Tuesday, April 03, 2007

Zen garden

ட்ஸென், ஜென், சென் இப்படிப் பலதும் சொல்லி எழுதிப்பார்த்தாலும் Zenக்குச்சரியான உச்சரிப்பு வரமாட்டேங்குதே(-: சரி போட்டும், இதா நமக்கு முக்கியம்.தோட்டத்துக்குள்ளெ போலாம். ட்ஜென்( அய்யோ பழையபடி தகராறு?) மணல்தோட்டம்.ஜப்பானியர்கள் சமூகத்துலே ஆரம்பிச்சதாம் முதல்முதலில். அங்கேதானே 'புத்தமதம்'ரொம்பப் பலமா வேர் ஊனியிருக்கு. தியானம் செய்யத் தகுந்த இடம் இந்த(ஹை, பேர் எழுதாமத் தப்பிச்சுட்டேனே)த் தோட்டமாம். மனசுலே இருக்கும் தேவையில்லாத எண்ணங்களைக் களைந்து அமைதிப்படுத்தி, ரொம்பசாந்தமா, சமாதானமா ஆக்கி குறைஞ்சது ஒரு கணமாவது எண்ண ஓட்டமில்லாம ஆடாம அசையாம வச்சுக்கும் சக்தி இருக்காம் இதுக்கு.
இந்தவகைத் தோட்டங்களுக்கு முக்கியமானதுன்னு பார்த்தா கடல், மலைகள், காடு கட்டாயம் வேணும்.வீட்டுக்குள்ளெ உக்காந்த இடத்துலே கடல், மலை, காடுக்கு எங்கே போவேன்?கவலை வேணாம். அது உன்னைத்தேடி இங்கேயே வருது.அழகான ஒரு அட்டைப் பெட்டி. வெளியே போட்டுருக்கு, அதுக்குள்ளெ 'எட்டு சாமான்கள் இருக்கு'ன்னு.
திறந்தா, ஒரு மரத்தாலான ட்ரே. 28.5 x 19.5 செ.மீ அளவு.
வெள்ளை மணல்- ஒரு பொதி ( அசப்புலே நம்மூர் கோலப்பொடி)
கூழாங்கல் - 3
மூங்கில் வேலி, மேலே வேயப்பட்ட கூரையுடன்
வாளி
மூங்கில் Rake
நீண்ட கைப்பிடியுள்ள மரக்கரண்டி
kakei fountain (ஜப்பானிய நீரூற்று?) மரக்கட்டையில் செஞ்சு நம்மூர் அடிப்பம்பு குழாய் மாதிரி இருக்கு)
இதையெல்லாம் மரத்தட்டுலே எடுத்து வச்சுத் தோட்டம் போட்டுறவேண்டியதுதான்.சரி. அந்தக் கடல், மலை, காடு எங்கே?
கடல்- மணல்
மலை- கூழாங்கல்
காடு- மூங்கில் Rake
இது ஒருவித தியானம் செய்யற பலனைக்கொடுக்கும். எந்த வேலை செஞ்சாலும்,அவதிஅவதியாச் செய்யாம நிதானமா, செய்யறவேலையை அனுபவிச்சுச் செய்யணுமாம்.ஒரு ஞானி சொல்லி இருக்கார். ( பதிவு எழுதறதைச் சொல்றாரோ?)
கணினி பக்கத்துலே வச்சுக்கிட்டு அப்பப்ப, 'தோட்டத்தில் டிசைன் போட்டு'த் தியானம்செஞ்சுக்கிட்டே இருக்கேன்.

whatever the task do it slowly with ease, in mindfulness
Don't so any tasks in order to get them overwith
Resolve to do each job in a relaxed way with all your attention
"Thich Nhat Hanh"


இந்த தோட்டத்தை'எதையெடுத்தாலும் ரெண்டு டாலர்' கடையிலே வாங்குனேன். ரெண்டே டாலருக்கு எப்படி? இது செஞ்சு விக்கலாமுன்னு எப்படித் தோணுச்சு? உக்காந்து யோசிக்கறதுன்றது இதானா?


