Saturday, June 07, 2008

ஸீரோ டிகிரி.

வெதர் ரிப்போர்ட்.


இதோ அதோன்னு அதிகாரப்பூர்வமான குளிர் காலம் ஆரம்பமான ஏழாவது நாள் , 'நாங்கெல்லாம் நல்லா இருக்கமா?'ன்னு பார்த்துட்டுப்போக வந்த பனிமழை.

நம்ம வீட்டுக்கு எதிர்வரிசையில்

வெளியே 0 டிகிரி:-))))

வீட்டுக்குள்ளே 23.

நடுப்பகல் முதல் நாலைஞ்சு ரோடுகளை மூடியாச்சாம். போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கலாம் நாளைக் காலையில்.


08/06/08

பொழுது விடிந்தபின்:

நம்ம வீட்டு Bird Bath, எப்படி உறைஞ்சுகிடக்குன்னு பாருங்க. இந்தப் பறவைகள் மட்டும் குளிரோ வெயிலோன்னு கணக்குப் பார்க்காம ரொம்பவே சுத்தபத்தமாத்தான் இருக்குதுங்க:-)))பின்புறத்தோட்டம்கூரைமேல் தூங்கும் பனி:-)

இத்தனை அமர்க்களத்திலும் கன்ஸர்வேட்டரியில் வச்சுக் காப்பாத்தும் செடியில் (செம்பருத்திச் செடி) பூவொன்னு பூத்துருக்கு:-))))தலைப்புக்கு நன்றி: சாருவுக்கு.

39 comments:

said...

20 டிகிரி க்கே விறைத்து போய்டுவேன் 0 டிகிரி னா சங்கு தாங்கோ :-) படங்கள் சும்மா ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்கு

said...

வாங்க கிரி.

எல்லாம் குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுனதுதான்.

வீட்டு வாசலில் நின்னு எடுத்தது.
நாளை வெளியே போகும்போது படங்கள் எடுத்துவந்து பதிவில் சேர்த்துறணும்.

said...

டீச்சர்,

தலைப்பைப் பார்த்ததும் அரண்டு போயிட்டேன்.. ஒருவேளை ஆங்கிலப் பதிப்பின் விமர்சனமாக இருக்குமோன்னு பேதியாயிருச்சு..

நல்லவேளை.. தப்பிச்சேன்..

வரவர நீங்களும் ரொம்பத்தான் பயலுகளோட போட்டி போடுறீங்க..

போட்டோக்களை பார்த்தேன்.

என்னதான் இருந்தாலும் இந்தியா இந்தியாதான் டீச்சர்.. அதுலேயும் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் டீச்சர்..

வெயில் அடிச்சாலும் அதிகப்பட்சம் 44.. குறைந்தபட்சம் 36..

இது ஒண்ணுக்கே கொடுத்து வைச்சிருக்கணும் நாங்க..

வெளில போக, வர்றதுக்கு என்ன பண்றீங்க.. நாலு கம்பளிப் போர்வையைப் போத்தினாகூட உடம்பு ஆடுமே..?

said...

ஆஹா!! ஆரம்பிச்சிடுச்சா!! இந்த வாரம் பூராவும் இங்க 90 டிகிரியாம். ஐயாம் மிஸ்ஸிங் விண்டர் அல்ரெடி!! :)))

said...

சாருநிவேதிதா புக்குக்கு விமர்சனம்னு நெனைச்சி ஓடோடி வந்தேன் :-(

said...

Happy Freezinggggggggg!

said...

\\இலவசக்கொத்தனார் said...
ஆஹா!! ஆரம்பிச்சிடுச்சா!! இந்த வாரம் பூராவும் இங்க 90 டிகிரியாம். ஐயாம் மிஸ்ஸிங் விண்டர் அல்ரெடி!! :)))//

எங்க இத்தனை டிகிரி.. செல்சியஸை சொல்றீங்களா..?

துளசி 2டிகிரி பார்த்தேன் ஒருமுறை தில்லியில்.. கொடுமையா இருந்தது..
பத்திரமா இருங்க

said...

"நம்ம வீடா??”
அப்பாடி கில்கிரிஸ்ட் வீடு இருப்பது இப்பத்தான் எனக்கு தெரிந்தது. :-))
இந்த பதிவு டெல்பினுக்கு சமர்பனம் பண்ணிடுங்க... பாவம் குளிர்சாதம் சரியாக வேலை செய்யலையாம்.

said...

துளசி மேடம்! இன்னும் எவ்வளவு மாதங்கள் குளிர் காலம் அங்கே?? வெப்பநிலை எந்த அளவுக்கு அதிகபட்சம் குறையும்??

said...

இந்தத் தலைப்பை எங்கேயோ பார்த்திருக்கேனே டீச்சர்?

