Thursday, April 26, 2007

நீ இரங்காயெனில், கிருஷ்ணா !!!

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 17 )


ஏய் மந்திரமில்லை தந்திரமில்லை, மருந்து மாயம் ஒண்ணுமில்லை......... எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா. அட..சொன்னாக் கேக்க மாட்டீங்களா? இந்த மாவாலே ஒரு வட்டம் போடறேன். அதுக்கு அந்தாண்டை இருந்து பாருங்க.யாராவது பாதியிலே இங்கிருந்து போனா அப்படியே ரத்தம் கக்கி செத்துருவான்.......... இப்படியெல்லாம்( இப்படித்தானோ?)ச்சீன மொழியிலே சொல்லிக்கிட்டு இருந்தவரைச் சுத்திச் சின்னதா ஒரு கூட்டம். தரையில் விரிச்ச ப்ளாஸ்டிக்லே சில சாமான்கள். நாட்டு மருந்து?

இன்னொரு பக்கம் ஒரு கட்டு ஊதுவத்தியை ஏத்திவச்சுக்கிட்டு இன்னொருத்தர். அவரைச் சுத்தியும் ஒரு கூட்டம். இது எதோ சாமி கும்பிடற வகையாம். படம் எடுக்க(வே)க் கூடாதுன்னார். இன்னொரு பக்கம் கடைகண்ணிகள். விதவிதமானடெனிம் போட்டுக்கிட்டு அரை உடம்பு பொம்மைகள். பூகி ஸ்ட்ரீட் மார்கெட். எங்கே பார்த்தாலும் மக்கள்ஸ் சாப்புட்டுக்கிட்டே இருக்காங்க. பெரிய ஃபுட் கோர்ட்லே கூட்டம் நெரியுது.
வெய்யிலுக்கு இதமா இளநீர் விற்பனை ஜரூரா நடக்குது.வெறும் ஒரு டாலர்தான். ஜில்லுன்னு குடிக்க அருமை. உள்ளே தேங்காயைச் சுரண்டித் தின்ன ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன். எனக்கு இங்கே ரொம்பப் பிடிச்ச விஷயம் இதுதான். பார்க்கவே சுத்தமா இருக்கு.

இன்னொரு இடத்தில் பெரிய 'சிரிக்கும் புத்தா' வயித்தில் சில்லறையைப் போட்டுட்டு, தலைமுதல் கால்வரை'அவரை'த் தடவிக் கொடுக்கும் இளைஞிகள். அதிர்ஷ்ட தேவதையாம். வயித்துலே சேரும் காசு தர்ம காரியத்துக்குப் போகுதாம். இங்கிலாந்து, ஐரோப்பாவெல்லாம் 'விஷ்ஷிங் வெல், நீருற்று'ன்னு இருக்குல்லே அதைப்போல.அதானே, ச்சும்மா க் காசு கொடு'ன்னா யாருதான் தருவாங்க? 'கொடு, உனக்கு அதிர்ஷடம் வந்துக்கிட்டு இருக்கு'. மக்கள் மனசு பூராவும் 'லோகமந்த்தா ஒக்கட்டே' !!! நம்ம பங்குக்கு நாமும் ஜோதியில் ஐக்கியம். தொப்பையைத் தடவுனப்ப, அவர் குலுங்கிச் சிரிக்கிற மாதிரி இருந்துச்சு:-)

பக்கத்துலே ஒரு பெரிய கடை. புத்தர் சிலைகள் விற்பனை. இங்கேயும் போட்டோ தடா. ரொம்ப அழகான சிலைகள்.ஆனா பயங்கர விலை. பார்த்துக்கிட்டே வரும்போது செந்தாமரைப்பூவில் அமர்ந்து அருள் பாலிக்கும் உருவம். சிகப்பு,பச்சை ஆடை, அழகான அணிகலன்கள்னு. முகம் மட்டும் ச்சீன முகம். அட! ச்சீன மகாலச்சுமி. சிங்கப்பூரின் பெரியகடைன்னு விளம்பரம் வேற.

