பாலாஜி அங்கே பக்கத்துலே இருக்காராம். ச்சும்மா ஒரு பத்து நிமிஷ ட்ரைவ். விட முடியுமா? போய்ச் சேரும்போது பத்தே முக்கால் ஆயிருச்சு. வெளியே அறிவிப்புப் பலகையில் பத்தரைக்கே சந்நிதி மூடிருவாங்கன்னு போட்டுருந்தது. அடடா.....சரி. அவரைப் பார்க்க என்னாலே முடியாதுன்னாலும் என்னைப் பார்க்க அவராலே முடியுமே! ஆகட்டும்,உள்ளே போய் ச்சும்மா சுத்திட்டு வரலாமுன்னு போனேன். ஆர்ப்பாடமில்லாத ச்சின்னக் கோபுர வாசல்.
நேராப்பெருமாள் சந்நிதி. படியேறிப்போனா பெரிய மண்டபத்துலே ஒரு பக்கம் மூலவர். அட! அவருக்கு முன்னே தொங்கும் சாக்குப் படுதாவைக் கொஞ்சம் நல்லாவே விலக்கிக்கிட்டு என்னைப் பார்க்கறார்.'கண்ணும் கண்ணும் நோக்கியா'ன்னு நானும் பார்த்தேன். தரையெல்லாம் கார்பெட், ஜமுக்காளமுன்னு விரிச்சிருந்தது. குளிர் காலமில்லையா? நல்லதுதான். அப்படியே அங்கே உக்கார்ந்துக்கொஞ்ச நேரம் தியானம்(?) செஞ்சுட்டு வெளியே வந்தேன்.
எந்தக் கோயிலுக்குப் போனாலும் அங்கே இருக்கும்ஆஃபீசில் விவரம் கேட்டுக்கும் என் வழக்கப்படி இங்கேயும் கேக்கலாமுன்னு போனா ஆஃபீஸில் யாரும் இல்லை.வெளியே இருந்த கோயில் ஊழியர்கிட்டே, மேனேஜர் எங்கேன்னு கேட்டதும் பறந்துபோய் அவரைக் கூட்டிட்டு வந்தார். மூலவரைத் தவிர எங்கே வேணுமுன்னாலும் படம் எடுத்துக்குங்கன்னு அனுமதிச்சார். கூடவே இன்னொரு தேனான சேதியும் சொன்னார். 'எப்பவும் பத்தரைக்குப் பூஜை முடிஞ்சுரும். இன்னிக்கு வெள்ளிக்கிழமை, அதுவும் மார்கழி மாசம். அதனாலே விசேஷ பூஜை ஒண்ணு இருக்கு. ஒரு அரைமணி,முக்காமணி நேரமாகும். அவசரமில்லைன்னா இருந்து பார்த்துட்டுப் போங்க'ன்னார். இதைவிட வேற வேலை என்ன? கோயிலை வலம்வந்துப் படங்களா பதிஞ்சுக்கிட்டு இருந்தேன். இதுவும் பெரிய இடம்தான்.
வெளியே நாலு பக்கமும் குட்டிக்குட்டியா சன்னதிகள்.பின்பக்கம் பெரிய மண்டபம். அந்த மதில் சுவரை ஒட்டி ஒரு இஸ்லாமிய கோயில்(??) கூரை தெரியுது. கட்டுன காலக்கட்டத்தைப் பார்த்தா............. இந்தப் பெருமாள் கோயில்தான் ரெண்டாவதா வந்துருக்கணும். பேசாம வேற எங்கியாவது கட்டி இருக்கலாம் இல்லையா? அப்புறம் வீணா மதச் சண்டை, கலவரமுன்னு ஏற்படச் சான்ஸ் இருக்காதுல்லே? இன்னும் கொஞ்சம் கவனமாப் பார்த்ததுலே பக்கத்துக் கட்டிடம் புழக்கத்துலே இல்லை. விசாரிச்சப்ப, அது சரித்திரச் சின்னமா நிக்குதுன்னு சொன்னாங்க.
