Tuesday, February 06, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 2)

இன்னிக்கு கிறிஸ்மஸ் திருநாள். நேத்துப் பார்த்த ராமாயண 'மயக்கம்' இன்னும் தீர்ந்தபாடில்லை. 'ருசி கண்ட பூனை'யா இருக்கேன். இன்னிக்கு என்னென்ன இருக்கு? டி.வி. ராம்ப்ரஸாத் -பாட்டு, லாவண்யா & சுப்புலக்ஷ்மி சாக்ஸஃபோன்,மஹதி பாட்டு, அட..... அடுத்து நம்ம செளம்யா பாட்டு, அப்புறம் கடைசியா கத்ரி கோபால்நாத்.


ரொம்ப முக்கியமா நான் நினைக்கிறது செளம்யாவும், கத்ரியும்தான். ஆனாப் போகமுடியுமான்னு தெரியலை. இன்னிக்கு அரசாங்க விடுமுறையா இருக்கறதாலே காலையில் சில முக்கிய குடும்ப நண்பர்களைச் சந்திக்கறதா ஒரு முன்னேற்பாடு.மத்தியானம்? எங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கும் 'இளந்தளிர்களை'ப் பார்க்கப்போகணும்.



எங்கே எந்த நேரத்தில் இருப்போமுன்னு ஒரு திட்டமும் இல்லாததால் பகல் சாப்பாட்டை வெளியில் முடிச்சுக்கணும். 'அம்பிகா எம்பயர்' கிறிஸ்மஸ் லஞ்ச் பஃபே. பனிரெண்டுக்குத் திறக்க வேண்டிய டைனிங் ஹால், அலங்கரிப்புக்குத் தாமதமாச்சுன்னுமுக்காமணி நேரமாச்சு. உள்ளெ போனால், எதோ இங்கிலாந்துலே இருக்கறதுபோல டர்க்கி ரோஸ்ட் என்ன, லேம்ப் ரோஸ்ட் என்னன்னு அட்டகாசம். வெஜிடபுள் பிரிவை ஆராய்ஞ்சதுலே சேப்பக்கிழங்கு ரோஸ்ட், கேரளா அவியல்,ஆந்திரா காரபுலுசு( காரக்குழம்பு) மோர்கறின்னு நிறைய வகைகள். இங்கே கிடைக்காத காய்கறிகளாப் பார்த்துச் சாப்பிட்டேன்.
சாப்பாட்டின் கூடவே ஒயின் வகைகள் வேற. இந்தியா என்ன.......... ச்சென்னையே ரொம்ப மாறித்தான் போச்சு! நிறைய மக்கள்ஸ் கிறிஸ்மஸ் லஞ்சுக்கு வந்து நிரம்பிக்கிட்டு இருந்தாங்க. அங்கே சிறப்பு டின்னரும் அன்னிக்கு இருக்காம்!





நாலுமணிக்கு செம்பாக்கத்தில் இருக்கணும். இதுக்குமுன்னே போயிருந்த இடம்தான்னு சொன்னாலும், மனசில் வச்சுருக்கற லேண்ட் மார்க் எல்லாம் மறைஞ்சு எல்லாமே புதுசா இருக்கு. இடம் தெரியாமத் தடுமாற்றம். ஒரு அஞ்சுபத்து நிமிஷம் தாமதமாகுமோன்னு பயந்து செல்லுலே கூப்புட்டா, பிரியா சொல்றாங்க, 'நீங்க சரியான இடத்துக்குத்தான் வந்துக்கிட்டு இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் முன்னாலே வந்து நீச்சல் குளத்தையொட்டி இடது பக்கம் திரும்புங்க'ன்னு.


