Thursday, April 12, 2007

செங்கோட்டை போலாமா?


செங்கோட்டை


நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 13 )


இங்கே எதிரில்தானே இருக்கு போகலாமுன்னு கோபால் சொன்னார். ஏற்கெனவேபார்த்த இடம்தான். புதுசா என்ன இருக்குன்னு ஒரு சின்னச் சலிப்பு வந்தாலும்,கொஞ்சம் பெரியமனசோட சரின்னு சொன்னேன். பாவம் இவர். அடிக்கடி தில்லிக்கு வந்து போனாலும்ஆஃபீஸ், மீட்டிங், ஹோட்டல்ன்னு போயிருது. இந்தமுறைகூட பாருங்க நாந்தான் சுத்திக்கிட்டு இருக்கேன்.

வேற என்ன இடங்கள் நான் போய் வந்தேனென்றதையே நம்ம பதிவு படிச்சுத்தான் தெரிஞ்சுக்கறார். இன்னிக்கு இங்கெ இருந்து கிளம்பறோம். இப்போதைக்குக் கடைசிநாள். சரி, போனாப்போகுதுன்னு கோட்டை வாசலுக்குப் போயாச்சு. கோட்டைக்கு எதிர்ப்புறம் புதுசா ஒரு கோயில் முளைச்சிருக்கு. அசப்புலே பிர்லா மந்திர் போலவே தோற்றம். ஆனா சிவன் கோயிலாம். கெளரிசங்கர் கோயில். இன்னும் பூராவும் கட்டி முடிக்கலை போல இருக்கு.

கோட்டைவாசலில் தள்ளுவண்டிக்காரர் தேங்காய் பத்தைகளை எதோ 'லோட்டஸ் டெம்பிள் ரேஞ்சு'க்கு அழகாஅடுக்கி வச்சுருக்கார். உள்ளெ போக அனுமதிக்கு ஒரு கட்டணம் உண்டு. கோட்டைக்கு முன்னே ஒரு பெரிய அகழி. யமுனையிலிருந்து தண்ணீர் வந்துக்கிட்டு இருந்தது போய் வெறும் புல்பூண்டுகளால் நிறைஞ்சிருக்கு.வழக்கமான பாதுகாப்பு முறைகள். ரெண்டு பக்கமும் நினைவுப்பொருட்கள், கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகள்ன்னு முந்தியெல்லாம் 'ஜேஜே'ன்னு இருக்கும். இப்ப எண்ணிக்கையில் குறைஞ்சு நானும் இருக்கேன்னு ..............

சரித்திரம் உறங்கும் இல்லேன்னா உறைஞ்சு கிடக்கும் இடமுன்னா இதைத்தான் சொல்லணும். அந்தக் காலத்துலே 'ஷாஜஹானாபாத்'ன்னு இந்த ஊருக்கே ஒரு பேர் இருந்துச்சு. தாஜ் மஹால் கட்ட ஆரம்பிச்சு ஒரு ஆறு வருசம் கழிச்சு அங்கே வேலை நடந்துக்கிட்டு இருக்கும்போதே இந்தக் கோட்டைக் கட்ட ஆரம்பிச்சுட்டார் சக்ரவர்த்தி. பூராவும் செம்மண் கலர்லே இருக்கும் கல்லு. அதனாலேயே இதுக்குச் செங்கோட்டைன்னு பேர் வந்துருச்சு. கட்டி முடிக்கபத்து வருஷம் ஆச்சு. ரெண்டரை கிலோ மீட்டர் சுத்தளவுள்ள கோட்டை மதிள் சுவர்கள். யமுனை ஆத்தை ஒட்டிவருமிடங்களில் 18 மீட்டர் உயரத்திலும், ஊரைப் பார்த்து இருக்கும் பகுதிகளிலே 33 மீட்டர் உயரமாவும் (அதிக ஆபத்து இந்தப் பக்கம் தானோ? ) இருக்கு.