மகள் பார்த்துட்டு சொன்னா " ஜிகே கிட்டே காமிக்காதே. மணலும் ட்ரேயும் தனக்குன்னு நினைச்சுக்கப்போறான்"

35 comments:

said...

டீச்சர், இது எங்க கஸின் வீட்டில் பார்த்தேன். ரொம்ப விலை கொடுத்து வாங்குனாங்களாம்.

அந்த காலத்தில் என்னடா இது வீட்டுக்குள்ள மண்ணையும் கல்லையும் எடுத்துக்கிட்டு வர அப்படின்னு திட்டு கிடைக்கும் ஒவ்வொரு முறை பீச் போயிட்டு வரும் போதும். இப்போ என்னடான்னா அதுக்கு ரெண்டு ரூபாய்.

நம்ம ஊரில் ஏற்கனவே ஆத்து மணலை அள்ளிக்கிட்டு இருக்காங்க. இந்த பிஸினஸ் வேற தெரிஞ்சுது, அம்புட்டுதான் போங்க.

said...

ழென்
இதைஅடிநாக்கில் இருந்து சொல்லிப் பாருங்கள்!
:)

said...

வாங்க கொத்ஸ்.

இந்த பாக்கிங் செய்த வெளிப்புறப் பெட்டியே ஒன்னரை டாலர் இருக்குமேங்க:-)))

//நம்ம ஊரில் ஏற்கனவே ஆத்து மணலை அள்ளிக்கிட்டு இருக்காங்க.
இந்த பிஸினஸ் வேற தெரிஞ்சுது, அம்புட்டுதான் போங்க.//

நான் சொல்ல மாட்டேன். நீங்களும் சொல்லிறாதீங்க ஊர் மக்களுக்கு:-)

said...

வாங்க VSK.

சொல்லிப் பார்த்தேன்.

ஊஹூம்...........(-:

said...

உங்களுக்கு வரலைன்னு சொல்றீங்க1
ம்ம்
என்னமோ போங்க!
:)

எனக்கு அழகா சொல்ல வருது, ழென், zen என!

said...

VSK,

இப்பத்தான் நான் செஞ்ச தப்பு உறைக்குது.

'ZEN ஐ உச்சரிப்பு மாறாம அப்படியே தமிழில் எப்படி எழுதணுமுன்னு தெரியலை'ன்னு சொல்லி இருக்கணும்.

என்னவோ எழுதிக் குழப்பி வச்சுருக்கேன்(-:

said...

உங்களின் இன்றைய பதிவு இன்றே காலப்பெட்டகத்தில் வந்துவிட்டதே! தலைப்பு செய்துவிட்ட மாயமா ?
:-)

said...

வாங்க பா.கீ.

//காலப்பெட்டகத்தில்.......தலைப்பு.....//?

'இந்த நிமிஷம் மட்டுமே நிஜமெ'ன்ற உண்மையை zen சொல்லறாரோ என்னவோ? :-)))

said...

ஒரு ஞானி சொல்லி இருக்கார். ( பதிவு எழுதறதைச் சொல்றாரோ?)
ஞானிக்கே உள் குத்தா?

said...

வாங்க குமார்.

நமக்கு ஞானியும் அஞ்ஞானியும் ஒண்ணுதான்:-))))
எல்லாம் கடந்த நிலை.

said...

இப்பல்லாம், முன்புபோல் குறிப்பிட்ட நேரத்தில் பதிவுகள் வர்ரதில்லை
ம்ம்ம் வயசாய்டிச்சில்ல

said...

வாங்க சிஜி.


//ம்ம்ம் வயசாய்டிச்சில்ல //

ஆமாமாம். படிக்கிறவங்களுக்குத்தானே? :-))))

said...

வாழ்க்கை எப்படியெல்லாம் Commercial..ஆ போயிட்டு இருக்கிறதுங்றதுக்கு இது ஒரு உதாரணம்....நான் தோட்டத்தை சொல்றேன்...

said...

