Monday, March 12, 2007

நாதனைக் காண வந்த நாதர்

வரவர எத்தனை அனுபவம்தான் ஒரு நாளைக்கு ஏற்படணுமுன்றதுன்றதுக்குக் கணக்குவழக்கே இல்லாமப்போச்சு. 'அச்சன் வருந்நு. நமக்கு ஒண்ணுகூடாம்'னு நண்பர் கூப்புட்டார். ஆக்லாந்துலே ஒரு புதிய பள்ளி( சர்ச்)க்கு, கேரளாவுலே இருந்து பாதிரியார் வந்திருக்காராம். அவருக்கு இப்ப தெற்குத் தீவுக்கு வந்து இங்கே இருக்கும் நம்ம ஆட்களையெல்லாம் 'கண்டுமுட்டிப் பரிச்சயப்படான் ஒரு ச்சோன்ஸ் கிட்டிட்டுண்டு'ன்றதாணு விவரம். ஆயிக்கோட்டே..........


சனிக்கிழமை இங்கே இருக்கும் ஒரு பள்ளி( ஸ்கூல்)யில் ஒரு ச்சின்ன ஹாலில் எல்லாரும் கூடி, பிரார்த்திக்கலாமுன்னு ஏற்பாடு செஞ்சுட்டார் நண்பர். சாயந்திரம் அஞ்சு மணிக்காம். கூடிவந்தால் ஒரு ஒன்னரை மணி நேரம். ஆஹா.....அது பரவாயில்லை. ஆறரைக்கு முடிஞ்சுரும். அதுக்கப்புறம் நாம் வழக்கமாச் சனிகளில் போற நம்ம கோயிலுக்குப் போகலாம். பாதிரியாரோ பூஜாரியோ யாரா இருந்தாலும் நமக்கு விரோதமில்லை. நல்ல வார்த்தைகள் யார் சொன்னாலும் காதுகுளிரக் கேக்கலாம்தானே?


சனிக்கிழமைக் காலையில் மறுபடி நண்பர் கூப்புட்டு, 'நிகழ்ச்சியை நாலுமணிக்கு மாத்தி இருக்கோம். அச்சனுக்கு ஆக்லேண்ட் போக ஆறேமுக்காலுக்கு ப்ளைட்'. இன்னும் நல்லதாப்போச்சு. நிதானமாவே கோயிலுக்குப் போலாம். அடிச்சுப்பிடிச்சு ஓடவேணாம். நம்ம கோயிலிலும் சரியா ஏழுமணிக்கு ஆரத்தி எடுப்பாங்க. ஒருநாளும் நேரம் தப்பறதே இல்லை. கோயிலில் ஏதாவது நிகழ்ச்சி, பிரசங்கமுன்னு எதாவது நடந்துக்கிட்டே இருந்தாலும்கூட ஏழுன்னா ஏழுக்கு, அதுபாட்டுக்கு அதுன்னு ஆரத்தி ஆரம்பிச்சிரும்.நிகழ்ச்சி நடக்க இருந்த பள்ளி( ஸ்கூல்) நம்ம வீட்டுலே இருந்து அஞ்சு நிமிஷ நடை. வெயில் வேற இன்னிக்கு நல்லா இருக்கு. ஒரு நடைப்பயிற்சி(??) ஆச்சுன்னு மெதுவா நடந்து 3.55க்குப் போய்ச் சேர்ந்தோம். நோ ஈ, நோ காக்கை! ரெண்டு நிமிஷத்துலே ஒரு இளைஞர் மட்டும் வந்து சேர்ந்துக்கிட்டார். அப்புறம் ஒரு குடும்பம். இப்படி ஒண்ணொன்னா,நாலு குடும்பம் வந்தாச்சு. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நண்பரும் அச்சனும் இதில் அடக்கம். பிரச்சனை என்னன்னா,ஹால்ச் சாவி இல்லை. கேர் டேக்கர் வீட்டுக்கு( எதிர்வரிசைதான்) ஓடுனா.......... அங்கே யாரும் இல்லை. அஞ்சு மணியை நாலு மணியாக்கறோம்ன்ற விவரத்தை ஆன்ஸரிங் மெஷின்லே விட்டாராம் நண்பர். போச்சுரா.......... அதை யாரும் கவனிக்கலை போல இருக்கு(-:


கார் பார்க்கிங்லே, இந்த மொட்டை வெய்யிலில் நிக்க வேணாமேன்னு தோணிப்போச்சு. 'உங்களுக்கு விருப்பமுன்னா,எங்க வீட்டுலே இந்த ப்ரேயரை வச்சுக்கலாமு'ன்னு கோபால் சொன்னார். 'எல்லாரும் நிலத்து இருக்கணும். கஸேர உண்டாவுல்லா. அச்சனு மாத்திரம் இரிக்கான் கஸேர தராம்'ன்னு என் பங்குக்குச் சொல்லி வச்சேன். மறுபடி கொஞ்சம் வேகமா நடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.


