Monday, June 09, 2008

தொழிலாளி

எனக்குத் தொழில் எழுத்துன்னுட்டு ஒரு கணினியோடு மல்லுக்கட்டும் படம் போடலாமுன்னா ...... டென்மச் ஆயிருமோ?



ஊருக்குக் கிளம்புமுன் மறக்காம எடுத்துவச்சுக்க வேண்டியது பழைய (?) ப்ளவுஸ்களைத்தான். எந்தெந்த ஜாக்கெட் சின்னதா(!!) ஆயிருச்சுன்னு பார்த்து அதையெல்லாம் ஒரு மூட்டை கட்டிக்கணும். இதுலே பாருங்க புடவைகள் மட்டும் சின்னதாறதே இல்லை!!! வேணுமுன்னா ஒரு ப்ளீட்ஸ் குறைச்சுக்கலாம்:-))))



அதுக்காக வெறும் ப்ளவுஸ் மட்டுமே எடுப்பேன்னு நினைச்சு, இனிய கனவோடு வரும் கோபாலை இந்த நிமிசம் கணக்குலே எடுக்கலை.



இந்த லிஸ்ட்டுலே அடுத்ததா வர்றது இதுதான். எல்லாம் அந்தக் காலம் மாதிரியா 'கிண்'ன்னு செய்யராங்க? எல்லாம் ஒரே தளுக்கா இருக்கு. மறந்துபோய்க் கழட்டாம அப்படியே தூங்கிட்டோமுன்னா......



' ஙே' ன்னு நெளிஞ்சுருக்கும் திருகாணியை லேசா...உண்மையாத்தாங்க சொல்றேன். ரொம்ப லேசா நிமிர்த்துனாக்கூட..... ரெண்டு துண்டுங்களாத்தான் ஆகுது. இப்படியானதுகளையெல்லாம் பொருக்கிச் சேர்த்தப் பொட்டலத்தையும்
மறக்காம எடுத்துக்கணும்.




இந்த மாதிரி தொழிலாளர்களைத் தேடியோடுவதே ஒரு தொழிலா ஆயிருது பாருங்க.





கிடக்கிறக்கிடப்பில் கிழவனைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டுன கதையா..... தங்கம் விற்கும் விலையில் தங்கத்தட்டுக்குப் பாலீஷ்..........ஹூம்......




இதுதான் பிட்டுக்குத் தந்தத் தங்கம்.




பிட்டுக்கு ஒன்னு. பாக்கி உங்களுக்கு:-)





குழந்தை காதுலே துப்பாக்கி வைக்கிறார். பார்த்துக்கிட்டுச் சும்மா இருக்கோம்..............


பத்தவச்சுட்டாருங்க பத்தர்.




பத்தவச்சு நிறம்போனதை மெருகேத்தறது இப்படியாம்.




என்னன்னு சொல்றதுங்க? இப்படி மாடா உழைக்கவேண்டி இருக்கு(-:





எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்? அந்தம்மா கொண்டு போறது என்னுதா ? இல்லே.......... அந்த மாட்டுப் பயலோடதா?



38 comments:

said...

துளசி மேடம்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

வாங்க பிரேம்ஜி.

வெற்றி ஆசையெல்லாம் இல்லை.

ச்சும்மா.....

இருத்தலின் அடையாளம்:-)))))

said...

//இந்த லிஸ்ட்டுலே அடுத்ததா வர்றது இதுதான். எல்லாம் அந்தக் காலம் மாதிரியா 'கிண்'ன்னு செய்யராங்க? எல்லாம் ஒரே தளுக்கா இருக்கு.//

ஹீ ஹீ ஹி

//குழந்தை காதுலே துப்பாக்கி வைக்கிறார். பார்த்துக்கிட்டுச் சும்மா இருக்கோம்..............//

புடிங்கப்பா அவரை.