கட்டி முடிச்சபிறகு எத்தனையோ போர்களைச் சந்திச்சாச்சு.ஒவ்வொரு நூற்றாண்டிலும் முக்கியமான ஒண்ணுன்னு பார்த்தால்,தில்லிக்கு நாதர்ஷா வந்தது, முதலாம் சிப்பாய்க் கலகம், அப்புறம் நம்ம நாட்டுச் சுதந்திரப்போர். 1947ல் சுதந்திரம் கிடைச்ச நள்ளிரவில் இங்கே முதல்முதலா நம்ம தேசியக்கொடியை ஏத்துனாங்க. இப்ப அதுவே ஒரு மரபு ஆயிருக்கு. இப்பவும்ஒவ்வொரு சுதந்திரத்தினக் கொண்டாட்டத்திலும் செங்கோட்டையில் கொடி ஏத்தி, நாட்டின் பிரதமர் சொற்பொழிவுஆற்றுகிறார் இல்லையா?

கோட்டைக்குள்ளே, 'திவான் இ ஆம், திவான் இ காஸ், ரங் மஹால், மோதி மசூதின்னு அரண்மனைக் கட்டிடங்கள் ஏராளம். திவான் இ ஆம் லே சக்ரவர்த்தி தங்க மயிலாசனத்தில் இருந்து மக்களைச் சந்திப்பாராம். ( தங்க மயில்ஆசனத்தை நாதிர்ஷா, பெர்ஷியாவுக்கு அடிச்சுக்கிட்டுப் போயிட்டாராம். அடப் பாவிங்களா இப்படிக் கொள்ளை அடிச்சுக்கிட்டுப் போயிட்டீங்களே) ரொம்ப முக்கிய மந்திராலோசனைகள் (காஸ் பாத்?) நடத்த திவான் இ காஸ், அரச மகளிர் இருக்கும்ரங் மஹால் (கலர் பார்க்கன்னே கட்டி இருக்கார்!) இப்படி ஒவ்வொண்ணும் அட்டகாசம். இதுலே மோதி மசூதி மட்டும் இவர் புள்ளை அவுரங்கஸீப் கட்டுனாராம். அவருக்குப் பக்தி ஜாஸ்தி. அதான் பூஜையறையாக் கட்டிட்டார். கோட்டையின் வெளியிலேதான் சிகப்புக் கல்லு. உள்ளெ மாளிகைகள் அத்தனையும் பளிங்கு. ( பளிங்கினால் ஒரு மாளிகை, பவழத்தால்மணி மண்டபம்?)

கோட்டையும் தோட்டமும் ரொம்ப அழகான பராமரிப்பில் இருக்கு. எல்லாம் முந்தி பார்த்தமாதிரியேதானேன்னு கொஞ்சம்அலட்சியமாப் பார்வை ஓட்டுனதுக்கு அப்படியே கண்ணு கடியா( eye sore) அங்கங்கே தகர டப்பாக்கள் நிக்குது. அடக் கடவுளே,தேனீ வளர்க்கணுமுன்னா இந்த இடம்தானாக் கிடைச்சது? கொஞ்சம் கிட்டப்போய்ப் பார்த்தால் இது தேன் சமாச்சாரமில்லை.அழகான இடத்துலே இதென்ன அசிங்கமா? பொறுக்க முடியாம அங்கே இருந்த உதவியாளரைக் கேட்டேன்.