ஆஹா....... சொட்டுத்தண்ணியும் இல்லாத நீச்சல்குளத்தைப் பார்த்துட்டுச் சரியான இடத்துலேபோய் வண்டியை நிறுத்துனா,பின்னாலேயே வந்து நிக்குது பிரியாவோட ஆட்டோ! வேற எதோ வேலையாப் போயிட்டு, நாங்க காத்திருப்போமேன்னு பாய்ஞ்சு வந்தாங்களாம்:-)



மாடி வெராந்தாவுலே நின்னு கவனிக்கும் பிஞ்சுகள். உள்ளே காலடி வச்சதும் ஏகப்பட்ட வரவேற்பு. 24 பேர். சீவிச் சிங்காரிச்சு, உடுப்பு மாத்திப் பகுடர் எல்லாம் அடிச்சுக்கிட்டுப் பளிச்சுன்னு நிக்கிறாங்க நம்ம 'ஹோப்' எய்ட்ஸ் ஹோம் பசங்க. ச்சின்னதுக்கு 9 மாசம்தான் ஆகுதாம். ஆனா உறவினர் யாரோ ரெண்டு மூணுநாளைக்குக் கொண்டு போயிருக்காங்களாம். இவுங்களைக் கவனிச்சுக்கவும், குடும்பச் சூழ்நிலை கையைவிட்டுப் போன கவலைகளை மறக்கவும்ன்னு 6 பெண்கள். வட இந்தியப் பெண் ஒருத்தரும் இதில் சேர்த்தி.


பண்டிகை நாள் இல்லையா? பிள்ளைகளுக்கு 'டேனீஷ் குக்கீஸ்' டின் இங்கே இருந்து எடுத்துக்கிட்டுப் போயிருந்தோம். அப்புறம் கலரிங் புத்தகங்களும், கலர் செய்ய ஃபெல்ட் பேனாக்கள் செட்டும் லேண்ட் மார்க்கில் வாங்கி வச்சுருந்தேன். நம்ம சிங்கை சித்ரா ரமேஷூம், அவர் மகளும் பிள்ளைகளின் வயசுக்கேத்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கவும்,ஒரே மாதிரி பென் செட்டுக்கள் பெரிய கூடைகளில் இருந்து பொறுக்கி எடுக்கவும் உதவி செஞ்சாங்க. இங்கே நியூஸியில் ஒரு தோழி கொஞ்சம் இந்திய ரூபாய்களும், ஒரு புடவையும் கொடுத்தனுப்புனாங்க. அங்கெ 6 பெண்கள் என்ற விவரம் கேட்டுக்கிட்டதாலே இன்னும் அஞ்சு புடவைகள் வாங்கிக்கிட்டோம்.


கொஞ்ச நேரம் பிள்ளைங்களோட பேசிக்கிட்டு இருந்தோம். ரெண்டு பேர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறாங்க. மூணு பேர் இன்னும் பள்ளிக்கூட வயசு வராதவுங்க. இடைப்பட்டவங்க எல்லாம் பள்ளிக்கூடம் போய்வந்துக்கிட்டு இருக்காங்க.எங்களுக்காகப் பாட்டுக்கள் சில பாடிக்காட்டுனாங்க. அப்ப கொஞ்சம் வெக்கப்பட்டுக்கிட்டே ஒரு குழந்தை எழுந்து நின்னு,'உங்களுக்காக ஒரு டான்ஸ் ஆடிக்காட்டவா?ன்னு கேட்டாள். ஆஹா... கரும்பு தின்னக் கூலியா?


நாலு பெண் குழந்தைகள் 'ஐ லவ் மை இண்டியா' பாட்டுக்கு அட்டகாசமா ஆடுனாங்க. ஹைஸ்கூல் போற ரெண்டு அக்காங்க இன்னிக்குக் காலையில்தான் சொல்லிக் கொடுத்தாங்களாம். தூள்!!!!


பிரியான்னு சொன்னேன் பாருங்க, இவுங்க இடத்துலே முந்தி இருந்தது நம்ம தோழி.( அதனாலே என்ன? இப்ப பிரியாவும்தான் நம்ம தோழிகள் லிஸ்ட்டுலே சேர்ந்துட்டாங்க. இல்லீங்களா? ) அந்தத் தோழியும் அவுங்க கணவரும் இப்ப, 'சுநாமி' அழிவு ஏற்பட்ட கல்பாக்கம்,புதுப்பட்டினம் மீனவர் குப்பக் கிராமத்துலே இருக்கும் இளைஞர்களுக்கும், சிறார்களுக்கும் கல்விக் கண்ணைத் திறக்க உதவி செய்யறாங்க. சந்தோஷ், இளைஞர்களுக்குக் கணினி சொல்லிக் கொடுக்கறார். ஆரம்பப்பள்ளியை அவரோட மனைவி நடத்தறாங்க.


