அழகுன்னா என்னன்னு இலவசமாச் சொல்லிட்டார் நம்ம இலவசம். ரொம்பச் சரி.அழகை எங்கே பார்க்கலாம்? எங்கெவேணுன்னாலும் பார்க்கலாம்.நம்ம மனசு மட்டும் சுத்தமா, க்ளட்டரா இல்லாம இருக்கணும்.
என்னைச் சுத்தி நிரம்பி இருக்கற அழகு ஏராளம். எதைச் சொல்றதுன்ற பரிதவிப்பில்தான் இத்தனை நாளா ஆறப் போட்டுட்டேன். அழைப்புகள் வர ஆரம்பிச்சுருச்சு. இனியும் ச்சும்மா இருக்கவேணாமுன்னுதான் 'சட்'ன்னு கண்ணைத் திறந்தவுடன் கிடைச்ச அழகுகளை இங்கே அள்ளிப் போட்டுருக்கேன்.
என் யானைங்க எல்லாமே அழகு. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசுலே. என் பூனையும் அழகுதான். அதிலும் அவன் தமிழ்மணம் படிக்கிற அழகைப் பாருங்களேன்:-)
பூக்களை ரசித்த என் மற்றொரு செல்லம்.
என் சாமியும் அழகுதான். நல்லா யோசனை செஞ்சு பார்த்தப்ப, 'திருப்பதி'ப் பைத்தியமா இருந்த நான் 'இவன்' வந்தபிறகு அங்கே போகவே இல்லை. போகணுமுன்னு முந்தியெல்லாம் ஒரு வேகம் வரும் பாருங்க, அது இப்பெல்லாம் இல்லை.சுமார் எட்டு வருஷத்துக்கு முந்தி ஒருசமயம் திருப்பதி போயிட்டுத் திரும்பி வந்த ரெண்டு நாளில் எங்கிட்டே வந்துட்டாங்க இவுங்க. அழகுக்கு அழகு செய்யறதுபோல என்னிஷ்டமான காம்பினேஷனில் பட்டுப்பாவாடைகளாத் தைச்சுத் தாயாருக்குச் சாத்திருவேன். அதெல்லாம் கூட ஒரு அழகுதானே?
உலகில் பூக்கும் ஒவ்வொரு பூக்களுமே அழகுன்னாலும் நம்ம தோட்டத்துலே பூக்கும் அபூர்வ( ???) மலருக்கு ஒரு தனி அழகு இருக்கத்தானே செய்யுது . இல்லீங்களா? பாருங்க நம்மூட்டுத் தாமரையை.
குண்டு சட்டிக்குள்ளெ குதிரை ஓட்டவேணாமுன்னு வெளியிலே வந்தால்.............
அடடா வானம் எப்படிக்கோலம் போடுது பார்த்தீங்களா? ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு அழகு. என்னா பெயிண்டிங்! எப்படிக் கலர் செலக்ஷன். மனுஷனாலே செய்யமுடியுமா? ஆஹா.......
இருக்கும் ஊர் மட்டுமில்லை, வசிக்கும் நாடே கொள்ளை அழகு. இல்லாமலா சினிமாக்காரங்க வந்து அள்ளிக்கிட்டுப் போறாங்க.
நாட்டைவிட்டு வெளியில் வந்து சொல்லட்டுமா? இந்தியாவுலே ஏகப்பட்ட இடங்கள் அழகுதான். இன்னும் அங்கேபல இடங்கள் பாக்கி இருக்கு. அதுக்கு நேரங்காலம் அமையலை(-: அதனாலே ..........
எதாவது ஒரு இடத்தை மறுபடி பார்க்கணுமுன்னு நினைச்சீங்கன்னா அது அழகானஇடம். கிரிமினல்கூடத்தான் கிரைம் நடந்த இடத்தைப் பார்க்கப் போவானாம். அப்ப? அட! அது அவனுக்கு அழகா இருக்கறதாலேதானே மறுபடி போறான்.?
ஆனா மறுபடி, மறுபடின்னு சதா போற இடம் இந்தக் கணக்குலே வராது.உதாரணம்: சூப்பர் மார்கெட்:-)
இன்னொரு ச்சான்ஸ் கிடைச்சாக் கட்டாயம் போகணுமுன்னு நினைக்கிறமே அது அழகு.