வெளியே வந்து ஒரு பத்து எட்டு வச்சவுடன் ஒரு பெரிய ச்சீனக்கோயில். அங்கே மேசைகள் போட்டு கட்டுக்கட்டா ஊதுவர்த்தி புகையுது. நம்மளை மாதிரி ஒண்ணு ரெண்டு ஊதுவர்த்தி கொளுத்தறபழக்கமில்லை போல. வாசனை ஒண்ணும் இல்லை(-: வெறும் புகைதான். வழிபாட்டுக்காக வாசலில் பூக்கள் விற்பனை.இதுவரை பார்க்காத நிறங்களில் எல்லாம் தாமரை மொட்டுக்கள். நல்ல இரத்தச்சிகப்பு நிறத்தில்கூட இருக்கு. வாசலில் நல்ல கூட்டம். நமக்கு அனுமதி உண்டான்னு தெரியாம நின்னேன்.

இந்தக் கோயில் இரக்க தேவதைக்காம். தயைக்கு ஒரு தேவதை. ( Guanyin, the Chinese Goddess of Mercy) கோயிலுக்கு வேற ச்சீனப்பெயர்கள் கூட இருக்கு.Kwan Im Thong Hood Cho. Kuan Im Hood Cho Temple. Kwan Im Tong Hoon Che Temple இப்படியெல்லாம் இருக்காம். எனக்குத்தான் பேர் வாயில் நுழையலை(-:இந்தக்கோயில் கட்டுனது 1884லே. அப்புறம் ஒருவாட்டி திரும்பக் கட்டி, இப்ப 1982லே இன்னும் ஜோரா இப்ப இருக்கறமாதிரி கட்டிட்டாங்க. ச்சீனப் புத்தாண்டுக்குக் கூட்டம் குவிஞ்சுருமாம்.

இந்தக் கோயிலுக்கு அடுத்த கட்டிடம் ஒரு கிருஷ்ணன் கோயில். இங்கேயும் வாசலில் நிழலுக்குக் கேன்வாஸ் கூரை. வாசலின் ரெண்டு பக்கமும் கைகூப்பிய நிலையில் நம்ம கருடரும், ஹனுமாரும். இந்தக் கோயிலைக் 'கண்டு பிடிச்சு' எனக்குச் சொன்னவர் கோபால்தான். முந்தி ஒரு சமயம் இந்தப் பக்கம் பொடி நடையா வந்தப்பப் பார்த்துருக்காராம். கைப்பேசியில் படம் எடுத்து அப்பவே அனுப்பி இருந்தார். இங்கேயும் வாசலில் மேசை போட்டு ஊதுவர்த்திக்கட்டுக் கொளுத்திக்கிட்டு இருக்காங்கச் சீன மக்கள்.
அக்கம்பக்கத்துலே இருக்கற கட்டடங்களோடு அப்படியே அடிச்சுப் பிடிச்சு இடம் பிடிச்சமாதிரி இருக்கு இந்தக்கோயில் கட்டிடம்.

1870லே நம்ம மக்கள்ஸ்க்காக ஹனுமான் பீம்சிங்ன்னு ஒரு தனவந்தர் கட்டுனதாம். அப்ப இந்த இடத்துலே ஒருபெரிய ஆலமரம் இருந்துச்சு. உழைக்கும் நம்ம மக்கள் இங்கே மரத்தடியில் வந்து கூடும் வழக்கம். அப்பதான் ஹனுமான் பீம்சிங், இந்த ஜனங்களுக்கு ஒரு வழிபாட்டுக்கு இடம் செய்யலாமுன்னு நினைச்சுச் ச்சும்மா ஒரு மேடைபோட்டு ரெண்டு சிலைகளை வச்சாராம். அப்புறம் அந்த மேடை விரிவாச்சு. இப்ப ஆலமரம் இருந்த சுவடும் இல்லை.கோயில் மட்டும் வளர்ந்து கிடக்கு. ஆலிலைக் கண்ணன்!!!

