Thursday, April 05, 2007

லோதி கார்டன்ஸ்
நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 11 )

லோதி கார்டனுக்குப் போனேன். வெய்யிலுக்கு இதமான இடம். வாசலில் பைரவர்கள் ஆழ்ந்த நித்திரையில். ரொம்பப் பழங்காலத்துலே கட்டுன பாலம். கீழே தாமரைப்பூக்கள் நிறைந்த தடாகம். அக்பர் ஆட்சியிலே அவரோடஒரு மந்திரி கட்டுன பாலமாம். தாஜ்மஹாலைவிடப் பழசோ! அவ்வளவாக் கூட்டம் இல்லை. மரங்கள் அடர்ந்து இருக்கும் பகுதிகளில் உலகை மறந்து இருக்கும் ஜோடிகள். ஜாக்கிங், நடைப்பயிற்சின்னு இருந்த ஒரு சிலர், குடும்பத்தோடு பிக்னிக் வந்த சிலர்ன்னு இருந்தாங்க.

'இங்கே இருக்கும் பறவைகள்'னு ஒரு போர்டு. அட! இத்தனை வகைகளா? எத்தனை வகை இன்னிக்குக் கண்ணுலே படுதுன்னு பார்த்துறணும். காக்காக் கூட்டம். அப்புறம்.........? இது மட்டும்தான் கூட்டம்கூட்டமா.கொஞ்சம் புறாக்கள். எல்லாம் கட்டிடத்து மேலே ஒட்டிப்பிடிச்சு உக்காந்துருக்கு.

எதிரும் புதிருமா ரெண்டு கட்டிடங்கள். பரா கும்பட், ஷீஷ் கும்பட். இஸ்லாமியர்கள் கட்டுனது பதினைஞ்சாம் நூற்றாண்டுலே.அப்ப சிக்கந்தர் லோதி, தில்லி மன்னரா இருந்துருக்கார். ஓஹோ... அதான் இந்தத் தோட்டம் லோதியின் பெயரில் இருக்கா?( ரொம்ப வருஷங்களுக்கு முன்னே தில்லி வந்தப்ப ஒரு லோதி ஹொட்டலில்தான் தங்குனோம். வெளியே அட்டகாசமான அலங்காரம். எல்லாம் ரிஸப்ஷன் வரைதான். உள்ளே போனால் அறைகள் ரொம்ப சாதா'ரணம்'. அப்ப ஜூன் மாசம் வேற. சூடு பொங்குது. அறைக் குழாயிலே காத்தும், எங்க கண்ணுகளில் தண்ணியும் வந்துச்சு) சரி. இன்னிக்குக் கதையைப் பார்ப்போம். இந்தக் கட்டிடங்கள் மசூதியாவும், சில முக்கிய புள்ளிகளின் சமாதியாவும் இருந்துச்சாம். இப்ப இங்கே சரித்திரச் சின்னங்களாத்தான் நிக்குது.

பரா கும்பட் உள்ளெ போனால் நல்ல உயரமான கூரை பேசுனாவே எதிரொலிக்குது. நான் போனப்ப அங்கே ரெண்டு இளைஞர்கள். ஒருத்தர் பாட்டுப் பாடறார். ஹே..........ஹே..ம்ம்ம்ம்ம்ஹா...........கோரா காகஸ்தா யே மனு மேரா........... மேரா........ மேரா......... எதிரொலி. அருமையான குரல். நல்லா இருக்குன்னு பாராட்டுனதும் அவருக்குக் கொஞ்சம் வெக்கமாப் போச்சு. 'நல்லா இருக்கா ஆண்ட்டி? இந்தப் பாட்டு'ன்னு சொல்ல ஆரம்பிச்சார். நான் அதுக்குள்ளெ 'தெரியும். ஆராதனா படம்'னதும் அவருக்கு கொஞ்சம் ஆச்சரியம். (இந்த மத்ராஸிக்குத் தெரிஞ்சுருக்கு பார்) படம் வந்த புதுசுலே மெட்ராஸ்லே அப்படி ஓடுச்சு. இதைப் பார்க்காதவங்கன்னு யாராவது இருந்துருப்பாங்களா? நம்ம பக்கம் ஆன்னா ஊன்னா இந்த 'மேடம் மேடம்' கேட்டுப் புளிச்சிருந்த காதுகளுக்கு இந்த 'ஆண்ட்டி' இனிமையா இருக்கு. நம்ம பசங்கன்னு ஒரு சொந்தம் வந்துருது. குடும்பமுன்னு வந்துட்டா உடனே ஒரு இளகுன மனம் அமைஞ்சுருது பார்த்தீங்களா?

