Saturday, February 10, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 4)

தி.நகருக்குன்னே நிறைய லேண்ட்மார்க் இருக்கு ச்சென்னையில். நல்லி, போத்தீஸ், தங்கமாளிகை, பனகல் பார்க், ரங்கனாதன் தெரு, பாண்டி பஜார்ன்னு இருக்கறதுங்க கூட நம்ம வாணிமஹாலையும் சேர்த்துக்கணும்.

இந்த 'லேண்ட்மார்க்'ன்னதும்தான் மக்கள்ஸ் எப்படி அநியாயத்துக்கு 'ஆவின் பூத்'தைக்கூட ஒரு அடையாளமாச் சொல்றாங்கன்னு ஞாபகம் வருது:-) இன்னொருத்தர் இதையும் மிஞ்சிட்டார்.ஒரு ******* தெருவிலே வந்தீங்கன்னா, இடது பக்கம் ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் இருக்கும். அதுக்கு நேரா ஒரு தெரு இருக்கும் அதுக்குள்ளெ வாங்க. *** நம்பர் வீடு நம்மது. இது எப்படி இருக்கு? :-)))

'தியாகபிரம்ம கான சபா'வோட சொந்தக்கட்டிடம் இந்த வாணி மஹால். இந்த சபா தொடங்குனது 1945லே.ஆனா இசை நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பிச்சது 1979லே இருந்துதானாம். நல்ல செண்ட்டரான இடத்துலே அமைஞ்சுபோச்சு. ஜி.என்.( செட்டி)தெருவுலே இருக்கு. உள்ளே ரெண்டு அரங்கங்கள். கீழே இருக்கறது மகாஸ்வாமிகள் அரங்கம். 850 பேர் உக்காரலாம். மாடியிலே இருக்கறது ஓபுல் ரெட்டி அரங்கம். ச்சின்னஹால். காம்பேக்ட்டா இருக்கு. 250 இருக்கைகள். ரெண்டுமே ஏ.ஸி. வசதியோட நல்லாவே இருக்கு.

வருஷம் பூராவும் இங்கே நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருக்கும். டிசம்பர் இசைவிழா, மார்கழியில் திருப்பாவை,ஜனவரியில் நடன விழா, இன்னும் நாடகங்கள்னு கோலாகலம்தான். நிறைய நடன அரங்கேற்றங்கள் இங்கே நடக்குது. இங்கே சங்கீத வகுப்புகள் வேற நடக்குதாம். பலநாட்களில் பார்த்தீங்கன்னா, சில நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்தான். வாசலில்.'ஆல் ஆர் வெல்கம்' போர்டு இருந்தா உள்ளெ நுழைஞ்சுரலாம்:-))))

இந்த முறை டிசம்பர் 25 முதல் 31 வரை நாடக வாரமா அறிவிச்சுட்டாங்க. தினமும் மாலை ஆறே முக்காலுக்கு கிரேஸி மோகன் குழுவினரின் நாடகங்கள். ஒரு நாடகம் கட்டாயம் பார்த்துரணுமுன்னு இருக்கு. கோபால் மறுநாள்டெல்லி( ஆபீஸ் வேலை) போறார். இன்னிக்கு விட்டா ச்சான்ஸ் கிடைக்காது. அதுக்கென்ன.. போயிரலாம்.

இன்னிக்கு 'சுருதிலயா' போகலாம். போற வழியிலே அப்படியே 'மியூஸிக் அகடெமி ' யிலே இன்னும் என்னென்ன நல்ல நிகழ்ச்சி இருக்குன்னு பார்த்து டிக்கெட் வாங்கிக்கோ. உனக்கும் நாலு நாள் நல்லா பொழுது போகும்'னு சொன்னார்.நான் 'இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் இவர் பேச்சைத் தட்டவே மாட்டேன்'. போனோம்.