ஒரு சமயம் பயணத்தின்போது இத்தாலியில் சொரேண்ட்டோ என்ற ஊரில் சிலநாட்கள் தங்குனோம்.பக்கத்துலே ஒரு தீவு இருக்கு, ஒரு நாள் ட்ரிப்பா போய்வரலாமுன்னு சொன்னாங்க. காப்ரித் தீவு.
கிளம்பிப் போயாச்சு. நெட்டுக்குத்தா நிக்கிற மலையிலே வளைஞ்சு வளைஞ்சு ஏகப்பட்டத் திருப்பங்களோடுபாதை. சட் சட்ன்னு கண்ணுமுன்னாலே வந்து மறையும் வீடுகள். உயிரைப் பிடிச்சுக்கிட்டு பயணம் செய்யும்நாங்களும், அசால்ட்டா வண்டியை ஓட்டும் ட்ரைவரும். ஒரு இடத்துலே ஒரு மலையில் இருந்துஅடுத்த மலைக்கு ரோப் கார். ஒவ்வொரு ஆளாத்தான் போகணும். காலைத் தொங்கப்போட்டுக்கிட்டு, கம்பியைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டுப் போறேன். கீழே அதலபாதாளம். காடு. அழகா இருக்கு. ஆனா பயமாவும் இருக்கு. முன்னாலே போற கார்( பொல்லாத கார். ஒரு மணைக்கட்டையை மேலே இருக்கும் ஸ்டீல் கயிறோடு இணைச்சிருக்கு. கரணம் தப்பினால் மரணம்தான். காத்தடிக்கும்போது மணை ஆடுது) ஆபத்துலேயும்ஒரு அழகு இருக்குல்லே? அந்தப் பக்கம் போனால் மலை உச்சியிலே நிக்கறோம். கீழே கடல். நெட்டுக்குத்தா மலையை அப்படியே அரிஞ்சு வச்சுருக்கு. அதைப் பார்த்துட்டு அப்படியே மறுபடி இந்தப் பக்கம் இன்னொருக்கா மணைக்கட்டையில் உக்கார்ந்து திரும்பிவந்துட்டு, அந்தத் தீவைச் சுத்திச்சுத்தி போய்வரும் மினி வேன் பயணம்.ஒரு இடத்துலே ஆட்கள் கூட்டமா இருக்காங்க. ஷ்டாப். இறங்கிப் பார்த்தா.........
சரிவான பாதையில் இறங்கி மக்கள்ஸ் கடலுக்குப் பக்கத்தில் போறாங்க. கூடவே நாங்களும். அங்கே கட்டுமரம் மாதிரி சின்னப் படகுகள் நிறைய இருக்கு.ஒவ்வொண்ணுலேயும் ரெண்டு மூணு ஆட்களை ஏத்திக்கிட்டுப் போறாங்க. திரும்பக் கொண்டு வந்துவிடறாங்க. என்னவா இருக்கும்? நாங்களும் போனோம். படகு அப்படியே நகர்ந்து ஒரு அஞ்சாறு நிமிஷ தூரத்தில் இருக்கும் மலைக்குப் பக்கம் போகுது. மலை அடியில் சின்னக் குகை போல ஒரு துளை. கிட்டே போகும்போது நம்மை அப்படியே சாய்ஞ்சு படுத்தாப்போலகுனிஞ்சுக்கச் சொல்றாங்க. படகின் தரையோடு தரையாக் கவுந்துரணும். குகைவாசலைக் கடந்து படகு உள்ளெ போயிருது. இப்ப நிமிரலாம்.ஒரே கும்மிருட்டு. அப்படியே படகை இந்தப் பக்கம் திருப்பிக் குகை வாயிலை நோக்கித் திருப்புனாங்க. ஹப்பா.......நெஞ்சே நின்னு போச்சு. அப்படி ஒரு நீலக்கலரை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. azure . சூரிய வெளிச்சம்ஒரு ஆங்கிளில் அப்படியே தண்ணிக்குள்ளே ஊடுருவிப்போகுது பாருங்க. பிரமிச்சுப் போயிட்டேன்.
எல்லாம் ஒரு சில நிமிஷங்கள்தான்.மறுபடிப் படுத்துக்கிட்டே வெளியில் வந்துருவோம். அடடா.......... அதான் திரும்பிப்போகும் மக்கள் முகத்துலே ஒரு பரவசம் &ஒளிவட்டம் தெரிஞ்சதா? இங்கே இப்படி இருக்குன்னு கண்டுபிடிச்சு அதைக் காசாக்கிட்டாங்க பார்த்தீங்களா? ஆனாகொடுத்த காசுக்கு பழுது இல்லை. இயற்கை அழகே அழகு. அதை மறுபடி பார்க்க மனசு ஏங்குது.
