Friday, April 20, 2007

கண்ணே, உனக்கிந்த கதியா?














நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 15 )

வெள்ளிக்கிழமை, காலைநேரம். தொடர்ந்து இன்னிக்கு மூணாவது நாளா நம்ம ச்சீனுவைப் பார்க்கிறேன். இன்னிக்குப் பார்க்கறதுதான் இப்போதைக்குக் கடைசி. சாயந்திரம் கிளம்பிடறோம். உல்லாசமா நடந்து கோயில் மண்டபத்துலே ஏறிப்போய் பார்க்கறேன், 'பக்'ன்னுச்சு நெஞ்சு. அலங்காரப் பிரியனான எம் பெருமா(ன்)ள் இப்படி ஒண்ணும் போட்டுக்காமஅசட்டையா இடுப்பில் ஒரு வேட்டியோடு நிக்கறார், ஏதோ இப்பத்தான் குளிச்சு முடிச்சு பாத்ரூமிலே இருந்து வந்தமாதிரி!கழுத்துலே மட்டும் ஒரே ஒரு மாலை,ச்சும்மா பெயருக்கு. சாமிக்கு ப்ரபைகூட இல்லையே! தலைவாரிக்க வரமாட்டேன்னு முரண்டு பிடிக்கும் குழந்தை போல இது என்ன கோலம்? இதென்ன தலை இத்தனை ச்சின்னதா இருக்கு? நெத்தித் திருமண் மட்டும் இல்லைன்னா எனக்கே(!) இது யாரோன்னு சந்தேகம் வந்துருக்கும், சினிமாக்காரங்களை மேக்கப் இல்லாமப் பார்த்து இது யாரோன்னு குழம்புறதைப்போல. இது எதையும் கண்டுக்காம, முன்னாடி பெஞ்சுலே உற்சவமூர்த்தி வழக்கம்போல் அலங்காரத்துடன்.

''என்னடா ஆச்சு? ஏன் இப்படி?' ஒண்ணும் சொல்லத் தோணாமல் அர்ச்சனைச் சீட்டை நீட்டுனேன். பட்டர் அர்ச்சனையை முடிச்சுட்டுப் பிரசாதம் கொடுத்தார்.சந்நிதி முன்னே உக்கார்ந்து உத்துப் பார்த்துக்கிட்டே இருக்கேன். சொல்லமுடியாத துக்கம் தொண்டையை அடைக்குது. சில வினாடிகளுக்கு மேலே தாங்கமுடியாமல் கரகரன்னு கண்ணீர் வழிஞ்சோடுது. அதை இவர் பார்க்காம இருக்கணுமேன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டாலும் திடீர்னு வந்த கேவல் காட்டிக் கொடுத்துருச்சு.நல்லவேளை..... கோவிலில் கூட்டமே இல்லை. நாங்க ரெண்டுபேர் மட்டும்தான். மணி ஒம்பதாகுதே....... எல்லாரும்வேலைக்கு அரக்கப்பரக்க ஓடிக்கிட்டு இருப்பாங்க.

கோபால் திடுக்கிட்டு போன முகத்தோட என்னம்மா, என்ன ஆச்சுன்றார். எனக்கு ஹார்ட் அட்டாக் நெஞ்சுவலியோன்னு அவருக்கு பயம். சாமிப் பக்கம் கை காமிச்சுக்கிட்டே,'பாவம் பெருமாளுக்கு ஒண்ணுமே இல்லை'ன்னு அழறேன். அவனைப்பத்தி ஏன் கவலைப்படறே? நம்மளைப் பத்திக் கவலைப்படு'ன்னு திருவாய் மலர்கிறார். கொஞ்சம் அழுகையை முடிச்சுக்கிட்டு,மனசைத் தேத்தினப்புறம் அங்கே மண்டபத்தில் ஒரு ஓரமா உக்கார்ந்திருக்கும் பட்டரிடம் 'ஏன் இன்னைக்குப் பெருமாள் ஒண்ணுமே போட்டுக்காம இப்படி மூளியா இருக்கார்?'னு கேட்டேன்.

'இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே. அதான் நேத்ர தரிசனம்' புன்முறுவலோட சொல்றார் பட்டர். 'உச்சிப்பூஜை முடிஞ்சவுடன் பழையபடி எல்லா அலங்காரமும் செஞ்சுருவோம். சாயங்காலம் வாங்க. ஜொலிப்பார்'

நேத்ர தரிசனம்னு சொன்னா என்னன்னு தெரியலை. ஒருவேளை கண்ணை மறைச்சுப் போட்டுருக்க நாமத்தை இன்னிக்குப் போட்டுக்காம 'கண்ணைத் திறந்து' நம்மளைப் பாக்கறாரோ? இல்லே நம்ம நேத்திரத்தால் நாம் அவரை ஒரிஜனல்ரூபத்தில் பார்க்கறதாலா? ஏறக்குறைய 23 வருஷமா சிங்கைச்சீனுவைப் பார்க்க வந்திருந்தாலும் வெள்ளிக்கிழமையா அமைஞ்சது இதுதான் முதல்முறை. எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு நகைநட்டு(?)ப் போட்டுக்காம ஹாயா இருந்தகாலங்கள் நினைவுக்கு வந்துச்சு.

இங்கே கோயில்களின் சுத்தத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. எல்லா இடங்களும் பளிச். தூண்களில் இருக்கும்அலங்காரச் சிற்பங்களும் சரி, மேல் விதானத்தில் இருக்கும் ஓவியங்களும் சரி எப்போதும் வர்ண மெருகு கலையாமல் எதோ இன்னிக்குத்தான் வரைஞ்சு வச்ச்மாதிரி இருக்கு. அதிலும் மதுரை மீனாட்சி,என்ன களையான முகம்! அண்ணனை நேராப் பார்க்கறாப்போல மூலவரை நோக்கி இருக்கும் வண்ண ஓவியம் முன் மண்டபத்தூணில்.அருமையான பராமரிப்பு. கோவில்களில் பட்டர் 'தேமே'ன்னு இருக்கார். எல்லோரையும் ஒரேவிதமாத்தான் நடத்தறார். அவுங்க கண்களிலும் பெருந்தன்மை இருக்கு( என்னுடைய தோணலோ?)

வெறும் 60 காசுக்கு ஒரு அர்ச்சனைச்சீட்டு. அர்ச்சனைன்னா பெருசா ஒண்ணுமில்லை. ரெண்டு ஸ்லோகமோ, சஹஸ்ரநாமத்துலே நாலு வரியோ சொல்லி ஒரு தீபாராதனை. பிரசாதமா கொஞ்சம் உலர்ந்த திராட்சை( ச்சின்னச் சின்ன பாலித்லீன் பையிலே அஞ்சு கிராம் எடை வரும் அளவு. எல்லாம் மடியா, மிடில் ஈஸ்ட்டுலே இருந்து வருதுன்னு ரெண்டு கிலோ அட்டைப்பெட்டி சொல்லுது) போதுமே! இதுவே தாராளம். அங்கே கோயில் புறாக்களுக்கு இது ரொம்பப் பிடிச்சுப்போச்சு:-)

இந்தக்கோயில் அங்கே அரசாங்கத்தின் இந்து எண்டோவ்மெண்ட் போர்டின் நேரடிப்பார்வையில் இருக்குன்னு கோயிலைஒட்டியே இருக்கும் போர்டு ஆபீஸில் இருக்கும் நண்பர் சொல்லி இருக்கார். போனவருஷம் கும்பாபிஷேகம் நடந்துருக்கு.பக்கத்துலேயே ஒரு பெரிய ஹால் இருக்கு. கல்யாணம் போன்ற வைபவங்களுக்கு வாடகைக்குக் கிடைக்குது. சிராங்கூன் ரோடுலெ வழக்கமா இருக்கும் சுற்றூலாப் பயணிகள் கூட்டம் முஸ்தாஃபா செண்டரோடு நின்னு போகுது. ஃபேரர் பார்க் ஸ்டேஷனுக்கு இந்தப் பக்கம் யார் மேலேயும் இடிச்சுக்காம 'ஹாயா'வே நடக்கலாம்.

சனி ஞாயிறுகளில் இந்தக் கோவிலில் கூட்டம் ரொம்ப இருக்காம். நானும் ஒரு சனிக்கிழமை அதிகாலை அஞ்சுக்குப் போயிருக்கேன். சுப்ரபாத சேவை நல்லா இருக்கு. இங்கே கோயிலில் மூலவரையும் படம் எடுக்கலாம். இது எனக்குரொம்பப் பிடிச்ச இன்னொரு விஷயம்.

