அடுக்களை டிப்ஸ்.
சமையல் மட்டும் செஞ்சுகாமிச்சாப் போதாதாமே. இப்படிச் சமையல் வகுப்பு நடத்தறவங்க அப்பப்ப நேரம்/பணம் சேமிக்கும் டிப்ஸ்களையும் கொடுக்கணுமாம். இந்தக் கணக்கில் ஃப்ரீஸர் டிப்ஸ் இன்னிக்குப் பார்க்கலாம்:-)
ரங்கி பி ரங்கியா ( கலர்க்கலரான்னு தமிழில்(?) அர்த்தம்) கிடைக்கும் (சீஸனில் மலிவாக் கிடைக்குமே அப்ப) குடமிளகாய்களைக் கொஞ்சம் வாங்கிக்குங்க. தண்ணீரில் கழுவிட்டு அதைச் சின்னத்துண்டுகளா வெட்டுங்க.
ரொம்பச் சின்னதா வேணாம். ஒரு ரெண்டு ச.செ.மீ அளவுக்கு இருக்கட்டும்.
இப்ப எல்லா நிறத்துலேயும் இருப்பதை வகைக்குக் கொஞ்சம்,உங்க குடும்பத்துக்கு ஒரு வேளைக்கு எவ்வளவு வேணுமோ அந்த அளவு எடுத்து ஒரு ஃப்ரீஸர் பையில் போட்டு வச்சுக்குங்க. அதை அப்படியே நேரடியா ஃப்ரீஸர்லே வச்சுக்கலாம். இந்த ziplock பைகள் இப்பெல்லாம் நிறையக் கிடைக்குது.
உருளைக்கிழங்கு கறி, குருமா, வேற காரம்போட்டப் பொரியல், உப்புமா, கிச்சடி வகைகளுக்கு இந்த உறைஞ்ச குடமிளகாய் பொதியில் ஒன்னு வெளியே எடுத்து சமைக்கும்போது கூடவே சேர்த்துருங்க. இதை டீ ஃப்ராஸ்ட் எல்லாம் பண்ண வேணாம். சட்னு வெந்துரும்.இப்பப் பார்க்கறதுக்கு அழகா இருக்கும். குழந்தைகளும் (ஒருவேளை)விரும்பிச் சாப்பிடலாம். முக்கியமா ரங்கூஸ்களுக்கு 'கலர்' பார்த்தமாதிரியும் இருக்கும்:-)
இது ஃப்ரீஸர்லே இருந்து எடுத்து வெளியே வச்சது:-)
கிச்சன் காட்ஜெட்ஸ் பைத்தியம் நான். புதுசா எதையாவது பார்த்தால்போதும். 'இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை'ன்னு முழுசா நம்பிருவேன். வாங்கி ஒரு நாள் மட்டுமேப் பயன் படுத்திட்டு இது வேலைக்காகாதுன்னு எடுத்துவச்சதும் நிறைய இருக்கு.
ஆனா ...... வாங்குனதுலே உண்மையாவே நல்லவிதமா இருக்கும் ஒன்னு இந்த ஹாட் ஏர் அவன்.
எண்ணெய் இல்லாம இதுலே குழந்தைகளுக்கு ஆஃப்டர் ஸ்கூல் ஸ்நாக்ஸ் செஞ்சுகொடுக்கலாம். உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், சிக்கன் நக்கெட்ஸ், இப்படி பலதுக்கும் தோதா இருக்கு. அதுதான் அடுப்புலே இருக்கற அவன் போதாதான்னா....... இது சின்னதா இருக்கறதாலே அவனுக்கு ப்ரீ ஹீட் செய்யறதுபோல ஒண்ணும் முன்னேற்பாடு செஞ்சுக்க வேண்டாம். சமோசா, பீட்ஸா இப்படியானதுகளையும் மறுபடி சூடாக்க இது உத்தமம்.
மைக்ரோவேவில் வச்சா அந்த க்றிஸ்ப்னெஸ் வர்றதில்லை. ரெண்டு சமோசாவுக்கும், ரெண்டு ஸ்லைஸ் பீட்ஸாவுக்கும் மெனெக்கெட்டு அவனை எவன் ஆன் பண்ணுவான்?