கவுண்ட்டரில் இருந்தவர் சொல்லிட்டார், அன்னன்னிக்குள்ள டிக்கெட் மட்டும்தான் கிடைக்கும். தினம் காலையில் 10 மணிக்கு டிக்கெட்டு விற்பனை. மறுநாள் சுதா ரகுநாதன். மாலைக் கச்சேரி. 'சோம்பல்படாம காலையில் வந்து டிக்கெட்வாங்கிக்கோ'ன்னு கோபால் சொன்னார். சரின்னு தலையை ஆட்டிட்டு, இசைவிழா நிகழ்ச்சி நிரல் கிடைக்குமான்னு கேட்டேன்.கிடைச்சது. இப்ப என்ன நடக்குதுன்னு ச்சும்மாக் கேட்டுவச்சேன். பதில் வந்துச்சு 'செளம்யா'ன்னு. அடடா.....ரெண்டு டிக்கெட் கொடுங்கன்னு அவசரப்பட்டேன். அப்ப 'சக்கரைப்பந்தலில் தேன்மாரி' பொழிஞ்சது' . "ஃப்ரீ கச்சேரிதான்.எங்கே வேணாப் போய் உக்காருங்க."

செல்ஃப் பார்டர் போட்ட நீலப்புடவையில் செளம்யா. அதான் "நமக்குக் கிடைக்கணுங்கறது கிடைக்காமப் போகாது'!அப்பப்ப ஒரு ப்ளாஸ்க்லே இருந்து சுடுதண்ணியோ என்னமோ குடிச்சுக்கறாங்க. எதோ மாத்திரையும் போட்டுக்கிட்டமாதிரி இருந்துச்சு. " ஹூம்........ மருந்து மாத்திரையாலேதான் வாழ்ந்துண்டுருக்கா அவளும்" பின் வரிசையில் இருந்தபெரியவரின் அங்கலாய்ப்பு. இதோ அடுத்த பாட்டு........ " இது என்ன ராகம், என்ன தாளம்னு சொல்லப்படாதோ?"மறுபடியும் பெரியவர். "செத்தத் தொணப்பாம பாட்டைக் கேக்க விடுங்கோ" இது பெரியவரின் மனைவி. ஜொலிக்கும் வைரத்தோடு. என்னோட தோடைப்போல டபுள் த சைஸ்!! நல்லவேளை, நான் போட்டுக்கலை.

'என்ன ராகமுன்னு தெரியலையே? என்னன்னு சொல்லு '-மறுபடியும் பெரியவர். 'நேக்கும் தெரியலை'- இது மனைவி. ஆஹா........நம்மைப்போல நிறையப்பேர் இருக்காங்க, 'சங்கீதத்தை ரசிக்கறதுதான் என் கடமை'ன்னு. நானும் உங்களில் ஒருத்தின்னு சொல்லவா? ஒரு மணி நேரம் போனதே தெரியலை. மகுடிக்குக் கட்டுண்ட நாகம்( அதுக்கும் காது இல்லையாமே!)ஆமாம்,இன்னிக்கு... எப்படி செளம்யா? ருக்மணி வயலின்னு லிஸ்டுலே இருக்கே. ஓஓஓஓ... புரிஞ்சுபோச்சு.நேரத்தை ஸ்வாப் பண்ணி இருக்காங்க. எல்லாம் நம்ம அதிர்ஷ்டம்.

எல்லா சபாக்களும் சேர்ந்து என்னென்ன நிகழ்ச்சிகள்னு ஒரு லிஸ்ட் போட்டுருந்தா எவ்வளவு சுலபமா இருக்கும்.நெட்டுலே சேகரிச்சதுலே மாலைநேரக் கச்சேரிகள் மட்டும்தான் இருக்கு. ஆனா காலை நேரத்தைப் பத்தி விவரம் சரியா இல்லையே(-: என்னதான் ஹிண்டுலே தினப்படி வந்தாலும் எல்லாத்தையும் எழுதி வச்சுக்கிட்டு எப்படி ஜக்கிள் பண்ணலாமுன்னு ஆயிருதேன்னு ஒரு எண்ணம். உண்மையிலேயே இப்படி ஒரு லிஸ்ட் இருந்தா,சரியாத் திட்டமிட்டா இலவசமாவே நிறைய நிகழ்ச்சிகளை அனுபவிக்க முடியும். இல்லேன்னா உள்ளூர் மக்கள் பலருக்கு இப்படிக் கைக்காசை செலவு செய்யறது கொஞ்சம் கஷ்டம்தானே?