எங்களைச் சந்திக்கிறதுக்காக டாக்டர் அசோக் குமார் அங்கே வந்து சேர்ந்தார். இவருடைய குழு வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடியிருப்பு/குப்பங்களுக்குப் போய் மருத்துவப் பரிசோதனைகள் செஞ்சு, மருந்து கொடுக்கிறாங்க. ச்சென்னையில் இருக்கும் ஹோப் பவுண்டேஷனுக்கு இவர்தான் CPO. ச்சின்ன வயசுதான், என்ன ஒரு முப்பதைஞ்சு இருந்தாலே அதிகம். தன்னலமில்லாத இவருடைய சேவைக்குத் தலை வணங்கத்தான் வேணும். அவர்கிட்டேயும் கொஞ்ச நேரம் பேசி, இன்னும் எந்த வழியில் உதவி தேவை, எந்த அளவுக்கு நிலமை மாறி இருக்குன்னு பல விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம்.நல்ல வகையில் இந்த 'ஹோம்' நடக்கும்முறையை நேரில் வந்து பார்த்த தமிழக அரசு, இன்னும் சில இடங்களில் இதேபோல 'ஹோம்கள்' திறக்க இவுங்களையே கேட்டுக்கிட்டாங்களாம். தமிழ்நாட்டில் ரெண்டு ஹோம்களைச் சமீபத்தில் திறந்து நல்ல முறையில் செயல்பட்டு வருதாம்.இவுங்க சேவையைப் பாராட்டிட்டுக் கையோடு கொண்டு போன காசோலை( கொஞ்சம் நல்ல தொகைதான்)யைக் கொடுத்துட்டுக் கிளம்புனோம்.


பொதுவா நாம் செய்யும் நல்ல காரியங்களை ஓசைப்படாமச் செய்யறதுதான் உத்தமம். வலது கை கொடுக்கறது இடது கைக்குக்கூடத் தெரியக்கூடாதுன்னு சொல்வாங்க அந்தக் காலத்துலே. ஆனாப் பாருங்க, இந்த மாதிரி சேவைகளுக்கு எப்பவுமே நிதி உதவி தேவைப்பட்டுக்கிட்டே இருக்கு. நிலமை அவ்வளவுக்குத் தீவிரம். இதைப் படிக்கும் நல்ல உள்ளங்கள் எதாவது கொடுக்கவேணுமுன்னு நினைச்சால் உதவலாமேன்றதுக்காகத்தான் இதை இங்கே எழுதுனது. மேல் விவரங்கள் வேணுமுன்னா 'நீல' இங்கேயில் கிடைக்கும்


அங்கிருந்து கிளம்பும்போது ஆறுமணி. ஏழரைக்குத்தான் கத்ரி கோபால்நாத். டிக்கெட்டு கிடைச்சா நல்லா இருக்குமேன்னு ஒரு ஆசை. ஏழுமணிக்கே காமராஜர் அரங்கம் வந்து சேர்ந்தாச்சு. டிக்கெட்டும் கிடைச்சது. உள்ளெ போய் உக்கார்ந்தோம்.ஆங்......... இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேனே! நேத்து ராமாயணத்துக்கு டிக்கெட் எடுக்கும்போதே, 'எல்லாரும் வாங்க'ன்ற எஸ்.வி. சேகரின் நாடகத்துக்கு டிக்கெட் ரெண்டு கொடுத்தாங்க. அதுக்கு எவ்வளவு காசுன்னு கேட்டதுக்கு,இலவசம்தான்னு சொல்லிட்டாங்க. இன்னிக்கும் அதே நாடகத்துக்கு இன்னும் சில டிக்கெட்டையும் கொடுத்தாங்க. மறுபடியும் கேட்டதுக்கு 'இலவசம்'ன்னு சொன்னாங்க. சரி. நம்ம நண்பர்கள் யாருக்காவது கொடுக்கலாமுன்னு வாங்கி வச்சுக்கிட்டேன்.


