்று வைத்துக் கொண்டால் மாமல்லன் காதல் வேகத்தில் ஒரு மணியில் மல்லை சென்று சேர்ந்து விடுவான்.

said...

கொத்ஸ்,

க்ளாஸ் லீடரோட பொறுப்புடன் செயல்படுறதைப் பார்த்து மகிழ்ச்சி.

இப்படித்தான் கவனமா இருக்கணும். கீப் இட் அப்:-)

said...

வாப்பா ராம்ஸ்.

பொறந்தவீட்டு சீர் இன்னும் வரலையேன்னு இருந்தேன்.
ஈடு கட்டியாச்சு போல இருக்கு:-)))))

said...

வாங்க ஹரிஹரன்.

//நான் வலையில் வேற கும்மியடிச் சத்தத்துக்குள்ளே இருந்ததில் ...//

ஆமாம். கவனிச்சேன்.

//பதிவுலகில் நானெல்லாம் ரொம்பவே அமைதியான மாணவன். //

மெய்யாலுமா? :-))))

//என்னையும் ஆசீர்வாதம் பண்ணுங்க உங்கள் வழியில் 500பதிவுகள்
போடணும்னு! //

என் வழியில்................ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நோ ச்சான்ஸ்:-)))

said...

வாங்க கீதா.

லேட்டு என்ன லேட்டு?

இது என்ன ஒரு நாள் கல்யாணமா? பழையகாலம் போல ஒரு வாரக் கல்யாணம்.
எப்ப வந்தாலும் சரி. (அதுக்காக பந்தி முடிஞ்சப்புறம் வந்தா வெறும்
கல்யாண சீர் பட்சணம் மட்டும்தான்!)

வாழ்த்துகளுக்கு நன்றி.

கைலாசநாதர் கோயில்.......... மனம் பதறத்தான் செய்யுது.

இந்தக் காலத்துலே நினைச்சுப் பார்த்தாலும் இப்படி ஒரு கோயில்
கட்ட முடியுமா?

'இருக்கறதைக் காப்பாத்திக்க எப்பத்தான் கத்துக்கப்போறோமோ?'ன்னு
கவலையா இருக்கு.

said...

வாங்க ஓகையாரே.

நானும் ஒரு ஒன்னரை மணியாகுமுன்னு சொல்லி இருக்கேன் பாருங்க.

said...

500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் டீச்சர்!

said...

//கொத்ஸ்,

க்ளாஸ் லீடரோட பொறுப்புடன் செயல்படுறதைப் பார்த்து மகிழ்ச்சி.

இப்படித்தான் கவனமா இருக்கணும். கீப் இட் அப்:-)//

டீச்சர், இன்னும் ஒரு டஜன் போடணும். இப்படி ஒத்தை வரியில் சொன்னா எப்படி? நானும் சிவாவுக்கு ஒண்ணு, பிரசன்னாவிற்கு ரெண்டு, ஈ புக்குக்கு ஒண்ணு, லக்ஷ்மிக்கு ஒண்ணு அப்படின்னு ஒரு ஐந்து பின்னூட்டம் போட்டா நீங்க பதிலுக்கு இப்படி பொத்தாம் பொதுவா ஒரு கீப் இட் அப் சொன்னா எப்படி?

இருந்தாலும் விடறது இல்லை!! :))

said...

வாழ்த்துகளுக்கு நன்றி.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிபி.

said...

ஏம்ப்பா கொத்ஸ்,
எதுக்கு இப்படி....................?
உருண்டுருண்டு புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டுமுன்னு ஒரு பழமொழி இருக்கேப்பா:-))))

said...

//மீண்டும் பிரசன்னாவிற்கு.

இந்த பதிவிலேயே டீச்சர் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க.