உ. சிப்ஸ் சூப்பர்மார்கெட்டில் ஃப்ரீஸர் செக்ஷனில் கிடைக்கும். வாங்கும்போது விலையை மட்டும் பார்க்காம, ஹார்ட் ஃபவுண்டேஷனின் 'டிக்' இருக்கான்னு கவனிங்க. மலிவு வகை சிப்ஸ்களில் beef fat கலந்துருக்கும். பேக்கெட்டின் பின்னால் இருக்கும் விவரப்பட்டியலில் கெனோலா, சூரியகாந்தி எண்ணெய் இருக்கறதாப் பார்த்து வாங்குனா உடம்புக்கு நல்லது. நம்மூட்டுக்குன்னா ஜாக்கெட்டோடத்தான் வாங்குவேன்:-) கோபால், ஷ்ரேயா ரசிகர் இல்லையாம். சொன்னார். நானும் நம்பிட்டேன்:-)
நம்ம வீட்டில் தயிர் தோய்க்க, இட்லி தோசை மாவு புளிக்க வைக்க, நமுத்துப்போன பொரியை முறுமுறுன்னு ஆக்க, பூண்டு உரிக்க, மஃஃபின் கேக் போன்ற அயிட்டங்கள் செய்யன்னு இதைப் பயன்படுத்தறேன்.
வந்த புதுசுலே நிறைய விலையா இருந்தது. இப்பவும் 'ஈஸிகுக் ப்ராண்ட்' விலை கூடுதல்தான். நமக்காகன்னேச் சீனர்கள் செஞ்சு அனுப்புனது 99 டாலர் விலையில் வந்தப்ப ஒன்னு வாங்குனேன். அஞ்சு வருசம் கழிச்சு அது மண்டையைப் போட்டுருச்சு. (அந்தக் கண்ணாடிப் பாத்திரம் இப்ப வாட்டர் ஃபவுண்டென் வைக்கும் கண்டெயினரா இருக்கு!) இப்ப வீட்டில் இருப்பது சூப்பர் மார்கெட்டில் 60க்கு கிடைச்சது. போனவாரம் பார்த்தால் இது சேலில் வந்து 40க்குச் சீப்படுது..
இப்ப இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவுதான்னு பார்த்துட்டுச் சொன்னீங்கன்னா.... அடுத்த பகுதி வந்தாலும் வரும்:-))))
47 comments:
டிப்ஸெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு:))
bellpepper colourful ஆ பார்க்க சூப்பரா இருக்க்கு, freezer ல போட்டா....சுருங்கி போய்டாதா??
அப்படியே இருக்குமா??
ஹாட் ஏர் அவன்...பார்க்க fancy ஆவும் இருக்கு,ரொம்ப useful ஆவும் இருக்கும் போலிருக்குதே நீங்க சொல்றத பார்த்தா:)))
வாங்க திவ்யா.
சுருக்கம் வர்றதில்லைங்க.
இந்தக் கண்ணாடிப் பாத்திரம் கார்னிங் க்ளாஸ்தான். பல விஷயங்களுக்கு இதைப் பயன்படுத்திக்கலாம். இட்லி மாவுகூடக் கரைச்சு வச்சுக்கலாம்:-)
இது உங்க பதிவு பற்றி:
குமுதத்தில் அப்ப நானும் படிச்சேன். நீங்க எழுதுனதுன்னு தெரியாமப்போச்சே(-:
நல்லா வந்துருக்கு திவ்யா.
துளசி மேடம் வண்ண மயமா ரொம்ப அழகாக இருக்கு. பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு ..இத்தனை நாள் பார்த்த பதிவிலேயே இது தான் என்னை ரொம்ப கவர்ந்தது. சுவை எப்படி இருக்கும் என்று தெரியலை.
இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை'
நான் அப்படியில்லை. :-))
கலர்ஃபுலா இருக்கு துளசி மேடம். எனக்கு வெஜிஸ்(அதுவும் பெல்பெப்பர்ஸ்) சாப்பிட பிடிக்காது என்றாலும் இதை பார்த்தால் சாப்பிட ஆவல் வருகிறது.