நல்லவேளை, நம்ம வீடு கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்கு. நேத்து வெள்ளிக்கிழமை ராத்திரி நம்ம வீட்டுலே சுந்தரகாண்டம் படிச்சோம். அஞ்சு குடும்பம் சேர்ந்து ஒவ்வொரு வெள்ளியும் ஒவ்வொரு வீட்டுலேன்னு போய்க்கிட்டு இருக்கு. அதனாலே நேத்துப் பூஜைக்காக 'டைடி' பண்ணது நல்லதாப் போச்சு. பார்மல் லவுஞ்லேதான் எங்க பூஜையறையும் வச்சுருக்கோம். கதவைத் திறந்தவுடன் ஜாதி மல்லி ( நேத்து சாமிக்குப்போட்ட மாலை) வாசனை அள்ளுது. கூடவே ஊதுபத்தி மணம். அச்சன் வந்து சோபாலே உக்காந்தார். கீழே கார்பெட்டில் நம்ம மக்கள். இடமாற்ற விவரம் செல்லில் பறந்துச்சு. திமுதிமுன்னு எண்பது பேருக்குமேலே கூடியாச்சு. குழந்தையும், குட்டியுமா கலகலன்னு கல்யாண வீடு போல ஆகிருச்சு. அதிலும் ச்சின்னப் பசங்களுக்கு, நம்ம வீட்டு ஊஞ்சலைப் பார்த்ததும் கண்ணுலே வெளிச்சம்.


ஏசுநாதரைப் பத்திப் பாட்டுக்கள் பாடினாங்க. ப்ரிண்ட் அவுட் கொண்டுவந்ததாலே நாங்களும் சேர்ந்துக்கிட்டோம். அப்புறம் அச்சன் பிரசங்கம் செஞ்சார்.பின்னேயும் பாட்டு, பின்னேயும் பிரசங்கம்ன்னு போச்சு. ஒரு கதையும் சொன்னார். 'ரெண்டு சன்னியாசிகள் பயணம் செஞ்சாங்களாம். அப்போ அவுங்களுக்கு ஒரே தாகமாம். அங்கே ஒரு வீட்டுலே தண்ணீர் கேட்டப்ப,மோர் கிடைச்சதாம். குடிச்சுட்டு பிரயாணம் செஞ்சுக்கிட்டே இருந்தப்ப மறுபடி தாகம். இந்த முறை கிடைச்சது கள்ளு. அதையும்குடிச்சுட்டு மறுபடி நடை. மறுபடி தாகம். இப்போ இருக்கும் இடம் கொல்லனுடைய பட்டறை. அங்கெ தாகத்துக்குக் கிடைச்சது கொதிக்கும் இரும்புக் குழம்பு. மறுபேச்சுப் பேசாம அதையும் சந்தோஷத்தோடே குடிச்சுட்டுக் கிளம்புனாங்களாம். ஆன்மீகவாதியாயிட்டா,எல்லாமே ஒண்ணுதான்னு தோணிப் போகுமாம்.' எங்கியோ கேட்டுருக்கெனே இதை! ZEN கதையோ?


இன்னிக்கு பிரார்த்தனை நடக்கும் இடம் கோபாலின் வீடுன்னு ஆண்டவன் முடிவு செஞ்சுட்டார். அதான் ஏற்கெனவே போட்ட திட்டம் நடக்கலைன்னு சொன்னார். மகாவிஷ்ணுவும், மகாலக்ஷ்மியும், பிள்ளையாரும், ஹனுமானும் புடைசூழ ஒரு இந்து வீட்டில் கிறிஸ்துவைப் பற்றிய பிரசங்கம் கொஞ்சம் புதுமாதிரியாத்தான் இருந்துச்சு.


நம்ம வேங்கடநாதனைப் பார்த்துப் பேச ஏசுநாதர் வந்துட்டுப் போவார்ன்னு எங்களுக்கே தெரியாது, ரெண்டு மணி நேரத்துக்குமுந்தி.' பெருமாளுக்கே வித்தியாசம் இல்லை, வெறும் ஆளான நமக்கு எதுக்கு இந்த வித்தியாசமுன்னு' நம்ம கண்ணபிரான் அவர் பதிவுலே எழுதுன ஞாபகம் வந்துபோச்சு.


எல்லாம் முடிஞ்சு கோயிலுக்குப் போனா............. பளிங்கு முகத்தில் சிரிப்புக் கூடுதலா இருந்த மாதிரி ஒரு தோணல்.

24 comments:

said...

