இன்னும் சுருக்கமாச் சொல்லணுமுன்னா என் தொணதொணப்பையும் பிடுங்கலையும் சகிச்சுக்கிட்ட ஒரு ஜீவனுடன் 12419 நாட்கள் கடந்துபோயிருக்கு.
காதல் எனப்படுவது யாதெனின்....?
உயர்வு தாழ்வு எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்காமல் ஒருவருக்கொருவர் அனுசரணையா இருக்கும் ஒரு அற்புதமான நட்பு.
இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
காதல் எனப்படுவது யாதெனின்....?
உயர்வு தாழ்வு எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்காமல் ஒருவருக்கொருவர் அனுசரணையா இருக்கும் ஒரு அற்புதமான நட்பு.
இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
63 comments:
வாழ்த்துகள் ரீச்சர்!!
அம்மாடி 34லாஆஆஆஆ!! :))
அன்பு வாழ்த்துகள் துளசி உங்கள் இருவருக்கும்
நீவீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். அப்ப இன்னைக்கு சிறப்பு சமையலா :-) நடத்துங்கோ
இந்த வயதிலும் (யோவ் அப்படி என்னையா வயசாச்சுன்னு எல்லாம் எதிர் கேள்வி கேட்க கூடாது, சொன்ன அனுபவிக்கனும் ஆராய கூடாது) குசும்பாக எழுதும் துளசி மேடத்துக்கு என் மனமார்ந்த சிறப்பு வாழ்த்துக்கள்.
உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
ஆஹா! 34 வருடம் ஓடிவிட்டதா?
இன்று போல் என்றும் சந்தோஷமாக இருங்க.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் டீச்சர்.
இலவசத்தோட 34ஆஆஆஆஆ .... இங்கயும் எக்கோ அடிக்குது :)))
ஆகா....வாழ்த்துக்கள் டீச்சர் ;))
மனமார்ந்த வாழ்த்துக்கள்! அதுசரி, கோபால் சார்கிட்ட இன்னிக்கு எவ்ளோ கறந்தீங்க:-)))
//உயர்வு தாழ்வு எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்காமல் ஒருவருக்கொருவர் அனுசரணையா இருக்கும் ஒரு அற்புதமான நட்பு.//
அருமை!! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் டீச்சர்!! :)
போங்க டீச்சர் நாங்கூட உங்களுக்கு 34 வயசு ஆயிடுச்சோன்னு நினைச்சேன். :):)
350 வருஷம் இது தொடர வாழ்த்துக்கள். கண்ணிப்பாக கோபால் சாரிடமும் சொல்லவும்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களும், வணக்கங்களும்!
:)
இன்னிக்கு கண்ணு முழிச்சதும் நினைச்சேன். சென்னையா இருந்தா உடனே தொலைபேசி இருக்கலாம்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அன்பு கோபாலுக்கும் அருமைதுளசிக்கும் இனிய மண நன்னாள் வாழ்த்துகள். என்றும் இந்த அன்பும் ஆரோக்கியமும் இன்பமும் நிலைச்சு இருக்கணும்.
இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்!
முப்பத்திநான்கு வருஷமாக ரங்கமணிகளின் முன்னேற்றத்துக்காக சத்தமின்றி பாடுபட்டு வரும் எங்கள் குலத் தெய்வம் கோபால் அவர்களுக்கும்..
அதே முப்பத்திநான்கு வருஷமாக நல்லதோர் தங்கமணியாய் (mutually exclusive:-)) அவருடன் நல்லறமாம் இல்லறத்தை செவ்வனே நடாத்தி வரும் துளசி அக்காவுக்கும்..
அமீரக ஷார்ஜா வட்டம் 94ன் சார்பாக இந்தப்பின்னூட்ட மாலையை பொன்மாலையாய் அணிவிக்கிறோம்!
வாழ்த்த வயதில்லை ! வணங்குகின்றேன் !!
அன்புடன்
பாஸ்கர்
அப்படியா ! இருவரும் நூறாண்டு காலம் வாழ்வீர்.