இங்கே நாலு பக்கமும் அழகான வாசல்.அதுவழியா வெளியே பளிச்சிடும் வெயிலைப் பார்க்கும்போது என்னவோ சினிமாக் காட்சிபோல இருக்கு. ரொம்ப உயரமான வயசான மரங்கள். பச்சைப் புல்வெளி. பரா கும்பதைக் கடந்து நேர் எதிரில் இருக்கும் ஷீஷ் கும்பட் போனேன். இங்கே முன்புறச்சுவரில் ரொம்ப மேலே எட்டாத உயரத்தில் அழகான டைல்ஸ் பதிச்சு இருந்ததாலே இதுக்கு, இந்தப்பேர். ஷீஷ் ( கண்ணாடி) கும்பட். நிறைய ச்சில்லுகள் விழுந்துட்டு இருக்கு.உள்ளே போனால் வரிசையா ஏழெட்டு சமாதிகள். உள்ளே யாரும் இல்லை. நான் சொல்றது கட்டிடத்துக்குள்ளே! ஜன்னலில் வெளியே பார்த்துக்கிட்டு ஒருத்தர் உக்கார்ந்திருந்தார். ஐந்நூறு வருஷக் கட்டிடங்கள் இதெல்லாம். இன்னும் நல்லா ஸ்ட்ராங்காவே இருக்கு. தோட்டமும் நல்ல பராமரிப்பில் சுத்தமாவும் அழகாவும் இருக்கு.

அங்கிருக்கும் ரோஜாத் தோட்டத்துக்குப் போனேன். புதுத் தளிர்கள் வரும் சமயம். குச்சிகுச்சியா நிக்குது செடிகள்.வெளியில் வரும்போது அந்த பழைய பாலத்துக்கடியில் இருக்கும் வளைவுகள் மூலம் மாலைச்சூரியன் மஞ்சள்நிறத்தில் தாமரைத் தடாகத்துக்கு வந்திருந்தான். இந்தத் தடாகத்துக்குத் தண்ணி சப்ளை யமுனை நதியிலிருந்து கால்வாய் மூலம் வருதாம். தூக்கம் முடிஞ்சு பைரவர் ஸ்மார்ட்டா உக்கார்ந்துருந்தார். 'இந்தப்பக்கம் பாருடா'ன்னு சொன்னதும் அழகா போஸ் கொடுத்தார். எப்படியோ தமிழ் புரிஞ்சாச் சரி.

தில்லி மக்கள் நிறையப்பேர் ஜாகிங் செய்யவும், உடற்பயிற்சி வேகநடை நடக்கவும் அதுக்கேத்த காலணிகளோடு உள்ளே வந்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம நடேசன் பார்க் நினைவு வந்துச்சுங்க. பேசாம இங்கேயே ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடத்திறணும் அடுத்த முறை:-)

கிளம்பி ஜன்பத் மார்கெட்டில் இறங்கிக்கிட்டுக் காரை அனுப்பிச்சுட்டேன். காலையில் தில்லிஹாட்டில் பார்த்த அதே சாமான்களையும் கொஞ்சம் யானைகளையும் சல்லிசான விலைக்கு வாங்கிக்கிட்டேன். கறுப்புக் கல், வெள்ளைமெட்டல், மார்பிள், மரம், பித்தளைன்னு பலவிதத்தில் யானைகள் சூப்பரா இருந்துச்சு. 'மருமான்'கிட்டே பேரம் பேசிவாங்கினேன். இப்பெல்லாம் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மார்கெட் நடக்குது. நின்னு நிதானமாச் சுத்தலாமுன்னா,நேரம் பொருத்தமா அமையலை. கோபால் கைப்பேசியில் கூப்புட்டு நான் எங்கே இருக்கேன்னு விசாரிக்கிறார். எனக்கும் கூடடையும் நேரமாச்சு. ஆகட்டும், அடுத்தமுறை இருக்கவே இருக்கு.

தொடரும்............

25 comments:

said...

ஆக மொத்தம் அம்புட்டு பறவை இருந்தாலும் நம்ம கண்ணில் பட்டது காக்காயும், புறாவும்தானாக்கும். இருந்துட்டுப் போகட்டும். சிகப்புக் கோட்டை போகலையா?

