Monday, April 16, 2007

தில்லியில் ஒரு தி. நகர்

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 14 )
( தில்லிக் கழுதை(யும்) வெள்ளையா இருக்கு)

தம்பியைப் பார்க்கறதுக்கு முந்தி அண்ணனையும் கண்டுக்கலாமேன்னு போற வழியில்பாபா கரக் சிங் ரோடுலே வண்டியைக் கொஞ்சம் நிப்பாட்டிக்கிட்டோம். 'நான் பெற்ற இன்பம்' வேற இருக்கே. இன்னிக்கு வார இறுதின்னோ என்னவோ கொஞ்சம் கூட்டம் கூடுதல்.ஹனுமார், பிள்ளையார் தரிசனம் முடிச்சுக் கொடுத்தேன். செல்ஃப் அப்பாய்ண்டட் கைடு.ஹனுமார் கோயிலில் கோபாலுக்கு நெற்றியில் சிந்தூரம் வேற வச்சுவிட்டாங்க. ஒரே பக்திப் பழமாக் காட்சி கொடுக்கறார். பிள்ளையார் கோயிலில் இருக்கும் நம்ம' செல்லக் குரங்கையும்' இன்னுமொருக்காப்போய்ப் பார்த்தேன்.
( ஜன்பத் மார்கெட் கடைகளில் சில)

தில்லிக்குப்போறவங்க எதை மறந்தாலும் சரி ஒரே ஒரு விலாசத்தை மட்டும் நினைவு வச்சுக்குங்க,சொல்லிட்டேன். P Block 15/90 Connaught Circus. அது என்ன சர்க்கஸ்? சர்க்கஸ்லே இருக்கும் ரிங் போலத்தான் வட்ட வட்டமாக் கட்டிடங்கள் கட்டி வுட்டுருக்காங்க. ஏ,பி,சி,டீன்னு ஒவ்வொரு பகுதிகளா இருக்கு.அதுலேதான் இந்த P Block கைத் தேடிப்போனோம். வெளியே நாலைஞ்சு இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.உள்ளெ இடம் காலியாக ஆக நம்மளைக் கூப்புட்டுக்குவாங்க. ஏற்கனவே நாலைஞ்சு தடவை வந்தப்பெல்லாம் இவ்வளவு கூட்டம் இல்லையேன்னு முழிச்சேன். அதெல்லாம் சாயந்திர நேரம். இப்ப லஞ்சு டயமாச்சே!
(நினைவில் வைக்கவேண்டிய இடம். )

முன் ரூமைக் கடந்து உள்ளே போனப்ப நமக்குப் பரிச்சயமான சர்வர் வந்து கண்டுக்கிட்டார். 'jain Sambar alsoavailable' போர்டு தொங்குது. சாம்பார் வடாவும். தஹி வடாவும் அக்கம்பக்கத்துலே பரபரன்னு காலியாகுது.பக்கத்து சீட் சர்தார்ஜி, கோயமுத்தூர்லே கொஞ்சநாள் இருந்தாராம். சர்தாரிணி இட்டிலியை வெட்டிக்கிட்டு இருந்தாங்க.கிண்ணம்கிண்ணமா சாம்பார் உள்ளே இழுபடுது. நமக்கு வேண்டியது சாப்பாடு. சோத்தைத் தின்னுட்டு உடனே காஃபியும்குடிச்சு வச்சுக்கிட்டோம். எதுக்கும் இருக்கட்டும், சாயந்திரம் வரமுடியுமான்னு தெரியலையே.
(கரோல்பாக் பழ வண்டியில் ஒண்ணு)

மொத்தம் மூணு இடத்துலே நடத்திக்கிட்டு இருக்காங்க. ஒண்ணு இது, இன்னொண்ணு ஜன்பத்லேயே 46 நம்பர்லே.மூணாவது கரோல் பாக் தேசபந்து குப்தா ரோடுலே. விலை எல்லாம் ரொம்பவே கூடுதல்தான். ஆனாலும் கூட்டம்அசரலை. நம்மூர் காபி & தீனி கிடைப்பதே பாக்கியம்னு இருக்கே! முன் ரூமில் முறுக்கு, சீடை, ஜாங்கிரி, லட்டுன்னுவிற்பனை ஜரூரா இருக்கு. நல்ல சேவைதான். நல்லா இருக்கட்டும். சரவண பவ(ன்) என்னும் திருமந்திரம்.