வாழ்க வளமுடன்.
உங்களுக்கு எங்கள் ஆசிகள்.
உங்கள் கணக்குப்பிரகாரம் நான் போட்டுப்பார்த்தேன்.
என் தொணதொணப்பை பாவம் இந்த மனுஷன்
14366 நாட்களாக பொறுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு விஷயம்.
ச்மையலைக்கூட பொறுத்துண்டு போயிடலாம்.
தொணதொணப்பு ஒரு டிஃபரன்ட் டைப் ஆஃப் ஹாராஸ்மென்ட்.
ஆனால் அதில் உள்ள சுகம் தனி.
ஒரு நாள் இல்லைன்னா ஏங்கிப்போயிடும்.
சரிதானே ?
மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
//அதுசரி, கோபால் சார்கிட்ட இன்னிக்கு எவ்ளோ கறந்தீங்க:-))) // தங்ஸ், பாயின்டுல பிடிச்சிட்டீங்க. துளசி, இந்த நேரத்துல, நான் ஒன்று உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன். என் 'காதல் கதை' பதிவுல, வைர ஒட்டியாணம் பத்தி பேசினோம். இது சரியான நேரம் - தங்கமணி முன்னேற்ற சங்கம் சார்பில, தங்ஸ் முன்மொழிய கெ.பி. வழி... முழியறேன்.
34 ஆண்டுகள் - நல்வாழ்த்துகள் - இருவரும் இணைந்து இன்னும் பல்லாண்டு நலமுடன் வாழ இறையடி தொழுது வாழ்த்துகிறோம் - இருவருமாக
நாங்கள் சீனியர்ஸ் - 1973 திருமணம்
வாழ்த்துக்கள் வணக்கங்கள்.
//நாங்கள் சீனியர்ஸ் - 1973 திருமணம்//
nanga athavida seniors 1968 .
athanale naangathaan first mangala
atchathai poda varom.
thulasi amma, oru payasam vechu
engalukkellam tharakkoodathaa?
All the Best.
subbu rathinam.
thanjai.
thulasi kalyanam vaibhogame
http://www.musicindiaonline.com/p/x/kUm2lQOzNt.As1NMvHdW/?done_detect
Listen please.
subbu
thanjavur.
//ஒருவருக்கொருவர் அனுசரணையா இருக்கும் ஓர் அற்புதமான நட்பு//
வாழ்த்துக்கள்!!!துள்சீஸ்!!
வெள்ளி, தங்கம், பவளம், வைரம் என் எல்லா விழாக்களும் கொண்டாட
இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!
மனமார்ந்த வாழ்த்துகள் !!
வாழ்த்துக்கள் டீச்சர்!
இந்த நாள் உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ!னு சொல்லி முப்பத்தி நாலு வருசம் ஆச்சா?
கும்பிடு போட்டுகறேன் டீச்சர். :)
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் டீச்சர்.. :)
அவருக்கும் சொல்லிடுங்க என் வாழ்த்தை ! :)
மனமார்ந்த வாழ்த்துக்கள் டீச்சர்..
அன்புள்ளங்களுக்கு நன்றி.
ஒவ்வொருத்தருக்கும் தனிப் பதிலைச் சொல்ல முடியாமல் 'இப்ப' இருக்கேன்.
அப்புறமா வரேனே ப்ளீஸ்....
பத்து வருசத்துக்கே நாங்க .. இத்தனை வருசம் ஓட்டியாச்சு .. குறைகாலம் எப்படி ஓட்டறதுன்னு இருக்கும் போது வாழ்த்துகள் துளசி
\\அமீரக ஷார்ஜா வட்டம் 94ன் சார்பாக இந்தப்பின்னூட்ட மாலையை பொன்மாலையாய் அணிவிக்கிறோம்\\
பின்னூட்ட மாலைன்னு சொல்லி ஒரு பூ தானே வச்சிருக்கீங்க. மாலைன்னா கொரைஞ்சது நூறு பூ இருக்க வேணாம்?.இல்லைன்னா எங்க எல்லார் பின்னுட்டத்தையும் சேர்த்து சொல்லுங்க
மனம் கனிந்த வழ்த்துகள் டீச்சர்!.கோபால் ஐயாவிடமும் சொல்லவும்.:-).
