குடிக்கூலிக்காரியிடம்,'புது வீடு கட்டி இருக்கேன்.அங்கே வந்து இதே 'வாடகை'யில்இரு'ன்னு கூப்புட்டுக்கிட்டு இருந்த வீட்டுச் சொந்தக்காரரிடம், 'இதோ அதோ'ன்னுசாக்குச் சொல்லிக்கிட்டு இருந்தேன். இன்னிக்கு 'வீட்டுக்காரர்', கறாராச் சொல்லிப்புட்டார்.
உன் பிரச்சனை என்னன்னு புரியுது. சாமான் செட்டெல்லாம் நிறைய இருக்கே, எப்படிடா அதையெல்லாம் கட்டி வலிக்கிறதுன்னு தானே பாக்கறே?
இன்னிக்கு நாளும் 'ரொம்ப நல்ல நாள்'. உனக்கான 'ஸ்பெஷல்' நாளுக்கு நான் இதைக்கூடச் செய்யாட்டா எப்படி?
நானே 'தொலையட்டும், போனாப்போவுது'ன்னு எல்லாத்தையும்அங்கே மாத்தி வுட்டுடறேன். நிம்மதியா(??) அங்கே போய் இருந்துக்கோன்னு 'அருள்வாக்கு' சொல்லி, இப்ப மாத்தியும் ஆச்சு.
அங்கே போய்ப் பார்த்தா.............பின்னூட்டக்காரங்க பேரெல்லாம் சிலது 'ஜிலேபி ஜிலேபி'யா இருக்கு. பலது அனானியாக் கிடக்கு.நிதானமாத்தான் இதைக் கவனிக்கணும். விவரம் தெரிஞ்ச தம்பி தங்கைகள் கொஞ்சம் என்னையும் கவனிங்கப்பா.
Monday, February 05, 2007
காலத்தின் கட்டாயம்
Posted by துளசி கோபால் at 2/05/2007 11:53:00 AM
Labels: பதிவர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
நானும் 'பரி' சோதனை செய்யணுமா இல்லையா?
அதாங்க இது:-)
துளசி அம்மா,
பால் காய்சியாச்சா... முதலில் ஜிகே வுக்குத் தான் !
:)
வாங்க ஜிகே.
உங்களுக்குத்தான் முதல் வரவேற்பு:-)
தமிழ்மணத்துலே சேர்க்க முடியலையேப்பா(-:
'அளி அளி'ன்னாலும் அளிக்க முடியலையே(-:
ஜிகே,
உங்களுக்கு பதி சொன்ன அடுத்த நிமிடமே தமிழ்மணத்துலே சேர்க்க முடிஞ்சது என்ன மாயமோ:-)
//துளசி கோபால் said...
ஜிகே,
உங்களுக்கு பதி சொன்ன அடுத்த நிமிடமே தமிழ்மணத்துலே சேர்க்க முடிஞ்சது என்ன மாயமோ:-)
//
துளசி அம்மா,
மாயம் செய்தது மாயக் கண்ணன் பின்னூட்டம் !
:)
//....பின்னூட்டக்காரங்க பேரெல்லாம் சிலது 'ஜிலேபி ஜிலேபி'யா இருக்கு.//
இங்க போயி பாருங்க. பூச்சி கொல்லி மருந்து இருக்கு! :))
தப்பிக்க முடியாதல்லவா?
ஆனா போட்டோ ஏத்தறது சுலுவா போச்சு.என்னோட வின்95 கணினியிலேயே சூப்பராக ஏத்தமுடியுது.
புது வீட்டில் புகுமனைவிழாவிற்கும்
உங்களுக்கு இனிய பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் !!
இந்த ஆண்டு சீரும் சிறப்புமாக அமைய இறையை வேண்டுகிறேன் !
யெக்கோவ், உங்களுக்கும் அந்த வீட்டுக்காரன் டார்ச்சரா?
ஏதோ பயத்திலே மாறின நாள்லே இருந்து இன்னி வரைக்கும் நான் சமையல் கூட பண்ணலேன்னா பாருங்களேன்:-)
யோவ் இலவசம் - ஜிலேபிக்கு ஏன்யா பூச்சி மருந்து? கவுண்டமணி ஸ்வீட் ஸ்டாலுக்குள்ள பூந்த செந்திலாட்டம் என்னவோ திட்டமா?
நல்ல வீட்டுக் காரர்தான். கேட்காமலேயே புது வீடு கட்டி, கூடுதல் வசதிகளையும் நிறைய செய்து கொடுத்திருக்கிறார். நேரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் பயன்படுத்திப் பாருங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
வாங்க கொத்ஸ்.
'ஜிலேபி'யிலே பூச்சிக்கொல்லியா? என்னாப்பா ஒரேதாப்
போட்டுத் தள்ளிரும் எண்ணமா?:-))))
'அங்கே' போய்ப் பார்த்துட்டு 'அரைக்கிணறு' தாண்டிட்டு வந்துருக்கேன்.
ஆத்தர் கமெண்ட்ஸ் பகுதியே நம்மதுலே இல்லைபா(-:
ஆனா இந்தக் குழப்பம் பழைய பதிவுகளுக்குத்தான். இந்தப் பதிவுலே
எல்லாம் சரியாத்தான் வருது.
வாங்க குமார்.
போட்டோ ஏத்தறது சுலபமா? அடிச்சக்கை:-))))
வாழ்த்துகளுக்கு நன்றி.
'கவனிச்சதுக்கும்'தான்:-))))
வாங்க பினாத்தலாரே.
'டார்ச்சர்'ன்னு சொல்ல முடியாது. 'அன்போடுதான்' சொன்னார்:-)
அதுசரி? இன்னும் ஏன் ஆக்கலை? அடுப்படி இருக்குதானே புது வீட்டுலே? :-)))
கொத்ஸ், பயங்கரமான ஆளா இருக்காருப்பா:-)))
வாங்க சிவா.
// நேரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் பயன்படுத்திப் பாருங்கள். //
சரியாப் போச்சு. உள்ளே நுழைஞ்சு வாசக்கதவைச் சாத்துனவதான். மாளிகையைச் சுத்திப்
பார்க்க நாள் செல்லும். ஒரே இருட்டா இருக்கு இந்த க.கை.நாவுக்கு:-)
புது வீட்டில் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ வழ்த்துகிறேன்
//குடிக்கூலிக்காரியிடம்,'புது வீடு கட்டி இருக்கேன்.//.
நீங்க கட்டின வீட்டைப் பத்தித்தானே சொல்றீங்க.
வாங்க செல்லி,
நான் எங்கே கட்டுனேன்? ப்ளொக்கர்ஸ் கட்டுன அடுக்கு மாடி குடி இருப்பு இது:-)
அக்கா!
எனக்கு பெரிதா விபரம் பத்தாது, ஆனால் கண்டிப்பாக ஒங்களுக்கு உதவுவாங்க!
அதுவும் காலகட்டாயம் தான்.
யோகன் பாரிஸ்
வாங்க யோகன்.
உதவி கிடைச்சிருக்கு.
ஒரு வருசம் ஆச்சு - செட்டில் ஆயிட்டீங்கன்னு நெனைக்குறேன் - அதான் தெரியுதே
Post a Comment