சுருதிலயா போய் சில புத்தகங்கள் ம்யூஸிக் நொடேஷனுடன் வாங்கியாச்சு. மகள் இங்கே நியூஸியில் ஃப்ளூட் படிச்சிருக்காள். இப்ப வாங்குனது சில பிரபல சினிமா மெட்டுகளுக்கு. நம்ம தமிழ்ச்சங்க விழாவுலே வாசிப்பாளோ என்ற ஒரு நப்பாசைதான். இதோ என் வீணை. எங்க இவருக்கு அங்கே இருந்த உறுமி மேளம் ஆசையா இருந்துச்சாம். இருக்காதா பின்னே? மருதக்காரவுகளாச்சே! ஒரு பித்தளை உருளையும், ஒரு மர உருளையும் சேர்ந்து ஒரு செட்டா வருது. 'தோல் வாத்தியம். அங்கே ஃப்யூமிகேட் செய்யணும். உள்ளெ விடலைன்னா வீண் செலவு'ன்னு சொல்லி,'ஆசை'க்கு ஆப்பு வச்சுட்டு, மகளுக்கு ஒரு மூங்கில் புல்லாங்குழல் வாங்குனேன்.
அப்ப அங்கே 'சரிகமபதநி'ன்னு ஒரு புத்தகம் இருந்துச்சு. புரட்டிப்பார்த்தா.......... 'தேடிப்போன மூலிகை காலில் அகப்பட்டது' டிசம்பர் இசை விழா 2006 கையேடு. ( இது ஏழு வருஷமா வருதாமே)உள்ளெ சபா முகவரிகள், சங்கீத சபாக்கள், கச்சேரி காலண்டர், வளரும் கலைஞர்கள், ஒளி வீசும் நட்சத்திரங்கள்,இதயம் வென்ற இசை வித்தகர்கள், சரித்திரம் படைத்த சங்கீத மேதைகள், வாக்கேயக்காரர்கள், இசைக்கருவி விற்பனையகங்கள்,கலைஞர்களின் முகவரிகள்னு 152 பக்கம் இருக்கு. விலை? நம்புங்களேன்......... இது இலவசமாம்! விரைவில் இணைய தளம் வழியாக வரப்போறாங்களாம். கிரேட்!!

சாயங்கால காஃபியைக் குடிக்கக் கிளம்புனோம். நம்ம 'சுஜாதா' விகடன்லே எழுதி இருந்ததைப் படிச்சிட்டு இன்னிக்குக் காலை உணவு (இட்டிலி)க்காக முருகன் இட்டிலிக்கடை போயிருந்தோம். நாலுவகைச் சட்டினிகள் இருக்குதான். ஆனா அணைக்கட்டத் தெரியலைன்னா ரொம்பக் கஷ்டம். எல்லாம் இலையில் ஓடுது. 'கொஞ்சம்' ன்ற வார்த்தையே அவுங்களுக்குப் புரியலை(-: சுஜாதாவுக்கு மட்டும் 'கெட்டி'ச் சட்டினியோ? ஆனா, அவர் எழுதியிருந்தார் பாருங்க, நல்ல காஃபிக்கு சரவணபவன்'ன்னு. அது என்னவோ நிஜம். நாங்க தங்கி இருந்த இடத்துலெ இருந்து வாணி மஹால் அஞ்சு நிமிஷநடைதான் இருக்கும். ஆனா குப்பைகளையும், அழுக்குகளையும் மிதிக்காம பயந்து பயந்து தாண்டி வர எனக்கு பதினைஞ்சு நிமிஷமாயிருது. நடைபாதைன்னு இருக்கறதுலெ எல்லாம் கார்களைப் பார்க் செஞ்சு வச்சுருக்காங்க. ரோடுலேதான் நடக்கணும். எந்த நிமிஷம் எந்த வண்டி வந்து மோதுமோன்னு இருக்கு. எக்கச்சக்கமான வண்டிகள். ரோடு ச்சின்னதா இருக்கு.லேனாவது மண்ணாவதுன்னு! கண்டபடி ஒண்ணையொண்ணு முந்தும் வண்டிகள். கோன் ஜீத்தா ஹை, வோ சிக்கந்தர்.