பிற்பகல் மூணு மணிக்கு ஒரு ஆஃபீஸ் நண்பரைச் சந்திச்சுட்டு அப்படியே அங்கே இருந்து ஏர்ப்போர்ட் போகற ப்ளான்.நம்ம அதிர்ஷ்டம், இந்த நண்பர் வேற இடத்துலே மாட்டிக்கிட்டாராம். எதிர்பாராமக் கிடைச்ச ரெண்டரை மணி நேரத்தை யாராவது பாழாக்கலாமா? 'நான் பெற்ற இன்பம்....' இன்னும் பாக்கி இருக்கே. கின்னஸ்லே வரப்போற ஹனுமாரையாவது கோபாலுக்குக் காமிச்சுரலாமுன்னு 'ஹொட்டலில் செக் அவுட்' செஞ்சுட்டுக் கிளம்பியாச்சு.
(சைக்கிள் ரிக்ஷா சவாரி)

இன்னிக்குப் பஞ்சாபிகளுக்கு ஒரு நல்ல பண்டிகை நாள். இந்தப் பண்டிகைக்குப் பெயர் லோரி (Lohri). வட இந்தியாவில்இப்ப நல்ல குளிர் காலம். பஞ்சாபின் முக்கிய விளை பொருளான கோதுமையை விதைச்சுட்டு இப்ப ஒரு ஒன்னரைமாசம் போல ஆயிருக்கும். அந்தச் செடிகள் முளைச்சு நிக்கும் இந்தக் காலகட்டத்தில் அந்தப் பயிர்கள் நல்லபடி வளர்ந்து நல்ல மகசூலைத் தரணுமுன்னு கடவுளை வேண்டிக்கிட்டுக் கொண்டாடும் பண்டிகை இது. ரொம்ப முக்கியமான கொண்டாட்டமான இதுலே ராத்திரி தீ மூட்டி அதுலே மக்காச்சோளம், கொஞ்சம் இனிப்புகள்னு அக்னிக்கு வழங்கி அதைச் சுத்தி நின்னு சம்பிரதாயமான பாடல்கள் பாடுவாங்க. குளிர் கால இரவில் தீயைச் சுத்தி வந்து உக்காரும்போது ரொம்ப இதமா இருக்கும்லெ. சில கிராமங்களில் இது ஒரு மாதிரி காதலர் தினமாம். ஊருக்குப் பொதுவான இடத்துலே இது நடக்குமாம்.ஒரு பெண்ணை விரும்புன பையன், அவள் பேரைச் சொல்லி தீயை வலம் வரலாம். அப்பெண்ணுக்கு அவனைப் பிடிச்சதுன்னா அவளும் அந்தக் காதலை ஏத்துக்கும் விதமா கொஞ்சம் மக்காச்சோளத்தைத் தீயில் தூவி சம்மதம் சொல்லலாம். அவள் ஒண்ணும் செய்யாம இருந்தால் அவளுக்கு இதில் விருப்பமில்லை. 'எஸ் ஆர் நோ' வைத் தெரிஞ்சுக்க இந்த ஐடியா ரொம்ப சிம்பிள்.