ஆனா அழகுன்னதும் இவ்வளவு தூரம் போகணுமுன்னு அவசியமே இல்லைங்க. எல்லாம் இங்கேயே இருக்கு. அக்கம்பாருங்கஅழகு கொட்டிக்கிடக்கப் போகுது.
நானும் ஒரு மூணு பேரைக் கூப்புடணுமுன்னு 'விதி' இருக்காமே. ம்ம்ம்ம்ம்ம்ம் .........
அக்கா வீட்டுக்கு வெறும் மூணு பேரை(மட்டும்) கூப்புடணுமுன்னா அழகாவா இருக்கு? நோ ச்சான்ஸ்.பேசாம இதுவரைக்கும் வெள்ளாடாதவுங்க யாருவேணா கலந்துக்கிட்டு அடிச்சு ஆடுங்கப்பா. எல்லாம் பாசக்கார பயலுகளாமே :-))))
31 comments:
உங்க வீட்டுத்தாமரை, யானை, பூனை எல்லாமே அழகு.
அது என்ன லேக். எழுத்து சரியா தெரியமாட்டேங்குது
வாங்க ச்சின்ன அம்மிணி.
அது Lake Fergus
அன்பே உருவான துளசி மேடம் எழுதுவதெல்லாமே அழகுதான்! படங்கள் பார்த்தாலே பரவசம்!பூனைகுட்டியிலிருந்து எல்லாமே அத்தனை அழகு!
வாங்க ஷைலு,
நலமா?
அழகுன்னதும் அழகானவங்க எல்லாம் வர்றீங்க?
//படங்கள் பார்த்தாலே பரவசம்//
படத்துலேயே ரொம்ப அழகாத்தான் இருக்கு. இல்லே? :-))))
சாமி வாட்ரோப் அருமை...
அப்புறம் உங்க கஜராஜாக்கள்..
அதுலேயும் ஒருத்தர் நான் என்ன எழுதறேன்னு குமிஞ்சு பார்த்துட்டு இருக்கார் பாருங்க.. அழகு
வாங்க மங்கை.
கஜ ராஜாக்கள் எல்லா இடங்களையும் ஆக்ரமிச்சாச்சு. ச்சும்மா ஒரு மூலையில்
இருக்கறவங்கதான் பதிவுக்கு வந்துருக்காங்க. பார்க் பெஞ்சுலெ படுத்துக்கிட்டுக்கூட
ஒருத்தர் நம்மகிட்டே இருக்கார்:-)
/ என் பூனையும் அழகுதான். அதிலும் அவன் தமிழ்மணம் படிக்கிற அழகைப் பாருங்களேன்:-)
/
/கிரிமினல்கூடத்தான் கிரைம் நடந்த இடத்தைப் பார்க்கப் போவானாம். அப்ப? அட! அது அவனுக்கு அழகா இருக்கறதாலேதானே மறுபடி போறான்.?
/
/
ஆனா மறுபடி, மறுபடின்னு சதா போற இடம் இந்தக் கணக்குலே வராது.உதாரணம்: சூப்பர் மார்கெட்:-)
/
உங்க 'சத்தியராஜ்'தனமே அழகு!
டீச்சர், தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ;)
//பாருங்க நம்மூட்டுத் தாமரையை//
நெசமாலுமே நம்மூட்டுல பூத்ததா? கொள்ளை அழகுங்க.
மொத்தத்துல உங்க நடை அழகு... எழுத்து நடைய சொன்னேங்க அம்மணி...
//கிரிமினல்கூடத்தான் கிரைம் நடந்த இடத்தைப் பார்க்கப் போவானாம். அப்ப? அட! அது அவனுக்கு அழகா இருக்கறதாலேதானே மறுபடி போறான்.?//
ஓவர் ரவுசா தெரியல... ஆனாலும் அழகாத்தேன் இருக்குங்கோவ்!
1) வீட்டில் வேலை ஜாஸ்தி
2) வெளியில் வேலை ஜாஸ்தி
3) இந்த கோகிக்கும் அந்த கோவுக்கும் வேலை செஞ்சு ஓடாப் போயாச்சு, நமக்கெங்க நேரம்
4) வேலை வெட்டி இல்லாம எதுனா டேக் விளையாட்டு ஆரம்பிக்கிறாங்க. இவனுங்களுக்கெல்லாம் இதே ஜாஸ்தி.