இந்தப் பனிக்காலம் முடியுற வரைக்கும் பேசாம ஆபிஸ் வேலைக்கு லீவ் போட்டுடுங்க டீச்சர்.எங்களுக்கு நிறையப் பதிவுகளும் அழகான போட்டோக்களும் கிடைக்கும். :)

said...

தாங்காது சாமி....;(

படங்கள் எல்லாம் சூப்பர் ;)

said...

உங்கள மாதிரி குடுத்துவைக்கலியே எங்களுக்கு, எங்களுக்கு காத்து வீடே சும்மா அதிருச்சுல்லா. காத்த எப்படி போட்டோ புடிக்கறதாம். 130 கிமீ மணி வேகத்துல வெள்ளிக்கிழமை ஆரம்பிச்சுது 24 மணி நேரம். Southerlies ல அந்தக்காத்து, ஹீட்பம்ப்பாண்டவர் காப்பாத்தினார்.

said...

@ கோபி, இங்க இருந்துகிட்டு அதைப் பார்த்தால் சந்தோஷமாத்தானே இருக்கு;)

துளசி நம்ம படங்களேல்லாம் தொகுத்து ஒரு புத்தகம் போடலாமா:)

அருமை அருமை. ரொம்ப நல்லா இருக்கு. அந்தச் செம்பருத்திச் செல்லத்துக்கு ஒரு முத்தா கொடுத்துடுங்கோ.

said...

ஆகா ஆகா - பனிக்காலம் - ஃபுல் ஓவர் கோட் போட்டு வெளொயே போய் பனியிலே விளையாடி மகிழ் முடியாதா ? நன்று

புகைப்படங்கள் அருமை

said...

*பனி விழும் மலர்வனம் முதல் படம்,(கடைசியில் பூத்ததென்னவோ ஒரு மலர்தான் என்றாலும்).
*பனித்துளியால் ஓர் புல்வெளி(பின் புறத் தோட்டம்),
*கழுவி விட்ட கூரை மேல் தேங்கி நிற்கும் சோப்பு நுரை.
0 டிகிரி! இங்கே பெங்களூரில் டிசம்பர் குளிரே தாங்க முடியறதில்லை:(!

said...

சே! என்ன மிஸ்டேக்
கிரிஸ்ட்சர்ச் என்பதற்கு பதிலாக கிரிக்கெட் பிளேயர் பேரை போட்டுவிட்டேன்.

said...

டீச்சர்,உங்க பேரைச் சொல்லி இன்னிக்கு வாத்தியாராகிட்டேங்க.. :)
http://vavaasangam.blogspot.com/

said...

// அதிகார...மான குளிர் காலம் ஆரம்பமான ஏழாவது நாள் //


ஸ்ட்ராங்கா ஒரு மிளகு பூண்டு வெத்தக்குழம்பு,( நன்னா கொதிக்க‌
விட்டு பேஸ்ட் மாதிரி ஆக்கணும்) தொட்டுக்க‌
பருப்புத்துவையல், சுட்ட அரிசி அப்பளம் சாப்பிடுங்க.
குளிர்காலத்துக்கு இதமா இருக்கும்.

மீனாட்சி பாட்டி ( 66 )
தஞ்சை.

http://vazhvuneri.blogspot.com

said...

/
எம்.ரிஷான் ஷெரீப் said...

இந்தத் தலைப்பை எங்கேயோ பார்த்திருக்கேனே டீச்சர்?
/
@ரிஷான்
மங்களூர்ல ஒரு பார் & ரெஸ்டாரெண்டுக்கு பேர் ஜீரோ டிகிரி மங்களூர் வந்தப்ப பாத்திருப்பீங்க!!

said...

/
delphine said...

Happy Freezinggggggggg!
/

டாக்டரம்மா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டே


படம்லாம் ஜூப்பரு!!

said...

நானும் சாரு நிவேதிதாவையே நினைத்தேன்..

துளசி,நீங்கள் சென்ற பதிவின் ‘தலைப்பு கயமைத்தனத்தை' தொடர்ரீங்க..

நாங்கள்ளாம் பாவமில்லையா ?

:)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

அதெல்லாம் வெளியில் போகும்போது 'லைஃப் சேவர்' போட்டுக்குவோம்.

தெர்மல் அண்டர் கார்மெண்ட்ஸ்க்கு(லாங் ஜான்ஸ், தெர்மல் டாப்) நான் வச்ச பேர்தான் இது.

எல்லா கார்களிலும் ஹீட்டர்ஸ் இருக்கு.

நீங்க சொன்ன குறைஞ்ச பட்ச 36 இங்கே வந்தால் செத்தோம். 30க்கே உடம்பு எரிய ஆரம்பிச்சுரும். அதுவும் வருசத்தில் ஒன்னு ரெண்டு நாள் வந்தா உண்டு.

said...

வாங்க கொத்ஸ்.