செளம்யாவின் கச்சேரி முடிஞ்சு, கத்ரிக்காக பலர் காத்திருக்கறாங்க. நம்ம பக்கத்து இருக்கையில் 'மைதிலி மாமி'. எல்லாம் அறிமுகப்படுத்திக்கிட்டுத் தெரிஞ்சுக்கிட்டதுதான். காலையில் 10 மணிக்கு வந்தவுங்களாம். தினம் இப்படித்தான் ஆகுதாம்.


" செளம்யா பாட்டுதான் மிஸ் ஆயிருச்சு. நல்லா இருந்ததா மாமி? "


"அப்படி ஒண்ணும் பிரமாதமாப் பாடலை. கொஞ்சம் சுமார்ன்னுதான் சொல்லணும்."


"அவுங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நேத்து ம்யூஸிக் அகடெமியிலே நாலேமுக்கா மணி நிகழ்ச்சி கேன்ஸலாயிருச்சு. ராமாயணம் முடிச்சுட்டு நேரா செளம்யான்னு போட்ட திட்டம் பணால்."


"அப்படியா? அந்த நேரத்துக்கு வேற யாரோட நிகழ்ச்சி இருந்துச்சு? டிக்கெட் முந்தியே வாங்கிட்டீங்களா?"


"டிக்கெட்டுக்குப் போன் செஞ்சப்பதான் விவரம் சொன்னாங்க. பதில் நிகழ்ச்சியா டி. ருக்குமணி வயலின்னு சொன்னாங்க. அதான் போகலை. அது இருக்கட்டும், என்னென்ன பாட்டு பாடினாங்க?"


"எதோ துக்கடாவாத்தான் பாடினா. உடம்பு சரியில்லையாமா? ட்த்சு......ட்த்சு......... அதான்............"


"என்ன புடவை கட்டிண்டிருந்தாங்க? "


"நீங்க செளம்யாவோட பயங்கர ஃபேனா? கறுப்புலே மஞ்சள் பார்டர்."


"அடடடா........சூப்பரா இருந்துருக்குமே!"


மைதிலியோட கணவரும், மச்சினரும் கொஞ்சம் 'வித்தியாசமான' கிரிக்கெட் விசிறிகளாம். இந்திய அணி எங்கே விளையாடினாலும் போய்ப் பார்த்துருவாங்களாம். ஆஸ்தராலியாவரை வந்துட்டுப் போனாங்களாம். இன்னும் நியூஸிக்கு வரலையாம்(-:


அதனாலென்ன, 2008க்கு இந்திய அணி இங்கே வருது. நீங்களும் வாங்கன்னு அழைச்சுட்டு, நம்ம விலாசம்,ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்தோம். இன்னும் பல இசை நிகழ்ச்சிகளைப் பத்தி மாமியோட பேசி விவரம் சேகரிச்சுக்கிட்டேன். அதுலே ஒண்ணு, தினமும் 'ஹிந்து' பேப்பரில் முழுவிவரமும் வருதுன்றது! அடடா....இது தெரியாம எங்கெங்கே என்னன்னு அலைஞ்சுக்கிட்டு இருந்தமே(-: இத்தனைக்கும் நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு 'டெக்கான் க்ரானிக்கிள், ஹிந்து, எக்ஸ்ப்ரெஸ் 'மூணும் வந்துருது. தினம் டில்லி அரசியல் & உள்நாட்டு கட்சிகளில் ஒருத்தர்மேல் ஒருத்தர் வீசும் சேறையுமே பார்த்தா எப்படி?


இதோ......... கத்ரி கோபால்நாத். அன்னிக்கு அவரோடு ஜமா சேர்ந்தவங்களை......... ஆஹா...... என்னன்னு சொல்றது?

வயலின் - கன்யாகுமரி.

தவுல்-ஏ.கே. பழனிவேல்.

அம்மாடியோவ்........... எல்லாம் பெரிய செட்! அம்ருத்ன்னு ஒரு இளைஞர் கஞ்சீரா, பெங்களுர் ராஜசேகர் மோர்சிங்.