அதைத் திறந்து காமிச்சார். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு, இங்கே ஒலி ஒளி காட்சிகள் சிலவருஷமா நடக்குதுன்னு. டப்பா உள்ளே கலர் கலரான பெரிய லைட்டுங்க இருக்கு. இந்தக் காட்சிக்குன்னே இப்ப தோட்டத்துலே இருக்கை வசதிகள் எல்லாம் செஞ்சுவச்சுருக்காங்க.இருக்கட்டும். வேணாங்கலை. ஆனா இந்த தகர டப்பாக்களை ஒரு கலை நயத்தோடு அழகா வடிவமைச்சிருக்கக் கூடாதா? அப்படியெல்லாம் செஞ்சுதர ஆட்கள் இல்லைன்னு மட்டும் சொல்லிறாதீங்க. குட்டிக்குட்டியாமண்டபம் மாதிரி வளைவு நெளிவுகளோட எத்தனை அமைப்புகளை இப்பத்தானே அக்ஷர்தாம் கோயிலில் பார்த்தேன். சினிமா செட்,அலங்காரவண்டிகள்ன்னு செய்யறதுலே எல்லாம் எவ்வளவு எக்ஸ்பர்ட்ங்க இருக்காங்க? இருக்கற அழகைக் கெடுக்காம அதோடு ஒட்டிப்போகும் அலங்காரத்துலே ஏன் செஞ்சு வைக்கலைன்றதுதான் இப்ப மனக்குடைச்சல். கொஞ்சம் யோசிக்கக்கூடாதா?

மனக்கசப்போடு இன்னும் கொஞ்சம் சுத்தி வந்தேன். அங்கங்கே அணில்கள் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்துச்சுங்க. ஆமாம்..... இந்த மாளிகைகள் எல்லாம் திறந்தவெளியா இருக்கே..... இதுலே அந்தக் காலத்துலே தங்கி இருந்தவங்களுக்கு ப்ரைவஸி இருந்துருக்குமா? அலங்காரத்தூண்கள் எக்கச் சக்கம். இதுலே இருக்கைகள், படுக்கைகள்,குளியலறைகள் எல்லாம் எங்கே இருந்துருக்கும்? ஒருவேளை கீழே நிலவறைகள் இருக்கோ? மண்டபத்துலே நடந்து பார்த்ததுலே அப்படிக் கீழே போகும்படிகள் ஒண்ணும் கண்ணுலே படலையே? இவ்வளவு உயரமான கட்டிடமுன்னா கீழேயும் அறைகள் கட்டாயம் இருக்கணும்தான். ஒருவேளை அது பொதுமக்கள் பார்வைக்கு இல்லையோன்னு வேண்டாத விசாரம் வர ஆரம்பிச்சது. இதுக்கு மேலேஇங்கே இருந்தா ஆபத்துன்னு அங்கே இருந்து கிளம்பினோம் சரவணனைப் பார்க்க.


30 comments:

said...

ஆனா இந்த தகர டப்பாக்களை ஒரு கலை நயத்தோடு அழகா வடிவமைச்சிருக்கக் கூடாதா?"
அதானே !!!!
அது சரி. அந்த செக்யூரிடிய மிரட்டிட்ட்டு வந்துட்டீங்க போல. போட்டோல உங்ககிட்ட மரியாதைய‌ stand at easela நிக்கறார்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நீங்களே பார்த்தீங்கல்லே, அந்த தகர டப்பா லட்சணத்தை?

said...

மிதமான சூரிய வெளிச்சத்தில் அந்த புல்வெளியில் உட்கார்ந்திருக்கார்களே அப்படி உட்கார மிகவும் பிடிக்கும்.
பல நாட்கள் காந்தி சமாதிக்கு அருகில் உட்கார்ந்திருக்கேன்.
செங்கோட்டை என்னவோ எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
ஒரு மாதிரி dry ஆக இருப்பதாக தோன்றுகிறது.
சில படங்கள் திறக்க மறுக்கின்றன.

said...

உங்க போட்டோல பாக்க அந்த தகர டப்பா சுமாராத்தான் இருக்கு. நாங்க 8 வருஷத்துக்கு முன்னாடி போனப்ப துருப்புடிச்சு படு கோரமா இருந்த‌தா ஞாபகம். யார்கிட்டயாவது கேக்கலாம்னா நம்ம இந்தியுமில்ல படு கோரம்.
தேங்காய் வாங்கி சாப்பிட்டீங்களா??

said...