உள்ளே போனால் அழகான ஒரு ஹால். அதுலே நேரா ஒரு சந்நிதி. கதவு மூடி இருக்கு. பூஜை நேரம் முடிஞ்சு, இனி மாலையில்தான் திறப்பாங்களாம். நுழைவு வாசலில் உள்பக்கமா அழகான சரஸ்வதி சிலை. ஹாலில் ஒருத்தர் எண்ணெய்பாட்டிலும் குத்து விளக்குமா வச்சுக்கிட்டுத் தரையைத் துடைச்சுக்கிட்டு இருந்தார். தமிழ்க்காரர்தான். கோயில் ஊழியர்.போட்டோ எடுக்கலாமான்னு கேட்டுக்கிட்டேன். ஊஹூம்....... கூடாதாம். அப்பச் சரி.

ஹாலில் உட்கார்ந்தோம். நல்ல வழுவழுப்பானச் சுத்தமான பளிங்குத் தரை. இடது பக்கம் ஒரு ச்சின்ன மேடையில் நம்ம ச்சீன மகாலெச்சுமி. முன்னாலே ச்சின்னச் சின்ன அகல் விளக்குகள் நிறைய எரிஞ்சுக்கிட்டு இருக்கு. ஒருச் சீனப்பெண்மணி ரெண்டு கையும் கூப்பி, மண்டி போட்டுக் கண் மூடி எதோ மந்திரம் சொல்லி சாமியை மனம் உருகக் கும்பிடறாங்க. 'நீ இரங்காயெனில் ............... ' ! வெள்ளிக்கிழமை, லச்சுமியைக் கும்பிடறது நல்லதுதானே?

ச்சீனலெச்சுமிக்கு வலது புறம் பெருமாளும் தாயாருமா ஆளுயரச் சிலைகள். ச்சும்மா துணித்திரை போட்டு மறைச்சிருக்கு. நமக்குன்னே பெருமாள் வழக்கம்போல(!!)த் திரையைக் கொஞ்சமா நகர்த்திக்கிட்டார். ஓரப்பார்வையில் கண்டுக்கிட்டார். நானும்தான். விடமுடியுமா? இன்னும் சில சிலைகள் அங்கங்கே இருக்கு. ஆனாலும் என் கண்ணுலேபட்டதே தவிர மனசில் பதியலை(-: உற்சவ மூர்த்திகள்.

அந்தச் சந்நிதிக்கு ஏறிப் போக ரெண்டு படிகூட வச்சுருக்காங்க. உள்ளே சாமி எப்படி இருப்பாரோ? சந்நிதியை வலமாவது வந்துக்கலாமுன்னு வெளியே இடது பக்கம் நுழைஞ்சேன். அம்மாடி.......... மூச்சே நின்னு போச்சு. சுவரில் திருப்பாவை. அதுவும் எப்படி?அழகான ஓவியங்கள். கொஞ்சம் புடைப்புச் சித்திரம்போல இருக்கு. ஒரு ஒன்னரை அடிக்கு ரெண்டடி இருக்கும் ஓவியங்கள். பக்கத்திலே 'மார்கழித் திங்கள்.....' பாட்டு, செதுக்கின பளிங்குக் கல்வெட்டு. அந்தப் பாடலில் வரும் காட்சிக்கு ஏதுவாப் படம். அடுத்து 'வையத்து வாழ்வீர்கள்.......' இப்படியே 30 திருப்பாவைக்கும் பாட்டும் படமுமா அட்டகாசம். சந்நிதிக்குபின்னாலே மூணு பக்கமும் முப்பது பாட்டுக்கள். அட........... என்ன ஒரு ஐடியா? படத்தில் பெண்கள் மூக்கும்முழியுமா, அலங்காரத்தோட பட்டும் ஜரிகையுமா, நகையும் நட்டுமா அடடாடா.......... இதுபோல நான் இதுவரைப்பார்த்ததே இல்லை. பிரமிப்பு தாளலை. அப்படியே தேன் குடிச்ச வண்டா மயங்கித் திரும்ப வந்து சந்நிதி முன் உக்கார்ந்தேன்.
கோயில் ஊழியர் என்னவோ பூஜைச் சாமான்களை வைக்க சந்நிதிக் கதவைக் கொஞ்சமாத் திறந்து உள்ளெ போறார். பட்டுத்திரை பாதி விலகிய நிலையில்........... சாமி!!!!!!! உத்துப் பார்க்க முடியாம கண்ணுலே'சட்'னு தண்ணி கரை கட்டிருச்சு. என்னைப் பார்த்துட்டார். அதுவே போதும். அடுத்தமுறை இங்கே இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து வந்து ஆராயணும்.