//பத்தவச்சுட்டாருங்க பத்தர்//

பத்தவச்சுட்டியே பரட்டை

//எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்? அந்தம்மா கொண்டு போறது என்னுதா ? இல்லே.......... அந்த மாட்டுப் பயலோடதா?//

மாட்டு பயல்னு யாரை சொல்றீங்க? ஹி ஹி ஹி ஹி

படங்கள் மற்றும் அது பற்றிய வர்ணனைகள் ம்ஹீம் என்னமோ போங்க!

said...

இருத்தலின் அடையாளம் ஆகா என்ன ஒரு அழகான விளக்கம்.. இதே அடையாளத்துக்கு நானும் மாசாமாசம் 14 ம் தேதி அவசர அவசரமா ஒரு படத்தைபோட்டுருவேன்ல..

said...

அதானே! 'உங்க பசங்க' இல்லாம போட்டிக்கு போறதா..? அதுவும் அந்த பசங்களோட கமெண்ட்...:))!

said...

அப்புறம் அந்த புடவை சமாச்சாரம். இந்த அனுவவம் சொந்த ஊர் கிளப்பும் போது பலருக்கும் இருந்திருக்கும். ஆனா இப்ப எல்லா ஊரும் மாறிடுச்சில்ல. ஆகையால்..'நாங்கல்லாம் சுடிதாருக்கு மாறியாச்சுங்கோஓஓஓஒ....'[விவேக் குரலில் வாசிக்கவும்]

said...

உள்ளேன் ரீச்சர்!!

said...

டீச்சர்,போட்டிக்கு அனுப்ப சூப்பர் படங்கள்... :)

அப்புறம் டீச்சர்,அந்தத் தங்கத் தட்டை இங்க வீட்டுக்கு எடுத்துட்டு வர்ரப்போ அவர்கிட்ட லெட்டர் ஒண்ணு வாங்க்கிக்குங்க..இல்லேன்னா கஸ்டம்ஸ்ல சிக்கல் ஆகிடும்.

said...

வாங்க கிரி.

//படங்கள் மற்றும் அது பற்றிய வர்ணனைகள் ம்ஹீம் என்னமோ போங்க!//


?????

தேறாதா ஒன்னும்?

said...

வாங்க கயலு.

ஒரு வகுப்புன்னா அங்கேயும் தேறாத கடைசிச்சேர் (எத்தனை நாளைக்குத்தான் பெஞ்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்க) ஒன்னு இருக்காதா?

அதைப் பிடிக்கவும் போட்டியா.....?

ஊஹூம். நல்லாயில்லே ஆமாம்:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நாங்கமட்டும் மாறலையா? அது ஆச்சே 26 வருசத்துக்கும் மேலே.

ஆமாம். இப்ப சுடிதார்தானே நேஷனல் ட்ரெஸ்?

புடவை கட்டறமோ இல்லையோ அதுக்குன்னு உள்ள மேட்சிங் ப்லவுஸ் கரெக்ட்டாப் பொருந்தணும். இது ஒரு எழுதப்படாத ரூல்.

புத்தம்புதுசா ஒருமுறைகூடப் போடாத ஜாக்கெட் எப்படித்தான் சின்னதாகுதோ? :-))))

said...

வாங்க கொத்ஸ்.

ஒரு ஓரமா, கைப்புள்ளெய ..(அட உங்க கைக்குழந்தையைச் சொல்றேம்ப்பா) மடியில் போட்டுக்கிட்டு உக்காருங்க. வகுப்பையும் குழந்தையையும் சைடு பை சைடாக் கவனிச்சுக்க வசதியா இருக்கும்.

said...

வாங்க ரிஷான்.

தங்கத்தட்டு நம்மதா? அட! தெரியாமப் போச்சேப்பா(-:

said...

//நாங்கமட்டும் மாறலையா? அது ஆச்சே 26 வருசத்துக்கும் மேலே.//

நான் சொல்ல வந்தது, சொந்த ஊர் செல்லும் போதும்.