கிட்டத்தட்ட நான் சொன்னதுதான் பார்த்தீங்களா! :)//

//கண்ணைத் திறந்து வெச்சுக்குங்க. உங்களைச் சுத்தி என்ன நடக்குதுன்னு பாருங்க. சுத்தி நடக்கற விஷயங்களில் கவனமா இருந்தீங்கன்னா பத்து பதிவென்ன, 500 பதிவே போடலாம//

கொத்ஸ், ரொம்ப நன்றி லீடர். இதை கண்டிப்பா பின்பற்றுகிறேன்.

said...

//உருண்டுருண்டு புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டுமுன்னு ஒரு பழமொழி இருக்கேப்பா:-))))//

டீச்சர், அதெல்லாம் கவலைப்படாதீங்க. ஒட்டணமுன்னு முடிவு பண்ணிட்டா உடம்பு நிறையா எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு வந்திருவோமில்ல.

நம்ம பசங்களுக்கு டார்கெட் குடுத்துட்டா கரெக்ட்டா வந்து அடிப்பாங்க. இன்னும் 6 தானே இருக்கு. அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம நாமளே அடிச்சுடலாமேன்னு பார்த்தேன். :)

said...

//கொத்ஸ், ரொம்ப நன்றி லீடர். இதை கண்டிப்பா பின்பற்றுகிறேன்.//

ஐயா பிரசன்னா, நமக்கு நன்றி சொன்னது எல்லாம் இருக்கட்டும். அதைச் சொன்னது டீச்சர், அவங்களுக்குச் சொல்ல வேண்டாமா? நம்ம ஊர் ஸ்டைலில் சொல்லணுமுன்னா -

எய்தவர் இங்கேயே இருக்க அம்புக்கு நன்றி ஏன்? :))

said...

கொத்ஸ்,

ஒரு முடிவோட இருக்கறவங்களை மாத்தறது ரொம்பக் கஷ்டம்ப்பா:-))))

said...

//ஒரு முடிவோட இருக்கறவங்களை மாத்தறது ரொம்பக் கஷ்டம்ப்பா:-))))//

மீண்டும் ரெண்ட் போட்டா ஒரு பதிலா? முடிவு நான் மட்டும்தான் எடுத்து இருக்கேன் போல!

said...

இருக்கட்டும். இன்னும் மூணுதானே! போட்டுடறேன். இப்போ பதில் சொல்லிடாதீங்க. :)

said...

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இவ்வளவு முயற்சி பண்ணற நானும் அடையார்தாங்க. :)))

said...

ஆயிருச்சு 100! 500 ஆவது பதிவிலும் 100 கண்ட பின்னூட்ட நாயகி வாழ்க!!

said...

எதுக்கும் ஒரு சேஃப்டிக்கு இன்னொன்ணு,. மொய் பின்னூட்டம் 101.

said...

கொத்ஸ்,

//மீண்டும் ரெண்ட் போட்டா ஒரு பதிலா//

வகுப்புலே பசங்க கலாட்டா செய்து விளையாடும்போது, டீச்சர் ஒரு பக்கமா
இருந்து ரசிக்காம(??) கூடவே கும்மி யடிச்சா நல்லாவா இருக்கும்?

//முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.//

ஊக்கமது கைவிடேல்:-))))

said...

கட்டிடங்கள் அழகு. கிளி அழகு, தன்னை மறைத்துக்கொண்ட கிளியின் வாலும் அழகு. கதைசொல்கின்ற உங்கள் பாணியும் என்பதை நான் தனியாகச் சொல்லவேண்டுமா:))

இன்றுபோல் என்றும் எழுதிக்கொண்டே இருங்கள்.

said...

வாங்க செல்வா.

செவ்வி தயாரிக்கிறதுலே கொஞ்சம் பிசியாயிட்டீங்க போல இருக்கே.

அருமையாக் கேள்விகளைக் கேட்டீங்க.

//இன்றுபோல் என்றும் எழுதிக்கொண்டே இருங்கள். //

அப்பப் படிக்க ஆளு? :-)

said...