கோயிலில் எடுத்த சில படங்களை இங்கே உங்களோடு பகிர்ந்துக்கறேன். அந்தப் பெருமாளின் ஆசிகள் உங்களுக்குக் குறைவறக் கிடைக்கட்டும்.

( படங்கள் கூடியதால் பதிவு சின்னதா இருக்கு)

தொடரும்...........

31 comments:

said...

கும்மானிங் டீச்சர்

said...

படம் சூப்பர். எப்போதும் போல் உள்ள உங்கள் நடை. வேறென்ன சொல்ல....

எதுக்கு உங்கள எல்லாரும் டீச்சர்ன்னு கூப்புடுறாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

said...

குட் மார்னிங் பெருசு.

அதிசயமா வகுப்புக்கு 'முதல்'லே வந்துருக்கீங்க? :-)
ம்ம்... இருக்கட்டும்.

said...

வாங்க காட்டாறு.

இங்கே துளசிதளத்துலே 'சரித்திர வகுப்பு' நடத்துறேனே,
அதைக் கவனிக்கலையா?

said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓ.....
நானும் மாணாக்கன்(ள்) ஆகலாமா?

said...

துளசி உங்களை என்ன பண்ணாத் தேவலை.
சீனுவைப் பார்த்தால் பாசம்,
அழுவாங்க அதுவும் தெரியும்.
இதுவும் தெரியும்.
இதென்னைய்யா கோபால் பயப்படற
மாதிரி அழுவாங்களா.
சிங்கையில இருக்கிறாதுனாலே அவருக்கு சாய்ஸ் ஜாஸ்திப்பா.
ஆனால் நிர்மால்ய தரிசனம் பார்த்தாம் மனம் நெகிழ்ந்துதான் போகிறது.
நேத்திர தரிசனம் ரொம்ப உயர்த்தி.
அது கிடைத்தது சந்தோஷம்.
மீனாட்சி கொள்ளை அழகு.
கோவில்ல ஆஞ்சனேயடு படு கம்பீரமா இருக்காரே.
அக்ஷய திரிதையைக்கு நல்ல புண்ணியம்தான் உங்களுக்கு.;-))))

said...

காட்டாறு,
இவங்க நியுசிலாண்த் ஹிஸ்டரி பூராவும் எழுதிட்டாங்க. எனக்குஹ் தெரிந்த இவாளவு ஆராய்ச்சி செய்து நெட்டில பாடம் எடுத்தவங்க இவங்க ஒருத்தர்தான்.
கொத்ஸ் தான் முதல் மாணவர்.
கிட்டத்தட்ட நம்ம ஊரு சட்டாம்பிள்ளை மாதிரி.
வகுப்புக்கு வரதவங்களைப் பெஞ்சில நிக்க வைப்பாரு:-))

said...

காட்டாறு,
அர்ரியர்ஸ் நிறைய இருக்கும். பரவாயில்லை. கடைசி பெஞ்சுலே
உக்கார்ந்து படிச்சு முடியுங்க:-))))

said...

வாங்க வல்லி.

நிர்மால்ய தரிசனமுன்னா நாமும் மனசை அதுக்குத்
தயார்ப்படுத்திதான் போவோம். ஆனா இங்கே முதல்முறையா
'இவனை' இப்படிப் பார்த்ததும் 'அபுக்'ன்னு ஆயிருச்சு. அதான் தாங்க முடியலை.

அடடா........இன்னிக்கு அக்ஷ்ய த்ருதியையா? எல்லாருக்கும் புண்ணியம்
சரிசமமாப் பங்கிட்டுக்கலாம்.

காட்டாறுக்கு விளக்கம் சொன்னதுக்கு தேங்க்ஸ்.

said...

டீச்சர்,
என்ன இது சின்ன புள்ளையாட்டும் அழுதுக்கிட்டு. ஒரு நாள்தானே, பட்டு கலர், நகைன்னு நாலு வரி எழுத முடியாம போச்சேன்னு யாராவது அழுவாங்களா. பதிவு அந்த நாலு வரி இல்லாம சின்னதாப் போச்சுன்னு சொன்னா நாங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்க மாட்டோமா. இனிமே இந்த மாதிரி அழக்கூடாது என்ன. சரி போகட்டும்.