//ஆமாம். இப்ப சுடிதார்தானே நேஷனல் ட்ரெஸ்?//

ஆமாம். அப்படித்தான் ஆகி விட்டது.

Anonymous said...

\\அதுக்காக வெறும் ப்ளவுஸ் மட்டுமே எடுப்பேன்னு நினைச்சு, இனிய கனவோடு வரும் கோபாலை இந்த நிமிசம் கணக்குலே எடுக்கலை.
\\ 34 வருசமாகியும் இன்னுமா அப்படி நினைச்சுக்கிட்டு இருக்காரு

said...

//அந்தம்மா கொண்டு போறது என்னுதா ? இல்லே.......... அந்த மாட்டுப் பயலோடதா?//

எதுவாக இருந்தால் என்ன அதிலிருந்து கிடைக்கும் திருநீறு தூய்மையாக வாசனையாக வெண்மையாகத்தானே இருக்கும்.
:)

said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

said...

வணக்கம் டீச்சர்!

நலமா?

படங்கள் சூப்பர்.தலைப்பிற்கு மிகப் பொருத்தம்.

/இதுதான் பிட்டுக்குத் தந்தத் தங்கம்./

ம்ம்ம்...பிட்டுக்கு மண் சுமந்த கதை தெரியும்.இது புதுசா?:))))

வர்ணனைகளும் அருமை.

said...

எந்த படம் போட்டிக்குன்னு சொல்லவே இல்லையே மேடம்.

said...

//?????

தேறாதா ஒன்னும்?//

டாப்புன்னு சொல்ல வந்தேன் :-)))

said...

//இருத்தலின் அடையாளம்//
Liked the expression.

said...

கடமை டீச்சர் ;)

said...

ராமலக்ஷ்மி,

நானொன்னு கவனிச்சேன். ஊருக்கு வந்துட்டோமுன்னா உடம்பு கொஞ்சம் 'வீங்கி'ப்போகுதுப்பா.

சாப்பாட்டால் அல்ல:-)))

ரொம்ப ஹ்யூமிட் ஆக இருப்பதாலான்னு தெரியலை. வழக்கமாப் போடும் மோதிரம்கூடக் கழட்டமுடியாம அப்படியே விரல்களில் அமுங்கிக்கிடக்கும்.

தலை முடியோ கேக்கவே வேணாம். பஞ்சப்பரதேசி மாதிரி 'பம்'ன்னு அடங்காது. ஸ்டேடிக் வேற.

இந்த அழகுலே எங்கே ப்ளவுஸ் போட்டு...... புடவை கட்டி.......

ஹூம்...... காட்டன் சுடிதாரையே இன்னும் ஒரு யானை நுழையும் அளவுக்கு லூஸாத் தைக்கச்சொல்வேன். அப்ப நம்ம டெய்லர் சார் முகத்தைப் பார்க்கணுமே...:-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

நெனப்புதான் (அவர்) பொழப்பைக் கெடுக்குதுன்னு இன்னும் புரிஞ்சுக்காத ஒரு அப்பாவி:-))))

said...

வாங்க கோவியாரே.

சுட்டெரிச்ச சாம்பலெல்லாம் திருநீறுன்னு எடுத்துக்கிட்டீங்களா?

எங்க 'கப்பு'வின் அஸ்தி கூடத்தான் வெள்ளையா திருநீறுபோலவே இருக்கு.

அதுக்காக.......

( என்னோட சவப்பெட்டிக்குள்ளே வைக்கணுமுன்னு அதை வச்சுருக்கேன்)


சித்தனாதன் கம்பெனியில் விவரம் விசாரிக்கணும்.

said...

வாங்க முரளிகண்ணன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.
அதான் பிட்டுக்குத் தங்கமுன்னு சொல்லிட்டேனே:-)

நாம குறிப்பிட்டுச் சொல்லலைன்னா முதல் படம் போட்டிக்கு எடுத்துக்குவாங்க என்ற அறிவிப்பு வெளியிட்டுருக்காங்க ஆரம்பகாலத்துலேயே.

said...