நம்ம போகிப் பண்டிகை தினம்தான் அவுங்களுக்கு இந்த லோரிப் பண்டிகை தினம். என்ன ஒத்துமை பாருங்க, ரெண்டுமே தீ மூட்டிக் கொண்டாடும் வகைகள். நாம்தான் ஒரு படி மேலே போய் ப்ளாஸ்டிக், ரப்பர் டயர் னு எரிச்சுக்கிட்டுச் சுற்றுச்சூழலை நாசம் செய்யறதுலே ஜரூரா இருக்கோம்(-: இந்த வருஷம் என்னவோ நமக்குப் போகியும்,பொங்கலும் ஒரு நாள் தள்ளிப்போயிருச்சு(-:
கரோல்பாக் பகுதியிலே நம்ம தமிழ் மக்களும், பஞ்சாபிகளும் கூடுதலா வசிக்கிறாங்க. ஜே ஜேன்னு ஒரே கூட்டம்.ஆர்ய சமாஜ் ரோடு, அஜ்மல்கான் ரோடு, தேசபந்து குப்தா ரோடுன்னு டெல்லி தி.நகர் ஏரியா இருக்கு. கரோல் பாக்ன்னுதப்பாப் பெயர் வச்சுட்டாங்களா? ரங்கநாதன் தெரு ஒரு பண்டிகைநாளில் இருக்கும் அதே திருக்கோலம் இங்கே!தெருவை அடைச்சு ட்ராஃபிக். இதுலேயும் அசல் தி.நகர்தான். பெரிய வாணலியில் பாலைக் கொதிக்கவச்சு ஆத்திக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேர். மிட்டாய்க்கடை வாசல். உள்ளே இருந்து நாம் வாங்கி வரும் இனிப்புள்ள அட்டைப் பெட்டிகளை,அழகா பொதிஞ்சு தர ஒரு மெஷின் வெளியே நடைபாதையில் கடைக்காரங்களே வச்சுருக்காங்க. கடைக்குள்ளே காலடிவைக்கமுடியாத அளவு கூட்டம். வீட்டுக்கு எதாவது வாங்கலாமுன்னா, முதல்லே கடை உள்ளே போகணுமுல்லெ?

அலங்காரமா அடுக்கி வச்சதைப் பார்த்துத் திருப்தி பட்டுக்கிட்டேன். இதே கடை நம்மூர்லே இருக்கு. என்னாத்துக்கு இங்கே இருந்து சுமக்கணும்? (ச்சீச்சீ இந்தப் பழம் ஒரே புளிப்பு) ஏற்கெனவே பார்க்கிங் கிடைக்காம ஒரு இடத்துலே கெஞ்சிக்கூத்தாடி அஞ்சு நிமிஷம் வண்டி நிறுத்த அனுமதி வாங்குனது. அங்கே ஒரு சீக்கியர்கள் கோவில் இருக்கு.குருத்வாரா. அதுவும் அக்கம்பக்கத்துக் கட்டிடங்களை இடிச்சுக்கிட்டு அடிச்சுப்புடிச்சு நிக்குது. இன்னிக்கு உள்ளேபோகணுமுன்னு நினைக்கறதே அதிகப்படி. சனிக்கிழமை வெங்கடநாராயணா ரோடு பெருமாள் கோவில் வாசலேதான்.
( கரோல்பாக் குருத்வாரா)

பரவாயில்லை, பார்த்தவரை திருப்தின்னு கிளம்பி ஏர்ப்போர்ட்க்குப் போய்ச் சேர்ந்தோம். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு ப்ளைட்டுக்கு. வலைப்பதிவாளர் மங்கைக்கு ஒரு போன் போட்டு விடைபெற்றாச்சு. (முத்து)லெட்சுமியின் நம்பருக்குஅடிச்சா ஆள் இல்லை. சில விஷயத்துலே டெல்லி பரவாயில்லைன்னு தோணுது. பழைய டெல்லிப் பக்கம் பஸ்ஸுலே ஏறக்கூட முடியும்!!! அவ்வளவா கூட்டமில்லை. எங்கே கவுந்துருமோன்னு பயம் தரும் ச்சென்னை மாநகரப் பேருந்துலேகனவுலேயும் ஏற முடியாதே(-:
ஆட்டோக்காரர்கள் கூட எவ்வளவோ பரவாயில்லை. பத்து ரூபாய்க்கெல்லாம் போக முடியுது.
பாலிகா பஸார்லே இப்பெல்லாம் அவ்வளவாக் கடைகள் இல்லையோ?பல கடைகள் காலியா, மூடி இருக்கு. அங்கேயும் உள்ளே நுழையபாதுகாப்பு கூண்டெல்லாம் தாண்டிப்போகணும். கன்னாட் ப்ளேஸ்லே முக்கியமான அட்ராக்ஷன் இப்ப 'சரவணபவன்'தான்.