//ரங்கி பி ரங்கியா ( கலர்க்கலரான்னு தமிழில்(?) அர்த்தம்) //
வண்ண வண்ண பூக்கள் கேள்விப்பட்டதில்லையா ?
டீச்சர் !! ஒன்லி சூடு படுத்துறதுக்கு தான இந்த ஓவன்..மைக்ரோ வேவ் வே செய்யுமே இந்த வேலைய ??
பாக்க ஆர்வமா இருக்கு..வாங்கணும்னு பாக்கறேன்..இது பத்தி கொஞ்சம் விளக்கமா இந்த விளக்கெண்ணைக்கு சொன்னீங்கன்ன நல்லா இருக்கும்..
//இந்தக் கண்ணாடிப் பாத்திரம் கார்னிங் க்ளாஸ்தான். //
இந்த கார்னிங் க்ளாஸ் என்பது நியூயார்க் மாநிலத்தில் கார்னிங் என்ற இடத்தில் செய்யப்படும் கண்ணாடி. நயாகரா நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்திற்கு அருகேதான் கார்னிங் இருக்கிறது. அங்குள்ள கண்ணாடி கண்காட்சி சாலை நன்றாக இருக்கும்.
அங்கு கண்ணாடிப் பாத்திரங்கள் செய்வது எப்படி என்று செய்தும் காண்பிப்பார்கள். கார்னிங்கில் இருக்கும் பல்கலைக்கழகமும் பெயர் பெற்றது. (அப்பாடா வீட்டுப் பாடம் ஓவர்)
ரீச்சர் கிச்சனை விட்டு வெளிய வர ஐடியாவே இல்லையா?
அந்த ஹாட் ஏர் அவன் ஒண்ணு பார்சேல்ல்ல்ல்ல்!!
//எனக்கு வெஜிஸ்(அதுவும் பெல்பெப்பர்ஸ்) சாப்பிட பிடிக்காது //
கயல்விழி, காய்கறியே பிடிக்காதா? :((
//இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை'
நான் அப்படியில்லை. :-))//
குமார், நல்லா நுண்ணரசியல் பண்ணக் கத்துக்கிட்டீங்க!!
வாங்க குமார்.
சமையல் எப்பவுமே ஆம்புளைங்க விஷயம்தான். (எ.கா: நளன்)அதான் உங்களுக்கு இதெல்லாம் இல்லாமலேயே நல்லா வருது:-)
வாங்க கயல்விழி.
கண்ணு நிறைஞ்சா வயிறு நிறையாதா என்ற நப்பாசைதான்:-)
உங்களுக்கு ஒரு பேர் வச்சாகணுமே.....(ஏற்கெனவே இன்னுமொரு கயல் இருக்காங்க)
பேசாம கயல்2 ன்னுதான் சொல்லணும்போல:-)))
வாங்க கோவியாரே.
கேள்வி மட்டுமா ? இங்கே பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்.
நம்மூர்தான் கர்டன் சிடி ஆஃப் நியூஸி:-)
ஆமாம். கலர் என்பது இன்னுமா தமிழ்ச்சொல் ஆகலை? ஏன்?
வாங்க வெங்கி.
இது சூடுபடுத்தமட்டும் இல்லை. இதுலேயே சமைக்கலாம். சாதம்கூட ஆக்கலாமாம். அவன்லே வச்சுச் சமைக்கும் எல்லாத்தையும் இதுலே வச்சுச் சமைக்கலாம்.
என்ன ஒரு வசதின்னா....நம்ம எவர்சில்வர் பாத்திரங்களைக்கூட சமைக்க வச்சுக்கலாம்.
இங்கே நம்மூரில் குளிர் காலத்திலே தயிர் செஞ்சுக்கவும் இது வசதிதான்.
50 டிகிரியில் ஒரு மணி நேரம் வச்சுறலாம். அப்புறம் சில மணி நேரம் கழிச்சு இன்னொரு தடவை ரிபீட். தயிர் தோய்ஞ்சுருது.