வீட்டைவிட்டு வெளியே வரும் ஜனங்கள் பத்திரமா வீடு போய்ச் சேர்ந்தாங்கன்னா அவுங்க விதி இன்னும் முடியலைன்னுசந்தோஷப்பட்டுக்கலாம். ஆயுசு கெட்டி. வாணிமஹாலைத் தாண்டும்போது வெளியே மேஜை போட்டு, நாடக டிக்கெட் விக்கறாங்க. அதை வாங்கிக்கலாமுன்னு போனோம்.இங்கெயும் முதல் கேள்வி, 'ஐந்நூறா இல்லை முன்னூறா?'முன்னூறே போதும். 'சார், ஐந்நூறு ரூபாய்து நானூறுக்குத் தர்றோம்.வாங்கிக்கிங்க சார்.' வேணாங்க , முன்னூறே போதும். சரி முன்னூத்தி அம்பது போட்டுக்கறேன் என்ன சொல்றீங்க? வேணாங்க. முன்னூறே போதும். பிடிச்ச பிடி.

வாசலில் போர்டு. '4.30 பி.எம்: டு டே : எம்.எஸ் லாவண்யா & சுப்புலக்ஷ்மி சாக்ஸஃபோன். ஆல் ஆர் வெல்கம்'மூணு படி ஏறி உள்ளே போனா நேரா இருக்கற எதிர்வாசலிலே ஜனங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. கேண்டீன்.சரி ஒரு காப்பியைக் குடிச்சுட்டு மேலெ போகலாம்.

மூகாம்பிகை கேட்டரர்ஸ். அருமையான உபசாரம். எதோ அவுங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தாப்போல ஓடி ஓடி வந்து நம்மைக் கூப்புட்டுப்போய் உக்கார வைக்கிறாங்க.அதிலும் நம்ம மேசைக்குப் பரிமாறுபவர் ( பேர் ,முரளி. அதெல்லாம் முதல்லெ பேரைக்கேட்டுருவேன்)பணிவாப் பாய்ஞ்சு பாய்ஞ்சு விளம்புறார். "வாழைப்பூ வடை(ஆ........நம்ம வடை விவகாரம் இவர் வரைக்கும் போயிருச்சா? ) சூடா இப்பத்தான் போடறாங்க. கொண்டு வரட்டுமா?அதுவரை ச்சுடச்சுட கோதுமை அல்வா சாப்பிடுங்களேன்."
"அல்வா வேணாம் முரளி. வடையே கொண்டு வாங்க.'

எங்கள் மேசையிலேயே ஒரு மார்வாரி குடும்பம் வந்து உக்கார்ந்தாங்க. பரவாயில்லாம, சுமாரா, நல்லாவே தமிழ்ப் பேசுறாங்க. அந்த அம்மாவுக்கு ரவா தோசைதான் வேணுமாம். அப்படியும் முரளி தன்னோட இனிய பேச்சாலே ஒரேடியா வீழ்த்திட்டார். இப்ப அவுங்க முன்னாலே ஆளுக்கொரு அல்வா. அல்வாவுக்கே அல்வா கொடுத்துட்டார்பாருங்க:-))))
வாழைப்பூ வடை அருமை மட்டுமில்லை, ரொம்பப் பெரூசு. 'கஷ்டப்பட்டு'த் தின்னவேண்டியதாப் போச்சு. முடிச்சுட்டு மாடியில் இருக்கும் அரங்கம். கதவைத் திறந்தவுடன் ரொம்பச் சத்தமா சாக்ஸஃபோன் கேக்குது.இடம் சின்னது. அதிலும் ரெட்டை சாக்ஸஃபோன்கள். பின்னே கேக்கணுமா? நல்லாதான் வாசிச்சாங்க ரெண்டு சகோதரிகளும். ஆனாலும் சத்தம் கூடுனதாலெ காது கஷ்டப்பட்டுச்சு(-:

சத்தமுன்னு சொன்னதும் இன்னொண்ணும் ஞாபகம் வருது. என்னடா, குறை சொல்றாளென்னு நினைக்காதீங்க.அதென்னங்க நம்மூர்லே எப்பவும் ஒரே சத்தம். மக்கள்ஸ் சத்தத்துக்குப் பழகிட்டாங்க போல. வீட்டுலே டிவிகூட எட்டூட்டுக்குக் கேக்கறமாதிரி வைக்கிறாங்க!