நம்ம கிளாஸ் பசங்க எல்லாம் நல்லா இருக்கணுமுன்னு வேண்டிக்கிட்டீங்கதானே?

said...

நகைநட்டு(?)ப் போட்டுக்காம ஹாயா
இங்க தான் "இடிக்குது".
அப்புறம் நகை வாங்குவது எதற்காக?-உங்களைச்சொல்லவில்லை.:-))
படங்கள் நன்றாக வந்திருக்கிறது.

said...

தாமதமாக வகுப்புக்கு வந்ததுக்கு மன்னிக்கனும், டீச்சர். நானும் மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் படித்துப் பார்த்துவிட்டேன். ஒரு ரோட்டுப் பெயர் தவிர இந்த கோவில் எந்த ஊரிலிருக்கிறது என்று புரிபடவில்லை :-)

படங்கள் அருமையாயிருக்கின்றன.

said...

எல்லாரும் சிங்கை போனா மாரியம்மன் கோயில் போனது பத்தி எழுதுவாங்க. பெருமாள் பத்தி எழுதி சரித்திரம் படைச்சிட்டீங்க.
பின்ன சரித்திர வகுப்பு எடுக்கறவங்க சரித்திரம் படைக்கலனா எப்படி.
நேர்ல பாத்த மாதிரியே இருக்கு படங்கள்

said...

வாங்க கொத்ஸ்.

எங்கே ஆளைக் காணோம்? 'அங்கே'யே இருந்திட்டீரா?

பெருசு இன்னிக்கு முதல்லெ வந்துட்டாரு பாருங்க.

//நம்ம கிளாஸ் பசங்க எல்லாம் நல்லா
இருக்கணுமுன்னு வேண்டிக்கிட்டீங்கதானே?//

பின்னே? இப்படி கோயில் கோயிலாப் போறதெல்லாம் உங்களுக்காகத்தானே?
எல்லோரும் நலமா இருக்கணுமுன்னுதானே 'டீச்சர்' நினைக்க முடியும்?

said...

நாகு, இதுக்குத்தான் கிளாஸ் எல்லாம் கட் அடிக்காம எல்லா கிளாசுக்கும் வரணும். நீங்க மிஸ் பண்ணின பாடம் இது.

ஒழுங்கா படிச்சு வையுங்க. அங்க ஒரு 10 வாட்டி இம்போசிஷன் எழுதுங்க. நாளைக்கு ஒரு டெஸ்ட் இருக்கு உங்களுக்கு.

said...

வாங்க குமார்.

//இங்க தான் "இடிக்குது".//

அதெல்லாம் எதுக்கு?:-) அப்ப நம்மகிட்டே இருந்ததே பேருக்கு ஒரு
ரெண்டு நகை. அதைக் கழட்டி வச்சுட்டுத்தான் முழுகணும். இல்லாட்டாத்
தேசாலா இருக்கறது கரைஞ்சுருமே.

எதோ நிறைய இருக்கு, இன்னிக்கு அதெல்லாம் கழட்டிட்டு 'ஹாயா' இருக்க மாதிரி
பிலிம் காட்டலாமுன்னா விட மாட்டீங்க போல இருக்கே:-)))

said...

வாங்க நாகு.

//தாமதமாக வகுப்புக்கு வந்ததுக்கு ......//
அதான்....... டெல்லி போயிட்டு சிங்கப்பூர் வந்தது தெரியாம (ப்ளேன்லே) அப்படியே
தூங்கிட்டீங்களா? :-)))))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

மாரியம்மன் கோவிலா? எழுதிட்டாப்போச்சு.

ஆனா அதிலும் இது கொஞ்சம் வேற வகைதான். எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பிக்கு
வேற வழி இல்லையா? :-))))

said...

டீச்சர், அவ்வளவு சொல்லி இருக்கேன் இனியும் அழ மாட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னா என்னவாம்.