என்னடா இதெல்லாம் அப்படின்னு கேட்கறீங்களா? ஏன் டீச்சர் இப்படி நாலு பழைய படத்தைப் போட்டு ஒரு மொக்கை அழகுப் பதிவுன்னு கேட்டா நீங்க பதில் சொல்லணுமுல்ல. அதான் கொஞ்சம் உதவி செய்யலாமேன்னு. ஹிஹி... :))
//என் பூனையும் அழகுதான். அதிலும் அவன் தமிழ்மணம் படிக்கிற அழகைப் பாருங்களேன்:-)//
ஆகா...
பூனைப் பையனா...ப்ளாக் எல்லாம் எழுதுவானா டீச்சர்? அனானி பின்னூட்டம் போட்டாக் கூடப் போறுமே! :-)))
முதல் அழகு, முதல் அழகு தான்!
அமர்க்களம்!
தாமரைப்பூ அழகோ அழகு!
எத்தனைப் பூக்கள் பூக்கும் டீச்சர்?
குளிர் காலத்தில், காலையில் சூரியன் வர லேட்டானா?
வாங்க தென்றல்.
//உங்க 'சத்தியராஜ்'தனமே அழகு!//
அது என்னங்க சத்தியராஜ் தனம்? கொஞ்சம் விளக்கமாச் சொல்லக்கூடாதா?
ஓஓ ஓஓஓஓஓஓ கோயமுத்தூர் ****? :-)
//இந்தியாவுலே ஏகப்பட்ட இடங்கள் அழகுதான். இன்னும் அங்கேபல இடங்கள் பாக்கி இருக்கு//
இப்ப தான் இந்தியப் பயணம் முடித்து வந்தீங்க! வந்த உடனேயே என்னென்னெ இடம் போனோம் என்பதோடு, இன்னும் என்னென்ன இடம் பாக்கி இருக்குன்னும் ஒரு கணக்குப் போட்டுருவீங்க போல இருக்கே!
எப்பவும் போல் எனக்கு சில படங்கள் தெரியவில்லை.என்னை கணக்கில் எடுத்துக்காதீங்க,கணினி அப்படி.
எனக்கென்னவோ நீங்க சொன்ன காத்ரீப் தீவு சொன்னவிதம் அழகாகப்பட்டது.
சிகப்பு ரோஜா "பூனையா?"- முகப்பு பக்கம் மட்டும் படிக்கச்சொல்லுங்க.:-))
வாங்க காட்டாறு.
அழகு நல்லாருக்குன்னு சொன்னதே அழகாத்தான் இருக்கு:-)
ரசிக்கத் தெரியணுமுல்லே? (பின்னால் பார்க்கவும்)
வாங்க கொத்ஸ்,
அட! இதான் மொக்கையா? நானும் ஒரு மொக்கைப் பதிவு போடணுமுன்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன்.
நல்லவேளை என் ஆசை இப்பவாவது(??) நிறைவேறுச்சு:-)
வாங்க KRS.
நம்ம கோ.கிதான் பதிவு எல்லாமே எழுதித் தர்றான்னு சொல்லவும் ஆசையா இருக்கு.
இந்த சீஸன்லே ஒரு 14 பூ பூத்தது. இனி குளிரில் அதுக்கும் தூக்கம்தான். இந்த
வருஷம் அந்த tankக்கு வேற சிறப்பு வைத்தியம் பார்க்கலாமான்னு ஒரு யோசனை இருக்கு.
முதல் படத்தில் இருப்பவரை மிஞ்ச இதுவரை ஆள் இல்லையாக்கும்:-)
இந்தியப்பயணம் முடிஞ்சு வந்தே 3 மாசமாச்சு. பார்க்காத இடமுன்னு சொன்னா
அது ஏராளம்.
வாங்க குமார்.
முகப்பு மட்டும்தான் (பார்ப்பான்!)படிப்பான். உள்ளே நடக்கும் சண்டையெல்லாம் அவனுக்கு(ம்)
புரியாது:-)
ஆஹா இதான் அழகு பதிவா? நா என்னமோ ஏதோன்னு மிரண்டு போயி வந்த அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியாம முளிச்சிக்கிட்டு நிக்கேன்..
போட்டுரவேண்டியதுதான்..