நான்வெஜ் சாப்புடறவங்களுக்கு சாஸேஜ், தண்டூரி வகை எல்லாம் கூட இதுலே செஞ்சுக்கலாம்.
முழுச் சிக்கன் ரோஸ்ட் & அதுலேயே டீ ஃப்ராஸ்ட்ம் செஞ்சுக்கலாம்.
வாங்க கொத்ஸ்.
வீட்டுப்பாடம் சொல்லாமலேயே செஞ்சதுக்கு ஒரு பத்து மார்க் கூடப் போடலாமுன்னு எண்ணம்.
கிச்சனைவிட்டு வெளியே எப்படி வர்றது? அங்கேதானே லேப்டாப்பே இருக்கு:-)))) இப்பெல்லாம் ஆஃபீஸ் ரூம் கணினியைப் பயன்படுத்துவதே இல்லை. இங்கேதான் 23 டிகிரியில் ஹீட் பம்ப் நாளெல்லாம் ஓடுது.
வாங்க கிரி.
ஆக மொத்தத்துலே உங்களுக்குக் கலர்ஸ் பிடிச்சுப்போச்சு:-)))
சுவை நல்லாத்தான் இருக்கு. கோபால் வாயைத் திறக்கலை:-))))
எனக்கும் ஷ்ரேயாவை பிடிக்கலை!
ஹி..ஹி...
நம்புங்க தாயே!
teacher வீட்டுக்காரர நீங்க கொடுமைப்படுத்தினமாதிரி மத்தவங்களும் கொடுமை படுத்தனும் எங்குற உங்க நல்லெண்ணத்துக்கு வாழ்த்துக்கள்... :p யப்பா பசங்களா கொஞ்சம் உஷாரா இருந்துக்குங்க
//இப்ப இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவுதான்னு பார்த்துட்டுச் சொன்னீங்கன்னா.... அடுத்த பகுதி வந்தாலும் வரும்:-)))) //
ஸாரிங்க.. வூட்டம்மாகிட்ட காட்டித்தான் கமெண்ட் போடணும்..
வாங்க இரண்டாம் சொக்கன்.
அதெல்லாம் நம்பிட்டேன்:-)
என்னங்க இவனே,
இந்த 34 வருசத்துலே கொடுமை பழகிப் போயிருக்காதுங்கறீங்க?????
வாங்க பரிசல்காரன்.
நிதானமாத்தான் காட்டிட்டுச் சொல்லுங்க.
அவசரமே இல்லை.
சாயங்காலத்துக்குச் சொன்னாலும் போதும்:-)))
//என்னங்க இவனே,
இந்த 34 வருசத்துலே கொடுமை பழகிப் போயிருக்காதுங்கறீங்க?????// உங்க வீட்டுக்காரருக்கு பழகி இருக்கும் ஆனா மத்தவங்க வீட்டுக்காரர் சோதனை எலியாவங்களே அத யோசிங்க.... அது சரி ஒண்ணு கேக்கனும் என்னு இருந்தேன்... மறந்துட்டேன்... ஆங் வெந்நீர் வைப்பது எப்படி என்னு ஒரு பதிவு எழுதலாம் என்னு இருக்குறேன்... உங்க உதவி கிடைக்குமா??
பிரசண்ட் டீச்சர்,
அந்த ஓவன் மேட்டருக்கும் நமக்கும் தொடர்பு கிடையாது. குடை மிளகாய் வேணா டிரை பண்ணி பார்க்கலாம்.... :)
tips ரொம்ப அவசியம் தரவேண்டியது தான்.. நல்லா இருக்கு படங்கள் எல்லாம்.. ஓவன் வீட்டில் இல்லாததால் சாதரணமா தண்ணீர் கூட சுடவைக்க வரலைனு சொல்லி தான் நானும் ஓவன் வாங்கி வச்சிருக்கேன்.. பிசா செய்யறத விட்டு வேற ஒன்னுமே செய்யறதில்ல.. நீங்க கொஞ்சம் ஓவன் ல செய்யற ஐயிட்டங்களையும் அப்பப்ப ரெசிப்பில போடுங்க.. குக்கரில் செய்ய முடியாத அயிட்டங்களை சொல்லவும்..