இப்படிக் கிறங்கிக் கிடக்கும் நேரம் இளவயசுப் பெண்கள் சிலர்(எல்லாம் ஒரு இருபது இருந்தாலே ஜாஸ்தி) மேல் தொடைவரை வெட்டிய ச்சின்ன அரைஅரைக்கால் டெனிம் ட்ரவுஸரோடு வந்து ச்சீன லெச்சுமி முன்னே சாஷ்ட்டாங்கமா விழறாங்க.

சல்வார் போட்டுக்கிட்டுக் கோவிலுக்கு வரக்கூடாதுன்னு சொன்ன நம்மூரு ஆன்மீக உபதேசகர்கள் நினைவு மனசில் வந்து போச்சு. கோயிலின் வெளிப்புற மதிள்(ல்) சுவத்தின் உள்பக்கமா, சுவரிலேயே நிறைய சிற்பங்கள் இருக்கு. இடம் பத்தாக்குறையை எவ்வளவு லாகவமா சமாளிச்சுட்டாங்க பாருங்க. ஆனாலும் ஒரு ஆள் தாராளமா வெளியே வலம் வரும் அளவுக்குக் கல் பாவிய பாதை. கோயில் சந்நிதிக்குப் பின்னால் வரப்போகும் விசேஷத்துக்காக நூத்துக்கணக்கான ச்சின்ன அகல்கள் திரி போட்டு வச்சுக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேர். அழகான அடக்கமான கோயில். கோபாலுக்கு ஒரு நன்றி சொல்லிக்கறேன். வாட்டர்லூ தெரு & மிடில் ரோடு கார்னர்லே இருக்கு இந்தக் கோயில். கோயில் முகப்புக் கோபுரத்தில்
மகாவிஷ்ணு, மகாலக்ஷ்மியைத் திருமணம் செய்யும் காட்சி. சிவன், பார்வதி, பிரம்மா, நாரதர்னு எல்லோரும் வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கிறாங்க.
நாங்க இருந்த அவ்வளவு நேரமும் ச்சீனர்கள் மட்டுமே வந்து கும்பிட்டுக்கிட்டு இருந்ததைப் பார்த்தோம். மனத்திருப்தியுடன் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். சிங்கை நண்பர் (எழுத்தாளரரும் கூட) சந்திக்க வரேன்னு சொல்லி இருந்தார். அவரோடு கிளம்பி சரவண பவன் வந்தோம். நேத்து இவர் வீட்டுலேதான் பகல் சாப்பாடு. ஆனா இவர் மனைவி (என் தோழிதான். இவுங்களும் சிங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர்) மட்டும் தான் இருந்தாங்க. வேலையில் இவர் மாட்டிக்கிட்டாராம். அதனாலே இன்னிக்கு மகனோடு வந்தார். எங்ககிட்டே ரெண்டு கேபின் பேக் மட்டும்தான். அதையும் கையோடு கொண்டு வந்தாச்சு. காபி டிபன் ஆனதும் டாக்ஸி எடுக்க நிக்கறோம். ஒண்ணும் கிடைக்கலை. நண்பர்கிட்டே பக்கத்தில் டாக்ஸி ஸ்டாண்டுலே விடச் சொல்லி போய்க்கிட்டு இருக்கோம்.வண்டி எங்கேயும் நிக்காம ஏர்ப்போர்ட்டுக்கே போயாச்சு.