அப்பா எத்தனை விதமான பட்டுப்பாவடை..?நீங்க யானைகலெக்ஷனா ?
நான் பிள்ளையார் கலெக்ஷன்.
அந்த மணைப்பயணமும் கடல் பயணமும் பத்தி எழுதனது மனதை ரொம்பவும் கவர்ந்தது.
வாங்க டிபிஆர்ஜோ.
அழகைப் பார்த்து ஏங்க இந்த பயம்?
ரொம்ப சிம்பிள்ங்க இந்த அழகு. ஆனா இருக்கற அழகுலே
எதை எழுதறது எதை விடறதுன்னுதான் குழம்பிருவோம்:-)
வாங்க முத்துலெட்சுமி.
நான் ச்சின்னப்பிள்ளையா இருந்தப்ப இருந்து பாவாடை தாவணி சீஸன்வரை
அதென்னமோ சொல்லி வச்சாப்புலே மூணே மூணு பட்டுப்பாவாடைதான் எப்பவும்
கைவசம். அதையே மாத்திமாத்திப் போரடிச்சுப்போச்சு. அதான் இப்ப அந்த ஆசை தீர
சாமிக்கு சாத்தோ சாத்துன்னு சாத்திக்கிட்டு(!) இருக்கேன்:-)
யானை கலெக்ஷனும் பிள்ளையார் கலெக்ஷனும் இருக்கு நம்மகிட்டே.
யானை மூஞ்சு இருந்தாப்போதும்:-))))
யானைகள், தமிழ்மணம் படிக்கும் பூனை, தாமரை, எல்லாம் கொள்ளையழகு.
வருகைக்கு நன்றி ப்ரசன்னா.
கோ.கிக்கு தமிழ்மணமுன்னா உயிரு:-)))
சொதப்பல் பதிவுனு யாரோ சொன்னாங்க.
கண்ணன் கால் அழுக்குனு சொன்னா மாதிரி:-)
படங்களும்,பாவாடைகளும் ,பதிவும் ரொம்ப அழகு.
அதென்னமா ஜி.கே படிக்கிறான்.!!
போட்டொ எடுக்கிற கைக்கும் ஒரு தோடா வாங்கிப் போட்டுரலாமா?அந்தத் லேக் படம் வரலைப்பா. ஒரு நல்ல azure nu வேற சொல்லிட்டீங்க. பார்க்க ஆசை.
வாவ்! எல்லாமே அழகு! டீச்சர் அந்த யானை அழகு, தாமரை கொள்ளை அழகு, பூனை அழகு....அது போல சில சமயம் சில நச் கமெண்டும் அழகு, வல்லியம்மா சொன்ன கமெண்டுல
//சொதப்பல் பதிவுனு யாரோ சொன்னாங்க.
கண்ணன் கால் அழுக்குனு சொன்னா மாதிரி:-)//
இந்த உவமையை நான் எங்காவது யூஸ் பண்ணிக்கவா?
எல்லா அழகும் நல்லா இருக்கு. நம்ப அழகையும் வ்ந்து பாருங்களேன்.சில ஒற்றுமைகள் உண்டு.
வாங்க வல்லி.
உங்க பின்னூட்டத்துக்கு ஒரு fan கிடைச்சுட்டாரு பாருங்க:-)
'தோடா' பிட்டைப் பார்த்துட்டு 'த்தோடா...'ங்கறார் கோபால்:-)
வாங்க அபி அப்பா.
இப்படியெல்லாம் நல்லதுகளை வாரி வச்சுக்கிட்டு அப்பப்ப எடுத்து விடாட்டா எப்படி?
நம்ம வல்லிதான். தாராளமா இரவல் வாங்கிக்குங்க. ஆனால் அதுக்கு ஒரு
'நன்றி:துளசி'ன்னு போட்டுருங்க:-))) என்னதான் வல்லிதுன்னாலும் இப்ப இருக்க இடம்
துளசிதளம்:-)
வாங்க தி.ரா.ச.
சில ஒற்றுமையா?
இல்லையே. பல ஒற்றுமையா இருக்கே!
அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த பதிவு ரொம்ப அழக்கா இருக்கு.
அதுவும் நம்ப பெருமாள் இருக்காரே! ஒருவேளை அவர் இருப்பதாலோ என்னவோ தாமரையும் ரொம்ப அழகா தெரியுது.
ஒவ்வொரு படமும் அருமையிலும் அருமை.
Post a Comment