90ன்னா தீமிதிதான் போல:-)))) வேண்டுதல்களை நிறைவேத்திக்க நல்ல சான்ஸ்.

said...

வாங்க லக்கி.

அந்தப் புத்தகம் அவர்கிட்டே இருந்தே நேரடியா வாங்கிட்டு வந்தேன். இப்ப இன்னொரு தோழிக்கு அனுப்பியாச்சு. இனி அவுங்க பாடு.

ஓடோடிவந்த உம்மை ஏ'மாற்றி'விட்டேனா? (-:

said...

வாங்க டெல்ஃபீன்.


இந்த வருசம் ஃப்ளூ ஊசி போட்டுக்கிட்டேன். அதனால் ஃப்ரீஸிங் ஓக்கே:-)))))

said...

வாங்க கயலு.

அதெல்லாம் வீட்டுக்குள்ளே 3 ஹீட் பம்ப் இருக்கு. 23 லே செட் செஞ்சு வச்சுருக்கு:-)

செடிகள்தான் பாவமா இருக்கு.

said...

வாங்க குமார்.

எல்லாரையும் இந்த கிரிக்கெட்டு இப்படி ஆ(ட்டி)க்கிவச்சுருக்கு.

said...

வாங்க பிரேம்ஜி.

அரசு சொல்லுது 3 மாசமாம்.ஆனா நமக்கு?

முன் பாதி பின் பாதின்னு ஓவ்வொரு மாசம் சேர்த்துக்கிட்டா அஞ்சு மாசம்:-))))

பகலில் 7 இல்லை 8 வரை இருக்கும். இரவில் சிலசமயம் -4 வரை போகும்.

said...

வாங்க ரிஷான்.

வீட்டாஃபீஸ்லே ரிட்டயர்மெண்ட் ஏதுப்பா? (-:

தலைப்பைக் களவாண்டதுக்குத்தான் சாருவுக்கு நன்றின்னு போட்டுருக்கேன்:-)

said...

வாங்க கோபி.

அங்கே இருப்பதுக்கு இது நேர் எதிர்:-))))

இக்கரைக்கு அக்கரை குளிர்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

உங்கூர்லே எப்பவும் காத்தோ காத்துத்தானே? ஏமாந்தா ஆளைத் தூக்கிருமே:-)))

அதுக்குத்தான் 'கொஞ்சம் நல்லாச் சாப்புட்டுக் கொஞ்சம் சதை போட்டுக்குங்கோ 'ன்னு சொல்றது.

said...

வாங்க வல்லி.

ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகிருச்சு போல..... இன்னும் ரெண்டு மொட்டு விட்டிருக்கு:-)))))

said...

வாங்க சீனா.

வெள்ளிப்பனிமலையில் விளையாடுனதெல்லாம் போதுமுன்னு இப்ப அடங்கிட்டோம்:-)))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கவிதைப்பனிமழையாப் பொழியுறீங்க!!!!!!

மறுநாள் வீட்டுக்குள்ளே திடீர்திடீர்ன்னு பெரிய சத்தம். மேற்கூரை பிச்சுக்கிட்டுப் போகுதோன்னு நினைச்சேன். கோபாலும், காத்து அடிக்குதுன்னார். வெளியே மரங்களில் ஒரு இலையும் அசையலை.

அப்புறம்தான் தெரிஞ்சது பனி அடைகள் உருக ஆரம்பிச்சு ஓட்டுலே இருந்து சரிஞ்சுவரும் சப்தம்ன்னு.

காரணம் தெரியலைன்னா காரியம் பயமா இருக்கு:-))))

said...

ரிஷான்.

வவாச லே வெளுத்துக்கட்டுறீங்க:-)))))

said...

வாங்க மீனாட்சி (அக்கா) பாட்டி..

ஒருநாள் ரெண்டு நாளுன்னா பரவாயில்லை. அரைச்சுறலாம். அஞ்சு மாசம் இதே மெனு..... ஊஹூம்...... எனக்கு நம்பிக்கை இல்லை.... கோபால் தாங்கிக்குவார்ன்னு:-))))

said...

வாங்க மங்களூர் சிவா.

பாரைப் பார்த்துட்டாரா?

said...

வாங்க அறிவன்.

'தொடரும் கயமைகள்'ன்னு ஒரு பதிவு போட்டுறவா?:-))))

தொலைக்காட்சியில் இப்போது 0 டிகிரின்னு வானிலை அறிக்கை வருதேப்பா.....

said...

அன்பு துளசி, பின்னூட்டத்திலும் அறிவிக்க வேணும்னு கட்டளை ஆகியீருக்கிறது. ஜீவா சார் ஆரம்பித்த விளையாட்டை கொத்ஸ் என்னைத் தொடரச் சொல்லி இருக்கார். அஸ் யூஷுவல் நான் உங்களைக் கை காண்பித்துவிட்டேன். உங்களால முடியாதா என்ன:)