அப்புறம் எப்பவும் நான் முதலில் வர மாட்டேன். இந்த மாதிரி நாகு மாதிரி பசங்க எல்லாம் வராம டபாய்க்கிறாங்களா, அவங்க இருக்கும் டீக்கடை, ரோட்டு முக்கு எல்லாம் போயி பாத்து இழுத்துக்கிட்டு வரேனா அதான் நேரமாயிடுது. என்ன செய்ய என் பொழப்பு அப்படி. ஹூம்....

said...

கொத்ஸ்,

லீடர்ன்னா இப்படித்தான்ப்பா இருக்கணும். பசங்களா......... எல்லோரும்
கொத்ஸின் 'பாதை'யில் போக ரெடியா இருங்க:-))

said...

சீங்கைப் பதிவுகள் அத்தனையும் படித்து முடித்து விட்டேன் டீச்சர்!

நான் பாஸா ஃபெயிலா?


சிங்க[கை]ப்பெருமாள் விவரணம் நெஞ்சை நெகிழ வைத்தது!

said...

டீச்சர்!! ஒரு சந்தேகம். வல்லிம்மா மீனாட்சி படம் அருமைன்னு சொல்லியிருக்காங்க . பாத்தா ஆண்டாள் மாதிரி இருக்கு
(வகுப்புல பாடம் சரியாத்தான் படிக்கிறன்னு நினெக்கறன்)

said...

வாங்க VSK.

//நான் பாஸா ஃபெயிலா?//

என்ன இப்படி ஒரு சந்தேகம்? அதுவும் திடீர்ன்னு? நம்ம வகுப்புலே யாரையும்
ஃபெயிலாக்கறதில்லையே:-))))) வத்தல் தொத்தல், ஏப்ப சாப்பைன்னு இருந்தாலும்கூட
க்ரேஸ் மார்க் 'போட்டுத் தள்ளி'த்தான் விடறேன்.

ஆனா நீங்க மேற்படி கேட்டகிரியில் இல்லை.:-)

said...

ச்சின்ன அம்மிணி,

நெற்றிப்பொட்டை வச்சு ஆண்டாள்னு சொல்றீங்களா? மேனியின் நிறம் பார்க்கலையா?

பச்சைமா மலைபோல் மேனி உள்ளவன் தங்கையாக்கும் அது.
குடும்பக் கலர்:-)

said...

படங்களுக்கு ரொம்ப்ப்ப்ப நன்றி

said...

மீண்டும் ஞானம் காணோம்!

said...

வாங்க சி(வா)ஜி.

என்ன ஆளைக்காணோமேன்னு பார்த்தேன்.
'ஞானம்' சித்தி அடையலை இன்னும்:-))))

said...

விளக்கத்துக்கு நன்றி வல்லியம்மா.

said...

//துளசி கோபால் said...
காட்டாறு,
அர்ரியர்ஸ் நிறைய இருக்கும். பரவாயில்லை. கடைசி பெஞ்சுலே
உக்கார்ந்து படிச்சு முடியுங்க:-)))) //

நாங்க சின்சியர் சிகாமணியாக்கும்...

//துளசி கோபால் said...
வாங்க VSK.

//நான் பாஸா ஃபெயிலா?//

என்ன இப்படி ஒரு சந்தேகம்? அதுவும் திடீர்ன்னு? நம்ம வகுப்புலே யாரையும்
ஃபெயிலாக்கறதில்லையே:-))))) வத்தல் தொத்தல், ஏப்ப சாப்பைன்னு இருந்தாலும்கூட
க்ரேஸ் மார்க் 'போட்டுத் தள்ளி'த்தான் விடறேன்.
//

இந்த நம்பிக்கையில தான் நான் உங்க வகுப்புல சேர்ந்திருக்கிறேனாக்கும்.

டீச்சருக்கு ஒரு வணக்கம். ராகிங் இருக்காம பாத்துக்க சொல்லி கொத்தனாரிடம் சொலி வைங்க. அவருக்கு ஒரு சலாம்!

said...

இந்தக் கோயில்தான் அந்தக் கோயில். இங்கதான் ஆண்டாளம்மாவைப் படம் பிடிச்சேன்.

said...

வாங்க ராகவன்.

இதுதான் நம்ம கோயில். படம் எடுக்க தடை எப்பவுமே இல்லை.

ஆண்டாளம்மாவும் ஜோரா இருப்பாங்க.