உள்ளேன் டீச்சர்.

said...

வாங்க கொத்ஸ்.

நாமெல்லாம் யாரு?

"ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா
ஒத்துக்கணும். காக்காக் கூட்டத்தைப் பாருங்க! அதுக்குக் கத்துக்கொடுத்தது
யாருங்க?"

இங்கே நியூஸியில் இல்லாத பறவை இதுதான்:-))))

சி.கோ. நாளை

said...

இன்னும் அமைதியான இடங்கள் இருக்கா டெல்லிலே.

அழகான இடங்கள்.

பைரவருக்குப் பேர் வைக்கலியா.
இந்த ஊரில காக்கா இருக்குப்பா.

கிருஷ்ணா பருந்து கண்ணில பட்டுது. கன்னத்திலேயும் போட்டுகிட்டேன்.:-)

said...

அந்த டூமில் அப்படி ஒரு வெடிப்பு தெரிகிறது??என்ன பண்ணுவது? என் பார்வை இப்படி தான்.
அடுத்த முறை பார்த்து போகவும்...
சமாதி பார்க போறேன் என்று சொல்லி!!

said...

வாங்க வல்லி.

பருந்துக்குக் காத்திருப்பானேன்? கிருஷ்ணாவைப் பார்த்தே கன்னத்துலே போட்டுக்கலாம்.
குழந்தையும் கடவுளும் ஒண்ணுதான்:-)

அமைதி நமக்குள்ளேன்னு சொல்லாம சொல்றதுதான் நகரின் நடுவில் இருக்கும் தோட்டம்!

said...

வாங்க குமார்.

கண்ணுலே ஏன் படாது? தொழில் தர்மம்:-))))

கிட்டத்தட்ட 600 வருஷம் தாக்குப் பிடிச்சு நின்னுக்கிட்டு இருக்கு.
அசம்பாவிதம் ஒண்ணும் நேராதுன்னு நம்பணும்.
நம்பிக்கையே வாழ்வு.

said...

//ஆன்னா ஊன்னா இந்த 'மேடம் மேடம்' கேட்டுப் புளிச்சிருந்த காதுகளுக்கு இந்த 'ஆண்ட்டி' இனிமையா இருக்கு//

ஆகா, தமிழ்நாட்டுப் பதிவர்களே, மற்றும் கனவான்களே, தனவான்களே!

டீச்சர் ஏதோ ஒரு மெசேஜ் சொல்றாங்க போல கீதே!
இனிப்பு இருக்க புளிப்பு இன்னாத்துக்கு? இனிமே இனிப்பாத் தான் கூப்புடணும்னு ஒரு தீர்மானம் போட்டுக்கங்க!

யாருப்பா அது? ஆண்ட்டி தமிழ்ச்சொல் அன்று! அத்தை என்று தான் கூப்பிடுவேன்னு அடம் பிடிப்பது? :-)

said...

வாங்க KRS,

(நாரதர் கலகமா? )

ச்சித்திக்கும் ஆண்ட்டிதான் தெரியும்லே?

20 வயசுக்குக்கீழே உள்ளவங்க ஆண்ட்டி, சித்தி, அத்தைன்னு கூப்புட்டுக்குங்க.
20க்கு மேலே எல்லாருக்கும் நான் 'அக்கா'தான்:-)))

இதுக்கும் உயரெல்லை போட்டாச்சு:-)

said...

//ஐநூறு வருஷக் கட்டடங்கள்:ரொம்ப ஸ்ஸ்ஸ்ட்ராங்க இருக்கு//

அப்பல்லாம் டெண்டர் வுட்டு
காண்ட்ராக்ட்லே கட்டமாட்டாங்களோ?

said...

பதிவிட்ட தேதி 5, ஏப்ரல் னு போட்டிருக்கு....
பின்னூட்டமெல்லாம் 4, ஏப்ரலில் வருது
ஜீ பூம்பாவா?

said...

வாங்க சிஜி.

சிக்கந்தர் லோதி,
சிக்கந்தர் லோதி,
சிக்கந்தர் லோதி
எங்கிருந்தாலும் உடனே 'மேடை'க்கு வரணும்.

ஏன் டெண்டர் விடலை?ன்னு நம்ம சிஜி கேக்குறார் பாருங்க.

பதில் எங்கே?


என்னங்க சிஜி.