//வேற என்ன இடங்கள் நான் போய் வந்தேனென்றதையே நம்ம பதிவு படிச்சுத்தான் தெரிஞ்சுக்கறார். //
ஊர் சுத்தி போட்டா படமெல்லாம் எடுத்து எங்களுக்கு அறிவு கண்ண தொறந்த யக்கோவ், இப்பிடி கோவால தனிமையில உட்டுப்போட்டிகளே.... அவுக கூட உங்க பதிவப் பாத்து தான் நீங்க சுத்துன கத தெரிஞ்சிக்கிறாகளா? பாவம் அப்பூ.

said...

வாங்க குமார்.

//சில படங்கள் திறக்க மறுக்கின்றன.//

அப்படியா? இருக்காதே......... அந்தக் கட்டிடத்தில் விரிசல் ஒண்ணும் இல்லையே:-)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

//தேங்காய் வாங்கி சாப்பிட்டீங்களா??//

ஊஹூம்.......... பயணத்துலே 'கண்ணை மட்டும் திறந்து வச்சுக்குவேன்'
வாயையும் வயித்தையும் ஒரே கட்டுதான்:-)

கண்ணால் மட்டும் 'லபக்'

said...

வாங்க காட்டாறு.

பயணத்துலேயும் கோபால் கூடவே இருந்தால் வெறும் மெஷின்களைத்தான் பாக்கணும்.
அப்புறம் உங்க 'அறிவுக்கண்'களைத் திறக்கறது எப்படி? :-))))

said...

(எங்களுக்கு)செலவில்லாமல் தில்லி
அடுத்தது சிங்காரச் சென்னையா?

said...

லால் கீலா அல்லது செங்கோட்டை...இந்திய இஸ்லாமியர்களின் கட்டிடக் கலைக்குச் சான்று. மிக அழகான கட்டிடம். பளிங்கினால் ஒரு மாளிகை பவழத்தால் மணிமண்டபம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகப் பொருத்தம்.

அந்த தகரப் பெட்டிகளைத் தனியா போட்டோ பிடிச்சிருக்கக் கூடாது! (டப்பான்னு இனிமே சொல்லக்கூடாது. சொன்னீங்கன்னா...சொல் ஒரு சொல்லுல ஒங்களையும் கவுண்டமணி செந்திலையும் வெச்சி ஒரு போஸ்ட் போட்டிருவோம் :-) )

ஔரங்கசீப்போட சமாதிக்குப் போயிருக்கேன். ஊருக்கே ஔரங்காபாத்-னு பேரு. சமாதியின் மேற்புறம் திறந்து மண்ணிருக்கு. அதுல ஒரு சின்ன செடி இருக்கு. துளசீன்னு நெனைக்கிறேன். நினைவில்லை.

said...

டீச்சர் நானெல்லாம் இன்னும் டெல்லிய பாத்ததேயில்லை!( சென்ஷி ஒரு பதிவர் மீட்டிங் போடுயா! உம்ம புண்ணியத்தில் ஓசி டிக்கெட்டில் வருகிறேன்).
கோட்டைக்கு அழைத்துச் சென்ற வருங்கால முதல்வர் துளசி டீச்சர் வாழ்க!அங்காங்கே பாட்டு வேற சந்தோசமான மூடில் பதிவிட்டிருப்பீங்கபோல!

//, அரச மகளிர் இருக்கும்ரங் மஹால்//

ரங் மஹாலா அது Wrong மஹால்:))))))

////அது சரி. அந்த செக்யூரிடிய மிரட்டிட்ட்டு வந்துட்டீங்க போல. போட்டோல உங்ககிட்ட மரியாதைய‌ stand at easela நிக்கறார்.
//

இன்னும் பதில் இல்லையே! ஒருவேளை பெரிய அம்மிணி கேட்டால்தான் சொல்லுவீங்களா டீச்சர்!.