மனமார்ந்த வாழ்த்துக்கள் டீச்சர்!!!!!!
வாழ்த்துகள் அக்கா.
அன்பான வாழ்த்துக்கள் :)
/அதே முப்பத்திநான்கு வருஷமாக நல்லதோர் தங்கமணியாய் (mutually exclusive:-)) அவருடன் நல்லறமாம் இல்லறத்தை செவ்வனே நடாத்தி வரும் துளசி அக்காவுக்கும்../
யோவ் அது Mutually exclusive இல்லை. oxymoron!! இதை எல்லாம் சரியாச் சொல்லலைன்னா நீர் வெறும் moron!
பின்னூட்டக் கயமை வேணாமுன்னு ஒவ்வொரு அஞ்சுபேருக்குமா ஒரு ப.பி.
வாங்க கொத்ஸ்.
இதுக்கே 'ஆஆஆஆஆஆ'ன்னா அடுத்தவருசத்துக்கு 'இ'யா?
வாங்க மாதங்கி.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கப்புத்தக வெளியீட்டுக்கு எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.
வாங்க கிரி.
இன்னிக்குச் சிறப்புச் சமையல் எல்லாம் இல்லைங்க.
போனாப்போட்டுமுன்னு Lab ஐப் பூட்டிவச்சுட்டேன்.
எவ்வளவு கொடுத்தாலும் அசராம வாங்குவாங்கன்னாலும் நமக்கும் 'மனசாட்சி'ன்னு ஒன்னு இருக்கேப்பா:-)
வாங்க பிரேம்ஜி
நன்றிங்க.
//வாங்க குமார்.ஆஹா! 34 வருடம் ஓடிவிட்டதா?//
அது எங்கே ஓடுச்சு? ஒவ்வொருநாளாக் கழுத்தைப்பிடிச்சுத் தள்ளுனதைத்தான் சூசகமாச் சொல்லி இருக்கேனாக்கும்:-)))))))))))))
வாங்க சதங்கா.
ரொம்ப நன்றிங்க.
வாங்க கோபி.
நன்றிப்பா.
வாங்க தங்ஸ்.
நம்மகிட்டே இருந்து கறக்கப்பார்ப்பவரிடம் இருந்து என்னத்தைக் கறப்பது?
பேங்க் வரைக்கும் போலாம் வர்றயாம்மான்னதும் ஒளிய இடந்தேடி ஓடணும்:-)))
வாங்க கெக்கேபிக்குணி
நன்றிங்க.
வாங்க ச்சின்னப் பையன்.
நன்றிப்பா.
வாங்க கப்பி
நன்றிங்க.
வாங்க சின்ன அம்மிணி.
34 வயசு ஆயிருச்சே. அதுவும் சமீபத்தில்தான்:-)))
வாங்க அரவிந்தன்.
வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
வாங்க பாலா.
'விடுபட்டுப்போகாம'வாழ்த்துகளை எனக்கும் வணக்கங்களைப் பெரியவருக்கும் சொன்னதுக்கு நன்றிங்க.
புதுவேலை எப்படி இருக்கு?
வாங்க வல்லி.
ரொம்ப நன்றிப்பா இனிமையா வாழ்த்தியதுக்கு. நானும் உங்களை நினைச்சுக்கிட்டேன்.
வாங்க ராமலக்ஷ்மி.
ரொம்ப நன்றிங்க.
வாங்க பினாத்தலாரே.
அதெப்படி ரங்குவுக்கும் தங்குவுக்கும் ஒரே மாதிரி வருசக்கணக்கா?
+2 ன்னு ரெட்டைச் சுமை இல்லையோ தங்ஸ்களுக்கு!