ஆறே முக்காலுன்னு சொல்லி ஒரு பத்து நிமிஷம் லேட்டாத்தான் நாடகம் ஆரம்பிச்சாங்க.

காமெடி மன்னன் கிரேஸி மோகன் & மாது பாலாஜி நடிக்கும்

' அலாவுதீனும் 100W பல்பும்'
( குபீர் டமார் சிரிப்பு நாடகம்)
இப்படித்தான் டிக்கெட்டுலே போட்டுருந்துச்சு. நாங்களும் கூட்டத்தோட சேர்ந்து தலையைக் கழட்டி வச்சுட்டுக் குபீர்...............டமார்...........ன்னு சிரிச்சோம். இப்ப நினைச்சுப் பார்த்தா எதுக்காக அப்படிச் சிரிச்சோமுன்னு தெரியலை. எதுவுமே மனசுலே நிக்கலை. எல்லாம் அந்த நிமிஷத்தோட 'குபீர்'னு மாயமா மறைஞ்சு போச்சு(-:

ஆனாலும் அரங்கம் நிறைஞ்ச காட்சிதான்.

18 comments:

said...

துளசி கோபால்,

நான் ஒரிஜினல் மதுசூதனன். என்னோட பதிவுல நீங்க பின்னூட்டி இருந்ததைப் பார்த்தேன். நடந்தவைக்காக நான் வருத்தம் தெரிவிச்சுகிறேன். இனி அடிக்கடி நம்ம பதிவுக்கு வரணும்.

said...

வாங்க மதுசூதனன்.

//நடந்தவைக்காக நான் வருத்தம் தெரிவிச்சுகிறேன்.//


இதுலே உங்கள் பங்கு என்ன இருக்குங்க? எல்லாம் 'தானாகத்தான் திருந்த வேணும்'
படிச்சவங்க, வயசு வந்தவுங்க இப்படியெல்லாம் செய்யறதுதான் மனவருத்தமா இருக்கு.

அது போகட்டும்.

//நான் ஒரிஜினல் மதுசூதனன். //

உண்மையை கண்டுபிடிக்க வழி இருக்குன்றதுதான்
இப்போதைய மகிழ்ச்சி. நாங்க எல்லோரும் கவனமாத்தான் இருக்கோம்.

வருகைக்கு நன்றிங்க.

said...

நம் மக்களுக்கு செவிப்பறை 2 இருக்கோ என்று எனக்கு வெகு நாட்களாக சந்தேகம்.
என் பெற்றோர்கள் வீட்ட்டையும் சேர்த்துதான்.

said...

நான் என்ன பண்ணறேன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்? காலைல இருந்து உங்க முதல் பதிவுல இருந்து படிச்சிட்டு வர்றேன் :) உங்க வாழ்க்கைய கிட்ட இருந்து பார்க்கிறா மாதிரி இருக்கு! ஆனா விட்ட எல்லாத்தையும் படிச்சு முடிக்க இன்னும் 2 நாள் ராமுழிக்கணும் போலிருக்கே! :)

இது வரை படிச்சதில இப்போ வரை சிரிக்கிறது உங்க அக்கா அண்ணன் கிட்ட நீங்க தனியா மாட்டிக்கிட்டத நெனைச்சு தான்!!

said...

வாங்க குமார்.

உங்களுக்கும் இந்த 'சந்தேகம்' வந்துருச்சா? :-)))))

said...

வாங்க பொற்கொடி.

ரசிகர்கள்/வாசகர்கள் கிடைச்சா வுட்டுறக்கூடாது.

//இன்னும் 2 நாள் ராமுழிக்கணும் போலிருக்கே! :)//

ஒரு ப்ளாஸ்க் நிறைய டீ போட்டுத் தரவா?
ராக்கண்ணு முழிக்கணுமா இல்லையா? :-)))

இங்கே இன்னும் இருக்கு:-)


பேசாம 3 ராவுன்னு வச்சுக்கலாமா? :-)))))

எதாவது தோணுச்சுன்னா ஒரு பின்னூட்டம் தட்டிவுடுங்க.

said...