வலது பக்கம் நந்தவனமுன்னு ஒரு துளசிவனம் இருந்துச்சு.ஒரு பத்துப் பதினைஞ்சு நோஞ்சாளா இருக்கும் துளசிச்செடிகள். ப்ராஸ்ட் விழாம இருக்க மேலே கூரையில் வலை போட்டு வச்சுருந்தாங்க. 'காப்பாத்துங்க துளசியை' ன்னு நினைச்சுக்கிட்டுப் பேசாமப் படியிலே வந்து உக்கார்ந்தேன். குடம் தண்ணி அபிஷேகத்துக்குக் கொண்டுவந்தார் வயசான பட்டர். அப்ப ரெண்டு பிள்ளைகளோடு ஒரு தெலுங்குக் குடும்பம் வந்தாங்க. அடுத்த பக்கத்துப் படி அவுங்களுக்கு.
கொஞ்ச நேரத்துலே அபிஷேகம் அலங்காரமெல்லாம் முடிஞ்சு கோயில் மணி ஓசை வந்துச்சு. உள்ளெ போனோம்.அலங்காரமா நிக்குறார் நம்மாளு. நல்ல தரிசனம். எல்லாரையும் உக்காரவச்சுத் தொன்னையிலே பச்சைக்கற்பூரம், ஏலக்காய் மணத்தோடு சுடச்சுடச் சக்கரைப் பொங்கல். கூடாரவல்லிக்கு நேத்துக் கிடைச்சிருக்கணும். இந்தவருஷம் மார்கழிதான் தீர்த்த (???) யாத்திரையாப் போச்சே! 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா'....... இன்னிக்குக் கொடுத்துவச்சுருக்கு. மனசு நிறைஞ்ச திருப்தியா வெளியே வந்தேன்.
கொஞ்சம் பெயிண்ட் அடிச்சு வச்சிருந்தா கோயில் இன்னும் பளிச்சுன்னு இருக்கும். அதென்னவோ நம்ம பக்கங்களில் மெயிண்டனன்ஸ்ன்னு வீடுகளுக்கோ, கோயில்களுக்கு அவ்வளவா மெனெக்கெடறதில்லை. வெள்ளைக்கார நாடுகளில் பார்த்தீங்கன்னா........வருசாவருஷம் வெய்யல் சீஸன் ஆரம்பிச்சதும் பெயிண்ட் அடிக்கக் கிளம்பிருவாங்க. கடைகளில் பெயிண்ட் ஸேல்தான் மும்முரம்.எழுபது , எம்பது வருஷக் கட்டிடங்கள் கூட இதுனாலே பழசாத் தெரியாது.
இங்கேயும் நல்லதா கருங்கல் பாவுன தரைதான். இதைவிடஇப்பக் கொஞ்சம் முன்னாலே பார்த்த முருகன் கோயில் இன்னும் நல்ல கவனிப்புலே இருக்குன்னு தோணுது.
திருப்பதி தேவஸ்தானம் இங்கே தில்லியில் பெருமாள் கோயில் கட்டப் போறாங்களாம். மத்த இடங்களில் இவுங்க பட்டர்கள்செய்யும் அட்டகாசம் இங்கேயும் வரப்போகுது. பெருமாளே காப்பாத்து!
'காருள்ள போதே சுற்றிக்கொள்'னு புது மொழி இருக்காமே:-)))) பெருமாளைச் சேவிச்ச கையோடு கிளம்பியாச்சு.சரோஜினி நகர் போகலாமா இல்லே INA மார்க்கெட் போகலாமான்னு ஒரு ச்சின்ன குழப்பம். அய்யப்பன் கோவில் வழியாத்தான் போனேன். உச்சிப் பகலுக்கு கோயில் மூடியாச்சு. வெளியே மட்டும் போறபோக்குலே பார்த்ததுதான். பார்த்தவுடனே தெரிஞ்சுருது கேரளா ஸ்டைல் கோயில்ன்னு. சரி.......... அடுத்தமுறைக்கு இருக்கட்டும்.
கோயிலைச் சுத்திச் சுத்தி எடுத்த படங்கள் இத்துடன்:-))))
தொடரும்.......