நல்ல அனுபவந்தான்!! நல்லது யார் சொன்னாலும் சரி.
எங்க வீட்டுலயும் ஜாதிமல்லி பூக்குது. அப்பப பக்கத்து வீட்டில இருந்தும் கொஞசம் எடுத்துக்கரதுதான்.

said...

முதல்ல உங்க வீட்டு ஊஞ்சலுக்கு ஒரு பெரிய Hi .. ஒரு நாளைக்கு (இன்ஷா அல்லா) நான் வந்து உக்காரமயா போயிரப் போறேன்.. :O))

//அங்கெ தாகத்துக்குக் கிடைச்சது கொதிக்கும் இரும்புக் குழம்பு. மறுபேச்சுப் பேசாம அதையும் சந்தோஷத்தோடே குடிச்சுட்டுக் கிளம்புனாங்களாம்.//
எங்கே பரலோகத்துக்கா? :O\
((இப்பிடிக் குதர்க்கமா பேசக்கூடாதும்பாங்க... ஆரு கேக்குறது?))

மத்தும்படி, மல்லிப்பூ வைச்சிருக்கறதை கேக்கறப்பல்லாம் கள்ளிச்செடி மட்டுமே வளர்க்கற முடியற திறமையை..(என்னாத்த என் திறமை.. அதொண்ணுதான் என்கிட்டே தப்பிப் பிழைச்சு உயிர்வாழுது) brown thumbங்கிறதையும் மீறி black thumbனா அது நாந்தே! :O(

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

அதென்னவோ நிஜம்ங்க. நம்ம வீட்டுச்செடியை விட பக்கத்து
வீட்டுது இன்னும் நல்லாப் பூக்குது:-))))

said...

வாங்க ஷ்ரேயா.

சிகப்புச் சிலந்தியைக் கொன்னா மல்லி முளைக்காதாம்.
வெறும் கள்ளிதானாம்:-))))

ச்சும்மா..........

நம்மூட்டுலே 'கள்ளி'யும் இருக்கு:-))))

ஊஞ்சல் உங்களுக்காகக் காத்திருக்குமாம். சொல்லச் சொல்லுச்சு:-)

said...

//அங்கெ தாகத்துக்குக் கிடைச்சது கொதிக்கும் இரும்புக் குழம்பு. மறுபேச்சுப் பேசாம அதையும் சந்தோஷத்தோடே குடிச்சுட்டுக் கிளம்புனாங்களாம்.//

டீச்சர், என்ன இது? ஒரு தண்ணி கேட்டா இப்படியா? பயம்மா இருக்கே.

அது போகட்டும் போன பதிவுக்கே இன்னும் ஒரு டஜன் பின்னூட்டம் வர வேண்டியது இருக்கு. இப்படி அடுத்த பதிவை போட்டா எப்படி? ஒரு நாள் டயம் குடுங்க டீச்சர்.

said...

இந்து வீட்டில் கிருஸ்துவ கூட்டம்.நல்ல முன்மாதிரி.
ஊரில் இப்படி நடக்க இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் நடக்கிறது.நம் ஊரில் தான் இட பிரச்சனை கிடையாதே.அதனால் யாரும் வந்து கேட்கமாட்டார்கள்.
எப்படியோ, சுந்தர காண்டம் படித்த இடத்தில் "அல்லேலுயாவையும்" கேட்கவைத்துவிட்டீர்கள்.

said...

வாங்க கொத்ஸ்.

//டீச்சர், என்ன இது? ஒரு தண்ணி கேட்டா இப்படியா? பயம்மா இருக்கே.//

எதுக்கு இப்படி பயம்? நம்மூட்டுலே 'வெறும் தண்ணி'தான் இருக்குப்பா:-))))

//இப்படி அடுத்த பதிவை போட்டா எப்படி? //

கல்யாணம் முடிஞ்சதும் சத்திரத்தைக் காலி பண்ணிடறோம் இல்லையா?:-))

said...

வாங்க குமார்.
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு இல்லீங்களா?

நம்பிக்கை பலமா இருந்தா எல்லாம் சுலபம்தான்.

said...

'நதிகள் வெவ்வேறாயினும் தண்ணீர்
ஒன்றே'
இதுபோல் கண்ணதாசன் பாடல் ("குழந்தைக்காக" படமா?) ஒன்று
ஞாபகம் வருதே.
உங்களுக்கு அந்தப்பாடல் நினைவில்
உள்ளதா?

said...

வாங்க சிஜி.

நீங்கசொல்ற பாட்டு ஞாபகம் இல்லை. தேடிப்பாக்கணும்:-)

நம்ம சர்வேசனின் 'பாட்டுக்குப் பாட்டு'லே சேரலியா நீங்க?

said...