//இதுக்கு மேலேஇங்கே இருந்தா ஆபத்துன்னு அங்கே இருந்து கிளம்பினோம் சரவணனைப் பார்க்க.
//

வாங்க டீச்சர்,உங்களுக்கு எந்தவித ஆபத்தில்லாமல் பாத்திக்கிறேன்!, கொத்ஸ் டப்பாசெல்லாம் ரெடியா? ( ஹி ஹி.. வரவேற்கத்தானுங்க!):)))


அன்புடன்...
சரவணன்.

said...

நீங்க அந்த ஒலிஒளி காட்சியைப் பற்றி சொன்னதும் நினைவுக்கு வருது . ஒரு முறை கணவருடைய நண்பரொருவர் ஜெர்மன் காரர் வந்திருந்தார் நாங்க அவரை செங்கோட்டைக்கு கூட்டிபோனோம். அங்கே அப்போ ஒலிஒளி காட்சி ஹிந்தி ஓடிக்கொண்டிருந்தது ..கொஞ்ச நேரத்தில் அவர் தூங்க ஆரம்பிச்சிட்டார். சரி வாங்க போலாம்ன்னோம்...ஏன் ஏன் நீங்க கேளுங்கன்னார். அய்யா எங்களுக்கு ஒன்னும் புரியல எங்க ஹிந்தி எல்லா கித்னா ? பையா ஓ திகாதோ ?அவ்வளவு தான்...என்று எந்திரிச்சு ஓடிவந்துட்டோம்.

said...

வாங்க சிஜி.

//அடுத்தது சிங்காரச் சென்னையா? //

ச்சென்னை ஃபினிஷ்டு:-)

said...

வாங்க ராகவன்.

//டப்பான்னு இனிமே சொல்லக்கூடாது. ...//

என்ன இப்படி? தில்லியிலே பெட்டின்னு எப்படிங்க? வோ தோ டப்பி ஹை:-)))


அவுரங்கசீப் ரொம்ப சிம்பிள் & பக்திமான்.

கோபால் அங்கே போயிருக்கார். அது 'துளசி'தான்.

said...

வாங்க சரவணன்.

//அங்காங்கே பாட்டு வேற சந்தோசமான மூடில் பதிவிட்டிருப்பீங்கபோல!//

இல்லையா பின்னே? பதிவே ஒரு சந்தோஷம்தானே? அதுவும் ப்ளொக்கர் சொதப்பலேன்னா
சொர்க்கம்:-))))

//////அது சரி. அந்த செக்யூரிடிய மிரட்டிட்ட்டு வந்துட்டீங்க
போல. போட்டோல உங்ககிட்ட மரியாதைய‌ stand at easela நிக்கறார்.//

கொடுக்கற மரியாதையை அவர் கொடுக்கட்டுமேங்க.
'ப்லொக் ரைட்டர்'ன்னா ச்சும்மாவா? :-))))

said...

வாங்க முத்துலெட்சுமி.

உங்க ஊருக்கு டூரிஸ்ட்டா வந்தா 'மஜா'தான்:-))))

ஒலி & ஒளி ஒருக்கா நம்ம திருமலை(நாயக்கர் - சொல்லலாமா?) மஹாலில்
பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. அப்ப ப்ளொக் இல்லையே. அதனாலே
மத்ததுகளைக் கவனிக்கலை(-:

said...

/////செக்யூரிட்டிய மிரட்டிட்டு வந்திட்டீங்கபோல....stand at ease la நிற்கிறார்.....//

அது உண்மையில செக்யூரிட்டி இல்ல.
ச்சும்மா கோபால்தான் செக்யூரிட்டி ட்ரஸ்ல நிற்கிறார்....
டீச்சர் எதிரெ நிற்கிறாங்கல்லே..
டீச்சர்னா சும்மாவா?

said...