//ஐயா பிரசன்னா, நமக்கு நன்றி சொன்னது எல்லாம் இருக்கட்டும். அதைச் சொன்னது டீச்சர், அவங்களுக்குச் சொல்ல வேண்டாமா? நம்ம ஊர் ஸ்டைலில் சொல்லணுமுன்னா -

எய்தவர் இங்கேயே இருக்க அம்புக்கு நன்றி ஏன்? :))//

க்ளாஸ் லீடர் சார் , எய்தவருக்கும் அம்புக்கும் நன்றி சொல்லி தனிப்பதிவே போட்டாச்சு. இங்க பாருங்க. http://tcsprasan.blogspot.com/2007/03/500.html

அப்படியே உங்க வழிகாட்டுதல் படி இருக்கான்னு பார்த்து சொல்லுங்க.

said...

துளசியக்கா!
இக்கோவில்கள் பார்க்கக் கிடைக்கவில்லை. தங்கள் படங்கள் விபரிப்பும் நன்றாக உள்ளது.
கோவிலில் புறா,காகம் ;குருவி; வௌவால் காணலாம். கிளி கூடக் காணலாமா?
கண்ணதாசன் "நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் "என்ற பாட்டில் சொல்லுவார் "பச்சை வண்ண வெத்திலை போல் பறந்தோடி வந்து" என அப்படி அழகாக இருக்கிறது.

said...

வாங்க யோகன்.

நீங்க சொன்ன பாட்டுக்கு எதாவது சுட்டி இருக்கா? முழுசாக்கேக்கணும்போல இருக்கே.

'கவியரசர்'ன்னு ச்சும்மாவா சொன்னாங்க?

இந்தமாதிரிக் கலையழகுள்ள எத்தனையோ கோயில்கள் பாழடைஞ்சு போய் நிக்கறது
ரொம்ப மனவேதனைதான்.

said...

பிரசன்னா,

நம்ம கொத்ஸ் பாருங்க, உங்களை 'உண்டு இல்லை'ன்னு பண்ணி இப்ப ஒரு
***** பதிவு (மொக்கை அல்லது ஜல்லி இதுலே எதாவது பொருத்தமான ஒண்ணு)
போட வச்சுட்டார்:-))))

said...

//அப்பப் படிக்க ஆளு? :-)//

அதான் நாங்க இருக்கோமே!!

said...

துளசியக்கா!
இப்பாடல் சுட்டி கிடைத்தால் அனுப்புகிறேன்; இது ஒரு சிவாஜி படம்;நாயகி உஷா நந்தினி; ஒரு அறிமுகம் சிவாஜியுடன்; பொன்னூஞ்சல்;ராஜபாட் ரங்கதுரை உட்பட வெகு சொற்ப படங்கள் நடித்துவிட்டு,காணாமல் போனோர் வரிசைக்குச் சென்றவர்.
இந்தச் சோடி படங்களைத் தேடினால் பிடிக்கலாம். தேடுகிறேன்;

said...

ஏறக்குறைய ஒரு மாதம் ஆச்சா இந்த இடுகையை இட்டு?! நான் லேட்டா வந்தேன்னு சொல்வேன். நீங்க லேட்டஸ்டா வாங்கன்னு சொல்வீங்க. அது தானே வழக்கம். அதை இந்தத் தடவையும் மாத்தாம இப்பத் தான் வந்திருக்கேன். :-)

500வது இடுகைக்கு வாழ்த்துகள் அக்கா. வயசிருக்கோ இல்லையோ பதிவிருக்கோ இல்லையோ மனம் இருக்கு வாழ்த்த. வாழ்த்து(க்)கள். :-)

உங்க வழக்கம் போல இந்த இடுகையையும் நல்லா சுவையா எழுதியிருக்கீங்க அக்கா.