27 comments:
அக்க காரு..ஏடுகொண்டல வாடு பேரு சூஸ்கினி வச்சானு..தெராவாத்த மரி ஒக சாரி வஸ்தானு. டைம் அய்யிந்து...
ஆலாகே ஆலாகே :-)))
உக்கார்ந்துக்கொஞ்ச நேரம் தியானம்(?)
எப்படி? எப்படித்தான் முடியுதோ? :-))
ஆமாம் கோவில் எங்கே உள்ளது?இடம் சொல்லலையோ? இல்ல படம் பார்க்கும் ஜோரில் விட்டுவிட்டேனோ?
ஆர்.கே.புரம் செக்டார் 3யில் கூட ஒரு பெருமாள் கோயில் உள்ளது.
உங்க லீ பதிவில் "கருத்து சொல்க" வையை பார்க்கமுடியவில்லை.
மறுபடியும் முயற்சிக்கவும்.
மறுபடியும் முயற்சிக்க வேண்டும்.
வாங்க குமார்.
இந்தக்கோயிலும் ஆர்கே புரம்தான். தமிழ்ச்சங்கம் தெருவுலே நேரா வந்தோமுன்னா விவேகானந்தா ரோடு
கட் பண்ணிட்டா வெங்கடேஸ்வரா தெரு இருக்குல்லையா அங்கேதான் கோவில். உங்களுக்குத்தான் தெரியுமே
தில்லியிலே ரோடு, தெரு எல்லாமே ஒரு மார்க்கமா இருக்குன்னு. அதுக்குதான் அந்த மார்க், இந்த மார்க்ன்னு
(Marg) வச்சுருக்காங்க:-))))
படம் கெட்ட கேட்டுக்கு கருத்தே வேணாமுன்னு ப்ளொக் நிச்சயம் பண்ணிருச்சா?
போய்ப் பார்த்தா.....பின்னூட்டப்பெட்டி இருக்கே!
இக்க்ஓரிரு முறை சென்றுள்ளேன். போக வர பஸ் வசதி சரியாக இல்லாததால் அதிகம் செல்ல முடிவதில்லை.
பக்கத்தில் ஒரு காமாட்சி அம்மன் கோவிலும், வைகுண்டநாதர் கோவிலும் உள்ளதே போனீங்களா? (ஜே.என்.யூ காம்பஸ் அருகில்)
//ஆர்.கே.புரம் செக்டார் 3யில் கூட ஒரு பெருமாள் கோயில் உள்ளது.//
குமார், அதே கோவில் செக்டார் - 3 தான் இந்த கோவில்.
படங்கள் நல்லா இருக்கு.
வாங்க சிவமுருகன்.
அய்யப்பன் கோவில் வழியாவந்து ரிங் ரோடைப் புடிச்சாச்சு. இந்தப் பக்கம்
போயிருந்தா ஒல்ட் கேம்பஸ் கோயில் கண்ணுலே பட்டுருக்கும்.
பரவாயில்லை. அடுத்தமுறைக்கு லிஸ்ட் வளருது:-)))))
ஓ! பஞ்சாமிர்தம் முடிச்ச கையோடு லட்டு தேடிப் போயிட்டீங்க. அதுவும் கெடைச்சிருச்சு. படங்கள நல்லா சுத்திச் சுத்தி எடுத்திருக்கீங்க. நல்லா வந்திருக்கு.
சமீபத்துல ஐதராபாத் போயிருந்தப்போ அங்க பிர்லா மந்திருன்னு ஒரு கோயில். பகல் வேளைல போனதால கூட்டமே இல்லை. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நீண்ட நேரம் வணங்க முடிந்தது. அங்கயிருந்து சுத்திப் பாத்தா ஐதராபாத்தே தெரியும். மலை மேல கோயிலு.
அக்கய்யா! அன்னி பிக்சர்ஸ் பகுந்தம்மா!
மீக்கு சால் தாங்ஸ் தெலிய சேஸ்துன்னானு!
// SP.VR. சுப்பையா said...