மத்த கச்சேரிகளில் வயலின் முன்னாலே ஒலிபெருக்கி இருக்கும் பாருங்க, அப்படி இல்லாம இவுங்க வயலினுக்கு ஒரு ஸ்பெஷல் மைக் கன்யாகுமரியின் முதுகுப்பக்கமா வளைஞ்சு வந்து வயலின் மேலேயே உக்கார்ந்துருக்கு.


கழுத்துலே ஒரு ஜொலிப்போடு கூடிய சங்கிலி போட்டுக்கிட்டு, அட்டகாசமா வாசிக்கிறார் கோபால்நாத்.


"என்னமா மின்னறது பாருங்க? அவ்வளவும் வைரம்"- மைதிலி மாமி


அதிசயிச்சுப்போய் உக்கார்ந்துருக்கறேன் நான்.


சக்ஸஃபோனும் தவுலுமா என்ன ஒரு கம்பீரம்! கூடவே இழையும் வயலின். ட்ய்ங்ஞ் ட்ய்ங்ஞ்ன்னு கூடவே வரும் மோர்சிங்( கவனமா வாசிக்கணுமாமே, சிலசமயம் நாக்கு துண்டாயிருமாம், அப்படி ஒரு வாத்தியம்)


கர்நாடக சங்கீத ராகங்கள் ( பேர் எல்லாம் கேக்கப்பிடாது ஆமாம்) அருவி மாதிரி கொட்டுது. கடைசியா சில பாரதி பாட்டுக்கள். கொன்னுட்டாரய்யா......... கொன்னுட்டாரு!!


பின்குறிப்பு: கிளம்பும் அவசரத்தில் கேமெரா கொண்டுபோக மறந்துட்டேன்(-:

21 comments:

said...

ஹோப் அனுபவம் மனதுக்கு நிறைவா இருக்கு துளசி...

என்ன ஒரு ரசிப்பு...மாமியின் ரசிப்ப சொன்னேன்...:-)))))..

said...

பகுடர் பூசின பூக்கள் எல்லாம் அழகுங்க துளசி. இந்த கதிக்கு ஆளாக்கினவங்களுக்கு கல் நெஞ்சு தான்.

அப்புறம் இதெல்லாம் முன்னாடியே அன்னனைக்கு குறிப்பா எழுதி வைச்சு இப்ப போடறீங்களா கொஞ்சம் அந்த ரகசியத்தையும் சொல்லுங்களேன்.
முத்துலெட்சுமி(லட்சுமி)

said...

//பகுடர் எல்லாம் அடிச்சுக்கிட்டுப்//

:)))

//கிளம்பும் அவசரத்தில் கேமெரா கொண்டுபோக மறந்துட்டேன்(-://

:(((

said...

கதிரிக்கு டிக்கட் கிடைக்கிறதே அதிசயம்.
எல்லாம் ப்ரொக்ராம் போட்ட மாதிரி நடந்துச்சா?
அதுயார் மைதிலி மாமி.
வசந்தாவா இருக்கப் போகிறது:-)

said...

வாங்க மங்கை.

'ஹோப்'லே இப்ப புள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்க. கிட்டத்தட்ட
நாலு வருஷமா 'துக்கப்படும்படி ஒண்ணும் நடக்கலை'ன்றதே ஒரு
பெரிய ஆறுதல்.

இப்படி ஆளுங்களும் வேணுமே.......... நானும் மாமியைத்தான் சொல்றேன்.
அடுத்து இருக்கறவங்களோட இயல்பா நட்பு காமிக்கிறவங்க அருகி வர்றாங்க
இல்லையா(-:

said...

வாங்கப்பா முத்துலட்சுமி.
//இதெல்லாம் முன்னாடியே அன்னனைக்கு
குறிப்பா எழுதி வைச்சு இப்ப போடறீங்களா //

அதெல்லாம் எழுதற பழக்கமே இல்லைங்க. எதைப் பார்த்தாலும் மனசுலே
அப்படியே அச்சு. பதியாத சிலதும் இருக்கும். 'அது அவசியமில்லை'ன்னு மனசு
நினைச்சுக்கும்போல:-)))

இந்த ஞாபகங்களே என் பலம் & பலவீனம்:-) ..... (-:

said...