யோசனையூடே ப்ளேன் உள்ளே போனேன். நல்ல வேளை, கட்டம் போட்டச் சட்டைக்காரர் பின் சீட்டுலே இல்லை:-)
பை பை தில்லி. போயிட்டு வர்ட்டா?

தொடரும்..........

24 comments:

said...

அந்த பழ வண்டியில் இருக்கும் இலந்த பழம் சூப்பராக இருக்கும்.
டேஸ்ட் பண்ணவில்லையா?

said...

அப்பாடா தலைவலி விட்டுச்சா? ஐய்யய்யோ தப்பா சொல்லிட்டேனே. தலைநகர் விட்டுச்சா? அடுத்து என்ன?

said...

வாங்க குமார்.

ம்ம்ம் ஆச்சு. கண்ணால் மட்டும்:-)

said...

கொத்ஸ்,

திருகுவலி!

வேறென்ன?

said...

துளசி மங்கையோட நம்பர நீங்க ஏர்போர்ட்லேர்ந்து தானெ தந்தீங்க எனக்கு..

said...

முன்னெல்லாம் மாமனார் மாமியார் அம்மாஅப்பா வரும்போது எதாச்சும் இனிப்புகளை சுமந்துகிட்டு வருவாங்க.இப்போ எங்களுக்கு எல்லாமெ சரவணபவன் ஆனந்தபவன் புண்ணியத்துல கிடைக்குது.

said...

அப்பாடா தலைவலி விட்டுச்சா? ஐய்யய்யோ தப்பா சொல்லிட்டேனே. தலைநகர் விட்டுச்சா? அடுத்து என்ன?
கொல்கிறார்!!
இனிமேல் அலுவலகத்தில் இவர் பின்னூட்டத்தை படிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.
:-))))

said...

அடடா அதுக்குள்ள தில்லி முடிஞ்சிருச்சா?

சரவணபவன் சரி, ஆந்திரா பவண் போகலையா?

அடுத்து எங்க?

said...

திருகு வலி வந்து திரும்பியதால் இந்த தளம் ரொம்ப நாளுக்கப்புறம் கண்ணில் பட்டது.

ம்ம்... ஓசியில் டெல்லியை சுற்றிய அனுபவம்.

அதெப்படி கிடைக்குதூங்கறதுக்காக சாப்பிட்ட ஒடனே காப்பி.....

ம்ம்... நடக்கட்டும்.

said...

வாங்க முத்துலெட்சுமி.

மொதல் முயற்சியிலே கிடைக்கலை.
அப்புறம் கிடைச்சதை எழுதலை(-:

எல்லாம்தான் கிடைக்குதுன்னாலும், எங்கெயாவது
போகும்போது வெறுங்கையாப் போகமுடியுதா?

ஆனாலும் உங்களுக்கு இதெல்லாம் அங்கே
வந்துட்டது நல்ல வசதிதான்.

said...

ஆமாங்க குமார். கிளாஸ் லீடர்னு ஒரு அந்தஸ்து கொடுத்துருக்கேன்.
இல்லேன்னா டீச்சரைக் கலாய்ச்சதாலே
'பெஞ்சுமேலே ஏறு'ன்னு சொல்லலாம்:-)
( மாணவர்களை அடிக்கதானே கூடாது?)

said...

வாங்க சிவமுருகன்.

மொத்தம் அங்கே இருந்ததே அஞ்சு நாள். ஆந்திராபவன் எல்லாம்
நமக்குச் சரிப்படாது. நம்ம 'ஜிரா'வின் கதையைக் கேக்கலையா? :-)

said...

வாங்க மஞ்சூர் ராஜா.

//அதெப்படி கிடைக்குதூங்கறதுக்காக சாப்பிட்ட ஒடனே காப்பி.....//

நீங்க வேற. ஒரு காலத்துலே தூங்கறதுக்கு முன்னாலே காப்பி குடிச்சுட்டு
உடனே தூங்கிருவேன். அப்படி ஒரு காபி பைத்தியம். ஃபில்டர் காஃபி பழக்கமான
நாக்குக்கு வேற எந்தக் காஃபியும் பிடிக்காது(-:

இப்ப ஒரே ஒரு காஃபிதான் ஒரு நாளைக்கு(-:

said...