பச்சைக்கலரு சிங்குச்சா, சிகப்புக் கலரு சிங்குச்சா, மஞ்சக்கலரு சிங்குச்சான்னு பல நிறத்துலே புதுக்கட்டிடங்கள் ஏராளமா வந்திருக்கு, சிங்கை பூராவும்.

லாக்கர் ரூமில் இருந்த மற்ற பெட்டிகளை எடுத்துக்கிட்டு 'செக்கின்' செஞ்சு லவுஞ்சுக்குப் போனோம். மறுநாள் பகல் பன்னிரெண்டுக்கு இங்கே வந்து சேர்ந்தாச்சு. சாயங்காலம் நம்மூர் (ஹரே) கிருஷ்ணனைப் போய் கண்டுக்கிட்டோம். இப்போதைக்கு இதுதான் சாஸ்வதம். இல்லையா?

இந்தத் தொடரை இத்துடன் முடிக்கின்றேன்( யாரோ அங்கே பெருமூச்சு விடும் சத்தம் இங்கே கேக்குது:-)...)ஆதரவு தந்த அன்புள்ளங்களுக்கு நன்றி.

முற்றும்.

35 comments:

said...

So What's Next??
Tamil fonts not available

said...

நாந்தான் முதல்லயா இன்னிக்கு ?

தொடர் முழுசும் படிச்சேன் துளசி. ஒவ்வொரு கோவிலுக்கா கையைப் புடிச்சு கூட்டீட்டுப் போயிட்டீங்க. நல்ல தொடர்.

said...

கும்மானிங் டீச்சர்

தென்றலின் கையைப்பிடித்துக்கொண்டு
நந்த வனத்தில் நடந்த சுகம் எனக்கு.

அப்படியே கையைப்புடுச்சிகிட்டே
கூடவே கூட்டிகிட்டு போயி சுத்திக்காட்டுன மாதிரி இருக்கு டீச்சர்.

ரொம்ப நன்றிங்க.

said...

தில்லி போயி சிங்கை வந்தது டும்டும்டும்
சிங்கை போயி நியூசி வந்தது டும்டும்டும்
நியூசியிலே டீச்சர் வந்தா டும்டும்டும்
பயணம் முடிஞ்சு வரலாறாகும் டும்டும்டும்!!

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

அடுத்து?

எல்லாம் உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்து:-))))

said...

வாங்க ஜெயஸ்ரீ.

நீங்க ரெண்டாவது. அம்மிணி முந்திக்கிட்டாங்க:-)

தொடர்ந்து படிச்சதுக்கு நன்றி.
அடிக்கடி வந்து போங்க.

said...

வாங்க பெருசு.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

'பெரு'வுக்கு வந்தா நீங்க சுத்திக் காமிக்க மாட்டீங்களா என்ன? :-))))

said...

வாங்க கொத்ஸ்.

தெரியும், முந்தியே தெரியும் க்ளாஸ்லே எல்லோருக்கும் கொண்டாட்டமா
இருக்குமுன்னு. அதுக்காக இப்படி 'டும் டும்' கொட்டிக் கொண்டாடறது...........
டூ மச்:-)))))

இதுவரை நீங்க எல்லாம் படிச்சதுலே டெஸ்ட் வைக்கப் போறேன்,ஆமா!

said...

துளசி,
கிருஷ்ணன் கோவில் படங்கள் பிரமாதம்.
அச்சோ முடியுதேனு இருக்கு.
நீங்க பார்த்த சீன மஹலக்ஷ்மி
மதர் ஆஃப் மெர்சி.
she is the healer of all illnesses
caused by our own manifestations and thinking.
Magnified Healing is the name of her avathar's main aim.

இவங்களை நினைத்துதான் அந்த ரெய்கி மாதிரி வைத்தியத்தைக் கத்துக்கணும்.
கத்துக் கிட்டேன்.
பிராக்டிஸ் பண்ணாததாலே
பயன் இல்லாமல் இருக்கேன்.
பெரிய பெரிய விஷயங்கள் சீன தத்துவங்களில் இருக்கு.
நம்மது மாதிரியே.

said...