டீச்சர், திரும்பி வந்தாச்சு.

//நான் 'இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் இவர் பேச்சைத் தட்டவே மாட்டேன்'. போனோம்.//

ஆஹா, என்ன ஒற்றுமை. உங்க அவர் இங்க வந்தப்போ இதேதான் சொன்னாரு. என்ன ஒரு சின்ன சேஞ்ச். அவரு இந்த மாதிரி விஷயங்களில்ன்னு சொல்லாம எல்லா விஷயங்களிலும் அப்படின்னு சொன்னாரு!

குப்பை பத்தி பேசியாச்சு, ட்ராபிக் பத்தி பேசியாச்சு, சத்தம் பத்தி பேசியாச்சு - இனி என் நண்பர்கள் என்னை அடிக்கும் கிண்டல்களுக்கு நீங்களும் சகல க்வாலிபிகேஷன்களும் வாங்கியாச்சு. என்னை அமெரிக்க அதிபர் அப்படின்னு கூப்பிடுவாங்க, நீங்க வேணா நியூசி பிரதமரா இருந்துக்கோங்க.

said...

துளசி, க்ரேசி மோஹன் வயசாயிப் போச்சே. எப்படித்தான் பொறுமையா இருந்தீங்களோ?நம்ம ஊரில வேற வழியே இல்லைம்மா.
கிடைச்சதைப் பார்க்கணும்.
சத்தம் பழகிப் போன ஒண்ணு.
இந்த மாதிரி வெளிலே (வெளியூரு) வந்தா ஒரே காது ஞொய்னு ஆயிடுது.
வாணி மகால் பக்கத்தில ஒரு லேன் போகுமில்ல, அது பக்கத்தில, நிஜமாவே ஒரு டிரான்ஸ்ஃபார்மருக்குப் பக்கத்து வீட்டில எங்க அம்மா இருந்தாங்க:-)
முருகன் இட்லியும் முதல்ல நல்லாத்தான் இருந்தது.
எங்க சிங்கத்துகிட்ட சரவணபவன் பத்தீச் சொன்னா சோகமாயிடும்.
காப்பி மேல அவ்வளவு க்ரேஸ்.

said...

துளசி நீங்களும் வீணை வாங்கினீங்களா? என் கிட்டயும் வீணை, மிருதங்கம் இரண்டும் இருக்கு. கொஞ்ச நாள் வகுப்புக்கு போய் நிறுத்தியாச்சு. திரும்ப ஆரம்பிக்கணும். நல்ல சுவையா (இட்லி அல்வா சேர்த்து) பதிவு தொடர் நல்லா இருக்கு.

said...

நானே கேக்கணும்னு இருந்தேன், ரசிகை மனசறிஞ்சு குடுத்துட்டீங்க :)

ஜோக் என்னன்னா, சாப்பிடும் போது படிச்ச புத்தகத்தயே ஆவது திருப்பி படிக்கற ஒரே ஜன்மம் நீ தான்னு என் அப்பா சொல்வாரு! ஆனா உண்மையில்லேனு நேத்து தெரிஞ்சுக்கிட்டேன் :)

said...

வாங்க கொத்ஸ்.
என்ன ஆளைக் காணோமேன்னு கொஞ்சம் 'கலக்கமா' இருந்துச்சு.
குப்பை, ட்ராஃபிக், சத்தம் இதையெல்லாம் ஒளிச்சு வைக்க முடியாதுல்லே:-)

அதுவுமில்லாம உண்மையைச் சொல்லும்போது நம்மநாட்டுக்கு ஒண்ணு மத்த நாடுகளுக்கு
ஒண்ணுன்னு அநியாயம் செய்யக்கூடாதுல்லே.......

எங்க 'ஹெலன் க்ளர்க்' சரின்னு சொன்னா பிரதமரா இருக்கவும் விருப்பம்தான்:-)
அப்ப அதைப்பத்திப் பதிவு எழுதலாம்:-))))

said...

வாங்க வல்லி.