சுட்டுட்டேன்.. இதையும் சுட்டுட்டேன்.. ஹை.. ஜாலி.. கூகுள் சர்ச்ல போயி தேடி எடுத்து Save as போட்டு வைக்கிற 10, 15 நிமிஷத்துல தமிழ்மணத்துல 5, 6 பேருக்கு அனானி கமெண்ட்ஸ் அடிச்சிரலாம்.. வாழ்க துளசி டீச்சர்.. வளர்க அவரது புகழ்.. டீச்சர் அப்படியே ராஷ்டிரபதி பவனுக்குள்ள போயி டக்கரா ஒரு பத்து, பதினைஞ்சு ஸ்நாப்ஸ் அடிச்சிட்டு வந்திருங்க. இங்க ஆபீஸ்ல அடுத்த ஜனாதிபதி யாருன்னு மேட்டர் ரெடி பண்ணச் சொல்லிருக்காங்க.. மேட்டருக்கு ஆகும்.. சென்னை பக்கம் வந்தீங்கன்னா ஒரு தகவல் சொல்லுங்க.. ஓடி வந்து நேர்ல பார்த்து 'தேங்க்ஸ்' சொல்றேன்..

said...

ரொம்ப வருஷம் முன்னாடி செங்கோட்டை பார்த்தது. இன்னும் அப்படியேதான் இருக்கு.

said...

'பளிங்குனால் ஒரு மாளிகை'.. எனக்கும் இந்த பாட்டுதான் நியாபகம் வந்துச்சு... ஆனா அந்த தர்பார்க்கு சைட்ல இருக்குற அந்த திறந்தவெளிய அங்க நின்னு பார்த்தா நமக்கே ராணி மாதிரி ஒரு நினப்பு வருது..
(எனக்கு வந்துச்சுப்பா:-))

said...

அகழில தண்ணி வராத அளவுக்குப் பஞ்சம அங்கே?

ஊரு அழகை,செங்கோட்டை
எல்லாம் சொல்லீட்டீங்க.
சரவணபவன்ல என்ன
சாப்பிட்டீங்க:-) அதை சொல்லலியே.

கோபாலா அது?
நீங்கதான் அப்படியே சரித்திரத்தில லயிச்சு நிக்கிறீங்கனு நான் நினச்சேன்.

இப்பவே டெல்லி போய்ப் பார்க்கணும்னு ஆசையைக் கிளப்பிட்டீங்க.
முதல்ல சென்னையைத் தெரிஞ்சுக்கோ.அப்புறம் அங்கே போவனு அடக்கிட்டேன் மனசை.
நல்லா இருக்கு துளசி.
டெல்லிலேயும் துளசி (செடி)யைப் பார்த்து,கண்டுகிட்டுவர கோபால்
வாழ்க.

said...

//யமுனை ஆத்தை ஒட்டிவருமிடங்களில் 18 மீட்டர் உயரத்திலும், ஊரைப் பார்த்து இருக்கும் பகுதிகளிலே 33 மீட்டர் உயரமாவும் (அதிக ஆபத்து இந்தப் பக்கம் தானோ? )//

ஏங்க, இது இன்னைக்குத்தானே சுற்றிப் பார்க்குமிடம். அன்னைக்குக் கோட்டை இல்லையா? அதனால் தரை வழி ஆபத்துதானே அதிகம்? அதான் இப்படின்னு நினைக்கிறேன்.

//மதிள் சுவர்கள்// - போன பதிவுலும் இதே மாதிரிதான் எழுதி இருந்தீங்க. அது மதில் சுவரா மதிள் சுவரா? நான் மதில் என்றுதானே நினைத்தேன்.

//இ ஆம் லே சக்ரவர்த்தி தங்க மயிலாசனத்தில் இருந்து மக்களைச் சந்திப்பாராம். ( தங்க மயில்ஆசனத்தை நாதிர்ஷா, பெர்ஷியாவுக்கு அடிச்சுக்கிட்டுப் போயிட்டாராம். அடப் பாவிங்களா இப்படிக் கொள்ளை அடிச்சுக்கிட்டுப் போயிட்டீங்களே)//

ஷாஜஹான் அவரோட கணினியில் அவர் பெயரில் ஒரு கோப்பைத் திறந்து மயிலாசனம் யாருக்குன்னு எழுதி வைக்காததால் வந்தது வினை. நான் எங்க வரேன்னு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். நாளைக்கு எனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வரக் காரணமா இருந்துடாதீங்க! :))

said...