அப்பா...... ஒரு மாசமா ஊர் சுத்துன களைப்பு... ஒரு நாள் விட்டு அடுத்த சுத்துக்கு பிளான் போடலாம்.
:-))))..

அருமை அக்கா... இங்க வந்து எங்களை பார்த்து, பேசி, சிரிச்சு, சுத்துனதுக்கு..டாங்க்ஸ்க்கா

said...

அடுத்து என்னவா கையில் இன்னும் என்ன என்ன வச்சிருக்காங்களோ நாம ஒரு பதிவுக்கு யோசிக்கறதுக்குள்ள
துளசி ஒரு தொடருக்கே செய்தி வச்சிருப்பாங்க..

மங்கை சொன்ன மாதிரி எனக்கும் சுத்துன களைப்பு தான்...காசு செலவு இல்லாத சுற்றுலா.. :)

said...

சிலநேரம் பரணீதரனாக......
சிலநேரம் மணியனாக.......
நிறைவான பயணக்கட்டுரை!
நன்றி துளசி

சிவஞானம்ஜி

said...

//அடுத்தமுறை இங்கே இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து வந்து ஆராயணும்.//

கட்டாயம் போங்க டீச்சர். மாலையில போங்க இன்னும் நல்லா இருக்கும். நானும் பல தடவை போயிருக்கேன். கிருஷ்ண ஜெயந்தியின் போது ஒரு முறை கோவில் பக்கத்தில் இருந்த திறந்தவெளியில் கச்சேரிகள் நடந்தது. சுதா ரகுநாதன் 2 நாட்கள் கச்சேரி செய்தார். 2 நாளும் போய் கேட்டேன். இன்னும் அது தொடர்ந்து நடக்குதான்னு தெரியலை.

said...

துளசி,
பயணத்துக்கோ, கட்டுரைக்கோ
முடிவு கிடைய்து.
தொடரும் தொடரும் வேறு தொடராக.
இது புது மொழி.
அதனால ஒரு நாள் வேணா ரெஸ்ட்.
மீண்டும் பார்க்கலாம்.

said...

டீச்சர்...அந்தத் தேங்காய் தாய்லாந்து தேங்காய். என்ன சுவையான நீரு...அந்த வழுக்கை அடடா! பதநி குடிச்சாப்புல தேங்காத்தண்ணி...நான் சிங்கப்பூரு போயிட்டு வந்ததிலிருந்து தாய்லாந்து எளநிக்கு அடிமையாயிட்டேன். என்ன குளுமை..என்ன வளமை...

நீங்க சொல்ற கிருஷ்ணன் கோயில் முஸ்தபா பக்கத்துல கொஞ்சம் முன்னாடி போனா இருக்கா? செராங்கூன் தெருன்னு நெனைக்கிறேன். அங்க ஒரு பெருமாள் கோயிலுக்கு நான் போனேன். அங்க உள்ள கருவறைக்குள்ளேயே போட்டோ எடுக்க விட்டாங்களே. நான் நம்ம பாண்டிநாட்டு ஆண்டாளை (தனிச் சந்நிதி) மட்டும் படம் பிடிச்சிட்டு வந்தேன். :-)

தொடர் முடிஞ்சு போச்சா! அதுவும் நல்லதுக்குத்தான். அடுத்த தொடர் தொடங்கீரலாமே.

said...

என்ன டீச்சர் அதுக்குள்ளாற முடிச்சிட்டீங்க....இலவசமா யாராச்சும் உங்களை மிரட்டினா சொல்லுங்க,....ஒரு கை பாத்துறலாம் :-) அதுவும் நாளைக்கு சந்திப்பின் போது! :-))

//வெய்யிலுக்கு இதமா இளநீர் விற்பனை ஜரூரா நடக்குது.வெறும் ஒரு டாலர்தான். ஜில்லுன்னு குடிக்க அருமை. உள்ளே தேங்காயைச் சுரண்டித் தின்ன ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன்//

குடிச்சவுடன், தேங்காயை ரெண்டா பிளக்கற வேலை எல்லாம் இல்லை போலருக்கே! நிம்மதி!
அப்படியே ஸ்பூனில் துழாவி எடுத்துக்க வேண்டியது தானா?