அக்கய்யா! அன்னி பிக்சர்ஸ் பகுந்தம்மா!
மீக்கு சால் தாங்ஸ் தெலிய சேஸ்துன்னானு! //
நாக்கு ஒக டவுட்டுலு. அக்கா எப்படி ஐயாவாக முடியும்? அக்கய்யான்னு கூப்புடுறது தப்பு லேதா? அக்கம்மான்னுதானே கூப்பிடனும். எலக்கணப்படி அதுதானே சரி. தெலுங்குக்காரங்க அடிக்க வராதீக.
வாங்க வாத்தியார் ஐயா.
தமிழ்மணம் 'தெலுகுவாஸன' யாப் போச்சுன்னு ஆளுங்க அடிக்க வந்துறப்போறாங்க:-))))
வாங்க ராகவன்.
நீங்க 'ஹை'தராபாத் பத்தி எழுதுங்களேன். ( நான் இன்னும் அங்கே போனதில்லை)
எலக்கணப்படி 'ஒக டவுட்டுலு' வும் தப்புதான்.
டவுட்டு - ஒருமை
டவுட்டுலு - பன்மை
அக்கைய்யா, அம்மைய்யா எல்லாம் மரியாதைக்குரிய விகுதிதான்.
இது தெலுங்கு அய்ய. தமிழ் ஐயா இல்லையாக்கும்:-))))
அக்கய்யா' என்பதே சரி!
தமிழில் உள்ள ஐயா' வைத் தெலுங்குடன் சேர்க்காதீர்கள்
மூத்த சகோதரியை அக்கய்யா என்றுதான் சொல்வார்கள்
வலைபபப்திவர்களுக்கு நீங்கள் மூத்த சகோதரிதானே?
இளைய சகோதரி யார் தெரியுமா?
வீட்டில் யானைகள் வளர்க்கிறாரே அவரேதான்!
// துளசி கோபால் said...
வாங்க ராகவன்.
நீங்க 'ஹை'தராபாத் பத்தி எழுதுங்களேன். ( நான் இன்னும் அங்கே போனதில்லை) //
நானும் அங்க ரொம்பப் பாத்ததில்லை டீச்சர். போனதும் ஒடம்புக்கு முடியாமப் போச்சு. வெயில் ஏறி ஒடம்பு சூடாகி..பயங்கர வயித்துவலி. எப்படியோ ஒருவழியா சரியாச்சு. அத்தோட விட்டதா? சாப்பாடு! ஐயோ ஐயோன்னு கூப்பாடு போட வெச்சிருச்சே! எதத் தொட்டாலும் காரம். வெளிய போனா வெயிலு. நான் என்ன செய்வேன்? நேக்கு யாரத் தெரியும். :-(((((((((((( ஐதராபாத் போனதுல ஒரே சந்தோசம் என்னோட நண்பரப் பாத்தது. அம்புட்டுதாங்க.
// எலக்கணப்படி 'ஒக டவுட்டுலு' வும் தப்புதான்.
டவுட்டு - ஒருமை
டவுட்டுலு - பன்மை //
ஒருமை பன்மை தெரியாத எருமைன்னு திட்டாதீங்க டீச்சர் :-((((((
// அக்கைய்யா, அம்மைய்யா எல்லாம் மரியாதைக்குரிய விகுதிதான்.
இது தெலுங்கு அய்ய. தமிழ் ஐயா இல்லையாக்கும்:-)))) //
ஓ! அப்ப தெலுங்கு அய்யா தமிழுக்கு வந்தா அக்காவாயிருவாரா! இது எனக்குத் தெரியாமப் போச்சே! ஆனாலும் அங்க ஆட்டோ டிரைவருங்க கிட்ட நான் தெலுங்குல பேசிச் சமாளிச்சத நீங்கள்ளாம் பாத்திருக்கனுமே......நல்லவேளை பாக்கலை.