வருகைக்கு நன்றி ராஜேஷ்

said...

வல்லி,

மைதிலி மாமி சொன்னாங்க, அவுங்க வீட்டுக்காரரும் மச்சினரும்
'வரதன் பிரதர்ஸ்'ன்னு. தமிழ்நாட்டுலே பலருக்கு இந்த விவரம் தெரியுமாம்.
முந்தி எதோ பத்திரிக்கையிலே எல்லாம் இவுங்களைப்பத்தி வந்துருக்காம்.

அது இருக்கட்டும், யாரு அந்த வசந்தா மாமி? கொஞ்சம் சொல்லுங்கப்பா.

said...

இவ்வளவு பெரிய பதிவா..

துளசியம்மா, இது வருகை பதிவு மட்டும். முழுசா படிச்சிட்டு மறுபடியும் கமெண்டுறேன்

said...

துளசி அக்கா உங்கள் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும்.விடாமல் உங்கள் பதிவை படிக்கிரேன்.தமிழில் உள்ளிட இப்பொழுது தான் கற்று வருகிறேன். உங்கள் கூட்டிர்குள் எனக்கு அனுமதி உண்டா?
வித்யா.

said...

வாங்க கார்த்திகேயன்.

ஒரே நாளில் இப்படி அடுக்கடுக்கா நடக்குற சம்பவங்களை எங்கே
தனித்தனியாப் பிரிக்கிறது? அதான் பதிவு நீளமாப் போயிருச்சு.

சில நாட்களில் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் நடக்காதுதான். அப்ப அதை
யாரு நினைக்கறாங்க:-)

said...

வாங்க ஸ்ரீவித்யா.

உங்க பேரு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பேருலே 'இருந்த' நடிகையும்
அபிமானவர்கள் லிஸ்ட்டுலே இருக்காங்க.

தமிழ் உள்ளிடறதுதான் ரொம்ப சுலபம். நினைக்கிறதை அப்படியே பேசறதுபோல்
தட்டச்சு செஞ்சால் ஆச்சு.

//உங்கள் கூட்டிர்குள் எனக்கு அனுமதி உண்டா? //

என்ன கேள்வி இது? நீங்க ஆல்ரெடி (நெஞ்ச)கூட்டுக்குள்ளெ வந்து உக்கார்ந்தாச்சு:-)))

said...

நன்றி அக்கா,

உங்கள் கர்னாடக சங்கீதத்தில் ஆர்வம் க்ண்டு மகிழ்ச்சி. எனக்கு அது மூச்சு. காலை 5.00 மனிக்கு worldspace -ல் ஸ்ருதி போட்டால் மாலை வரை இடைவிடாத சங்கீதம் தான் என் வீட்டில்.
உங்கள் பொது தொண்டுக்கு வாழ்துக்கள். அடுத்த சீசன் க்கு கிருஷ்ண காண சபாவில் VIP PASS உங்களுக்காக ரெடி. எனக்கு பிடிதத அருனா சாயீராம் கச்சேரி கேட்டீர்களா?

said...

அக்கா!
கலக்கியிருக்கிறீங்க!
இப்போ தானா? கத்ரியாரைக் கேட்டீர்கள்! அவர் நம் இசையுலகின் கொடை!
யாஸ் இசை விழாவுக்கெல்லாம் பாரிஸ் வந்து கலக்கியவராச்சே!
யோகன் பாரிஸ்

said...

வாங்க ஸ்ரீவித்யா.

கிருஷ்ணகான சபாவா? பேஷ் பேஷ். இப்பத்தான் அதைப் பத்தி எழுதிக்கிட்டு இருக்கேன்.

அருணா சாயிராம் கேக்கக் கொடுப்பனை இல்லை(-:

said...

வாங்க யோகன்.