நம்ம வீட்டம்மா மலேஷியாவுல. மூத்த மகளுக்கு குழந்தை பிறந்திருக்கு. அதனால இன்னும் ஒரு மூனு மாசத்துக்கு சமையல் நம்மளதுதான். இந்த ஓவன் வாங்கி அனுப்பனீங்கன்னா வசதியாருக்கும். இங்க கிடைக்காதுல்லையா அதனால கேக்கேன். எப்படி வசதி?!
பிரசண்ட் டீச்சர்!
//இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை//
ஹி..ஹி..ஹு..ஹு..ஹா..ஹா...இப்படி ஒரு ஐடியாக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி! தேவைக்கு ஏத்த மாதிரி, இந்த டெம்ப்ளேட்டை மாத்திக்குறோம். :D :D
டீச்சர், நான் (ரொம்ப அவசியமா
:-0), ஜிலேபி சுத்தியிருக்கேன்.என் கூட்டுக்கும் வாங்களேன்.
துளசி ரீச்சர்!!! உங்க பதிவெல்லாம் சூப்பரோ சூப்பர்!!! நான் உங்க பரம ரசிகை!!! வாழ்க வளமுடன்!!!
//வாங்க கயல்விழி.
கண்ணு நிறைஞ்சா வயிறு நிறையாதா என்ற நப்பாசைதான்:-)
உங்களுக்கு ஒரு பேர் வச்சாகணுமே.....(ஏற்கெனவே இன்னுமொரு கயல் இருக்காங்க)
பேசாம கயல்2 ன்னுதான் சொல்லணும்போல:-)))//
வேண்டுமானால் கயல் ஜூனியர் என்று எழுதுங்கள் துளசி மேடம் :)
அடடே! எனக்கு இந்த "சுடு காற்று அடுப்பான்" பத்தி தெரியாம போச்சே. தேடி வாங்கறேன்.
இவனே,
நான் பக்கத்துலேதான் இருக்கேன்:-)
வாங்க தமிழ் பிரியன்.
குடமிளகாய் செஞ்சு பாருங்க. குடைமிளகாய் சேர்த்தச் சமையல் குறிப்புகளை ஒரு நாள் போடறேன்:-))
கயலு வாங்கப்பா.
என்ன மாதிரி அவன் வாங்கி இருக்கீங்க?மைக்ரோவேவ் தானே? இல்லை டேபிள் டாப் ரெகுலர் அவனா?
வாங்க டிபிஆர்.
வாங்கி அனுப்புனா ஆச்சு. இது ஒரு பிரமாதமா?
உங்களை வாழ்த்திக்கிட்டு ஒரு கூட்டமா இங்கே நின்னுக்கிட்டு இருக்கோமே. பார்க்கலையா?
அடடா......:-)
வாங்க புதுவண்டு.
இனிப்பு ரொம்ப ஆகிருச்சே....உடம்புக்கு ஒத்துக்குமான்னு தெரியலையேப்பா.
வந்து கண்டுக்கறேன். நோ ஒர்ரீஸ்:-)))
வாங்க இள வீரா.
புது வருகையா? பேஷ் பேஷ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
நம்ம வகுப்புக்கு ஆதரவு தரும் உங்களுக்கு ஒரு 'ஓ':-)
கயல் ஜூனியர்.
நோ பிராப்ளம்.
ஏற்கெனவே இங்கே ஒருத்தரை சீனியரா ஆக்கி வச்சுருக்கேன்.
அவரைத்தான் ரொம்ப நாளாக் காணோம்.
வாங்க பிரேம்ஜி.
நல்லாத் தமிழ்ப் படுத்தி இருக்கீங்க:-)))
ரொம்ப விலை கூடியது அவசியம் இல்லை. அங்கேயும் சூப்பர்மார்கெட்டில் அநேகமா இருக்கும்.
பேக்கிங் செக்ஷனில் பாருங்களேன்.