//அப்புறம் வீணா மதச் சண்டை, கலவரமுன்னு ஏற்படச் சான்ஸ் இருக்காதுல்லே? இன்னும் கொஞ்சம் கவனமாப் பார்த்ததுலே பக்கத்துக் கட்டிடம் புழக்கத்துலே இல்லை. விசாரிச்சப்ப, அது சரித்திரச் சின்னமா நிக்குதுன்னு சொன்னாங்க//
துளசியக்கா!
எனக்கும்; மனதுக்குள் திக்கெனு இருந்தது. கடைசி வரி..சமாதானமாக்கியது;
படங்களுடன் அருமையா? சொல்லியிருக்கிறீங்க!!
கண்ணும் கண்ணும் நோக்கியா ரசித்தேன்.
டீச்சர், இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிப் போச்சு மன்னிச்சுடுங்க. வெள்ளிக்கிழமைனாலே வாரயிறுது மூடா? அதான்.
கிடைச்சுது சான்ஸுன்னு நம்ம் குமார் முன்னாடியே வந்துட்டுப் போயிட்டாரு. அவருக்கு இன்னைக்கு வயித்து வலி இல்லாம இருந்துதான்னு கேட்கணும்.
கேட்க வேண்டியது இன்னும் ஒண்ணு இருக்கு - என்ன இது இங்க ஒரே தெலுங்கு வாஸனையாப் போச்சு?
(ஒன்னும் பறையெண்டா, பக்ஷே இதெண்ணும் ஷெரியில்ல கேட்டோ)
//'கண்ணும் கண்ணும் நோக்கியா'ன்னு நானும் பார்த்தேன்.//
பெருமாளை பார்த்து கண்ணோடு காண்பெதல்லாம் தலைவா அப்படின்னு பாடக்கூடாதுன்னு படிச்ச ஞாபகம் இருக்கே. அது எனக்கு தப்புன்னுதான் தோணிச்சு, நீங்க சொல்லறதும் அப்படித்தான் இருக்கு. கேஆர்எஸ் வரட்டும் கேட்டுடலாம்.
//ஒரு பத்துப் பதினைஞ்சு நோஞ்சாளா இருக்கும் துளசிச்செடிகள். //
நோஞ்சாள் துளசியா? அப்படி வேற இருக்கா டீச்சர்? :)
//எல்லாரையும் உக்காரவச்சுத் தொன்னையிலே பச்சைக்கற்பூரம், ஏலக்காய் மணத்தோடு சுடச்சுடச் சக்கரைப் பொங்கல்.//
போட்டோ எங்க?
//கோயிலைச் சுத்திச் சுத்தி எடுத்த படங்கள்//
சுத்திச் சுத்தி வந்தீக
சக்கர பொங்கல் அடிச்சீக
ஐய்யய்யோ தொன்னையும் காணுமாமே
எத்தனை தொன்னை அடிச்சீக?
என்னையும் மனசில் நினைச்சீக?
ஆனாலும் நீங்க ரொம்ப மோசங்க.
//தெரு எல்லாமே ஒரு மார்க்கமா இருக்குன்னு.//
:))
தெரு மட்டுமா டீச்சர்? :))
போன பின்னூட்டத்தில் ஒண்ணு சொல்ல மறந்து போச்சு.
//'காருள்ள போதே சுற்றிக்கொள்'னு புது மொழி இருக்காமே:-)))) //
ஏங்க இந்த காரு மேட்டர் எல்லாம் புது மொழியாங்க? இதுல சிரிப்பு வேற!
பதிவு இருக்கும் பொழுதே பதிந்து கொள்.
மார்க்கெட் இருக்கு பொழுதே பின்னூட்டம் வாங்கிக்கொள்.
என்னங்க வாத்தியார் ஐயா,
//தமிழில் உள்ள ஐயா' வைத் தெலுங்குடன் சேர்க்காதீர்கள்//
கோச்சுக்கிட்ட மாதிரி இருக்கே!
//அக்கைய்யா, அம்மைய்யா எல்லாம் மரியாதைக்குரிய விகுதிதான்.