உங்க பயண பதிவெல்லாம் படிச்சேன் துளசி மேடம்..
எங்களுக்கு நல்லாத் தான் ஊர் சுத்தி காமிக்கிறீங்க

said...

வாங்க சிஜி.

//ச்சும்மா கோபால்தான் செக்யூரிட்டி ட்ரஸ்ல நிற்கிறார்....//

இன்னும் கொஞ்சம் போனா நான் தான் அந்த
ட்ரெஸ் வாங்கித் தந்தேன்னு சொல்லிருவீங்கபோல?:-)

அப்ப அந்தப் படம் எடுத்தது செக்யூரிட்டியா?

said...

வாங்க உண்மைத்தமிழரே.

நேரம் மிச்சப்படுத்துனா இப்படி ஒரு வழி இருக்கா அதைப் பயன்'படுத்த'!!!

அடுத்த ஜனாதிபதியா பேசாம நானே வந்துறலாமான்னு இருக்கு.

said...

வாங்க ப்ரசன்னா.

//ரொம்ப வருஷம் முன்னாடி செங்கோட்டை
பார்த்தது. இன்னும் அப்படியேதான் இருக்கு. //

அப்படியே இல்லாம எல்லாம் ப்ளாட் போட்டு
வித்துருப்பாங்கன்னு நினைச்சீங்களா? :-)))
சரித்திரமய்யா சரித்திரம். வுட்டுவச்சுத்தான் ஆகணும்.

said...

வாங்க மங்கை.
//நமக்கே ராணி மாதிரி ஒரு நினப்பு வருது..
(எனக்கு வந்துச்சுப்பா:-)) //

ஆமாமாம். நினைப்புத்தான் பொழைப்பைக் கெடுக்குதாம்.
யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்க:-))))

said...

வாங்க வல்லி.

//அகழில தண்ணி வராத அளவுக்குப் பஞ்சம அங்கே?//

அதெல்லாம் இல்லை. தண்ணி ரொப்பினா, உடனே அதுலே 'முதலை' எங்கேன்னு
கேக்கமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? :-)

மனசு சொல்றதை முதல்லே கேட்டுப் பழகுங்க.ஆமாம்:-)))

//டெல்லிலேயும் துளசி (செடி)யைப் பார்த்து,கண்டுகிட்டுவர கோபால்
வாழ்க. //

துளசியை அவரு அவுரங்கபாத்லே(தான்) பார்த்தாராம்!

said...

வாங்க கொத்ஸ்.
மதிலா இல்லை மதிளான்னு பட்டிமன்றம் வைக்கலாமா?

போன பதிவு 'ஜமாமசூதி'லே ஒரு விளக்கம் இருக்கு பின்னூட்டத்துலே.

// நான் எங்க வரேன்னு புரிஞ்சிருக்கும்ன்னு
நினைக்கிறேன். நாளைக்கு எனக்கு இப்படி ஒரு
அவப்பெயர் வரக் காரணமா இருந்துடாதீங்க! :)) //

பாவம் ஷாஜஹான். அவர் காலத்துக்குப்பிறகுதான் நாதிர்ஷா கொண்டு போனது.
அங்கேயும் அது நிலைக்கலை. சிதைஞ்சு அழிஞ்சுருச்சாம். அது போட்டும்.
லண்டன் டவர் ம்யூஸியத்துலே ஒரு மயிலாசனம் பார்த்த நினைவு இருக்கு.
அதைவேணுமுன்னா தனிக் கோப்புலே எழுதி வைக்கவா?

said...

வாங்க கார்த்திக்.

//எங்களுக்கு நல்லாத் தான் ஊர் சுத்தி காமிக்கிறீங்க //

அப்ப 'கைடு' வேலைக்கு தேறிடுவேனா? பிழைக்க வழி இருக்குன்னு சொல்லுங்க.