எல்லாத் தேங்காயும் துழாவி விட்டோம் ன்னு எப்படி கண்டு பிடிக்கறது? :-))

said...

வாங்க வல்லி.

ரெய்கி வைத்தியமா? அடிச் சக்கை.

ஏன் ப்ராக்டீஸ் பண்ணலை? நான் இருக்கேன் கினி இங்கே:-

said...

வாங்க மங்கை & முத்துலெட்சுமி.

டெல்லிக்காரங்க எல்லாம் ஒண்ணா வந்துருக்கீங்க?

பயணத்துலே நீங்களும் கூடவே வந்ததுக்கு நன்றி:-)))))

said...

வாங்க சிஜி.

அப்ப ஒரு நேரமும் நான் துளசியா இல்லையா? (-:

அடக் கடவுளே!

தொடர்ந்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி.

said...

இப்பவும் கிருஷ்ண ஜெயந்தி விழா ரொம்ப அமர்க்களமாத்தான் நடக்குதாம்.
கோயிலை ஒட்டிப் பின்பக்கம் ஒரு நாலு மாடிக் கட்டிடம் கட்டிட்டாங்க. அது கல்ச்சுரல்
செண்ட்டரா இருக்கு.

said...

ஆமாம் வல்லி.

பயணத்துக்கு முடிவு ஏது? 'கடைசி'யிலும் ஒரு பயணம் இருக்கே:-))))
ஆனா அதை எழுதறதுதான் எப்படின்னு ஒரே யோசனை:-))))))

said...

வாங்க ராகவன்.

உண்மையாவே நல்ல ருசியான இளநீர். அழகா மேல் ஓட்டைச் செதுக்கி,
ஐஸ்கட்டியில் வச்சுடறாங்க. சிம்பிள் & ஸ்வீட்டா இருக்கு.

இந்தக் கிருஷ்ணன் கோயில் நம்ம 'சிம்லிம் ஸ்கொயர்' பக்கம்.

said...

வாங்க KRS.

நானும் ஒரு நீளப்பிடி இருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்பூனை இனிமே கொண்டு
போகப்போறேன். கொஞ்சம் கூட விடாமச் சுரண்டத்தான்:-)))))

அப்புறம் அடுத்த பயணத்துலே இருந்து சிங்கைக்கு ஒரு நூல்கண்டு, ஊசி
கொண்டு போகணும். ஹோட்டலில் இருக்கும் 'சோயிங் கிட்'லே ச்சும்மா ஒரு
முழம் நூல்தான் இருக்கு(-:

நூல் எதுக்கு?

அங்கே உதிரி மல்லிப்பூ சூப்பர் மார்கெட்லே சல்லிசா இருக்கு. வாங்கிக் கோர்த்து
ஆசைதீர வச்சுக்கணும். ஆனா மறக்காம ப்ளேனை விட்டு இறங்கும்போது எடுத்துக்
களைஞ்சுரணும். இல்லேன்னா இங்கே 200$ இன்ஸ்டண்ட் பைன்(-:

said...

உலகம் சுற்றும் அம்மாவே..

உங்க புண்ணியத்துல நாங்களும் நீங்க போற இடத்தையெல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம். வாழ்க.. வளர்க.. இந்நேரம் இதுவே ஒரு ஆணாக இருந்திருந்தால் கதையே வேறு மாதிரி போயிருக்கும்.. எது தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி..

அடுத்து எந்த நாடு?

கம்போடியா அங்கோர்வாட் கோயிலைப் பத்தி மேட்டரோட போட்டோ வேணும் மேடம்..

எப்ப கிடைக்கும் தாயீ..?
)))))))

said...

வாங்க உண்மைத்தமிழரே.

பயணத்தை ரசிச்சதுக்கு நன்றி.