பொன்மாலைக்கு நன்றிப்பா.
வாங்க பாஸ்கர்.
ரொம்ப நன்றிங்க.
வாங்க மீனாட்சி பாட்டி.
எல்லாம் உங்க ஆசீர்வாதம். ஆமாம் நாற்பதுதான் ஆச்சா? அப்ப ஏன் பாட்டின்னு சொல்றேன்.
மீனாட்சியக்கான்னு சொல்லிக்கவா?
நீங்க சொல்றது ரொம்பச் சரி. பிடுங்கல் இல்லேன்னாலும் போர் அடிச்சுரும்:-)
கெக்கேபிக்குணி.
வைர ஒட்டியானம் சாங்ஷன் ஆயிருச்சு. ஆனா ஒரு கண்டிஷன் உண்டு. முதன்முதலில் இருந்த முப்பத்தியேழு கிலோ தாஜ்மஹாலா ஆனதும் வாங்கிருவாராம். அதுக்காக.... ஹூம்..... நடக்கிற காரியமா?
அந்த அளவுக்கே செஞ்சுருங்கன்னு சொல்லிட்டேன். ஒரு நாலு மீட்டர் பெல்ட் வாங்கி அதுலே ஜாயின்(ட்) பண்ணிக்க மாட்டேனா என்ன? :-))))
வாங்க சீனா.
வாழ்த்துகளுக்கு நன்றி சீனியர்ஸ்.
வாங்க முரளிகண்ணன்.
ரொம்ப நன்றிங்க.
வாங்க சுப்பு ரத்தினம்.
உங்க அட்சதையும் ஆசிகளும் வந்து சேர்ந்தன.
பாயஸம் வச்சா நம்ம வீட்டுலே அம்மா குடி, ஐயா குடின்னு ஆகிருமுன்னு வழக்கமா ஒரு கேஸரி (அம்பி கவனிக்க) செஞ்சுருவேன். இப்ப உடம்பு இருக்கும் நிலையில் மனக்கேஸரி மட்டும்தான். சாயங்காலம் கோயிலுக்குப் போனா..... பரிதாபக்கேஸ்களைப் பார்த்துட்டு பகவானுக்கே மனம் இளகிப்போயிருக்கு. இந்தா.. சாப்புட்டுக்கோன்னு ஒரு த்வாரகா பர்ஃபியும், ஒரு ஆப்பிள் pie யும் கொடுத்தார்.
உங்க 'சுட்டிக்கு' நன்றி. ஆனா அது வேலை செய்யலை(-:
வாங்க நானானி.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வெள்ளி முடிச்சு, 'தங்கத்துக்கு' வெயிட்டீஸ்:-))))
16 தாங்குமான்னு தெரியலை:-)
வாங்க மணியன்.
நன்றிங்க. நானும் உங்க சகோதரியை நினைச்சுக்கிட்டேன்.
அவுங்களுக்கும் என் சார்பில் வாழ்த்து(க்)கள்.
வாங்க நிஜமா நல்லவன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க அம்பி(யப்பா)
இந்த நாளை நீங்களும் 'குறிச்சு வச்சுக்க வேண்டியதா' ஆயிருக்கே!!!!
கும்பிட்ட கையில் குழந்தையை வச்சாச்சு:-))))
வாழ்த்துகள்.
வாங்க ரிஷான்.
நன்றிப்பா.
(அவர் பின்னூட்ட ரசிகர். படிச்சுப்பார்)
வாங்க உண்மைத் தமிழன்.
ரொம்ப நன்றிங்க.
வாங்க கயலு.
பத்து வருசம் ஆயிருச்சுல்லே...... எல்லாம் பழகிப்போயிரும்.
திரும்பிப் பார்க்கும்போது..... 'எப்படி நமக்கு இப்படி ஓர் சகிப்புத்தன்மை' ன்னு நமக்கே.......!!!!!!!