ஆஸ்தராலியாவரை வரும் கலைஞர்க்ள் சிலசமயம் நியூஸிக்கும் வர்றாங்க.
ஆனா எல்லாம் ஆக்லாந்து வரைதான். அங்கே ஒரு மில்லியன் மக்கள்ஸ்
இருக்காங்க. நம்மாக்கள் எப்படியும் அம்பதாயிரம் இருக்கலாம்.

நான் இருக்கறதோ கிறைஸ்ட்சர்ச். அப்படியும், எப்பவாவது சிலர் இங்கே வரும்போது
விடறதில்லை. எல். சுப்ரமணியம், டி.என். கிருஷ்ணன் மட்டும்தான் 'தைரியமா'
நம்மூருக்கு வந்து போனாங்க:-)

said...

//என்னமா மின்னறது பாருங்க? அவ்வளவும் வைரம்//

அட, நீங்க வேற டீச்சர்...
பாவம் மைதிலி மாமி...
அவங்க சங்கராபரணம் என்ற ஆபரணத்தில் உள்ள வைரம் பத்திச் சொல்லி இருப்பாங்க! வேற எந்த ஆபரணமும் இருக்காது! :-))

Hope is really Hopeful!
giveindia.org இலும் அவர்கள் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளார்கள்!
ஏதோ மருத்துவ உதவி மட்டும் தான் என்றில்லாது, கல்வி, தொழிற்கல்வி, மேற்படிப்பு, வேலை வாய்ப்பு நெட்வொர்க் எல்லாம் செய்கிறார்கள் என்று நண்பன் சொன்னான்.
டாக்டர் அசோக் குமார் பணி சிறக்க வாழ்த்தும் வேண்டுதலும்!

said...

வாங்க KRS.

நலமா? அங்கெ 'ஒருத்தர்' உங்களைக் காணொமுன்னு அழுது புலம்பிக்கிட்டு இருக்கார்:-))))
நாந்தான் நீங்க கொஞ்சம்(??) பிஸின்னு சொல்லிட்டு வந்தேன்:-)))

சங்கராபரணமா? நல்லா இருக்கும்போல இருக்கே. பேரே நல்லா இருக்கு.
முழுசும் வைரமோ? அதுவும் 'மொச்சைக்கொட்டை' சைஸுலெ?

நமக்கும் ஒண்ணு உடனே வாங்கிக்கணும். கோபாலுக்கு உடனே ஃபோன் போட்டுடறேன்:-))))


'ஹோப்'லே பல நல்ல விஷயங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. அதான் பதிவுலெயே
ஒரு சுட்டியைக் கொடுத்துவச்சேன்.

said...

துளசி, உங்க பதிவுகளோட சிறப்பே - அதுலே இணைச்சிருக்கற படங்கள் தான். இதுலே முதப் பகுதிக்குப் படம் இருக்கு - அடுத்த பகுதிக்கு காமெரா மிஸ்ஸிங்க் - மறதி - என்ன பண்றது.

said...

பிளாக்கர் படுத்துது. மறுமொழிய முழுங்கிடுச்சி. திரும்பப் போடுறேன்.

உங்க பதிவுக்கே சிறப்பு அதுலே இணைக்கிற படங்கள் தான். முதப் பகுதிக்கு உங்க படம் - ம.பா படம், மழலைச் செல்வங்கள் படம் எல்லாம் அருமை. கச்சேரிக்கு ?? காமெரா மறந்து போச்செ !!! - ம்ம்ம்ம்

said...

துளசி, குறிப்புகள் இல்லாம - ஞாபக சக்திய வச்சே எழுதறதுன்னா - ம்ம்ம் - பாராட்டுகள். டிசம்பர் - பிப்ரவரி - 2 மாச இடைவெளி - கிரேட்டுங்க

ஹோப் பற்றி விசாரிக்கணும் - துளசியோட ஃபேவரிட்னா நானும் உதவணும். கேஆரெஸ் வேற சொல்லி இருக்கார் - கிவ் இண்டியாலே இருக்காம். பாப்போம்

கத்ரி கச்சேரி ஒண்னு கேட்டிருக்கேன். பக்கவாத்யம் எல்லாம் செமெயா இருக்கும்.

நல்லதொரு பதிவு - கோபாலுக்கும் நன்றி -