// ட்ஸென், ஜென், சென் இப்படிப் பலதும் சொல்லி எழுதிப்பார்த்தாலும் Zenக்குச்சரியான உச்சரிப்பு வரமாட்டேங்குதே //

禅 -ன்னு சொல்லிப்பாருங்களேன்.

ஏதோ ஒரு ஜப்பானிய அகராதியிலிருந்து http://www.csse.monash.edu.au/~jwb/cgi-bin/wwwjdic.cgi?1E சுட்டு ஒட்டியிருக்கிறேன். சரியா தவறா என்று தெரியல :-)

said...

//காலப்பெட்டகத்தில்.......தலைப்பு.....//?

'இந்த நிமிஷம் மட்டுமே நிஜமெ'ன்ற உண்மையை zen சொல்லறாரோ என்னவோ? :-)))//

ஆகா என்ன அழகா விளங்கிக்கொண்டு எங்களுக்கும் தத்துவத்த எளிமையா விளக்கி இருக்கீங்க ...குருவே!!

said...

என்னப்பா எல்லாரும் செம்/ஸென்/ட்ஸென் பத்தி...

said...

வாங்க பங்காளி.

காலார நடக்கணுமுன்னு இருந்தது இப்பக் கையாலே துழாவறதா ஆயிப்போச்சு.
நானும் தோட்டத்தைத்தான் சொல்றேன்:-)

said...

பா.கீ,

நன்றிங்க.

said...

வாங்க முத்துலெட்சுமி.

//குருவே...//

பதிவர்கள் 'அடுத்த நிலை'க்குப் போய்க்கிட்டே இருக்கோம்:-)

said...

வாங்க மங்கை.

வாழ்க்கையைப் புரிஞ்சுக்கிட்டோமுன்னு ச்சும்மா ஒரு பாவ்லா காமிக்கதான்.

கண்டுக்காதீங்க:-))))

said...

எப்படியோ மணலை அளையணும். அதான்னெ?
தெரியும் ! கொஞ்சம் 30 வயசு தாண்டினா நமக்கு இப்படித்தான் தோணும்:-)

சென் தத்துவம்,ரெய்க்கி,மாக்னடிக் ஹீலிங் எல்லாமே ஐம்புலனத்தான் சொல்லறாங்க.
என்ன இந்த 3 இன்ச் புலன் ஒண்ணு முகத்தில உள்ள இருக்கே. அதைக் கட்டுப் படுத்தினா எல்லாம் சரியாப் போயிடும்.:-)

said...

ஆமாம் வல்லி.

எத்தால் கெட்டே?

நோரால் கெட்டேன்.

அருஞ்சொல் விளக்கம்:
நோரு= வாய் ( தெலுங்கு)

said...

////ம்ம்ம் வயசாய்டிச்சில்ல //

ஆமாமாம். படிக்கிறவங்களுக்குத்தானே? :-))))

//

என் சிரிப்பு இன்னும் அடங்கல..... உங்களுக்கு "டைட்டன்" பட்டம் தரலாமுன்னு இருக்கிறேன். செம டைமிங்!

said...

வாங்க காட்டாறு.

என்னைவச்சுக் காமெடிகீமெடி ஒண்ணும் பண்ணலைதானே? :-)

said...

சாதா தோட்டமே நம்ம கிட்ட மாட்டிட்டு படாத பாடு படுது. ஜென் தோட்டமெல்லாம் பாவம். பொழச்சுப்போட்டும்

said...

சிஜி போட்ட பவுன்சருக்கு இப்படியா சிக்சர் அடிப்பது?
:-))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? இது ரொம்ப 'வாகா, வழியா' இருக்கு.

என் வீட்டுத் தோட்டத்தில் பூ (???) வெல்லாம் கேட்டுப்பார்:-)

மெனெக்கெட வேணாம்றதே முக்கிய பாயிண்ட்:-)))))

said...

வாங்க குமார்.

சிக்ஸரா? 'பந்தைக் காணாமுன்னு' காட்டாறு தேடப்போயிருக்காங்க:-)))))

said...