ஏப்ரல் 'ஒண்ணு' மட்டும் fools day இல்லையாம். மாசம் பூராவுமேவாம்:-)))

என்ன சந்தேகம் திடீர்ன்னு?

எல்லாம் அமெரிக்க ஸ்டைல்தான்.
மாசம் முன்னால், நாள் பின்னால்:-))))

said...

//ச்சித்திக்கும் ஆண்ட்டிதான் தெரியும்லே?//

சித்திக் ஆம்பிளை பேர் இல்லையா? அவரு போயி எப்படி ஆண்ட்டி ஆனாரு? கொஞ்சம் காசு பணம் சேர்க்கத் தெரியலைன்னா ஆண்டி வேணா ஆகலாம். இல்லை சமூக முரண்பாடுகளைக் கண்டு ஆண்டி சோசியலாக வேணா ஆகலாம். ஆனா ஆண்ட்டி? சம்திங் ராங்.

//20 வயசுக்குக்கீழே உள்ளவங்க ஆண்ட்டி, சித்தி, அத்தைன்னு கூப்புட்டுக்குங்க.
20க்கு மேலே எல்லாருக்கும் நான் 'அக்கா'தான்:-)))

இதுக்கும் உயரெல்லை போட்டாச்சு:-)//

டீச்சர் டீச்சர், 20 ரொம்பக் கம்மி, ஒரு 40ஆ வெச்சுக்கலாம் டீச்சர். என்ன பண்ண உயரெல்லை கொண்டு வந்தா இந்த மாதிரி கேட்டா கொஞ்சம் ஜாஸ்தி பண்ணறது வழக்கம்தானே! :))

said...

துளசி..

இங்க வந்தப்ப இங்க எல்லாம் காக்கா அவ்வளவு இல்லைன்னு தெரியாது.. ஒரு முறை அமாவசை கும்பிட்டுட்டு காக்காக வெயிட் பண்ணப்ப தான் தெரிஞ்சது..காக்கா கம்மின்னு...அப்புறம் என்ன அன்னைக்கு புறாக்கு தான் விருந்து.. சில இடங்கள்ள இருக்கு...எப்படியோ யாராவது வந்து சாப்ட்டா சரி..
அதுக்கப்புறம் காக்காவ எங்காவது பாத்தா ஒரே சந்தோஷம்

said...

கொத்ஸ்,
இதானே வேணாங்கறது:-)))

அங்கங்கே 'ஷாஜஹான்' பொம்பளைப்பேருன்னு சொல்லிக்கிட்டுருக்காங்கப்பா.
ஏம்ப்பா எதெதுலேயோ வர்ற சமத்துவம் இதுலே வராதா?
ஆமாம், நான் ஏன் இப்படிப் பதில் சொல்லிக்கிட்டு உக்கார்ந்துருக்கேன்?
மாணவன் காதைப் பிடிச்சுத் திருகி,'குறும்பு பண்ணாம உக்காரு. இது சித்தி 'ன்னு
சொல்லி இருக்கலாமோ?

ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததால் உயரெல்லையை 10 ஆக மாற்றிட்டேன்.:-)

said...

வாங்க மங்கை.

இனிமே அம்மாவாசை சாப்பாடு லோதி கார்டனுக்குக் கொண்டு போயிரலாமா? :-)))

said...

\\நம்ம நடேசன் பார்க் நினைவு வந்துச்சுங்க. பேசாம இங்கேயே ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடத்திறணும் அடுத்த முறை:-)//

ஒரு முறை தமிழர் எல்லாம் சேர்ந்து நடத்தும் பொங்கல் விழா அங்கே நடந்த போது அருமையாக இருந்தது.
300 400 பேர் கூடி குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் அப்புறம் மிகப் பெரிய வட்டமடித்து உணவு என்று அட்டகாசமாக இருந்தது. சந்திப்பு நடத்தலாமா எப்ப வரீங்க.

said...

வாங்க முத்துலெட்சுமி.

// சந்திப்பு நடத்தலாமா எப்ப வரீங்க. //


அதுக்கென்ன வந்தாப்போச்சு.

அதான் சார்க் மாநாடு முடிஞ்சுட்டதே:-))))

said...