//க்ரேசி மோஹன் வயசாயிப் போச்சே//

அவருக்கு மட்டுமா? :-)

//எங்க சிங்கத்துகிட்ட சரவணபவன் பத்தீச் சொன்னா சோகமாயிடும்.
காப்பி மேல அவ்வளவு க்ரேஸ்.//

ஆமா இங்கே நம்ம வீட்டுக்காஃபி மட்டும் ஏன் அப்படி அமையரதுல்லே?
இதுக்கு கோபாலின் பதில், எல்லாம் பாலோட விசேஷம்தான்.
இங்கே மாடு 'புல்லு மட்டும்'தானே திங்குது! :-)

said...

வாங்க பத்மா.

//என் கிட்டயும் வீணை, மிருதங்கம் இரண்டும் இருக்கு//

ஹை.... அப்ப யாரு மிருதங்கம் படிச்சிருக்கா? வகுப்பை மட்டும் வுட்டுறாதீங்க.

அது சரி, என் 'பொன்' வீணை எப்படி இருக்கு பார்க்க?

இசைவிழாவுக்கு போனதே ஒரேஒரு தடவைதான்.
அதான் எல்லாத்தையும் 'கவனிச்சு'ப் பார்த்தேன்:-)

said...

பொற்கொடி,

//சாப்பிடும் போது படிச்ச புத்தகத்தயே........ //

பழசா புதுசான்றது இங்கே பிரச்சனை இல்லை. எதாவது படிக்கணும்( அப்பத்தான்
அந்த சாப்பாட்டு 'ருசி' தெரியாம இருக்கும்!)

said...

உண்மையிலேயே நீங்க தீவிர சௌம்யா விசிறிதான் போலும்.

சென்ற முறை சென்னை சென்றபோது - ப்ரியா ராகங்களில் தொகுப்பாக ஒரு சி.டி வாங்கியிருந்தேன் - சௌம்யா பாடியது - எப்போதும் கேட்க இனிமையானது.

said...

வாங்க ஜீவா.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.
திங்கக்கிழமை என்ன ஒரு நாளா விடிஞ்சது பாருங்க(-:

முந்தி எப்பவோ ( செளம்யா பாடவந்த ஆரம்பத்தில்) சுப்புடுவின் விமரிசனம்
ஒண்ணு படிச்சேன். '
ஆளும் அழகு பாட்டும் அழகு'ன்னு எழுதி இருந்தார். இப்படி சுப்புடு வாயாலே
நல்லவிதமா வருதுன்னா உண்மைக்குமே நல்லாதானே இருக்கணும். அப்ப முதல்
நாங்களும் விசிறியாவே ஆயிட்டோம். நேரில் பார்க்கணும் கேக்கணும் என்ற துடிப்பு
இப்பவாச்சும் நிறைவேறுச்சே.

said...

ஆகா - துளசி கோபால் சொல்றதே கேக்குறாங்களாம் - நம்ப முடிய வில்லை. அவரு மதுரையா - சொல்லவே இல்லியே - என்னோட அன்பைத் தெரிவிக்கணும். மதுரைக்கு எப்ப வரீங்க ? சொல்லுங்க. ஏதோ வாங்கணும்னு ஆசப்படறாரு - ஆயிரம் காரணம் சொல்லி ஆப்பு வைக்கிறீங்களே! நியாயமா ?

முருகன் இட்லிக்கடை இட்லி - சரவணபவன் காபி - ரசனை அருமை.

சின்னச் சின்ன செய்திகள் நெரெய இருக்கு பதிவிலே - பாராட்டுகள்.

வாழப்பூ வடை - அல்வா - முரளி - மூகாம்பிகெ கேடரர்ஸ் - ம்ம்ம்ம்

சத்தமான கிரேஸி நாடகம் பாத்தீங்களா - நன்று

said...

துளசி, நான் போட்ட மறுமொழிய பிளாக்கர் சாப்டுடுச்சு. வந்துதா ? வரலேனா சொல்லுங்க - திரும்பப் படிச்சி, திரும்ப ரசிச்ச்சி, திரும்ப யோசிச்சி, திரும்ப எழுதணும். பாப்போம்