இந்த மாதிரி ட்ரே + ஒரு மூட்டை (சின்னதா லெதர்ல செஞ்சது அழகாருந்தது) மணல் + சின்ன குட்டி ரேக்கர் அழாக பேக் பண்ணி கிஃப்ட்டா அனுப்பியிருந்தாங்க IBM கம்பெனி காரங்க.

கொஞ்ச நாள் அத முன் ரூம்ல டீப்பாயில வச்சி டெய்லி அஞ்சி நிமிஷன் டிசைன், டிசைனா போட்டு மன நிம்மதிய தேடிக்குவோம் நானும் என் மகள்களூம்..

ஆனா அதுலயும் ரெண்டுக்கும் போட்டி வந்துரும்.. மணல் ட்ரேய விட்டு வெளியில சிந்தும்.

மனநிம்மதிக்கு வேண்டி வந்த ட்ரே என் மனவியோட மனநிம்மதியவே கெடுக்க ஆரம்பிச்சது. எல்லாத்தையும் மூட்டை கட்டி பரண்ல வச்சிட்டாங்க.

அத்தோட முடிஞ்சது அதோட கதை..

இப்ப நிம்மதியா இருக்கு வீடு:(

said...

டீச்சர்...இப்பல்லாம் எதுவுமே சிம்பிள் பேக்கிங்கா இருக்கனும். யோகா ஃபார் டம்மீஸ். இப்ப ஜென் ஃபார் டம்மீஸ் (ஒங்கள டம்மீன்னு சொல்ல வரலை) பொதுவா இப்பிடிக் கெடைக்குதுன்னு சொல்றேன். சரி. வாங்கீட்டீங்க. அதுனால எதுவும் பலன் தெரிஞ்சா சொல்லுங்க.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

நம்ம வீட்டுலே கணினி மேஜையில் 'தோட்டம்' இருக்கு. நம்ம கோபாலகிருஷ்ணன்
'கவனிக்காதவரை'யில் பிரச்சனை இருக்காதுன்னு நம்புவோமாக.:-))))))))))

தினமும் ஒரு பத்துமுறை தோட்டத்தில் வரையறதை ஒரு ரிச்சுவலாப் பண்ணிக்கிட்டு
இருக்கேன். இப்படியே போனா, பதிவு எழுதுமுன் ஒருமுறை, எழுதுனதைப் படிச்சுப்
பார்க்கறப்ப ஒரு முறை, அப்புறம் பப்ளிஷ் செய்யறது, தமிழ்மணத்துலே 'அளி'க்கறது,
பின்னூட்டம் மாடரேஷன், அதுக்கு பதில்ன்னு ஒவ்வொருமுறையும் வரைஞ்சுட்டுத்தான்
செய்யணுமுன்னு 'விதி'யாகுமோ? :-))))

said...

வாங்க ராகவன்.
பலன் இப்பவே தெரிய ஆரம்பிக்குது.
கணினி பக்கம் யார் வந்துட்டுப்போறாங்கன்னு கண்டு பிடிக்க உதவுது:-)))
மணலைப் பார்த்தாக் கை குறுகுறுன்னாது. வரைஞ்சுருவாங்கல்லே?
'துப்பு'த் 'துலக்க'ப்படுகிறது.

said...

Zen garden தான் த்யானம் செய்ய நல்ல இடம் அப்படின்னு சிலர் நினைக்கறாங்க. Zen அப்படி சொல்லவே இல்லை. உண்மையில் இதெல்லாம் ஒரு விற்பனை தந்திரம்தான்!

said...

வாங்க ஜீவா.

இது மட்டுமா எல்லாமெ இப்ப வியாபாரமாத்தான் போச்சு.

எது எப்படியானாலும் கோலப்பொடி கிடைச்சிருக்கு. கோலம் போட்டு
மனசை ஒருமுகப்படுத்தலாம்தானே? :-))))

said...

அழகுச்சங்கிலிக்கு உங்களை அழைத்துள்ளேன்!