இது தெலுங்கு அய்ய. தமிழ் ஐயா இல்லையாக்கும்:-))))//
இதைக் கவனிக்கலையா? :-))))))
//வீட்டில் யானைகள் வளர்க்கிறாரே //
!!!!!!!!!!!!!!!!!!! :-)))))))))))))))))))))))))))))))))))))
என்ன ராகவன்,
அவ்வளவு காரமா சாப்பாடு?
அடடா............ நான் தப்பிச்சேன்( இதுவரை போகலையே)
அடுத்தமுறை போகும்போது வெறும் தச்சுமம்மு மட்டும் சாப்புட்டுக்குங்க:-)))
வாங்க யோகன்.
//கண்ணும் கண்ணும் நோக்கியா ரசித்தேன். //
நீங்க இப்படி. கொத்ஸ் பாருங்க கூடாதுன்றார்(-:
கொத்ஸ்,
கேஆரெஸ் நல்லபடிச் சொல்லணுமேன்னு பெருமாளை வேண்டிக்கிட்டு இருக்கேன்.
துளசி பெ(ன்)ண் இல்லையா? அதுனாலே நோஞ்சாள்- பெண்பால்
துளசிச் செடிக்குமட்டுமே இது பொருந்துது:-))))
மூலவர் முன்னாடி உக்காரவச்சுக் கொடுத்ததை எப்படிப் படம் எடுக்கறதாம்?
அதுவுமில்லாம அதையுமே நான் 'கண்ணுலே' முழுங்குனதோடு சரி.
நம்ம வாகன ஓட்டுனர்தான் 'லபக்கிட்டாரு'.
//பதிவு இருக்கும் பொழுதே பதிந்து கொள்.
மார்க்கெட் இருக்கு பொழுதே பின்னூட்டம் வாங்கிக்கொள்.//
கொத்ஸின் புது மொழிகள் இருக்கட்டும். சமயத்துக்கு உதவும்:-))))
கலர் அடிச்சு புதுசா மொசைக் டைல் போட்ட சுவர் வச்ச கோயில விட
என்னமோ அந்தகால இருட்டான அதிகம் பெயிண்ட் இல்லாத கோயில் தான் மனசுக்கு நிறைவா இருக்குதுன்னு சொன்னேனில்லையா இந்த கோயில் எனக்கு அப்படித்தான் தோணவைக்கும்.
நம்ம ஊரிலேயே இருக்க மாதிரி.
thelugu thelleethu.
mikku english ok?
mindum varukiren.
naane varuven:-)
//வீட்டில் யானைகள் வளர்க்கிறாரே //
யாருங்கய்யா இது? வீட்ல யானையை வளர்க்குறவங்கன்னா 'பெத்த' பார்ட்டிகளால்ல இருக்கணும்.. ஆமா.. யானையை வளர்த்து என்ன பண்ணப் போறாங்க.. ஊர்வலம் போறதுக்கா.. இல்ல இந்த மாதிரி கோயில் வாசல்ல நிக்க வைக்கிறதுக்கா?
வாங்க முத்துலெட்சுமி.
டைல்ஸ் எல்லாம் ஒட்டி இருக்க வேணாம். ஆனா கோபுரம் எல்லாம் பளிச்சுன்னு இருந்தாத்தானே இன்னும்
அழகு?
அன்னைக்குக் கோயில் அமைதியாத்தான் இருந்துச்சு. ஒருவேளை பூஜை நேரம் முடிஞ்சிருச்சுன்னோ?
வாங்க வல்லி.
தெலுங்கு தெரியாததுக்கா இவ்வளோ வருத்தம்?
நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?
'பாலாஜி'யே சொல்லிக் குடுத்துருவார். அவரே 'வெட்டியா'த்தான் இருக்காராம்:-)
வாங்க உண்மைத்தமிழரே.
//வீட்ல யானையை வளர்க்குறவங்கன்னா 'பெத்த' பார்ட்டிகளால்ல இருக்கணும்..//
ஆமாங்க பெரிய இடம்தான். எனக்கப்புறம் என்னோட யானைகளையும் இவுங்களுக்குத்தான்
எழுதி வச்சுருக்கேன்:-) நம்ம (ப்ளொக்) வாரிசுதாங்க இவுங்க.
Post a Comment