அக்கா. உங்க கிளாஸ் லீடரை இன்னும் நீங்க சரியா புரிஞ்சுக்கலையே. அவர் எனக்கு சினம் வரும்ன்னா சொன்னார்? 'கோவி' கோவிச்சுக்குவார்ன்னு சொல்றார். அவ்வளவு தான். சொல் ஒரு சொல்லின் தாக்கம் என்றால் மகிழ்ச்சி தான் - நீங்கள் சொன்னதைப் போல.

//தன்னடக்கம் எல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு பயம்தான். உயரே போகும்போது கவனமா இருக்கணுமில்லை.
கீழே விழுந்தா அடி பலமா இருக்குமே//

அடடா. ரொம்ப சாதாரணமா ஆனா உள்ளம் தைக்கிறமாதிரி சொல்றீங்களே.

said...

வாங்க குமரன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.

எப்ப வந்தா என்ன? நம்ம வீடுதானே?

புது லீஸ் ஆஃப் லைஃப் கிடைச்சிருக்கு உங்களால்:-))))

said...

இன்று திருவாதிரை இங்கே.
கைலாசநாதர் கோயிலை தரிசிக்கலாமென்று கூகுள் ஆண்டவர் வழியாக வந்து,அவர் வ்ழிகாட்டி, உங்கள் பதிவில் தங்கினேன்.
ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன்.
நான் 22 வருடங்கள் வசித்த இடம்.
அருள்மிகு காமாட்சி அம்மனையும், குமரக்கோட்ட முருகனையும் தரிசிக்க நேரமில்லாது போய்விட்டது போலும்.
நண்பர் குமரனை விட நான் லேட்;
மூன்று மாதம் முன்னாடியே 500 பதிவுகளைக் கடந்து விட்டீர்கள் என்றாலும் இப்பொழுதாவது என் வாழ்த்துகளைச் சொல்லமுடிந்தது.
மிகுந்த மகிழ்ச்சி.

said...

வாங்க ஜீவி.

இட்ஸ் நெவர் டூ லேட்:-)))))

பதிவுகளில் இது ஒரு வசதி. எப்ப முடியுமோ, அல்லது எப்பப் படிக்கக் கிடைக்குதோ அப்பப் படிச்சுக்கலாம்.

பழைய குமுதம் ,ஆ.விக்களை திரும்ப எடுத்துச் சும்மா ஒரு பார்வை பார்ப்போமே அதே போல்:-)))

500க்கான வாழ்த்துக்களை இப்ப 639க்கு வச்சுக்கவா? :-)))))

said...

வெகு சுவாரஸ்யம். கைலாசநாதர் கோயில் நாங்க சாமி பார்க்க முடியலை. கோயில் பூட்டி இருந்தது.; அது பற்றி எழுதும் போது உங்கள் வரிகளை (உங்கள் பெயருடன்) என் பதிவில் சேர்த்து கொள்கிறேன் மேடம்

புடவை பற்றி நீங்க எழுதும் போது உங்க வீட்டு காரர் அப்போ என்ன நினைச்சிட்டு இருந்திருப்பார் என எனது மைண்டில் ஓடி கொண்டிருந்தது

said...

வாங்க மோகன் குமார்.

சேர்த்துக்குங்க. இலவச விளம்பரம் கிடைச்சா வேணாமுன்னு சொல்வேனா? அப்போ அதுலே வந்த பின்னூட்டங்களில் தெரிஞ்சது, பதிவை விட்டுட்டுக் கடைசி வாலை மட்டும் பார்த்துருக்காங்க நம் மக்கள்ஸ்.

நான் புடவை பார்க்கும்போது..... 'பெருமாளே இவ என்னை மொட்டையடிக்காமல் விட்டாஅல் நானே வந்து உன்னக்கு மொட்டை போட்டுக்கறேன்'னு வேண்டுதல் வச்சுருந்துருப்பார் போல. நானும் மூணுக்குப்பிறகு வேண்டாமுன்னு விட்டுட்டேன்:-)))))

said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள் அம்மா.