ஐநூறு பதிவெழுதிய அபூர்வ பதிவர் வீடுதேடி வந்து 'விண்ணுலக பதிவர்கள் சந்திப்பு' நடத்தினார்களா :))

said...

//பாதிரியாரோ பூஜாரியோ யாரா இருந்தாலும் நமக்கு விரோதமில்லை. நல்ல வார்த்தைகள் யார் சொன்னாலும் காதுகுளிரக் கேக்கலாம்தானே?//
சரியாச் சொன்னீங்க.
இது அறிவுடையோர் செயல்.
எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பதறிவு, அல்லவா!

said...

ஐநூறு பதிவெழுதிய அபூர்வ பதிவர் வீடுதேடி வந்து 'விண்ணுலக பதிவர்கள் சந்திப்பு' நடத்தினார்களா :))

துளசி உங்களைக் கொண்டாடதான் சாமியே வந்துட்டார்.
இந்தக் கதை நம்ம இந்துக் கதைகள்ளயே இருக்கே.

கோபிகள் கல்லெடுத்துக் கொடுத்தாலும் கண்ணன் சாப்பிடுவானாம்.
புராண முனிவர்களில் ஒருவரான அகத்தியர்,
வாதாபியையே ஜீரணம் செய்தாரே:-)

said...

எந்த மதமானால் என்ன? வந்தவர்களுக்கு அவர்கள் வழிபட இடம் கொடுத்தீர்களே. அதுவே நல்ல பண்பு. இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்தவர் நம்பிக்கையை மதித்து நடந்தால் அன்றுதான் "மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்" என்று பாட முடியும். படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

said...

வாங்க மணியன்.

// 'விண்ணுலக பதிவர்கள் சந்திப்பு' நடத்தினார்களா :))//

அட! இது நல்லா இருக்கே!

said...

வாங்க செல்லி.
கூடவே வள்ளுவரைக் கூட்டிட்டு வந்துருக்கீங்க?
நன்றி.

said...

வாங்க வல்லி.

//இந்தக் கதை நம்ம இந்துக் கதைகள்ளயே இருக்கே.//

இந்துக்கதைகளில் இல்லேன்னாதான் புதுமை. அது ஒரு மஹா சமுத்திரம்.

said...

வாங்க ராகவன்.

//வந்தவர்களுக்கு அவர்கள் வழிபட இடம் கொடுத்தீர்களே. அதுவே நல்ல பண்பு.//

இந்தப் பெருமை உண்மைக்கும் கோபாலுக்குத்தான். அவர்தான் 'சட்'னு நம்ம
வீட்டுலே வச்சுக்கலாம்னு சொன்னார். நான் மறு பேச்சு பேசலை:-))))

said...

//நான் மறு பேச்சு பேசலை:-))))//

இப்படி பதிவு போட மேட்டர் கிடைக்கும் போது நீங்க ஏன் வேண்டாமுன்னு சொல்லப் போறீங்க!! :))

said...

கொத்தனார் ஜி சொன்னமாதிரி பதிவு போட விஷயங்கள் தானா உங்களைத்தேடி வருது...ம்..சமாய்ங்க.

நல்ல விஷயம்தான். கடவுள் ஒருத்தர் தான் ...வேற பேருல பாடினாலும் அவருக்கு தானேன்னு நினைச்சு பாடினா மனசு லேசாத்தான் ஆகிடுது இல்லயா?.

said...

கொத்ஸ்,

//இப்படி பதிவு போட மேட்டர் கிடைக்கும் போது நீங்க
ஏன் வேண்டாமுன்னு சொல்லப் போறீங்க!! :)) //

அப்படியா விஷயம்? மேட்டரைப் பார்த்தா........அவுங்க எல்லாரும் போனபிறகு, வீட்டை மறுபடி
சுத்தம் செய்யறது, தீனிகள் விளம்பிய ட்ரேக்களையெல்லாம் கழுவித் துடைச்சுன்னு.........
வீட்டுவேலை நம்மளை மாட்டி வைக்குதே(-:

said...

வாங்க முத்துலெட்சுமி.

//வேற பேருல பாடினாலும் அவருக்கு தானேன்னு
நினைச்சு பாடினா மனசு லேசாத்தான் ஆகிடுது இல்லயா?. //

ஆமாங்க. கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் கூடுதலாம்.

said...

துளசி அக்கா,

மனதைத் தொட்ட ஒரு பதிவு, நிஜமாக !

அழகான நடையும் கூட.

Congrats for getting I rank :)

என்ன புரியுதா ? ;-)

எ.அ.பாலா

said...

அட! நீங்களா?

'பாலா'வின் தரிசனம்!

புரியாம என்ன? அதான் எப்படின்னு மண்டைக் குடைச்சலா இருக்கு:-)))