துளசி, அருமையா இருந்தது . சரவணபவன் டிபன் நல்லா இருந்ததுப்பா.
என்ன சொல்லுங்க அந்தக் காப்பி காப்பிதான்:-))
இப்படியெல்லாம் பொட்டலம் போட்டுட்டு வீட்டுக்கு அனுப்பாம விட்டிங்களே.:))
கட்டாயமா டெல்லி போய் எல்லாத்தையும் வளச்சு கடோத்கஜன் பண்ணிடணும்.

said...

அடுத்து எப்ப கட் அடிச்சுட்டு சுத்த?

லட்சுமி..என்ன தான் இங்க எல்லாம் கிடச்சாலும் அம்மா/ மாமியார் கையால பண்ணா அதனோட மதிப்பே தனி தானே..இங்க எல்லாமே கிடைக்குதேன்னு சொல்லி பாருங்க
அவங்க முகம் சின்னதாயிடும்..ஹ்ம்ம்ம்

said...

வணக்கம்,

நான் உங்களை அழகு சுற்றுக்கு அழைக்க விரும்புகிறேன். பங்கேற்க சம்மதமா...

http://anbuthozhi.blogspot.com/2007/04/blog-post_16.html

அன்புத்தோழி

said...

வாங்க வல்லி.

//டெல்லி போய் எல்லாத்தையும் வளச்சு கடோத்கஜன் பண்ணிடணும். //

சரவணபவன் மட்டுமுன்னா இங்கே சென்னையிலே வளைச்சுக்கட்டலாம்.
கொஞ்சம் மலிவும்கூட. தில்லியில் ஒரு காபி 36 ரூபாய்.

said...

ஆகா, தில்லிக்கு அதற்குள்ள பைபை சொல்லிட்டீங்களா டீச்சர்? கோபால் சாருக்கு இன்னும் சில இடங்கள் காட்டியிருக்கலாமே? :-)

//அப்பெண்ணுக்கு அவனைப் பிடிச்சதுன்னா அவளும் அந்தக் காதலை ஏத்துக்கும் விதமா கொஞ்சம் மக்காச்சோளத்தைத் தீயில் தூவி சம்மதம் சொல்லலாம்//

"அட, மக்கா", "மாக்கா" என்றெல்லாம் சொல்லறாங்களே.
இப்ப தான் புரியுது!
மக்காச் சோளத்தைத் தீயில் போட்டா=சக்ஸஸ்
அதுனால மக்கா
இல்லைன்னா மாக்கா! :-)
மக்காச் சோளத்துக்குள்ள இம்புட்டு தத்துவமா?

said...

வாங்க மங்கை.

//அடுத்து எப்ப கட் அடிச்சுட்டு சுத்த?//

இதுதான் சொ.செ.சூ:-)))))

said...

அன்புத்தோழி,

அழைப்புக்கு நன்றி.

இதுவரை 5 அழைப்பு வந்தாச்சு. இன்னும் ஒண்ணு வரணும்:-))))

ரொம்பதான் பிகு பண்ணிக்கறேனோ?

ச்சீச்சீ...... அப்படியெல்லாம் இல்லை. நேரம் கொஞ்சம் டைட். நாளைக்குள்ளேயாவது கட்டாயம்
போட்டுறணும்.

said...

வாங்க KRS
மக்காவின் சூட்சுமத்தை இப்படிக் கரெக்டாப் புடிச்சுட்டீங்களே மக்கா:-)))))

said...

ரொம்ப நல்ல தொடர் ,துளசி அக்கா!!
வாழ்த்துக்கள்!! :-)

said...

வாங்க CVR.

வருகைக்கு நன்றி. தில்லியோட போயிறாதீங்க. உங்களையெல்லாம் சிங்கைக்கு(ம்)க்
கூட்டிட்டுப் போகப்போறேன்:-)

said...

Dear Thulasi,
I read your blog.Its so nice.I couldn't see your mail in Thenkoodu...

GL