அங்கோர் வாட் கோயிலைப் பத்தி நம்ம நா. கண்ணன்( கொரியா) அருமையான
படங்களோடு அட்டகாசமா எழுதி இருந்தாரே போன வருடம். நீங்க பார்க்கலையா?

அடடா..........

அவர் ஆண்தான். தேவையானதை மட்டும்தான் எழுதி இருக்கார்:-)))))

said...

தொடர் முழுசும் படிச்சேன் துளசி. ஒவ்வொரு கோவிலுக்கா கையைப் புடிச்சு கூட்டீட்டுப் போயிட்டீங்க. நல்ல தொடர்---Agreed

said...

//இல்லேன்னா இங்கே 200$ இன்ஸ்டண்ட் பைன்(-: //

ஆகா....
எனக்கு ஒரு முழம் பூவாச்சும் வாங்கிக் கொடுத்திருக்கீங்களான்னு அங்க எல்லாம் கேட்க முடியாதோ?
இது அநியாயம் டீச்சர். பெண்கள் ஓட்டு பற்றி எல்லாம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு கவலை இல்லையா?

இங்கு அப்படி எல்லாம் இல்லை டீச்சர்! ஆனா ஒரே ஒரு விஷயம், பூவை நாம தான் வைச்சிக்கணும்...அடுத்தவங்களுக்கு வச்சி விட முடியுமான்னு தெரியலை! :-)

said...

ரொம்ப நல்ல தொடர் அக்கா!!!
இது போன்ற பல தொடர்களை தொய்வின்றி தொடர்வதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)

said...

வாங்க பத்மா.

நீங்கெல்லாம் தொடர்ந்து தரும் ஆதரவுதான் பத்மா, எழுதும் ஆர்வத்தைப் பெருக்குது.

நன்றி பத்மா.

said...

வாங்க KRS,


//பெண்கள் ஓட்டு பற்றி எல்லாம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு
கவலை இல்லையா?//

சரியாப்போச்சு. உலகிலேயே பெண்களுக்கு முதல் முதலா ஓட்டுரிமை
கொடுத்ததே நியூசிதாங்க.

பூ , பழம், காய் எல்லாம் நாட்டுக்குள்ளெ கொண்டு வந்தால் அது மூலமா வேண்டாத
விஷயம் பரவிரும். இந்த நாட்டுலே இருக்கற ஆர்ச்சர்ட்கள் பாதிக்கப் படலாம்
என்றதுக்காகத்தான் எதையும் உள்ளே நுழையவிடறதில்லை.

இங்கேயே பூக்கும் பூக்களை எவ்வளவு வேணுமானாலும் தலையில் சூடிக்கலாம். ஆனா,
வெள்ளைக்காரர்கள் யாருமே ஜடைபின்னி பூ வச்சுக்கப் படிச்சுக்கலை(-:

நாங்கள் வீட்டுலே பூக்கும் பிச்சிப்பூ, ஊசி மல்லி எல்லாம் வச்சுக்கறதுண்டு.
ஆனா குண்டு மல்லி இங்கெ வளர்றது கஷ்டம். குளிர் நாடாச்சே(-:

said...

வாங்க CVR,

தொடரை ரசிச்சதுக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

பின்னூட்ட அரசிங்கற பட்டத்தோட பயணக்கட்டுரை அரசிங்கற பட்டமும் ஒங்களுக்கு... புடிங்க..

அடுத்தது எப்போ?

said...

சுவையான தகவல்கள்! அருமையான
படங்கள்! ரத்தச்சிவப்பு தாமரைகள்
கண்ணிலேயே நிற்கிறது!

said...

வாங்க டிபிஆர்ஜோ.

இப்படிப் 'பட்டம்' வாரி வழங்கும் வள்ளலா இருக்கீங்க:-))))

'வள்ளல்'ன்னு உங்களுக்கு எதிர்மரியாதை செஞ்சுறலாமா? :-)

said...

வாங்க நாநானி.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. இதோ நம்ம சரித்திர வகுப்பு
ஆரம்பிச்சாச்சு. ஆதரவா இருப்பீங்கன்னு ஒரு நம்பிக்கைதான்.