வாங்க டெல்ஃபீன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
மியாவ்:-)
முரளிகண்ணன்,
பினாத்தல் ஒரு பூ வச்சாருன்னா. அது 100 பூக்களுக்குச் சமமாம்:-))))
வாங்க புதுவண்டு.
அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க வெயிலான்
ரொம்ப நன்றிப்பா.
வாங்க குமரன்.
ரொம்ப நன்றிப்பா.
வாங்க தூயா.
அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.
கொத்ஸ்,
ஓவர் டு பினாத்தலார்:-)
வாழ்த்துக்கள் டீச்சர்... :))
(ரொம்ப லேட்டா வாழ்த்து சொல்றேன்னு நெனைக்குறேன். )
வாங்க சென்ஷி.
என்ன லேட்டு? அதான் நேத்தே 'தீட்டு'யாச்சே:-))))
All the very best teacher:)
யெக்கோவ்,
//+2 ன்னு ரெட்டைச் சுமை இல்லையோ தங்ஸ்களுக்கு!//
கேப் கிடைச்சா செண்டிமெண்ட் பேசிடுவீங்களே! இப்படி செண்டி பேசிப் பேசித்தான்.....
கொத்தண்ணா,
mutually exclusive எப்படின்னா தப்பாகும்? நல்லவிதமான - தங்கமணி - ஆக்ஸிமோரான்னுசொல்லலாம்னாலும் ME தவறுன்னு படலையே..
ஒருவேளை இதை இப்படீத்தான் சொல்லணும், மாத்தக்கூடாதுன்னு சொல்ற புது ஸ்கூல் எதுலயாச்சும் படிச்சிட்டு வந்தீரோ?
அம்மா வாழ்த்துக்கள்!
மண்ணிக்கனும் ரொம்பவே லேட்டாச்சு! ஏன் லேட்டாச்சுன்னு கேக்காதீங்க! லேட்டாச்சு சொல்ல வேண்டிருக்கும
எல்லாம் தாங்கும்!
துளசி கோபால் திருமணத்தன்று நடந்த நாட்டியக்கச்சேரி.
பழைய வீட்டில் மூன்று பைகளில் ஒன்றில்
இப்போது தான் இந்த வி.சி.டி. கிடைத்தது.
வந்து பார்க்கவும்
http://movieraghas.blogspot.com
subbu
thanjavur.
எனது தங்கையின் திருமணநாளை நினைவு கொண்டு வாழ்த்தியதற்கு நன்றிகள் ! யானைக்கு ஞாபகசக்தி அதிகமென்பார்கள், யானை பிரியரான உங்களுக்கும் தான் :))
வாழ்த்துக்கள் மேடம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இராம்ஸ்
வாங்க இளா.
நன்றிங்க.
என்ன பினாத்தலாரே.....
நாங்க சைக்கிள் கேப்லே லாரி ஓட்டறதை எங்கேயிருந்து படிச்சோமுன்னும் சொல்றது.....
வாங்க சிவமுருகன்..
லேட்டுக்குக் காரணம் தெரியாதா என்ன? அதான் மழையிலே நனைஞ்சோமே.......
அன்பெனும் மழை:-))))
வாங்க நானானி.
//எல்லாம் தாங்கும்!//
அப்டீங்கறீங்க? :-))))
வாங்க சுப்பு ரத்தினம்.
அருமையான பாடலும் நடனமும்.
ரொம்ப நன்றிங்க.
ஆமாம். பெருமாளை எப்பவும் பாதாதி கேசம் புகழணுமுன்னு சொல்வாங்களே. இங்கே.....
பரவாயில்லை. அவனுக்கு அடியும் முடியும் ஒன்னுதானே?
வாங்க மணியன்.
சில விசயங்கள் மனசுலே அப்படியே தங்கிருது. நம்ம டோண்டு சொல்வார் பாருங்க 'ஹைப்பர்லிங்க்' ன்னு:-)
வாங்க இராம்ஸ்.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வாழ்த்துக்கள் டீச்சர்!
வாங்க நாமக்கல்லாரே.
நன்றிப்பா.
Post a Comment