புகைப்படங்கள் ரொம்ப ரம்மியமாக இருக்கு துளசி. டில்லியிலேயே என்னைப் பொறுத்தவரையில் அருமையான இடம் லோதி கார்டன்ஸ் மற்றும் அந்த சுற்று வட்டாரம். பக்கத்தில் இருக்கும் India International Centre, World Bank. அந்தப் பக்கம் கொஞ்சம் ரோடைத் தாண்டினா Habitat Centre. IIC யில் ஏதாவது மீட்டிங் போயிட்டு அப்படியே லோதி கார்டனிலும் கொஞ்சம் காலாற நடந்துவிட்டு - அல்லது விடுமுறைகளில் நண்பர்கள் குடும்பத்தோடு பிக்னிக் - என்று சுகமான இடம். இப்படி நம்ம பழைய பேட்டையை ஒரு வலம் வந்தது போல சந்தோஷமாக இருக்கு. என்னோட கொசுவத்திச் சுருளைப் பத்த வச்சதுக்கு மிக்க நன்றி துளசி :-)

said...

நல்ல இடங்கள் (படங்கள்). உங்க தொடர்ல இந்த ஒரு இடத்துக்கு மட்டும் போய் ஒரு இரண்டுநாள் இருந்துட்டு வந்தாச்சு. மனசாலதான்:))

said...

வாங்க அருணா.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.
எல்லாம் ஈஸ்ட்டர் லீவுலே ஊர் சுத்தல்தான்:-))))

//என்னோட கொசுவத்திச் சுருளைப் பத்த வச்சதுக்கு மிக்க நன்றி துளசி //

நாந்தான் வத்திக்குச்சியா? :-))))

said...

வாங்க செல்வா.

இன்னும் ரெண்டுநாள் இருந்துருக்கலாமுல்லே?

இங்கே 'சாத்துன கதவில்லை'ப்பா! எல்லாம் ஓப்பந்தான்:-))))

said...

உண்மைதான் டீச்சர். தாஜ்மகாலை விடப் பழசு. இது அக்பர் காலம்னா...அவருக்குப் பின்னாடி வந்த ஷாஜகாந்தானே தாஜ்மகாலக் கட்டியது. கடந்த ஐநூறு அறுநூறு ஆண்டுகளுக்குள்ள வடக்குல எழுந்த பெரிய கட்டிடங்கள் இன்னைக்கு நெறைய நிக்குது. ஆனா நம்மூர்ல அந்த சமயத்துலதான் அடிபட்டு மிதிபட்டு ஒழுங்கா ஒன்னும் எழுந்திருக்கலை. மதுரைல இருக்குற திருமலை நாயக்கர் மகாலும் இந்தக் காலகட்டந்தான். ஆனா நெலமையப் பாருங்க? அஞ்சுல ஒரு பங்குகூட இப்ப இல்லையாம். அரண்மனையோட ஒரு வாசலும் மீனாட்சியம்மன் கோயிலும் பக்கபக்கமா இருந்துச்சாம்.

இன்னொரு தகவல். இஸ்லாமியர்களோட கல்லறைல அது ஆணா பெண்ணான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது சொல்லுங்க? அந்தக் கல்லறை மேல இருக்குற சின்னத்த வெச்சுத்தான். பேப்பர் அல்லது எழுதும் அட்டை மாதிரி இருந்தா அது பெண். எழுதுகோல் அல்லது எழுதுகோல் வைக்கிற பெட்டி மாதிரி இருந்தா அது ஆண். :-) இத நான் நூர்ஜஹானோட கல்லறைல தெரிஞ்சிக்கிட்டேன். :-)

said...

வாங்க ராகவன்.

இந்த ஆண் பெண் சமாதி விஷயம் எனக்குப் புதுசு. நன்றி ராகவன்.
வாழ்க்கை பூராவும் எதாவது ஒண்ணைக் கத்துக்க முடியுது இல்லே?
ஆச்சரியம்தான்!

இங்கே இருக்கும் சமாதிகளில் ஒண்ணும் வரைஞ்சு வைக்கலை(-:

எல்லா நாடுகளிலும் இப்படி ஒரு 'அன் நோன் சோல்ஜர்ஸ் டூம்ப்/க்ரேவ்' இருக்குல்லே?

said...

உங்களோட இந்த தொடரை நான் விரும்பி படித்துக்கொண்டு இருக்கிறேன்.வர்ணணை கூடவே படங்களுடன் கூடிய இப்பதிவுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

வாழ்த்துக்கள்!! :-)

said...

வாங்க CVR.

நலமா?

முதல் முறையா வந்துருக்கீங்க போல?

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.