மைக்ரோவேவ் தான்
//கிச்சன் காட்ஜெட்ஸ் பைத்தியம் நான். புதுசா எதையாவது பார்த்தால்போதும். 'இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை'ன்னு முழுசா நம்பிருவேன். வாங்கி ஒரு நாள் மட்டுமேப் பயன் படுத்திட்டு இது வேலைக்காகாதுன்னு எடுத்துவச்சதும் நிறைய இருக்கு.//
என்னிடம் கூட வெஜிடெபிள் கட்டர் இரண்டு இருக்கு. ஆனால் இரண்டையுமே உபயோகிக்காமல் கடைசியில் ட்ரெடிஷனலாக கட் பண்ணி செய்யும் முறை தான் சரியா வருது. :(
முக்கியமா அனியன்ஸ் எல்லாம் சாப்பரில் போட்டு கட் பண்ணினால் தண்ணீர் விட்டு கொஞ்சம் அசந்தாலும் கூழ் ஆகி விடுகிறது(ஆனால் வெங்காயம் கட் பண்ண தான் முக்கியமா வெஜ்ஜி சாப்பர் வாங்கினேன்)
கயலு,
மைக்ரோவ் இருப்பது நல்லதுதான்.
சட்னு சமையல் ஆகிரும். மீதி நேரம்?
எழுத்துப் பணி:-))))
ஆஸ்தராலியாவில் இருந்து ஒரு வெங்காயம் வெட்டும் சாமான் வாங்கினேன்.
வெங்காயம் வச்சுட்டு மேல்மூடிய அமுத்துனா ச்சின்னச் சின்னதா சதுரமா தூள் வெங்காயம் வரும்( அப்படித்தான் படம் போட்டுருக்கு)
அதை அமுக்கறதுக்குள்ளே நம்ம தாவு தீர்ந்துரும்:-))))
//இவனே,
நான் பக்கத்துலேதான் இருக்கேன்:-)//
teacher நானும் ஒரு சமையல் குறிப்பு போட்டிருக்கிறேன்... சரியா இருக்கா என்னு வந்து பாருங்க
மேடம்!படங்களா பதிவுகள் போடறீங்க.சி.வி.ஆரின் படங்களுக்கு நீங்கள்தான் போட்டி போல இருக்குது.தக்காளி கலரச் சொல்லவா?குண்டு மிளகாய் நிறத்தை சொல்லவா?படம் அசலா?இல்லை பிற்தயாரிப்புன்னு என்னமோ சொல்றாங்களே அந்த நுட்பங்களா?
வாங்க ராஜ நடராஜன்.
ஐயோ இதென்ன சி வி ஆர் க்குப் பக்கத்துலேகூட நிக்க முடியாது நான்.
அவர் புகைப்படக் கலையில் மன்னன்.
நான், மன்னர் யாரங்கேன்னு கூப்பிட்டால் ஓடிவரும் கூட்டத்தில் ஒன்னு:-)
பிற்சேர்க்கை ஒன்னும் செய்யத் தெரியாது. அது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா இப்படியா இருப்பேன்?
அந்தந்தக் காய்கறிகளின் அழகு அப்படியே எய்ம் & ஷூட்டில் வந்த்து:-)
டீச்சர், இந்த அடுப்படி உபகரணத்தின் சரியான பெயர் என்ன ? ஏதாவது ப்ராண்ட் பெயர் உண்டா? 'ஹாட் ஏர் அவன்' என கூகிளை கேட்டால் பெரிய பெரிய அவன காட்டுது..
நன்னி
வாங்க சுதர்சன்.
சமையலில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு முதலில் ஒரு சபாஷ்!
அதே கூகுளில் தேடி எடுத்தவைகள் கீழே இருக்கு பாருங்க.
http://www.dealsdirect.com.au/p/turbo-cook-convection-oven-le-cuisine-bowl/
http://www.ecplaza.net/tradeleads/seller/3880318/sell_convection_ovenshalogen.html
http://www.ecplaza.net/tradeleads/seller/3253701/convection_oven.html
இணைப்புகளுக்கும் சபாஷுக்கும் நன்றிகள்! :)
Post a Comment