வாங்க புதுவண்டு.

முந்தியே பிட்டுக்கு வளையம் சுமந்துட்டேன். அதனால் இப்ப தங்கமே தங்கமுன்னு கொடுத்தாச்சு:-))))

said...

கிரி, நீங்க சொன்னாச் 'சரி':-)

said...

வாங்க மணி.

எனக்குத்தான் அது ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

எப்படிச் சொற்கள் வந்து விழுந்துச்சுன்னேத் தெரியலை!

எல்லாம் அதுபாட்டுக்கு வர்றதுதாம்போல:-)

said...

வாங்க கோபி.

இப்படி 'கடமை' தவறாமல் கண்ணியத்தோடு பின்னூட்டியதுக்கு நானும் கட்டுப்பாட்டோடு இன்னொரு தொழிலாளி படத்தைக் கடைசியாச் சேர்த்துருக்கேன், உங்களுக்காகவே!

said...

iruththalin adaiyaalame iththanai azhakaa.

sorry to comment in English ,Thulasi.
innikku E KALAPPAI SATHIYAAM:)

PADAM nALLAA IRUKKU. ADHAI ArIMUKAM SEYYArATHU ADHAI VIDA NALLAA IRUKKU.
MANASUKKU MAKIZHCCI THULASIYIN PATHIVU.

said...

//தங்கம் விற்கும் விலையில் தங்கத்தட்டுக்குப் பாலீஷ்//

நாங்கள்ல்லாம் பித்தளை தட்டுக்குத்தான் தங்க பாலீஷ் போட்டுக்கணும்.

பனி படர்ந்த புகைப்படங்கள் அருமை. நீங்க எடுத்ததா? நல்லா இருக்கு.

அன்புடன்,
விஜய்

said...

படங்களும் அதற்கு ஏற்ற கருத்துக்களும் மிக அருமை, துளசி!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

said...

வாங்க வல்லி.
ரொம்ப மகிழ்ச்சிப்பா.

said...

வாங்க விஜய்.

நான் பித்தளைத் தட்டுக்கெல்லாம் தங்கம் பாலீஷ் போட்டுக்கமாட்டேன்:-))))

பிறத்தியாரின் தங்கத்தட்டை வேடிக்கை பார்த்ததோடு சரி.

இப்படியெல்லாமா தங்கம் வாங்குறாங்கன்ற ஆச்சரியத்தோடு க்ளிக்குனது அது.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க இல்லத்தரசி.

வெற்றி என்னும் (எட்டாக்)கனி ஒரே புளிப்பா இருக்கு:-))))

said...

கனிந்த பழம் கிட்டும், நம்பிக்கையோடு இருங்கள்:)

said...

//ஹூம்...... காட்டன் சுடிதாரையே இன்னும் ஒரு யானை நுழையும் அளவுக்கு லூஸாத் தைக்கச்சொல்வேன். அப்ப நம்ம டெய்லர் சார் முகத்தைப் பார்க்கணுமே...:-)))))//

கமெண்டிலே கூட யானை உங்களை விட மாட்டேன்கிறதே மேடம். (என் கதையில் நாய் படத்தைப் பார்த்து ஜூட் விட்ட உங்களுக்கு நான் அளித்திருந்த பதிலைப் படித்தீர்களா தெரியவில்லை. 'சிவாஜி' கவுஜை ஆகி விட்டதால் சப்மிட் பண்ணல. சரி நம்ம தொளிலாளிகளையும் காட்டுவோமே என பிட்டுக்கு கூப்பிடலாம்னு பார்த்தால், என் ஜானியைப் பார்த்தே பயந்து ஓடின நீங்க, கூட்டமா தேனீயப் பாத்தா என்ன ஆவிங்களோன்னு யோசிச்சுட்டே இருக்கேன்:() !